புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருமையான ஒரு சுற்றுலா Poll_c10அருமையான ஒரு சுற்றுலா Poll_m10அருமையான ஒரு சுற்றுலா Poll_c10 
31 Posts - 46%
heezulia
அருமையான ஒரு சுற்றுலா Poll_c10அருமையான ஒரு சுற்றுலா Poll_m10அருமையான ஒரு சுற்றுலா Poll_c10 
29 Posts - 43%
mohamed nizamudeen
அருமையான ஒரு சுற்றுலா Poll_c10அருமையான ஒரு சுற்றுலா Poll_m10அருமையான ஒரு சுற்றுலா Poll_c10 
2 Posts - 3%
jairam
அருமையான ஒரு சுற்றுலா Poll_c10அருமையான ஒரு சுற்றுலா Poll_m10அருமையான ஒரு சுற்றுலா Poll_c10 
2 Posts - 3%
சிவா
அருமையான ஒரு சுற்றுலா Poll_c10அருமையான ஒரு சுற்றுலா Poll_m10அருமையான ஒரு சுற்றுலா Poll_c10 
1 Post - 1%
Manimegala
அருமையான ஒரு சுற்றுலா Poll_c10அருமையான ஒரு சுற்றுலா Poll_m10அருமையான ஒரு சுற்றுலா Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அருமையான ஒரு சுற்றுலா Poll_c10அருமையான ஒரு சுற்றுலா Poll_m10அருமையான ஒரு சுற்றுலா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருமையான ஒரு சுற்றுலா Poll_c10அருமையான ஒரு சுற்றுலா Poll_m10அருமையான ஒரு சுற்றுலா Poll_c10 
159 Posts - 51%
ayyasamy ram
அருமையான ஒரு சுற்றுலா Poll_c10அருமையான ஒரு சுற்றுலா Poll_m10அருமையான ஒரு சுற்றுலா Poll_c10 
114 Posts - 37%
mohamed nizamudeen
அருமையான ஒரு சுற்றுலா Poll_c10அருமையான ஒரு சுற்றுலா Poll_m10அருமையான ஒரு சுற்றுலா Poll_c10 
13 Posts - 4%
prajai
அருமையான ஒரு சுற்றுலா Poll_c10அருமையான ஒரு சுற்றுலா Poll_m10அருமையான ஒரு சுற்றுலா Poll_c10 
9 Posts - 3%
Jenila
அருமையான ஒரு சுற்றுலா Poll_c10அருமையான ஒரு சுற்றுலா Poll_m10அருமையான ஒரு சுற்றுலா Poll_c10 
4 Posts - 1%
jairam
அருமையான ஒரு சுற்றுலா Poll_c10அருமையான ஒரு சுற்றுலா Poll_m10அருமையான ஒரு சுற்றுலா Poll_c10 
4 Posts - 1%
Rutu
அருமையான ஒரு சுற்றுலா Poll_c10அருமையான ஒரு சுற்றுலா Poll_m10அருமையான ஒரு சுற்றுலா Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அருமையான ஒரு சுற்றுலா Poll_c10அருமையான ஒரு சுற்றுலா Poll_m10அருமையான ஒரு சுற்றுலா Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அருமையான ஒரு சுற்றுலா Poll_c10அருமையான ஒரு சுற்றுலா Poll_m10அருமையான ஒரு சுற்றுலா Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அருமையான ஒரு சுற்றுலா Poll_c10அருமையான ஒரு சுற்றுலா Poll_m10அருமையான ஒரு சுற்றுலா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருமையான ஒரு சுற்றுலா


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sun Jan 31, 2010 1:11 pm

அருமையான ஒரு சுற்றுலா 0t1




கொனார்க் சூரியக்கோவில்


லகளவில்
பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச்
சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச்
சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
இந்தவாரம்....
கொனார்க் சூரியக்கோவில்
"இங்கே,
கல்லின்மொழி மனிதனின் மொழியை தாண்டிச்செல்கிறது" என்று வியந்து
கூறியிருக்கிறார், மகாகவி ரவீந்திரநாத் தாகூர். இப்படி அவரை வியக்க
வைத்தவை, கொனார்க் சூரியபகவான் கோவில் சிற்பங்கள்.
"இருபத்து நான்கு பெரிய சக்கரங்கள் கொண்ட பிரம்மாண்டத் தேர், அருமையான ஒரு சுற்றுலா 0t2முன்கால்களைத்
தூக்கியவாறு ஆக்ரோஷமாக அதை இழுத்துச் செல்லும் ஏழு குதிரைகள்..." எனச்
சொல்லிப்பாருங்கள். மிரட்டலாக இருக்கும். அதுவே நிஜமாக இருந்தால்...?
இருக்கிறது. கொனார்க் சூரியகோவிலாக!. ஆம். கல்லில் செதுக்கப்பட்ட
பிரம்மாண்ட தேர்வடிவம்தான் சூரியபகவான் கோவில்.
ஒரிசா
மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில் சூரியபகவானுக்காக
கட்டப்பட்ட கோவில் இது. சிவப்பு மண்பாறை, கறுப்புக் கிரானைட் கற்களால்
உருவாக்கப்பட்ட இந்த கலைப்பொக்கிஷத்துக்கு ஐரோப்பிய மாலுமிகள் சூட்டிய
பெயர் 'பிளாக் பகோடா' (கறுப்பு கோவில்). பதின்மூன்றாம் நூற்றாண்டில்
(கி.பி1236- 1264) கங்கப் பேரரசன் நரசிம்மதேவரால் கட்டப்பட்டது.
இதைக்கட்டுவதற்கு பேரரசின் 12ஆண்டு வருமானம் செலவிடப்பட்டதாம்.
அருமையான ஒரு சுற்றுலா 0t4இந்து
சமய மரபுகளில் ஒன்றான சௌரவ மதத்தில் சூரிய பகவான்தான் முக்கியக் கடவுள்.
அதன்பேரிலேயே சூரியபகவானுக்காக இந்த கோவில் எழுப்பப்பட்டதாகக்
கூறப்படுகிறது. இங்குள்ள சிலைகள் மிகவும் பிரசித்தம். அத்தனையும் நுண்ணிய
வேலைப்பாடு கொண்டவை. கடவுள்கள், நடனமாடும் மங்கையர், குதிரைகள், யானைகள்,
சிங்கங்கள் சிற்பங்களாய் சிலிர்த்துக் கொண்டிருக்கின்றன.

பாலியல்
விளையாட்டுக்களை பளிச்செனக் காட்டும் சிற்பங்களும் உண்டு. சௌரவ மதத்தில்
சூரியபகவான் சிருஷ்டிதேவனாகப் பார்க்கப்படுகிறார். அந்த அடிப்படையே
பாலியல் சிற்பங்கள் உருவாகக்காரணம். கோவிலின் முன்பகுதியில் உள்ள
நாதமந்திர் மண்டபம் சிற்பங்கள் நிறைந்தது. இப்படி நூற்றுக்கணக்கான
சிற்பங்கள், கல்லில் நடப்பட்ட கலைநாற்றுக்களாக காட்சி
அளித்துக்கொண்டிருக்கின்றன.
அருமையான ஒரு சுற்றுலா 0t3நரசிம்ம
தேவரால் கட்டப்பட்ட முழுக்கோவிலும் இப்போது இல்லை. கோவிலின் சில பகுதிகள்
இடிந்து விட்டாலும் மிடுக்குக் குறையவில்லை. சூரியக்கோவிலில் உடைந்து
விழுந்த சிற்பங்கள் உள்ளிட்ட முக்கியப்பொருட்களை கொனார்க்
அருங்காட்சியத்தில் காணலாம்.
இந்தியாவில்
சூரியபகவானுக்காக அமைக்கப்பட்டு எஞ்சி நிற்கும் கோவில் கொனார்க்
சூரியக்கோவில் மட்டுமே. சிறப்புக்குரிய இந்தக் கோவிலை யுனெஸ்கோ அமைப்பு
'உலகப் பண்பாட்டுச் சின்னமாக' 1984ம் ஆண்டில் அறிவித்தது. கோவிலை
சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
விழாக்கள்:

கொனார்க்கில் பிப்ரவரி மாதம் நடைபெறும்
'மஹாசப்தமி விழா' பிரசித்தம். சூரியபகவானை தரிசிக்க லட்சக்கணக்கானோர்
கூடுகின்றனர். டிசம்பர் மாதத்தில் சூரியக்கோவில் முன் நடனத்திருவிழா
ஒன்றும் நடத்தப்படுகிறது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிறைந்த வண்ணத்
திருவிழா இது.
எப்படிப் போகலாம்?

புவனேஸ்வரில்
இருந்து 65 கி.மீ தொலைவிலும் பூரியில் இருந்து 35 கி.மீ தொலைவிலும்
கொனார்க் அமைந்துள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து சாலைமார்க்கமாக சென்று
விடலாம். பூரி, புவனேஸ்வரில் ரயில்நிலையங்கள் உள்ளன. புவனேஸ்வரில் விமான
நிலையம் இருக்கிறது. கொனார்க் அருகில் அழகு சிந்தும் சந்திபாகா கடற்கரை
உள்ளது. இதுவும் அருமையான ஒரு சுற்றுலாத்தலமாகும்.






அருமையான ஒரு சுற்றுலா Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sun Jan 31, 2010 1:12 pm


அருமையான ஒரு சுற்றுலா T-i





டெல்லி செங்கோட்டை


லகளவில்
பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச்
சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச்
சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
இந்தவாரம்....
டெல்லி செங்கோட்டை
டெல்லி
நகரின் இன்னொரு கம்பீரம் 'செங்கோட்டை'. இந்திய சுதந்திரதினத்தன்று பிரதமர்
தேசியக்கொடியேற்றி உரையாற்றும் பிரம்மாண்ட இடம். இதை உருவாக்கியவர் மொகலாய
மன்னர் அருமையான ஒரு சுற்றுலா T-1ஷாஜஹான்.
தனது
தலைநகரத்தை ஆக்ராவில் இருந்து ஷாஜஹானா பாத்திற்கு (தற்போதைய பழைய டெல்லி)
ஷாஜஹான் மாற்றியபோது செங்கோட்டை உருவானது. இதனைக் கட்டிமுடிக்க 1638-48
வரை பத்தாண்டு ஆனது. செலவிட்ட தொகை அப்போதைய மதிப்புக்கு ஒருகோடி ரூபாயாம்.
யமுனை
நதிக்கரையில் ஒப்பிலா அழகுடன் எழுந்து நிற்கும் செங்கோட்டை, பாரசீக,
ஐரோப்பிய, இந்திய கட்டடக் கலைகளை குழைத்து எழுப்பப்பட்டது. கண்களை
மயக்கும் கலைநயம், சவால்விடும் கட்டுமானம், ஆச்சரியப்படுத்தும் தோட்டக்கலை
போன்றவை இன்றளவும் போற்றப்படுகிறது. டெல்லிகேட், லாகூர்கேட் என இருபெரும்
நுழைவாயில்கள் உள்ளன.
கோட்டைக்குள்
இருக்கும் அரசவை மண்டபங்களில் மட்டுமின்றி அந்தப்புரங்களிலும்கூட கலைநயம்
கண்சிமிட்டுகிறது. 'திவான்- இ- ஆம்' எனப்படும் தர்பார் மண்டபம்
பொதுமக்களும் பிரதிநிதிகளும் அமரும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்கே மன்னருக்காக அமைக்கப்பட்டிருக்கும் உப்பரிகையும் கம்பீரமானது.
'ஜெனானா'
என்றழைக்கப்படும் அந்தப்புரம், மும்தாஜ் மஹால், ரங் மஹால் போன்றவையும்
குறிப்பிடத்தக்கவை. இங்குள்ள சலவைக்கல் பதிக்கப்பட்ட நீருற்று புதுமையின்
பதிப்பு.அவுரங்கசீப்பின் வழிபாட்டுக்காக கட்டப்பட்ட மோத்திமஸ்ஜித்
எனப்படும் பியர்ல் மஸ்ஜித் (முத்து மசூதி) முழுவதும் சலவைக்கல் மயமே.

அருமையான ஒரு சுற்றுலா T-2
இவைதவிர
அரச குடியிருப்புகள் அமைந்திருந்த 'நஹ்ர்-இ-பேஹிஸ்ட்' என்ற பகுதி அசத்தல்
ரகம். வீடுகளுக்கு உள்ளேயே யமுனை ஆற்றின் நீர் ஓடும் வகையில் கால்வாய்கள்
அமைக்கப்பட்டுள்ளன. இப்படி, கற்பனைகளுக்கும் கனவுகளுக்கும்கூட
கால்வாய்வெட்டி நனவாக்கிய மொகலாய மன்னர்கள். இதை 'சொர்க்கத்தின் நீரோடை'
என்றும் அழைத்து வந்தனர். நீரோடையை இன்றும் காணலாம்.
செங்கோட்டையைக் கட்டியவர் ஷாஜஹான் என்றாலும் அவருக்குப் பின்னர் அவுரங்கசீப் உள்ளிட்ட மன்னர்களும் சில மாற்றங்களை செய்தனர்.அருமையான ஒரு சுற்றுலா T-3
ஆங்கிலேயர் ஆட்சியின்போது கண்டோன்மென்ட்டாக (ராணுவமுகாம் மற்றும்
குடியிருப்பு பகுதி) செங்கோட்டை பயன்படுத்தப்பட்டது. அப்போது சில
கட்டடங்கள் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்திய விடுதலைக்குப்பிறகும்
ராணுவக்-கட்டுப்பாட்டில் இருந்துவந்த செங்கோட்டை, 2003ம் ஆண்டில் இந்திய
சுற்றுலாத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இங்குள்ள
மும்தாஜ் மஹாலில் மொகலாய மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு
வைக்கப்பட்டுள்ளன. அனைத்துமே வரலாற்றுப் பொக்கிஷங்கள். பெருமைக்குரிய
டெல்லி செங்கோட்டை, யுனெஸ்கோவால் 2007ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக
அறிவிக்கப்பட்டது.




அருமையான ஒரு சுற்றுலா Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sun Jan 31, 2010 1:14 pm


அருமையான ஒரு சுற்றுலா Toui




அடிமை எழுப்பிய புகழ்க்கோபுரம்- குதுப்மினார்



லகளவில்
பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச்
சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச்
சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
இந்தவாரம்....
அடிமை எழுப்பிய புகழ்க்கோபுரம்- குதுப்மினார்
டெல்லி
குதுப்மினார். இந்தியாவின் மிகஉயர்ந்த கோபுரம். செம்மண்-பாறைக் கற்களால்
உருவான அரிய பொக்கிஷம். இதன் உயரம் 72.5 மீட்டர் (சுமார் 238அடி).
உயர்ந்து நிற்கும் குதுப்மினார், சுவாரஸ்ய வரலாற்றையும் உள்ளடக்கியது.

டெல்லி
மட்டுமின்றி தெற்காசியாவின் முதல் முஸ்லிம் ஆட்சியாளர், முதல் சுல்தான்
என்ற பெருமைக்குரியவர் குத்புதீன் ஐபக். அடிமை வம்சத்தை தோற்றுவித்தவர்.
மத்திய ஆசியாவில் துருக்கிய மரபில் அருமையான ஒரு சுற்றுலா Tou1பிறந்த
குத்புதீன் ஐபக் சிறுவயதிலேயே அடிமையாக விற்கப்பட்டார். இடையே கைமாறி,
கடைசியில் முகமத்கோரியால் விலைக்கு வாங்கப்பட்டார். தனது வீரதீர
செயல்பாடுகளால் கோரியின் முக்கிய தளபதியாக விளங்கினார். கோரியின்
மறைவுக்குப் பிறகு டெல்லி சுல்தான் ஆனார்.டெல்லியில் உருவான முஸ்லிம்
நினைவுச்-சின்னங்களுக்கு காரணகர்த்தா இவரே.
முதலில்
குவ்வாத்-உல்-இஸ்லாம் மசூதியை அமைத்த குத்புதீன் ஐபக், 1199ம் ஆண்டில்
குதுப்மினாருக்கு அஸ்திவாரம் போட்டார். மக்களை தொழுகைக்கு அழைப்பதற்கு
வசதியாக இந்த கோபுரத்தை எழுப்பத் தொடங்கினார். இதன் முதல் அடுக்கு
முற்றுப்பெற்ற நிலையில் குத்புதீன் ஐபக் திடீரென மரணம் அடைந்தார். பிறகு
ஆட்சிக்கு வந்த குத்புதீன் ஐபக்கின் மருமகன் சம்சுதீன் அல்துமிஷ்,
கோபுரத்தில் மேலும் மூன்று அடுக்குகளை அமைத்தார். 1211 முதல் 1236ம் ஆண்டு
வரை கட்டடப்பணிகள் நடந்தன.அருமையான ஒரு சுற்றுலா Tou3
இருப்பினும்,
கடைசி அடுக்கு 1386ம் ஆண்டில் பெரோஷா துக்ளக் என்பவரால் கட்டி
முடிக்கப்பட்டது. இப்படி மூன்று மன்னர்களால் உயர்த்தப்பட்டதுதான்
குதுப்மினார். ஒவ்வொரு அடுக்கிலும் உப்பரிகை அமைந்திருப்பது இதன்
தனிச்சிறப்பு. குதுப்மினாரின் உச்சிக்கு சென்றடைய 379 படிகள்
அமைக்கப்பட்டுள்ளன.
குதுப்மினார்
வளாகத்தில் உள்ள அல்துமிஷ் ஸ்தூபி, அலைய் தர்வாஷா மெயின்கேட், அலைய்
மினார் போன்ற கட்டடங்களும் கலைநயம் மிக்கவை. ஏழு மீட்டர் உயரம் கொண்ட
இரும்புத்தூண் ஒன்றும் இங்கு அருமையான ஒரு சுற்றுலா Tou2உள்ளது. நான்கரை அடி பருமனும் ஏழரை டன் எடையும் கொண்ட இந்த இரும்புத்தூண் இன்றளவும் சிறிதும்கூட துருப்பிடிக்காதது அதிசயமே.
குதுப்மினாரையும்
அதைச் சுற்றியுள்ள கட்டடங்களையும் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக யுனெஸ்கோ
அமைப்பு 1993ம் ஆண்டில் அறிவித்தது. நவம்பர்- டிசம்பரில் இங்கு குதுப்
திருவிழா நடத்தப்படுகிறது. டெல்லி மாநில சுற்றுலாத்துறை சார்பில் 3நாட்கள்
நடைபெறும் இந்த விழா, இசை - நடனம் - நாட்டியம் என அமர்க்களப்படுகிறது.
அடிமை உருவாக்கிய அற்புத கோபுரம் குதுப்மினார்,தன்னைக் காண்போரையும் அடிமையாக்கி விடுகிறது, வனப்பாலும் வசீகரத்தாலும்..!



அருமையான ஒரு சுற்றுலா Ts-i







ஆனந்த ரயில்கள்


லகளவில்
பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச்
சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச்
சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
இந்தவாரம்....
ஆனந்த ரயில்கள்
ரயில்
பயணம் ஆனந்தமே. பாரம்பரியமிக்க ரயில்களில் பயணம் செய்வது பேரானந்தம்.
பெருமையும் கூட. இந்தியாவில் அப்படி பெருமைக்குரியவை டார்லிஜிங் இமாலயன்
ரயில், நீலகிரி மலைரயில் மற்றும் கல்கா- சிம்லா ரயில்கள். காரணம், இவை
மூன்றும் யுனெஸ்கோ அமைப்பால் உலக பண்பாட்டுச் சின்னங்களாக
அறிவிக்கப்பட்டவை.
* டார்லிஜிங் இமாலயன் ரயில்:
மேற்குவங்க
மாநிலம் சிலிகுரி- டார்ஜிலிங் மலைப்பாதையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
இது அழகாக, பொம்மைபோல் இருப்பதால் இருப்பதால் டாய் டிரெய்ன் என்றும்
அழைக்கிறார்கள். இமயமலை அடிவாரத்தில் அருமையான ஒரு சுற்றுலா Ts-j26bஉள்ள
சிலிகுரியில் புறப்பட்டு கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,200 மீட்டர்
உயரத்தில் உள்ள டார்ஜிலிங்கை அடைகிறது. பயணதூரம் 86 கி.மீ.
குட்டி
குட்டி பெட்டிகளை பழைமை வாய்ந்த நீராவி என்ஜின் இழுத்துச் செல்வதைப்
பார்க்கும்போதே பரவசம் தொற்றிக்கொள்ளும். இந்த ரயில்பாதை1879 - 1881ம்
ஆண்டுகளில் அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியதாம். இது முதலில்
சரக்குபோக்குவரத்துக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போரின்
போது சிப்பாய்களையும் ஆயுங்களையும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது.
அதன்பிறகே பயணிகள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
சிறப்புக்குரிய
டார்ஜிலிங் இமாலயன் ரயில் 1999-ம் ஆண்டில் யுனெஸ்கோவால் இந்தியாவின் உலக
பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் பண்பாட்டுச்
சின்னமாக அறிவிக்கப்பட்ட 2வது ரயில் ஆகும். (முதல் ரயில் ஆஸ்திரியாவின்
ஸெம்மரிங் ரயில்).
* நீலகிரி மலைரயில்:
தமிழகத்தில் கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலைப்பாதையில் நீலகிரி மலைரயில் இயக்கப்படுகிறது. 1845ம் அருமையான ஒரு சுற்றுலா Ts-j26cஆண்டில்
ரயில்பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1899ம் ஆண்டில் போக்குவரத்து
தொடங்கியது. மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை
என்பதால் தண்டவாளத்தின் நடுவே பல்சக்கரம் அமைத்துள்ளனர். பல்சக்கரங்களை
பற்றிக்கொண்டே ரயில் இயங்குகிறது.
மேட்டுப்பாளையம்
- குன்னூர் வரை நீராவி என்ஜினும் பின்னர் டீசல் என்ஜினும்
பயன்படுத்தப்படுகிறது. பயணதூரம் 46கி.மீ.தான் என்றாலும் பயணநேரம் சுமார்
ஐந்தரைமணி நேரமாகும். வழியில் 208 வளைவுகள், 16குகைகள், 250 பாலங்கள்
உள்ளன. எங்கு திரும்பினும் பசுமை, நீரோடை, காட்டு மிருகங்கள் என
இயற்கைமயம் மனதைத் தாலாட்டும்.
நீலகிரி மலைரயில் 2005ம் ஆண்டில் யுனெஸ்கோவால் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
* கல்கா- சிம்லா ரயில்:
அருமையான ஒரு சுற்றுலா Ts-j26aஇமயமலை அடிவாரத்தில் உள்ள குளுகுளு ஜிலுஜிலு நகரம் சிம்லா. இமாசலப்பிரதேச மாநிலத்தின் தலைநகர். கல்கா நகரத்தில் இருந்து சிம்லாவுக்கு
ரயில்பாதை அமைக்கப்பட்டதன் பின்னணி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவை
ஆண்டுவந்த ஆங்கிலேயருக்கு சிம்லாமீது ஒரு மோகம் உண்டு. காரணம், அங்கு
நிலவும் குளுகுளு சீதோஷ்ண நிலை.
அதனால் பிரிட்டிஷ் இந்தியாவின் கோடைக்கால தலைநகராக சிம்லாவை மாற்றிக்கொண்டனர்.
ராணுவத்தின் தலைமை அலுவலகத்தையும் சிம்லாவில் அமைத்தனர். இதற்காக
போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போதுதான்
கல்கா- சிம்லா ரயில்பாதை அமைக்கப்பட்டது. அருமையான ஒரு சுற்றுலா Ts-j26d1903ம்
ஆண்டு முதல் ரயில்போக்குவரத்து தொடங்கியது. கடல் மட்டத்தில் இருந்து
சுமார் 2,076 மீட்டர் உயரத்தில் உள்ள சிம்லாவுக்கு ரயிலில் செல்வது சுகமான
சூப்பரான அனுபவம்.
கல்கா - சிம்லா ரயில் 2008ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.



அருமையான ஒரு சுற்றுலா Tsj18a







புத்தகயா மஹாபோதி ஆலயம்


லகளவில்
பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச்
சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச்
சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
இந்தவாரம்....
புத்தகயா மஹாபோதி ஆலயம்
அருமையான ஒரு சுற்றுலா Tsj18bசையே
அழிவுக்கு காரணம் என்ற தத்துவத்தை உலகுக்கு போதித்தவர் புத்தர். அஹிம்சையை
வலியுறுத்தியவர். அவர் ஞானம் பெற்ற இடமே புத்தகயா. புத்தர் இங்கு ஆறு
ஆண்டுகள் தங்கி தவமிருந்திருக்கிறார். அவர் ஞானம் பெற்ற மரம் அமைந்துள்ள
பகுதியில் கட்டப்பட்டுள்ள ஆலயம் மஹாபோதி ஆலயம் என்றழைக்கப்படுகிறது. இங்கு
அமர்ந்தவாக்கில் அமைதியின் உருவமாக ஆழ்ந்த தியான நிலையில் புத்தர்
காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.
மஹாபோதி
ஆலயத்தின் 55மீட்டர் உயர பிரம்மாண்ட கோபுரமும் அதைச் சுற்றியுள்ள நான்கு
சிறிய கோபுரங்களும் இன்றளவும் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
காரணம், அனைத்தும் சுட்ட அருமையான ஒரு சுற்றுலா Tsj18cசெங்கற்களால்
கட்டப்பட்டவை. கோபுரம் கட்டப்பட்ட காலம் 3-6ம் நூற்றாண்டுகளுக்கு
இடைப்பட்ட காலம் என கருதப்படுகிறது. சிறப்புக்குரிய மஹாபோதி ஆலயத்தைக்
கட்டியவர் அசோக மன்னர். புத்தர் ஞானம் பெற்று சுமார் 250ஆண்டுகளுக்கு
பிறகு இதை கட்டியிருக்கிறார். புத்தர் தியானத்தில் அமர்ந்த இடத்தில் ஒரு
மேடை அமைக்கப்பட்டு இரண்டு பெரிய பாதச்சுவடுகள் வைக்கப்பட்டுள்ளன.
புத்தர்
பிறந்த இடமான கபிலவஸ்து, ஞானம் பெற்ற புத்தகயா, அவர் முதல்முறையாக போதனை
செய்த சாரநாத், முக்தி அடைந்த குஷி ஆகிய இடங்கள் புத்தமதத்தினருக்கு
புனிதமான இடங்கள். இவற்றில் புத்தகயா புத்தர் ஞானம் பெற்ற இடம் என்பதால்
சிறப்புகுரியதாகிறது. அருமையான ஒரு சுற்றுலா Tsj18d
உலகம்
முழுவதிலும் இருந்தும் புத்தமதத்தினர் இங்கு வந்து செல்கிறார்கள்.
புத்தகயாவில் உள்ள மஹாபோதி கோவில் பீகார் மாநில அரசின் கட்டுப்பாட்டில்
உள்ளது யுனெஸ்கோ சார்பில் உலக பண்பாட்டுச் சின்னமாக 2002ல்
அறிவிக்கப்பட்டது.
எப்படிச் செல்லலாம்?
சிறப்புக்குரிய
புத்தகயா, பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து சுமார் 95கி.மீ தொலைவில்
அமைந்துள்ளது. இங்கு செல்ல பீகாரின் முக்கிய நகரங்களில் இருந்து சாலை வசதி
இருக்கிறது. புத்தகயாவில் ரயில் நிலையம் உள்ளது. பாட்னாவில் விமானநிலையம்
உள்ளது.




அருமையான ஒரு சுற்றுலா Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Jan 31, 2010 1:17 pm

அருமையான சுற்றுலா தண்டாயுதபாணி, செங்கோட்டையை பார்பதற்கு அனுமதி உள்ளதா?
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kirupairajah



அருமையான ஒரு சுற்றுலா Skirupairajahblackjh18
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sun Jan 31, 2010 1:19 pm

அனுமதி இல்லைங்களா கிருபை?????????எனக்கு தெரியவில்லை



அருமையான ஒரு சுற்றுலா Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக