புதிய பதிவுகள்
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:40

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேச நெஞ்சம்- சிறுகதை Poll_c10நேச நெஞ்சம்- சிறுகதை Poll_m10நேச நெஞ்சம்- சிறுகதை Poll_c10 
60 Posts - 48%
heezulia
நேச நெஞ்சம்- சிறுகதை Poll_c10நேச நெஞ்சம்- சிறுகதை Poll_m10நேச நெஞ்சம்- சிறுகதை Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
நேச நெஞ்சம்- சிறுகதை Poll_c10நேச நெஞ்சம்- சிறுகதை Poll_m10நேச நெஞ்சம்- சிறுகதை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நேச நெஞ்சம்- சிறுகதை Poll_c10நேச நெஞ்சம்- சிறுகதை Poll_m10நேச நெஞ்சம்- சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
நேச நெஞ்சம்- சிறுகதை Poll_c10நேச நெஞ்சம்- சிறுகதை Poll_m10நேச நெஞ்சம்- சிறுகதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நேச நெஞ்சம்- சிறுகதை Poll_c10நேச நெஞ்சம்- சிறுகதை Poll_m10நேச நெஞ்சம்- சிறுகதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நேச நெஞ்சம்- சிறுகதை Poll_c10நேச நெஞ்சம்- சிறுகதை Poll_m10நேச நெஞ்சம்- சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேச நெஞ்சம்- சிறுகதை Poll_c10நேச நெஞ்சம்- சிறுகதை Poll_m10நேச நெஞ்சம்- சிறுகதை Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேச நெஞ்சம்- சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82310
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 13 Dec 2019 - 12:01

நேச நெஞ்சம்- சிறுகதை 23
“ஆயாவை தொந்தரவு செய்யக் கூடாது…” மித்யா மென்மையாகக்
கூறினாள்.பவ்யமாகத் தலையாட்டினான் ரமணி. அவன் பார்வை
மித்யா கையில் இருந்த பொம்மை மீதே இருந்தது

.“ஆயா… நேரத்துக்கு சாப்பாடு, ஜூஸ் கொடு. சிப்ஸ் வச்சிருக்கேன்.
காபி கொடு. சின்ன தம்ளர்ல தராதே. கொஞ்சம் பிடிவாதம் பிடிப்பார்
. உன் பையன் மாதிரி நினைச்சு பாத்துக்க…” மித்யாவின் குரல்
நடுங்கியது.

“கண்ணு நான் ரெண்டு வருஷமா வாரன். எனக்குத் தெரியும் கண்ணு.
நீ பாத்து அண்ணன் கூட போய்ட்டு வா…” அறுபது வயதான ஆயா
கனிவுடன் பேசியது.“சரி நான் கிளம்பட்டுமா?” மித்யாவின்
கேள்விக்கு பதில் அளிக்கவில்லை ரமணி. பாய்ந்து அவள் கை
பொம்மையை வாங்கிக்கொண்டு சோபாவில் போய் பதுங்கினான்.

அது பட்டன் அழுத்தினால் பாடும், ஹலோ என்று சொல்லும், விருக்,
விருக் என்று நடக்கும். அவன் கவனம் முழுதும் பொம்மையின் மீது
பதிந்தது.

“பார் அண்ணா, நான் அவரை விட்டுக் கிளம்பறேன்னு துளிக்கூட
வருத்தமில்லை…” மித்யாவிடம் ஆதங்கம். குரலில் ஏக்கம்.
“அவ்வளவுதான் அவன் புத்தி வளர்ச்சின்னு தெரியுமில்லையா?”
பெரிய அண்ணா அன்பாக அவளுக்கு ஆறுதல் கூறினார்.

“அவனுக்கோ அஞ்சு வயசு புத்திதான். அது தெரிஞ்சும் நீ ஏங்கறதுல
அர்த்தமில்லை. கிளம்பு. பூஜைக்கு நேரமாயிருச்சி…” அண்ணாவுக்கு
அவளை அங்கிருந்து கிளப்பினால் போதும் என்றிருந்தது.

மித்யா மனமில்லாமல்தான் கிளம்பினாள். அவள் இல்லாமல் பத்து
நிமிஷத்துக்கு மேல் ரமணியால் இருக்க முடியாது. அவனை விட்டு
எங்கும் போனதில்லை மித்யா. நேரத்துக்கு சாப்பிட வைத்து,
குளிக்கவைத்து, உடை மாற்றி, தூங்க வைத்து ஒரு கைக்
குழந்தையாக வைத்திருந்தாள்.

உண்மையில் கைக் குழந்தைதான். இரண்டு வருடத்திற்கு முன்
திருமணம் முடிந்து ஆறு மாதம் கழித்து ஊட்டி போனார்கள்
இருவரும். மழையில் சிக்கி பஸ் பாதாளத்தில் உருண்டு மித்யா
பிழைத்து விட்டாள்.

ரமணிக்கு நினைவு திரும்பவில்லை. எங்கெங்கோ கொண்டு
போனார்கள். பிசைந்து வைத்த மைதா மாவாய் இருந்தான்.
அவனுக்கு மூளையில் அடிபட்டு எல்லாம் மறந்து விட்டது. ஐந்து
வயது குழந்தையின் அளவுதான் மூளை வளர்ச்சி. ஆனால்,
என்றேனும் ஒருநாள் நினைவு வரலாம் என்று டாக்டர்கள்
கூறினார்கள்.

கோல்டு மெடலிஸ்ட். எம்.டெக் படித்த ரமணி பொம்மையாய்
இருந்தான். உட்கார் என்றால் உட்கார்ந்து, நின்று எழுந்து
சொன்னதைச் செய்யும் கீ கொடுத்த பொம்மை. ஆனாலும்
அவனை ஆசையுடன், அன்பாக கவனிக்கிறாள் மித்யா.

ரமணியின் அப்பா, அம்மாவுக்கு ஜெர்மனியில் சொந்த பிசினஸ்.
இங்கு வீடு வாங்கி, ரமணி பெயரில் எழுதி மாசம் பணம்
அனுப்புகிறார்கள்.

மித்யா ஆன்லைன் மூலம் ஷேர் பிசினஸ் செய்கிறாள். அத்துடன்
பெரிய அண்ணா டாக்டர். சின்ன அண்ணா ஆடிட்டர். மாதம்
தங்கைக்கு பணம் தருகிறார்கள்.‘எல்லோருக்கும் தங்கை இருக்கு.
எனக்கு இல்லை…’ என்று அண்ணா அழுது பதினைந்து வருடம்
கழித்துப் பிறந்தவள் மித்யா.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82310
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 13 Dec 2019 - 12:01

அவளின் இருபது வயதில் அப்பா, அம்மா இறந்து விட பெரிய
அண்ணாதான் பெற்றோர். அண்ணிக்கு மித்யாதான் மூத்த
பெண். சின்ன அண்ணி தோழி.

எல்லோருக்கும் அவளின் வாழ்வு குறித்து ஒரு கவலைதான்.
சின்ன வயசு. ரமணியோ இப்படி இருக்கான். இன்னும் எத்தனை
காலம் என்று ஒரு கவலை.

இந்த இரண்டு வருடத்தில் அவள் அதிகம் பிறந்த வீட்டுக்கு
வந்ததில்லை. பெரிய அண்ணா பையன் கல்யாணத்துக்கு வந்து
விட்டு உடனே கிளம்பி விட்டாள். அவள் கையைப் பிடித்தபடியே
அலைந்தான் ரமணி.இன்று அவளை அழைத்து வந்தே ஆகணும்
என்று சின்ன அண்ணா சொல்லிவிட்டான்.

“ஒரு முடிவு எடுத்தாகணும். இன்னும் எத்தனை காலத்துக்கு
அவ இப்படியே நிக்க முடியும்? அவனுடைய அப்பா மித்யா
என்கிற ஏமாளி கிடைச்சான்னு எதையும் கண்டுக்கவே இல்லை.
நாம அப்படி இருக்க முடியுமா? நம்ம பசங்க, பொண்ணுங்க
சந்தோஷமா வாழறப்போ, இவ இப்படி நிக்கறது வேதனையா
இருக்கு…” சின்ன அண்ணா அழுதான்.

“உண்மைதான். அவளுக்கு நாமதான் சகலமும்.
அந்த நம்பிக்கையை நாம் காப்பாத்தணும்…” என்றாள் சின்ன
அண்ணி.

இந்தக் காலத்திலும் கூட்டுக் குடும்பம். ஒத்துமையாக வாழும்
அவர்கள் எல்லோருக்கும் ஓர் அதிசயம். பெரிய அண்ணா
சொல்லுக்கு எதிர்ப் பேச்சு கிடையாது. அண்ணா மித்யாவை
அழைத்து வர முடிவு செய்தான்.

ஆரம்பத்தில் மித்யா யோசித்தாள்.“ரமணி நான் இல்லாம
இருக்க மாட்டார். விட்டுட்டு எப்படி வர முடியும்?’’

“இதோ இங்கிருந்து அரைமணி நேரம். அடையாறு. சுமங்கலி
பூஜைல வீட்டுப் பொண்ணுகதான் கலந்துக்கணும். ஆயாகிட்ட
சொல்லி விட்டுட்டு வா. பூஜை ஒன்பதரைக்கு முடிஞ்சுரும்.
பத்தரைக்கு வந்துடலாம்…” அண்ணா சின்ன மாத்திரை
ஒன்றை ஆயா கையில் கொடுத்தான்.

“அவனுக்கு காலை டிபன் கொடுத்துட்டு இந்த மாத்திரையைக்
கொடு. ஒரு ரெண்டு மணி நேரம் தூங்குவான். அதுக்குள்ளே
மித்யா வந்துடுவா…” என்றபடி அண்ணா அவளுடன் காருக்கு
வந்தான். வழி முழுதும் மித்யா பேசவில்லை. அவள் நினைப்பு
முழுதும் ரமணி மேல்தான் இருந்தது. வீட்டுக்கு வந்து பூஜை
முடியும் வரை அமைதி இல்லாமல் இருந்தாள்.சாப்பாடு
முடிந்ததும் “அண்ணா கிளம்பலாமா…” என்றாள்

.“இல்லைம்மா உன்கூடப் பேசணும்…’’“என்ன அண்ணா?”

“மித்யா, ரமணிக்கு இனி எப்போ நினைவு வரும்? அவன் ப
ழையபடி ஆவான்னு தெரியாது. வரலாம். வராமலும் போகலாம்.
ஆனா, நாங்க உன் வாழ்வைப் பாக்கணும். நீ இன்னும் எத்தனை
நாள் இப்படி நிக்கப் போறே?”“அதனால?”

“உன்னை அங்கு திருப்பி அனுப்பறதா இல்லை. ரமணியைக்
கொண்டு போய் ஒரு ஹோம்ல விடலாம். அப்படி அக்கறை
இருந்தா அவன் அப்பா, அம்மா வந்து புள்ளையை கூட்டி
கிட்டு போகட்டும். உனக்கு அவன் கிட்டேர்ந்து விவாகரத்து
வாங்கப் போறோம்…” சின்ன அண்ணா கடினமான குரலில்
பேசினான்.

மித்யா அமைதியாக தலை குனிந்திருந்தாள்.

“மித்யா, எங்க கண் எதிர்ல நீ இப்படி நிக்கறதை எங்களால
தாங்க முடியலை. நீயும் வாழணும். அவனை அம்போன்னு விடப்
போறதில்லை. வைத்தியம் பார்க்கலாம். அவன் பெத்தவங்க கிட்ட
ஒப்படைக்கலாம். உனக்கு நாங்க ரீ மேரேஜ் பண்றதா இருக்கோம்…”

பெரிய அண்ணி.
“ரீ மேரேஜா?” மித்யா திடுக்கிட்டாள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82310
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 13 Dec 2019 - 12:02

‘‘ஆமாம், அது ஒண்ணும் தப்பில்லை. நம்ம சின்ன
அண்ணாவோட நண்பரோட பையன் உன்னை கல்யாணம்
செஞ்சுக்க சம்மதம் சொல்லிட்டான். இதோ இன்னும் அரைமணி
நேரத்துல வக்கீல் வருவார். விண்ணப்பத்துல கையெழுத்து போடு…”
மித்யா பதில் பேசவில்லை. சலிப்புடன் கண்மூடி சோபாவில் சாய்ந்து
கொண்டாள். பிறந்த வீட்டில் இப்படி ரிலாக்ஸாக இருப்பது கூட
சுகம்தான்.

அங்கு எந்நேரமும் ரமணி பின்னால் ஓடிக்கொண்டே இருப்பாள்.
குழந்தையுடன் விளையாடுவது போல் இருக்கும். அவளைத் தூங்க
விட மாட்டான்.

நள்ளிரவில் எழுப்பி விளையாட வா என்பான்.அவனுடன் ஆறு
மாதங்கள் வாழ்ந்த வாழ்க்கை ஒரு மங்கிய கனவு. அது கூட நாள்
கணக்குதான். பத்து நாட்கள் ஒன்றாய்த் திரிந்தார்கள். அதற்குள்
அவனுக்கு தில்லியில் ஒரு டிரெய்னிங். போய்விட்டு மூன்று மாதம்
கழித்து வந்தான். பிறகு ஆடி என்று பிரித்து வைத்து, விபத்து ந
டக்கும் ஒருவாரம் முன்புதான் தனிக் குடித்தனம் என்று இந்த
வீட்டுக்கு வந்தது.

ஊட்டி போகும்போது அவனிடம் எத்தனை கனவுகள்? பேச்சுகள்.
உற்சாகம். அதெல்லாம் எங்கு போனது? திரும்பி வரும் என்று
நம்பிக்கையுடன் இருக்கிறாள். வராது என்கிறான் அண்ணா.
டாக்டர் சொல்வது பலிக்குமா? நம்பிக்கை பலிக்குமா?

மித்யாவுக்கு புரியவில்லை. ஆனால் அண்ணாக்களின்
ஆதங்கம் நியாயம் என்று புரிந்தது. என்ன பதில் சொல்வது
என்று தெரியவில்லை.

“என்னம்மா பதிலே பேசாம இருக்கே?”

“நீங்க சொல்றது சரிதான். ஆனா, ரமணி நான் இல்லாம இருக்க
மாட்டாரே…”

“அதெல்லாம் பழகிடும். அவனுக்குத் தேவை விளையாட ஒரு ஆள்…”
“தன் மனைவியைக் காணோம்னு தேட மாட்டாரா?”
“நீதான் அவன் மனைவின்னு அவனுக்குத் தெரியப் போகுதா?”“

ஆனா, எனக்குத் தெரியுமே அண்ணா…” மித்யாவின் குரல்
கலங்கியது. அதற்கு மேல் பேசத் தெரியாமல் கண்ணீர் வழிய
நின்றாள். அவளின் மனதை அந்த ஒரு சொல் விளக்கி விட்டது.

பெரிய அண்ணா தாவி அவளை அனைத்துக் கொண்டார்.

“எதுவும் சொல்ல வேண்டாம்மா. புரிஞ்சுண்டேன். டேய் காரை
எடுத்துட்டு போய் ரமணியைக் கூட்டிண்டு வா. பொண்ணும்,
மாப்பிள்ளையும் சேர்ந்து இங்க சாப்பிடட்டும்…”

சின்ன அண்ணா காரை எடுக்க ஓடினார். அண்ணி ஆறுதலாக
அவளை கை பிடித்துக் கொண்டாள்!

ஜி.ஏ.பிரபா
நன்றி-குங்குமம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 12 Oct 2020 - 0:11

மிக அருமையான கதை, கண்களில் நீரை வரவழைத்து விட்டது புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக