புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10 
45 Posts - 58%
heezulia
தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10 
24 Posts - 31%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10 
2 Posts - 3%
cordiac
தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10 
1 Post - 1%
Geethmuru
தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10 
1 Post - 1%
Barushree
தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10 
172 Posts - 55%
heezulia
தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10 
107 Posts - 34%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10 
11 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10 
1 Post - 0%
Barushree
தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10 
1 Post - 0%
cordiac
தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அகராதி - உ


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 04, 2010 1:30 am

First topic message reminder :

உ - தமிழ் நெடுங்கணக்கில் ஐந்தாம் உயிர் எழுத்து; இரண்டு என்ற எண்ணின் குறியீடு; ஒரு சுட்டெழுத்து (எ.கா - உது, உம் மனிதன்); ஒரு பெயர்ச்சொல் விகுதி (எ.கா - தரவு, இழவு); ஒரு வினையெச்ச விகுதி (எ.கா - செய்து)
உக்கா - புகைகுடிக்க உதவும் கருவி
உக்கிரம் - கோபம்; மிகுந்த ஊக்கம்; கொடுமை
உக்கிராணம் - சாமான் அறை
உகம் - யுகம்; ஊழிக்காலம்; பூமி; நுகம்; பாம்பு; தலைப்பாட்டு; ஒரு ஜோடி

உகிர் - நகம்
உகு - கீழே உதிர்; சிதறி விழு; சிதறி விழச் செய்; தேய்வுறு; அஸ்தமனம் அடை; பறத்தல் செய்; சொரியச் செய் [உகுதல், உகுத்தல்]
உகை - செலுத்து; எழுப்பு; உயர்ந்தெழு; குதித்தெழு; செலுத்தப் பட்டுச் சொல் [உகைத்தல், உகைதல்]
உங்கு - உவ்விடம்
உச்சம் - தலைக்கு நேரான வானமுகடு; சிறப்பு; உயரம்; ஒரு கிரகத்தின் மிகவுயர்ந்த நிலை; மிக உயர்ந்த எல்லை அளவு

உச்சரி - எழுத்துக்களை ஓசையுடன் பிறப்பி; மந்திரங்களைச் செபித்தல் செய்; [உச்சரித்தல், உச்சரிப்பு, உச்சாரணம்]
உச்சசாடனம் - பேயோட்டுதல்; பிசாசை ஏவுதல்
உச்சி - வான முகடு; உச்சந்தலை; தலை; சிகரம்; நடுப்பகல்; மேல் எல்லை; உண்ட உண்கலத்தில் மீதியுள்ளது
உச்சிட்டம் - ஒருவர் எச்சில்; எஞ்சியுள்ள பொருள்; சேடம்
உச்சிமோத்தல் - (குழந்தையின்) தலையில் உச்சியை மோந்து அன்பு காட்டுதல்

உசாத்துணை - நம்பகமான நண்பன்
உசாவு - ஆலோசனை செய்; விசாரணை செய் [உசாவுதல், உசாதல்]
உசிதம் - தகுதி; மேன்மை
உசுப்பு - வெருட்டு; எழுப்பு [உசுப்புதல்]
உஞற்று - முயற்சி செய்; செய்; தூண்டு [உஞற்றுதல்]

உட்கார் - அமர்ந்திரு [உட்கார்தல்]; பகைவர்
உட்கிடை - உள்கருத்து; பேரூரின் பகுதியான சிறு கிராமம்
உட்கு - அச்சம்; நாணம்; வலிமை; மிடுக்கு; மதிப்பு
உட்கொள் - உண்ணுதல் செய்; உள்ளிழு; உள்ளே கருது [உட்கொள்ளல்]
உடந்தை - சேர்க்கை; துணை; ஆதரவு

உடம்படு - ஒத்ததாகச் செய்; இசைதல் செய் [உடம்படுதல்]
உடம்பாடு - சம்மதம்; ஒற்றுமை
உடம்பிடி - வேல்
உடம்பு - சரீரம்; மெய்யெழுத்து
உடல் - சினங்கொள்; சச்சரவிடு; ஆசையால் வருந்து [உடலுதல், உடலல்]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 04, 2010 1:33 am

உள்ளு - நினைவில் கொள்; மனத்தில் ஆராய்ச்சி செய் [உள்ளுதல்]
உள்ளுறை - உட்கருத்து; ஒரு நூலின் பொருளடக்கம்; விரைவில் பாடும் கவிக்கும் கொடுக்கும் குறிப்பு; உள்ளுறையுவமம்; வெளிப்படையாக அல்லாமல் குறிப்பால் பொருளைப் புலப்படுத்தும் உவமம்
உளப்பாடு - உட்படுத்துதல்; எண்ணம்; கருத்து; மனத்துயர்
உளம் - மனம்; இதயம்; மார்பு
உளர் - கோதுதல் செய்; (உரோமம்) ஆற்றுதல் செய்; உதிரச் செய்; தடவு; இசைக் கருவியை வாசி; கலக்கு; அமைதி குலை; அசைதல் செய்; சுழலு; தாமதம் செய் [உளர்தல்]



உளவு - இரகசியம்; இரகசியமாக அறிந்த செய்தி; ஒற்றன்; உபாயம்; உள்ள தன்மை
உளறு - பேரொலி செய்; பொருளின்றிப் பிதற்று [உளறுதல், உளறல்]
உளி - (தச்சு வேலையில் செதுக்கும் கருவி, போர்க் கருவி) கணிச்சி; இடம்; ஏழாம் வேற்றுமை உருபு; மூன்றாம் வேற்றுமைப் பொருள் தரும் இடைச் சொல்
உளியம் - கரடி
உளுந்து - உழுந்து



உளை - உடலுறுப்பில் உள்ளுற நோவு படு; மனம் வருந்து; அழிவுறு; தோல்வியுறு; சிதறு; ஊளையிடு; ஒலித்தல் செய்; வருத்துதல் செய்; வெறுப்புறு [உளைதல், உளைத்தல்]; பிடரி மயிர்; மயிர்; ஆன் மயிர்; குதிரையின் தலியில் அணிவிக்கும் மயிர்க் குஞ்சம் (தலையாட்டம்); தலை; சேறு; ஓசை; அழுகை
உற்சவம் - கோயில் திருவிழா; திருமணம்
உற்சாகம் - ஊக்கம்; முயற்சி; மகிழ்ச்சி
உற்பத்தி - பிறப்பு; தோற்றம்
உற்பலம் - அல்லி; குவளை



உற்பவம் - உற்பத்தி; பிறப்பு
உற்றது - நிகழ்ந்த காரியம்; உண்மை
உற்றார் - கற்றத்தார்; சிறந்தவர்
உறக்கம் - தூக்கம்; சோர்வு
உறங்கு - தூங்கு; சோர்வுறு; தங்கு [உறங்குதல்]



உறல் - சேர்தல்; அடைதல்; உறவு; தொடு உணர்ச்சி
உறவாடு - உறவு கொண்டாடு; நட்புப் பாராட்டு [உறவாடுதல்]
உறவு - சுற்றம்; நட்பு; விருப்பம்; பற்றுதல்; உறுதல்; தொடங்குதல்
உறழ் - மாறுபடு; நெருங்கியிரு; எதிராகு; (இலக்கணம்) இரண்டும் பொருந்தும்; ஒத்திரு; பெருக்கு [உறழ்தல், உறழ்ச்சி]
உறழ்வு - பகை; போர்; ஒப்பு; விகற்பம்; நெருக்கம்; உணர்வு; காலம்



உறி - பாண்டங்கள் வைக்கும் தூக்கு
உறிஞ்சு - (வாயால்) உள்ளிழு [உறிஞ்சுதல்]
உறு - மிக்க
உறுகண் - துன்பம்; வறுமை; நோய்; அச்சம்
உறுத்தல் - அதிகரித்தல்; தட்டுகை



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 04, 2010 1:34 am

உறுதி - திடம்; நிச்சயம்; வல்லமை; ஆதாரம்; அறிவுரை; இலாபம்; செய்யத்தக்கது; மனிதர் அடைய முயலும் நான்கு பேறுகளில் ஒன்று; கல்வி; விடாப்பிடி
உறுப்பு - அங்கம்; அவயவம்; மெய்யெழுத்து; மரக்கொம்பு; நிலவுரிமைப் பத்திரம்
உறை - வசித்தல் செய்; ஒழுகு; திடப்பொருளாக இறுகு [உறைதல்]; காரமாகு; சுவை தீவரமாகு; துளித்துளியாகு; உதிர்தல் செய்; மோது [உறைத்தல்]; பெருமை; அளவு; வெண்கலம்; மிகக் குறைந்தது; அறுபது மரக்கால் கொண்ட ஓர் அளவு; துன்பம்; இருப்பிடம்; வாழ்நாள்; கூடு; மூடி; கிணற்றின் உறை; காணிக்கை; மழை; திரவத்துளி; மழைக்காலம்; உறைமோர்; உணவு; மருந்து
உறைப்பு - காரம்; சுவையின் தீவிரம்; வாயப்பு; கொடுமை; வேதனை; தாக்குதல்; மழை பெய்தல்
உறையுள் - இருப்பிடம்; ஊர்; நாடு; தங்குதல்; துயிலிடம்



உறைவிடம் - இருக்குமிடம்; களஞ்சியம்
உறைவு - தங்குமிடம்; தங்குதல்
உன்மத்தம் - வெறி; மயக்கம்; ஊமத்தை; மன்மதன் கணைகளில் ஒன்று
உன்மத்தன் - பித்தன்
உன்னதம் - உயர்வு; மேன்மை



உன்னலர் - பகைவர்
உன்னிப்பு - கவனிப்பு; அறிவுக் கூர்மை; யூகித்தல்; முயர்சி; உயரம்
உன்னு - நினை; இழுத்தல் செய்; எழுப்பு [உன்னுதல்]
உஷ்ணம் - வெப்பம்
உஷ்ணமானி - உஷ்ணநிலை அளக்கும் கருவி



உரல் - மாவை அரைக்க பயன்படுவது.
உம்மி- நெல்லின் தோலை உரித்த பகுதி.
உண்மை - நேர்மை
உருமாறுதல் - பழைய நிலையிலிருந்து புதிய நிலைக்கு மாறுதல்
உருவம் - அடையாளம்




உஃது - உது.
உக - உகவென்னேவல் : மகிழ் : மகிழ்வோடு கொள்ள : விரும்ப :
ஏற்றுக் கொள் : விரும்பு.
உகக்கணல் - வடவைத்தீ : ஊழித்தீ : இறுதித்தீ.
உகக்கும் - உயரப் பறந்து செல்லும்.
உகசந்தி - ஓர் ஊழி முடிந்து மற்றோர் ஊழி தொடங்கும் எல்லை.



உகட்டுதல் - அருவருப்பாதல் : தேக்கெடுத்தல்.
உகண்டு - நெளிந்து.
உகத்தல் - விரும்புதல் : மகிழ்தல் : உயர்த்தல் : உயரப் பறத்தல் :
மனநிறைவடைதல் : விழைதல்.
உகந்தது - ஒப்புக் கொள்ளப்பட்டது.
உகந்தமலை - ஈழத்திலுள்ள ஒரு முருகக் கடவுள் பதி.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 04, 2010 1:34 am

உகந்தார் - நண்பர்.
உகந்து - உயர்ந்து.
உகப்பிரளயம் - ஊழி முடிவு : உகமுடிவு.
உகப்பு - உயர்வு : மகிழ்ச்சி : விருப்பம் : உயர்ச்சி : உவகை.
உவமகள் - நிலமகள்.



உகமாருதம் - ஊழிக்காற்று.
உகமுடிவு - ஊழியிறுதி : உகத்தினது இறுதியான காலம் : ஊழி மடங்கல்.
உகரக்குறுக்கம் - குற்றியலுகரம்.
உகரக்கேடு - நிலைமொழி யிறுதியுகரம் கெடுதல்.
உகளுதல் - தாவுதல் : உதறுதல்.



உகல் - அழிதல் : உதிரல் : கழலல் : சிந்தல்.
உகவல்லி - நாகவல்லி மரம்.
உகவா - அன்புமிக்கு.
உகவு - நிலையழிவு.
உகவை - மகிழ்ச்சி : நட்பு : உகப்பு : உவகை.



உகளம் - விருப்பம் : இணை : இரண்டு.
உகளல், உகளித்தல், உகளுதல் - குதித்தல் : தாவுதல் : பாய்தல் : கடத்தல் :
ஓடித் திரிதல் : நழுவிவிழுதல் : துள்ளுதல் : தாண்டல் : மகிழ்ச்சி : மிகுதல்.
உகளி - பிறழ்ந்து : குதி : பாய் : மகிழ் : உகளியென்னேவல்.
உகா, உகாய் - ஓமைமரம் : உகாமரம் : உவா மரம்.
உகாந்தம் - ஊழி முடிவு.



உகாந்தகாலன் - சிவன்.
உகாமை - அழியாமை : உமிழாமை : சிதறாமை : நிலைகுலையாமை : வெளிவிடாமை.
உகார உப்பு - கல்லுப்பு.
உகாரம் - உகரவெழுத்து.
உகாரி - உருத்திரமூர்த்தி.



உகிர்ச்சுற்று - நகத்தைச் சுற்றியெழும் புண்.
உகிர்நிலைப் பசாசக்கை - மூவகைப் பசாசக்கைகளில் ஒன்று : அது சுட்டு விரலும் பெரு விரலும் உகிர் நுனை கவ்வி நிற்பது.
உகினம் உகின் - புளிமா : இலாமிச்சை.
உகுணம் - மூட்டுப் பூச்சி.
உகுதல் - சிந்துதல் : சொரிதல் : உகிர்தல் : உமிழ்தல் : வீழ்தல் : கெடுதல் :
இறத்தல் : பறத்தல் : சாதல் : நிலைகுலைதல் : வெளிப்படுதல் : சிதறுதல் :
உதிர்த்தல் : வெளியிடுதல் : வார்த்தல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 04, 2010 1:34 am

உகுத்தல் - சிதறுதல் : உதிர்த்தல் : வெளியிடுதல் : சிந்துதல் : வார்த்தல் : சொரிதல்.
உகைதல் - செல்லுதல் : எழுதல்.
உகைத்தல் - எழுப்புதல் : செலுத்துதல் : பதித்தல் : எழுதல் : உயரவெழும்புதல்.
உகைப்ப - எழுப்புகை : செலுத்துகை.
உக்கம் - மருங்கு : தலை : இடை : தீ : ஆலவட்டம் : தூக்குக் கயிறு : பொன் எருது: கோழி : பந்து : பசு : மாடு : வெப்பம்.



உக்கரித்தல் - உங்காரம் போடல்.
உக்கரை - அக்கரை : வீட்டுலகம்.
உக்கலை - மருங்கின் பக்கம் : ஒக்கலை : உக்களை.
உக்கல் - பதனழிவு : உளுத்தது : பக்கம் : ஆலவட்டம் : ஏறு : கோழி : பசு: தீ : மருங்கு.
உக்களம் - இராக்காவல் : தலைக்காவல் : பாளையத்தைச் சூழ்ந்த அகழி.





உக்களவர் - இராக்காவலர்.
உக்களி - இனிய பலகாரம்.
உக்காகம் - அரைநாண்.
உக்காரம் - ஒலி செய்கை : வாந்தி பண்ணுதல்.
உக்காரி - அஃகுல்லியென்னுஞ் சிற்றுண்டி.



உக்கார் - இறந்தவர் : உக்கவர்.
உக்கி - தோப்புக்கரணம் : தண்டனை வகை.
உக்கிடர் - ஒரு வகைச் சிலந்திப் பூச்சி.
உக்கிடு - நாணத்தைக் காட்டுங் குறிப்புச் சொல்.
உக்கிரசாயி - துரியோதனன் தம்பிகளில் ஒருவன்.



உக்கிரசேனன் - கஞ்சன்.
உக்கிர நட்சத்திரம் - புதன் நின்ற நாளுக்குப் பதினெட்டாம் நாளும்
இருபத்து நான்காம் நாளும் : மகம் : பூரம் : பரணி நாட்கள்.
உக்கிரமம் - மூர்க்கம் : ஆங்காரம் : சினம்.
உக்கிரை - கருவசம்பு.
உக்கு - இலவங்கம் : இற்றுப்போ : மெலி : அஞ்சு.



உக்குதல் - மக்கிப்போதல் : இற்றுப் போதல்.
உக்குமம் - தூண்டுகை : கட்டுப்பாடு.
உக்குளான் - சருகுமுயல்.
உக்குறுக்கம் - குற்றியலுகரம்.
உக்கை - எருது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 04, 2010 1:34 am

உக்தம் - சொல்லப்பட்டது.
உக்தி - பேச்சு : பேசுதல்.
உங்கண் - உவ்விடம்.
உங்கரித்தல் - அதட்டுதல் : உரப்புதல் : உம்மென்றொலித்தல்.
உங்காரம் - வண்டொலி : முழங்குதல் : அதட்டுகை : அச்சுறுத்தும் ஒலி : உம்மெனல்.



உங்குணி - பெருங்கிளிஞ்சல்.
உங்கை - உன் தங்கை.
உங்ஙனம், உங்ஙன் - உவ்வாறு : உவ்விதம் : உத்தன்மை.
உசகம் - ஆமணக்கஞ்செடி.
உசநம் - உபபுராணம் பதினெட்டில் ஒன்று : அறநூல் பதினெட்டில் ஒன்று.



உசரம் - உயரம் : உயர்வு.
உசம் - நரகம்.
உசவு - கரியும் எண்ணெயுஞ் சேர்ந்த கூட்டு.
உசவுதல் - உசாதல் : கேட்டல்.
உசனன், உசன் - சுக்கிரன்.



உசனார் - உசனன்.
உசா - ஆலோசனை : ஆராய்ச்சி : ஒற்றன் : ஒற்றா : சூழ்ச்சி.
உசாக்கேட்டல் - ஆலோசனை கேட்டல்.
உசாக்கையர் - ஆலோசனை செய்வோர் : ஆராச்சியாளர்.
உசாதல் - வினாவுகை.



உசாதேவி - கதிரவன் மனைவி.
உசாத்தானம் - ஒரு சிவப்பதி.
உசாவுதல் - கேட்டல் : ஆராய்தல் : கலந்து எண்ணுதல்.
உசி - கூர்மை : விருப்பம் : நுட்பம்.
உசிதன் - பாண்டியன்.



உசிப்பித்தல் - சேர்த்தல்.
உசிரம் - இடபம் : விலாமிச்சை வேர் : மிளகு : கிரணம்.
உசிலித்தல் - சம்பாரப் பொடி கலந்து தாளித்தல்.
உசில் - சிக்கிரி மரம்.
உசு - உளு : உசுக்கு.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 04, 2010 1:35 am

உசுக்கல் - ஏவுதல்.
உசுப்பல், உசுப்புதல் - எழுப்புதல் : வெருட்டுதல் : எழுதல்.
உசும்புதல் - அசைதல் : அதட்டுதல்.
உசும்பு - அசை : இயங்கு : அதட்டுதல்.
உசுவாசம் - மூச்சை உள்ளே இழுக்கை.



உசுவாச நிசுவாசம் - மூச்சுப் போக்கு வரவு.
உசூர் - அரசியல் நடத்துமிடம்.
உசை - இரவு : காலை : மாலை : வாணன் மகள்.
உச்சட்டை - ஒல்லி.
உச்சந்தம் - விலையுயர்வு : தணிவு.



உச்சந்தலை - தலையின் உச்சி.
உச்சம்போது - நடுப்பகல்.
உச்சயிச்சிரவம் - உச்சைச் சிரவம்.
உச்சயினி - ஒரு நகரம்.
உச்சரித்தல் - எழுத்துக்களைப் பிறப்பித்தல் : உருவிடல்.



உச்சலம் - அறிவு : மனம்.
உச்சல் - அபகரித்தல் : பறித்தல் : எறிதல்.
உச்சாட்டியம் - ஒட்டுதல்.
உச்சாணம் - கொலை : உச்சாணி : உச்சாயம் : உயர்ந்த இடம் : மேன்மையான பீடம்.
உச்சாணி - உச்சி : உயர்ப்பு.



உச்சாயம் - உயர்வு : உற்சாகம்.
உச்சாரணம் - உச்சரித்தல்.
உச்சாரணை - உச்சரிப்பு.
உச்சாரம் - உச்சரிப்பு : உயர்ச்சி.
உச்சி குளிர்தல் - மகிழ்வடைதல்.



உச்சிக்கடன் - நண்பகற் கடன்.
உச்சிக்கரண்டி - சிறு கரண்டி.
உச்சிக்காலம் - நண்பகல் : உச்சம் போது.
உச்சிக்கிழான் - கதிரவன்.
உச்சிச்செடி - புல்லுருவி.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 04, 2010 1:35 am

உச்சிதம் - உசிதம் : நெருஞ்சி : அரியது : அழகு : உயர்ச்சி : கொடை : தகுதி : மேன்மை.
உச்சித்தம் - மகரக்கை.
உச்சித்திலகம் - செம்மலர் உள்ள ஒருவகைப் பூஞ்செடி.
உச்சிப்படுகை - உச்சியிடுகை.
உச்சிப்படுதல் - உச்சமாதல்.



உச்சிப்பள்ளி - சதுர்த்தசி தோறும் பள்ளிக்கூடத்தில் விடப்படும் பள்ளி விடுமுறை.
உச்சிப்பூ - குழந்தைகளின் தலையணிகளில் ஒன்று.
உச்சியாட்டம் - ஒரு விளையாட்டு.
உச்சியார் - தேவர்.
உச்சிரதம் - பிரண்டை.



உச்சிவிளை - உச்சிக்கடன்.
உச்சிவீடு - உச்சி வேளையில் மழை விட்டிருக்கை.
உச்சி வேர் - மூலவேர்.
உச்சீவித்தல் - பிழைத்தல்.
உச்சுக்காட்டல் - நாயைத் தூண்டிவிடுதல்.



உச்சுக்கொட்டுதல் - வெறுப்புக் குறி காட்டுதல்.
உச்சுவாசம் - மூச்சை உள்ளே வாங்குகை.
உச்சூடை - கொடிக் கம்பத்தின் நுனி.
உச்சைச்சிரவம் - இந்திரன் குதிரை.
உச்சைச்சிரவா - உச்சிரச் சிரவம்.





உஞற்றுதல் - ஊக்கிமுயலுதல் : செய்தல் : தூண்டுதல்.
உஞ்சட்டை - மெலிவு.
உஞ்சம் - உஞ்சவிருத்தி.
உஞ்சல் - ஊஞ்சல்.
உஞ்சவிருத்தி - சிதறிய கூலங்களைப் பொறுக்கிச் செய்யும் பிழைப்பு : அரிசிப் பிச்சையெடுத்து வாழ்தல்.



உஞ்சு - உய்ந்து என்னும் வினையெச்சம்.
உஞ்சேனை - உச்சயினி : உஞ்சை.
உஞ்சை - அவந்தி நகரம்.
உடக்கரித்தல் - தோள் தட்டுதல்.
உடக்குதல் - செலுத்தல் : நாணிற்செறிதல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 04, 2010 1:35 am

உடக்கெடுத்துப்போதல் - உடம்பு மிக மெலிதல்.
உடங்கமிழ்தம் - உயிரும் உடம்பும் ஒன்று கூடி நீடு வாழச் செய்யும் அமிருதம்.
உடங்கு - பக்கம் : ஒத்து : ஒருபடியாக : சேர : உடனே.
உடசம் - பன்னசாலை : வீடு : வெட்பாலை.
உடந்தைக் குற்றவாளி - சேர்க்கைக் குற்றவாளி.



உடம்படுதல் - மனம் ஒத்தல்.
உடும்படுமெய் - நிலைமொழி யீற்றிலும் வருமொழி முதலிலும் உள்ள
இரண்டு உயிர்களைச் சேர்க்கும் மெய்யெழுத்து.
உடம்படிக்கை - பொருத்தச் சீட்டு.
உடும்பாடு - மனப்பொருத்தம் : ஒற்றுமை.
உடம்புக்கீடு - கவசம்.



உடம்பெடுத்தல் - பிறத்தல்.
உடம்பை - கலங்கற் புனல்.
உடம்பொடு புணர்த்தல் - கூறும் இலக்கியத்திலேயே சொல்ல வேண்டியதொன்றை உய்த்துணர வைத்தல்.
உடம் - இலை : புல்லு : விடியற்காலம் : உடனே.
உடர் - உடல் : உடம்பு.



உடலக்கண்ணன் - இந்திரன்.
உடலந்தம் - உடலழிவு : மரணம் : சாக்காடு.
உடலம் - உடல்.
உடலல் - சினத்தொடு பொருதல்.
உடலவருத்தனை - மெய்யாற் செய்யும் அபிநயம்.



உடலிலான் - காமன்.
உடலுதல் - சினத்தல் : பகைத்தல் : மாறுபடுதல் : போர் புரிதல் : வருத்தமுறல்.
உடலுருக்கி - கணைச்சூடு.
உடலூழ் - உடம்பின் நுகர்ச்சி.
உடலெடுத்தல் - பிறத்தல் : தடித்தல் : உடல் நன்றாகத் தேறுதல்.



உடலெழுத்து - மெய்யெழுத்து.
உடல்வாசகம் - உறுதிப்பத்திரத்தின் நடுச் செய்தி.
உடல்வேலை - பருவேலை : வரும்படியான வேலை.
உடறல், உடறுதல் - சினத்தல் : உடலல்.
உடற்கரித்தல் - தோள் தட்டுதல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 04, 2010 1:35 am

உடற்கருவி - கவசம் : உடற்காப்பு.
உடற்காப்பு - உடற்கருவி.
உடற்குறை - தலையற்றவுடல் : கவந்தம்.
உடற்கூறு - உடல் இலக்கணம்.
உடற்றல் - சினம் : அழித்தல் : உக்கிரமாய் நடத்துதல் : சித்தியாகாதிருக்கச் செய்தல் : சினக்குறிப்பு : துரத்தல் : பகைத்தல் : பெருஞ்சினம்.



உடற்றிசினோர் - சினப்பித்தவர்.
உடற்றுதல் - வருத்துதல் : சினமூட்டுதல் : பொருதல் : கெடுத்தல் : அழித்தல் : சிதறிச் செய்தல்.
உடனாதல் - கூடிநிற்றல்.
உடனாளி - கூட்டாளி : சொத்துள்ளவன்.
உடனிகழ்ச்சி, உடனிகழ்தல் - உடன் நிகழ்தல் : ஒருங்கு நடைபெறுதல்.





உடனிகழ்வான் - துணைவன்.
உடனிலை - கூடிநிற்கை.
உடனிலைச்சிலேடை - ஒரு பாட்டு நேரே வரும் பொருளையன்றி
வேறும் ஒரு பொருள் கொண்டு நிற்கும் அணி.
உடனிலைச்சொல் - ஒப்புமைக் கூட்டம்.
உடனிலை மெய்ம்மயக்கம் - ரழ ஒழிந்த பதினாறு மெய்களுள் ஒவ்வொன்றும் தன்னுடன் தான்நின்று மயங்குகை.



உடனுக்குடனே - அப்போதைக் கப்போது.
உடனுறைவு - புணர்ச்சி.
உடனொத்தவன் - சமமானவன்.
உடன்கையில், உடன்கை - உடன் : உடனே.
உடன்கூட்டு - பங்காளி யாயிருத்தல்.



உடன்படல் - இணங்குதல் : சேருதல் : நூன்மதங்கள் ஏழனுள் ஒன்று.
உடன்படுதல் - இசைதல்.
உடன்பாடு - மனப்பொருத்தம் : இசைவு.
உடன்பாட்டுவினை - விதிவினை.
உடன்புணர்ப்பு - சமவாயம்.



உடன்வயிறு - உடன்பிறந்தவர்கள்.
உடன் வயிற்றோர் - உடன் வயிறு.
உடன்றல் - சிதைத்தல் : போர் : பொருதல் : சினக்குறிப்பு.
உடன்று - வெகுண்டு.
உடாய்த்தல் - எரித்தல் : ஏமாற்றுதல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 04, 2010 1:36 am

உடுகாட்டி - பொன்னாங்காணி.
உடுகூறை - புடைவை.
உடுக்கோள் - திங்கள்.
உடுண்டுகம் - வாகை மரம்.
உடுத்தல் - சூழ்தல் : ஆடையணிதல்.



உடுநீர் - அகழி.
உடுபதம் - வானம்.
உடுபம் - தெப்பம் : தோணி : படகு : ஓடம்.
உடுபன் - திங்கள்.
உடுபாதகம் - பனை : பெண்ணை : தாளி.



உடுப்பை - உடுப்பாயாக.
உடுமாற்று - நடைபாவாடை : உடை மாற்றுகை.
உடுமானம் - நிலைமைக்குத் தகுந்த உடை.
உடும்புநக்கன் - வஞ்சகன்.
உடுவம் - அம்பின் ஈர்க்கு.



உடுவை - அகழி : நீர்நிலை : அகழ்.
உடைகுநர் - தளர்பவர்.
உடைகுளம் - பூராடநாள்.
உடைகொல் - உடை : வேலமரம்.
உடைக்கல் - காவிக்கல்.



உடைஞாண் - அரைஞாண்.
உடைதரல் - மலரல்.
உடைதல் - சாதல் : தகர்தல் : பிளத்தல் : கெடுதல் : தோற்றல் : உலைதல் : நெகிழ்தல் : குலைதல் : தளர்தல் : மலர்தல் : முறுக்கவிழ்தல் : மனங்கலங்கல் : எளிமைப்படுதல் : சாய்தல்.
உடைதாரம் - அரையில் அணியும் அணி விசேடம்.
உடைத்தல் - இரித்தல் : கெடுத்தல் : தகர்த்தல் : தளர்த்தல் : வருந்துதல் : தோற்கச் செய்தல்.



உடைத்து - உடையது.
உடைநாண் - உடைமேல் அணியும் நாண்.
உடைபடை - தோல்வியடைந்த படை.
உடைப்பெடுத்தல் - வெள்ளத்தாற் கரையழிதல்.
உடைப்பெருஞ்செல்வர் - மிகுந்த செல்வத்தையுடையவர்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக