ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 மூர்த்தி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஸ்பீல்பெர்க்குடன் நம்மூர் டைருடக்டருங்க பேசினது என்ன? - ஜாலி டிடெக்டிவ் ரிப்போர்ட் கற்பனை

View previous topic View next topic Go down

ஸ்பீல்பெர்க்குடன் நம்மூர் டைருடக்டருங்க பேசினது என்ன? - ஜாலி டிடெக்டிவ் ரிப்போர்ட் கற்பனை

Post by தண்டாயுதபாணி on Wed Jan 06, 2010 9:20 am


ந்திய பிஸினஸ் கிங் அனில் அம்பானியும், ஹாலிவுட்
ஃபிலிம் மேக்கர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கும் இணைந்து 825 மில்லியன் டாலர்கள்
முதலீட்டில் பல படங்களை தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர்.
இது செய்தி.
இந்தச் செய்தியில், "விரைவில்
இந்தியாவுக்கு வந்து அங்குள்ள படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களைச்
சந்திக்க விரும்புகிறேன். அவர்களுடைய் கருத்துக்களையும், படைப்புத்திறனை
தெரிந்துகொள்ள விரும்புகிறேன்," என்று ஸ்பீல்பெர்க் கூறியிருப்பதைக் கண்டவுன் கோலிவுட் குதூகலமடைந்து பரபரக்கத் தொடங்கிவிட்டது.
ஸ்பீல்பெர்க் இந்தியா வருவதற்கு முன்பே கோடம்பாக்கத்தில் இருந்து
மீனம்பாக்கம் சென்ற நம்மூரு இயக்குனர்கள் சிலர் ஃபிளைட் பிடித்து லாஸ்
ஏஞ்சல்ஸ் பறந்து வருகின்றனர். அவர்களில் சிலர் ஸ்பீல்பெர்க்கை நேரடியாக
சந்தித்து, தங்களது படைப்பாற்றை பகிரங்கப்படுத்தியுள்ளனர்.
இந்த ரகசிய சந்திப்பை டிடெக்ட் செய்து, அம்பலப்படுத்துவதில் ஆனந்தம் கொள்கிறான், இந்த டிடெக்டிவ் டிங்கிரி 'பாளை சிவா'

ஸ்பீல்பெர்க்கிடம் நம்மூரு டைரக்டர்கள் பேசியதன் விவரம்...

நடிகர் - இயக்குனர் கிஸ்.ஜே. வார்யா
டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம் டைரக்டா 'மேட்டர்'க்கு வர்றேன். படம்
தொடங்குறதுக்கு முன்னாலேயே கதையைச் சொல்லிடறோம். இல்லைன்னா, புரியாம
போயிரும். வேற்று கிரகத்துல இருந்து வர்றாரு நம்ம ஹீரோ. உங்க யூகம்
கரெக்ட் மிஸ்டர் ஸ்பீல்பெர்க், அந்த ஹீரோ நானேதான். காலையிலே முழுக்க
சின்ன உருவத்துல ஹீரோயின் வீட்ல இருக்கிறேன். நைட் 10 மணிக்கு அப்புறம்
பெரிய உருவமாயிடுறேன்.
காதல், கன்ஃப்யூஸன் தான் முழு மேட்டரு. இன்ட்ரோ சாங்குலயே ஹாலிவுட்
கதிகலங்கிடும். அப்புறம் ஹாலிவுட்லயும் மாஸ் ஹீரோ நான் தான். ஒண்ணு சொல்ல
மறந்துட்டேன், நான் இயக்குறத விட்டு ரொம்ப நாளாச்சு... படத்தை இயக்கப்
போறது நீங்கதான். நான் நடிகன் மட்டும்தான். ஹீரோயினா நம்ம ஜூலியா ராபர்ட்ட
புக் பண்றோம். ஓல்ட் இஸ் கோல்டு. அவங்க கிட்ட மொத்தமா 2 வருஷம் கால்ஷீட்
வாங்குறது உங்க பொறுப்பு. மத்த எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன். படம்
பேரு... View

இயக்குனர் - நடிகர் பேரன்
லால்குடியில் வாழ்ந்த ஒருத்தன் லாஸ் ஏஞ்செல்ஸுக்கு லட்சியத்தோட போறான்.
அவனோட லட்சியத்தினூடே மூன்று காதல்கள். ஒன்று ஃபிளைட்ல சாக்லெட் கொடுத்த
ஹேர் ஹோஸ்டர்ஸ் ஏஞ்சலினா ஜோலி. இன்னொன்று பியூட்டி பார்லர்ல வொர்க் பண்ற
ஹாலி பேரி, மீதமொன்று லட்சிய நாயகன, அதான் எனக்கு உத்வேகம் தர்ற ஷெரன்
ஸ்டோன். இவங்க மூணு பேரையும் வெவ்வேறு தருணங்கள்ல உயிருக்கு உயிரா
காதலிக்கிற நாயகன் தன்னோட லட்சியத்துக்காக மூணு காதலையும் தியாகம்
பண்ணிட்டு நாலாவது கெஸ்ட் ரோல்ல வர்ற மெக் ரையானை மேரேஜ் பண்றான். இவங்க
மூணு பேருக்கும் மேரேஜ் இன்விட்டேஷன் கொடுக்கப் போகும் போது, ஒவ்வொரு
காதலையும் ஃப்ளாஷ் பேக்ல சொல்றோம். உலகத்துலய உன்னத காதல் காவியமா இது
வரும். நாம நிச்சயம் ஜெய்ப்போம். என்ன படத்துக்கு பேரா...? Biography

இயக்குனர் சூமான்
சார் வணக்கம் சார். நான் இயக்குனர் சார். இந்தியாவுக்கு என்ன
உலகத்துக்கே தெரியும் சார். தமிழர்கள் எங்கயெல்லாம் இருக்காங்களோ
அங்கயெல்லாம் நான் இருப்பேன் சார். படத்துல மட்டும் இல்ல சார்.
வாழ்க்கையிலயும் நான் ஒரு நடிகர் / இயக்குனர் சார். அப்பிடித்தேன் வாழணும்
ஸார். அதுதான் சார் முக்கியம் சார். நான் எப்படி பார்த்திட்டுருக்க
முடியும் சார். முடியாது சார். எப்படி சார் முடியும். எங்க சார் போவாங்க.
கதை இதுதான் சார். ஒரு புரட்சிப் படம் சார். ஒரு புரட்சிப்படை அதோட
தலைவன் ஸார் நம்ப ஹீரோ. படத்துல காஸ்டியுமே சேகுவார படம் போட்ட தேநீர்
சட்டை மட்டும்தான் சார். அரசாங்கமே அதிர்ச்சிக்கு உள்ளாகுது. அந்த
அளவுக்கு புரட்சி சார். நம்ம நாயகன் டாம் குரூஸ் படம் முழுக்க முகத்தை
அசைக்கவே மாட்டேன். அப்பிடி ஒரு உக்குரம் சார். படத்தோட பேரு இதுதான்
சார்... Brother

இயக்குனர் திங்கர் வச்சான்
அமெரிக்காவுல
ஒரு குக்கிராமத்துல முந்திரி காட்டுல ஒற்றை ஜீன்ஸ் பேன்ட்டு மட்டுமே
வெச்சு இருக்கிற நம்ம வயசான ஹீரோ ரிச்சர்டு கேரி, அவரோட சுக துக்கத்துல
சரிவிகிதமாக பங்கெடுத்துக்குற பாட்டி வேஷத்துல கேத்தரீன் ஜீட்டே ஜோண்ஸ்.
ஒரு சாதாரண அமெரிக்க பிரஜையின் வாழ்க்கையில நிகழுற அசாதாரண நிகழ்வுகள்தான்
படம் சார். ஒவ்வொரு அமெரிக்கனின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுடும்
சார் நம்ம படம். டாலர் டாலரா அள்ளப் போற படத்தோட பேர கேக்குறீங்களா..? Eight Dollar Coin

இயக்குனர் ஷுங்கர்
உங்க ப்ராஜக்ட் மொத்தம் 825 மில்லியன் டாலர்னு கேள்விப் பட்டேன். அதுல
800 மில்லியன் டாலர் பட்ஜெட்டுக்கு ஏத்த கதை எங்கிட்ட இருக்கு.
அமெரிக்காவையே ஆட்டி வைக்கிற ஒன்லைன் இதுதான், "சாதாரண வெயிட்டர் பிராட்
பிட், ஒரு நாள் ஒபாமாவா ஆகினால் எப்படி இருக்கும்?" இதுதான் மேட்டர்.
ஒபாமா ஒரு ரெஸ்டாரண்டுக்கு வர்றாரு. அப்ப, வெயிட்ட பிராட் பிட்டோட உரசல்
வருது. உடனே, ஒருநாள் ஒபாமா இருந்து பாருன்னு பிராட் பிட்டுக்கிட்டயே ஒரு
பிட்ட போடுறாரு, ஒபாமா. அவரும் சம்மதிக்கவே, ஒரே நாள்ல ஈராக், ஈரான்,
ஆப்கான், பாகிஸ்தான், ஒசாமா, தாலிபான்... இப்படி எல்லா பிரச்னைகளையும்
பிராட் பிட் எப்படி தீக்குறாருன்றதுதான் ஸ்க்ரீன்ப்ளே... படத்துக்கு நாம
வைக்கிற தலைப்பு...The President

நடிகர் - இயக்குனர் விமல்காசன்
நான் நடிகன் என்பது உங்களுக்குத் தெரியும் என்று நான் நினைக்கிறேன்
என்பது என் எண்ணம். நான் ஸ்பீல்பெர்க்காக இல்லையே என்று பொறாமை கொண்ட
தருணங்கள் என்னில் உண்டு. என்னை ரசிகர்கள் செல்லமாக ஆஸ்கர் நாயகன் என்று
அழைப்பதுண்டு, அதை நீங்கள் அறிந்திருக்காவிடில் அதனை நான் அறியாமை என்று
சொல்லவும் கூடாது என்றே கருதிக் கொள்கிறேன்.
என்னுடையை ஒரு படத்துக்கு பூஜை போட இங்கிலாந்து ராணி சென்னை வந்ததை
பி.பி.சி. மூலம் அறிந்திருப்பீர்கள். அந்தப் படத்தைப் பூர்த்தி செய்யும்
பாக்கியத்தை நீங்கள் இப்போது பெற்றிருக்கிறீர்கள். அந்த ப்ராஜக்டை உங்களை
விட்டால் இந்த ஜென்மத்தில் எவராலும் முடித்திட உறுதுணை புரிய முடியாது.
அதன் மூலம் இந்தப் பிரபஞ்ச சினிமாவையே பிராண்டும் ஒரு படைப்பை நாம்
நிகழ்த்திக் காட்டிட முடியும் என்பதை ஒரு போதும் மறுத்தலாகாது. இந்தப்
படத்துக்கு 825 மில்லியன் டாலர் என்பது போதாது. இந்தப் பணத்தை வைத்து
இப்போதைக்கு பாதி படத்தை முடித்துவிடலாம். பிறிதொரு சூழலில் முகேஷ்
அம்பானியுடன் நீங்கள் கைகோர்க்கும் போது மீதப் படத்தை எடுத்துக்
கொள்ளலாம். என்ன? படத்தின் பெயர் உங்களுக்குத் தெரியாதா...? ஆச்சரியமாக
இருக்கிறது. Maruthanayagam, The Forgotten King

இயக்குனர் பெல் ரத்னம்
பண்ணிடலாம். நல்ல படம் பண்ணிடலாம். இருக்கு கதை நிறையா இருக்கு. ஆமா,
அதே கதைதான். மகா பாரதம் கேள்விப் பட்டிருப்பீங்க. அதை ஆங்கிலத்துல நவீனப்
படுத்துறோம். நல்லா வரும். முடியும். நம்மலால முடியும். இரண்டே வருஷத்துல
புரோஜக்ட முடிக்க டிரை பண்ணலாம். கதைப்படி அஞ்சு ஹீரோ நிக்கோலஸ் கேஜ்,
ஜான் டிராவால்டோ, ஜான்னி டெப், லியானர்டோ டிகாப்ரியோ, ஜிம் கேரி... ஒரு
முக்கிய பெண் கேரக்டர்ல ஐஸ்வர்யா ராயா போட்டுக்கலாம். பாண்டவர்கள்
வாழ்க்கைய டிஜிட்டல்ல செதுக்குறோம். ஆனா படம் பேரு...Gowravan

இயக்குனர் அவுதம் வேசுதேவ கானன்
எங்க ஊர்ல வீரியான்னு ஒரு சூப்பர் இளம் நடிகர் இருக்காரு. உங்க கிட்ட கதை சொல்றதுக்கு வர்றதுக்கு முன்பே
அவருகிட்ட சிக்ஸ் பேக்ஸ் கண்டிஷன் போட்டுட்டேன். எவரி ஃபாதர் இஸ் எ ஹீரோ
ஆஃப் இஸ் சன்... இந்த பொன்மொழி உங்களுக்கு தெரியும். இதைத் தான் ஒரு
வாழ்க்கையா.. பல காலக்கட்டம்ல செதுக்குறோம். இதை ஃபாரஸ்ட் கம்மோட செகண்ட்
பார்ட்டுனு சொன்னாலும் நல்லதுதான். ஜெயராஜ் இல்ல... ரஹ்மான் கிட்ட
மியூஸிக் பேசிட்டு இருக்கேன். படத்துல அப்பா வேஷத்துக்கு மட்டும் உங்க ஊரு
டாம் ஹேங்க்ஸ்சை போட்டிடலாம். பையன் வேஷத்துல எங்க வீர்யா தான். ம்...
படத்துக்கு நான் வெச்சிருக்கிற பேர சொல்ல மறந்துட்டேன்... Thousands of Elephants

இயக்குனர் ஜிஷ்கின்
பேசி
டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம் சார். ஒரு மூட்ட உலக சினிமா டி.வி.டி. கைல
இருக்கு. அதுல எல்லாத்தையும் பார்த்துட்டு 10 செலக்ட் பண்ணியிருக்கேன்.
அந்த பத்துல ஒண்ணு ச்சூஸ் பண்ணுங்க. படம் பண்ணிருவோம். மத்ததை அப்புறம்
பேசலாம். டைம் இல்ல புது மூட்டை வந்து இருக்கு பாக்க கிளம்பணும். படத்
தலைப்பு சொல்லணுமா? Fear no more

இயக்குனர் குசிக்குமார்
சார் படம் நடக்குறது 80களில. பிராட் பிட்டும், டிகாப்ரியோவும் இணை
பிரியா ஸ்நேகிதர்கள். இருவருமே முரடர்கள். இவர்கள் வாழ்க்கையில் ஒரு
பெண்.. அவர் தான் நிகோல் கிட்மேன். நெஞ்சையே புரட்டிப் போடுற ரத்தம்,
வெறி, இதுக்கிடையே மெல்லிய உணர்வு. ஹாலிவுட்ல புது ட்ரென்டையே உருவாக்கும்
சார் இந்தப் படம்... New York Pur

நடிகர்,
கதாசிரியர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், இசையமைப்பாளர், இயக்குனர்
உள்ளிட்ட பல்துறை சினிமா பொறுப்பாளர் பஜிய டீ. பாஜேந்தர் :

ஏன்ய்யா ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கு நீ வச்சிருக்கே அம்பானி குழுமமுத்தோட
லிங்க்கு. அதைப்பத்தி எனக்கு கவலயில்லை, நீ தமிழன் கூட கூட்டு வச்சுருந்தே
போயிருப்பே டாப்பு. இப்போ ஒண்ணும் கெட்டுப்போகல்ல. நான் வச்சிருக்கேன்
தமிழல ஸ்கிரிப்ட்டு. அத நீ பாரு, புடிச்சிருந்தா நாம இரண்டு பேரும்
வச்சுருவோம் டை-அப்பு. இல்லாக்கிட்டி, உனுக்குத் தாண்டி ஆப்பு!
கதை
இதுதான்... ஒரு ஊருல ஒரு ஆளு. அவருதான் படத்தோட ஹீரோ. அவரு வேற யாருமில்ல
நானுதான். அவருக்கு ஜோடியா இறக்குறோம் ஒரு ஹாலிவுட்டு லேடி. ஏஞ்சலினா
ஜோலிய புக் பண்ணினா ஆயிடுவேன் ஜாலி.
படத்தில ஆரம்பத்துல இருந்தே ஒரே அடிதடி... நீங்க பாத்திருப்பீங்க
என்னோட நடிப்ப, 'வீராசாமி' படத்துல. இந்த ஸ்கிரிப்ட்டே வீராசாமி மாதிரி
ஒரு ரவுடியோட வாழ்க்கையில நடந்த கதைதான். பாதி கண்ணம்மா பேட்டையிலயும்,
மீதி காஷ்மீருலயும் சுடுறோம். படத்துல ஹைலைட்டே தங்கச்சிப் பாசம்தான்.
தங்கச்சியா நடிக்க நம்ம கேட் வின்ஸ்லெட்டை புக் பண்ணிருவோம். இடையில நம்ம
வம்புக்கு ஒரு பாட்டு. படம் சில்வர் ஜூப்ளி கன்ஃபார்மு. படத்தோட பேரக்
கேக்கிலயே... 'Brave God'!
பின் குறிப்பு : ஸ்பீல்பெர்க்கிடம்
நமது டைரக்டர்கள் பேசியதை மட்டும் ரகசியமாக பதிவு செய்து இங்கு
வெளியிட்டிருக்கிறேன். அவர்களின் கதைகளைக் கேட்டு ஃபீல் செய்த
ஃஸ்பீல்பெர்க்கின் ரியாக்ஷ்ன் என்னவாக இருந்திருக்கும் என்பதை உங்களின்
கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.
thanks vikatan
avatar
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1303
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஸ்பீல்பெர்க்குடன் நம்மூர் டைருடக்டருங்க பேசினது என்ன? - ஜாலி டிடெக்டிவ் ரிப்போர்ட் கற்பனை

Post by ராஜா on Wed Jan 06, 2010 10:40 am

@தண்டாயுதபாணி wrote:நடிகர் - இயக்குனர் கிஸ்.ஜே. வார்யா

இயக்குனர் - நடிகர் பேரன்

இயக்குனர் சூமான்

இயக்குனர் திங்கர் வச்சான்


இயக்குனர் ஷுங்கர்

நடிகர் - இயக்குனர் விமல்காசன்

இயக்குனர் பெல் ரத்னம்

இயக்குனர் அவுதம் வேசுதேவ கானன்

இயக்குனர் ஜிஷ்கின்

இயக்குனர் குசிக்குமார்

நடிகர்,
கதாசிரியர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், இசையமைப்பாளர், இயக்குனர்
உள்ளிட்ட பல்துறை சினிமா பொறுப்பாளர் பஜிய டீ. பாஜேந்தர் :ஹா ஹா ஹா

இந்த பேரு தான் ரொம்ப நகைச்சுவையா இருக்கு , நன்றி தண்டா
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30714
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஸ்பீல்பெர்க்குடன் நம்மூர் டைருடக்டருங்க பேசினது என்ன? - ஜாலி டிடெக்டிவ் ரிப்போர்ட் கற்பனை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum