புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:54

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 17:26

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:28

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:16

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 20:14

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_m10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_m10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10 
77 Posts - 43%
prajai
போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_m10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_m10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10 
6 Posts - 3%
Jenila
போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_m10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10 
2 Posts - 1%
jairam
போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_m10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_m10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_m10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10 
2 Posts - 1%
kargan86
போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_m10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_m10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_m10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_m10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_m10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10 
10 Posts - 4%
prajai
போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_m10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10 
9 Posts - 4%
Jenila
போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_m10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10 
4 Posts - 2%
Baarushree
போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_m10போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Poll_c10 
3 Posts - 1%
Rutu

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 16 Mar 2023 - 18:19

போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு? Drugs10

பள்ளிகளில் நடக்கும் அத்துமீறல்கள் தொடங்கி தெருக்களில் நடக்கும் செயின் பறிப்புச் சம்பவங்கள் வரை அனைத்துக்கும் காரணமாக இருப்பது போதைதான் என்பது இன்னொரு அதிர்ச்சி.

சந்துருவுக்கு 13 வயதில் அறிமுகமானது போதை. ஓரளவுக்கு வசதியான குடும்பம். சந்துரு நன்றாகப் படிக்கக்கூடியவன். அம்மா இறந்ததும் அப்பா இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். சந்துருவின் வாழ்க்கை சரிந்த இடம் அதுதான். அப்பாவின் பாராமுகம், சித்தியின் அடாவடியால் திணறியவனுக்கு, ‘‘இந்தக் குட்டித் ‘தலையணை'யை உதட்டுக்குக் கீழே வச்சுக்கடா மாப்பிள்ளை, எல்லாம் சரியாயிரும்' என்று ஒரு பள்ளி நண்பன் தந்த பொருள், அந்த நொடிக்கு இதமாக இருந்தது. கொஞ்சநாளில் பாக்கெட் பாக்கெட்டாக ‘தலையணை' வாங்கத் தொடங்கினான். ஒரு கட்டத்துக்குப் பிறகு தலையணை போதை அவனுக்குப் போதுமானதாக இல்லை. பீடி, சிகரெட் என்று நகர்ந்தவன் கைக்கு எளிதாக வந்து சேர்ந்தது கஞ்சா. கஞ்சாபோதை உச்சத்திலேறிய ஒரு பகலில் சித்தியைக் கொன்று விட்டு வெறிகொண்டு நின்றவன், இப்போது சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருக்கிறான்.

ரஞ்சித்தின் கதை இன்னொரு அதிர்ச்சி. அப்பா மளிகைக்கடை வைத்திருக்கிறார். 8-ம் வகுப்புக் காலத்தில் சக நண்பன் தந்த தலையணையை போதை என்றே தெரியாமல் உதட்டுக்குக் கீழே வைத்துக்கொண்டான். ஒரு கட்டத்தில் அது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலை வந்தது. பத்தாம் வகுப்பு முடிப்பதற்குள் ‘மாத்திரை' வரை வந்துவிட்டான். பிரசவக்கால வலிக்காகப் பயன்படுத்தப்படும் அந்த ‘மாத்திரை'யின் நார்மல் விலை ரூ. 1.50. போதைச் சந்தையில் 150 ரூபாய். கையில் காசில்லாத ஓர் இரவில் ஒரு மருந்தகத்தின் கதவை உடைத்து மாத்திரை திருடிய குற்றத் துக்காக இப்போது சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருக்கிறான்.

அறிக்கை சொல்லும் அபாயம்

சந்துரு, ரஞ்சித் மட்டுமல்ல, தமிழகத்தின் சிறைகள், சீர்திருத்தப்பள்ளிகளுக்கு வரும் 24 வயதுக்குட்பட்டோரில் சுமார் 80% பேர் போதைப்பொருள்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்கிறது ஆய்வு. அதுமட்டுமல்ல, தமிழகத்தில் சராசரியாக சிறுவர்கள் 9 வயதிலும் சிறுமிகள் 8 வயதிலும் புகையிலை போதைக்கு அடிமையாவதாகச் சொல்கிறது, 2019-ம் ஆண்டுக்கான gyts-4 global youth tobacco survey.

பள்ளிகளில் நடக்கும் அத்துமீறல்கள் தொடங்கி தெருக்களில் நடக்கும் செயின் பறிப்புச் சம்பவங்கள் வரை அனைத்துக்கும் காரணமாக இருப்பது போதைதான் என்பது இன்னொரு அதிர்ச்சி. போதைக்கு அடிமையான சிறுவர்கள் வெகு எளிதாக சமூகவிரோதிகள் கையில் சிக்கிவிடுகிறார்கள். போதைக்காக ஒருமுறை குற்றமிழைத்துச் சிறைக்கோ, சீர்திருத்தப் பள்ளிக்கோ செல்பவர்கள், பிற்காலத்தில் பெரும் சமூக அச்சுறுத்தலாக மாறிவிடுகிறார்கள் என்பது இன்னொரு ஆய்வு சொல்லும் விபரீதம்.

கைக்கெட்டும் தூரத்தில் போதை

ஒரு பக்கம், வீதிக்கு வீதி முளைத்திருக்கிற டாஸ்மாக் தமிழகத்தை போதைக்காடாக்க, இன்னொரு பக்கம் ‘தலையணை' எனப்படும் போதைப் பொருள், கஞ்சா, மாத்திரைகள், மெத் பவுடர்கள், ஸ்டாம்ப் எனப் பல்வேறு வடிவங்களில் போதைப்பொருள்கள் உலவு கின்றன. தடைகள், சட்டங்கள், கண்காணிப்புகள், நடவடிக்கைகள் அனைத்தையும் தாண்டி எல்லாமே சிறுவர்கள் கையில் கிடைக்கின்றன என்பதுதான் பேரவலம்.

சென்னையில், புகைவழி போதை, வாய்வழி போதை, மூக்குவழி போதை, ஊசிவழி போதையென எல்லாமே எளிதாகக் கிடைப்பதாகச் சொல்கிறார்கள், போதைக்கு எதிரான செயற்பாட்டாளர்கள்.

புகையிலைதான் gate way

‘‘பலவகைப் போதைப் பொருள்கள் இங்கே இலகுவாகக் கிடைத்தாலும் புகையிலைப் பொருள்கள்தான் போதைக்கான gate way drug. புகையிலையில் இருக்கும் நிகோடின் உடலில் படியத் தொடங்கிவிட்டால் வெகு எளிதில் சிறுவர்கள் அடிமையாகிவிடுவார்கள்...’’ என்கிறார் புகையிலைக் கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பின் தலைவர் சிறில் அலெக்ஸாண்டர்.

கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் புகையிலைப் பொருள்களை விற்பது குற்றம். ஆனால் பல பகுதிகளில் சர்வசாதாரணமாக ‘தலையணை’ எனப்படும் போதைப்பொருள் புழங்குகிறது. குறைந்த விலையில் கிடைக்கும் இதுவே இளம் தலைமுறையை போதையின் பாதைக்குத் திருப்புகிறது. மாணவர்கள் மட்டுமன்றி மாணவிகளும்கூட இதை சாதாரணமாகப் பயன்படுத்துகிறார்கள். சென்னையின் பல பள்ளிகளில் வளாகங்களிலும் கழிவறைகளிலும் இதன் கழிவு நிறைந்துகிடக்கிறது. ஆசிரியர்கள் எவ்வளவோ முயன்றும் தடுக்க முடியவில்லை.

கதாநாயகர்களே காரணம்!

‘‘சிறுவர்களைப் போதைப்பழக்கம் எப்படித் தொற்றுகிறது என்பது பற்றி நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், மூன்று விஷயங்கள் தெரியவந்தன. ஒன்று, பெற்றோர் தங்கள் தேவைக்குப் பிள்ளைகளை அனுப்பி வாங்குவது. இரண்டாவது, ‘அடிச்சுப்பாரு, ஒன்னும் ஆகாது' என்று நண்பர்கள் வழி பழகுவது. மூன்றாவது. தங்கள் கதாநாயகர்கள் வழி கற்றுக்கொள்வது. இந்த மூன்று விஷயங்களைச் சரிசெய்யாமல் போதையிலிருந்து பிள்ளைகளைக் காப்பாற்றவே முடியாது.

பள்ளி வளாகங்களில் இந்தத் தலையணை போதை சர்வசாதாரணமாக விற்கப்படுகிறது. ஆதாரபூர்வமாக நாங்கள் பலமுறை புகார் செய்திருக்கிறோம். கெடுபிடிகள் இருக்கும் நேரத்தில், சீனியர் மாணவர்கள் மொத்தமாகப் பள்ளிக்குள் வாங்கிவந்து விநியோகிக்கிறார்கள்.

இதற்குப் பழகிய மாணவர்கள் அடுத்தகட்ட மாக ஹான்ஸ், குட்கா போன்ற போதைக்குச் செல்கிறார்கள். இவை இன்னும் மோசம். தமிழகத்தில் இது சிலமாதங்களுக்கு முன்புவரை தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசு முறைப்படி இந்த விஷயத்தை அணுகாததால் மீண்டும் புழக்கத்துக்கு வரும்போலாகிவிட்டது...’’ என்கிறார் சிறில் அலெக்ஸாண்டர்.

தடை விலகியது

தமிழகத்தில் பான்பராக், குட்கா போன்ற சுவையூட்டப்பட்ட புகையிலைப் போதைப்பொருள்கள் பயன்பாடு அதிகரித்ததைத் தொடர்ந்து, 2016-ல் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் கீழ் அவை தடைசெய்யப்பட்டன. இத்துறையின் ஆணையருக்கு ஓராண்டுக்கு மட்டுமே தடை செய்யும் உரிமை இருப்பதால் ஒவ்வோராண்டும் இந்தத் தடை நீட்டிக்கப்பட்டது. இந்தத் தடையால் வெளிப்படையாக இந்தப் பொருள்களை விற்பது தடுக்கப்பட்டது.

இந்தத் தடையை எதிர்த்து உற்பத்தி நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் கீழ் இந்தப் பொருள்களைத் தடை செய்தது செல்லாது' என்று தடையை நீக்கியது. இந்த உத்தரவுக்குத் தடைகோரி உச்ச நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது தமிழக அரசு. உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. தடைக்காலத்தில் மறைத்து மறைத்து விற்பனை செய்த கடைக்காரர்கள் இனி சுதந்திரமாக விற்பார்கள்.

2002-ல் புகைபிடித்தல் மற்றும் துப்புதல் சட்டம் (Smoking and Spitting Act) கொண்டு வரப்பட்டது. சிறு திருத்தம் செய்து புகையிலைப் போதைப் பொருள்களை இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தால் முற்றிலும் அவற்றைத் தடுக்க முடியும் என்கிறார்கள் செயற்பாட்டாளர்கள். கோவாவில் இதைச் செய்திருக்கிறார்கள். தமிழகம் செய்யவில்லை.

எலெக்ட்ரானிக் சிகரெட் விபரீதம்

புகையிலைப் போதைக்கு அடிமையானவர்கள் அண்மைக்காலமாக எலெக்ட்ரானிக் சிகரெட்டுக்கு மாறியிருக்கிறார்கள். மத்திய அரசும் தமிழக அரசும் எலெக்ட்ரானிக் சிகரெட் தயாரிப்பு, விநியோகம், விற்பனைக்குத் தடை விதித்து சட்டம் இயற்றியுள்ளன. நிக்கோடின் நிரம்பியுள்ள இந்த எலெக்ட்ரானிக் சிகரெட்டை மென்பொருள் துறையில் உள்ளவர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இப்போது சர்வ சாதாரணமாக சிறுவர்கள் கைகளில் இது புழங்குகிறது. 1,000 ரூபாயிலிருந்து இது கிடைக்கிறது. ஒரு இ -சிகரெட் வாங்கினால் 1,000 பப், 2,000 பப் எனப் பயன்படுத்த முடியும். பெரிதாக வாசனை இருக்காது. தேவைப்படும்போது பயன்படுத்திவிட்டு பத்திரப்படுத்திவிட முடியும் என்பதால் நான்கைந்து பேர் சேர்ந்து வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். சென்னையில் பெட்டிக்கடைகளிலேயே இதை விற்பனை செய்வது கொடுமை.

தலையணை போதை முதல் மாத்திரை வரை

‘‘சென்னையைப் பொறுத்தவரை தற்போது டாப் சேல்ஸ் போதைப்பொருள் தலையணை தான். விலை மிகவும் குறைவு என்பதும் சிறுவர்கள் பரவலாகப் பயன்படுத்துவதுமே அதற்குக் காரணம். இது அரியானா, டெல்லியில் தயாராகி கர்நாடகம் வழியாக தமிழகம் வருகிறது. அடுத்து, பாங்கு முட்டை. கஞ்சா இலையிலிருந்து செய்யப்படும் போதைப் பொருள். ராஜஸ்தான், குஜராத் போன்ற பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு ரூபாய்க்குக் கிடைக்கும் இது, இங்கு 50 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சென்னையில் குறிப்பிட்ட பீடாக்கடைகளில் கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.

கஞ்சாவின் மிகப்பெரிய பரிவர்த்தனை மையம், ஆந்திர மாநிலம் காக்கிநாடா. அங்கிருந்து சாலை வழியாகவும் ரயில் வழியாகவும் தமிழகத்துக்குள் சப்ளையாகிறது என்று சொல்கிறா்ாகள். மிக எளிதாகவும் பரவலாகவும் கிடைப்பது ஸ்பைக் கஞ்சா. இது கஞ்சாத்தூளில் ஆட்டுப்பால், ஷூ பாலீஷ் உள்ளிட்ட சில பொருள்களைச் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறதாம். இதுதான் லோ காஸ்ட் கஞ்சா. ஒரு பாக்கெட் 200 ரூபாய் என்கிறார்கள். கிரீன், இமாலயன் இடுக்கி கோல்டு, சாம்ராட், சட்டைவா எனப் பல தரங்களில், விலைகளில் கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.

காக்கிநாடாவிலிருந்து சென்னை டீலர்களுக்கு வரும் கஞ்சா, பாக்கெட் போடப்பட்டு, ‘பார்ட்டி'கள் வழியாக ‘பையர்' கைகளுக்குச் செல்லுமாம்.

மூன்றாவது, மாத்திரைகள். பிரசவக் காலத்தில் பெண்களுக்குத் தரப்படும் வலி நிவாரணி மாத்திரைகள், கேன்சர் நோயாளிகளுக்குத் தரப்படும் வலி நிவாரணி மாத்திரைகளை போதைப்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் விலை 15 முதல் 50 ரூபாய். இந்த மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது. மருந்துக் கடைகளில் கிடைக்காத இந்த மாத்திரைகள் போதைச்சந்தையில் தாராளமாகக் கிடைக்கின்றன. பீகார் போன்ற வடமாநிலங் களிலிருந்து கொண்டுவந்து ஒரு மாத்திரை 250 முதல் 500 ரூபாய் வரை விற்கிறார்கள்.

பணம் கிடைக்காதபோது அன்றாடம் பயன்படுத்தும் சில பொருள்களை (சொல்யூஷன், ஒயிட்னர், தின்னர், பெட்ரோல், நெயில் கிளீனர், இருமல் மருந்து போன்றவை) பயன்படுத்துகிறார்கள். குற்றச் செயல்களில் ஈடுபட்டு கையில் பணம் பார்ப்போர் விலையுயர்ந்த பெரும்போதைப் பொருள்களுக்கு இலக்காகிறார்கள். அவற்றை ‘பாங்காக் போதை' என்கிறார்கள். ஸ்டாம்ப், பவுடர் வடிவங்களில் எல்லாம் இவை கிடைக்கின்றன...’’ என்கிறார் போதை மறுவாழ்வு ஆலோசகர் ஹரிதாஸ்.

சட்டம் என்ன ஆனது?

18 வயதுக்குக் குறைவான சிறுவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தாலோ அல்லது அவர்களைக் கொண்டு அப்பொருள்களை விற்றாலோ Juvenile Justice act படி 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கலாம். ஆனால் இந்தச் சட்டத்தின் கீழ் இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. சட்டவிரோதமாக போதைப்பொருள்கள் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் தண்டிக்கப்படுவதில்லை. கஞ்சாவை சாக்லெட் வடிவத்தில்கூட விற்பனை செய்யத் தொடங்கிவிட்டார்கள். அவ்வப்போது கைது செய்திகள் வந்தாலும், காவல்துறையால் கஞ்சாவை முழுமையாக முடக்கமுடியவில்லை. போதைப்பரவல் தடுப்பு என்பது முழுமையான தோல்வியாக மாறிவருவதை அரசு உணரவேண்டியது அவசியம்.

‘‘கொரோனாவுக்குப் பிறகு பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாவது அதிகரித்துள்ளது என்கிறது ஓர் ஆய்வு. சோஷியல் மீடியாவும் இதற்கு முக்கியக்காரணம். போதை குறித்த நிறைய விஷயங்களை சோஷியல் மீடியா மூலமாகவே சிறுவர்கள் கற்கிறார்கள். தவிர, அவர்கள் கைக்கெட்டும் தூரத்தில் போதைப்பொருள்கள் கிடைக்கின்றன. சிலர் இது போதைப்பொருள் என்று தெரியாமலே பயன்படுத்தத் தொடங்கி ஒரு கட்டத்தில் அடிமையாகிவிடுகிறார்கள்...’’ என்கிறார், போதை மறுவாழ்வு தெரபிஸ்ட் சௌமியா சங்கர்ராமன்.

இதுவும் நோய்தான்!

‘‘போதைக்கு அடிமையான சிறுவர்களின் கண்கள் சிவப்பாகிவிடும். தூக்கமின்மை ஏற்படும். அதிகமாக கோபம் வரும். இயல்பான வேலைகளில் நாட்டம் குறையும். சிறுமிகளும் இப்போது போதைப் பொருள்களுக்கு அடிமையாகிவருகின்றனர். இது ஒரு நோய் போலத்தான். நிச்சயம் முழுமையாக குணப்படுத்த முடியும்...’’ என்கிறார் அவர்.

பெற்றோருக்கு இந்த விஷயத்தில் நிறைய பொறுப்பு உண்டு. போதைக்கு அடிமையான பத்தில் மூன்று பிள்ளைகள், பெற்றோர் செய்வதைப் பார்த்தே பழகுகின்றன என்று ஆய்வுகள் சொல்கின்றன. பெற்றோர் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். பிள்ளைகளிடம் தெரியும் மாற்றங்களைப் பெற்றோர் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

‘‘போதைக்கு அடிமையாகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது. அந்தக் குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு அளிக்க செங்கல்பட்டிலும் சேலத்திலும் மட்டுமே மையங்கள் உள்ளன. இதை கண்டிப்பாக அதிகரிக்க வேண்டும்...’’ என்கிறார் குழந்தை உரிமைச் செயற்பாட்டாளர் தேவநேயன்.

பள்ளிகளில் கவனம் தேவை!

‘‘சமீபகாலமாக டாக்டரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகள் அதிக அளவில் விற்பனையாகின்றன. அரசு தீவிரமாகக் கண்காணித்துத் தடுக்க வேண்டும். பள்ளிக்கூடத்தை ஒட்டி 100 மீட்டர் தூரத்தில் எந்த போதைப் பொருளும் விற்கக் கூடாது என்பதை 500 மீட்டர் என்று மாற்றவேண்டும். போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள்மீது மட்டுமன்றி, அவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்.எஸ்.எஸ்., என்.சி.சி போல, பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கான குழுக்களை உருவாக்க வேண்டும்...’’ என்று பரிந்துரைகள் தருகிறார் தேவநேயன்.

போதைப்பொருள்கள் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கின்றன. குறைந்த விலைக்கே கிடைக்கின்றன. அடுத்த தலைமுறையைப் போதைப்பொருளில் இருந்து காக்க, முதலில் நுழைவாயிலாக இருக்கும் புகையிலைப் பொருள்களைத் தடைசெய்ய வேண்டும். 18 வயதுக்குக் குறைவான சிறுவர்களுக்குப் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீதும் விற்பனைக்குத் துணைபோகும் அதிகாரிகள்மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 16 Mar 2023 - 18:49

போதை பொருட்கள் --சிறுவர்கள் மட்டுமல்ல , கல்லூரி மாணவிகளும் இதில் மயங்கி
ஒரு காலகட்டத்தில் இழக்ககூடாததையும் இழந்து, மயங்கி,
அவர்கள் அறியாமலேயே எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள்  மூலம்    பணம் பறிக்கும் கும்பல்களுக்கு
ஈடு கொடுக்கமுடியாமல் மற்ற குற்றங்களையும் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை.[/b]

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக