ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்
 ayyasamy ram

போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
 ayyasamy ram

நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
 ayyasamy ram

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

குறுங்கவிதைகள்....
 ayyasamy ram

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

குழந்தை வளர்ப்பு

View previous topic View next topic Go down

குழந்தை வளர்ப்பு

Post by தாமு on Thu Jan 07, 2010 6:29 am

எண்ணிக்கையில் என்ன இருக்கிறது?
"நாம் இருவர் நமக்கிருவர்" "நாம் ஒருவர், நமக்கு ஒருவர்" என்பனவற்றை எல்லாம் மீறி "நாமே குழந்தை நமக்கெதற்கு குழந்தை" என்ற அளவிற்குக் குடும்பக் கட்டுப்பாடு வாசகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தங்களது முழு கவனிப்பும், அன்பும் பராமரிப்பும் ஒரு குழந் தைக்குத் திருப்தியாகக் கிடைத்தாலே போதும் என்ற மனோநிலை பல பெற்றோர்களுக்கு வர ஆரம்பித்துவிட்டது. பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, அது பெற்றோரை, குழந்தைகளை எப்படி பாதிக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பேசுவோமா?
ஒரு குழந்தை இருந்தால்

வீட்டின் ஒரே குழந்தையாக இருந்தால் அக்குழந்தை பலவித சலுகைகளை அனுபவிக்கலாம். இரண்டு, மூன்று குழந்தைகளாகப் பிறந் தவர்களோடு ஒப்பிடும்போது, ஒற்றைக் குழந்தையின் புத்திசாலித்தனமும் அதிகமாக இருக்குமாம். பெற்றோரது முழுமையான பாசமும், கவனிப்பும் குழந்தைக்குத் திருப்தியாகக் கிடைக்கும். ஒற்றைக் குழந்தையாகப் பிறப்பவர்கள், பிற்காலத்தில் சமுதாய அந்தஸ்து பெருமளவு ஏதேனும் ஒரு துறையில் பிரபலமாகத் திகழ்வதாகவும் ஒரு கருத்து உண்டு.

இப்படிப் பிறக்கும் குழந்தைகள் ஓரளவு விவரம் தெரியும் வரை தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்வார்கள். பெற்றோர் தான் இந்த உணர்வை வளர விடாமல் அவர்களுக்குச் சரியாக எல்லா விஷயங்களிலும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.

இரண்டு குழந்தை இருந்தால்

வீட்டில் இரண்டு குழந்தை இருக்கும் பட்சத்தில் அவை ஒன்றாக வளர, பொழுதைக் கழிக்க வாய்ப்புகள் அதிகம். இளைய குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பை மூத்த குழந்தையிடம் ஒப்படைப்பதன் மூலம் அதன் மனத்தில் பெருமிதத்துடன் கூடிய பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்தலாம்.

அதிக வயது வித்தியாசம் இல்லாத போது இரண்டு குழந்தைகளுக்கும் சிறிய விஷயங்களில் கூட சண்டை வரக் கூடும். இப்படிப்பட்ட ச ண்டைகளில் பெற்றோர் தலையிடக் கூடாது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள், பாரபட்சமின்றி, இரு குழந்தைகளோடும் சமமான நேரம் ஒதுக்க வேண்டியது பெற்றோரது கடமை.குழந்தைகளைத் தூங்கவைக்க............

பத்துமாதம் சுமந்து பெறுவது கூட பெண்களுக்குப் பெரிய விஷயமல்ல. குழந்தை பிறந்து ஒரு வருடம் வரை அதனுடைய ஒவ்வொரு செயலுமே தாய்மார்களுக்குக் போராட்டம்தான். குறிப்பாகக் குழந்தைகளின் தூக்கம். குழந்தையின் தூங்கும் நேரம் பழக்கமாகும்வரை தாய்மார்களுக்குத் தூக்கமில்லாத பகல்களும், இரவுகளுமே மிஞ்சும். குழந்தைகளைத் தூங்க வைக்க தாய்மார்களுக்கு சில யோசனைகள்........! குழந்தை பிறந்த முதல் சில மாதங்கள் வரை, அதற்கு இரவு, பகல் வித்தியாசம் தெரியாது.
எப்போது தூங்கும், எப்போது விழிக்கும் எனச் சொல்ல முடியாது. மாதங்கள் போகப் போகத்தான் இது சரியாகும். ஆறாவது மாதத்திலிருந்து சில குழந்தைகள் இரவு வேளைகளில் தூக்கமில்லாமல் அழலாம். பசி மற்றும் படுக்கையை நனைக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களிலும் அடிக்கடி எழுந்திருக்கலாம். இந்தச் சந்தர்ப்பங்களில்தான் குழந்தை தூங்கும் நேரத்தைத் தாய்மார்கள் முறைப்படுத்த வேண்டும். தூக்கம் என்பது இரவு நேரச் செயல், அதாவது எந்தவித விளையாட்டும் இல்லாத நேரம் என அதற்கு உணர்த்த வேண்டும்.

குழந்தை விழித்துக் கொண்டிருக்கும் பகல் வேளைகளில் நிறைய வேடிக்கைகள் காட்டவும் இரவில் அதைத் தவிர்க்கவும் உங்களுக்கு வசதியான நேரத்ததில் குழந்தையைத் தூங்க வைத்துப் பழகுங்கள்.

சாப்பாடு ஊட்டியபிறகு சிறிது நேரம் குழந்தையை ஓய்வெடுக்க விடுங்கள். பிறகு பவுடர் போட்டு தளர்வான ஆடைகளை மாற்றிவிடவும். இது தூங்குவதற்கான இரவு நேரம் என்ற எண்ணத்தை குழந்தையின் மனத்தில் ஏற்படுத்தும்.

குழந்தையை அணைத்தபடியோ தொட்டிலில் விட்டபடியோ தாலாட்டு பாடிக்கொண்டு அல்லது இதமான இசையை ஒலிக்க விட்டுத் தூங்கச் செய்யவும். குழந்தை தூங்கும் அறை அதிக வெளிச்சமில்லாததாக இருக்க வேண்டும்.

சில குழந்தைகள் சாப்பாட்டு நேரத்தில் தூங்கிவிடும். பாதி தூக்கத்தில் எழுப்ப மனமின்றி தாய்மார்களும் அப்படியே விட்டு விடுவதுண்டு, பிறகு பசியெடுத்து விழித்துக் கொள்ளும். குழந்தைக்கு உணவூட்டி, உடனடியாக மறுபடியும் தூங்க வைத்து விடவும். பாதி தூக்கத்தில் எழுந்திருக்கும்போது விளையாட்டு காட்ட வேண்டாம்.

தூக்கமே இல்லாமல் அழும் பட்சத்தில் குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதா எனவும் பார்க்கவும். தூக்கத்தில் குழந்தை சிணுங்கினாலோ, அசைந்தாலோ ஓடிப் போய்த் தூக்க வேண்டாம். சில நிமிடங்களில் அது தானாகவே தூங்கிவிடும். அப்படித் தூங்காவிட்டால் அதனருகில் உட்கார்ந்து மென்மையாகத் தடவிக் கொடுத்து, நெற்றி கழுத்துப் பகுதியில் வருடினால் தூங்கிவிடும்.

குழந்தை பிறந்த அடுத்த மாதத்திலிருந்தே அதன் தூக்கப் பழக்கத்தை முறைப்படுத்தலாம். தினம் ஒரே நேரம் தூங்கும் பழக்கத்தை அதற்கு ஏற்படுத்தவும். எப்படியோ தூங்கினால் போதுமென ஒவ்வொரு நேரம் தூங்க வைக்க வேண்டாம்.
குழந்தை தானாகத் தூங்கட்டும் என்று விட வேண்டாம். சாப்பாடு கொடுத்த சில நிமிடங்களில் தூங்க வைப்பதே சிறந்தது. தூங்குமிடம் காற்றோட்டமாக, அமைதியானதாக இருக்க வேண்டும். பாதித் தூக்கத்தில் குழந்தையை அணைக்க வேண்டாம். குழந்தையின் தூக்கம் கெடும்.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: குழந்தை வளர்ப்பு

Post by தாமு on Thu Jan 07, 2010 6:32 am

குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய பரிசோதனைகள்

குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய பரிசோதனைகள் குழந்தை பிறந்து மூன்று தினங்களுக்குள் சிறப்பு ரத்தப் பரிசோதனை ஒன்றைச் செய்ய வேண்டியது மிக அவசியம். இதன் மூலம் குழந்தைகளுக்கு பின்னால் ஏற்படக்கூடிய பல தொந்தரவுகளை சரிசெய்து விடலாம்.குறை தைராய்டு :பிறவி தைராய்டு குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மூளை வளர்ச்சியின்மை, மனவளர்ச்சி குன்றிய தன்மை போன்றவற்றை இதன் மூலம் தவிர்க்க முடியும். குறைபாடு இருக்கும் குழந்தைகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும்.அட்ரீனல் கோளாறு :பிறவியிலேயே அட்ரீனல் குறைபாடுள்ள குழந்தையாக இருந்தால் அதன் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் உற்பத்தி குறைந்திருக்கும். இக்குறைபாடு இருந்தால் உடனடியாக சிகிச்சை அளித்தால் மட்டுமே குழந்தையின் உடலைக் காக்க முடியும்.என்சைம் குறைபாடு :என்சைம் குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு கண்புரை, மனவளர்ச்சி குறைபாடு போன்றவை ஏற்படலாம். குழந்தைக்கு உரிய ஊட்டச்சத்து உணவு கொடுத்து காப்பாற்ற முடியும். இந்தப் பரிசோதனைகளை குழந்தை பிறந்த மூன்று தினங்களுக்குள் அதன் குதிகாலில் இருந்து சிறு துளி ரத்தத்தை எடுத்து செய்ய வேண்டும்.


avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: குழந்தை வளர்ப்பு

Post by தாமு on Thu Jan 07, 2010 6:35 am

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது....

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது கவனக் குறைவாகப் பொற்றோர்கள் தவறு செய்வது எல்லா வீட்டிலும் நடப்பதுதான். தெரியாமல் செய்யும் தவறை விட நாம் செய்வது தவறு என்று தெரியாமலே, நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள்தான் அதிகம். அப்படிப்பட்ட தவறுகளை தவிர்க்க வேண்டியது மிக முக்கியம் தாய்மார்கள் செய்யும் சில தவறுகளும், அவற்றின் விளைவுகளும் எப்படி என்று பார்ப்போமா? மருந்தை உணவுடன் கலந்து கொடுப்பது. மருந்து சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு அதை உணவுடன் கலந்து கொடுப்பது பல பொற்றோர்களின் வழுக்கம்.

சிலவகை மருந்துகள் உணவுடன் கலக்கப்படும்போது செயல் திறனை இழப்பதாகத் தெரிவிக்கின்றார்கள் மருத்துவ நிபுணர்கள். எனவே மருத்துவரை கலந்தாலோசித்த பறகே அப்படிக் கொடுப்பது நல்லது. அப்படியே கொடுப்பதானாலும் முன்கூட்டியே உணவையும் மருந்தையும் கலந்து வைக்காமல், சாப்பிடக் கொடுப்பதற்கு முன் கலக்கவும். ஆண்டிபயாடிக்குகளை சீக்கிரமே நிறுத்துதல்.... உங்கள் குழந்தைக்கு மருத்துவர் பத்து நாட்கள் கொடுக்கச் சொல்லி ஆண்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம். குழந்தைகளின் உடல் நலம் தேறுவது தெரிந்தும் ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே மருந்துகளை நிறுத்தக் கூடாது.இதனால் அரை குறையாகத் தேறிய குழந்தையின் உடல் நிலை இன்னும் மோசமாகலாம். தேவைப்படாத நேரத்தில் மருந்து கொடுத்தல் சாதரண தும்மல், இருமல் போன்றவற்றுக்கெல்லாம் மருந்து மாத்திரைகளைக் கொடுத்து குழந்தைகளைப் பழக்க வேண்டியதில்லை. நோய் தீவிரமாகிவிடுமோ என்ற பயத்தில் மருந்துகளைக் கொடுப்பது பக்க விளைவுகளையே ஏற்படுத்தும். பழைய மருந்துகளைக் கொடுத்தல் போனமுறை உங்கள் குழந்தைகக்கு ஏற்பட்ட அதே பாதிப்பு இந்த முறையும் ஏற்படலாம்.அறிகுறிகள் ஓரே மாதிரி இருப்பதைப் பார்த்து, போன முறை கொடுத்த அதே மருந்து மாத்திரைகளைக் கொடுப்பது ஆபத்தானது. அதே போல காலாவதியான மருந்து, மாத்திரைகளை உடனுக்குடன் அப்புறபடுத்த வேண்டும். பெரியவர்களுக்கான மருந்தை கொடுத்தல் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஓரே மாதிரி அறிகுறிகள் தென்படும் போது, பெரியவர்களது மருந்து மாத்திரைகள் அளவைக் குறைத்து குழந்தைகளுக்குக் கொடுப்பது பயங்கரமானது.மருந்தின் சக்தியை எதிர் கொள்ள முடியாமல் அது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக அமையலாம். மருந்துகளின் மேலிருக்கும் லேபில்களைப் படிக்காமை மருத்துவர் பரிந்துரைத்த பட்டியலில் உள்ளவையும், கடையில் வாங்கியவையும் ஒரே மருந்துதானா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும். பிறகு அதன் லேபிளின் மீதுள்ள எச்சரிக்கைகளையும் கொடுக்கும் முறைகளையும் படிக்க வேண்டும்.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: குழந்தை வளர்ப்பு

Post by தாமு on Thu Jan 07, 2010 6:37 am

அன்புள்ள அப்பா!

குழந்தை வளர்ப்பு என்பது பெரும்பாலான ஆண்களைப் பொறுத்த வரை பெண்கள் சமாச்சாரம். குழந்தையை விரும்புகிற அப்பாக்கள் கூட, கைக் குழந்தையைத் தூக்கவோ அதைக் கவனித்துக் கொள்ளவோ தயாராக இருப்பதில்லை. காரணம் குழந்தையை தூக்கும் போது சிறுநீர், மலம் கழிக்கலாம். அல்லது வாந்தி எடுக்கும். இதனால் அருவருப்பு அடையும் அப்பாக்கள் சிலர் குழந்தைப் பருவ சிரமங்களைக் கடந்த பிறகு, குழந்தை ஓரளவுக்கு வளர்ந்த பிறகே அதன் வளர்ச்சியில் அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.இந்த மனப்பான்மை மிகத் தவறானது என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். குழந்தை வளர்ப்பில் ஆரம்ப காலத்திலிருந்தே அப்பாக்களும் பழக்கப்படுத்தபட வேண்டும் என்கிறார்கள் அவர்கள். எந்தெந்த விதங்களில் குழந்தை வளர்ப்பில் பங்கு கொள்ளச் செய்ய முடியும் என்பதற்கு சில யோசனைகள்.பிறந்த குழந்தையைத் தூக்க முதல் நாளிலிருந்தே தன் கணவனுக்கே கற்றுத்தர வேண்டும் மனைவி. கழுத்து நிற்காத குழந்தையை எப்படி பிடித்துக் கொள்ள வேண்டும், எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒன்றிரண்டு முறைகள் கற்றுக் கொடுத்தால் பழகி விடும்.தாய்ப்பால் குடிக்காத குழந்தைக்கு பாலாடையில் அல்லது பாட்டிலில் எப்படிப் பால் கொடுக்க வேண்டும் என்பதை குழந்தையின் அப்பாவுக்கும் கற்றுத் தரலாம். இதனால் குழந்தை அழும்போதெல்லாம் பிரசவித்த தாய் எழுந்து, உடலை வருத்திக் கொள்ளாமல் சற்று நேரமாவது ஓய்வெடுக்க முடியும்.கணவன்&மனைவி இருவருமே வேலைக்குச் செல்கிறார்களானால் குழந்தைக்குச் செய்ய வேண்டிய வேலைகளை இருவரும் பகிர்ந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு குழந்தையைக் குளிப்பாட்டுவது, சாப்பாடு கொடுப்பது போன்றவற்றை ஒருவரும், இரவில் அதற்குச் சாப்பாடு கொடுத்துத் தூங்க வைப்பதை இன்னொருவரும் பிரித்துக் கொள்ளலாம்.என்ன தான் பிசியான வேலையில் இருந்தாலும், தினம் சிறிது நேரத்தைக் குழந்தையுடன் செலவிடுவதை வழக்காமாகக் கொள்ளும்படி அவரைப் பழக்குங்கள். அப்பாவின் முகத்தைப் பார்த்ததும் சில குழந்தைகள் குழந்தை ஏதேனும் பேச முயற்சி செய்யும். அம்மாவிடம் கூட இப்படி இருக்காது.அவற்றறைக் காது கொடுத்து கேட்க வேண்டியது முக்கியம். எனக்கு நேரமில்லை அம்மா கிட்ட சொல்லு என்று தட்டிக் கழிப்பதுதான் உதாசீனப்படுத்தப் படுகிறோம் என்ற உணர்வைக் குழந்தையின் மனதில் ஏற்படுத்தி விடும். குழந்தை விருப்பமானதையெல்லாம் வாங்கிக் கொடுப்பதோடு அப்பாக்களின் கடமை முடிந்து விடுவதில்லை.தன் அன்பை அடிக்கடி வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும். வார்த்தைகளாலும், செயல்களாலும் மட்டுமே அன்பைக் குழந்தைகளால் புரிந்து கொள்ளமுடியும். குழந்தையின் பள்ளிக்கூடத்தில் விசேஷ நாட்கள், ஆண்டு விழா போன்றவற்றிற்குத் தவறாமல் தந்தை செல்ல வேண்டும்.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: குழந்தை வளர்ப்பு

Post by தாமு on Thu Jan 07, 2010 6:40 am

குழந்தை வளர்ப்பு

உங்கள் குழந்தை வளர்ந்து பெரியவரானதும் தன்னம்பிக்கையுடனும் தயக்க சுபாவமின்றியும் இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்தானே? அப்படியானால் கீழ்க் கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள். குழந்தைகளைத் தொந்தரவாக நினைத்து வெளியிடங்களுக்குச் செல்லும்போது அவர்களை உடன் அழைத்துச் செல்வதை பல பெற்றோர்கள் தவிர்ப்பதைப் பார்க்கிறோம். அது தவறான செயல்.

நீங்கள் இப்படியான சந்தர்ப்பங்களில் உங்கள் குழந்தைகளை தவிர்க்காதீர்கள். புதிய சூழ்நிலைகளை சந்திப்பதிலிருந்து தவிர்க்கப்படும் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானாலும் பலவித பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள் என்பது மனநல நிபுணர்களின் கருத்து. குழந்தைகளை வீட்டில் என்னதான் கண்டிப்புடன் வளர்ந்தாலும், வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது அந்தக் கண்டிப்பைத் தொடர்வது நல்லதல்ல. அதாவது வெளியிடங்களில் பெரியவர்களைப் பார்த்ததும் வணக்கம் சொல்லச் சொல்வது, ரைம் ஒப்பிக்கச் சொல்வது, போன்றவற்றைத் தவிருங்கள்.

பெரியவர்களது விரோதம், குழந்தைகளைப் பாதிக்க வேண்டாம். எல்லோருடனும் கலகலப்பாகப் பேசிப் பழக அனுமதியுங்கள். உங்கள் குழந்தை வீட்டில் படு சுட்டியாக இருக்கலாம். ஆனால் வீட்டிற்கு வெளியே வந்ததும் அவர்கள் இயல்பாக நடந்து கொள்ளாமல் பயப்படக்கூடும். வெளியே அழைத்துச் செல்லும்போது உங்கள் குழந்தைகளை எந்த விஷயத்திற்கும் கட்டுப்படுத்தாமல் அவர்களது போக்கிலேயே விட்டுவிடவும். புதிய சூழ்நிலையின் பயம் தெளிந்ததும், அவர்கள் தாமாக மற்றவரிடம் பேசவும், பழகவும் முன்வருவார்கள்.

உங்கள் குழந்தையைப் பிறருக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் போது அவர்களது நிறைகளையும், பலங்களையும் மட்டுமே எடுத்துச் சொல்லுங்கள். அவர்களது குறைகளைப் பகிரங்கப் படுத்தவோ பட்டப்பெயர் சொல்லி அழைக்கவோ செய்யாதீர்கள். வீட்டிற்கு வருந்தாளிகள் வரும் போது, குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி இழுத்து வைத்துப் பேசச் சொல்லாமல், வந்தவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பது, காபி கொடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுத்துங்கள்.

எல்லோரிடமும் அமைதியாக இனிமையாக பேசப் பழக்குங்கள்.வருடத்திற்கு ஒரு முறையாவது குழந்தைகளை உல்லாசப் பயணத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். தவறு செய்யும்போது அவர்களைக் கண்டிப்பதுபோல நல்ல செயல்களை செய்யும்போது பாராட்டவும், ஊக்கப்படுத்தவும், முடிந்தால் ஏதேனும் பரிசு கொடுக்கவும் முயற்சி செய்யுங்கள்.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: குழந்தை வளர்ப்பு

Post by தாமு on Thu Jan 07, 2010 6:40 am

குழந்தைக்கு சுதந்திரம் கொடுங்கள்

குழந்தைகளுக்கு உதவுகிறோம் பேர்வழி என்று சில பெற்றோரும், ஆசிரியர்களும் அவர்கள் வி-ஷயங்களில் சதா தலையீட்டுக் கொண்டே இருப்பார்கள். அது தவறு. தேவையற்ற விஷயங்களில் அப்படிச் செய்வது குழந்தைகளின் மனங்களுக்குள் மறைந்திருக்கும் சக்தியை வெளிப்படுத்த தடையாக அமையும். அதுமட்டுல்ல அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி, மனதில் ஆழமான பாதிப்பையும் உண்டாக்கும். அது அந்தக் குழந்தையின் எதிர்காலத்தையும், வாழ்க்கையையும் பாதிக்கும். நம் குழந்தையின் வாழ்க்கைக்கு நாமே எதிரியாக இருக்கலாமா-? நம் குழந்தை தன்னம்பிக்கையுடன் வளர வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

உண்மையில் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தையிடம் அன்பு காட்டுங்கள். அதற்கு உணவூட்டுங்கள். ஆனால் அது விரும்பியதைச் செய்யட்டும் என்று விட்டு விடுங்கள். அது போக விரும்கிற இடத்துக்குப் போகட்டும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் குழந்தையின் பாதையை அபாயமற்றதாகப் பத்திரத்தன்மை உள்ளதாகச் செய்விப்பதுதான்.

வாழ்க்கை ஒவ்வொரு சுற்றுக்கும் ஏழு ஆண்டுகள் என்கிற உண்மையான கபடமற்ற பருவம். அந்தக் கால கட்டத்தில் மாசு படிய விட்டால் அது வாழ்க்கை முழுவதையுமே குழப்பமாக்கி விடும். நீங்கள் உண்மையிலேயே உங்கள் குழந்தையை நேசிப்பவராயின் அதனுடைய முதல் ஏழாண்டு கால வாழ்க்கையில் எந்த கட்டுத்திட்டமும் செய்யாது விடுங்கள்.

குழந்தையை உருவாக்க விரும்புகிற யாரும் அதனிடம் பரிவாக நடந்து கொள்வதில்லை. மாறாகத் துன்புறுத்தவே செய்கிறார்கள். உலகின் அதிசயங்களை எண்ணி வியக்கிறது குழந்தை. பலவற்றையும் தெரிந்து கொள்ளும் ஆசையில் கேள்விகளை எழுப்புகிறது. ஆனால் பெற்றோருக்கோ அந்தக் கேள்விகள் எரிச்சலூட்டுவதாய் இருக்கிறது. தங்கள் கைவசம் உள்ள பதில்களைச் சொல்லி வைக்கிறார்கள். குழந்தை அந்த பதிலில் திருப்தி அடைகிறதா என்பதில் அவர்களுக்கு அக்கறை இல்லை. எனவே உண்மையான பதிலை குழந்தை புரிந்து கொள்ளும்படி விளக்கிச் சொல்லுங்கள்.

ஏழு வயது வரை ஒரு குழந்தை கபடமற்றதாய் வளர்க்கப் படுமாயின் அடுத்தவரின் எண்ணங்களால் அசுத்தப்படாமல் இருக்குமாயின் அதன் உள்ளார்ந்த வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் குழந்தையைத் தங்களுடைய ஆளுகைக்கு உட்படுத்தி விடுகிறார்கள்.

உங்கள் குழந்தையை நீங்கள் காப்பற்ற வேண்டியது வேறு யாரிடமிருந்தோ அல்ல. உங்களிடமி-ருந்துதான். பிள்ளைகள் மீது எந்த சக்திக்கும் அதிகாரம் இருக்கக்கூடாது. குறிப்பாக அவர்களின் முதல் ஏழாண்டு கால வாழ்க்கையில், அந்தக் கால கட்டத்தில் எவ்விதத் தலையீடும் இல்லாமல் இருந்தால் அவர்கள் நன்கு காலூன்றி விடுவார்கள். இப்படி வளர்க்கப்படும் பட்சத்தில் உங்கள் குழந்தைக்கு உங்கள் அச்சமோ கோழைத்தனமோ தொற்றிக் கொள்ள வாய்ப்புகள் குறைவு.

முதல் ஏழு ஆண்டுகளும் நேர்மையான வளர்ச்சி பெற்ற குழந்தையின் வலிமை அசாதாரணமானது. அந்த வலிமை வயது வந்தவர்களிடம் கூட காண முடியாது.

உங்கள் பெற்றோர் வாழ்க்கை முழுவதும் உங்களுக்கு உதவிக் கொண்டே இருந்திருக்கலாம். அதனால் நீங்கள் வளர்ந்த விதத்திலேயே உங்கள் பிள்ளைகளையும் வளர்க்க நினைக்காதீர்கள்.

உங்கள் குழந்தை பின்னாளில் என்னவாக வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அதனுள் மறைந்திருக்கும் சக்தி இன்னதென்று உங்களால் ஆரம்பத்தில் அத்தனை தீர்க்கமாக அடையாளம் காண முடியாது. அதை அடையாளம் தெரிந்து கொள்ள உங்கள் குழந்தைகளின் அடிப்படை சுதந்திரங்களில் தலையீடாதீர்கள்.

குழந்தைக்கு உங்கள் பயத்தையோ, விருப்பு & வெறுப்புகளையோ, கற்றுக் கொடுக்காதீர்கள். அவை கூட ஒரு விதத்தில் தலையீகள் தான்.

இப்படிப்பட்ட எந்த குறுக்கீடும் தலையீடும் இல்லாத குழந்தைகளால் தான் எதிர்காலத்தில் சாதனை சிகரத்தை தொட முடியும் என்பதையும் நன்கு நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: குழந்தை வளர்ப்பு

Post by தாமு on Thu Jan 07, 2010 6:42 am

மாதம் தோறும் குழந்தையின் வளர்ச்சி!பிறந்த குழந்தையானது முதல் மாதத்திலிருந்து பன்னிரண்டாவது மாதம் வரை அதாவது ஒரு வருடம் வரை படிப்படியாக எப்படி, என்ன வளர்ச்சிகளைக் காண்கிறது தெரியுமா? இதை குழந்தை பெற்ற பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதல் மாதம்

பிறந்த குழந்தையை தூக்கும் போது, அதன் தலை நேராக நிற்காமல் விழும் தலையோடு சேர்த்து தூக்க வேண்டும். அதை குப்புறப் படுக்க வைத்தால், அதன் இடுப்பு, கைகள் மற்றும் கால்களைவிட சற்று உயரத்தில் இருக்கும். அதன் உள்ளங்கையைத் தொட்டால், கைகளை மூடிக் கொள்ளும்.

இரண்டாம் மாதம்

கால்களை நீட்டிப் படுத்துக் கொள்ளும், இடுப்புப் பகுதியைக் கீழே வைத்துக் கொள்ளும்.

மூன்றாவது மாதம்

உட்கார வைக்கும் போது தலை லேசாக நிற்கும். கட்டை விரலை வாயில் வைத்து சூப்ப ஆரம்பிக்கும்.

நான்காவது மாதம்

தனது கைகளைத் தரையில் ஊன்றித் தலையைத் தூக்கிப் பார்க்க முயற்சிக்கும். நிற்க வைக்க இந்த மாதம் முதல் பழகலாம். கைகளில் எதையாவது கொடுத்தால் பிடித்துக் கொள்ளும்.

ஐந்தாவது மாதம்

உட்கார வைக்கும் போது தலையையும் நெஞ்சையும் உயர்த்தும்.

ஆறாம் மாதம்

எதையாவது அல்லது யாரையாவது பிடித்துக் கொண்டு அதனால் உட்கார முடியும். பிடிமானம் விடுபட்டால் கீழே விழும். முன்னங்கைகளைத் தரையில் அழுத்தமாக ஊன்றித் தலையைத் தூக்கிப் பார்க்கும்.

ஏழாம் மாதம்

பிடிமானமில்லாமல் உட்காரக் கற்று கொள்ளும். உடலின் எடையில் ஒரு பகுதியைக் கால்களில் தாங்கியபடி நிற்கும். தனது கைகளை உபயோகிக்கக் கற்று கொள்ளும்.

எட்டாம் மாதம்

கொஞ்சம் தடுமாற்றமின்றி நன்றாகவே உட்காரும். உடலின் மொத்த எடையையும் தன் கால்களில் தாங்கியபடி நிற்கப் பழகும். டம்ளர், பால் பாட்டில் போன்றவற்றைத் தன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொள்ளும்.

ஒன்பதாம் மாதம்

பத்து நிமிடங்கள் வரை தடுமாறாமல் உட்கார முடியும். எதையாவது பிடித்தபடி நிற்க ஆரம்பிக்கும். சின்னச் சின்னப் பொருட்களை ஒன்றாகக் குவிக்கக் கற்றுக் கொள்ளும்.

பத்தாம் மாதம்

முன் பக்கமாகச் சாய்ந்து அங்கே கிடக்கும் பொருட்களை எடுக்கும். கைகளை ஊன்றியபடி தரையில் தவழ ஆரம்பிக்கும். எதையாவது பிடித்தபடி ஒரு இடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்கு நகரும். இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டக் கற்றுக் கொள்ளும்.

பதினோராம் மாதம்

உட்கார்ந்த நிலையில் உடலைத் திருப்ப அதனால் முடியும். முழங்கால்களைத் தரையில் ஊன்றியபடி தவழ ஆரம்பிக்கும். நேராக நிற்கக் கற்றுக் கொள்ளும். ஆட்காட்டி விரலால் தரையில் எதையாவது எழுதுகிற மாதிரிச் செய்யும்.

பன்னிரண்டாம் மாதம்

கைகளையும், கால்களையும் உபயோகித்தபடி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகரும். ஒரு கையில் மட்டும் பிடிமானம் இருந்தாலும் கூட ஸ்திரமாக நிற்கப்பழகும். ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலை உபயோகித்துப் பொருட்களை எடுக்கக் கற்றுக் கொள்ளும்.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: குழந்தை வளர்ப்பு

Post by தாமு on Thu Jan 07, 2010 6:43 am

குழந்தைக்குக் காய்ச்சலா? பதட்டம் வேண்டாம்.

குழந்தைக்குத் திடீரெனக் காய்ச்சலடித்தால் நாம் என்ன செய்வோம்? அடுத்த நிமிடமே மருத்துவரிடம் தூக்கிக்கொண்டு ஓடுவோம். அங்கே மொய் எழுதிய பிறகு தான் நம் படபடப்பு அடங்கும். அதுவரை நமக்கு இருப்புக் கொள்ளாது. கொஞ்சம் நிதானமாக யோசித்தால் குழந்தைக்குக் காய்ச்சல் என்றதுமே மருத்துவரிடம் காட்ட ஓட வேண்டுமென அவசியமில்லை. காய்ச்சல் குறைய நீங்கள் கீழ்க்கண்ட சில விஷயங்களை பின்பற்றலாம். அது குழந்தைக்கு இதமளிக்கும். காய்ச்சலையும் கட்டுப்படுத்தும்.

குழந்தைக்கு அணிவித்துள்ள ஆடைகள், உள்ளாடைகள், நாப்கின் அனைத்தையும் நீக்கவும். குழந்தை படுக்கையிலேயே இருக்க விரும்பினால் அதை மெல்லிய பெட்ஷீட்டினால் போர்த்திப் படுக்கச் செய்யவும். அழுத்தமான துணியால் போர்த்தினால் அவற்றை குழந்தை வெப்பமாக உணரலாம். திடீரென ஏற்படும் காய்ச்சலுக்கு என்ன மருந்து கொடுக்கலாம் என மருத்துவரிடம் முன் கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை கொடுங்கள். உடனடியாகக் காய்ச்சல் இறங்குமென எதிர்பார்க்காதீர்கள். குறைந்தது அதற்கு ஒரு மணி நேரமாவது பிடிக்கும்.

ரொம்பவும் சூடாகவோ, ரொம்பவும் குளிர்ச்சியாகவோ இல்லாதபடி சிறிது சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிய துணியை நனைத்துப் பிழிந்து, குழந்தையின் முகம், கைகள், மார்பு, முதுகு, கால்கள் ஆகிய இடங்களைத் துடைத்து விடுங்கள். அதன் உடல் தானாக காயட்டும். ஒரு வேளை குழந்தைக்கு நடுக்கம் ஏற்படுகிற மாதிரித் தெரிந்தால் தண்ணீரால் துடைப்பதை நிறுத்திவிடவும். கொதிக்க வைத்து, ஆற வைக்கப்பட்ட சுத்தமான
தண்ணீரையோ, அல்லது நீர்த்த பழச்சாற்றையோ குழந்தைக்குக் கொடுக்கலாம். தாய்ப்பால் குடிக்கிற குழந்தையானால் ஒரு மணி நேரத்திற்கொருமுறை பாலூட்டலாம்.

ஃபேன் காற்றுக்கு நேராகக் குழந்தையைப் படுக்க வைக்காதீர்கள். காற்று போதிய அளவு குழந்தையின் மேல்படும் திசையில் வசதியாகப் படுக்கச் செய்யுங்கள். இதன் பிறகும் குழந்தைக்குக் காய்ச்சல் குறையவில்லை என்றால் மருத்துவரை நாடலாம்.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: குழந்தை வளர்ப்பு

Post by தாமு on Thu Jan 07, 2010 6:45 am

குழ‌ந்தை‌க்கு பாலூ‌ட்டியது‌ம் செ‌ய்ய வே‌ண்டியது

குழ‌ந்தைக‌ள் பா‌ல் குடி‌க்கு‌ம் போது அது தா‌யி‌ன் மா‌ர்‌பி‌ல் இரு‌ந்து தா‌ய்பாலை‌க் குடி‌த்தாலு‌ம் ச‌ரி, பா‌ல் பு‌ட்டி‌யி‌ல் குடி‌த்தாலு‌ம் ச‌ரி, பாலோடு சே‌ர்‌த்து கா‌ற்றையு‌ம் சே‌ர்‌‌த்து ‌‌‌முழ‌ங்‌கி‌விடு‌ம்.

எனவே ஒ‌வ்வொரு முறையு‌ம் பா‌ல் கொடு‌த்த ‌பிறகு குழ‌ந்தையை தோ‌ளி‌ல் போ‌ட்டு முது‌கி‌ன் ‌மீது லேசாக‌த் த‌ட்டி‌வி‌ட்டா‌ல் ‌மிகவு‌ம் ந‌ல்லது. அ‌ப்போது அவ‌ர்களு‌க்கு ஏ‌ப்ப‌ம் போ‌ன்று கா‌ற்று வெ‌ளியே வரு‌ம்.

தோ‌ளி‌ல் போ‌ட்டு த‌‌ட்டுவதை‌ப் போ‌ன்றே, ‌சில‌ர் மடி‌யி‌ல் குழ‌ந்தையை ‌நி‌மி‌ர்‌த்‌தி உ‌ட்கார வை‌த்து‌ப் ‌பிடி‌த்து‌க் கொ‌ள்வா‌ர்க‌ள். இத‌ன் மூலமாகவு‌ம் வ‌யி‌ற்று‌க்குள‌் செ‌ன்ற கா‌ற்று எ‌‌ளிதாக வெ‌ளியே‌றி‌விடு‌ம்.

அத‌ன்‌பிறகு குழ‌ந்தையை ‌கீழே படு‌க்க வை‌க்கலா‌ம். இதனா‌ல் பா‌ல் குடி‌த்தது‌ம் குழ‌ந்தை வா‌ந்‌தி எடு‌ப்பது போ‌ன்ற அசெளக‌ரிய‌ங்க‌ள் த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம்.

இ‌ந்த ‌விஷய‌த்தை எ‌ப்போது‌ம் தவறாம‌ல் செ‌ய்ய வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: குழந்தை வளர்ப்பு

Post by தாமு on Thu Jan 07, 2010 6:46 am

குழந்தைகளின் விரல்கள் வலுவடைய‌

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் அவர்கள் பென்சிலை பிடித்து எழுத அவர்களின் விரலுக்கு சத்து வேண்டும்.

சரியான கிரிப் கிடைக்காது அதற்கு பள்ளி அனுப்புவதற்கு ஆறு மாதம் முன்பாக கைக்கு உடற்பயிற்சி கொடுக்க வேண்டும்.

வீடு கொஞ்சம் குப்பையாகும் அதற்கும் டிரெயிங் கொடுக்கனும்.

நிறைய வேண்டாத பேப்பரை கையில் கொடுத்து சுக்கு நூறா கிழிக்க சொல்லனும் அது எழுதும் விரல்களை வலுவடைய வைக்கும்.

அதுவும் பேப்பரை கிழித்து போட சொன்ன ரொம்ப சந்தோஷமாய் கிழிப்பார்கள்.

கிழிக்கும் போது ம‌ற‌க்காம‌ல் கூட‌வே ஒரு க‌வ‌ர் அல்ல‌து சிறிய‌ குப்பை கூடையை வைத்து அதில் போட‌ சொல்ல‌னும்.

இது ப‌ள்ளி செல்லும் போது அவ‌ர்க‌ள் கை வ‌லிக்க‌ம‌ல் ஈசியாக பென்சிலை பிடித்து எழுதுவார்கள்.

குழ‌ந்தைக‌ள் இருக்கும் வீட்டில் நுழைந்தால் சுவ‌ரெல்லாம் சித்திர‌ம் தான். சில‌ வீட்டில் சுவ‌ரை பார்க்க‌வே முடியாது. சுவ‌ரெல்ல்லாம் க‌ண்ண‌ பின்னான்னு கிறுக்கி வைத்து இருப்பார்க‌ள்.

இத‌ற்கு முத‌லே நீங்க‌ள் ப‌ழைய‌ டைரி, நிறைய‌ நோட்டுக‌ள் இது போல் வாங்கை பென்சிலை தூக்கும் போதே அதை கொடுத்து எவ்வ‌ள‌வு கிறுக்கினாலும் அதிலேயே கிறுக்க‌ ப‌ழ‌க்க‌ ப‌டுத்த‌னும்.

க‌ண்டிப்பாக‌ ப‌ழ‌க்க‌ ப‌டுத்துவ‌து க‌டின‌ம் தான் ஆனால் ப‌ழ‌க்க‌ப‌டுத்தி விட்டீர்க‌ள் என்றால் க‌ரெக்டாக அவ‌ர்க‌ள் அந்த‌ நோட்டு அல்ல‌து டைரியில் தான் எழுத‌னும் என்ப‌தை புரிந்து கொள்வார்க‌ள்.

கொஞ்சம் பேச ஆரம்பிக்கும் போதே சுவரில் நிறைய படங்கள் (மிருகங்கள், பழங்கள் இது போல் எல்லாம் ஒட்டி வைத்து சொல்லி கொடுத்து பழக்க படுத்தலாம்).
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: குழந்தை வளர்ப்பு

Post by தாமு on Thu Jan 07, 2010 6:47 am

குழந்தைகள் திடீரென்று அழுதால்

1. குழந்தைகள் திடீரென்று அழுதால் ஏதாவது பூச்சி கடித்திருக்கும். குழந்தைகளுக்கு கூடுமானவரையில் லைட் கலர் ஆடையை அணிவிப்பது நல்லது. குழந்தைகளுக்கு கூடுமானவரையில் லைட் கலர் ஆடையை அணிவிப்பது நல்லது. அதில் பூச்சி , எறும்பு இருந்தால் உடனே தெரியும்.

2. உடனே பக்கத்தில் உள்ள அனைத்து துணிகளையும் நல்ல உதரி போடுங்கள். ஏதும் எறும்பு இருக்கான்னும் பார்க்கவும்.

3. காசு சில்லரை காசுகள் குழந்தைகள் உள்ள இடத்தில் ஆங்காங்கே வைக்காதீர்கள். அது போல பெரிய குழந்தைகளிடம் காசு கொடுத்தாலும் குழந்தைகளிடம் கொடுத்து விளையாட கொடுப்பார்கள். இதனால் குழந்தைகள் அதை எடுத்து வாயில் போட்டு கொண்டால் பல விபரீதம் நடக்க வாய்ப்பிருக்கு.

4. வயிற்று வலியா இருந்தாலும் அழுவார்கள், அதற்கு வயிற்றில் எண்ணை தடவிவிட்டு, கொதித்து ஆறிய வெண்ணீரை பாலைடயிலோ (அ) ஸ்பூனாலோ ஊற்றி விடுங்கள் கொஞ்சம நேரத்தில் சரியாகிடும்.

5. ஆகையால் தான் நல்ல சப்போட் கொடுத்து அடக்கமா தூங்க வைத்து அழக்குங்கள்.

6. ஒரே தூக்கி பழக்க படுத்தி கையிலேயே வைத்து தூக்கி பழக்க படுத்தியவர்கள் கொஞ்சம் அவர்களை விட்டு நகர்ந்தாலும் உடனே வீல்லென்று சத்தம் வரும்.

7. அடுத்து அடுத்து இரண்டு குழந்தை உள்ள வீட்டில் பெரிய குழந்தை கூட சின்ன குழந்தையையே கொஞ்சுகிறார்களே என்ற பொறாமையில் கைய கால கூட இழுத்து விட்டு விடுவார்கள்.அதையும் ஜாக்கிரதையா கண்காணிக்கனும்.

8. குழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்கு கிறார்களோ அவ்வளவு நல்லது. அதற்குன்னு வயிற்றுக்கு கொடுக்காமல் அப்படியே விடக்கூடாது. ஒரு மணி நேர்த்திற்கு ஒரு முறை பார்த்து காலை சுரன்டி விட்டால் (அ) காது மடலை லேசாக தொட்டால் கொஞ்சம் எழுந்திருப்பர்கல் வயிற்றை நிறைத்து மறு படி ஏப்பம் விட வைத்து தூங்க போடவும்.

9. பாத்ரூம் (ஒன், டு) போய் விட்டால் கூட அழுவார்கள் அதையும் அப்ப அப்ப செக் பண்ணி மாற்றி விடுங்கள்.

10. குழந்தைகளை பேனுக்கு நேரா படுக்க வைக்காதீர்கள்.எப்போதும் கொஞ்சம் சரிவலாக படுக்க வையுங்கள்.அப்படி நேராக படுக்க வைத்தால் நெஞ்சின் மேல் ஒரு டவலை மடித்து மேலே வையுங்கள்.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: குழந்தை வளர்ப்பு

Post by தாமு on Thu Jan 07, 2010 6:48 am

குழந்தைக்குப் பரீட்சையா?

உங்கள் குழந்தைப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறதா? அதற்கு நீங்கள் எப்படியெல்லாம் உதவலாம்? உங்கள் அணுகுமுறை எப்படியிருக்க வேண்டும், இதோ சில யோசனைகள்.

பரீட்சை நெருங்க நெருங்க எல்லாக் குழந்தைகளுக்குமே பயம் ஆரம்பிக்கும். அது அனாவசியமானது என்று நீங்கள் தான் குழந்தைக்கு உணர்த்த வேண்டும்.

குழந்தைக்குப் படிக்க நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் உள்ள இடமாகப் பார்த்துக் கொடுங்கள்.

குழந்தைக்குப் பரீட்சை முடிகிறவரை நீங்கள் சில விஷயங்களைத் தியாகம் செய்தாக வேண்டும். உதாரணத்திற்கு விருந்தினர் வருகை, அரட்டை, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற சில விஷயங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள்.

குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகக் கூடிய நல்ல, போஷாக்கான உணவாகக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளிடம் அனுசரணையாகப் பேசுங்கள். உன்னால் முடியும். நீ கட்டாயம் நல்ல மதிப்பெண்களை வாங்குவாய் என்று ஊக்கம் கொடுங்கள். அதை விட்டு விட்டு மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு உங்கள் குழந்தையை மட்டம் தட்டாதீர்கள்.

சதா சர்வ காலமும் குழந்தையைப் படி படி என்று கட்டாயப்படுத்தாதீர்கள். காலையிலும், மாலையிலும் குறிப்பிட்ட நேரம் படிக்க அனுமதியுங்கள். மற்றபடி அவர்கள் ரிலாக்ஸ் செய்து கொள்வதற்கும் விளையாடுவதற்கும் போதுமான நேரத்தை ஒதுக்கிக் கொடுங்கள்.

குழந்தைக்கு மந்தமாக இருக்கும் பாடத்தை அதன் குரலாலேயே சொல்ல வைத்து டேப் ரெக்கார்டரில் பதிவு செய்து விடுங்கள். நேரம் கிடைக்கிற போதெல்லாம் அதை உங்கள் குழந்தை கேட்கும் படி செய்யுங்கள். இந்த முறையிலான பாடம் அதற்கு விரைவில் மனப்பாடமாகும்.

பரீட்சையில் நல்ல இடத்தில் தேறினால் ஏதேனும் பரிசுப் பொருள் வாங்கித் தருவதாக வாக்குக் கொடுங்கள். அதை நிறைவேற்றவும் செய்யுங்கள்.

அனாவசிய வேலைகளை வாங்காதீர்கள்.

அதிகாலையில் சீக்கிரம் கண்விழித்துப் படிக்கிற பழக்கத்தை உங்கள் குழந்தைக்கு ஏற்படுத்துங்கள். அதிகாலைக் காற்றில் ஓசோன் அதிகமிருப்பதால் குழந்தையின் நினைவாற்றலுக்கு அது உதவும்.

உங்கள் குழந்தையை தனியே படின்னு விடுவதைவிட அதே வகுப்பு படிக்கும் நான்கைந்து குழந்தைகளைச் சேர்ந்து படிக்க வைக்கலாம். போட்டி போட்டுக் கொண்டு படிப்பார்கள்.

ஒரு வேளை உங்கள் குழந்தை எதிர்பார்த்த அளவுக்கு அதிக மதிப்பெண்கள் வாங்கிவிட்டாலோ, பரீட்சையில் தேறாவிட்டாலோ அளவுக்கு மீறிக் கண்டிக்காதீர்கள். அடுத்த முறை சரி செய்து விட தைரியம் சொல்லுங்கள்.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: குழந்தை வளர்ப்பு

Post by தாமு on Thu Jan 07, 2010 6:49 am

குழந்தைகளின் பெற்றோருக்கு

குழந்தை பிறந்தவுடன் நான்கு நிமிடத்திற்குள் அழ வேண்டும். அழுவதன் மூலம் குழந்தையின் ரத்த ஓட்டம் சீராக மூளையை சென்றடைகிறது. குழந்தை 6 முதல் 8 வாரத்திற்குள் முகம் பார்த்து சிரிக்கவேண்டும். 12 முதல் 15 வாரத்திற்குள் தலை நிற்கவேண்டும். 20 வாரத்தில் குப்புறப்படுக்கவேண்டும். 6 மாதத்திற்குள் உட்காரவேண்டும். 8 மாதத்தில் நடப்பதற்கும், ஒரு வருடத்திற்குள் யார் துணையுமின்றி நடக்கவேண்டும்.

இந்த வளர்ச்சி சீராக இருக்கும் பட்சத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சி பெறும். இதில் ஏதும் மாறுதல் இருக்கும்பட்சத்தில் மனவளர்ச்சி பாதிப்பு ஏற்படும். எனவே மருத்துவரை அணுகி ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளித்தால் குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம்.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: குழந்தை வளர்ப்பு

Post by உமா on Thu Jul 28, 2011 1:54 pm

அனைத்து தொகுப்புக்கும் மிக்க நன்றி தாமு அண்ணா...தற்போது படிக்க நேரமில்லை...அனைத்தையும் பிரிண்ட் எடுத்துக்கொண்டேன்....வீட்டில் சென்று இரவு படிக்க.....
நன்றி நன்றி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: குழந்தை வளர்ப்பு

Post by ஸ்ரீஜா on Thu Jul 28, 2011 2:02 pm

அனைத்து விஷயங்களும் அருமை தாமு அண்ணா ......... நன்றி
avatar
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1328
மதிப்பீடுகள் : 65

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum