ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள்

View previous topic View next topic Go down

திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள்

Post by ரிபாஸ் on Mon 14 Dec 2009 - 14:03திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள்[You must be registered and logged in to see this image.]காலம்
பொன் போன்றது, கடமை கண் போன்றது. காலத்தை வீணாக்காமல் இருக்க
வேண்டியதன் அவசியத்தைப் பற்றி திருவள்ளுவப் பெருமான் அருளியவற்றை சென்ற
கட்டுரையில் கண்டோம். இன்னும் அவரின் பல அறவுரைகளைத் தொடர்ந்து கண்டு
பயனடைவோம்.
வெற்றியினை விரும்பாத மனிதர்கள் உண்டா? இன்று வெற்றிக்கான வழிகாட்டி
என்ற பெயரில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளியாகின்றன. இணையத்திலோ, பல
ஆயிரக்கணக்கான தளங்கள், பற்பல உத்திகளைப் பற்றிப் பேசுகின்றன. இவை
எல்லாவற்றையும் படித்தோமானால் கடைசியில் அவற்றின் சாரம் ஒன்றுதான்.
விடாமுயற்சி, சோம்பலின்மை, தகவல் தொடர்புத்திறன், அறிவுத்திறன் போன்ற
தகுதிகள் பல்வேறு விகிதத்தில் ஒன்று கலந்து வெற்றிக்கான பாதையை
அமைத்துக்கொடுக்கின்றன. வெற்றியாளர்களுக்கான பொதுப்பண்புகளாகப் பல
புத்தகங்கள் கூறுவனவற்றை வள்ளுவர் எத்தனையோ ஆயிரமாண்டுகளுக்கு முன்பே
எப்படி அழகுற விளக்கியிருக்கிறார் என்று பார்க்கும்பொழுது வியப்பே
ஏற்படுகிறது.

சந்தர்ப்பத்தை நழுவ விடாத தன்மை:

'Opportunity is missed by most people because it is dressed overalls
and looks like work' என்பது பிரபல அறிவியல் மேதை தாமஸ் ஆல்வா எடிசனின்
கருத்து. நாள், கோள் பார்த்துக் கொண்டோ, சோம்பலின் காரணமாகவோ செயலைத்
தள்ளிப் போட்டுக்கொண்டே போனால் வெற்றித்திருமகள் எப்படித் தேடி
வருவாள்? அதனால்தான் வள்ளுவர் சொல்கிறார்
'ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும் வாய் நோக்கிச் செயல்'
இதன் கருத்தாவது, செய்ய முடிந்த இடத்தில் எல்லாம் செயலைச்
செய்துகொண்டே இருக்க வேண்டும். செய்யா இயலாத இடத்திலோ, செயலைச்செய்து
முடிப்பதற்கான வழிகளை அறிந்து செயலினை முடிக்க வேண்டும் என்பதாகும்.
தளராது செயல்படுபவனே வெற்றியாளன் ஆக முடியுமல்லவா?

தகுந்த காலமும் இடமும் அறிந்து செயல் புரிதல்:

வெற்றியாளர்கள், 'Optimist sees Opportunity in every difficulty,
Pessimist sees difficulties in every opportunity' என்ற பொன்மொழியினை
அறிந்தவர்கள். எந்தக் காலத்தில்/எந்த இடத்தில் எத்தகைய செயலைச்
செய்யலாமென்று அறிந்து, செயலாற்றி வெற்றியை ஈட்டுபவர்கள். காற்றடிக்கும்
நேரத்தில் மாவு விற்கவும், மழை கொட்டுகையில் உப்பு விற்பவனும், கொல்லன்
பட்டறைகள் நிறைந்த இடத்தில் ஊசி வியாபாரம் செய்யச் ச்செல்பவனும் வெற்றி
பெற முடியுமா?
இதை மனதில் கொண்டுதான் வள்ளுவப் பெருந்தகை 'இடனறிதல்',
'காலமறிதல்' என்ற தலைப்புகளில் இருபது குறள்கள் இயற்றி, நமக்கு வழி
காட்டுகிறார். அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

'அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்' என்று கேட்கிறார் இவர்.
(பொருள்: கருவியையும் காலத்தையும் அறிந்து செயல்பட்டால், முடிக்க முடியாதது என்று ஒன்று உண்டா? - காலமறிதல் - குறள் எண்- 483)

'கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து' என்பது இவர் வெற்றிக்குக் கூறும் மற்றொரு உத்தியாகும்
(பொருள் - வெற்றியை விரும்புபவன், தக்க காலத்தை எதிர்நோக்கி, கொக்கு
போல் காத்திருக்க வேண்டும். வெற்றிக்கான செயல் செய்யும் காலம்
கனியும்பொழுது, அந்தக்கொக்கு விரைந்து மீனைக் கவ்வுவது போல,
செயலாற்றுதல் வேண்டும். - காலமறிதல் - குறள் எண்- 490)

'அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தாற் செயின்'
என்று சரியான இடத்தில் சரியான செயலைச் செய்வதன் பயனை
வலியுறுத்துகிறார். (பொருள் - இடமறிந்து ஒரு செயலில் ஈடுபட்டால்
துணிச்சல் தவிர வேறு துணைகள் தேவையில்லை - இடனறிதல் - குறள் எண் -497)

'நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற'
என மேலும் ஒரு உவமையின் மூலம் தகுந்த இடத்தில் தகுந்த செயலைச் செய்வதன்
இன்றியமையாமையை விளக்குகிறார் இவர். ( பொருள் - முதலையானது நீரில்
உள்ளவரை மிகுந்த வலிமையுடையது, மற்ற மிருகங்களை வெல்லக் கூடியது. ஆனால்
அதுவே, கரைக்கு வந்துவிடுமானால், மற்ற மிருகங்கள் அதனை வென்றுவிடும்.
அதாவது, தனக்கு எந்தத் துறையில் திறமை உள்ளதோ, அந்தத் துறையில் ஈடுபட்டு
வெற்றியை ஈட்டவேண்டும். தனக்குத் தெரியாத துறையில் கால்வைத்து,
தேவையில்லாமல் மாட்டிக்கொண்டு திண்டாடக்கூடாது என்பது இதன் கருத்து.
உள்ளூர் யானை, அசலூர்ப் பூனை என்னும் பழமொழி இங்கு நினைவில் கொள்ளத்
தக்கது. - குறள் எண் - 495)

தகவல் பரிமாற்றத் திறன்:

தன் கருத்துக்களை, பிறர் ஏற்கும்படி கூற வல்லவன் எளிதில் வெற்றியடைவான்
என்பது வள்ளுவரின் முடிவு. இது உண்மையும் கூட. உங்களிடம் ஒரு புதிய உத்தி
ஏதும் இருக்கலாம். அதைச் செயல் படுத்த வேண்டுமானால், பலரது ஒத்துழைப்பும்
தேவைப்படும். அப்பொழுதுதான் உங்களால் வெற்றியடைய முடியும்.அவ்வாறு பலரின்
ஒத்துழைப்பும் வேண்டுமானால், உங்கள் உத்தியை அவர்கள் ஏற்றுக்கொள்ள
வேண்டும். அதற்கு, அவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம், மனதில் பதியும்
வண்ணம் எடுத்துக்கூறும் பேச்சுத்திறமை (Communication Skill) வேண்டும்.
இதையும் திருக்குறள் அழகாகத் தெளிவு படுத்துகிறது சொல்வன்மை என்ற
அதிகாரத்தில் உள்ள முத்தான பத்துக் குறளின் மூலம்.

'சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது'
என்று, தகவல் பரிமாற்றத்தில் சிறந்தவர் வெற்றியாளராவது உறுதி என திட்டவட்டமாகக் கூறுகிறார் திருவள்ளுவர்.
(பொருள் - தான் சொல்ல விரும்புவதை, நன்கு திறம்படக் கூற வல்ல, சொல்ல
வேண்டியவற்றை மறவாமல், அவைக்கு அஞ்சி சோர்ந்துவிடாமல் சொல்லக்கூடிய
வல்லமை படைத்தவனை யாராலும் வெற்றி கொள்ள இயலாது - சொல் வன்மை - குறள்
எண் - 647)

விடாமுயற்சி வெற்றி தரும்:
'மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளாள் தாமரையினாள்'
என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் வள்ளுவர். அதாவது
சோம்பலுள்ளவனிடத்தில் மூதேவியும், சோம்பலை நீக்கி நல்முயற்சியை
மேற்கொள்ளுபவனிடம் திருமகள் வீற்றிருப்பாள் என்பது இதன் பொருள். (
ஆள்வினை உடைமை - குறள் எண் - 617)
மூதேவி என்பது துன்பத்தையும் வறுமையையும், திருமகள் என்பது செல்வத்தையும் வெற்றியையும் குறிக்கிறது.

வாழும் முறை குறித்தும், வாழ்வின் பல கூறுகள் வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளவை இன்னும் எவ்வளவோ உண்டு. வரும் கட்டுரைகளில்
குறளமுதைத் தொடர்ந்து பருகுவோம்.
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள்

Post by ஈகரைச்செல்வி on Wed 17 Jun 2015 - 20:52

avatar
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 501
மதிப்பீடுகள் : 126

View user profile

Back to top Go down

Re: திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள்

Post by Preethika Chandrakumar on Fri 19 Jun 2015 - 12:21

சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 541
மதிப்பீடுகள் : 126

View user profile

Back to top Go down

Re: திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum