புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
21 Posts - 66%
heezulia
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
63 Posts - 64%
heezulia
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் துளிகள்.


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Feb 14, 2019 7:46 pm

மதுரை : லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கலின் போதே தேர்தல் வாக்குறுதியை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் எனக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பிப்.,28 க்குள் அதிமுக, திமுக, பா.ஜ., உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Feb 14, 2019 7:49 pm

புதுச்சேரி : கிரண்பேடி வெறும் போஸ்ட் ஆபீஸ் மட்டும் தான் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக நேற்று முதல் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார் முதல்வர் நாராயணசாமி. இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், கிரண்பேடிக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அவர் போஸ்ட் ஆபீஸ் மட்டும் தான். அமைச்சரவை அனுப்பும் கோப்புக்களில் கையெழுத்திடுவது தான் அவரின் வேலை. அமைச்சரவை எடுக்கும் முடிவில் தலையிட அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. எங்கள் அரசில் பிரச்னையை உருவாக்க பிரதமரால், கிரண்பேடி தூண்டி விடப்படுகிறார் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கிரண்பேடி டில்லி புறப்பட்டு சென்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாராயணசாமி, எங்களுடன் போராட்டத்திற்கு பயந்து தான் கிரண்பேடி வெளியேறி உள்ளார். எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். நிலுவையில் உள்ள 39 கோப்புக்களுக்கு ஒப்புதல் பெறும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்றார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Feb 14, 2019 7:51 pm

புதுடில்லி : வரும் லோக்சபா தேர்தலில் படித்த பிரதமரை தேர்ந்தெடுங்கள். கடந்த முறை ப்ளஸ் 2 படித்த பிரதமரை தேர்வு செய்தது போல் மீண்டும் தவறு செய்து விடாதீர்கள் என ஆம்ஆத்மி கட்சி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.எதிர்க்கட்சிகள் நேற்று (பிப்.,13) நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கெஜ்ரிவால், கடந்த முறை ப்ளஸ் 2 படித்தவரை நாட்டின் பிரதமர் ஆக்கி விட்டீர்கள். இந்த முறையும் அதே தவறை செய்து விடாதீர்கள். படித்தவரை பிரதமராக தேர்வு செய்யுங்கள். ஏனெனில் ப்ளஸ் 2 பாஸ் செய்தவரால், அவர் போடும் கையெழுத்துக்களால் ஏற்படும் விளைவுகளை புரிந்து கொள்ள முடியாது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Feb 14, 2019 7:51 pm

மோடி அரசை வேரறுக்கவே இந்த தர்ணா போராட்டம். 2011 ம் ஆண்டு ஏப்ரல் 4 ஜந்தர்மந்தரில் நடந்த வரலாற்று சிறப்பு மிக்க ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு பிறகு அன்றைய அரசு அகற்றப்பட்டது. ரபேல் ஒப்பந்தத்தின் பின்னணியில் இருக்கும் உண்மை வெளிவந்தால் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டி இருக்கும்.
மேற்குவங்கத்தில் இருப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. மோடி வீட்டு சொத்து இல்லை. அங்கு கமிஷனரை கைது செய்தால் அதற்கு பிறகு நாட்டில் உள்ளவர்களுக்கு மாநில அரசு மீது பயம் இருக்காது. மோடி அரசு மீதே பயம் இருக்கும். மோடி ஒன்றும் பாக்., பிரதமர் இல்லை. பாக்., பிரதமரை போல் நினைத்துக் கொண்டு டில்லியையும், காங்., ஐயும் மோடி விமர்சித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக மோடியும், அமித்ஷாவும் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்து வருகின்றனர். பா.ஜ.,வை வீழ்த்த நாங்கள் இணைந்து செயல்பட உள்ளோம் என்றார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Feb 14, 2019 7:55 pm

புதுடில்லி : பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகாது என பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம், அவந்திப்போராவில், ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்க வைத்தனர். இதில் 30 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.இத்தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியுள்ளதாவது: பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப்., வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகாது. காயமடைந்த வீரர்கள் விரைவில் நலம் பெற வேண்டும். வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஒட்டு மொத்த நாடே தோள் கொடுக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். மேலும் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உயரதிகாரிகளிடம் மோடி கேட்டறிந்தார்.


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Feb 14, 2019 7:56 pm

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டுவிட்டரில் கூறியுள்ளதாவது: காஷ்மீரில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். உயிரிழந்த வீரர்களுக்கு வீர வணக்கம். இதற்குக் காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை(பிப்., 15) ஸ்ரீநகர் செல்ல உள்ளார். இதற்காக தனது பாட்னா பயணத்தை அவர் ரத்து செய்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து ஜம்மு-காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்கிடம் கேட்டறிந்தார்.



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Feb 14, 2019 7:58 pm

அகர்தலா: வட கிழக்கு மாநிலமான, திரிபுராவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சியின்போது, பெண் அமைச்சர் இடுப்பில் கை வைத்து, பா.ஜ., அமைச்சர், ஆபாசமாக நடந்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.திரிபுராவில், பா.ஜ.,வை சேர்ந்த, பிப்லப் தேவ், முதல்வராக உள்ளார். இங்கு, அகர்தலா நகரில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது.மேடையில், பா.ஜ.,வை சேர்ந்த இளைஞர் விவகாரத்துறை அமைச்சர், மனோஜ் காந்தி தேவ், 47, தன் அருகில் நின்றிருந்த, சமூக நலத் துறை அமைச்சரும், பழங்குடியினத்தை சேர்ந்தவருமான, சந்தனா சக்மா, 32, இடுப்பில் கை வைத்தார்.இது தொடர்பான, 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவியது.'பிரதமர், முதல்வர் முன்னிலையில், பெண் அமைச்சரிடம் ஆபாசமாக செயல்பட்ட, அமைச்சர், மனோஜ் காந்தியை பதவி நீக்கம்செய்யவேண்டும்'என,எதிர்க்கட்சிகளானஇடதுமுன்னணிவலியுறுத்தியது.இந்த சம்பவம் பற்றி கருத்து கூற, அமைச்சர் மனோஜ் காந்தி மறுத்துள்ளார். இருப்பினும், 'அமைச்சர் மீது கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது. அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், இடது முன்னணி செயல்பட்டு வருகிறது' என, ஆளும், பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Feb 14, 2019 8:07 pm

வால்சாத்: குஜராத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் கன்னத்தில், பெண் தொண்டர் ஒருவர் முத்தம் கொகுஜராத் மாநிலம் வால்சாத் மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சி தலைவர் ராகுல் கலந்து கொண்டார். அவர் மேடை ஏறிய உடன் நிர்வாகிகள் பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பெண் நிர்வாகிகள் சிலரும் மேடையேறினர். அப்போது பெண் ஒருவர், ராகுல் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அதனை, ராகுலும் சிரித்தவாறு ஏற்று கொண்டார். முத்தம் கொடுத்த பெண்ணின் பெயர் காஷ்மீராபென். அவருக்கு 60 வயதுக்கு மேல் ஆகிறது.இது குறித்து காஷ்மீரா பென் கூறுகையில், சூரத் பகுதியை சேர்ந்த நான் கட்சியில் 48 ஆண்டுகளாக உள்ளேன். ராகுலின் நலம் விரும்பி. நானாகத் தான், அவருக்கு முத்தம் கொடுத்தேன். இதற்கும், காதலர் தினத்திற்கும் தொடர்பு இல்லை. ராகுல் எனது சகோதரர் போன்றவர். அவர் இங்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் பிரதமர் ஆக வேண்டும் என விரும்புகிறோம். தேர்தலுக்கு பின் அவர் பிரதமர் ஆவார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் ராகுல் பேசுகையில், ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வோம் என உறுதி அளித்தோம். இதன்படி, 3 மாநிலங்களில் ஆட்சி அமைத்த பின்னர் அதனை செய்துள்ளோம். சத்தீஸ்கர் அரசு விவசாயிகளின் நிலத்தை திருப்பி கொடுத்தது. பிரதமர் மோடி, தனது பணக்கார நண்பர்களின் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்துள்ளார். விவசாயிகள் குரலை யாரும் ஒடுக்க முடியாது. ரூபாய் நோட்டு வாபஸ் மூலம் குஜராத் தொழிலதிபர்களுக்கு பிரச்னை ஏற்பட்டது. நேர்மையான மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வருமான உறுதியளிப்பு திட்டத்தை அமல்படுத்தி, தினசரி பதினேழு ரூபாயை விட அதிகமான பணத்தை ஏழைகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துவோம் என்றார்.


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Feb 14, 2019 8:12 pm

சென்னை: தமிழக சட்டசபையின் கடைசி நாளான இன்று, ஒசூர், நாகர்கோவில் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தும் மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால், அபராதம் விதிக்கும் சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பொங்கல் பரிசுக்காக நிதி ஒதுக்கப்பட்டது தொடர்பாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய பதில் திருப்தி அளிக்காததால் திமுக எம்எல்ஏ.,க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் ஏற்பட்ட சலசலப்பை அடுத்து சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Feb 14, 2019 8:13 pm

யவத்மால்: மஹாராஷ்டிர மாநிலம், யவத்மாலில், இரண்டாவது மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய, பா.ஜ., - எம்.எல்.ஏ.,வை, முதல் மனைவியும், தாயும், பொது இடத்தில் அடித்து, உதைத்தனர்.மஹாராஷ்டிராவில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு, யவத்மால் மாவட்டத்தைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜு நாராயண் தோட்சம், தன், 42வது பிறந்த நாளையொட்டி, விளையாட்டு நிகழ்ச்சியை, நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். அப்போது, அவரது இரண்டாவது மனைவி பிரியாவும் உடன் இருந்தார்.அப்போது, ராஜுவின் முதல் மனைவி அர்ச்சனாவும், ராஜுவின் தாயும், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர் களுடன் அங்கு வந்தனர். பிரியாவை, அர்ச்சனாவும், அவரது மாமியாரும் சரமாரியாக தாக்கினர். அதை தடுக்க முயன்ற ராஜுவுக்கும் உதை விழுந்தது.'பழங்குடியினத்தை சேர்ந்தவரும், பள்ளி ஆசிரியையுமான, அர்ச்சனா வுக்கு நீதி வேண்டும்' என, அப்பகுதி மக்கள் கோஷங்கள் எழுப்பினர்.இதுகுறித்து, அப்பகுதியில் உள்ள, ஸ்வவலம்பன் சமிதி என்ற, பழங்குடியின அமைப்பு தலைவர், கிஷோர் திவாரி கூறுகையில், ''எம்.எல்.ஏ., ராஜு, தன் முதல் மனைவிக்கும், இரு குழந்தைகளுக்கும் நியாயம் வழங்க வேண்டும். ''இரு நாட்களில் அவர் திருந்தாவிட்டால், பிரதமர் நரேந்திர மோடியிடம் முறையிடுவோம்,'' என்றார்.பா.ஜ., பழங்குடியினர் பிரிவு நிர்வாகியான, அங்கித் மைதான் கூறியதாவது:முதல் மனைவியையும், இரு குழந்தைகளையும் நடுத்தெருவில் தவிக்க விட்டு, இரண்டாவது மனைவியுடன், ராஜு, கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. முதல் மனைவிக்கும், அவரது குழந்தைகளுக்கும், வாழ்வாதாரத்துக்கு, அவர் ஏற்பாடு செய்ய வேண்டும்.இதற்கு உரிய பதில் அளிக்காவிட்டால், விரைவில், பிரதமர் நரேந்திர மோடி, யவத்மால் மாவட்டத்துக்கு வரும்போது, இது குறித்து புகாரளிப்போம். பிரதமர் அமர்ந்திருக்கும் மேடையில், ராஜுவை ஏற விடமாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக