புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சண்டகோழி 2 – விமர்சனம் Poll_c10சண்டகோழி 2 – விமர்சனம் Poll_m10சண்டகோழி 2 – விமர்சனம் Poll_c10 
15 Posts - 88%
Manimegala
சண்டகோழி 2 – விமர்சனம் Poll_c10சண்டகோழி 2 – விமர்சனம் Poll_m10சண்டகோழி 2 – விமர்சனம் Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு
சண்டகோழி 2 – விமர்சனம் Poll_c10சண்டகோழி 2 – விமர்சனம் Poll_m10சண்டகோழி 2 – விமர்சனம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சண்டகோழி 2 – விமர்சனம் Poll_c10சண்டகோழி 2 – விமர்சனம் Poll_m10சண்டகோழி 2 – விமர்சனம் Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
சண்டகோழி 2 – விமர்சனம் Poll_c10சண்டகோழி 2 – விமர்சனம் Poll_m10சண்டகோழி 2 – விமர்சனம் Poll_c10 
98 Posts - 37%
mohamed nizamudeen
சண்டகோழி 2 – விமர்சனம் Poll_c10சண்டகோழி 2 – விமர்சனம் Poll_m10சண்டகோழி 2 – விமர்சனம் Poll_c10 
11 Posts - 4%
prajai
சண்டகோழி 2 – விமர்சனம் Poll_c10சண்டகோழி 2 – விமர்சனம் Poll_m10சண்டகோழி 2 – விமர்சனம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
சண்டகோழி 2 – விமர்சனம் Poll_c10சண்டகோழி 2 – விமர்சனம் Poll_m10சண்டகோழி 2 – விமர்சனம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
சண்டகோழி 2 – விமர்சனம் Poll_c10சண்டகோழி 2 – விமர்சனம் Poll_m10சண்டகோழி 2 – விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சண்டகோழி 2 – விமர்சனம் Poll_c10சண்டகோழி 2 – விமர்சனம் Poll_m10சண்டகோழி 2 – விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
jairam
சண்டகோழி 2 – விமர்சனம் Poll_c10சண்டகோழி 2 – விமர்சனம் Poll_m10சண்டகோழி 2 – விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சண்டகோழி 2 – விமர்சனம் Poll_c10சண்டகோழி 2 – விமர்சனம் Poll_m10சண்டகோழி 2 – விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சண்டகோழி 2 – விமர்சனம் Poll_c10சண்டகோழி 2 – விமர்சனம் Poll_m10சண்டகோழி 2 – விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சண்டகோழி 2 – விமர்சனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82085
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 22, 2018 10:50 am

சண்டகோழி 2 – விமர்சனம் Kollywood-news-8408
-
விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் லிங்குசாமி
இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி,
ராஜ்கிரண், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடிப்பில்
வெளியாகியுள்ள படம் ‘சண்டகோழி2 ‘

2005 வெளியாகி ஹிட்டடித்த ‘சண்டகோழி‘ படத்தின்
இரண்டாம் பாகம். படித்துவிட்டு ஏழு வருடங்கள் கழித்து
மீண்டும் ஊருக்கு வரும் பாலு(விஷால்), சுற்றுவட்டார
ஊர்களுக்கெல்லாம் பெரிய ஐயாவாக துரை ஐயா(ராஜ் கிரண்).

ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு பிரச்னையால் ஊருக்குள்
திருவிழா இல்லாமல் , மழை தண்ணி இல்லாமல் ஊரே காத்து
கிடக்க. இந்த வருடமாவது நடத்தலாம் என திருவிழாவுக்கான
திட்டம் போடுகிறார்கள் ஊர் பெரியவர்கள்.

ஆனால் பிரச்னைக்குக் காரணமான குடும்பமோ நீங்கள்
என்ன சொன்னாலும் எங்கள் பழியைத் தீர்ப்போம் என வரிந்து
கட்டிக்கொண்டு நிற்கிறது.

இதனால் எவ்வித பிரச்னையும் இல்லாமல் திருவிழாவை
நடத்தி முடிக்க பாலுவும், துரை ஐயாவும் முடிவு செய்து களத்தில்
இறங்குகிறார்கள். யாரை இவர்கள் பழி தீர்க்க
நினைக்கிறார்கள், ஏன், முடிவு என்ன என்பது மீதிக் கதை.

முதல் பாகம் வந்து 13 வருடங்கள் கழித்து இந்த பாகம்
வெளியானாலும் அத்தனை நடிகர்களையும் ஒன்றிணைத்து
இயக்கிய லிங்குசாமிக்கு பாராட்டுகள்.பழைய ஹீரோயினுக்கு
மெனெக்கெடாமல் ஒருவரியில் கதை சொல்லி கீர்த்தி சுரேஷை
நாயகியாகக் கொண்டு வந்தது புத்திசாலித்தனம்.

சமீபகாலமாகவே விஷால் இயக்குநரின் பேச்சைக் கேட்டு
கதைக்கு என்னத் தேவையோ அதை மட்டும் செய்கிறார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82085
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 22, 2018 10:50 am

அந்த வகையில் இதிலும் அதே பழைய எதார்த்த பக்கத்து
வீட்டு பையனின் சாயல், ஓவர் ஆக்டிங் இல்லாமல் அளவான
நடிப்பு, சில பில்டப்கள் இருப்பினும் அதைக் கண்டு
கொள்ளாமல் அசால்ட்டாக கடந்து செல்வது என விஷாலின்
நடிப்பில் நிறைய முன்னேற்றம்.

கீர்த்தி சுரேஷ், அழகாக இருக்கிறார், அசத்தலாக நடனம்
ஆடுகிறார். எனினும் குறும்பான காட்சிகளில் கொஞ்சம்
தூக்கலான நடிப்பு. இது கொஞ்சம் டூ மச்‘ஆ இருக்கோ
எனத் தோன்றுகிறது.

ஆங்காங்கே ‘தேவர் மகன்‘ ஞாபகம் வந்தாலும் கமர்சியல்
ஆக்‌ஷன் காட்சிகளும், கிராமத்து திருவிழா சம்பிரதாயங்களும்
சற்றே படத்தின் போக்கை டைவர்ட் செய்துவிடுகிறது.

‘தாவணி போட்ட தீபாவளி‘, ‘முண்டாசு சூரியனே‘
போன்ற மியூசிக் மேஜிக்குகள் நடக்கவில்லை , ஆனால்
யுவனின் ‘கம்பத்துப் பொண்ணு‘ பாடல் ரீங்காரம். பின்னணி
இசை சரவெடி.


செம்மண் காட்டு சண்டைக் காட்சிகள், கலர்புல் திருவிழா
சம்பவங்கள் , கிராமத்து இயற்கை என அத்தனையும்
அம்சமாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல்.

ராஜ்கிரணுக்கு ஏன் இவ்வளவு பெரிய பில்டப் எனத்
தெரியவில்லை. ’திருவிழாவுல புலி வேஷம் போடலாம்,
ஆனால் புலிக்கு முன்னாடியே வேஷம் போடக் கூடாது’,

‘அறுவாளப் பார்த்தா ஆடு பயப்படும், ஐயாளு எதுக்குப்
பயப்படணும்’. இப்படி படம் நெடுக பன்ச் டயலாக்குகள்
இருப்பினும் பறந்து அடிப்பது, மேலே பறப்பது போன்ற
காட்சிகள் இல்லாமல் போரடிக்காத கமர்சியல் படமாக
கொடுத்திருக்கிறார் லிங்குசாமி.

————————————-

-தினகரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 3:17 pm



சுமார் 13 ஆண்டுகளுக்கு (2005) முன் வந்து வசூலில் சக்கைப் போடு போட்டதோடு, நடிகராக விஷாலுக்கும், இயக்குநராக லிங்குசாமிக்கும் புதிய பாதையைப் போட்டுத் தந்த சண்டைக்கோழி படத்தை மீண்டும் தூசி தட்டி, புதிய திரைக்கதையோடு கொண்டுவந்திருக்கிறார்கள். அஞ்சான் படத்தோடு அஞ்சாத வாசம் போன லிங்குசாமி இதில் மீண்டும் உயிர்கொண்டு வந்திருக்கிறார். இரசிகர்களை ஏமாற்றாமல் படத்தைத் தந்திருக்கிறார்.

கதை என்னமோ அதரப் பழசு கதைதான். அதே கிராமத் திருவிழா – சாதாரண ஆட்டுக் கறி விருந்தின் போது எழும் சச்சரவுகள் – அதைத் தொடர்ந்து வெட்டு குத்து, கொலைகள் – இரண்டு தரப்பினரின் தீராப் பகை – இப்படித்தான் கதைப் பின்னியிருக்கிறார்கள்.

ஆனால், இந்த திரைக்கதைக்கு சுவாரசியத்தைக் கூட்டியிருப்பது வில்லியாக வரலட்சுமியின் மிரட்டல் நடிப்பும், இளமை கொஞ்சும் விளையாட்டுத் தனத்தோடு உலா வரும் கீர்த்தி சுரேஷின் சேட்டைகளும்தான். ராஜ்கிரண், விஷால் இடையிலான தந்தை – மகன் உறவு அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் தேவர் மகனை நினைவுபடுத்துகிறது.

கணவனை இழந்து விட்டு அதற்காகப் பழிவாங்க உருட்டும் விழிகளுடன், மிரட்டலான வசனங்களுடன், தலைவிரித்த கோலத்துடன் அசத்துகிறார் பேச்சி என்ற கதாபாத்திரத்தில் வரும் வரலட்சுமி. தனது சிறு வயது மகனையும் கொலை உணர்வோடு பழக்கும் அளவுக்கு கொடூரத்தைக் காட்டி, சுற்றி நிற்கும் அத்தனை ஆண்களையும் சகட்டு மேனிக்கு கூர்மையான வார்த்தைகளால் போட்டுத் தாக்குகிறார். ஓர் உதாரணம் : “நீங்கள் எல்லாம் ஒங்க மனைவியோடு படுத்துத் தூங்கி எந்திரிக்கிறீங்க! நான் தனியாப் படுத்துத் தூங்கி எந்திரிக்கிறன்டா”.

இறுதிக் காட்சியில் அரிவாளைத் தூக்கிப் போட்டு விஷாலை ‘வாடா’ என சண்டைக்கு அழைத்து மிரள வைக்கிறார்.

செம்பருத்தியாக வரும், கீர்த்தி சுரேஷ் அழகாலும், தனது விளையாட்டுத் தனத்தாலும் கவர்கிறார். கிராமத்து நடையிலேயே பேசுவதும், கிராமத்துத் தலைவர் ராஜ்கிரண் மகன்தான் விஷால் எனத் தெரியாமல் கார் ஓட்டுநர் என நினைத்துக் கொண்டு கலாய்ப்பது இரசிக்கும்படி இருக்கிறது.

எப்போதும் முழுக்க மூடிய உடையோடும், கதாநாயகனிடமிருந்து சற்று தள்ளி நின்றும் காதல் செய்துவந்த கீர்த்தி சுரேஷ், இந்த முறை கொஞ்சம் நெருக்கமும், லேசான கவர்ச்சியும் காட்டியிருக்கிறார்.

கீர்த்தி சுரேஷூக்கும் ராஜ்கிரணுக்கும் இடையிலான பாசமும் பரிவும் நெகிழ்ச்சியான சம்பவங்களால் விவரிக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் இன்னொரு திருப்பம், முந்தைய சண்டைக் கோழி படத்தில் விஷாலிடம் அடிவாங்கி, தோற்றுப் போய் ஊரைவிட்டுப் போன தாதாவான லால் மீண்டும் கதைக்குள் உள்ளே நுழைவது. எப்படி நுழைகிறார் என்பதைப் படம் பார்க்கும்போதுதான் இரசிக்க முடியும்.

முதல் சண்டைக்கோழி படத்தின் இரசிக்கும்படியான இன்னொரு கதாபாத்திரம் மீரா ஜாஸ்மின். அவருக்கு என்ன நேர்ந்தது என்பதைக் காட்டாமல் தவிர்த்து விட்டார்கள். வெளிநாட்டுக்குச் சென்றிருந்த விஷால் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் திருவிழாவுக்காக நாடு திரும்புவதாகக் கதை தொடங்குகிறது.

ராஜ்கிரண் வழக்கம்போல் குறையில்லாமல் தனது நடிப்பை வழங்கியிருக்கிறார். இந்த வயதிலும் அவர் இளைஞர்களோடு சரிசமமாக சண்டை செய்யும் இலாவகமும், கம்பீரமும், ஆண்மைத் தனமும் இரசிக்க முடிகிறது.

விஷாலைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. திருப்திகரமான நடிப்பு. அவரது உயரத்துக்கும், உடல் கட்டமைப்புக்கும் யாரை ஓங்கி அடித்தாலும், நம்பும்படி இருக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஓரிரு பாடல்கள் பரவாயில்லை. கே.ஏ.சக்திவேலுவின் ஒளிப்பதிவும் தரமாக இருக்கிறது. படத்தில் பாதி திருவிழாக்காட்சிகள்தான். உண்மையிலேயே ஒரு திருவிழாவை நேரடியாகப் பார்ப்பது போல் இருக்கிறது.

சண்டைக்கோழி-2 ஏமாற்றாத பொழுது போக்குப் படம்!


-இரா.முத்தரசன்




சண்டகோழி 2 – விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 23, 2018 8:25 pm

நன்றி சிவா.... பார்க்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக