புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
11 Posts - 4%
prajai
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
9 Posts - 4%
Jenila
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
4 Posts - 2%
Rutu
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
2 Posts - 1%
Barushree
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
2 Posts - 1%
jairam
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனை


   
   
Srg
Srg
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 04/12/2021

PostSrg Thu Dec 09, 2021 7:01 pm

[9/12, பிற்பகல் 5:07] +91 74183 00005: தொல்லைப் படுத்தும் வயிறு உப்புசம்

வயிற்றில் உண்டாகும் வாயு அதிகமாகும் நிலையில் அழுத்தத்துடன் உடலிலிருந்து ஏதோ ஒரு வகையில் வெளியேற வேண்டும். அப்படி வெளியேறாமல் உடலினுள்ளேயே தங்கி வேலை செய்ய ஆரம்பித்து விட்டால் வயிறு வீங்கி, உப்புசம், அஜீரணம், சத்தமாய் பயமுறுத்தும் ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்ற தொல்லைகள் ஏற்படும்.

எப்போதாவது சாப்பிடும் விருந்தினால் கூட சிலர் அவதிப்படுவார்கள். சில பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் இந்த வயிறு வீக்கத்தினால் வாந்தி ஏற்படுவதும் உண்டு.

வயிறு நிறைய சாப்பிட்டாலும், எதுவும் சாப்பிடாவிட்டாலும் சிலருக்கு வயிறு உப்புதல் என்பது அடிக்கடி நிகழும் பிரச்சனை. வயிற்று உப்புசம் ஏற்பட என்ன காரணம், அது என்ன மாதிரியான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்,

உப்புசம் ஏற்படுவது ஏன்?

உடலில் வாய்வு உண்டாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

√ ஒன்று, இரைப்பை மற்றும் சிறுகுடலில் செரிமானமாகாத சில உணவுப் பொருள்கள் பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவால் உடைக்கப்படும்போது உண்டாகும் வாய்வு.

√ மற்றொன்று, வாய்வழியாக உடலுக்குள் செல்லும் வெளிக்காற்று. இவை இரைப்பையிலிருந்து ஏப்பமாகவோ, குடலைச் சென்றடைந்ததும் ஆசனவாய் வழியாகவோ உடலிலிருந்து வெளியேற வேண்டும். அப்படி வெளியேறாமல் உடலுக்குள்ளேயே தங்கிவிடுவதால், வயிறு வீங்கி உப்புசம் ஏற்படுகிறது.

உப்புசத்தை ஏற்படுத்தும் பிற காரணங்கள்

*  சாப்பிடும்போது பேசுவது, அவசரமாகச் சாப்பிடுவது, காபி, டீ, ஜூஸ் போன்ற பானங்களை அருந்துவது, ஸ்ட்ரா மூலம் உறிஞ்சிக் குடிப்பது, சூயிங்கம் மெல்வது, மிட்டாய் சப்புவது போன்ற நேரங்களில் நம்மையும் அறியாமல் காற்றையும் சேர்த்து விழுங்குதல்.

*  ‘லாக்டோஸ் ஒவ்வாமை’ (Lactose Intolerance) இருப்பவர்கள், பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட பால் அல்வா, பால்கோவா, சீஸ் போன்ற உணவு வகைகளைச் சாப்பிடுதல்.

*  சிறுகுடல் பகுதியில் அளவுக்கு அதிகமாகத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா சேர்தல். ஒரு வேளை உணவு உண்டதும் அடுத்த வேளை உணவு உண்ண அதிக இடைவெளி எடுத்துக் கொள்ளுதல். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, மலம் மற்றும் சிறுநீரை அடக்குதல்.

*  காஸ் நிரப்பப்பட்ட குளிர்பானங்கள் அருந்துவது, எண்ணெயில் பொரித்த இறைச்சி, பாக்கெட்டுகளில் அடைத்த மசாலா அதிகமுள்ள உணவுகள், அதிகக் கொழுப்பு, மசாலா உணவுகள் சாப்பிடுதல்.

இவை தவிர, இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் (Irritable Bowel Syndrome) எனப்படும் வயிற்றில் எரிச்சல் பிரச்சனை, சர்க்கரைநோய், ‘குளூட்டன்’ என்னும் புரதம் செரியாமை, அசுத்தமான நீர்நிலைகளில் வாழும் ‘ஜார்டியா’ (Giardia) எனும் பூச்சி, நீர் மூலம் உடலுக்குள் செல்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளாலும் வயிற்று உப்புசம் ஏற்படலாம்.

உப்புசத்தால் உண்டாகும் பிரச்சனைகள்

* வயிறு அல்லது அடிவயிறு வீங்குதல்.
* வாய்வுத் தொல்லை.
* சாப்பிட்டதும் அசௌகர்யமாக உணர்தல்.
* வயிற்று இரைச்சல்.
* வயிற்றுப்பிடிப்பு.
* குமட்டல்.

தவிர்க்க… தடுக்க!

* புரோபயாடிக்ஸ் (Probiotics) என்னும் நன்மை செய்யும் பாக்டீரியா உள்ள தயிர் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்.

* மலம், சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்தால், தாமதிக்காமல் உடனடியாக மலம் கழித்துவிட வேண்டும்.

* ‘குளூட்டன் ஃப்ரீ டயட்’ (Gluten free diet) உணவு முறையைப் பின்பற்றலாம். ‘குளூட்டன்’ என்னும் புரதம் இல்லாத உணவுகள் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிச் சாப்பிடலாம்.

* மருத்துவரின் பரிந்துரையின்றி, சுயமாக மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

* நாளொன்றுக்கு மூன்று லிட்டர் நீர் அருந்த வேண்டும். முடிந்தவரை நீரை நன்றாகக் காய்ச்சி, வடிகட்டி அருந்துவது நல்லது.

*  இரவு உணவை உறங்கச் செல்லும் இரண்டு மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விடுங்கள். 

* புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் செயற்கைக் குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

சாப்பிடக் கூடாதவை?

மொச்சை, பட்டாணி, சுண்டல், பயறுகள், பருப்பு வகைகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள், காரம் மற்றும் மசாலா மிகுந்த உணவுகள், எண்ணெயில் குளித்த, வறுத்த, பொரித்த உணவுகள், சாக்லெட், கேக், ஐஸ்கிரீம், பிஸ்கெட், கற்கண்டு போன்ற இனிப்புகள், புட்டிகளில் அடைத்த மென்பானங்கள், டின்களில் அடைத்து விற்கப்படும் செயற்கைப் பழச்சாறுகள் மற்றும் உணவுகள், பால் அல்வா, பால்கோவா, பாலாடைக் கட்டி போன்ற பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகள்.
[9/12, பிற்பகல் 5:07] +91 74183 00005: வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க குறைத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகள், புரதம் மிகுந்த உளுந்து, முட்டை, மீன், இறைச்சி,  முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப்பழம், வாதுமை, வெங்காயம், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், அப்பம், அடை, அப்பளம், வடாகம், ரொட்டி, ஊறுகாய், சோளப்பொரி, காபி, தேநீர்.

இவை தவிர உங்களுக்கு எந்த உணவு சாப்பிட்டால் வாய்வு தொல்லை தருவதாக நினைக்கிறீர்களோ அதையும் குறைத்துக் கொள்ளுங்கள்.

சேர்க்கவேண்டிய உணவுகள்?

அரிசி, கம்பு, கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்களில் தயாரிக்கப்பட்ட உணவுகள் (எடுத்துக்காட்டாக, இட்லி, இடியாப்பம், தோசை, புட்டு, ரவா உப்புமா, அரிசிச்சோறு, கம்பங்கூழ், கேப்பைக்கூழ், கேப்பைத் தோசை, சப்பாத்தி, கோதுமை தோசை).

கேரட், பீட்ரூட், முள்ளங்கி, டர்னிப், பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய், கத்தரிக்காய், வெள்ளைப்பூண்டு, தக்காளி, பப்பாளி, எல்லா கீரைகள், புதினா, தேன், வெல்லம், சாம்பார், ரசம், மோர். இந்த உணவுகளைத் தேவையான அளவுக்குச் சாப்பிடலாம்.

இரண்டு தவறான நம்பிக்கைகள்!

*ஒன்று, வாய்வு வெளியேற வேண்டுமானால் சோடா குடிக்க வேண்டும் என்று நினைப்பது. சோடா குடித்ததும் வயிற்றில் உள்ள வாயு வெளியேறி விடுவதாக நம்புகிறோம். இது தவறு. உண்மையில் சோடா குடித்ததும், சோடாவில் கலந்திருக்கும் கரியமில வாயுதான் ஏப்பமாக வெளியேறுகிறது. குடலில் உள்ள வாயு வெளியேறுவதில்லை.

இன்னொன்று, `ஆ.....வ்’ என்று பெரிய ஏப்பம் விட்டால் வாயு முழுமையாக வெளியே வந்துவிடும் என்று நம்பி பலர் தாங்களாகவே வலிய ஏப்பத்தை
வரவழைப்பர். உண்மையில் அப்போது என்ன நிகழ்கிறது தெரியுமா? பெரிய ஏப்பம் விடும்போது வாயு வயிற்றுக்குள்தான் செல்கிறது. அடுத்தமுறை இப்படி நீங்களாகவே வலிய ஏப்பம் விடும்போது முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் நின்று கவனியுங்கள். உங்களுக்கே உண்மை புரியும்.                     

தடுக்கும் உணவுகள்/மருந்துகள்

• புதினா துவையலை அவ்வப்போது செய்து சாப்பிடலாம்.

• பழங்களில் அன்னாசி நல்லது.

• நலம் பயக்கும் பாக்டீரியாக்களை அதிகரிக்க மோர் சிறந்த பானம்.

• பூண்டுப் பற்களை நன்றாக வேகவைத்துச் சாப்பிடலாம்.

• சித்த மருந்துகளில், இஞ்சித் தேன், இஞ்சி ரசாயனம், சோம்புத் தீநீர், ஓமத் தீநீர், பஞ்ச தீபாக்கினி சூரணம் (சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம் சேர்ந்தது), ஏலாதி சூரணம். சீரகச் சூரணம் போன்ற மருந்துகள் சிறந்த பலனை அளிக்கும்.

• தயிர்ச்சுண்டி சூரணம் எனும் மருந்து வாயுப் பிரச்சனை, வயிற்று உப்புசம், வயிற்றுவலி போன்றவற்றை உடனடியாக குறைக்கும். 

அந்த டயட், இந்த டயட் என மாற்றி மாற்றி உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து, உணவில் ஒரு ஒழுங்குமுறையைப் பின்பற்ற வேண்டியது அவசியம். தொல்லை தொடர்ந்தால் வந்திருக்கும் பிரச்சனைக்குக் காரணம் உணவா, நோயா என்று மருத்துவரிடம் பரிசோதித்து, சிகிச்சை பெறுவது இதைத் தீர்க்க உதவும்.
[9/12, பிற்பகல் 5:15] +91 74183 00005: விக்கல் எப்படி வருகிறது?

நம் உடம்பில் நுரையீரலுக்கும் வயிற்றுக்கும் இடையில் உள்ள ஒரு சவ்வு பகுதி தான் உதரவிதானம் (Diaphragm).

இதன் பணி நுரையீரலை சுருங்கி விரியவைத்து மூச்சை இழுத்துவிட உதவுவது ஆகும். இதன்
செயல்பாட்டில் மாற்றம் ஏற்படும்போது விக்கல் வருகிறது.

சுவாசத்தின் போது உதரவிதானம்
கீழ்நோக்கி விரிந்து தட்டையாகிறது. கூடவே குரல்வளை நாண்களும் திறக்கின்றன. இதனால் நுரையீரலில் காற்றை நிரப்ப அதிகம் கிடைக்கும்.

உதரவிதானம் விரியும்போது குரல்வளை நாண்கள் திறப்பதால் நாம் உள் இழுக்கும் காற்று குரல்வளை நுரையீரலுக்குள் எளிதாக
செல்ல முடிகிறது.

மூச்சை வெளிவிடும்போது
உதரவிதானம் மீண்டும் பழைய நிலைக்கு சுருங்கும். இதனால் காற்று வெளியேறுகிறது. நம் மூளை பெரினிக்ஸ் என்ற நரம்பின் வழியாக
இந்த உதரவிதானத்தை இயக்குகிறது.

சில சமயங்களில் பெரினிக்ஸ் நரம்பில் ஏற்படும் எரிச்சலால் உதரவிதானம் முறையின்றி
மூளையின் கட்டுப்பாட்டில் இல்லாமல்
தன்னிச்சையாக இயங்கும். எனவே குரல்வளை நாண்கள் திறப்பதும் மூடுவதும் சரிவர நடக்காது.

இதனால் தொண்டை வழியாக
அதிக காற்றை உள் இழுக்கும்போது அது மூடிய அல்லது குரல் வளை நாண்களின் குறுகிய இடைவெளி வழியே செல்லும். காற்று
குரல்வளை நாண்கள் மீது மோதுவதால் ஹிக் என்ற சத்ததுடன் நமக்கு விக்கல் வருகிறது.

உதரவிதானத்தின் ஒழுங்கற்ற செயல்பாட்டிற்கு காரணங்கள் சில உண்டு. சாப்பாட்டை வேக வேகமாக சாப்பிடும்போது வயிறு
விரிவடைவதால் கூட உதரவிதானத்தின் செயல்பாடு பாதிக்கப்படலாம்.

அதிக சூடான காரமான உணவு சாப்பிடுதல், மது, புகை,
தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது கூட உதரவிதானத்தின் ஒழுங்கற்ற செயல்பாட்டிற்கு
காரணமாக அமைந்து விக்கல் வருகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக