ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 T.N.Balasubramanian

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ரா.ரமேஷ்குமார்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 ஜாஹீதாபானு

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

8 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து திரையரங்குகள் 16-ந்தேதி முதல் மூடப்படும்

View previous topic View next topic Go down

8 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து திரையரங்குகள் 16-ந்தேதி முதல் மூடப்படும்

Post by ayyasamy ram on Fri Mar 09, 2018 5:26 am



சென்னை,

அரசின் 8 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து 16-ந்தேதி முதல்
திரையரங்குகளை மூடுவது என்று தியேட்டர் அதிபர்கள்
சங்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அவசர கூட்டம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் டிஜிட்டல்
சேவை அமைப்புகளின் கட்டண விகிதங்களை எதிர்த்து
கடந்த 1-ந்தேதி முதல் புதிய படங்களை திரைக்கு கொண்டு
வராமல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு
உள்ளனர்.

இதனால் திரையரங்குகளில் வசூல் குறைந்துள்ளது.
கூட்டம் வராததால் பல தியேட்டர்களில் சினிமா காட்சிகளும்
ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள்
சங்கத்தின் அவசர கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர்
பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு
முழுவதிலும் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள்
கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு
பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

கேளிக்கை வரி உயர்வு

திரையரங்குகளுக்கு அரசு 8 சதவீதம் கேளிக்கை வரி
விதித்துள்ளது. இந்த வரியை முற்றிலும் நீக்கவேண்டும் என்று
வற்புறுத்தப்பட்டது. திரையரங்குகளுக்கான லைசென்ஸ்
தற்போது வருடத்துக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது.
அதனை 3 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பித்துக்கொள்ளவும்,
திரையரங்குகளில் உள்ள இருக்கைகளை குறைத்துக்
கொள்ளவும் அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும்
வற்புறுத்தப்பட்டது.

திரையரங்கு பராமரிப்புக்கு குளிர்சாதன வசதி உள்ள
தியேட்டர்களுக்கு ஒரு ரூபாயும், குளிர்சாதன வசதி இல்லாத
தியேட்டர்களுக்கு 50 காசும் வழங்கப்படுகிறது.

இந்த பராமரிப்பு கட்டணத்தை குளிர்சாதன வசதி உள்ள
தியேட்டர்களுக்கு 5 ரூபாயாகவும், குளிர்சாதன வசதி இல்லாத
தியேட்டர்களுக்கு 3 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும் என்றும்
வற்புறுத்தப்பட்டது.

வேலைநிறுத்தம்

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 16-ந்தேதி முதல்
தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளை மூடி வேலை
நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று கூட்டத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்
செயலாளர் பன்னீர்செல்வம் ‘தினத்தந்தி’ நிருபரிடம்
கூறும்போது, “எங்கள் கோரிக்கைகளை ஏற்கனவே அரசிடம்
தெரிவித்து உள்ளோம். அரசும் ஒப்புக்கொண்டது.

ஆனால். இதுவரை அரசாணை பிறப்பிக்கவில்லை.
இதனால் தியேட்டர்களை மூட முடிவு செய்துள்ளோம்” என்றார்.
-
-----------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35981
மதிப்பீடுகள் : 11401

View user profile

Back to top Go down

Re: 8 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து திரையரங்குகள் 16-ந்தேதி முதல் மூடப்படும்

Post by SK on Fri Mar 09, 2018 10:00 am

நீங்க இனிமேல் தியேட்டர் திறக்கவே தேவையில்ல எங்களுக்கு தமிழ் ராக்கர்ஸ் இருக்கு

தமுதுண்டு டப்பா பாப்கார்ன் 50 ரூபா நாங்க ஏதோ கஞ்சா விக்க வந்தா மாதிரி எங்க போக செக் பண்றீங்க கேட்ட out side food not allowed அப்போ தியேட்டர்ல கமரக்கட்டு கடலைமிட்டாய் இதெல்லாம் விக்க வேண்டியது தானே
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5726
மதிப்பீடுகள் : 1061

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum