புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_m10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10 
31 Posts - 46%
heezulia
காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_m10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10 
29 Posts - 43%
mohamed nizamudeen
காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_m10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10 
2 Posts - 3%
jairam
காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_m10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10 
2 Posts - 3%
Manimegala
காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_m10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_m10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10 
1 Post - 1%
சிவா
காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_m10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_m10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10 
159 Posts - 51%
ayyasamy ram
காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_m10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10 
114 Posts - 37%
mohamed nizamudeen
காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_m10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10 
13 Posts - 4%
prajai
காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_m10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10 
9 Posts - 3%
jairam
காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_m10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10 
4 Posts - 1%
Jenila
காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_m10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10 
4 Posts - 1%
Rutu
காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_m10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10 
3 Posts - 1%
Baarushree
காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_m10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10 
2 Posts - 1%
Barushree
காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_m10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_m10காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 16, 2022 10:47 am

காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Vikatan%2F2019-10%2Fb098d225-8bfb-45ef-86b2-95df42df2c84%2Fmahatma_gandhi_master_mediator_1050x700.jpg?rect=0%2C0%2C1050%2C591&auto=format%2Ccompress&w=700&dpr=1
-
1. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி குஜராத் பகுதியின் போர்பந்தரில், அக்டோபர் 02, 1869 அன்று பிறந்தார்.

2. அவரின் தந்தை கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி போர்பந்தர் பகுதியின் தலைமை அமைச்சராக இருந்தவர்.

3. காந்தி, அவரது வீட்டில் இறுதியாகப் பிறந்த குழந்தை. அவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர்.

4. ராஜ்கோட்டில் மேல்நிலைக் கல்வி பயின்றபோது, காந்தி தன் சிறுவயதிலேயே நிச்சயிக்கப்பட்ட, கஸ்தூர்பாவை மணந்துகொண்டார்.

5. மோகன்தாஸ் காந்தியின் 16-வது வயதில், அவரின் தந்தை கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி மரணமடைந்தார்.
-
காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Vikatan%2F2019-10%2Faecf35c7-7270-452b-81b9-e78dc4bfd7ce%2F381527_6.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-
6. தனது 19-வது வயதில், கல்வி பயில்வதற்காக இங்கிலாந்துக்குப் பயணப்பட்டார் காந்தி.

7. காந்தி முதன்முதலாகப் பகவத் கீதை புத்தகத்தைப் படித்தபோது, அவருக்கு வயது 20. பகவத் கீதை காந்தியின் மனதை ஈர்த்த புத்தகங்களுள் முதன்மையானது.

8. இங்கிலாந்து சென்று மூன்று ஆண்டுகள் கழித்து, இந்தியா திரும்பினார் காந்தி. பம்பாய் (மும்பை) உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்ற முயன்று, சிறிது காலம் சட்ட வரைவாளராகப் பணியாற்றினார்.

9. 1893-ம் ஆண்டு, இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்குப் பயணப்பட்டார் காந்தி.

10. ரயில் பயணத்தின்போது, நிறம் காரணமாக அவமானப்படுத்தப்பட்டார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் தலைவிரித்தாடிய நிறவெறிக்கு எதிராக, நாட்டல் இந்திய காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்தார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 16, 2022 10:51 am

காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Vikatan%2F2019-10%2Fccaf2650-9d67-4302-af8b-1fe350c5634a%2F1.JPG?auto=format%2Ccompress&w=700&dpr=1
11. தென்னாப்பிரிக்காவின் நாட்டல் பகுதியின் உச்ச நீதிமன்றத்தில்
பதிவுசெய்த முதல் இந்திய வழக்கறிஞர் காந்தி. தென்னாப்பிரிக்கா
வாழ் இந்தியர்களின் பிரச்னைகளுக்குக் குரல் கொடுத்தார்.

12. தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களின் வாழ்விடங்கள், வர்த்தகம்
ஆகியவற்றை மறுக்கும் சட்டங்களை எதிர்த்து, தொடர்ந்து தாதாபாய்
நவ்ரோஜிக்குக் கடிதம் எழுதினார் காந்தி.

13. 1902-ம் ஆண்டு, மீண்டும் இந்தியா திரும்பிய காந்தி சில நாள்கள்
கல்கத்தாவில் (கொல்கத்தா) கோகலேவுடன் தங்கினார். பிறகு, பம்பாய்
நீதிமன்றத்தில் வழக்காடுவதைத் தொடங்கினார்.
எனினும், தென்னாப்பிரிக்காவில் அவர் தொடங்கிய பணி அவரை
மீண்டும் அழைத்தது.

14. தென்னாப்பிரிக்காவின் ட்ரான்ஸ்வால் பகுதியில், ஆசியர்கள்
தங்கள் கைரேகையைப் பதிவு செய்து, அடையாள அட்டை பெற்றால்
மட்டுமே வாழ முடியும் என்ற சட்டம் உருவாக்கப்பட்டது. அதைக்
கண்டித்து, டர்பன் நகரில் போராட்டம் நடத்தினார் காந்தி.

15. தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பெர்க் நகரில் ப்ளேக் நோய்
பரவியபோது, 'ஆரோக்கியத்துக்கான வழிகாட்டி' என்ற தலைப்பில்,
தனது உணவுப்பழக்கம் குறித்து புத்தகம் எழுதினார் காந்தி.

16. 1905-ம் ஆண்டு, பிரிட்டிஷ் அரசு வங்காளப் பிரிவினையை
முன்வைத்தது. அதைக் கண்டித்த காந்தி, பிரிட்டிஷ் பொருள்களைப்
புறக்கணிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.

17. 1906-ம் ஆண்டு, தன் அண்ணன் லக்‌ஷ்மிதாஸ் காந்திக்குக்
கடிதம் எழுதினார் காந்தி. அதில், தனக்கு உலகத்தின் பொருள்கள் மீது
ஆசை இல்லை என்று குறிப்பிட்டார்.

18. காந்தி ஆசியர்களுக்கான தனிச்சட்டத்தைக் கண்டித்து, லண்டனில்
பொதுக்கூட்டம் நடத்தினார். அதில், பல இந்தியர்கள் கலந்துகொண்டனர்.

19. ஆசியர்களுக்கான தனிச்சட்டம் ட்ரான்ஸ்வால் நாடாளுமன்றத்தில்
அமல்படுத்தப்பட்டது. காந்தி அதைக் கண்டித்து, அமைதி வழியில்
போராட்டங்கள் நடத்தினார். தனது போராட்ட வழிமுறைக்கு
'சத்தியாகிரகம்' என்று பெயர் சூட்டினார். போராட்டக் கூட்டங்களில்
பதிவுச் சான்றிதழ்கள் கொளுத்தப்பட்டன. இந்தியர்கள் தங்கள்
எதிர்ப்பைப் பல்வேறு அமைதியான வழிகளில் வெளிப்படுத்தினர்.

20. ட்ரான்ஸ்வால் பகுதியைவிட்டு வெளியேறாததற்காக, காந்திக்கு
2 மாதங்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில்
அடைக்கப்பட்டார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 16, 2022 10:53 am

காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Vikatan%2F2019-10%2Fa6c6f454-56c5-45d0-95e5-8b143cec2582%2F2.JPG?auto=format%2Ccompress&w=700&dpr=1
21. 2 மாதங்களுக்குப் பிறகு, சிறையிலிருந்து காந்தி விடுதலை
ஆனபோது, இந்திய தேசிய காங்கிரஸ், தென்னாப்பிரிக்காவாழ்
இந்தியர்களுக்காகத் தீர்மானம் நிறைவேற்றியது.

22. சிறையில் இருந்து விடுதலைபெற்ற ஒரு மாதத்தில், காந்தியிடம்
ஆசியர்களுக்கான பதிவுச் சான்றிதழ் இல்லை என்பதால் மீண்டும்
கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.

23. 'தென்னாப்பிரிக்காவாழ் இந்தியர்கள், இறுதிப் போராட்டத்துக்குத்
தயாராக வேண்டும்!' எனப் பத்திரிகைகளில் எழுதினார் காந்தி.
மூன்று மாதம் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.

24. சிறையிலிருந்து விடுதலையான பிறகு, இங்கிலாந்துக்குச் சென்று,
பிரிட்டிஷ் அரசோடு ஆசியர்களுக்கான தனிச்சட்டம் குறித்து பேச்சு
வார்த்தை நடத்தினார் காந்தி.

25. 5 மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் தென்னாப்பிரிக்கா சென்ற
காந்திக்கு, தென்னாப்பிரிக்காவின் பிரிட்டிஷ் மார்ஷல் ஸ்மட்ஸுடன்
பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது.

26. இந்தியர்கள் தங்கள் அமைதிப் போராட்டத்தைக் கைவிட்டால்,
அவர்களது வேண்டுகோள் நிறைவேற்றப்படும் என ஸ்மட்ஸ் காந்திக்கு
உறுதியளித்தார். போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆசியர்களுக்கான
தனிச்சட்டமும் கைவிடப்பட்டது.

27. கோகலேவைத் தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம்
அழைத்தார் காந்தி. இருவரும், தென்னாப்பிரிக்காவின் பல்வேறு
பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

28. 1912-ம் ஆண்டு, ஐரோப்பிய உடைகளையும், பால் உண்பதையும்
கைவிட்டார் காந்தி. பச்சையான, உலர்ந்த பழங்களை மட்டுமே
உணவாகக் கொள்ளத் தொடங்கினார்.

29. இந்தியா திரும்புவதற்கான முயற்சியில் காந்தி இறங்கிய போது,
தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்கள் திருமணம் செய்து
கொள்வது சட்டத்துக்குப் புறம்பானது என அரசு அறிவித்தது.

30. மீண்டும் அமைதிவழிப் போராட்டத்தைத் தொடங்கினார் காந்தி.
போராட்டத்தில் அவரின் மனைவி கஸ்தூர்பாவும் இணைந்துகொண்டார்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 16, 2022 11:45 am

பொதுவாக வருடத்தில் இருமுறை தானே இந்தியர்கள் மகாத்மாவை நினைவு படுத்திக்கொள்வது வழக்கம். இன்று ஏனோ புன்னகை புன்னகை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 16, 2022 12:39 pm

T.N.Balasubramanian wrote: பொதுவாக வருடத்தில் இருமுறை தானே இந்தியர்கள் மகாத்மாவை நினைவு படுத்திக்கொள்வது வழக்கம். இன்று ஏனோ புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1359424
-


இணையத்தில் உலாவும்போது, இந்த சிறப்பு பதிவு
கண்ணில் பட்டது...விகடனில் அக்டோபர் 2 ல் 2019 ல்
பதிவிடப்பட்டிருந்தது.


-
அரிய புகைப்படங்களுடன் 150 தகவல்கள் உள்ளன...
இளைய தலைமுறையினர் படித்து பயன்பெறுவர்...!
-
மீதி பகுதிகளையும் நாளை பதிகிறேன்..
-
காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு NzMNKht


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 18, 2022 6:17 pm

காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Vikatan%2F2019-10%2F17db5464-4f04-4506-b7df-565c54fbd779%2F3.JPG?auto=format%2Ccompress&w=700&dpr=1

31. இந்தியர்களின் திருமணம், இந்தியத் தொழிலாளர்கள் மீதான '3 பவுண்ட்' வரிவிதிப்பு ஆகியவற்றுக்கு எதிராகப் பேரணி தொடங்கினார் காந்தி.

32. வரிவிதிப்பு திரும்பப் பெறப்படும் வரை, காந்தி நாள் ஒன்றுக்கு ஒருவேளை மட்டுமே உணவு உண்ணப் போவதாக அறிவித்தார். பேரணியில் பல்வேறு இடங்களில் கைதுசெய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார்.

33. வால்க்ரஸ்ட் நகரத்தில் கைதுசெய்யப்பட்டு, மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை பெற்ற காந்தி, ஒரு மாதத்தில் பிணையில் விடுதலையானார்.

34. மீண்டும் ஸ்மட்ஸுடன் சந்திப்பு நடத்தி, போராட்டத்தைக் கைவிட்டார். இந்தியர்கள் மீதான வரிவிதிப்பு, திருமணச் சட்டம் ஆகியன தளர்த்தப்படுகிறது.

35. தென்னாப்பிரிக்காவிலிருந்து லண்டனுக்குப் பயணமானார் காந்தி. லண்டனில் இந்தியத் தன்னார்வலர் படையைத் தோற்றுவித்தார். வன்முறைப் போராட்டங்களைவிட அறவழிப் போராட்டங்கள்தான் தேவை எனத் தன்னார்வலர்களுக்குப் போதித்தார்.

36. 1915-ம் ஆண்டு, இந்தியா திரும்பினார் காந்தி. பிரிட்டிஷாரின் போர்களில் ஆம்புலன்ஸ் சேவை செய்து உதவியதற்காக, பிரிட்டிஷ் அரசின் 'கைசர் இ ஹிந்த்' என்ற உயரிய விருது காந்திக்கு அளிக்கப்படுகிறது.

37. அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றங்கரையோரத்தில், 'சத்தியாகிரக ஆசிரமம்' தொடங்கினார் காந்தி. இது பிற்காலத்தில், 'சபர்மதி ஆசிரமம்' என்றழைக்கப்பட்டது.

38. இந்தியா, பர்மா முழுவதும் மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டிகளில் பயணம் செய்தார் காந்தி.

39. ராட்டைச் சுற்றி, கைகளால் நெய்யப்படும் தறியைப் பெரியளவில் நாடு முழுவதும் செய்யத் தொடங்கவேண்டும் எனப் பேசினார் காந்தி.

40. பீகார் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காகக் குரல் தந்தார். கைதுசெய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார். விவசாயிகளின் பிரச்னையைப் பேச சிறப்புப் பிரதிநிதியாக, பீகார் அரசு காந்தியைத் தேர்ந்தெடுத்தது.

41. அகமதாபாத் நெசவாளர்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டார். பம்பாய் மாகாணத்தின் கைரா பகுதியில் பயிர்க் காப்பீடு வேண்டி, அறவழிப் போராட்டத்தைத் தொடங்கினார்.

42. 1918-ம் ஆண்டு, முதல் உலகப் போருக்காக ராணுவ வீரர்களைத் திரட்டினார். வைசிராய் நடத்திய மாநாட்டில், இந்துஸ்தானி மொழியில் தனது உரையைப் பதிவு செய்தார் காந்தி.

43. 1919-ம் ஆண்டு, ரௌலட் சட்டத்தை எதிர்த்து அமைதிப் போராட்டத்தைத் தொடங்கினார்.

44. அனைத்திந்திய சத்தியாகிரகப் போராட்டம், காந்தியின் அறைகூவலை ஏற்று நடத்தப்பட்டது.

45. பஞ்சாப் மாகாணத்துக்குள் தடையை மீறி நுழைய முயன்றதற்காக, டெல்லியில் காந்தியைக் கைது செய்தது ஆங்கிலேய அரசு. பல்வேறு இடங்களில் வன்முறைகள் வெடித்தன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 18, 2022 6:18 pm

காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Vikatan%2F2019-10%2F88895852-13f7-4e0d-aa57-9273c052ac51%2Fmahatagandhi_1480578390_618x347.webp?auto=format%2Ccompress&w=700&dpr=1
-
46. 1919-ம் ஆண்டு, ஏப்ரல் 13 அன்று, ஜாலியன்வாலாபாக்கில் துப்பாக்கிச்சூடு நடந்தது. அதைக் கண்டித்து, சபர்மதி ஆசிரமத்தில் 3 நாள்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார் காந்தி. மேலும், தனது சத்தியாகிரகப் போராட்டத்தை 'இமாலயப் பிழை' என்று சுட்டினார்.

47. குஜராத்தி மொழியில் 'நவஜீவன்', ஆங்கில மொழியில் 'யங் இந்தியா' ஆகிய பத்திரிகைகளுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

48. டெல்லியில் நடைபெற்ற அனைத்திந்திய கிலாஃபத் மாநாட்டிற்கு, தலைமையேற்றார் காந்தி.

49. காங்கிரஸ் கட்சி முன்மொழிந்த மாண்டேகு செம்ஸ்போர்டு தேர்தல் சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் தெரிவித்தார் காந்தி.

50. 1920-ம் ஆண்டு, ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் பற்றிய ஹண்டர் அறிக்கை மீது அதிருப்தியை வெளிப்படுத்தி, பிரிட்டிஷ் அரசுக்குத் தமது கைசர் இ ஹிந்த் விருதைத் திருப்பியளித்தார்.

51. கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி, காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தைப் போராட்ட வடிவமாக ஏற்றுக்கொண்டது.

52. 1921-ம் ஆண்டு, இந்தியா முழுவதும் பயணித்து காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் சேர்க்கவும், திலக் விடுதலை நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி பெறுவதற்கும், நாடு முழுவதும் 20 லட்சம் ராட்டைகள் பயன்படுத்தவும் முயற்சிகள் மேற்கொண்டார்.

53. பம்பாயில் அந்நிய நாட்டு ஆடையைக் கொளுத்தி, அந்நியப் பொருள்களைப் புறக்கணிக்க மக்களுக்கு அழைப்பு விடுத்தார் காந்தி.

54. 1922-ம் ஆண்டு, சௌரி சௌரா பகுதியில் போராட்டக்காரர்கள் மீது ஆங்கிலேய அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து 5 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

55. ஒரு மாதம் கழித்து, சபர்மதி ஆசிரமத்தில் காந்தி தேசத் துரோகக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார். அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.

56. ஏறத்தாழ 20 மாதங்கள் கழித்து, பூனா மருத்துவமனையில் காந்திக்கு அப்பெண்டிக்ஸ் அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. அதோடு விடுதலையானார்.

57. செப்டம்பர் 18, 1924 அன்று இந்து முஸ்லிம் ஒற்றுமை வேண்டி, 21 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார் காந்தி.

58. 1925-ம் ஆண்டு, நவம்பர் மாதம் ஆசிரம ஊழியர்களின் தவறான நடத்தையைக் கண்டித்து, 7 நாள்கள் கடும் விரதம் மேற்கொண்டார். மேலும், அந்தக் காலகட்டத்தில் தனது சுயசரிதையைத் தொடங்கினார்.

59. 1928-ம் ஆண்டு, காங்கிரஸ் கூட்டத்தில் இந்தியாவுக்கு 1929-ம் ஆண்டுக்குள் டொமினியன் அந்தஸ்து வழங்கப்படாவிட்டால், முழுச்சுதந்திரம் வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினார் காந்தி.

60. 1929-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் கூடிய காங்கிரஸ் கூட்டத்தில், இந்தியாவுக்குப் பூரண விடுதலை வேண்டும் எனப் பிரகடனப்படுத்தினார் காந்தி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 18, 2022 6:19 pm

காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Vikatan%2F2019-10%2F06a7ee5d-8ee4-47b9-8475-fa1338c5ec63%2FGandhi_Jail.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-
61. 1930-ம் ஆண்டு, உப்பு மீது வரி விதிக்கப்படுகிறது. அதனைக் கண்டித்து, பின்வாங்கக் கோரி, வைசிராய்க்குக் கடிதம் எழுதுவதோடு, எச்சரிக்கை விடுத்தார் காந்தி.

62. மார்ச் 12, 1930 அன்று, குஜராத் அகமதாபாத்திலிருந்து, தண்டி வரை 78 சத்தியாகிரகிகளுடன் நடைப்பயணம் மேற்கொண்டு ஏப்ரல் 6 அன்று, பொதுமக்களுக்கு உப்பு விநியோகித்துப் போராட்டம் நடத்தினார்.

63. மே 05, 1930 அன்று, காந்தி கைதுசெய்யப்பட்டு, எந்த விசாரணையுமின்றி சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியா முழுவதும் வேலை நிறுத்தம் நடந்தது; அந்த ஆண்டின் முடிவில் ஏறத்தாழ 1 லட்சம் பேர் சிறைகளை நிரப்பினர்.

64. ஜனவரி 26, 1931 அன்று, சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் காந்தி.

65. காந்தி - இர்வின் ஒப்பந்தத்திற்காக வைசிராயுடன் பலமுறை சந்திப்பில் ஈடுபட்டார் காந்தி.

66. ஆகஸ்ட் 29, 1931 அன்று, வட்டமேஜை மாநாட்டிற்காக இந்தியப் பிரதிநிதியாக லண்டன் சென்றார் காந்தி.

67. இந்தியா திரும்பிய காந்தி, 1932-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

68. சிறையில் இருந்தபோதும், அதே ஆண்டு, செப்டம்பர் மாதம், தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதி தரப்படுவதைக் கண்டித்து சாகும்வரை உண்ணாவிரதம் என அறிவித்தார் காந்தி.

69. ஒரு வாரம் கழித்து, ஆங்கிலேய அரசு காந்தியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது. காந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

70. 1933-ஆம் ஆண்டு, 'ஹரிஜன்' என்ற இதழை ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தொடங்கினார் காந்தி.

71. 21 நாள்கள் உண்ணாவிரதம் இருந்ததால், 1933-ம் ஆண்டு, மே 8 அன்று காந்தி விடுதலை செய்யப்பட்டார்.

72. ஒத்துழையாமை இயக்கத்தை 6 வாரங்கள் ஒத்தி வைப்பதாகவும், ஆங்கிலேய அரசு பல்வேறு சட்டங்களை அதற்குள் பின்வாங்க வேண்டுமென்றும், காந்தி அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

73. அகமதாபாத்தில் இருந்து ராஸ் கிராமம் வரை, 33 போராட்டக்காரர்களுடன் ஒத்துழையாமை இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்கப் போவதாக அறிவித்தார் காந்தி. அதனால் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.

74. விடுதலை செய்யப்பட்ட பிறகு, தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றத்திற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்கினார் காந்தி.

75. 1934-ம் ஆண்டு, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், கிராம முன்னேற்றம், தாழ்த்தப்பட்டவர்கள் நலன் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்போவதாகவும் அறிவித்தார் காந்தி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 18, 2022 6:21 pm

காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Vikatan%2F2019-10%2F1e12c77e-9870-4b59-b28f-40a5c2f554cd%2F5.JPG?auto=format%2Ccompress&w=700&dpr=1
-
76. 1936-ம் ஆண்டு, வார்தா பகுதியிலுள்ள சேவாகிராம் என்ற ஊரில் குடியேறினார் காந்தி.

77. 1939-ஆம் ஆண்டு, நிர்வாகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளக் கோரி, அரசைக் கண்டித்து உண்ணாவிரதம் தொடங்கினார் காந்தி. வைசிராய் தலையிட்ட பிறகு, உண்ணாவிரதம் நான்கு நாள்கள் கழித்து, முடிவுக்கு வந்தது.

78. 1941-ம் ஆண்டு, காங்கிரஸ் செயற்குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்து நீங்குவதாக அறிவித்தார் காந்தி.

79.1942-ம் ஆண்டு, மே மாதம் பிரிட்டிஷ் அரசிடம் இந்தியாவை விட்டு வெளியேறக் கோரி உத்தரவிட்டார் காந்தி.

80. பம்பாயில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்று, 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தைத் தொடங்கினார்.

81. பூனாவில் கைதுசெய்யப்பட்ட காந்தி, அகா கானின் அரண்மனையில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.

82. காந்தியின் தனி உதவியாளார் மகாதேவ் தேசாய், அகா கானின் அரண்மனையில் மரணமடைந்தார்.

83. தொடர்ந்து வைசிராய், அரசு அதிகாரிகள் ஆகியோரோடு கடிதத் தொடர்பிலே இருந்தார் காந்தி.

84. அகா கானின் அரண்மனையில் 21 நாள்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார் காந்தி.

85. 1944-ம் ஆண்டு, பிப்ரவரி 22 அன்று, அகா கானின் அரண்மனையில் காந்தியின் மனைவி கஸ்தூர்பா மரணமடைந்தார்.

86. மே 06, 1944 அன்று, காந்தி நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டார்.

87. பாகிஸ்தான் உருவாவதைப் பற்றி, முகமது அலி ஜின்னாவுடன் பல நாள்கள் ஆலோசனை நடத்தினார் காந்தி.

88. 1944-ம் ஆண்டு, தனது பிறந்தநாள் அன்று, கஸ்தூர்பா நினைவாக 1.1 கோடி ரூபாய் காந்திக்கு வழங்கப்பட்டது.

89. 1945-ம் ஆண்டு, ஜெர்மனி, ஜப்பான் நாடுகள் அமைதி நிலைக்குத் திரும்ப வேண்டும் எனவும், இந்தியா சுதந்திரம் அடையவும், சமத்துவம் பெறவும் வேண்டும் எனபவும் பேசினார் காந்தி.

90. காந்தி 1945-ம் ஆண்டின் இறுதியில் வங்காளம், அஸ்ஸாம் ஆகிய பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Vikatan%2F2019-10%2Fe7c7f9db-82d0-415b-956d-9680fbd7b712%2F7.JPG?auto=format%2Ccompress&w=700&dpr=1

91. 1946-ம் ஆண்டு, தென்னிந்தியா வந்த காந்தி தீண்டாமையைக் கண்டித்தும், இந்துஸ்தானி மொழிக்காகவும் பிரசாரம் நடத்தினார்.

92. டெல்லியில் அமைச்சரவைக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார் காந்தி.

93. ஆட்சிக்கான திட்டத்தை பிரிட்டிஷ் அரசே வடிவமைக்கக் கோரி, பரிந்துரை செய்தார் காந்தி.

94. இரண்டாம் உலகப் போரில், பிரிட்டிஷ் கூட்டணி நாடுகள் பெற்ற வெற்றியைக் கொண்டாட மறுத்தார் காந்தி.

95. ஜூன் 16, 1946 அன்று, காந்தியைச் சந்தித்த வைசிராய் மத்தியில் பல்வேறு அரசுகளின் கூட்டாட்சியை முன்வைத்தார்.

96. அமைச்சரவைப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. வைசிராய், தற்காலிக அரசு உருவாக வேண்டும் என காந்தியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

97. காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றார் காந்தி. தற்காலிக அரசு உருவாக்க வேண்டாம் எனவும், அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட வேண்டும் எனவும் காந்தி கோரிக்கை விடுத்தார்.

98. பம்பாய் சென்ற காந்தி, அங்கு நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் தலைமையேற்றார். காங்கிரஸ் கட்சியின் செயல்களால் அதிருப்தியுற்ற ஜின்னா, 'நேரடி நடவடிக்கை' நிகழ்த்தப்படும் என எச்சரிக்கை செய்தார்.

99. ஆகஸ்ட் 12, 1946 அன்று, வைசிராய் காங்கிரஸ் கட்சியைத் தற்காலிக அரசு அமைக்க அழைத்தார்.

100. 1946-ம் ஆண்டு, ஆகஸ்ட் 16 முதல் 18 வரை, கல்கத்தா முழுவதும் மதக்கலவரங்கள் வெடித்தன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 18, 2022 6:22 pm

காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு Vikatan%2F2019-10%2Fc5086f50-94c5-4a53-abc0-56f471743f10%2F9.JPG?auto=format%2Ccompress&w=700&dpr=1
101. காந்தி வங்காளத்தில் நிகழ்ந்த பயங்கரத்தைச் சுட்டிக்காட்டி, பிரிட்டிஷ் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

102. செப்டம்பர் 04, 1946 அன்று, தற்காலிக அரசு அமைக்கப்பட்டது. காந்தி வைசிராயைச் சந்தித்தார். ஜின்னா தனது 9 வேண்டுகோள்களைக் காங்கிரஸ் கட்சியிடம் அளித்தார்.

103. அக்டோபர் 10, 1946 அன்று, கிழக்கு வங்காளத்தின் நவகாளிப் பகுதியில் பெரும் மதக்கலவரம் வெடித்தது. முஸ்லிம் லீக் தற்காலிக அரசின் அங்கமாக இணைந்தது.

104. காந்தி நவகாளி பகுதிக்கு நேரில் சென்று, ஒரு மாதம் முகாமிட்டார்.

105. நவகாளியில் பேசிய காந்தி, "நான் மீண்டும் மீண்டும் பரிசோதிக்கப்படுகிறேன்" எனக் கூறினார். அங்கிருந்து கிளம்பி, ஸ்ரீராம்பூர், பீகார் ஆகிய பகுதிகளில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்று பார்வையிட்டார்.

106. டெல்லி சென்ற காந்தி, புதிய வைசிராய் மவுண்ட்பேட்டனைச் சந்தித்தார்.

107. டெல்லியில் ஆசிய நாடுகள் இடையிலான உறவுகள் குறித்த மாநாட்டில் பங்கேற்றார் காந்தி.

108. ஏப்ரல் 15, 1947 அன்று, ஜின்னாவுடன் இணைந்து மத நல்லிணக்கத்திற்காக அழைப்பு விடுத்தார் காந்தி.

109. மே 05, 1947 அன்று, ஒரு பேட்டியில் காந்தி, இந்தியப் பிரிவினை தவிர்க்க முடியாதது எனப் பலரும் கூறுவதைத் திட்டவட்டமாக மறுத்தார்.

110. இந்திய எல்லைகளைத் தீர்மானிப்பதில் பங்கேற்கப் போவதில்லை எனவும், பிரிவினைக்கு முன் அமைதி நிலவ வேண்டும் என காந்தி தெரிவித்தார்.

111. ஜூன் 02, 1947 அன்று, வைசிராய் இந்திய எல்லைகள் பற்றிய அறிக்கையைச் சமர்ப்பித்தார். காங்கிரஸ் கமிட்டி ஒப்புதல் அளித்தது. காந்தி வைசிராய்க்குக் கடிதம் எழுதி, ஜின்னாவின் கோரிக்கைகளைக் காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டும் எனக் கூறினார்.

112. ஜூன் 12, 1947 அன்று நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் உரையாற்றினார் காந்தி.

113. ஜூலை 27, 1947 அன்று, காந்தி இந்தியா முழுவதும் தனி நாடுகளாக இருந்த சிறிய நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்கள் குடிமக்களின் விருப்பத்தையேற்று நடக்க வேண்டும் என்றார்.

114. ஆகஸ்ட் 14, 1947 அன்று, பிரிட்டிஷ் அரசிடம் இருந்து சுதந்திரம் பெறுவது மகிழ்ச்சி என்றபோதிலும், பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது சோகமளிக்கிறது எனக் கூறினார் காந்தி. அதே நாளில், பாகிஸ்தான் தனி நாடாக உருவானது.

115. ஆகஸ்ட் 15, 1947 அன்று, கல்கத்தாவில் நிலவிய மத ஒற்றுமையைக் கண்ட காந்தி, மகிழ்ந்து அதனை மிகப்பெரிய அதிசயம் என வர்ணித்தார்.

116. டெல்லி சென்ற காந்தி, அங்கு மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.

117. நவம்பர் 11, 1947 அன்று, இந்திய ராணுவம் ஜுனாகத் பகுதியை வென்றதை ஆதரித்தார் காந்தி.

118. டிசம்பர் 25, 1947 அன்று, இந்தியா - பாகிஸ்தான் சமாதானத்தை விரும்பினார் காந்தி.

119. ஜனவரி 12, 1948 அன்று, டெல்லியில் நிலவிய மத மோதல்களை நிறுத்தக் கோரி, உண்ணாவிரதம் மேற்கொள்ளத் தொடங்கினார் காந்தி.

120. வைசிராய் மவுண்ட்பேட்டன், காந்தியைச் சந்தித்து உண்ணாவிரதத்தைக் கைவிடக் கோரியும், காந்தி கைவிடவில்லை.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக