ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 8:24

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 8:22

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Today at 0:59

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:56

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:33

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:32

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 23:30

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 23:26

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 23:26

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 23:24

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 23:23

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 23:21

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 23:19

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:19

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 23:18

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 23:17

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:31

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:58

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 19:37

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 19:37

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 14:54

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 14:38

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 14:37

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 14:31

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 14:28

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:20

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 11:17

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 8:34

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 8:16

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 18:54

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 17:15

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 13:33

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 13:32

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon 10 Jun 2024 - 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 10:55

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 8:44

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா சாம்பியன்

3 posters

Go down

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா சாம்பியன் Empty ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா சாம்பியன்

Post by சிவா Sun 13 Aug 2023 - 0:34

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா சாம்பியன் YgBYT7G

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் நான்காவது முறையாக சாம்பியன் ஆனது இந்தியா. பைனலில் மலேசியாவை 4-3 என்ற கோல் கணக்கில் சாய்த்தது.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் 7வது சீசன் சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடந்தது. பைனலில் உலகத் தரவரிசையில் நான்காவது இடத்திலுள்ள இந்திய அணி, 10 வது இடத்திலுள்ள மலேசியாவை சந்தித்தது. போட்டி துவங்கிய 8 வது நிமிடத்தில் இந்திய வீரர் ஜுக்ராஜ் சிங் முதல் கோல் அடித்தார்.இதன் பின் 18 வது நிமிடம் ரஹிம், 28 வது நிமிடம் முகமது அமினுதீன் தலா ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் மலேசிய அணி 3-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில், 45 வது நிமிடம் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். அதே நிமிடத்தில் குர்ஜந்த் சிங், ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். இந்திய வீரர் ஆகாஷ்தீப் சிங், 56 வது நிமிடம் ஒரு 'பீல்டு' கோல் அடிக்க, இந்திய அணி 4-3 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. இத்தொடரில் நான்காவது முறையாக சாம்பியன் ஆனது.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நான்கு முறை கோப்பை வென்ற முதல் அணியானது இந்தியா (2011, 2016, 2018, 2023). இந்த வரிசையில் பாகிஸ்தான் (2012, 2013, 2018) இரண்டாவதாக உள்ளது. மலேசிய அணி முதன் முறையாக 2வது இடம் பெற்றது. முன்னதாக 2011, 2012, 2013, 2016, 2018 என, ஐந்து முறை மூன்றாவது இடம் பிடித்திருந்தது.


ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா சாம்பியன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா சாம்பியன் Empty Re: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா சாம்பியன்

Post by சிவா Sun 13 Aug 2023 - 0:35

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா சாம்பியன் Z0yUptq


ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா சாம்பியன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா சாம்பியன் Empty Re: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா சாம்பியன்

Post by சிவா Sun 13 Aug 2023 - 10:35

கடைசி நிமிட கோலால் மலேசியாவை வீழ்த்தி அபாரம்


ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா சாம்பியன் Af2b7ed0-3934-11ee-bc8a-cdc91c5a5be2

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ரசிகர்களை சீட் நுனிக்கே வரவைத்த பரபரப்பான இறுதிப் போட்டியில் மலேசிய அணியை 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோற்கடித்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஒன்றுக்கு மூன்று என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த இந்திய வீரர்கள் பிற்பாதியில் எழுச்சி பெற்ற சமன் செய்தனர். வெற்றிக்கான கோல் கடைசி நிமிடத்தில் வந்ததது என்பது சிறப்பு. அந்த அளவுக்கு ஆட்டம் பரபரப்பானதாக இருந்தது. இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் 7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரி நடந்து முடிந்துள்ளது. அதன் இறுதிப் போட்டியில் இந்தியா - மலேசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டம் தொடங்கியதும் இந்தியா முன்னிலை


ஆட்டம் தொடங்கியதுமே மலேசிய வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை கையில் எடுத்தனர். மலேசிய அணி வீரர்கள் ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே இந்திய கோல் பகுதியை நோக்கி அடித்த பந்து வலைக்கு சற்று வெளியே பறந்தது. இந்திய அணியின் தற்காப்பு வீரர்கள் செய்த சிறிய பிழையை சாதகமாக பயன்படுத்தி இந்திய கோல் பகுதியை அவர்கள் முற்றுகையிட்டனர். ஆனாலும் கோல் ஏதும் விழவில்லை.

ஆனால், ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் மலேசிய தற்காப்பில் விழுந்த ஓட்டையை பயன்படுத்திக் கொண்ட இந்திய வீரர் ஜூக்ராஜ் சிங் அபாரமாக கோல் அடித்து அசத்தினார். இதனால், இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

முதல் பாதியில் மலேசியா 3-0


இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் மலேசிய வீரர்கள் தங்களது தாக்குதலை இன்னும் தீவிரப்படுத்தினர். அதற்கு அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே பலன் கிடைத்தது. அஸ்ராய் அபு கமல் அந்த அணிக்கான முதல் கோலை அடித்தார். இதனால், இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டின.

ஆட்டத்தில் இரண்டாவது கால் பகுதியில், அதாவது 18-வது நிமிடத்தில் மலேசிய அணி மீண்டும் ஒரு கோல் அடித்தது. அந்த அணிக்காக 300-க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் ஆடியுள்ள அனுபவம் வாய்ந்த ரஸி ரஹிம் இந்த கோலை அடித்து இந்திய ரசிகர்களை திகைக்க வைத்தார்.

இந்திய அணி வீரர்கள் பதிலடி கொடுக்க போராடினால் பலன் கிடைக்கவில்லை. மலேசிய அணியின் தற்காப்பு சிறப்பாக இருந்தது. ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வருவதற்கு சற்று முன்னதாக மலேசிய வீரர் முகமது அமினுதீன் கோல் அடித்து அசத்தினார். இதனால், இந்தியாவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த மலேசிய அணி முதல் பாதி ஆட்டம் முடிவில் 1-3 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

பிற்பாதியில் இந்திய அணி எழுச்சி


ஆட்டத்தின் பிற்பாதியில் முதல் நிமிடத்தில் இருந்தே இந்திய அணி தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. மலேசிய கோல் பகுதியை இந்திய வீரர்கள் முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். ஆனால், அந்த அணியின் தற்காப்பு மிகச் சிறப்பாக இருந்ததால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. 41-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஆகாஷ்தீப் அடித்த கோலை நடுவர் நிராகரித்தார்.

ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் மலேசிய கோல் பகுதியில் இந்திய வீரர் சுக்ஜீத்தை அந்த அணி வீரர்கள் கீழே தள்ளிவிட, இந்திய அணிக்கு பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பு கிடைத்தது. அதனை கேப்டன் ஹர்மன்பிரீத் கோலாக்கினார். இதன் மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான கோல் இடைவெளி 3-2 என்ற வகையில் குறைந்தது.

இரண்டாவது கோல் கொடுத்த உத்வேகத்தில் ஆடிய இந்திய வீரர்கள் அடுத்த சில விநாடிகளிலேயே மூன்றாவது கோலையும் அடித்துவிட்டனர். இந்திய அணிக்காக இந்த கோலை குர்ஜந்த் அடித்தார். இதனால் உற்சாகம் அடைந்த இந்திய ரசிகர்கள் வந்தே மாதரம் என்று ஒன்றாக பாடத் தொடங்கிவிட்டனர்.

கடைசி நிமிட கோலால் இந்தியா வெற்றி


இதையடுத்து, இரு அணிகளுமே வெற்றிக்கான கோலை அடிக்க தாக்குதலை தீவிரப்படுத்தின. இந்திய வீரர்களின் சில நல்ல முயற்சிகளை மலேசிய கோல் கீப்பர் சிறப்பாக செயல்பட்டு முறியடித்தார்.

ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த போது இந்திய அணியின் வெற்றிக்கான கோலை ஆகாஷ்தீப் சிங் அடித்தார். மலேசிய கோல் பகுதியில் இருந்து பல மீட்டர் தொலைவில் இருந்து அவர் அடித்த பீல்ட் கோல் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. அதுவே இந்திய அணியின் வெற்றிக் கோலாக அமைந்தது. அதன் பிறகு இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை.

முடிவில் இந்திய அணி 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் வென்று ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்திய அணி முதல் பாதியில் 1-க்கு 3 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்து, இரண்டாவது பாதியில் எழுச்சி பெற்று அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து கோப்பையை தனதாக்கியுள்ளது.


ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா சாம்பியன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா சாம்பியன் Empty Re: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா சாம்பியன்

Post by சிவா Sun 13 Aug 2023 - 10:40

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா சாம்பியன் JCBXuKA


ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா சாம்பியன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா சாம்பியன் Empty Re: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா சாம்பியன்

Post by Dr.S.Soundarapandian Tue 15 Aug 2023 - 13:05

விளையாட்டில் வெற்றிகள், தனிமனித வெற்றியாகவே உள்ளன; அரசுகள் ஏனோ ஏறெடுத்துப் பார்ப்பதில்லை!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா சாம்பியன் Empty Re: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா சாம்பியன்

Post by T.N.Balasubramanian Tue 15 Aug 2023 - 17:31

கடைசி நிமிட கோலால் இந்திய வெற்றி.

ஆகாஷ்தீப் சிங் அடித்தார். மலேசிய கோல் பகுதியில் இருந்து பல மீட்டர் தொலைவில் இருந்து அவர் அடித்த பீல்ட் கோல்

ஹாக்கியில் ஒரு ஆகாஷ்தீப் சிங்
கிரிக்கெட்டில் ஒரு அர்ஸ்திப் சிங் (நடுத்தர வேக பந்து வீச்சாளர்.)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா சாம்பியன் Empty Re: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா சாம்பியன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum