புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ் Poll_c10காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ் Poll_m10காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ் Poll_c10 
42 Posts - 63%
heezulia
காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ் Poll_c10காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ் Poll_m10காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ் Poll_c10காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ் Poll_m10காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ் Poll_c10காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ் Poll_m10காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 24, 2023 11:43 pm

காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ் Gallerye_223752657_3329386

வரும் 28-ல் புதிய பாராளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள நிலையில், 20 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டுவிட்டது.

இது குறித்து அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளதாவது,

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கலாமா? அது முறையா? குடியரசுத் தலைவர் தானே திறந்து வைக்க வேண்டும் என்று புலம்பிக்கொண்டிருக்கின்றனர் எதிர் கட்சியினர். நாடாளுமன்றத்தில் இரு அவைகளுக்கும் தலைவர் குடியரசுத் தலைவரே என்றும், நாடாளுமன்ற அவைகளின் கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர் குடியரசுத் தலைவரே என்றும் பழங்குடியினத்தவர் என்பதால் தான் ஓதுக்கிறார்கள், அவமானப்படுத்திகிறார்கள் என்று மலிவான அரசியலை முன் வைத்து, இது வரை யாருக்கும் தெரியாத ஒன்றை தெரிவிப்பது போல் அறிக்கை விட்டு கொண்டிருக்கின்றனர்.

1975 ம் ஆண்டு பாராளுமன்ற இணை கட்டிடத்தை (Annexe) திறந்து வைத்தவர் இந்திரா காந்தி தானேயன்றி, அன்றைய குடியரசு தலைவர் பக்ருதீன் அலி அகமது அல்ல. இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் தான் பக்ருதீன் அலி அகமது அவர்களை ஒதுக்கி, அவமானப்படுத்தியதா காங்கிரஸ்?

1987 ம் ஆண்டு பாராளுமன்ற நூலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியது அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி அவர்கள் தானேயன்றி, அன்றைய குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் அல்ல. தமிழர் என்பதால் தான் ஆர்.வெங்கடராமன் அவர்களை ஒதுக்கியதா காங்கிரஸ்?

கடந்த தி மு க ஆட்சியில், மார்ச் 13, 2010 ம் ஆண்டு ஓமந்தூரார் மாளிகையில் புதிய தமிழக சட்ட சபை கட்டிடத்தை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களின் முன்னிலையில் திறந்து வைத்தார்கள் என்பதை நினைவில் கொள்ளவும். புதிய பாராளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறக்க வேண்டுமென்றால், புதிய சட்டசபை கட்டிடத்தை, சட்ட மன்றத்தின் தலைவர் அன்றைய ஆளுநர் அல்லது குடியரசு தலைவர் தானே திறந்திருக்க வேண்டும்?

பிரதமரும், காங்கிரஸ் கட்சி தலைவரும் எதற்கு அழைக்கப்பட்டார்கள்? அன்று ஒரு பெண் குடியரசுத்தலைவரையும், சீக்கிய சமுதாயத்தை சேர்ந்த ஆளுநரையும் அவமானப்படுத்தியது ஏன் என்று தி மு க விளக்குமா?

தெலுங்கானாவில் புதிய சட்டசபை மற்றும் புதிய தலைமை செயலகத்தை அந்த மாநிலத்தின் முதல்வரே திறந்து வைத்ததோடு, அரசியலமைப்பு சட்டப்படி அம்மாநிலத்தின் தலைவரான ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களை அழைக்காது இருந்த போது வாய் மூடி மௌனம் காத்தவர்கள், இப்போது பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறக்கிறார் எனும் போது மூடிய வாயை திறந்து ஓலமிடுவது ஏன்? ஒரு பெண், அதிலும் ஒரு தமிழர் என்பதால் தான் டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களை ஒதுக்கி, அவமானப்படுத்தியதா அம்மாநில அரசு என்று எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்காதது ஏன்?

எது நடைமுறையோ அதை முறையே செய்து வருகிறது பாரதிய ஜனதா கட்சி அரசு.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கேலி பேசிய எதிர்க்கட்சிகள், குறை சொன்ன எதிர்க்கட்சியினர், பிரதமருக்கு புதிய இல்லம் கட்டுகிறார் என்று கதை விட்டு கொண்டிருந்த மலிவான அரசியல்வாதிகள் இன்று பொழுது போகாமல் பொங்கியெழுந்து அரசியலமைப்பு சட்டம் குறித்து நமக்கு பாடம் எடுப்பது விந்தையிலும் விந்தை.

தங்களுக்கொரு நியாயம், மற்றவர்களுக்கு அநியாயம் என்ற அக்கப்போர் அரசியலை கைவிட்டு ஆக்க பூர்வ அரசியலை முன்னெடுப்பதே எதிர்க்கட்சிகளுக்கு சிறப்பை தரும்.

தினமலர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 24, 2023 11:46 pm

1947 டூ 2023: இந்திய பார்லிமென்டில் வலம் வரும் தமிழக செங்கோல்



காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ் Gallerye_154220525_3329307

சென்னை: புதுடில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பார்லிமென்ட் கட்டடம் வரும் மே 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த பார்லி., கட்டடத்தில் 1947ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்ட தமிழக செங்கோல் நிறுவப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்த செங்கோல் நாடு சுதந்திரம் அடைந்தபோது திருவாவடுதுறை ஆதினம் வழங்கியது என்ற வரலாறு உள்ளது. இந்த செங்கோல் பற்றிய மேலும் பல சுவாரஸ்ய தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தமிழ் மன்னர்களின் ஆட்சியில், குறிப்பாக சோழ மன்னர்கள் ஆட்சியில் செங்கோல் முக்கிய அங்கமாக விளங்கியது. ஒரு மன்னர், தனது ஆட்சி அதிகாரத்தை புதிய மன்னருக்கு அளிக்கும் பொருட்டு செங்கோல் ஒப்படைப்பதை நடைமுறையாக வைத்திருந்தனர். அந்த வகையில் இந்தியா, ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற 1947ம் ஆண்டின்போது இந்தியாவின் கடைசி கவர்னராக மவுண்ட் பேட்டன் பிரபு இருந்தார். இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கப்படுவதை அடையாளப்படுத்துவது தொடர்பாக ஜவஹர்லால் நேருவிடம் ஆலோசித்துள்ளார்.

ராஜாஜியின் யோசனை


இது குறித்து நேரு, ராஜாஜியிடம் யோசனை கோரியுள்ளார். அப்போது, ராஜாஜி, தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சியின்போது, ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, ராஜகுருவாக இருப்பவர் செங்கோலை புதிய மன்னரிடம் ஒப்படைத்து ஆசிர்வதிப்பார்.

அதேபோல நாமும் ஒரு குருவின் மூலம் செங்கோல் பெற்று, ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவிற்கு ஆட்சி அதிகாரம் கைமாறுவதை அடையாளப்படுத்தலாம் என யோசனை தெரிவித்துள்ளார். இதனையடுத்து நேரு, அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி கூறியுள்ளார்.

செங்கோல்


அதன்படி, இந்தியாவின் பழமையான சைவ மடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதின மடத்தின் 20வது குருமகா சன்னிதானமாக இருந்த அம்பலவாண தேசிகரை அணுகியுள்ளனர். இந்தியாவின் ஆட்சி மாற்றத்திற்கான செங்கோலை செய்து தருமாறு கோரியுள்ளனர்.

திருவாவடுதுறை ஆதினத்திற்கு பெருமை அளிக்கக்கூடிய அந்த நிகழ்வை செய்ய அவர் சம்மதித்தார். அதற்காக சென்னையில் பிரபலமான நகைக்கடையான உம்மிடி பங்காரு செட்டி நகைக்கடையில் சைவ சின்னம் பொறித்த தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி செங்கோல் ஒன்று தயாரிக்கப்பட்டது.

தான் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதால், தனக்கு பதிலாக ஆதினத்தின் கட்டளை சாமியாக இருந்த சடைச்சாமி என்றழைக்கப்படும் ஸ்ரீமத் குமாரசுவாமி தம்பிரானை, ஓதுவார்கள் மற்றும் நாதஸ்வர வித்வானுடன், டில்லிக்கு அனுப்பினார் அம்பலவாண தேசிகர். 1

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி இரவில், சுதந்திரம் பெறுவதற்கான நிகழ்வு டாக்டர் ராஜேந்திர பிரசாத் முன்னிலையில் நடந்தது. ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, சுதந்திர போராட்ட தியாகிகள், உயர் அதிகாரிகள் பலரும் இருந்தபோது திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகத்தின் 11 பாடல்களையும் ஓதுவாமூர்த்திகள் பாடினர்.

புனித நீர்


பின்னர், மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் அந்தச் செங்கோலை, தம்பிரான் சுவாமிகள் கொடுத்துப் பெற்றார். பின்னர் அதன்மீது புனித நீர் தெளித்து டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரம் முழங்க, ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ள ஜவஹர்லால் நேருவிடம் வழங்கினார். இந்த செங்கோலின் மேலுள்ள நந்தி, 'நியாயத்தையும் நீதியையும்' குறிக்கிறது.

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதன் அடையாளமாக வழங்கப்பட்ட இவ்வளவு சிறப்புவாய்ந்த இந்தச் செங்கோல் பார்லிமென்டில் நிறுவப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமையளிப்பதாக உள்ளது.

ஆதீனங்கள் டில்லி பயணம்!


திருவாவடுதுறை ஆதீனம், தருமை ஆதீனம், மதுரை ஆதீனம், சூரியனார் கோவில் ஆதீனம், செங்கோல் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், பேரூர் ஆதீனம், சிரவை ஆதீனம், துலாவூர் ஆதீனம், திருப்பனந்தாள் காசி திருமடம், கோகினூர், பழனி, மயிலம், ஞானியார் மடம் உள்ளிட்ட 20 சைவ ஆதீனம் குருமகா சந்நிதானங்கள் மற்றும் தம்பிரான் சுவாமிகள் மடத்தின் பிரதிநிதிகள் இன்று(மே 24) இரவு டில்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் செல்கின்றனர். வரும் 27ம் தேதி ஆதீனம் குருமகாசந்நிதானங்களும் டில்லி செல்கின்றனர்.

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 26, 2023 1:04 pm

செங்கோலைச் செய்த பொற்கொல்லர் யாரோ? அவர் யாரோ?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm

கட்சி  கண்ணோட்டத்துடன் எதிர்ப்பது ,

நமக்கு வராத இந்த யோஜனை இவரது கட்சிக்கு  வருகிறதே என்ற  நல்லெண்ணம்தான் காரணம்.

தெலுங்கான சட்டசபை ஆரம்ப தினம் , கவர்னருக்கு பதிலாக, நியதிக்கு மாறாக முதல் அமைச்சர் கூட்டினார்.

கவர்னர் தமிழர் (தமிழிசை) என்பதாலா?   தமிழ்நாட்டில் ஒருவர்  கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?

தரபோதைய ஓமந்தூரார் மருத்துவமனை , முதலில் சட்டசபை வளாகமாகத்தான் செயல்பட இருந்தது.

அன்றைய முதல்வர் , அன்றைய ஜனாதிபதியை அழைக்காமல், பிரதம மந்திரியை அழைத்து

திறக்கப்பட்டது. !!

ஊடகங்களை  உண்ணித்து படிக்கையில்   பல விஷயங்கள் வெளிவருகின்றன.  
.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக