ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 T.N.Balasubramanian

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
 T.N.Balasubramanian

பாதை எங்கு போகிறது...?
 SK

நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
 SK

சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஐ.பி.எல் -2018 !!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

ஈகரை சென்னை அணி 'திரில்' வெற்றி

Post by ayyasamy ram on Sun Apr 08, 2018 3:35 am

First topic message reminder :


-
மும்பை:
ஐ.பி.எல்., தொடரின் மும்பை அணிக்கு எதிரான முதல்
போட்டியில் சென்னை அணி, 1 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.

இந்தியாவில் ஐ.பி.எல்., உள்ளூர் 'டுவென்டி-20' தொடரின்
11வது சீசன் துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில்
முதல் போட்டி நடந்தது.

மும்பை அணி, 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய சென்னை அணி, 19.5 ஓவரில்
9 விக்கெட்டுக்கு, 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
-
------------------------------
தினமலர்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35939
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down


ஈகரை Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram on Wed Apr 11, 2018 7:34 am

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி
-

-
சென்னை,

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இதில் கலந்து கொண்டுள்ள 8 அணிகள் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். சென்னை அணி உள்ளூரில் 7 லீக் ஆட்டங்களில் விளையாடும்.

இந்த போட்டி தொடரில்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில்
இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு நடைபெறும் 5-வது
லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா
நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின்
கேப்டன் தோனி, தனது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார்.
இதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கொல்கத்தா அணி, சென்னை
அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. துவக்க வீரர்
லின் ( 22 ரன்கள்), சுனில் நரைன் ( 12 ரன்கள்) ஆட்டமிழந்தனர்.

அதிரடி காட்டி மிரட்டிய உத்தப்பா 16 பந்துகளில் 2 பவுண்டரிகள்
3 சிக்சர்கள் உட்பட 29 ரன்கள் எடுத்து இருந்த போது சுரேஷ்
ரெய்னாவின் துல்லிய த்ரோவில் ரன் அவுட் ஆனார்.

ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், கொல்கத்தா அணி
சீரான வேகத்தில் ரன் எண்ணிக்கையை உயர்த்தியது.

7-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ரஸ்ஸல், சென்னை அணியின்
பந்து வீச்சை சிதறடித்தார். களத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய ரஸ்ஸல்
11 சிக்சர்களுடன் 36 பந்துகளில் 88 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல்
இருந்தார்.

கடைசி நேர அதிரடியால் கொல்கத்தா அணி எதிர்பார்க்கப்பட்ட
ரன்களை விட அதிகம் சேர்த்தது. நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள்
முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள்
சேர்த்தது.

சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக வாட்சன் 2 விக்கெட்டுகளை
கைப்பற்றினார்.
-
-------------------------------

பின்னர் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய
இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷேன் வாட்சன்
மற்றும் ராயுடு ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தில்
ஈடுபட்டு வந்தனர்.

இதனால் சென்னை அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி
63 ரன்களை குவித்தது. இந்நிலையில் அணியின் ஸ்கோர் 75 ஆக
இருந்த போது டாம் குர்ரான் வீசிய பந்தில் ரின்குசிங்கிடம் கேட்ச்
ஆகி வாட்சன் ஆட்டமிழந்தார்.

வெறும் 19 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரி என 42 ரன்கள் குவித்து
அவர் ஆட்டமிழந்தார். பின்னர் ராயுடு 39 ரன்கள், ரெய்னா
14 ரன்களில் வெளியேற கேப்டன் தோனியுடன் சாம் பில்லிங்ஸ்
இணைந்தார்.

ஒரு முனையில் கேப்டன் தோனி நிதான ஆட்டத்தினை
வெளிபடுத்த மறுமுனையில் பில்லிங்ஸ் பந்தை அவ்வபோது
சிக்ஸர், பவுண்டரி என விரட்டினார்.

அணியின் ஸ்கோர் 155 ஆக இருக்கையில் ஃபினிஷர் தோனி
(25 ரன்கள்) பியூஸ் சாவ்லா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர்
தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

இருந்தாலும் மறுமுனையில் பில்லிங்ஸின் அதிரடி ஆட்டம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரை கலங்கடிக்க வைத்தது.
இந்நிலையில் 23 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த பில்லிங்ஸ்
18.3 வது ஓவரில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு அதிரடி ஆட்டக்காரர் பிராவோ-ஜடேஜா ஜோடி
களத்தில் இருக்க கடைசி 6 பந்துகளில் சென்னை அணி வெற்றி
பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி 1 பந்து மீதமிருக்க ஜடேஜா சிக்ஸர் அடித்து ஆட்டத்தை
முடித்து வைத்தார். இதன் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
------------------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35939
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஐ.பி.எல் -2018 !!

Post by T.N.Balasubramanian on Wed Apr 11, 2018 8:54 am

ஆரம்பம் நன்று
நடு ஆட்டக்காரர் சிறிது சொதப்பல் .பில்லிங்ஸ் சூப்பர்.
முடிவில் கடைசி 2 பந்துகள் வரை ஜெயிப்போமா இல்லையா என்ற சந்தேகம் .
ஜடேஜாவின் 6 ,சந்தேகத்தை தகர்த்தது.
இதுவும் த்ரில்லிங் ஃ பினிஷ் தான் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21748
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ரா.ரமேஷ்குமார் on Wed Apr 11, 2018 9:26 am

@T.N.Balasubramanian wrote:ஆரம்பம் நன்று
நடு ஆட்டக்காரர் சிறிது சொதப்பல் .பில்லிங்ஸ் சூப்பர்.
முடிவில் கடைசி 2 பந்துகள் வரை ஜெயிப்போமா இல்லையா என்ற சந்தேகம் .
ஜடேஜாவின் 6 ,சந்தேகத்தை தகர்த்தது.
இதுவும் த்ரில்லிங் ஃ பினிஷ் தான் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1265770
ஆமாம் ஐயா ... திரும்பவும் ஒரு அருமையான விறுவிறுப்பான ஆட்டம் ... சூப்பருங்க
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4052
மதிப்பீடுகள் : 913

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஐ.பி.எல் -2018 !!

Post by மூர்த்தி on Wed Apr 11, 2018 11:41 am

வாழ்த்துகள்.
தமிழர்களின் விளையாட்டுகளை ஓரம் கட்டி விட்டு, விளையாட்டு என்ற பெயரில் நடக்கும் சூதாட்டத்திற்கு ஆதரவளிக்கும்,ஆர்வம் காட்டுபவர்கள் ஈகரையில் அதிகம் என தெரிகிறது.

வாழ்த்துகள்.

>_<
இரண்டு புள்ளி ஒரு கொடு.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 494

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ரா.ரமேஷ்குமார் on Wed Apr 11, 2018 12:41 pm

@மூர்த்தி wrote:வாழ்த்துகள்.
தமிழர்களின் விளையாட்டுகளை ஓரம் கட்டி விட்டு, விளையாட்டு என்ற பெயரில் நடக்கும் சூதாட்டத்திற்கு ஆதரவளிக்கும்,ஆர்வம் காட்டுபவர்கள் ஈகரையில் அதிகம் என தெரிகிறது.

வாழ்த்துகள்.

>_<
இரண்டு புள்ளி ஒரு கொடு.
மேற்கோள் செய்த பதிவு: 1265779
உண்மைதாங்க மூர்த்தி .. நீங்க சொல்லறது எல்லாம் சரி தாங்க ... இருந்தாலும் பாருங்க இன்னும் எத்தனை நாளைக்கு தான் நம் மூதாதையர்கள் செய்த காரியங்களை பேசி பேசி காலத்தை நாம்  கழிப்பது ... இப்பவும் நாம ஓலைசுவடியில தான் எழுதுவோம்னு சொன்னா ஏத்துக்க முடியுமாங்க மூர்த்தி அது போல தாங்க...காலத்துக்கு தகுந்த மாறி நம்மையும் மாற்றி கொள்ளவேண்டும்(இன்னும் வாட்போரும்,ஈட்டியும் எரிந்து கொண்டு இருக்க முடியாது,தொழில்நுட்ப ரீதியிலும், தேவை எனில் நவீன ஆயுதங்களை கையாளவும் கற்று கொள்ள வேண்டும் )....ஐ.பி.எல்(கிரிக்கெட்) பார்ப்பவர்கள் தமிழன் இல்லை எனவும் அவர்களுக்கு தமிழ் மீதும் தமிழ் கலாச்சாரம்(இன்றும் இருந்தால்) மீதும் பற்று இல்லை என சொல்ல முடியாது, எல்லாம் ஒரு பொழுது போக்கு தான் நண்பரே ...
தமிழர்களின் விளையாட்டை எல்லாம் தூக்கி ஒளித்து வைத்து விட்டார்கள்... எங்க கிராமத்தில் உள்ள நண்பர்கள் எல்லாம் ஒரு காலத்துல கபாடி  விளையாடினோம் .. காடு மேடு வெயில் என பொருட்படுத்தாமல் திரிவோம்.. கிணறுகள்,வாய்க்கால்களில் இன்னும் குதிக்கிறோம்...  எங்கள் வீடுகளிலும் பசங்க விளையாட போயிருக்காங்கனு விட்டுருவாங்க ... ஆனால் இப்போ எல்லாம் வீட்டை விட்டு வெளியவே விடாத பெற்றோர்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கிய சிறுவர் சிறுமிகளும் தான் உள்ளனர் ...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4052
மதிப்பீடுகள் : 913

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஐ.பி.எல் -2018 !!

Post by மூர்த்தி on Wed Apr 11, 2018 1:24 pm

திரு மூர்த்தி அவர்களுக்கு,
இரவு வணக்கம்???

தமிழர் வாழ்வை பொழுதுபோக்காக எண்ணும் ஈகரையில், இனிமேல் கருத்தை பதிவிடாதீர்கள். ஜல்லிக்கட்டு பழமைதான் ஏன் போராடினீர்கள்? கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் ...என்று ஏன் பெருமை பேசிக் கொள்கிறீர்கள்? சித்தர்கள் சித்த வைத்தியம் கோயில்கள் என ஏன் பொழுதை வீணாக்குகிறீர்கள்? மீண்டும் கேள்விகளை எதிர்வாதங்களை  வைக்காமல், கருத்துக்கு எதிர் கருத்து வைப்பதே நாகரிகம் என சொல்லி மீண்டும் வராமல்  போய்விடு நண்பா.


அட்மின் இதை கவனித்தால், தயவு செய்து மூர்த்தியின் கணக்கை நீக்கி விடவும். அவராகவே நீக்கி விட முடியும்.அது நாகரீகமல்ல என்பதால் தயவு செய்து நீக்கி விடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறார்,மூர்த்தி.
நன்றி.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 494

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ரா.ரமேஷ்குமார் on Wed Apr 11, 2018 1:57 pm

நண்பரே மூர்த்தி இப்பொழுது ஏன் இவ்வாறு சொல்கிறீர்கள் என தெரியவில்லை ... தமிழர் வாழ்வை பொழுது போக்காக குறிப்பிடவில்லை கிரிக்கெட் விளையாட்டை தான் நண்பரே சொல்லியிருந்தேன் ... என்னுடைய பதிலில் ஏதாவது தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள் ...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4052
மதிப்பீடுகள் : 913

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஐ.பி.எல் -2018 !!

Post by T.N.Balasubramanian on Wed Apr 11, 2018 4:54 pm

கபடி போட்டிகளிலும் சூதாட்டம் உட்புகுந்து விட்டது எனக் கேள்விப் படுகிறோம் .
எங்கெங்கெல்லாம் பெரிய பெரிய கம்பெனிகள் உட்புகுந்து ஸ்பான்சர் பண்ணுகிறார்களோ
அங்கெல்லாம் சூதாட்டம் தலைவிரிக்கும்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21748
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஐ.பி.எல் -2018 !!

Post by T.N.Balasubramanian on Wed Apr 11, 2018 4:56 pm

@மூர்த்தி wrote:திரு மூர்த்தி அவர்களுக்கு,
இரவு வணக்கம்???

தமிழர் வாழ்வை பொழுதுபோக்காக எண்ணும் ஈகரையில், இனிமேல் கருத்தை பதிவிடாதீர்கள். ஜல்லிக்கட்டு பழமைதான் ஏன் போராடினீர்கள்? கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் ...என்று ஏன் பெருமை பேசிக் கொள்கிறீர்கள்? சித்தர்கள் சித்த வைத்தியம் கோயில்கள் என ஏன் பொழுதை வீணாக்குகிறீர்கள்? மீண்டும் கேள்விகளை எதிர்வாதங்களை  வைக்காமல், கருத்துக்கு எதிர் கருத்து வைப்பதே நாகரிகம் என சொல்லி மீண்டும் வராமல்  போய்விடு நண்பா.


அட்மின் இதை கவனித்தால், தயவு செய்து மூர்த்தியின் கணக்கை நீக்கி விடவும். அவராகவே நீக்கி விட முடியும்.அது நாகரீகமல்ல என்பதால் தயவு செய்து நீக்கி விடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறார்,மூர்த்தி.
நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1265784

என்னது இது ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21748
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ஜாஹீதாபானு on Wed Apr 11, 2018 5:54 pm

@மூர்த்தி wrote:திரு மூர்த்தி அவர்களுக்கு,
இரவு வணக்கம்???

தமிழர் வாழ்வை பொழுதுபோக்காக எண்ணும் ஈகரையில், இனிமேல் கருத்தை பதிவிடாதீர்கள். ஜல்லிக்கட்டு பழமைதான் ஏன் போராடினீர்கள்? கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் ...என்று ஏன் பெருமை பேசிக் கொள்கிறீர்கள்? சித்தர்கள் சித்த வைத்தியம் கோயில்கள் என ஏன் பொழுதை வீணாக்குகிறீர்கள்? மீண்டும் கேள்விகளை எதிர்வாதங்களை  வைக்காமல், கருத்துக்கு எதிர் கருத்து வைப்பதே நாகரிகம் என சொல்லி மீண்டும் வராமல்  போய்விடு நண்பா.


அட்மின் இதை கவனித்தால், தயவு செய்து மூர்த்தியின் கணக்கை நீக்கி விடவும். அவராகவே நீக்கி விட முடியும்.அது நாகரீகமல்ல என்பதால் தயவு செய்து நீக்கி விடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறார்,மூர்த்தி.
நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1265784

உங்களுக்கு நீங்களே எழுதி இருப்பது ஏன்???????????avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30164
மதிப்பீடுகள் : 7035

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஐ.பி.எல் -2018 !!

Post by மூர்த்தி on Thu Apr 12, 2018 12:19 am

ஜாஹீதா அக்கா!

ஆமாம்,என்னையே நான் கேட்டுக் கொண்டேன். தமிழனாய் தமிழ் உணர்வுடன் ஈகரையில் பயணிக்க விரும்புகிறேன். பொழுதைப் போக்க அல்ல. அப்பா,அம்மா உதவியுடன் தமிழை எழுதிய நான்,இன்று நானாகவே தமிழை எழுத முடிகிறது என்றால் அதற்கு ஈகரையே காரணம்.அதற்காக ஈகரைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அதனால் என்னையே நான் கேட்டுக் கொண்டேன்.

கருத்தை எழுதினால்,உண்மையை தேடினால் (நமக்கு எதிரா இல்ல பிடிக்காத எவனா பேசினா அவன் , அவன் அப்பா ,அம்மா ,சாதி, மதம் .... எல்லாத்தையும் தேடுவோம் . ) என்கிறார் ஒருவர். (அவர் எழுதியது எனக்குப் புரியாமல் கூட இருந்திருக்கலாம்.) அதனால்….

யாரையும் குறை சொல்ல அல்ல,
என்னை நான் திருத்திக் கொள்ள சமாதானப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்,விரும்புகிறேன்.தப்பாக இருப்பின் மன்னிக்க.
அனைவருக்கும் நன்றி.

இரண்டு புள்ளி,ஒரு கோடு,ஒரு புள்ளி.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 494

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram on Thu Apr 12, 2018 4:04 am

‘ஓராண்டு தடை என்னை மாற்றிவிட்டது’ - ரஸ்செல்
-

-
சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில் 11 சிக்சர்கள்
விளாசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின்
ஆல்-ரவுண்டரான வெஸ்ட் இண்டீசை சேர்ந்த 29 வயதான
ஆந்த்ரே ரஸ்செல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

ஊக்கமருந்து விதிமுறையை மீறியதாக எனக்கு ஓராண்டு
காலம் தடை விதிக்கப்பட்டது. இந்த ஓராண்டு இழப்பு என்னை
மாறுபட்ட மனிதராக மாற்றிவிட்டது. ப

ணிவுடன் எப்படி வாழ்வது என்பதை கற்றுக்கொண்டேன்.
தொழில்முறை கிரிக்கெட் வீரராக நாம் எவ்வளவு உயரிய
நிலையில் இருந்தாலும், நாம் எப்படி செயல்படுகிறோம்
என்பதை அவ்வப்போது உறுதிப்படுத்துவது அவசியம்.

அதிலும் தன்னடக்கம் மிகவும் முக்கியம்.
மீண்டும் இது போன்ற விஷயங்கள் நடக்காமல் பார்த்துக்
கொள்வேன்.

மிகுந்த நம்பிக்கையுடன் ஐ.பி.எல். தொடரில் விளையாடி
வருகிறேன். எனது நம்பிக்கை அளவு இப்போது மிக அதிகமாக
உள்ளது. நம்பிக்கை இருந்து விட்டால் எந்த போட்டியிலும்
தைரியமாக களம் இறங்கி அசத்தலாம்.

நான் தற்போது நல்ல நிலையில் இருக்கிறேன். அதற்காக
100 சதவீதம் முழு உடல்தகுதியுடன் உள்ளேன் என்று சொல்
மாட்டேன். ஆனால் பந்தை விரட்டும் விதமும், வேகமாக பந்து
வீசுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் சில ஆட்டங்களுக்கு பிறகு நான் விரும்பும் நிலையை
எட்டுவேன் என்று நம்புகிறேன்.

நான் நிறைய 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி
இருக்கிறேன். 180 அல்லது 200 ரன்கள் குவித்தும் தோல்வி
கண்ட அணிகளை பார்த்து இருக்கிறேன்.

இந்த பவுலர் நன்றாக பந்து வீசவில்லை, இந்த பவுலர் சரியில்லை
என்று குறிப்பிட்டு யாரையும் சொல்லப்போவதில்லை.
தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தவறுகளை
திருத்திக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான்.

இவ்வாறு ரஸ்செல் கூறினா
-
--------------------------------------
தினத்தந்தி

_________________
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35939
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram on Thu Apr 12, 2018 4:05 am

சென்னை அணியின் கேப்டன் தோனியின் மகளுடன் விளையாடிய ஷாருகான்
-

-
சென்னை

சென்னையில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும்
கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியை
நேரில் காண, கொல்கத்தா அணியின் உரிமையாளர்
ஷாருக்கான் வருகை தந்திருந்தார்.

சென்னையில் ஷாருக்கானுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்
இருப்பதால், அவரை கரகோஷம் எழுப்பி சென்னை
ரசிகர்கள் வரவேற்றனர்.

இந்த நிலையில் ஒருபக்கம் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று
கொண்டிருந்த நிலையில் அதை பற்றி கொஞ்சமும் கவலைப்
படாமல் ஷாருக்கான், தோனியின் செல்ல மகளுடன் விளையாடி
கொண்டும், அவருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து
கொண்டும் இருந்தார்.

இதைப் பார்த்த தோனியின் மனைவி ஷாக்சி உற்சாகமானார்.
பின்னர் போட்டி முடிந்ததும் சென்னை அணியின் வெற்றிக்கு
ஷாக்சியை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார் ஷாருக்கான்.

தோனி மகளுடனும் தோனியின் மனைவியுடனும் ஷாருக்கான்
எடுத்து கொண்ட புகைப்படங்கள் கடந்த சில மணி நேரங்களாக
இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது
குறிப்பிடத்தக்கது.
-
----------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35939
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram on Thu Apr 12, 2018 4:07 am

ஸ்டேடியத்துக்கு வெளியே அடிக்கப்படும் பந்துக்கு 8 ரன்’ - டோனி யோசனை
-

-
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி கூறியதாவது:-

2 ஆண்டுக்கு பிறகு சென்னையில் ஐ.பி.எல். போட்டியில்
விளையாடியதோடு, வெற்றியும் பெற்றது உற்சாகமான
உணர்வை தருகிறது.

கொல்கத்தா பேட்டிங், சென்னை அணியின் பேட்டிங் இரண்டுமே
குழுமியிருந்த ரசிகர்களுக்கு விருந்து படைத்தன.

நிறைய சிக்சர்கள் பறந்தன. பேட்ஸ்மேன், ஸ்டேடியத்தை விட்டு
வெளியே துரத்தியடிக்கும் ஒவ்வொரு பந்துக்கும் ஐ.பி.எல்.
போட்டியில் கூடுதலாக 2 ரன் (அதாவது 8 ரன்) வழங்க வேண்டும்.

உணர்ச்சியின் வெளிப்பாடு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு
விதமாக இருக்கும். ஆட்டம் பரபரப்பானதால் எனது இதய
துடிப்பும் எகிறியது. அதனால் தான் எங்களுக்கு ஓய்வறை
ஒன்று உள்ளது.

எனது உணர்ச்சிகளை ஓய்வறையில் வெளிப்படுத்துவேனே
தவிர, அனைவரும் பார்க்கும் மைதானத்தின் எல்லைக்
கோட்டையொட்டி வீரர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் பெரிய
அளவில் காட்டமாட்டேன்.

இங்கு அமரும் போது குறிப்பிட்ட தருணத்தில் பேட்ஸ்மேன் அல்லது
பந்து வீச்சாளர் மீது நாங்கள் நம்பிக்கை வைப்பது அவசியம்.
நேர்மறையான எண்ணங்கள் சாதிப்பதற்கு உதவும்.

களத்தில் நம் உணர்ச்சிகளை அதிகமாக கொட்டினால், அது நம்மை
பற்றி வர்ணனையாளர்கள் பேசுவதற்கு இடம் கொடுப்பது போல்
ஆகிவிடும்.

இந்த ஆட்டத்தை பொறுத்தவரை இரண்டு அணிக்குமே
பந்து வீச்சாளர்களுக்கு கடினமான நாளாக அமைந்தது.
ஆனால் ரசிகர்கள் நிச்சயம் குதூகலம் அடைந்திருப்பார்கள்.

இவ்வாறு டோனி கூறினார்.
-
----------------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35939
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஐ.பி.எல் -2018 !!

Post by T.N.Balasubramanian on Thu Apr 12, 2018 7:25 am

புனேக்கு மாறுகிறதே CSK ஆட்டங்கள் எல்லாம் இனி.

ரமணியன்சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21748
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஐ.பி.எல் -2018 !!

Post by krishnanramadurai on Thu Apr 12, 2018 7:36 am

அங்க போயி போராட வேண்டியதுதான். ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

krishnanramadurai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 146
மதிப்பீடுகள் : 53

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஐ.பி.எல் -2018 !!

Post by T.N.Balasubramanian on Thu Apr 12, 2018 7:57 am

எல்லா கட்சிகளிடமும் கணக்கில் வரா பணம் அதிகம் உள்ளது.
இதை சாக்காக வைத்துக்கொண்டு செலவழித்து கட்சிக்கு
நற்பெயரை மக்கள் மத்தியில் ஏற்படுத்த நினைப்பு போலிருக்கிறது.
விளையாட்டில் அரசியல் புகுந்தால் இதுவும் நடக்கும்.இதற்கு மேலும்
விளையாடும்.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21748
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஐ.பி.எல் -2018 !!

Post by M.Jagadeesan on Thu Apr 12, 2018 9:36 am

இனி சிதம்பரம் ஸ்டேடியத்தை மூடிவிட்டு , அங்கே ஷாப்பிங் மால் கட்டுவது நல்லது .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5084
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ராஜா on Thu Apr 12, 2018 10:12 am

@ரா.ரமேஷ்குமார் wrote:சுதந்திரமாக சொல்கிறேன் ஜி.வி உங்களுக்கும் தமிழர் தமிழன் என்று சொல்லி உணர்ச்சி பூர்வமாக மக்களையும் இளைஞர்களையும் வன்முறைக்கு தூண்டும் அறிவு கெட்ட அரசியல் பிழைப்பு செய்யும் கூமுட்டைகளுக்கும் அதனை வேத வாக்காக நம்பும் பாவப்பட்ட எம் தமிழ் மக்களுக்கும் ... எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை என்பது தீர்வாகாது ... உண்மை தான் போட்டி முக்கியம் இல்லை தான் ஆனால் போட்டியை காண ரசிகனாக வந்த ஒரு இளைஞரும் தமிழன் தானே... அவரை தாக்குவதும் சட்டையை கிழிப்பதும் எந்த விதத்தில் ஞாயம்??? இது போல் மத்திய அரசின் அதை உடைப்பேன் இதை உடைப்பேன் என்று சொல்வதும் எந்த விதத்தில் நியாயம்??? அதுவும் நாம் கட்டிய பணத்தில் நம் தமிழ் மக்களும் பயன்படுத்த தானே உருவாக்கப்பட்டது ... எவன் ஒருவன் தமிழன் என்று சொல்லி நம்முடைய பொது சொத்துக்கு பொது மக்களுக்கும் தீங்கு விளைவிப்பவனோ அவன் நிச்சயம் ஒரு *****(என்ன சொல்வது என தெரியவில்லை )... இது விளையாட்டு செய்திகளுக்கான பதிவால் சில வார்த்தைகளை தவிர்க்கிறேன் ...

ஜிவிபிரகாஷ் கருத்துக்களில் அரசியல் கிடையாது ரமேஷ் , அதேபோல தான் RJ பாலாஜியும்

இங்கு ஈகரையில் அனைவரும் சமம் அனைவருக்கும் தங்களின் கருத்துக்களை (தனிமனித தாக்குதல் இல்லாமல்) கூற உரிமை உண்டு.

என்பதால் உன்னுடைய கருத்துக்களையும் ஏற்றுக்கொள்கிறேன் , நேற்று ஒரு வாட்சப் காணொளியில் சேப்பாக்கம் மைதானத்திற்கு உள்ளே செல்ல வரிசையில் நிற்கும் (CSK நிற பனியன் அணிந்த) இளம் ஆண்,பெண்களிடம் ஒரு கூட்டம் அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகளால் திட்டி நீ சோறு தான் திங்கிறியா என்று கேட்கிறார்கள் , அந்த பெண்களிடம் உன் மேலாடையை (மஞ்சள் நிற பனியன்) நீ கழற்றுகிறாயா இல்லை நான் கழட்டவா என்றும் கேட்கிறான் ஒருத்தன்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தையும் இந்த காவிரிக்கு நடத்தும் போராட்டத்தையும் என்னால் ஒன்றாக பார்க்க முடியவில்லை.

ஜல்லிக்கட்டு போராட்டம் இன்றைய இளம் தலைமுறை (இன்னும் சொல்ல போனால் பெரும்பாலோனோர் ஜல்லிக்கட்டை நேரில் பார்த்திராத இளைஞர்களாக தான் இருந்திருப்பார்கள்) தன்னெழுச்சியாக கையிலெடுத்து நடத்தி மாபெரும் வெற்றிபெற்ற உணர்வுபூர்வமான போராட்டம்.

ஆனால் இந்த காவிரி நீர் போராட்டம் தமிழகத்தில் உள்ள அரசியல் ஓநாய்கள் தங்களின் அரசியல் நலனுக்காக நடத்தும் நாடகம்.
காவிரி மணலை மொத்தமாக அள்ளி இன்று காவிரித்தாயை மலடாக்கி உயிரற்ற நடைபிணமாக்கியவர்களே இன்று போராடும் இந்த அரசியல் நாய்கள் தான். (ஒருகாலத்தில் எங்கள் காவிரியில் நீர் இல்லாத பொது கடற்கரை மணல் போல இருக்கும் (வெறும் கைகளாலேயே 3 , 4 அடி ஆழம் கூட தோண்டலாம் ) இப்போ சீமை கருவேல மரம் வளர்ந்து கிடக்கிறது. )முதலில் மணல் அள்ளுவதை நிப்பாட்ட சொல்லுங்கள் அல்லது அதற்கெதிராக உறுதியாக போராட சொல்லுங்கள்.மணல் அள்ளுவதை நிப்பாட்டினாலே காவிரியின் நீர்வளம் கன்னடக்காரன் கொடுக்கவில்லை என்றாலும் குறையாது ஏனெனில் இது ஒரு ஜீவநதி இன்று நேற்று மழை நீரால் உருவாகிய வாய்க்கால் அல்ல.

காவிரியின் கிளை நதிகள் , வாய்க்கால்கள் , அது சென்று சேரும் குளம் குட்டைகள் இவற்றை ஆக்கிரமித்து வீட்டுமனைகள் என்றும் , நகர் என்றும் போர்டு போட்டு விற்று காசாக்கியதை திரும்ப ஒப்படைத்து அதை முற்றிலும் நிப்பாட்டிட சொல்லுங்கள்

அதேநேரம் இதிலும் உண்மையான தமிழ் உணர்வாளர்களும் காவிரிக்காக போராடும் உண்மையான நெஞ்சங்களுக்கு இருக்க தான் செய்யும் அவர்கள் இதை உடனே தங்களுக்கெதிரான கருத்துக்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ராஜா on Thu Apr 12, 2018 10:17 am

@M.Jagadeesan wrote:இனி சிதம்பரம் ஸ்டேடியத்தை மூடிவிட்டு , அங்கே ஷாப்பிங் மால் கட்டுவது நல்லது .
நீங்கள் ஒரு தீர்க்கதரிசி ஐயா,
எவனோ ஒரு அரசியல்வியாதி இந்த இடத்தை அபகரிக்க திட்டம் தீட்டிவிட்டான் அதற்காக தான் இந்த பிரச்சினை... வருடம் முழுவதும் காவிரியில் மணல் அல்ல வேண்டுமானால் காவிரியில் நீர் வரக்கூடாது அதற்கென்ன பண்ண வேண்டும் கன்னடக்காரன் காவிரி நீரை தடுக்க வேண்டும், அதனால் இந்த பிரச்சினை முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே இருந்தால் இவர்களுக்கு நல்லது. அதே பாணியில் இப்போ சென்னை சேப்பாக்கம் அரங்கின் கதையை முடிக்க போகிறார்கள்.

இன்னும் ஓரிரு வருடங்களின் , எந்த ஒரு போட்டியும் நடைபெறாமல் சும்மா இருந்து என்ன பயன் என்று அங்கே ஷாப்பிங் மால் கட்டுவதற்கு அடித்தளம் போடுவார்கள்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ராஜா on Thu Apr 12, 2018 10:22 am

@மூர்த்தி wrote:திரு மூர்த்தி அவர்களுக்கு,
இரவு வணக்கம்???

தமிழர் வாழ்வை பொழுதுபோக்காக எண்ணும் ஈகரையில், இனிமேல் கருத்தை பதிவிடாதீர்கள். ஜல்லிக்கட்டு பழமைதான் ஏன் போராடினீர்கள்? கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் ...என்று ஏன் பெருமை பேசிக் கொள்கிறீர்கள்? சித்தர்கள் சித்த வைத்தியம் கோயில்கள் என ஏன் பொழுதை வீணாக்குகிறீர்கள்? மீண்டும் கேள்விகளை எதிர்வாதங்களை  வைக்காமல், கருத்துக்கு எதிர் கருத்து வைப்பதே நாகரிகம் என சொல்லி மீண்டும் வராமல்  போய்விடு நண்பா.


அட்மின் இதை கவனித்தால், தயவு செய்து மூர்த்தியின் கணக்கை நீக்கி விடவும். அவராகவே நீக்கி விட முடியும்.அது நாகரீகமல்ல என்பதால் தயவு செய்து நீக்கி விடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறார்,மூர்த்தி.
நன்றி.


ஈகரையில் விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்துகொள்ளும் உறுப்பினர்களை தான் தடை செய்வோம் தேவைப்பட்டால் பயனர் நீக்கிவிடுவோம் , புன்னகை

உறுப்பினர் தாங்களாகவே வெளியே போகிறேன் என்று சொல்வதற்காக எல்லாம் கணக்கை நீக்க முடியாது புன்னகை

ஒரு சிறந்த சிந்தனையாளர் அறிவு ஜீவி என்று நினைத்திருந்தேன் நீங்கள் இப்படி அவசரப்பட்டு முடிவெடுக்கலாமா?! சும்மா விளையாடாம வந்து பதிவுகளை தொடருங்க மூர்த்தி

ரமேஷ் உங்களுக்கும் தம்பி போல தான் , ஒரு வீட்டில் தம்பி சொல்லும் வார்த்தைகளுக்காக அண்ணன் வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்று சொல்லலாமா ?! (இதை எனக்கு நம்முடைய அண்ணன்களும் / அக்காக்களும் இங்கு முன்பு சொல்லியுள்ளார்கள் புன்னகை அதையே நான் இப்போ உங்களுக்கு சொல்கிறேன் )
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: ஐ.பி.எல் -2018 !!

Post by T.N.Balasubramanian on Thu Apr 12, 2018 8:09 pm

எனக்கு இன்று ஒரு வாட்ஸப் மெசேஜ் வந்தது.
-------------------------------------------------------------------------------------------------------------
அதில் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்துடன் ஸ்டேடியத்தில்
குஷியாக போஸ் கொடுக்கிறார்.
கீழ்கண்ட வாசகங்கள் வருகின்றன.
பிள்ளையோ குடும்பத்துடன் விளையாட்டு அரங்கில்
அப்பனோ வெளியில் பொய்யான எதிர்ப்பு போராட்டத்தில்
மாமனோ IPL franchise
இதுதான் திராவிட கட்சியின் குடும்பம்.
..இவர்கள்தான் காவிரி நீர் கொண்டுவருவார் என நம்பும்
ஏழை பாமர ஜனங்கள்
பாவம் ஜனங்கள்
----------------------------------------------------------------------------
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21748
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram on Sun Apr 15, 2018 3:22 am

மூன்றாவது வெற்றியை பதிவுசெய்தது சன் ரைஸர்ஸ் அணி..!
-

-
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற
ஐ.பி.எல் லீக்கின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா
அணியை சன்ரைஸர்ஸ் அணி எதிர்கொண்டது.

இப்போட்டியில் டாஸ் வென்ற சன் ரைஸர்ஸ் ஹைதராபாத்
அணியின் கேப்டன்வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை
தேர்வு செய்தார்.

முதல் வரிசையில் இறங்கும் சுனில் நரேன் இம்முறை ஓப்பனிங்
ஆடவில்லை. மாறாக ராபின் உத்தப்பா - கிறிஸ் லின் இணை
களமிறங்கியது. உத்தப்பா 3 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி
தரமறுமுனையில் இருந்த கிறிஸ் லின் ஆறுதல் அளித்தார்.

அவர் 49 ரன்கள் எடுத்து அவுட் ஆக, அதற்கடுத்து வந்தவர்களும்
சொற்ப ரன்களில் வெளியேறினர். கேப்டன் தினேஷ் கார்த்திக்
ஓரளவுக்குத் தாக்கு பிடித்தாலும் 29 ரன்களில் அவரும் அவுட்.

இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா
அணி 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது.

பந்துவீச்சில் புவனேஷ்வர்குமார் சிறப்பாகச் செயல்பட்டு
3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

139 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது சன் ரைஸர்ஸ்
அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் விரித்திமான் சஹா
மற்றும் ஷிகர் தவான் இந்த மேட்சில் ஜொலிக்கவில்லை.

தவான் முதல் ஏழு ரன்களில் அவுட்டாக, அடுத்து களமிறங்கிய
கேன் வில்லியம்சன் ஈடு கொடுத்து ஆடினார் சஹா.
ஆனால், அவரும் 24 ரன்களில் அவுட் ஆனார். எனினும்
கேன் வில்லியன்சன் அரை சதம் தொட்டு அவுட் ஆகினார்.

அவரை தொடர்ந்து இறங்கிய யூசப் பதான் 17 ரன்கள் அடித்து
ஹைதராபாத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

19 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் மீதம் இருக்க 139 ரன்களை
அடித்து ஹைதரபாத் வெற்றிபெற்றது. இது ஹைதரபாத்
பெறும் 3-வது வெற்றியாகும்.
-
--------------------------------------
விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35939
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ராஜா on Sun Apr 15, 2018 1:36 pm

மற்ற அணிகள் பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள் ஆனால் ஹைதராபாத் பந்துவீச்சு & பேட்டிங் இரண்டிலுமே சிறப்பாக செயல்படுகிறார்கள்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: ஐ.பி.எல் -2018 !!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum