ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
Ideas on changing Government rules and regulations for easing lives of citizens
 T.N.Balasubramanian

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் ஊர காணோம்
 ayyasamy ram

என் இடத்தைத் தீர்மானிக்க நேரம் வரவில்லை – கீர்த்தி சுரேஷ்
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 T.N.Balasubramanian

ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
 ayyasamy ram

பென்குவின் பறவைகள்
 ayyasamy ram

இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
 ayyasamy ram

காதல் என்பது…..
 ayyasamy ram

மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...!!
 ayyasamy ram

உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...!!
 ayyasamy ram

மாற்றம் என்பது...
 ayyasamy ram

ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
 ayyasamy ram

ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
 ayyasamy ram

பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
 ayyasamy ram

'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
 ayyasamy ram

எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
 ayyasamy ram

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 03
 shruthi

Youtube. வீடியோ டவுண்லோட் செய்ய சிறந்த ஆப்
 Meeran

இந்த வார இதழ்கள் சில
 Meeran

மே 25 நடப்பு நிகழ்வுகள்
 Meeran

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 02 - தவறவிடாதீர்கள்
 தமிழ்நேசன்1981

கனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்
 vighneshbalaji

எனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு
 vighneshbalaji

சிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை
 vighneshbalaji

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்
 sudhagaran

"குருவே சரணம்" - மகா பெரியவா !
 T.N.Balasubramanian

2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்
 ayyasamy ram

வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
 பழ.முத்துராமலிங்கம்

சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
 ayyasamy ram

தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
 ayyasamy ram

மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
 ayyasamy ram

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குதிரை பேர வரலாறு
 ayyasamy ram

புறாக்களின் பாலின சமத்துவம்
 ayyasamy ram

போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
 ayyasamy ram

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 பழ.முத்துராமலிங்கம்

மாறுவேடப் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
 ayyasamy ram

தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ….(பொது அறிவு தகவல்)
 ayyasamy ram

ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
 ayyasamy ram

விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
 ayyasamy ram

சினிமா -முதல் பார்வை: செம
 ayyasamy ram

அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா?”
 கோபால்ஜி

ராஜஷ்குமார் நாவல் வரிசை 14
 தமிழ்நேசன்1981

எல்லாம் நன்மைக்கே! - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*
 krishnaamma

மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
 krishnaamma

திருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி
 krishnaamma

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 krishnaamma

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....
 krishnaamma

ஓர் அழகான கதை !
 krishnaamma

'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !
 krishnaamma

அது யார், ஜகத்குரு?..
 krishnaamma

நான் யார் ?
 B VEERARAGHAVAN

டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
 பழ.முத்துராமலிங்கம்

நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு
 ayyasamy ram

அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்
 ayyasamy ram

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஐ.பி.எல் -2018 !!

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Go down

சென்னை அணி 'திரில்' வெற்றி

Post by ayyasamy ram on Sun Apr 08, 2018 3:35 am

First topic message reminder :


-
மும்பை:
ஐ.பி.எல்., தொடரின் மும்பை அணிக்கு எதிரான முதல்
போட்டியில் சென்னை அணி, 1 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.

இந்தியாவில் ஐ.பி.எல்., உள்ளூர் 'டுவென்டி-20' தொடரின்
11வது சீசன் துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில்
முதல் போட்டி நடந்தது.

மும்பை அணி, 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய சென்னை அணி, 19.5 ஓவரில்
9 விக்கெட்டுக்கு, 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
-
------------------------------
தினமலர்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36789
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down


Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram on Sat May 05, 2018 5:11 pm

61 ரன்னுக்குள் கோலி, ஏபிடி, மெக்கல்லத்தை இழந்து ராயல் சேலஞ்சர்ஸ் திணறல்
-


: மே 05, 2018 16:54

ஐபிஎல் தொடரின் 35-வது ஆட்டம் புனேயில் நடைபெற்ற வருகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ்
டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மெக்கல்லம்,
பார்தீவ் பட்டேல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
மெக்கல்லம் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து பார்தீவ் பட்டேல் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி பவர் பிளே வரை நின்று விளையாடியது.

பார்தீப் பட்டேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த 6 ஓவரில் 1 விக்கெட்
இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்தது.

பவர் பிளேயின் அடுத்த ஓவரான 7-வத ஓவரை ஜடேஜா வீசினார்.
இந்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி ஸ்டம்பை பறி
கொடுத்தார். அவர் 11 பந்தில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அடுத்து வந்த ஏபி டி வில்லியர்ஸ் 1 ரன்கள் எடுத்த நிலையில் 8-வது
ஓவரில் ஸ்டம்பிங் ஆனார்.

மூன்று முக்கிய விக்கெட்டுக்களை இழந்த ராயல் சேலஞ்சர்ஸ்
பெங்களூர் அணி திணறி வருகிறது.

11 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் அடித்துள்ளது.
பார்தீவ் பட்டேல் 49 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
-
-----------------------------
மாலைமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36789
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram on Sat May 05, 2018 8:06 pm

பெங்களூருவை வீழ்த்தியது சென்னை
-

-
புனே:
பெங்களூருவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை
அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் 11வது ஐ.பி.எல்., 'டுவென்டி-20'
தொடர் நடக்கிறது. புனேயில் நடந்த லீக் போட்டியில் சென்னை,
பெங்களூரு அணிகள் மோதின.

'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி 'பவுலிங்'
தேர்வு செய்தார். சென்னை அணியில் டுபிளசி,
ஆசிப், கரண் சர்மாவுக்குப்பதில் வில்லே, துருவ், ஷர்துல் தாகூர்
இடம் பெற்றனர். பெங்களூரு அணியில் குயின்டன், வோரா,
வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு டிவிலியர்ஸ், பார்த்திவ், முருகன்
அஷ்வின் இடம் பிடித்தனர்.

ஜடேஜா அசத்தல்

பெங்களூரு அணிக்கு பிரண்டன் மெக்கலம், பார்த்திவ் படேல் துவக்கம்
தந்தனர். நிகிடி பந்தில் மெக்கலம் (5) ஆட்டமிழந்தார். இதன்பின்,
'சுழல்' ஆதிக்கம் துவங்கியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி (8)
ஜடேஜா 'சுழலில்' திரும்பினார்.

ஹர்பஜன் பந்தில் விளாசல் மன்னன் டிவிலியர்ஸ் (1) அவுட்டானார்.
மீண்டும் வந்த ஜடேஜா, இம்முறை மன்தீப் சிங்கை (7) திருப்பி
அனுப்பினார். பார்த்திவ் (53) அரை சதம் அடித்து ஆறுதல் தந்தார்.

ஹர்பஜன் பந்தில் முருகன் அஷ்வின் (1) சிக்கினார். ஷர்துல்
பந்துவீச்சில் சவுத்தீ ஒரு சிக்சர், பவுண்டரி விளாசினார். முடிவில்,
பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்தது.

சவுத்தீ (36) அவுட்டாகாமல் இருந்தார். சென்னை சார்பில் அதிக
பட்சமாக ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.

எளிய இலக்கு

எளிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு வாட்சன் (11) ஏமாற்றினார்.
பின், இணைந்த ராயுடு, ரெய்னா ஜோடி எதிரணி பந்துவீச்சை எளிதாக
சமாளித்தது. உமேஷ் 'வேகத்தில்' ரெய்னா (25) சிக்கினார். சிறப்பாக
விளையாடிய ராயுடு 32 ரன்கள் எடுத்தார்.

கிராண்ட்ஹோம் பந்தில் துருவ் ஷோரே (8) அவுட்டானார். கேப்டன்
தோனி, பிராவோ இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச்
சென்றனர். முருகன் அஷ்வின் பந்தை பிராவோ சிக்சருக்கு பறக்க
விட்டார்.

தன் பங்கிற்கு சகால் பந்தை தோனி சிக்சருக்கு அனுப்பினார்.
சென்னை அணி 18 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்து வெற்றி
பெற்றது. தோனி (31), பிராவோ (14) அவுட்டாகாமல் இருந்தனர்.
-
--------------------------------------------
தினமலர்

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36789
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல் -2018 !!

Post by T.N.Balasubramanian on Sat May 05, 2018 9:43 pm

CSK அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21965
மதிப்பீடுகள் : 8237

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram on Sun May 06, 2018 12:19 pm


-

ஐபிஎல் போட்டியில் மேலும் ஒரு சாதனையை சமன் செய்தார் டோனி


புனே:

ஐபிஎல் டி 20 போட்டி தொடரில் புனேயில் நேற்று நடந்த
பெங்களூருவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை
அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை அணி புள்ளிப்பட்டியலில் தற்போது
14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டனும்,
விக்கெட் கீப்பிங்கில் கில்லாடியுமான டோனி,
எம்.அஸ்வின் (பெங்களூரு) விக்கெட்டை ஸ்டம்பிங்
செய்து வீழ்த்தினார்.

இதன்மூலம் ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் அதிக முறை
ஸ்டம்பிங் செய்து இருந்த கொல்கத்தா அணியின்
முன்னாள் விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பாவின்
சாதனையை (158 ஆட்டத்தில் 32 ஸ்டம்பிங்) டோனி சமன்
செய்தார்.

டோனி 169 ஆட்டங்களில் 32 முறை ஸ்டம்பிங் செய்து
விக்கெட்டை சாய்த்து இருக்கிறார்.
இதனால் முதல் இடத்தை டோனி, உத்தப்பா ஆகியோர்
பகிர்ந்து கொண்டுள்ளனர். கொல்கத்தா அணி கேப்டனும்,
விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் 161 ஆட்டங்களில்
28 ஸ்டம்பிங் செய்து 2-வது இடத்தில் இருக்கிறார்.
-
இதோடு டோனி, இந்த தொடரில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள்
பட்டியலில் 27 கின்ஸர்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் 360 ரன்களுடன்
மூன்றாவது இடத்தில் உள்ளார்
-
------------------------------------
மாலை மலர்

_________________
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36789
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram on Thu May 10, 2018 12:46 pm

ஐ.பி.எல். 2018- பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள்
-
11-வது ஐ.பி.எல். தொடரில், 41 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில்
‘பிளே ஆப்’ சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள் பற்றிய ஒரு
கண்ணோட்டம்
-

-


11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 7-ந்தேதி
தொடங்கியது. இதில் விளையாடும் 8 அணிகளும்
தலா 14 ஆட்டத்தில் விளையாட வேண்டும். அதாவது ஒவ்வொரு
அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

‘லீக்‘ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை
பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்
மொத்தம் உள்ள 56 ‘லீக்‘ ஆட்டத்தில் நேற்றுடன் 41 போட்டிகள்
முடிந்து விட்டன. இன்னும் 15 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

அதிகாரப்பூர்வமாக இது வரை எந்த அணியும் ‘பிளே ஆப்’
சுற்றுக்கு நுழையவில்லை. 16 புள்ளிகள் பெற்று சன்ரைசஸ்
ஐதராபாத் அணி கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பிளே ஆப் சுற்றுக்கு
நுழைவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி டேர்டெவில்ஸ்
அணிகளுக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்த மாதிரிதான்.
மீதியுள்ள 2 இடத்துக்கு பஞ்சாப், மும்பை, கொல்கத்தா,
ராஜஸ்தான் அணிகள் இடையே போட்டி நிலவும் ஆட்டத்தின்
ஒரு அணியின் வெற்றி-தோல்வி மற்ற அணிகளுக்கு
சாதகமான பாதகமான முடிவாக அமையும்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36789
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram on Thu May 10, 2018 12:48 pm


‘பிளே ஆப்’ சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள் பற்றிய விவரம்:-
-
சன்ரைசர்ஸ் ஐதராபாத்:
-

-


ஐதராபாத் அணி 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகளை
பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. ரன் ரேட்டிலும் நல்ல
நிலையில் இருக்கிறது.

இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இன்றைய ஆட்டத்தில்
டெல்லியையும், 13-ந்தேதி சென்னையையும், 17-ந்தேதி
பெங்களூரையும், 19-ந்தேதி கொல்கத்தாவையும் சந்திக்கிறது.

பிளே ஆப் சுற்று வாய்ப்பை ஐதராபாத் அணி கிட்டத்தட்ட
உறுதி செய்துவிட்டது. இன்னும் ஒரு ஆட்டத்தில் வென்றால்
அதாவது 18 புள்ளிகளை பெற்றால் அதிகாரப்பூர்வமாக
நுழைந்து விடும்.

அபாரமான பந்து வீச்சை வைத்து அந்த அணி முத்திரை
பதித்து வருகிறது.
-
--------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36789
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram on Thu May 10, 2018 12:49 pm

சென்னை சூப்பர் கிங்ஸ்:
-

-

சென்னை அணி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று
2-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் 4 ஆட்டம் எஞ்சியுள்ளன.

இதில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே ‘பிளே ஆப்’
சுற்றை உறுதி செய்யலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் இனி வரும்
ஆட்டங்களில் ராஜஸ்தான் (11-ந்தேதி), ஐதராபாத், (13-ந்தேதி),
டெல்லி (18-ந்தேதி), பஞ்சாப், (20-ந்தேதி) அணிகளுடன் மோத
வேண்டும்.

இதில் சில ஆட்டங்கள் சவாலாக இருக்கும். டோனி அதிரடியாக
விளையாடி வருவது சென்னை அணிக்கு கூடுதல் பலமாக
இருக்கிறது.
-
-----------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36789
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram on Thu May 10, 2018 12:50 pm

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
-

-


அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி 6 வெற்றி 4 தோல்வியுடன்
12 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

4 ஆட்டத்தில் இரண்டில் கண்டிப்பாக வெல்ல வேண்டிய நிலை
அந்த அணிக்கு உள்ளது.

பஞ்சாப் அணிக்கு கொல்கத்தாவை 11-ந்தேதியும், பெங்களூரை
14-ந்தேதியும், மும்பையை 16-ந்தேதியும், சென்னையை 20-ந்தேதியும்
சந்திக்கிறது. இதில் கொல்கத்தா, மும்பையுடன் மோதும்
ஆட்டங்கள் முக்கியமானதாக அமையும்.

ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வென்றால் 14 புள்ளிகளை பெறும்.
அப்போது மற்ற அணிகளின் ஆட்டத்தை பொறுத்து அந்த அணியின்
நிலை இருக்கும்.
-
-------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36789
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram on Thu May 10, 2018 1:01 pm

மும்பை இந்தியன்ஸ்:

-

-


5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில்
உள்ளது. இன்னும் 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி அணிகளுடன் மோத வேண்டும்.

இந்த 3 ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய நிலை இருக்கிறது.

தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று மிகப் பெரிய வெற்றியை
பெற்றதால் ரன் ரேட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது
. அந்த அணி 4-வது இடத்துக்கு தற்போது முன்னேறி
இருக்கிறது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36789
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram on Thu May 10, 2018 1:02 pm


கொல்கத்தா நைட்ரைடர்ஸ்:

-

-

மும்பையை போலவே தினேஷ் கார்த்திக் தலைமையிலான
கொல்கத்தாவும் 10 புள்ளியுடன் (5 வெற்றி, 6 தோல்வி) இருக்கிறது.

மும்பைக்கு எதிராக நேற்று மோசமாக தோற்றதால் ரன் ரேட்டில்
பாதிப்பு ஏற்பட்டு 5-வது இடத்துக்கு பின் தங்கியது.

அந்த அணிக்கு எஞ்சிய 3 ஆட்டங்கள் (பஞ்சாப், ராஜஸ்தான்,
ஐதராபாத்) உள்ளது, இந்த மூன்றிலும் வெல்ல வேண்டிய
நெருக்கடி உள்ளது. பஞ்சாப், ராஜஸ்தானுடன் மோதும் ஆட்டம்
முக்கியமானதாகும்.
-
---------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36789
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram on Thu May 10, 2018 1:04 pmராஜஸ்தான் ராயல்ஸ்:
-

-

ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 4 வெற்றி,
6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.

அந்த அணி இன்னும் 4 ஆட்டங்கள் (சென்னை, மும்பை,
கொல்கத்தா, பெங்களூர்) உள்ளன. இதில் 3 அல்லது 4 ஆட்டத்தில்
வெல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ரன்ரேட்டில் அந்த
அணி மைனசில் இருப்பது பாதகமானதே,
-
-----------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36789
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram on Thu May 10, 2018 1:05 pm


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
-

-

3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று இருக்கிறது.
4 ஆட்டம் எஞ்சி உள்ளது. அந்த அணிகள் ‘பிளே ஆப்’
சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பு குறைந்து 4 ஆட்டத்திலும்
வென்றால் தான் 14 புள்ளிகளை பெற முடியும்.
-
----------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36789
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram on Thu May 10, 2018 1:06 pm


டெல்லி டேர்டெவில்ஸ்:
-

-


பெங்களூர் அணியை போலவே டெல்லி அணி இருக்கிறது.
பிளே ஆப் வாய்ப்பை பெறுவது கடினம்.

தகுதி பெறா விட்டாலும் அந்த அணியின் சில வெற்றிகள்
மற்ற அணிகளுக்கு சாதக, பாதகங்களை ஏற்படுத்தலாம்
-
--------------------------

மாலை மலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36789
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ரா.ரமேஷ்குமார் on Thu May 10, 2018 3:42 pm

IPL 2018 இப்பொழுது தான் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது ... இனி வரும் போட்டிகளில் பல சில அணிகளுக்கு வாழ்வா சாவா என்றே இருக்கும் ... சிரி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4216
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram on Fri May 11, 2018 3:38 am

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: ஐதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
-
டெல்லி:
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஐதராபாத்
அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் டாஸ் வென்ற டெல்லி டேர்  டெவில்ஸ் அணி
பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய
டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்
இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது.

அதிரடியாக விளையாடிய ரிசப் பண்ட் சதம்(128) விளாசினார்.
188 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத்
அணி களமிறங்கியது.

ஐதராபாத் அணி 18.5 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து
191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

தவான் மற்றும் வில்லியம்சன் அதிரடியாக விளையாடி
அரைசதம் அடித்தனர். ஐதராபாத் அணியில் அதிகப்பட்சமாக
தவான் 92 ரன்கள், வில்லியம்சன் 80 ரன்கள் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி தரவரிசை
பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
-
-------------------------------------
தினகரன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36789
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram on Sat May 12, 2018 10:44 am

பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
-

-
பரபரப்பான கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்
வித்தியாசத்தில் சென்னையை வென்றது. அந்த அணியின்
தொடக்க வீரர் ஆட்டமிழக்காமல் 95 ரன்களை குவித்து
வெற்றிக்கு வித்திட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு
இடையிலான ஐபிஎல் 43-வது ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு
ஜெய்ப்பூரில் நடைபெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு
செய்தது. ஷேன் வாட்சன், அம்பட்டி ராயுடு ஆகியோர்
தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின்
தொடக்கத்திலேயே இருவரும் அதிரடி ஆட்டத்தை மேற்
கொண்டனர்.

2 பவுண்டரியுடன் 12 ரன்களை எடுத்த ராயுடு, ஆர்ச்சர் பந்தில்
போல்டானார்.

39 ரன்களை எடுத்த வாட்சன், ஆர்ச்சர் பந்துவீச்சில் பட்லரிடம்
கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடிய ரெய்னா 1 சிக்ஸர், 6 பவுண்டரியுடன்
35 பந்துகளில் 52 ரன்களுடன் சோதி பந்துவீச்சில் பின்னியிடம்
கேட்ச் தந்து ஆட்டமிழந்தார்.

19.3-வது ஓவரில் பில்லிங்ஸ் 27 ரன்கள் எடுத்த நிலையில் ரன்
அவுட்டானார்.

23 பந்துகளில் 33 ரன்களுடன் தோனியும்,
1 ரன்னுடன் பிராவோவும் இறுதி வரை ஆட்டமிழக்காமல்
இருந்தனர். 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு சென்னை
அணி 176 ரன்களை எடுத்தது.

ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டையும், சோதி
1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான்
அணி தரப்பில் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் தொடக்க
வீரர்களாக களமிறங்கினர்.

11 ரன்களில் ஸ்டோக்ஸ் வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து
கேப்டன் ரஹானே 4, சஞ்சு சாம்சன் 21, பிரசாந்த் சோப்ரா
8 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஸ்டுவர்ட் பின்னி 22 ரன்களுக்கு பிராவோ பந்தில்
ஆட்டமிழந்தார்.

அவருக்கு பின் வந்த கிருஷ்ணப்ப கெளதம் 2 சிக்ஸர் உள்பட
3 பந்துகளில் 13 ரன்கள் அடித்து வில்லி பந்தில் தோனியிடம்
கேட்ச் தந்து வெளியேறினார்.

தொடக்க வீரர் பட்லர் 2 சிக்ஸர், 11 பவுண்டரியுடன்
60 பந்துகளில் 95 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல்
இருந்தார். கடைசி ஓவரில் பட்லர் சிக்ஸர் அடித்து அணியை
வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் ராஜஸ்தான் 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு
177 ரன்களை எடுத்து வென்றது.

சென்னை தரப்பில் வில்லி, ஹர்பஜன், ஜடேஜா, தாகுர்,
பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
-
--------------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36789
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

ராயுடு சரவெடி சதம்; சென்னை அசத்தல் வெற்றி

Post by ரா.ரமேஷ்குமார் on Sun May 13, 2018 9:36 pm

புனே: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராயுடு அதிரடி சதம் கைகொடுக்க சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இன்று புனேயில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி 'பவுலிங்' தேர்வு செய்தார். சென்னை அணியில் கரண் சர்மாவுக்குப்பதில் சகார் வாய்ப்பு பெற்றார். ஐதராபாத் அணியில் யூசுப் பதானுக்கு பதில் தீபக் ஹூடா இடம்பிடித்தார்.

தவான் அரை சதம் :
ஐதராபாத் அணிக்கு ஹேல்ஸ் (2) சொதப்பினார். பின், இணைந்த ஷிகர் தவான், கேப்டன் வில்லியம்சன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜடேஜா பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட தவான் அரை சதம் அடித்தார். வில்லியம்சன் ஐ.பி.எல்., அரங்கில் 10வது அரை சதம் எட்டினார். பிராவோ பந்தில் தவான் (79) அவுட்டானார். வில்லியம்சன் 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஷர்துல் தாகூர் 'வேகத்தில்' மணிஷ் பாண்டே (5) திரும்பினார். முடிவில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. தீபக் ஹூடா (21), சாகிப் (8) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக தாகூர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

அபார துவக்கம்:
சென்னை அணிக்கு ராயுடு, வாட்சன் அசத்தல் துவக்கம் தந்தனர். பவுண்டரி சிக்சர்களாக விளாசிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்தனர். அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்சன், 3 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் அரைசதம் விளாசினார். ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்ட வாட்சன்(57), தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். ரெய்னா(2) நிலைக்கவில்லை.

சரவெடி ராயுடு:
பின் தோனி களமிறங்க, ஆட்டத்தில் அனல் பறந்தது. இத்தொடரில் தொடர்ந்து ரன் குவித்து வரும் ராயுடு, இப்போட்டியிலும் ஏமாற்றவில்லை. 62 பந்தில் 7 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் சதம் விளாசிய ராயுடு, இந்த 'சீசனில்' வாட்சன் (சென்னை), கெய்ல் (பஞ்சாப்), ரிஷாப்பிற்குப்பின் (டில்லி) சதம் அடித்த 4வது வீரரானார்.
முடிவில், சென்னை அணி 19 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராயுடு (100), தோனி (20) அவுட்டாகாமல் இருந்தனர்.
நன்றி - தினமலர்
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4216
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram on Tue May 15, 2018 2:43 am

இந்த வெற்றியின் மூலம் சென்னை
அணி தனது பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.

ஹைதராபாத் அணியும் ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்குள்
நுழைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
-
---------------------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36789
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram on Mon May 21, 2018 2:10 pm

டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
-

-
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 55வது போட்டியான
இன்றைய முதல் போட்டி மும்பை அணிக்கு மிகவும்
முக்கியமான போட்டியாக இருந்தது.

இந்த போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால் வெளியேறும்
நிலை இருந்த நிலையில் டெல்லி அணியிடம் 11 ரன்கள்
வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் அந்த
அணியால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் மும்பை அணியின் ஸ்கோர் விபரம்:

டெல்லி அணி: 174/4
20 ஓவர்கள்

ஆர்.ஆர்.பேண்ட்: 64
விஜய் சங்கர்:44

மும்பை அணி: 163/10 19.3 ஓவர்கள்

லீவிஸ்: 48
கட்டிங்:
ஆட்டநாயகன்:
அமித் மிஸ்ரா

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 5 வெற்றிகள் பெற்று
10 புள்ளிகளுடன் இருந்தாலும், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி
பெறவில்லை என்பது மட்டுமின்றி புள்ளிப்பட்டியலில் கடைசி
இடத்தில் உள்ளது.
-
------------------------------------
வெப்துனியா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36789
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram on Tue May 22, 2018 5:26 pm

அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
-

-


11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் கடைசி லீக்
ஆட்டம் 20-ஆம் தேதி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற
சென்னை சூப்பர் கிங்ஸ் குவாலிஃபையர் வாய்ப்பை தக்க
வைத்தது.

மேலும் பங்கேற்ற அனைத்து ஜபிஎல் தொடர்களிலும்
நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற
பெருமையைப் பெற்றது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரசிகர்களால்
சின்ன தல என்றழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் போட்டித்
தொடரில் 5 ஆயிரம் ரன்களை முதலில் கடந்த வீரர் என்ற
அசத்தல் சாதனை படைக்க நடப்பு சீசனில் அரிய வாய்ப்பு
ஏற்பட்டுள்ளது.

இதுவரை 174 போட்டிகளில் 4,931 ரன்கள் குவித்து அதிக ரன்கள்
குவித்தவர்கள் பட்டியலில் 2-ஆம் இடத்தில் உள்ளார்.
இதில் 441 பவுண்டரிகளும், 184 சிக்ஸர்களும் அடங்கும்.

அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 100* (ஒரு சதம்) மற்றும்
35 அரைசதங்கள் எடுத்துள்ளார்.

5 ஆயிரம் ரன்களைக் கடக்க இன்னும் 69 ரன்கள் மட்டுமே
உள்ள நிலையில், நடப்பு சீசனில் மட்டும் 3 வாய்ப்புகள் உள்ளது.
அதிரடி ஆட்டக்காரரான ரெய்னா, இந்த இலக்கத்தை
ஒரே இன்னிங்ஸில் சாதித்துவிடுவார் என்றே அவரது ரசிகர்கள்
எதிர்பார்க்கின்றனர்.

விராட் கோலி, 4,948 ரன்கள் குவித்து ஐபிஎல் போட்டிகளில்
அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் தற்போது வரை
முதலிடத்தில் நீடிக்கிறார். 163 போட்டிகளல் விளையாடியுள்ள
கோலி, 4 சதங்கள், 34 அரைசதங்கள் உட்பட ஒரு இன்னிங்ஸில்
அதிகபட்சமாக 113 ரன்கள் குவித்துள்ளார்.
இதில் மொத்தம் 434 பவுண்டரிகளும், 177 சிக்ஸர்களும் அடங்கும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெளியேற்றப்பட்ட நிலையில்,
முதலிடத்தில் உள்ள விராட் கோலியை எளிதாக முந்திச் சென்று
நடப்பு சீசனிலேயே இதை சாதிக்கும் அரிய வாய்ப்பு
சுரேஷ் ரெய்னாவுக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
----------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36789
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல் -2018 !!

Post by T.N.Balasubramanian on Wed May 23, 2018 9:46 am

நேற்றைய தேர்வாளர் 1 போட்டி முடிவு வரை திக் திக் திகில்தான்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21965
மதிப்பீடுகள் : 8237

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram Today at 6:06 pm

ஐ.பி.எல். கோப்பை யாருக்கு? சென்னை-ஐதராபாத் இன்று பலப்பரீட்சை
-
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத்
அணியும் இன்று மோதுகின்றனர்.

மும்பை:

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம்
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு
நடக்கிறது.

இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-
வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத்
அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். கோப்பை யாருக்கு?

இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் ஐ.பி.எல்.
கோப்பையை வெல்லப்போவது யார் என்று ஆவலுடன்
எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை
வெல்லும் ஆர்வத்துடனும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2-வது
தடவையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்துடனும் உள்ளன.

சென்னை அணி 2010, 2011-ம் ஆண்டுகளிலும் ,
ஐதராபாத் 2016-ம் ஆண்டும் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தன.

சென்னை அணியின் பேட்டிங்கும், ஐதராபாத் அணியின்
பந்துவீச்சுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும்.

சென்னை அணியின் பலமே பேட்டிங் தான். கேப்டன் டோனி,
அம்பதி ராயுடு, வாட்சன், ரெய்னா ஆகியோர் நல்ல நிலையில்
உள்ளனர்.

ரஷீத்கான், சித்தார்த் கவூல், புவனேஷ்வர்குமார் ஆகியோர்
ஐதராபாத் அணியின் பந்துவீச்சில் முத்திரை பதிக்க கூடியவர்கள்.

சென்னை அணியில் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து
வீரர் நிகிடி மிகவும் நல்ல நிலையில் உள்ளார்.
தீபக் சாஹர், ‌ஷர்துல் தாகூர் ஆகியோரும் சிறப்பாக வீசக்
கூடியவர்கள். ஐதராபாத் அணியின் பேட்டிங்கில் கேப்டன்
வில்லியம்சன், தவான், மனீஷ்பாண்டே, யூசுப்பதான் ஆகியோர்
நல்ல நிலையில் உள்ளனர்.

இரு அணியிலும் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படும்
11 வீரர்கள் விவரம்:-

சென்னை சூப்பர் கிங்ஸ்: டோனி (கேப்டன்), வாட்சன், டுபெலிசிஸ்,
ரெய்னா, அம்பதி ராயுடு, பிராவோ, ஜடேஜா, தீபக் சாஹர்,
ஹர்பஜன்சிங் அல்லது கரண் சர்மா, ‌ஷர்துல் தாகூர், நிகிடி.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்: வில்லியம்சன் (கேப்டன்), விர்த்திமான் சகா,
தவான், சகீப்-அல்-ஹசன், தீபக் ஹூடா, யூசுப்பதான், பிராத்வெயிட்,
ரஷீத்கான், புவனேஷ்வர்குமார், சித்தார்த் கவூல், சந்தீப்சர்மா
அல்லது கலீல் அகமது அல்லது பாசி தம்பி.
-
--------------------------------
மாலைமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36789
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல் -2018 !!

Post by ayyasamy ram Today at 6:06 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36789
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல் -2018 !!

Post by T.N.Balasubramanian Today at 6:22 pm

விறுவிறுப்பாக இருக்க வேண்டும்.
ஏதாவது ஒரு அணிதான் வெல்லமுடியும்.புன்னகை புன்னகை

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21965
மதிப்பீடுகள் : 8237

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல் -2018 !!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum