புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம். Poll_c10வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம். Poll_m10வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம். Poll_c10 
64 Posts - 50%
heezulia
வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம். Poll_c10வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம். Poll_m10வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம். Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம். Poll_c10வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம். Poll_m10வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம். Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம். Poll_c10வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம். Poll_m10வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம். Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம். Poll_c10வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம். Poll_m10வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம். Poll_c10வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம். Poll_m10வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம். Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம். Poll_c10வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம். Poll_m10வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம். Poll_c10வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம். Poll_m10வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம். Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம்.


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sun Jan 31, 2010 2:40 pm

#fullpost{display:inline;}
வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம். BANANA+2

வாழைப்பழம்
சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக
செயல்படுகிறது.விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த
தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள்.


வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது.

இரத்தத்தில்
சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ-யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள
வேண்டும். இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை
உருவாக்கிக் கொடுக்கிறது.

மக்னீசியம் பொட்டாசியம் சோடியம் பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் வாழைப்பழத்தில் தாராளமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தங்குத் தடையின்றிச் சீராக இருக்கவும்

முக்கியமாக இரத்தக் கொதிப்பு ஏற்படாமலும் பாதுகாத்து வருகிறது.

நாம் தினமும் சாப்பிடும் இரண்டு வாழைப்பழங்கள் இரத்தக் கொதிப்பை எளிதில் கட்டுப்படுத்தும்.

நாம்
சாப்பிடும் உணவில் பொட்டாசியமும் சோடியமும் இருந்தால் தான் நம் உடலில்
உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சம நிலையில் இருக்கும். பொட்டாசியம்
உப்புக் குறைந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். நாம் சாப்பிடும்
அனைத்துப் பொருள்களிலும் சோடியம் உப்பு இருக்கிறது. ஆனால், பொட்டாசியம்
இல்லை. இந்தக் குறையை தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன்
மூலம் நீக்கி விட முடியும்.

விளையாட்டு வீரர்களின் கடைசி நேர
மனநிலையை வெற்றியா தோல்வியா என் நிர்ணயிப்பது அதன்படி முழு வேகத்துடன்
செயல்படுவது என அனைத்தையும் நிர்ணயிப்பது அவர்களின் உடலில் உள்ள
பொட்டாசியம்தான். பொட்டாசியம் அளவு குறையாமல் இருந்தால் நான்காவதாக ஓடி
வரும் வீரர் அந்தக் கடைசி நொடியில் முடிவு எடுத்து முதல் ஆளாக ஓடி வந்து
வெற்றி பெற்று விடுவாராம். விளையாட்டு வீரர்களுக்கும் தன்னம்பிக்கையுடன்
வாழ வேண்டும் என்ற உறுதியானவர்களுக்கும் முழுமையான சக்தி நிரப்பப்பட்டுள்ள
பழம் வாழைப்பழம்தான்.


சத்துக்கள்: எங்கும் எப்போதும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழத்தில் இல்லாத சத்துக்களே கிடையாது.

இதில்
கர்போஹைடிரேட், புரதம், சிறிய அளவில் கொழுப்பு குளூக்கோஸ்,
நார்ச்சத்தும் ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன்
நார்ச்சத்தும் கால்சியம், , சோடியம், பாஸ்பரஸ், சல்பர், மக்னீசியம்,
இரும்பு, சிறிய அளவில் செம்புச்சத்தும் மற்றும் வைட்டமின் பொட்டாசியம் 400
மில்லி கிராம், Folocin 20 மைக்ரோ கிராம், விட்டமின், ரிபோஃபிளேவின்,
தயாமின் சி, 10 மில்லி கிராம், விட்டமின் பி 6-.6 மில்லி கிராம். முதலான
உணவுச் சத்துக்களும் A, B, C வைட்டமின்களும் சத்துக்கள் அடங்கி உள்ளதால்
அற்புதமான உணவாகும்.

மருத்துவக் குணங்கள் :
வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது.
டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை
தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது.
உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.

நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது.

பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.

நம்முடைய
உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள
செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது.

வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது.

வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.

வாழைப்பழம்
மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது
சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose)
உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது.
இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான,
உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக
ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூளை வலிமை (Brain Power):
வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது
மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான
கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவ குணங்கள் கொண்டவை. சில நோய்களுக்கு வாழையை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம் :

நெஞ்சுக்கரிக்கும் போது
ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை
நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.

கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது.

நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.

இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.

குடிபோதையை
நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச்
சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும்
அதிகரிக்கச் செய்யும்.

மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள்.

இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம்.

குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது.

கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.

பூவன் : இந்த பழத்தை கதலி என்றும் அழைப்பார்கள். மலச்சிக்கல், மூலநோயால் அவதிப்படுவோருக்கு இந்த பழம் மிகவும் நல்லது.

பேயன் பழம் : குடற்புண் தீர்க்கும். வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் தினம் ஒரு பேயன் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தாலே போதும்.

மலைவாழை : சோகையை நீக்கும். எளிதில் ஜீரணத்தை உண்டாக்கி மலச்சிக்கலைப் போக்குகிறது இந்த மலைவாழை.

ரஸ்தாலி : இதில் மருத்துவ குணங்கள் குறைவு. ஆனால் சுவை அதிகம்.

செவ்வாழை பலமளிக்கும்.

மொந்தன் காமாலைக்கு நல்லது.

பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும்.

நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.

வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவதுடன், உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளிக்கொண்டு வரப் பயன்படுகிறது

தொடர்ந்து இருமல்
இருந்து வந்தால் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து
கொள்ளுங்கள். அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை
சாப்பிட்டு வர இருமல் சரியாகும்.

காசநோய்
உள்ளவர்கள் அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழிந்து, ஒரு தேக்கரண்டி தேன்,
ஒரு டம்ளர் இளநீர் ஆகியவை சேர்த்து தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு
வர அந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.

சின்னம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு தேனில் வாழைப்பழத்தைப் பிசைந்து தினமும் இரு வேளை வீதம் சாப்பிட வேண்டும்.

பசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுவர அஜீரணம் சரியாகும். தொடர்ந்து தினமும் 2-3 வேளை இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.

காய்ச்சல் வருவதுபோல் உணர்ந்தால் ஒரு வாழைப்பழத்தை உடனே சாப்பிடுங்கள்.

கொழுப்புச்
சத்து அதிகம் உள்ளவர்களும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும் நீரிழிவு
நோய் சர்க்கரை வியாதி உள்ளவர்களும் வாழைப்பழத்தைத் ஒதுக்கி தவிர்த்து விட
வேண்டும்.


சோம்பேறிகளுக்கு சுறுசுறுப்பைத் தரும் வாழைப்பழத்தை எல்லா வயசுக்காரர்களும் விரும்பிச் சாப்பிடலாம்.

இதய நோய் காய்ச்சல் மூட்டுவலி மன உளைச்சல் முதலியவற்றை எளிதில் குணமாக்கும் அரிய பழம் அரிய மருந்து இது.

மலச்சிக்கல்
(Constipation):ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல் வந்துவிட்டால் அவனது மனித
குணமே மாறிவிடும். அதற்கு ஒரே வழி உங்கள் உணவில் தினமும் வாழைப்பழத்தைச்
சேர்த்து சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் (Fiber) இருப்பதால்
உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு
மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.

மந்தம் (Hangovers):நம்மில்
சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக
அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது.
வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் (Milk
Shake) தயார் செய்து குடிக்கவும். வாழைப்பழம் தேனுடன் சேர்த்து வயிற்றை
அமைதிப்படுத்தி இரத்தத்திலுள்ள இனிப்புச் சத்தை அதிகமாக்குகிறது. அத்துடன்
இதில் பாலும் சேர்ப்பதால் பால், நீர் சத்தை சரியாக வைத்துக்கொள்கிறது.
இந்த மூன்றும் சேர்ந்து மந்த நிலைக்கு டாட்டா காட்டிவிடுகிறது.

நெஞ்செரிப்பு
(Heart Burn):உங்களுக்கு நெஞ்செரிகிறதா? வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில
எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர
நெஞ்செரிப்பு நோய் உங்களை விட்டு பறந்துவிடும்.

உடற்பருமன்
(Over Weight):ஆராய்ச்சியாளர்கள் 5000 நோயாளிகளை சோதனை செய்து பார்த்ததில்
அதிகமான உயர்ந்த மனஅழுத்த வேலைகளில் உள்ளவர்கள் தான் இதனால் அதிகம்
பாதிக்கப்பட்டவர்கள். இந்த அழுத்தத்தின் காரணத்தால் அவர்களது இரத்தத்தில்
உள்ள குளுகோஸ் அளவு சீராக இல்லாத காரணத்தால் உடற்பருமன் ஏற்படுகிறது.
அவர்களுக்கும் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து அவர்களது இரத்தத்தில்
உள்ள குளுகோஸ் அளவை ஒரு ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வந்து உடற்பருமன்
குறைவதாக அந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

குடற்புண்
(Ulcers):வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி
அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததினால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண்
வராமல் காக்கிறது.

சீரான வெப்பநிலை (Temperature
Control):வாழைப்பழத்திற்கு குளிர்ந்த பழம் (Cooling Fruit) என்ற பெயரும்
உண்டு. தாய்லாந்து நாட்டு மக்கள் அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிடுவதால்
அவர்களது உடலின் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது.

காலநிலை மாற்றம்
(Seasonal Affective Disorder):வாழைப்பழம் சாப்பிடுவதால் காலநிலை
மாற்றத்தால் ஏற்படக்கூடிய ஒரு வித மந்த நிலையை இல்லாமல் ஆக்குகிறது.

புகைப்பிடிப்பது
(Smoking):புகைப்பிடிப்பவர்கள் அந்த கொடுமையிலிருந்து விடிவு பெற
வாழைப்பழத்தை சாப்பிடலாம். வாழைப்பழத்தில் B6. B12 அதிகமாக இருப்பதால்
புகைப்பிடிப்பதால் ஏற்படும் Nicotine ஐ கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதால்
புகைப்பிடிப்பதிலிருந்து விடுபடலாம்.

மன அழுத்தம் (Stress):வாழைப்பழத்தில்
பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவை இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள்
வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜைனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவை
சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் நீங்கும்.

காலைத் தூக்கம்
(Morning Sickness):மூன்று நேர உணவு இடைவேளைக்குள்ளும் வாழைப்பழத்தை
சாப்பிட்டால் உடம்பிலுள்ள இரத்தத்தில் உள்ள குளுகோஸ் (Blood Sugar) அளவு
அதிகமாக்கப்பட்டு காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.

நரம்பு நாளங்கள் (Nerve System):இதில் B விட்டமீன்கள் அதிகமாக இருப்பதால் நரம்பு நாளங்கள் நன்றாக செயல்பட்டு நரம்புத் தளர்வை போக்குகிறது.

அழுத்தக் குறைவு
(Depression):‘Mind’ என்ற நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவாக ஒவ்வொரு
உணவிற்குப் பின்பும் வாழைப்பழம் சாப்பிட்டால் அழுத்தக் குறைவு நோயை
விரட்டலாம் என்று கூறுகிறது. ஏனெனில் மூளையிலிருந்து கசியக் கூடிய நீரை
திட்டப்படி வெளியேற்றி மனிதனை மகிழ்ச்சியாக்குகிறது.

வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் அதிக அளவு சிவப்பணுக்களை உண்டு பண்ணி இரத்தச் சோகை வராமல் தடுக்கிறது.

குறைந்த அளவு உப்பும் அதிக அளவு பொட்டாசியமும் இருப்பதால் அதிக இரத்த அழுத்தத்தையும், வாதநோயையும் குறைக்க முடிம்

ஆராய்ச்சிப்படி
நமது தினசரி உணவில் வாழைப்பழத்தையும் சேர்த்துக் கொண்டால் Stroke கினால்
ஏற்படக்கூடிய மரணத்தின் விகிதத்தை 40% குறைக்கலாம் என்கிறது.

பொதுவாக வாழைப் பழத்தை உண்பதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் பித்த சம்பந்தமான நோய்கள் குறைகிறது. “நெப்ரைடிஸ்” என்கிற சிறுநீரக நோய், மூட்டுவலி, உயர் இரத்த அழுத்தம், குடற்புண் ஆகியவற்றை குணப்படுத்தவல்லது.

உடல்நலனுக்கு எப்பொழுதும் முழுவதுமாக பழுத்த பழங்களையே சாப்பிட வேண்டும்.

மூளையில் “செரோடினின்” உருவாக வாழைப்பழம் உதவுகிறது.

மனதில் ஏற்படும் பயம், கவலை, வருத்தம் முதலியவற்றை நீக்க செரோடினின் பெரிதும் உதவுகிறது.

வாழைப்பழத்தை இதய நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம்.

மூளைக்கு வலுவூட்டும்.

தினசரி இரவு உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்து ஓரிரண்டு வாழைப்பழம் உட்கொள்வதால் மலச்சிக்கல், பித்த நோய்கள், மனநோய், மூர்ச்சை மற்றும் பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளைப்போக்கு முதலியவை நீங்கும்.

இரத்த அழுத்தம் நிதானமாக இருக்கும். குடற்புண் வராமல் தடுக்கும்.

சத்துக்குறைவுள்ள குழந்தைகளுக்கு உடல் வலுப்பெறும்.

கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகை திணித்து திறந்த வெளியில் ஒரு இரவு வைத்து, அடுத்த நாள் காலையில் இந்த மிளகை சாப்பிட இருமல் நீங்கும்.

உட்கொண்ட உணவு உணவுக் குழாயில் சிக்கி வீக்கம் ஏற்பட்டு அவதியுறும் போது இப்பழம் சாப்பிட உணவுக் குழாயின் சிக்குண்ட பொருள் வயிற்றில் போய் சேர்ந்து விடும்.

உலர்ந்த சருமத்திற்கு
மிகுந்த ஈரப்பதத்தை அளிக்கக் கூடியது. எனவே சரும மாஸ்க்குகள், ஹேர்
பேக்குகளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. இப்பழச்சதையினுள் வெண்ணெய் போல
ஏறக்குறைய இருபது முதல் இருபத்தைந்து சதவீதம் எண்ணெய் சத்து உள்ளது.

தினசரி ஒரு செவ்வாழை வீதம் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். நரம்புகளுக்கு நல்ல பலம் ஏறும். உடலில் புதிய சுறுசுறுப்பும், மனதில் உற்சாகமும் உண்டாகும்.

தொடர்ந்து 21 தினங்களுக்கு இரவு ஆகாரத்திற்குப் பின் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நிவர்த்தியாகும்.

சிறுவர், வாலிபர், வயோதிகர்களுக்கு கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன்
அவர்களுக்கு தினசரி செவ்வாழை பாதியளவு முதல் முழு அளவு வரை தொடர்ந்து 21
தினங்களுக்குக் கொடுத்து வந்தாலே கண் பார்வை படிப்படியாகத் தெளிவடையும்.

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

வயிற்றில்
உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன்
காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.


மலத்தை இளக்கி, சூட்டை தணிப்ப தோடு, மிளகளவு பெருங்காயத்தை வாழைப் பழத்துடன் விழுங்கினால் உடம்பில் சிரங்கு நமச்சல் தீரும்.

வாழைப்பழத்தோல்:”மறு”
என்று சொல்லக்கூடிய கருப்பு வடு உடம்பில் ஏற்பட்டால் வாழைப்பழத் தோலை சிறு
துண்டாக வெட்டி உள் தோல் அந்த வடுவின் மேலும் மஞ்சள் தோல் வெளியில்
தெரியும் படி வைத்து அதன் மீது சிறிது மருத்துவ டேப் ஒட்டி வைத்தால்
நாள்பட அந்த மறு மறைந்துவிடும்.

வாழைப்பழத்தோலின் உட்பகுதியை கொசுக் கடித்த இடத்தில் வைத்து அழுத்தி தேய்த்தால் கொசுக் கடியால் ஏற்பட்ட வேதனையும் தீரும். வீக்கமும் வற்றிவிடும்.

வாழைப்பழத்தைச்
சாப்பிட்டு விட்டு அதன் தோலை குப்பைத் தொட்டியில் எறிவதற்கு முன் அதன்
உள்தோலைக் கொண்டு உங்கள் காலணி (Shoe) யை பாலிஷ் செய்து வெள்ளைத் துணியால்
துடைத்துப் பாருங்கள். உங்கள் Shoe மினு மினுக்கும்.

இதன் குருத்தைத் தீப்புண்ணில் வைத்து கட்டினால், புண் விரைவில் ஆறுவதோடு

வாழைக் குருத்தை சாப்பிட்டால் கூந்தல் நரைக்காமல் முகம் பளபளப்பாக இருக்கும்.

வாழை இலை:சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்புளங்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழை இலையை கட்டி வர நல்ல குணம் கிடைக்கும்.

காயங்கள் மற்றும் தோல் புண்களுக்கு,
தேங்காய் எண்ணெயை மஸ்லின் துணியில் நனைத்து புண்கள்மேல் போட்டு, இவற்றின்
மீது மெல்லிய வாழையிலையை கட்டுமாதிரி போடவேண்டும். இப்படி செய்தால்
விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணெய் காயம் ஆகியவற்றுக்கு
குருத்து வாழை இலையை பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றி கட்டுப்போடலாம். வாழை
இலை அல்லது பூவை கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும் அது சரியாகும்.

சின்னம்மை, படுக்கைப் புண், தீக்காயம்
ஆகியவற்றுக்கு பெரிய வாழை இலை முழுவதிலும் தேன் தடவி அதில்
பாதிக்கப்பட்டவரை சில மணி நேரம் படுக்க வைக்க வேண்டும். இதை தொடர்ந்து
செய்தால் அந்த நோய் பாதிப்பு குணமாகும்.

வாழை வேர்:குடற்புழுக்கள், நீரிழிவு, அமிலச் சுரப்பு, தொழுநோய், ரத்த சோகை
ஆகியவற்றுக்கு வாழை வேரை தீயிலிட்டு சாம்பலாக்கி, அந்த சாம்பலில் கால்
தேக்கரண்டி எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டுவர அந்த பாதிப்புகள்
குணமாகும்.

வாழைப்பிஞ்சு: இது அதிமூத்திரம், இரத்த மூலம் அடிவயிற்று ரணம் தீர்வ தோடு வாழைக்காய் சாப்பிடுவதால் இரத்தம் விருத்தியாகி, வறட்டு இருமல், பித்த வாந்தி, வாயில் நீர் ஊறுதல் போன்றவை நீங்கி பசியை அதிகரிக்கும்.

அதேபோல், வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றது. என்றாலும், மலத்தை இறுக்கி விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாழைக்காய் : பச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில்; உலர்த்தி, மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.

வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் வழங்கப்படுகிறது.

வாழைக்காயின்
மேல் தோலை மட்டும் மெலிதாகச் சீவியெடுத்து விட்டு உட்புறத் தோலுடன்
சமைப்பதே சிறந்தது. அப்போதுதான் தோலில் உள்ள சத்துகள் உடலில் சேரும்.

வாழைக்காயின் மேற்புறத் தோலை சீவியெடுத்து, துவையலாகச் செய்து சாப்பிடுவதால் இரத்த விருத்தியும், உடல் பலமும் ஏற்படுகிறது.

வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் போன்ற நோய்களைப் போக்க வாழைக்காய் ஏற்றதாகும்.

வாழைக்காய்
சாப்பிடுவதால், வாய்வு ஏற்படக்கூடும். எனவே வாய்வுத் தொல்லை இருப்பவர்கள்
வாழைக்காயை அளவுடன் எடுத்துக் கொள்ளலாம். அல்லது தவிர்க்கலாம்.


மூலத்தால்
கசியும் ரத்தப்போக்கு, வயிற்றுக் கோளாறு, இருமல், சிறுநீர் ஒழுக்கு,
கோழைச் சுரப்பு அதிகரித்தல், வயிற்றுப்புண், குடற்புண்
போன்றவற்றை வாழைக்காய் குணமாக்குகிறது.

அதனால், இதை சமையலில் குறிப்பிட்ட அளவு எடுத்து வரலாம். ரத்த சிவப்புச் செல்களை உருவாக்குவதில் வாழைக்காய்க்கு நிகர் வேறு எதுவும் கிடையாது.

அதிகமாக இதை சாப்பிட்டால் வயிற்றில் வாய்வுத் தொல்லை உண்டாகும்.

வாழைத்தண்டு : சோரியாசிஸ், தோல் தொற்றுக்கள், ரத்தத்தில் உண்டாகும் தொற்றுக்கள் மற்றும் ரத்தக் குறைபாடுகளுக்கு வாழைத்தண்டு சிறந்தது.

அடிக்கடி உணவில் சேர்ப்பதால் சிறு நீரகக் கற்கள் கரைவதோடு சிறுநீரகங்களும் பாதுகாக்கப்படுகிறது.

வாழைப்பூ, தண்டு இரண்டும் கணையத்திலும் சிறுநீரகத்திலும் கற்கள் வராமல் பாதுகாக்கும்.

வாழைத்தண்டுசாறு : இது வயிற்றுப்போக்கு, மூல ரத்த ஒழுக்கு, கை கால் எரிச்சல், இருமல், மலத்தில் ரத்தம் வெளியேறுதல், ரத்த சோகை, குடற்புழுக்கள் ஆகியவற்றை போக்குகிறது.

உடம்புக்குள்ளே "கல்லு" வந்திச்சா?
ஆரம்ப
நிலை என்றால் மிகுந்த தண்ணீர், இளநீர், குளுக்கோஸ் முதலிய பானங் களோடு
வாழைத் தண்டின் சாறு அல்லது ரசம், கொள்ளுப் பயறு சூப் அல்லது ரசம் நல்ல
பலனளிக்கும்.

வாழைப்பூ: இதை சமைத்து சாப்பிட்டால் பித்தம், ஆசனக்கடுப்பு, வெள்ளை படுதல், இவற்றை நீக்கும்.

வாழைப்பூ, தண்டு இரண்டும் கணையத்திலும் சிறுநீரகத்திலும் கற்கள் வராமல் பாதுகாக்கும்.

வாழைப் பட்டை: இயற்கை
யான குளிர்சாதனமாக அமைத்து, அவற்றால் ஆன பெட்டிகளில் பல அபூர்வ மூலிகைகள்
பாதுகாக்கப்படுவதோடு தீக்காயங்களுக்கு மிகவும் நல்லது.

வாழைப்பழத்தை
சாப்பிட்டு விட்டு அதன் தோலை தெருவிலே எறிந்து விடுவதால் அத்தோலின் மெல்
கால் வைத்து வழுக்கி மரணம் வரை சென்றவர்கள் உண்டு. அவ்வாறு தூக்கி எறிவதை
நாமும் தவிர்த்து மற்றவர்களையும் தடுக்க வேண்டும். வாழைப் பழத் தோலை
மனிதர்கள் நடக்குமிடத்தில் கண்டால் அதை எடுத்து குப்பை தொட்டியில் போட்டு
அதன் மூலம் நன்மையை தேடிக் கொள்ள முன் வரவேண்டும்.

எல்லா விட்டமின்களையும் ஒரு பழத்தின் மூலம் தந்து நமது உடல் நலம் பேண வழி வகுத்த வல்லமை படைத்த நம் இறைவனுக்கே எல்லாப் புகழும்.
******************

உயிர்வாழ உண்ணுங்கள்! உண்பதற்காக வாழாதீர்கள்!!
உணவே மருந்து! மருந்தே உணவாவதைத் தவிர்த்திடுவீர்!!

நன்றி இளையங்குடிகுரல்




வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம். Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக