புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிக்மென்டேஷன் - பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?  Poll_c10பிக்மென்டேஷன் - பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?  Poll_m10பிக்மென்டேஷன் - பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?  Poll_c10 
32 Posts - 51%
heezulia

29 Posts - 46%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிக்மென்டேஷன் - பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?  Poll_c10பிக்மென்டேஷன் - பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?  Poll_m10பிக்மென்டேஷன் - பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?  Poll_c10 
74 Posts - 57%

50 Posts - 38%

4 Posts - 3%
T.N.Balasubramanian
பிக்மென்டேஷன் - பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?  Poll_c10பிக்மென்டேஷன் - பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?  Poll_m10பிக்மென்டேஷன் - பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 21, 2023 10:24 pm

பிக்மென்டேஷன் - பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?  AR6qug6

குழந்தை பிறந்த பிறகு, தாயின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம், சத்துக்குறைபாடு போன்ற காரணங்களால் பிக்மென்டேஷன் பிரச்சினை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரித்தால், இந்தப் பிரச்சினை ஏற்படாது.

பெண்களின் அழகை பாதிக்கும் சரும பிரச்சினைகளில் ஒன்று பிக்மென்டேஷன். இதை 'கருந்திட்டு' அல்லது 'மங்கு' என்றும் கூறுவார்கள். இது கன்னம், நெற்றி, மூக்கின் மேல் பகுதி, கழுத்தின் பின் பகுதியில் காணப்படும் ஒரு வகையான கருப்பு நிற படையாகும். தோலின் நிறத்தைப் பொறுத்து இதன் அடர்த்தி வேறுபடும்.

பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன? என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

பிக்மென்டேஷன் ஏற்பட காரணம் என்ன?

முன்பெல்லாம் 40 வயதைக் கடந்தவர்களுக்கு தான் சருமத்தில் கருந்திட்டு பிரச்சினை ஏற்படும். ஆனால் இப்போது 20 வயதிலேயே பலர் பாதிக்கப்படுகிறார்கள்.

கழிவுகள் மற்றும் நச்சுப்பொருட்கள் உடலில் இருந்து சரியாக வெளியேறாமல் இருப்பது, ஊட்டச்சத்து பற்றாக்குறை, சருமத்தில் படியும் இறந்த செல்களை அவ்வப்போது நீக்காமல் இருப்பது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பல காரணங்களால் பிக்மென்டேஷன் பிரச்சினை ஏற்படுகிறது.

ஹார்மோன் சமநிலையில் மாற்றம் ஏற்படுவதாலும் முகத்தில் ஆங்காங்கே கருந்திட்டு மற்றும் சிவப்பு நிற புள்ளி வருகிறது.

குழந்தைப்பேறுக்கும், பிக்மென்டேஷனுக்கும் சம்பந்தம் உண்டா?

குழந்தைப்பேறின்போது அதிக ரத்த இழப்பு உண்டாகும். பால் ஊட்டும்போது உடலில் சத்து குறைபாடு ஏற்படும். இதனால்தான், கர்ப்ப காலத்திலும், குழந்தை பெற்ற பிறகும், தாய் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீரான உணவுகளை சாப்பிடவேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

குழந்தை பிறந்த பிறகு, தாயின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம், சத்துக்குறைபாடு போன்ற காரணங்களால் பிக்மென்டேஷன் பிரச்சினை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரித்தால், இந்தப் பிரச்சினை ஏற்படாது.

காலநிலை மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தாலும் பிக்மென்டேஷன் பிரச்சினை வரலாம். இதற்கு வெளிப்பூச்சு கிரீம்கள் தீர்வு தராது.

எத்தகைய உணவுகள் பிக்மென்டேஷனை தடுக்கும்?

கடல் உணவுகளான மீன், இறால், நண்டு, மீன் எண்ணெய் போன்றவையும், பாதாம், பூசணி விதை, ஆளி விதை, நெல்லிக்காய், வில்வ இலை, திரிபலா சூரணம், கருஞ்சீரகம், சோற்றுக் கற்றாழை ஆகியவையும் பிக்மென்டேஷனைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை.

பிக்மென்டேஷன் பிரச்சினைக்கு தீர்வு என்ன?

சமச்சீரான உணவு, நேரம் தவறாத தூக்கம், போதுமான தண்ணீர், உடற்பயிற்சி, அமைதியான மனநிலை போன்றவை பிக்மென்டேஷன் பிரச்சினைக்கு தீர்வாகும்.

மருத்துவரின் ஆலோசனைப்படி தகுந்த மருந்துகளை சாப்பிட்டு உடலில் தங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றுதல், தோலில் ஏற்பட்டுள்ள பாதிப்பை பொறுத்து சிகிச்சை பெறுதல் போன்றவையும் பிக்மென்டேஷன் பிரச்சினையை குணமாக்கும்.

குப்பைமேனி இலை, வேப்ப இலை, அருகம்புல் ஆகியவற்றை சம அளவு எடுத்து பசை போல அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் பிக்மென்டேஷன் குணமாகும்.

குறிச்சொற்கள் #பிக்மென்டேஷன் #கருந்திட்டு #மங்கு #Pigmentation #Hyperpigmentation #Melasma
தேவதை

பிக்மென்டேஷன் - பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 25, 2023 10:18 pm

முகப்பரு, பிக்மென்டேஷன் பிரச்னைக்கு இயற்கை தீர்வு

சில பழங்களில் வைட்டமின் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சில சமயங்களில் ஃபுரூட் ஃபேஷியல் செய்து கொள்வதற்காகவே நாம் பெரும் தொகையை செலுத்துகிறோம். ஆனால் வீட்டிலேயே பளபளப்பான சருமத்தைப் பெற முடியும் எனில் அதை ஏன் செய்ய வேண்டும்?

அழகான சருமத்திற்கு இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்குகளை இப்போது முயற்சி செய்யுங்கள்.

வாழைப்பழ ஃபேஸ் பேக்

வாழைப்பழம் சருமத்தை இளமையாகவும், புத்துணர்ச்சியுடனும் மாற்ற உதவுகிறது. மிருதுவான சருமத்திற்கு இந்த ஃபேஸ் பேக்கை முயற்சிக்கவும்.

எப்படி செய்வது?

வாழைப்பழத்தை மசித்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும். நீங்கள் #முகப்பரு மற்றும் #பிக்மென்டேஷன் போன்ற தோல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அதில் சிறிது தேன் சேர்க்கவும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக