ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 SK

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 SK

'ஸரிகமபதநி' - விளக்கம்
 T.N.Balasubramanian

அம்மா.
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 T.N.Balasubramanian

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சந்திரனில் "ஹனிமூன்"! நாசா "புரட்சிகர" திட்டம்

View previous topic View next topic Go down

சந்திரனில் "ஹனிமூன்"! நாசா "புரட்சிகர" திட்டம்

Post by தண்டாயுதபாணி on Fri Dec 18, 2009 11:24 am


திருமணமான புதுமணத் தம்பதிகளிடம் 'எங்கேப்பா
ஹனிமூன்?-என்றபடி தோழர்களும், தோழியர்களும் கிண்டலாக
கேட்பது வழக்கம். 'ஹனிமுன்' என்றால் தேனிலவு என்பது
ஊரறிந்த ரகசியம். "ஹனிமூன்" போவது என்றால் நிலவுக்கு
சென்று வருவது என்று அர்த்தம் அல்ல. ஆனால்..
'நீங்கள்உண்மையிலேயே தேனிலவு கொண்டாட நிலவுக்கு சென்றுவர
விருப்பமா? நாங்கள் அழைத்துச் செல்கிறோம் , வாருங்கள்"
என்றபடி இருகரம் கூப்பி வரவேற்கிறது, நாசா.
நிலவுக்கு இதுவரை அப்பல்லோ, லூனா போன்ற விண்கலங்கள்தான்
சென்று வந்து இருக்கின்றன. ஆனால் நிலாவில் எவரும்
தங்கியதில்லை. நிலவுக்கு சென்று தங்குவதற்கான ஆயத்தப்
பணிகளில் நாசா இப்போது ஈடுபட ஆரம்பித்து விட்டது.

சந்திரனின் ஏதாவது ஒரு துருவத்தில், சர்வதேச விண்வெளி
ஆராய்ச்சி நிலையம் மாதிரி புதிதாக சகல வசதிகளுடன் கூடிய
ஆராய்ச்சி நிலையமொன்றை நிறுவி சாதனை படைக்க நாசா
எண்ணியுள்ளது.


'சந்திரனில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தை எப்பொழுதும்
நிரந்தரமாக ஒரு ஆராய்ச்சிக் குழு வலம் வந்து
கொண்டேயிருக்கும்' என்கிறார் நாசாவின் விஞ்ஞானியும்,
நிர்வாகிகளில் ஒருவருமான ஸ்காட் ஹோரோவிட்ச். "சந்திரனில்
நிரந்தரமாக ஒரு ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் .
அங்கிருந்து கொண்டு மக்கள் சந்திரனில், எங்கு
வேண்டுமானாலும் பயணிக்கலாம். சந்திரனில் இருந்து
செவ்வாய்க்கும் செல்ல வழி செய்யப்படும்'' என்று அமெரிக்க
ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் கடந்த 2004-லேயே அறிவித்திருந்தது
இங்கு குறிப்பிடத்தக்க அம்சம்.

'சந்திரனின் வட துருவத்தின் ஒன்றிரண்டு பகுதிகளில்
எப்பொழுதும் சூரிய ஒளி கிடைக்கவாய்ப்பு இருக்கிறது. இது
அங்கு வருங்காலத்தில் மனிதன் வசிப்பிடம் அமைப்பதற்கு
நிச்சயமாக வழிவகுக்கும்.

சந்திரனில் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கான திட்டப்பணிகளை
நாசா மற்றும் 13 பிற விண்வெளி ஆராய்ச்சி கழகங்கள் இணைந்து
மேற்கொண்டு வருகின்றன. சந்திரனில் ஆராய்ச்சி மையத்தை நிறுவ
என்னென்ன உத்திகளை கையாளுவது, புதிய ஆராய்ச்சி நிலையத்தின்
பணிகள் என்னென்ன என்பது பற்றிய கருத்துருக்களையும்,
நோக்கங்களையும் தயாரித்து வருகின்றன.நாங்கள் ஒன்றும்
இதில் தனியாக ஈடுபடப் போவதில்லை. பல்வேறு வர்த்தக மற்றும்
சர்வதேச நாடுகளின் பங்களிப்பும் இதில் இருக்கும்'',
என்கிறார். நாசாவின் மூத்த விஞ்ஞானியும் துணை
நிர்வாகியுமான ஷானா டேல்.

சந்திரனில் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான தகவல்,
தொழில்நுட்பம் மற்றும் இன்னபிற வசதிகள் அனைத்தையும் நாசா
வழங்குமென்று தெரிவித்த டேல், "சந்திரன்-பூமி
போக்குவரத்திற்கான விண்கல வசதிகளை நாசா ஏற்கனவே தொடங்கி
விட்டது'' என்கிறார். சந்திரனில் வசிப்பதற்கான அடிப்படை
வசதிகளான மின்சாரம், தகவல், ரோபோட் போன்ற மாதிரி
தொழில்நுட்ப அம்சங்களைப் பெறுவதற்கான முயற்சியும்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்திரனில் ஆராய்ச்சி நிலையத்தை நிறுவ, ரோபோட்டின் பங்கு
மிகவும் அவசியம் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம்.
சந்திரனில் ஆராய்ச்சி நிலையத்தின் முழு அளவிலான சோதனை
2009-ல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ராக்கெட் மற்றும்
விண்கலங்கள் தயாராகி வருகின்றன.


இரண்டாம் கட்ட சோதனை ஒத்திகை, வருகிற 2012-ல் நடத்தப்பட
உள்ளது. 2008ல் முதன் முதலாக ரோபோட், சந்திரனின்
ஆய்வுப்பணியில் ஈடுபடுத்தப்படும். இதற்காக ரோபோட் அடங்கிய
விண்கலம்,2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் அனுப்பி
வைக்கப்படும். சந்திரனில் விண்வெளி ஆராய்ச்சி
நிலையத்துக்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகளில் இந்த
ரோபோட் ஈடுபடும்.

"சந்திரனின் துருவங்களை பூமியிலிருந்து ஆராய்வது சற்று
கடினம் என்பதால் தான், ரோபோட் அடங்கிய விண்கலம் அங்கு
அனுப்பபடுகிறது. அதன்பிறகு வருகிற 2010ல், ஆய்வு நிலையம்
அமைப்பதற்கான தகுந்த இடத்தில் இந்த விண்கலம் இறங்கும்.
இதன் மூலம் நமக்கு நிறைய முக்கியத் தகவல்கள் கிடைக்கும்''
என்கிறார் ஹோரோவிட்ச்.

சந்திரனின் துருவங்களில் பனிக்கட்டி மாதிரி காணப்படும்
இடங்களில் ஆக்ஸிஜன், எரிபொருள் மற்றும் தண்ணீர்
கிடைக்கலாம் என்று இத்திட்டத்தின் ஆராய்ச்சியாளர்கள்
நம்புகின்றனர். நியூயார்க்கில் உள்ள கார்னல் பல்கலைக்
கழகத்தின் டொனால்டு கேம்பல் என்பவர் இராட்சத தொலைநோக்கி
ஒன்றின் மூலம் சந்திரனை ஆய்வு செய்த போது, சந்திரனில்
துருவங்களில் மேகமூட்டம் போன்ற காட்சிகள் தெரிந்தது. இது
பனிக்கட்டி மலைகளாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள்
நம்புகிறார்கள். இம்மாதிரியான பனிக்கட்டிகள்,
பயன்படத்தக்க ஒரு மூலப்பொருள்' என்று சந்தோஷத்துடன்
குறிப்பிடும் விஞ்ஞானிகள் தரப்பு, "சந்திரனில்
அமையவிருக்கும் நிரந்தர விண்வெளி நிலையத்திற்கு
மட்டுமல்ல.. எதிர்கால சந்ததியினர்ஹதேனிலவு' செல்வதற்கும்
இது ஒரு சாத்தியக்கூறு'' என்கிறார்கள்.

சுற்றுலாப் பயணிகள் ஊட்டி, கொடைக்கானல், சுவிட்சர்லாந்து,
ஆஸ்திரேலியா என்று இனிமேல் 'டூர்' செல்ல வேண்டியதில்லை.
அவர்களுக்கு இனி உண்மையிலேயே, நிஜமான 'ஹனிமூன்'
அனுபவிக்கும் வாய்ப்பு ஏற்படும். சுற்றுலாத்துறைக்கும்
அதுவொரு பொற்காலமாக அமையும்.இதுவரை அறிவியல் அதிசயம் கட்டுரையில் 'அ" முதல் 'ஃ" வரை
எல்லா தகவல்களையும் பார்த்தோம். விண்வெளி, பிரபஞ்சங்கள்,
பறக்கும் தட்டுகள், அதிசயத் தீவுகள், கோள்கள், விண்வெளி
மின்தூக்கியில் ஆரம்பித்து சொகுசுக் கப்பல்கள், கடல்
ஆராய்ச்சி, பறக்கும் கார், அதிநுட்ப புல்லட் ரெயில்கள்,
விமானங்கள், வானுயர்ந்த கட்டிடங்கள், நவீன பாலங்கள்,
ராடார், ராக்கெட், விண்கலங்கள், மின் தூக்கிகள், ரோபோட்,
தொலைகாட்சி, தொலைபேசி, செல்போன், தொலைநோக்கி, தொலை
தொடர்பு, தகவல் பரிமாற்றங்கள், புலனாய்வு மற்றும்
குற்றவியல் துறைகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப
வளர்ச்சிகள், நவீன மின்னணுக் கருவிகள், மருத்துவத்துறையில்
ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சிகள் - இப்படி எண்ணற்ற
துறைகளைப் பற்றி ... அதாவது தீப்பெட்டி முதல் விண்கலம் வரை
உங்களுக்கு அறிவியல் அதிசயம் கட்டுரையில் எழுதியிருந்தேன்.
வானமே எல்லை என்று இல்லாமல் அதற்கு மேலும் பல அரிய,
புதிரான தகவல்கள் அறியமுடிந்தது. வாசகர்களாகிய உங்களுக்கு
இது மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

மேலும் இன்று ஒவ்வொரு துறையிலும் அறிவியல் வளர்ச்சிகள்,
போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்து வருகின்றன. சாதாரண
மக்களுக்கு எட்டாக்கனியாயிருந்த தொழில்நுட்ப வளர்ச்சிகள்
அவற்றை அனுபவிக்கும் வசதிமுறைகள் பணக்காரர்கள் மட்டுமே
நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த முடியும் என்றறிருந்த
நிலைமாறி, இன்று சாதாரண மக்களும் தொழில்நுட்பத்தின் அருமை,
பெருமைகளை அனுபவிக்கமுடியும் என்ற அரிய செய்திகளை,
இக்கட்டுரைகள் உங்களுக்கு விளக்கியது. பஞ்ச தந்திரக்
கதைகளிலும், கற்பனைக் கதைகளிலும் மட்டுமே சாத்தியமாகக்
கூடிய விஷயங்கள் கூட அறிவியலிலும் நிகழ்ந்திருக்கிறது,
நிகழக்கூடிய சாத்தியமும் இருக்கிறது. இது விஞ்ஞானத்திற்கு
வயதில்லை என்பதையே காட்டுகிறது.
avatar
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1303
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: சந்திரனில் "ஹனிமூன்"! நாசா "புரட்சிகர" திட்டம்

Post by VIJAY on Fri Dec 18, 2009 11:27 am

என் தேனிலவே ஒரு நிலவுடன் தான்..........
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: சந்திரனில் "ஹனிமூன்"! நாசா "புரட்சிகர" திட்டம்

Post by இளவரசன் on Fri Dec 18, 2009 12:20 pm

@VIJAY wrote:என் தேனிலவே ஒரு நிலவுடன் தான்..........இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: சந்திரனில் "ஹனிமூன்"! நாசா "புரட்சிகர" திட்டம்

Post by kirupairajah on Mon Feb 01, 2010 10:10 pm

@தண்டாயுதபாணி wrote:
சாதாரண
மக்களுக்கு எட்டாக்கனியாயிருந்த தொழில்நுட்ப வளர்ச்சிகள்
அவற்றை அனுபவிக்கும் வசதிமுறைகள் பணக்காரர்கள் மட்டுமே
நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த முடியும் என்றறிருந்த
நிலைமாறி, இன்று சாதாரண மக்களும் தொழில்நுட்பத்தின் அருமை,
பெருமைகளை அனுபவிக்கமுடியும் என்ற அரிய செய்திகளை,
இக்கட்டுரைகள் உங்களுக்கு விளக்கியது.
நல்லதோர் பதிவு, நன்றி தண்டாயுதபாணி!

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: சந்திரனில் "ஹனிமூன்"! நாசா "புரட்சிகர" திட்டம்

Post by Manik on Fri Feb 05, 2010 9:10 pm

@VIJAY wrote:என் தேனிலவே ஒரு நிலவுடன் தான்..........

நல்ல பதில் விஜய்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சந்திரனில் "ஹனிமூன்"! நாசா "புரட்சிகர" திட்டம்

Post by அப்புகுட்டி on Fri Feb 05, 2010 9:14 pm

@kirupairajah wrote:
@தண்டாயுதபாணி wrote:
சாதாரண
மக்களுக்கு எட்டாக்கனியாயிருந்த தொழில்நுட்ப வளர்ச்சிகள்
அவற்றை அனுபவிக்கும் வசதிமுறைகள் பணக்காரர்கள் மட்டுமே
நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த முடியும் என்றறிருந்த
நிலைமாறி, இன்று சாதாரண மக்களும் தொழில்நுட்பத்தின் அருமை,
பெருமைகளை அனுபவிக்கமுடியும் என்ற அரிய செய்திகளை,
இக்கட்டுரைகள் உங்களுக்கு விளக்கியது.
நல்லதோர் பதிவு, நன்றி தண்டாயுதபாணி!
மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: சந்திரனில் "ஹனிமூன்"! நாசா "புரட்சிகர" திட்டம்

Post by Manik on Fri Feb 05, 2010 9:15 pm

அப்புகுட்டி சாப்பிட்டீங்களா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சந்திரனில் "ஹனிமூன்"! நாசா "புரட்சிகர" திட்டம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum