புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போற்றுவோம் பெண்களை Poll_c10போற்றுவோம் பெண்களை Poll_m10போற்றுவோம் பெண்களை Poll_c10 
64 Posts - 50%
heezulia
போற்றுவோம் பெண்களை Poll_c10போற்றுவோம் பெண்களை Poll_m10போற்றுவோம் பெண்களை Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
போற்றுவோம் பெண்களை Poll_c10போற்றுவோம் பெண்களை Poll_m10போற்றுவோம் பெண்களை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
போற்றுவோம் பெண்களை Poll_c10போற்றுவோம் பெண்களை Poll_m10போற்றுவோம் பெண்களை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
போற்றுவோம் பெண்களை Poll_c10போற்றுவோம் பெண்களை Poll_m10போற்றுவோம் பெண்களை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
போற்றுவோம் பெண்களை Poll_c10போற்றுவோம் பெண்களை Poll_m10போற்றுவோம் பெண்களை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
போற்றுவோம் பெண்களை Poll_c10போற்றுவோம் பெண்களை Poll_m10போற்றுவோம் பெண்களை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போற்றுவோம் பெண்களை Poll_c10போற்றுவோம் பெண்களை Poll_m10போற்றுவோம் பெண்களை Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போற்றுவோம் பெண்களை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 23, 2022 2:25 pm

போற்றுவோம் பெண்களை Tamil_News_large_2497349
-

நம் நாட்டில் பெண் என்பவள் கடவுளாகவும், தாய்த்திரு நாட்டின் வடிவாகவும் போற்றப்படுகிறாள். ஆனால் இன்று அவள் இவ்வாறு போற்றப்படுகின்றாளா என்றால் விடை மவுனமாகத்தான் இருக்கும். இந்த மவுனத்திற்கு காரணம் என்ன என்றால் எதற்காக பெண்ணை இவ்வாறு போற்ற வேண்டும் என்ற ஆண் ஆதிக்க சமுதாயத்தின் வெளிப்பாடு தான்.

பண்டைய காலத்தில் பெண்கள் மதிக்கப்பட்டு போற்றப்பட்டனர் என்பதற்கு சான்றாக விளங்கியது பெண் ஆதிக்க சமூக வரலாறுகள். ஆனால் எப்படி இச்சமுதாயம் ஆண் ஆதிக்க சமுதாயமாக மாறியது என்பதை கவனித்தால் ஓர் உண்மை தெரிய வரும். பல நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு இடம் பெயர்ந்தாலும், பல அந்நிய நாட்டு படையெடுப்புகளால், இந்திய பெண்களின் பாதுகாப்பு பெரிய சவாலாக அமைந்தது. எனவே பெண்களை பாதுகாக்க அவர்களை வீட்டினுள் பூட்டி வைக்க துவங்கினர். பின் அதுவே மரபாகி இந்திய சமுதாயம் ஆண் ஆதிக்க சமுதாயமாக மாறியது.

பெண்களும் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ஆண்கள் இட்ட கட்டுப்பாடுகளையும் நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். இவையே பெண்ணை அடிமைப்படுத்தும் காரணியாகவும், மூடநம்பிக்கையாகவும் தொடர்ந்து பின் தொன்று தொட்டு வரும் பாரம்பரியமாகவும், கலாசாரமாகவும் மாறி விட்டது.



பாரம்பரியமும்,கலாசாரமும்


பெண்ணின் இலக்கணம், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கணவனே கண் கண்ட தெய்வம், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன், கற்பு நெறி மாறா சீதையை போல், கண்ணகி போல் போன்ற பல இலக்கணங்களை பின்பற்ற பெண்களை ஆண்கள் பழக்கி விட்டனர். பெண் என்பவள் எதை கொடுத்தாலும், அதை பாதுகாத்து பன்மடங்காக பெருக்கி தருபவள். உதாரணத்திற்கு சிறிய முதலீட்டை லட்சமாக பெருக்கி தருபவள் பெண்கள் தான்.

இதை போல ஆண்களால் வரையறுக்கப்பட்ட பெண்ணின் இலக்கணத்தை பாதுகாத்து பன்மடங்காக பெருக்கி விட்டாள், இவை அனைத்தும் பெண்களை அடிமைப்படுத்தும் காரணிகள் என்று அறியாமலேயே. இன்று இந்த வரையறுக்கப்பட்ட பாரம்பரியத்தை எந்த பெண்ணாவது மீறினால் அந்த பெண்ணை விமர்சிக்கவும், பழிக்கவும் செய்பவள் முதலில் மற்றொரு பெண்ணாகவே இருக்கிறாள். இதுவே ஆண் ஆதிக்க சமுதாயம் வளர துாண்டுகோலாக மாறிவிட்டது.


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 23, 2022 2:25 pm

பெண்ணியம்



பெண்கள் மூட, பாரம்பரிய நம்பிக்கைகளுக்கும், கலாசார நம்பிக்கைகளுக்கும் அடிமைப்பட்டு ஆணின் நிழலாகவும், கருவியாகவும் கைப்பாவையாகவும், வீட்டையும், குழந்தைகளையும் காக்கும் ஒரு இயந்திரமாகவும் செயல்பட்ட வந்த நிலை கண்டு வெகுண்டு எழுந்த பெண்ணியவாதிகள் ராஜாராம் மோகன்ராய், மகாத்மா காந்தி, பாரதியார், பாரதிதாசன் போன்ற ஆண்களே. ராஜாராம் மோகன்ராய் சதி (உடன்கட்டை ஏறுதல்) என்ற சமூக கொடுமையை ஒழிக்க துணைபுரிந்து பெண்ணை காப்பாறிய பொழுதும், பெண்ணின் உரிமைகள் அவளுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. ஆனால் இந்திய சுதந்திர போரட்டத்தின் போது மற்ற பெண்ணியவாதிகள் பெண்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களின் உரிமைக்காக மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என குரல் கொடுக்க வைத்தது ஜான்சிராணி என்ற பெண்மகளின் வீரதீரச் செயலே.



ஆணுக்கு நிகராக



பெண்ணியம் என்பது சாதாரண வீட்டு பெண்களுக்கு ஒரு மடை திறந்த கதவாக செயல்பட்ட போதும், இன்றும் பெண்கள் முழுமையாக பெண் அடிமைத்தனத்திலிருந்து விடுபடவில்லை என்பதே உண்மை. இதற்கு காரணம் இரு விதமான பெண்ணியம் நம் சமூகத்தில் உள்ளது தான். ஒன்று பெண்ணிற்கு கல்வி, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறும் போது மறுபடியும் ஆண் இனத்தை காக்கவும், இந்த நாட்டை காக்கவும் உதவும் ஓர் உத்தியாகவே பெண்கள் காணப்படுகிறார்கள். எனவே கல்வியும், வேலைவாய்ப்பும் மட்டுமே பெண்களுக்கு போதுமா, அவர்களை ஆணுக்கு நிகராக நிறுத்தி விடுமா என்றால் இவை மட்டும் போதாது என்ற உண்மை புலப்படும்.

ஏனெனில் இன்றும் பெண்கள் பழைய நம்பிக்கைகளையும் ஆண்களால் வரையறுக்கப்பட்ட பெண்ணின் இலக்கணத்தையும் உடும்பு பிடியென பிடித்து வைத்திருக்கிறாள். மற்ற பெண்களை பழிக்கிறாள். துன்புறுத்தவும் செய்கிறாள். சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பதன் அர்த்தம் என்ன என்றால் தீய செயல்களை செய்வதற்கு அச்சப்பட வேண்டும். தெரியாமல் தீய செயல்களை செய்து விட்டால் அதைக்கண்டு நாணப்பட வேண்டும். குழந்தையை போன்ற நல்ல மனம் படைத்தவராக இருக்கவேண்டும் என்பதே மடம் என்பதன் பொருள். தீய செயல்களை பற்றி பேசவே வெறுப்பு கொள்ள வேண்டும் என்பதே பயிர்ப்பு என்பதன் அர்த்தம். இப்பொழுது புரியும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பது பெண்ணுக்கு மட்டும் அல்ல ஆணுக்கும் ஏன் மனித இனத்திற்கே பொருந்தும் ஒரு பஞ்ச் என்று.


தனிமனித ஒழுக்கம்


கற்பு என்பதை இருபாலருக்கும் பொதுவாக வைப்போம் என்று பாரதியார் கூறிய கூற்றிலிருந்து விளங்கும் ஓர் உயரிய கருத்து என்ன என்றால் கற்பு என்று கூறி பெண்ணை இழிவுபடுத்தாதே பெண்ணின் ஆளுமையை தடுக்க நினைக்காதே என்பதே. தனி மனித ஒழுக்கம் என்பது இரு பாலருக்கும் தேவை. இங்கு அனைவரும் வரலாற்றின் உண்மையை உணர வேண்டும். கற்பு நெறி சோதிக்கப்பட்ட பொழுது சீதை தீக்குளித்தாள்.

ஆனால் பின்னாளில் மறுபடியும் அவளின் கற்பு நெறி விமர்சனத்திற்கு வந்த பொழுது ராமனை பிரிந்து சென்றாள். இது ஏன் தெரியுமா தன் வயிற்றில் வளரும் குழந்தைகளின் உயிரைக்காக்க எண்ணி. இந்த தாய்மை உணர்வை போற்ற வேண்டாமா. சீதை கூறிய பெண்ணியத்தை உணர வேண்டும் அல்லவா. பெண்களை பழிப்பதை நிறுத்தி பெண்ணை பெண்மையை போற்றுவோம். இப்படி பெண்ணியம் பேசிக் கொண்டு ஆண்களை பெண்களின் வாழ்க்கையிலிருந்து பிரித்து விட முடியுமா.



சிவனும் சக்தியும்



சிவனும் சக்தியும் சேர்ந்தால் தான் இந்த பிரபஞ்சம் இயங்கும். எனவே ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் மற்றொருவரின் ஆற்றலை முக்கியத்துவத்தை தங்களது வாழ்க்கையில் உணர வேண்டும். கணவன், தன் மனைவிக்கு ஒரு கணவனின் கடமையை தவிர நல்ல தந்தையாகவும், சகோதரனாகவும் மகனாகவும் நண்பனாகவும் மாறும் பொது அந்த பெண்ணின் வாழ்வு மலர்கிறது; மணம் வீசுகிறது என்பதை ஒவ்வொரு ஆணும் புரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் தினங்களை, பெண்கள் உரிமையை பற்றி மட்டும் பேசும் தினமாக அல்லாமல், பெண்ணின் சக்தியை ஆண்கள் போற்றும் தினமாகவும், பெண்களை தங்களுக்கு நிகராக நிலை நிறுத்தும் தினமாகவும் கொண்டாடினால் ஆணும், பெண்ணும் சரிநிகர் சமமாக சிங்க நடை போட்டு சிகரத்தை அடைவாளர்கள் என்பது உறுதி.

தன்னை அடிமைப்படுத்தும் காரணிகளை உடைத்து இன்று தன்னையும் ஒரு தனிமனிதனாக ஆசிரியராக, மருத்துவராக, பஸ், விமானம், ஆட்டோ ஓட்டுனராக, வழக்கறிஞர்களாக, நீதிபதியாக, எழுத்தாளராக, மேலும் பல துறைகளில் வெற்றி படிக்கட்டுகளில் பணித்து கொண்டு இருப்பவராக இருக்கும் அத்தனை சிங்கப்பெண்களையும் கைத்தட்டி பாராட்டுவோம்.

-முனைவர் எ.ஆர்.உமா, பேராசிரியர் , சரஸ்வதி நாராயணன் கல்லுாரிமதுரை
நன்றி-தினமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 23, 2022 2:26 pm

பெண் என்பவள், வளர்ச்சிக்கு வேண்டிய
அகப் பண்புகளை பேணும் இயற்கைச் செல்வம்
-
-காபெட்
-----------------------------------
-
தாய், தாரம், தோழி, சகோதரி என பல பரிமாணம்
எடுப்பவள் பெண்.

அதே வேளையில் வலிமைக்கும் மென்மைக்கும்
எடுத்துக்காட்டாக இருப்பவள்.
-
------------------------------------
-
உயிர் சுமந்தவள் தாயாகிறாள்
பாசம் சுமந்தவள் தங்கையாகிறாள்
உணர்வு புரிந்தவள் தோழியாகிறாள்
நேசம் புரிந்தவள் மனைவியாகிறாள்
பெண்ணினிறி அமையாது உலகு!
-
----------------------------------


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 23, 2022 9:49 pm

உயிர் சுமந்தவள் தாயாகிறாள்
பாசம் சுமந்தவள் தங்கையாகிறாள்
உணர்வு புரிந்தவள் தோழியாகிறாள்
நேசம் புரிந்தவள் மனைவியாகிறாள்
பெண் இன்றி அமையாது உலகு!


போற்றுவோம் பெண்களை 3838410834 போற்றுவோம் பெண்களை 3838410834 போற்றுவோம் பெண்களை 3838410834

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 24, 2022 8:29 am

போற்றுவோம் பெண்களை 103459460 போற்றுவோம் பெண்களை 3838410834



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 24, 2022 10:36 am

“பாரம்பரியத்தை எந்த பெண்ணாவது மீறினால் அந்த பெண்ணை விமர்சிக்கவும், பழிக்கவும் செய்பவள் முதலில் மற்றொரு பெண்ணாகவே இருக்கிறாள். இதுவே ஆண் ஆதிக்க சமுதாயம் வளர துாண்டுகோலாக மாறிவிட்டது.”-

பெண்ணியம் பேசுவோரே புரிந்துகொள்ளுங்கள்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக