ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Today at 9:16 pm

» திருமண அறிவிப்பு
by மகா பிரபு Today at 9:09 pm

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by சார்லஸ் mc Today at 9:08 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 9:08 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 9:00 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by பிஜிராமன் Today at 8:54 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by பிஜிராமன் Today at 8:50 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Today at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by கேசவன் Today at 7:55 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 6:58 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm

» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm

» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm

» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm

» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm

» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm

» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm

» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm

» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

கலைவேந்தனின் கவிதைகள்....!

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by கலைவேந்தன் on Thu Feb 04, 2010 9:31 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

மன்னித்தருள்வாயா தேவி...?

செருக்கெலாம் தகர்ந்ததுகாண் செந்தணலில் வீழ்ந்தனன்யான்
சுருக்கென்ற ஒருசொல்லால் சுகமனைத்தும் இழந்தனன்காண்
விருப்பின்றி வாழ்கின்றான் வினைதீர்க்கும் பாடறியான்
ஒருசொல்லால் ஒப்பற்ற சொர்க்கமும் சரிந்தது காண்...!

செந்தேளாய்க் கொட்டியவன் செந்தேனாய் இனியாவான்
நொந்தேதான் வாழ்கின்ற நோயாளி இவனறிவாய்
வெந்தேபோய் வீழ்கின்ற வெறும்வாழ்க்கை வாழ்கின்றான்
வந்திவனை நீகாத்து வரம் தருவாய் வாக்கரசி...!

மாயத்திரை யதனால் மக்கியது இவன் மனது
காயத்தால் புலம்புமிவன் கடுஞ்சொல் பொறுப்பாயோ
நேயத்தால் வந்ததென நெஞ்சம் நீ நெகிழ்வாயோ
போயவன் ஒழியட்டும் என்றவனை வெறுப்பாயோ?

திடமாக இவன்மனதைக் கட்டிடும் வழியறியான்
விடமாகப்பொழியும் வார்த்தைகளை மறந்திடுவாய்
முடமாகிப் போனவனுன் முகம்காணா ஏக்கத்தால்
சடமாக நிற்கின்றான் உன் பாதம் பணிகின்றான்...!

வலிபொறுக்கா இதயத்துடன் வாழ்க்கைதனைக் கடக்கின்றான்
கிலிகொண்டு மரணமதை என்னாளும் எதிர்நோக்கி
மெலிந்துபோன மனஉறுதி மெய்மறந்த ஏக்கமனம்
கலிநீங்கா கவலையுடன் உன்கழல் பணிகின்றான்...!

இனிமேலும் இவ்வாறு மனம்கிழித்து ரணமாக்கும்
கனிவில்லா சொற்களை கனவிலும் உதிர்த்திடான்
பனிபோன்ற் இன்சொல்லாள் ! நீபரிவுடன் மன்னிப்பாய்
உனில்தனைக் கரைத்துநின்று கால்பணிந்தான் அவன்ஏற்பாய்...!

கன்னித் தமிழால் கனிந்துன்னை வேண்டுகின்றான்
பின்னிப் பிணைந்தவனை மார்பனைத்து முகம்புதைத்து
முன்னிலும் பரிவாகத் தலைகலைத்து முத்தமிட்டு
மன்னித் தருள்வாயா மனமிரங்கி ஏற்பாயா...?

விரகத் தாபமில்லை வீணான ஐயமில்லை
இரவெலாம் முகம்புதைத்து இடைவிடா அழுகையினால்
வரவறியா வறியவன் போல் மனம்கலங்கிப் பேதலித்து
மரணம் தரும்வலி அவனுக்கிதனினும் கொடிதாமோ...?

தாயின்மேல் ஆணையாய் ஒன்றுசொல்வான் செவிதருவாய்
நாயினும் மேலான பாடுகள் பலபட்டும்
சேயொன்று முகம்பார்க்க தாயினுக் கேங்கிடும்
ஓயாத போராட்டம் உனைக்காண மட்டும் தான்..!

தன்னிலை விளக்கிவிட்டான் தன்னிதயம் திறந்துவைத்தான்
முன்னிலும் மேலதிகம் உனைக்காண விழைகின்றான்
அன்னவனில் நிறைந்து விட்ட தீக்குணங்கள் மன்னித்து
உன்னுடன் அணைப்பாயா உருகிநின்றான் கைகூப்பி...!

Last edited by கலை on Thu Mar 03, 2011 8:50 pm; edited 10 times in total

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by அப்புகுட்டி on Mon Apr 26, 2010 1:11 am

கலை wrote:
அப்புகுட்டி wrote:
கலை wrote:உனக்காக...!

உன்னோடென் றானவரை உயிருடனே வாழ்ந்திருப்பேன்
என்னஇடர் தான்வரினும் எதிர்த்துநின்று போரிடுவேன்
சின்னதொரு துயருனையே சீரழிக்க வந்தாலும்
என்னையே இழந்தெனிலும் உன்னையே காத்திருப்பேன்...!

இதை நானும் எழுதி விட்டேன் அருமை.
தாமதம் என்னைப் பாத்துச் சிரிக்கிறது.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

புரியவில்லை அப்பு... நன்றி அப்பு...! [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

சிறியதோர் துயர் உன்னை
சீரழிக்க வந்தாலும்
என்னையே இழந்தெனிலும்
உன்னைக் காத்திடுவேன்.
இதை நான் எழுதி விட்டேன்
அண்ணா உங்களை வாழ்த்துவதில்
தாமதம் ஆகி விட்டது
அதுதான் என்னைப் பார்த்து
சிரிக்கிறது என்று சொன்னேன்
அண்ணா வாழ்த்துக்கள் சொல்கிறேன் அண்ணா
என் கவி கண்ணா உங்கள் கவி வெள்ளத்தில் நான் நீந்துகிறேன் அண்ணா.

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by மஞ்சுபாஷிணி on Thu May 06, 2010 5:21 pm

[You must be registered and logged in to see this image.]

மன்னித்தருள்வாயா தேவி...?

செருக்கெலாம் தகர்ந்ததுகாண் செந்தணலில் வீழ்ந்தனன்யான்
சுருக்கென்ற ஒருசொல்லால் சுகமனைத்தும் இழந்தனன்காண்
விருப்பின்றி வாழ்கின்றான் வினைதீர்க்கும் பாடறியான்
ஒருசொல்லால் ஒப்பற்ற சொர்க்கமும் சரிந்தது காண்...!

நேர்மை மனதில் அன்பு கொட்டிக்கிடக்கும்போது
வாய்ச்சொல் மனதை நோகடிக்குமோ சொல்
விருப்பமின்றி வாழ்ந்தாலும் வாழ்க்கை உன்னுடையதே
விரும்பிய சொர்க்கம் உன்னருகே கண்டாயோ?

செந்தேளாய்க் கொட்டியவன் செந்தேனாய் இனியாவான்
நொந்தேதான் வாழ்கின்ற நோயாளி இவனறிவாய்
வெந்தேபோய் வீழ்கின்ற வெறும்வாழ்க்கை வாழ்கின்றான்
வந்திவனை நீகாத்து வரம் தருவாய் வாக்கரசி...!

மனமுருகி செய்தவை உணரும் தருணத்தில்
போன சொர்க்கம் வந்து சேர்ந்ததே அதேநொடியில்
வெறும் வார்த்தைகள் கோட்டை கட்டுவதில்லை
காட்டும் அன்பிலோ மனம் நெகிழ்ந்து போவாயே....

மாயத்திரை யதனால் மக்கியது இவன் மனது
காயத்தால் புலம்புமிவன் கடுஞ்சொல் பொறுப்பாயோ
நேயத்தால் வந்ததென நெஞ்சம் நீ நெகிழ்வாயோ
போயவன் ஒழியட்டும் என்றவனை வெறுப்பாயோ?

சொற்களும் காட்சிகளும் மனதை மயக்கினாலும்
காயத்தால் சிதறுண்டு துடியாய் துடித்தாலும்
நெஞ்சம் மறுக்குமோ அன்பு மறையுமோ
நேசம் இது வந்துனை அணைக்குமோ?

திடமாக இவன்மனதைக் கட்டிடும் வழியறியான்
விடமாகப்பொழியும் வார்த்தைகளை மறந்திடுவாய்
முடமாகிப் போனவனுன் முகம்காணா ஏக்கத்தால்
சடமாக நிற்கின்றான் உன் பாதம் பணிகின்றான்...!

வாய்வழி வார்த்தைகள் விஷத்தை பொழிந்தாலும்
மறந்து மறுத்து மனதில் மறுகி புதைத்து
வந்தே உன்னை தாயாய் அணைத்து காக்கும்
நீஎன் இணையென்ற சொல் மகிழவைக்கும்....

வலிபொறுக்கா இதயத்துடன் வாழ்க்கைதனைக் கடக்கின்றான்
கிலிகொண்டு மரணமதை என்னாளும் எதிர்நோக்கி
மெலிந்துபோன மனஉறுதி மெய்மறந்த ஏக்கமனம்
கலிநீங்கா கவலையுடன் உன்கழல் பணிகின்றான்...!

வலிகள் என்றும் வாழ்க்கையில் துணைவருவதில்லை
பயமே அதனை இன்னும் கூட்டிவிட முயலும்போது
மன உறுதியில் வலிகளை புறம் நீயும் ஒதுக்கி
கவலைகளை என்றும் மறந்துவிட மாட்டாயோ?

இனிமேலும் இவ்வாறு மனம்கிழித்து ரணமாக்கும்
கனிவில்லா சொற்களை கனவிலும் உதிர்த்திடான்
பனிபோன்ற் இன்சொல்லாள் ! நீபரிவுடன் மன்னிப்பாய்
உனில்தனைக் கரைத்துநின்று கால்பணிந்தான் அவன்ஏற்பாய்...!

சொன்னச்சொல் மாறிடாது இருந்துவிடும் மனிதனில்லை
இயல்புடனே இருந்து இன்முகத்தை காட்டிடுவாய்
மன்னித்து மனமருளும் கலைமகள் உன்னுடன் என்றுமிருக்க
இத்தனை மனம் உடைந்த சொல் எதற்கு உனக்கு

கன்னித் தமிழால் கனிந்துன்னை வேண்டுகின்றான்
பின்னிப் பிணைந்தவனை மார்பனைத்து முகம்புதைத்து
முன்னிலும் பரிவாகத் தலைகலைத்து முத்தமிட்டு
மன்னித் தருள்வாயா மனமிரங்கி ஏற்பாயா...?

இனிய மொழியே கற்கண்டாய் ருசிக்கும் நிலையில்
பின்னிருந்து அணைத்து அன்பை நீ பகிர்ந்திட
காதலில் இடர்கள் எல்லாம் தொலைந்து விலகிவிட
கனிந்தமனம் எதையும் பொருட்படுத்துவதில்லை

விரகத் தாபமில்லை வீணான ஐயமில்லை
இரவெலாம் முகம்புதைத்து இடைவிடா அழுகையினால்
வரவறியா வறியவன் போல் மனம்கலங்கிப் பேதலித்து
மரணம் தரும்வலி அவனுக்கிதனினும் கொடிதாமோ...?

வீண்பயமேன் அவசியமற்ற வாதம் ஏன்
அழுகையும் கண்ணீரும் மனதை பலகீனப்படுத்த
மரணத்தின் உச்சி சென்றடைய விரும்புவது ஏன்
கொடியதெல்லாம் இனி மறைந்து நல்லது நடந்தேறும்

தாயின்மேல் ஆணையாய் ஒன்றுசொல்வான் செவிதருவாய்
நாயினும் மேலான பாடுகள் பலபட்டும்
சேயொன்று முகம்பார்க்க தாயினுக் கேங்கிடும்
ஓயாத போராட்டம் உனைக்காண மட்டும் தான்..!

தாயாய் உனை அணைக்க மாயமாய் வந்தருள
மனமிறங்கி எல்லாம் மறந்து ஏக்கங்கள் நீ தொலைத்து
முகத்தை விடிவெள்ளியாய் வைத்துக்கொள் தங்கம்நீ
மடிசேரும் நல்லமகவு உன்னைப்போல் காண்பதில்லை இனி

தன்னிலை விளக்கிவிட்டான் தன்னிதயம் திறந்துவைத்தான்
முன்னிலும் மேலதிகம் உனைக்காண விழைகின்றான்
அன்னவனில் நிறைந்து விட்ட தீக்குணங்கள் மன்னித்து
உன்னுடன் அணைப்பாயா உருகிநின்றான் கைகூப்பி...!

படிக்கும்போதே மனதை பிசைகிறது கலை.... இத்தனை வலி வேண்டாம் உனக்கு இறைவன் என்றும் நல்லருள் தரட்டும் உனக்கு....

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9683
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by சபீர் on Thu May 06, 2010 6:01 pm

படிக்கும்போதே மனதை பிசைகிறது கலைசார்.... இத்தனை வலி வேண்டாம் உங்களுக்கு இறைவன் என்றும் நல்லருள் தரட்டும் உங்களுக்கு

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by தமிழ்ப்பறவை on Thu May 06, 2010 6:56 pm

தொகுப்பு (கலை அண்ணன் அனைத்துக் கவிதைகளும் ஒரே இடத்திலிருந்து உலவ)

[You must be registered and logged in to see this link.]

அனைத்துக் கவிதைகளும் அருமை முத்துக்கள்,
காக்க வேண்டிய முத்தான சொத்துக்கள்...
இன்று உங்கள் கவிதை அனைத்தும் படிக்க நேரம் கிடைத்தமைக்கு இறைவனுக்கு ஒரு நன்றி...
அதே நேரம் உங்கள் கவிதைப் பொன் துளிகளுக்கு பாராட்டுக்கள்...

தன்னை அறிந்தவன் தரணியும் ஆள்வான்
தன்னை மறந்தவன் தவறி்ப் பிறழ்வான்
தன்னை தன்னில் தேடிப் பிடித்து
தன்னுள் அடக்கியோன் விந்தைகள் புரிவான்...!

தமிழுடன் கொஞ்சி விளையாடுவதில் தீரரான உங்களுக்கு வாழ்த்துக்கள்...!

தமிழ்ப்பறவை
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 290
வசிப்பிடம்: USA
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 9

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by மஞ்சுபாஷிணி on Thu May 06, 2010 7:25 pm

உண்மையே பாரதி....

கலைக்கு கலைமகளின் ஆசி இருப்பதால் தான் இப்படி வரிகளை அழகாய் கோர்க்க முடிகிறது கலையால்...

நான் பலமுறை பிரமிச்சதுண்டு.....

அன்பான நன்றிகள் பாரதி...

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9683
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by கலைவேந்தன் on Thu May 06, 2010 9:49 pm

சபீர் wrote:படிக்கும்போதே மனதை பிசைகிறது கலைசார்.... இத்தனை வலி வேண்டாம் உங்களுக்கு இறைவன் என்றும் நல்லருள் தரட்டும் உங்களுக்கு

மிக்க நன்றி சபீர்.. [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by மஞ்சுபாஷிணி on Thu May 06, 2010 11:55 pm

கத்தி மேல் நடப்பது போல் என்பதை கேள்விப்பட்டிருக்கியா கலை??

இந்த கவிதை அப்படிதான் இருக்கு...

அருமையான வரிகள் அமைத்து எப்படியோ முடிய நினைத்த கவிதையை மிக சரியான மைக்ரோ செகண்ட்ல வண்டியை அழகா வழி மாற்றி ஓட்டியது போல்....

மிக அருமையான கவிதை கலை...

அன்பு அதிகமாகலாம்

காதல் பெருகலாம்....

ஆனால் கட்டுப்பாடு ரொம்ப முக்கியம்...

அந்த கட்டுப்பாடு தொலையும்போது அவமானங்கள் சந்திப்பது பெண்களின் சோகம் நிலையாகிவிடுகிறது...

சோதனைகள் என்றுமே இறைவன் பெண்களுக்கென்று தருவது ஏன்??

உண்மையான காதலில் தொடுதல் கூட நம்பிக்கையை முன் வைத்து தான் என்பது போல் சொல்கிறது கலை கவிதை...

மிக மிக அழகான வரிகளுடன் நேர்த்தியாக இப்படி ஆரம்பித்து நச் நு

முக்கித்தவித்த வார்த்தைகள் வெளிவரத்தயங்கின...

'மாலையிடுவாயா இல்லை காலையில் ஓடிடுவாயா?'

முடிச்சே பாரு... இங்க தான் உன்கவிதைக்கு கிடைத்த வெற்றி கலை...அன்பான பாராட்டுக்கள் கலை....

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9683
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by கலைவேந்தன் on Fri May 07, 2010 1:23 am

Aathira wrote:
கலை wrote:
களவுக் காதல்

கலைத்துப்போட்ட கார்மேகமாய்

இடை வரையில் தவழ்ந்து கொஞ்சிய

அவள் கூந்தலில் முகம் புதைத்தேன்...

என் கரங்கள் அத்துமீறும் போது

அந்த வெட்கக்கண்கள் வருடிய இடமெலாம்

சிலிர்த்து உணர்ந்தேன்.

காதலை எதிர்க்கும் துணிவு அவள் கைகளுக்கில்லை...

முத்தம் தரத்துடித்த உதடுகள் வெட்கத்திலும் துடித்தன...

கண்ணீர்த்துளிகள் சற்றே வெளிவர அனுமதிகேட்க

உயர்ந்து தணிந்த மார்புக்கூட்டுக்குள்

முக்கித்தவித்த வார்த்தைகள் வெளிவரத்தயங்கின...

'மாலையிடுவாயா இல்லை காலையில் ஓடிடுவாயா?'

உன் கைவிரல்கள் இட்ட அழகிய எழுத்துக் கோலத்தில் சிக்கித் தவித்தன ஈகரை வாசகர்களின் ரசனயான மனங்கள.. இதில் ஆதிரா மட்டும் என்ன விதிவிலக்கா கலை... என்ன சொல்லி பாராட்ட என்று அறியாமல் (உண்மையாக இக்கவிதைக்கும் சிவா 25 க்கும்) இதுவரை எத்தனை முறை படித்து இருப்பேன் என்பது என் மவுசுக்கே தெரியும்.. திரும்பத் திரும்ப எடுத்துக் கொடுப்பது அதுதானே..என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...கலை..... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

காலம் தாழ்ந்த நன்றி ஆதிரா... உங்கள் பாராட்டு வசிஸ்டர் வாயால் நான் பிரம்மரிஷிப்பட்டம் அடைந்ததைப் போல்தான்... [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by கலைவேந்தன் on Fri May 07, 2010 1:25 am

அப்புகுட்டி wrote:
கலை wrote:
அப்புகுட்டி wrote:
கலை wrote:உனக்காக...!

உன்னோடென் றானவரை உயிருடனே வாழ்ந்திருப்பேன்
என்னஇடர் தான்வரினும் எதிர்த்துநின்று போரிடுவேன்
சின்னதொரு துயருனையே சீரழிக்க வந்தாலும்
என்னையே இழந்தெனிலும் உன்னையே காத்திருப்பேன்...!

இதை நானும் எழுதி விட்டேன் அருமை.
தாமதம் என்னைப் பாத்துச் சிரிக்கிறது.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

புரியவில்லை அப்பு... நன்றி அப்பு...! [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

சிறியதோர் துயர் உன்னை
சீரழிக்க வந்தாலும்
என்னையே இழந்தெனிலும்
உன்னைக் காத்திடுவேன்.
இதை நான் எழுதி விட்டேன்
அண்ணா உங்களை வாழ்த்துவதில்
தாமதம் ஆகி விட்டது
அதுதான் என்னைப் பார்த்து
சிரிக்கிறது என்று சொன்னேன்
அண்ணா வாழ்த்துக்கள் சொல்கிறேன் அண்ணா
என் கவி கண்ணா உங்கள் கவி வெள்ளத்தில் நான் நீந்துகிறேன் அண்ணா.

மிக்க நன்றி அப்பு தம்பி... அண்ணன் எழுதும் வரிகளைத் தம்பி கையாளுவதில் என்ககும் பெருமைதான் தம்பி... என் வரிகள் அனைவரையும் மகிழ்விக்கும் போது என் ஆயுள் நீள்கிறது தம்பி...! [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by கலைவேந்தன் on Fri May 07, 2010 1:30 am

மஞ்சுபாஷிணி wrote:[You must be registered and logged in to see this image.]

மன்னித்தருள்வாயா தேவி...?

செருக்கெலாம் தகர்ந்ததுகாண் செந்தணலில் வீழ்ந்தனன்யான்
சுருக்கென்ற ஒருசொல்லால் சுகமனைத்தும் இழந்தனன்காண்
விருப்பின்றி வாழ்கின்றான் வினைதீர்க்கும் பாடறியான்
ஒருசொல்லால் ஒப்பற்ற சொர்க்கமும் சரிந்தது காண்...!

நேர்மை மனதில் அன்பு கொட்டிக்கிடக்கும்போது
வாய்ச்சொல் மனதை நோகடிக்குமோ சொல்
விருப்பமின்றி வாழ்ந்தாலும் வாழ்க்கை உன்னுடையதே
விரும்பிய சொர்க்கம் உன்னருகே கண்டாயோ?

செந்தேளாய்க் கொட்டியவன் செந்தேனாய் இனியாவான்
நொந்தேதான் வாழ்கின்ற நோயாளி இவனறிவாய்
வெந்தேபோய் வீழ்கின்ற வெறும்வாழ்க்கை வாழ்கின்றான்
வந்திவனை நீகாத்து வரம் தருவாய் வாக்கரசி...!

மனமுருகி செய்தவை உணரும் தருணத்தில்
போன சொர்க்கம் வந்து சேர்ந்ததே அதேநொடியில்
வெறும் வார்த்தைகள் கோட்டை கட்டுவதில்லை
காட்டும் அன்பிலோ மனம் நெகிழ்ந்து போவாயே....

மாயத்திரை யதனால் மக்கியது இவன் மனது
காயத்தால் புலம்புமிவன் கடுஞ்சொல் பொறுப்பாயோ
நேயத்தால் வந்ததென நெஞ்சம் நீ நெகிழ்வாயோ
போயவன் ஒழியட்டும் என்றவனை வெறுப்பாயோ?

சொற்களும் காட்சிகளும் மனதை மயக்கினாலும்
காயத்தால் சிதறுண்டு துடியாய் துடித்தாலும்
நெஞ்சம் மறுக்குமோ அன்பு மறையுமோ
நேசம் இது வந்துனை அணைக்குமோ?

திடமாக இவன்மனதைக் கட்டிடும் வழியறியான்
விடமாகப்பொழியும் வார்த்தைகளை மறந்திடுவாய்
முடமாகிப் போனவனுன் முகம்காணா ஏக்கத்தால்
சடமாக நிற்கின்றான் உன் பாதம் பணிகின்றான்...!

வாய்வழி வார்த்தைகள் விஷத்தை பொழிந்தாலும்
மறந்து மறுத்து மனதில் மறுகி புதைத்து
வந்தே உன்னை தாயாய் அணைத்து காக்கும்
நீஎன் இணையென்ற சொல் மகிழவைக்கும்....

வலிபொறுக்கா இதயத்துடன் வாழ்க்கைதனைக் கடக்கின்றான்
கிலிகொண்டு மரணமதை என்னாளும் எதிர்நோக்கி
மெலிந்துபோன மனஉறுதி மெய்மறந்த ஏக்கமனம்
கலிநீங்கா கவலையுடன் உன்கழல் பணிகின்றான்...!

வலிகள் என்றும் வாழ்க்கையில் துணைவருவதில்லை
பயமே அதனை இன்னும் கூட்டிவிட முயலும்போது
மன உறுதியில் வலிகளை புறம் நீயும் ஒதுக்கி
கவலைகளை என்றும் மறந்துவிட மாட்டாயோ?

இனிமேலும் இவ்வாறு மனம்கிழித்து ரணமாக்கும்
கனிவில்லா சொற்களை கனவிலும் உதிர்த்திடான்
பனிபோன்ற் இன்சொல்லாள் ! நீபரிவுடன் மன்னிப்பாய்
உனில்தனைக் கரைத்துநின்று கால்பணிந்தான் அவன்ஏற்பாய்...!

சொன்னச்சொல் மாறிடாது இருந்துவிடும் மனிதனில்லை
இயல்புடனே இருந்து இன்முகத்தை காட்டிடுவாய்
மன்னித்து மனமருளும் கலைமகள் உன்னுடன் என்றுமிருக்க
இத்தனை மனம் உடைந்த சொல் எதற்கு உனக்கு

கன்னித் தமிழால் கனிந்துன்னை வேண்டுகின்றான்
பின்னிப் பிணைந்தவனை மார்பனைத்து முகம்புதைத்து
முன்னிலும் பரிவாகத் தலைகலைத்து முத்தமிட்டு
மன்னித் தருள்வாயா மனமிரங்கி ஏற்பாயா...?

இனிய மொழியே கற்கண்டாய் ருசிக்கும் நிலையில்
பின்னிருந்து அணைத்து அன்பை நீ பகிர்ந்திட
காதலில் இடர்கள் எல்லாம் தொலைந்து விலகிவிட
கனிந்தமனம் எதையும் பொருட்படுத்துவதில்லை

விரகத் தாபமில்லை வீணான ஐயமில்லை
இரவெலாம் முகம்புதைத்து இடைவிடா அழுகையினால்
வரவறியா வறியவன் போல் மனம்கலங்கிப் பேதலித்து
மரணம் தரும்வலி அவனுக்கிதனினும் கொடிதாமோ...?

வீண்பயமேன் அவசியமற்ற வாதம் ஏன்
அழுகையும் கண்ணீரும் மனதை பலகீனப்படுத்த
மரணத்தின் உச்சி சென்றடைய விரும்புவது ஏன்
கொடியதெல்லாம் இனி மறைந்து நல்லது நடந்தேறும்

தாயின்மேல் ஆணையாய் ஒன்றுசொல்வான் செவிதருவாய்
நாயினும் மேலான பாடுகள் பலபட்டும்
சேயொன்று முகம்பார்க்க தாயினுக் கேங்கிடும்
ஓயாத போராட்டம் உனைக்காண மட்டும் தான்..!

தாயாய் உனை அணைக்க மாயமாய் வந்தருள
மனமிறங்கி எல்லாம் மறந்து ஏக்கங்கள் நீ தொலைத்து
முகத்தை விடிவெள்ளியாய் வைத்துக்கொள் தங்கம்நீ
மடிசேரும் நல்லமகவு உன்னைப்போல் காண்பதில்லை இனி

தன்னிலை விளக்கிவிட்டான் தன்னிதயம் திறந்துவைத்தான்
முன்னிலும் மேலதிகம் உனைக்காண விழைகின்றான்
அன்னவனில் நிறைந்து விட்ட தீக்குணங்கள் மன்னித்து
உன்னுடன் அணைப்பாயா உருகிநின்றான் கைகூப்பி...!

படிக்கும்போதே மனதை பிசைகிறது கலை.... இத்தனை வலி வேண்டாம் உனக்கு இறைவன் என்றும் நல்லருள் தரட்டும் உனக்கு....

வலிகள் மிகுந்த என்வரிகளுக்கு உன் ஆறுதல் வரிகள் இனிமையான ஒத்தடம் போல் அமைந்துள்ளது மஞ்சு...

நான் எப்போதெல்லாம் எதிர்மறையாய் நினைந்து உழல்கிறேனோ அப்போதெல்லாம் உன் நேர்மறைவரிகள் என்னை துயரிலிருந்து மீட்பது என்பது நான்குவருடங்களாய் நிகழ்ந்து வரும் சித்து விளையாட்டு...

என்றும் இது தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிநிற்கிறேன்.

மகிழ்ச்சி மஞ்சு... [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by கலைவேந்தன் on Fri May 07, 2010 1:33 am

பாரதிப்பிரியன் wrote:தொகுப்பு (கலை அண்ணன் அனைத்துக் கவிதைகளும் ஒரே இடத்திலிருந்து உலவ)

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

அனைத்துக் கவிதைகளும் அருமை முத்துக்கள்,
காக்க வேண்டிய முத்தான சொத்துக்கள்...
இன்று உங்கள் கவிதை அனைத்தும் படிக்க நேரம் கிடைத்தமைக்கு இறைவனுக்கு ஒரு நன்றி...
அதே நேரம் உங்கள் கவிதைப் பொன் துளிகளுக்கு பாராட்டுக்கள்...

தன்னை அறிந்தவன் தரணியும் ஆள்வான்
தன்னை மறந்தவன் தவறி்ப் பிறழ்வான்
தன்னை தன்னில் தேடிப் பிடித்து
தன்னுள் அடக்கியோன் விந்தைகள் புரிவான்...!

தமிழுடன் கொஞ்சி விளையாடுவதில் தீரரான உங்களுக்கு வாழ்த்துக்கள்...!

இராமனுக்குக் கிடைத்தான் அன்றொரு பரதன்
வராமல் வந்த வரமாய் என் இளவல் இன்று..

வாழ்த்துக்கும் வரைப்படுத்தியதற்கும் என் மனமார்ந்த நன்றி இளையவேளே...! [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by கலைவேந்தன் on Fri May 07, 2010 1:37 am

மஞ்சுபாஷிணி wrote:உண்மையே பாரதி....

கலைக்கு கலைமகளின் ஆசி இருப்பதால் தான் இப்படி வரிகளை அழகாய் கோர்க்க முடிகிறது கலையால்...

நான் பலமுறை பிரமிச்சதுண்டு.....

அன்பான நன்றிகள் பாரதி...

உன் அன்புதான் உன்னை இந்த அள்வுக்கு பிரமிக்க வைக்கிறது மஞ்சு...!
எண்ணிப்பார்த்தால் நான் சாதாரணன் தான்... சதா ரணன் தான்.. என்வரிகள் சாதாரணம் தான் ... சில சமயம் சதா ரணம் தான்...

மகிழ்ச்சி பாரதிப்பித்தன்... மகிழ்ச்சி மஞ்சு..! [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by கலைவேந்தன் on Fri May 07, 2010 1:40 am

மஞ்சுபாஷிணி wrote:கத்தி மேல் நடப்பது போல் என்பதை கேள்விப்பட்டிருக்கியா கலை??

இந்த கவிதை அப்படிதான் இருக்கு...

அருமையான வரிகள் அமைத்து எப்படியோ முடிய நினைத்த கவிதையை மிக சரியான மைக்ரோ செகண்ட்ல வண்டியை அழகா வழி மாற்றி ஓட்டியது போல்....

மிக அருமையான கவிதை கலை...

அன்பு அதிகமாகலாம்

காதல் பெருகலாம்....

ஆனால் கட்டுப்பாடு ரொம்ப முக்கியம்...

அந்த கட்டுப்பாடு தொலையும்போது அவமானங்கள் சந்திப்பது பெண்களின் சோகம் நிலையாகிவிடுகிறது...

சோதனைகள் என்றுமே இறைவன் பெண்களுக்கென்று தருவது ஏன்??

உண்மையான காதலில் தொடுதல் கூட நம்பிக்கையை முன் வைத்து தான் என்பது போல் சொல்கிறது கலை கவிதை...

மிக மிக அழகான வரிகளுடன் நேர்த்தியாக இப்படி ஆரம்பித்து நச் நு

முக்கித்தவித்த வார்த்தைகள் வெளிவரத்தயங்கின...

'மாலையிடுவாயா இல்லை காலையில் ஓடிடுவாயா?'

முடிச்சே பாரு... இங்க தான் உன்கவிதைக்கு கிடைத்த வெற்றி கலை...அன்பான பாராட்டுக்கள் கலை....

உண்மைதான் மஞ்சு... இந்தக்கவிதையை நான் எழுதும்போதே பயந்து தான் எழுதினேன்.. ஏனென்றால் காமம் கொஞ்சம் தூக்கலாகவும் சற்றே அயர்ந்தால் விரசமாகிவிடும் ஆபத்தும் இருந்தது,,, எப்படியோ இதனை அனைவரும் பாராட்டுகையில் என்னை உணர்ந்து புரிந்துகொண்டது எனக்கு மகிழ்வைத் தருகிறது...

மகிழ்ச்சி மஞ்சு...! [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by மஞ்சுபாஷிணி on Sat May 08, 2010 1:26 pm

கலை wrote:மகிஷாசுர மர்த்தினியின் அயிகிரி னந்தினி கேட்டிருப்பிங்க தானே?
அந்த மெட்டில் நான் எழுதிய பாடல் ஒன்று!
பொதுவாய் நான் கடவுளைப்பற்றி பாடியது குறைவு!
இந்த பாடல் எப்படின்னு சொல்லுங்க!

[You must be registered and logged in to see this image.]

அன்னையே வணங்குகிறேன்!

அழகிய மலரினில் அமர்ந்திட்ட தேவியே
அடியவன் வேண்டுதல் கேட்டிடு நீ!
தழலினில் விழுந்திட்ட புழுவினைப் போலிங்கு
தவித்திடும் இவன் குரல் கேட்டிடு நீ!
நிழலினைப் போலிங்கு தொடர்ந்திடும் விதியெனை
நிம்மதி குலைப்பதைப் பார்த்திடு நீ!
இழந்திட்ட நிம்மதி திரும்பவும் பெற்றிட
இன்முகம் கொண்டிங்கு காத்திடு நீ!-----------------------------(1)

கொடுமைகள் புரிந்திட்ட அசுரரைக் கொன்றன்று
கொற்றனைக் காத்திட்ட தேவியும் நீ!
அடுத்தடுத் தெனையிங்கு ஆட்டிடும் ஊழ்தனை
அற்றொழித் துடனென்னைக் காத்திடு நீ!
விடுதலை யொன்றின்றித் துடித்திடும் அடியவன்
வீழ்ந்துந்தன் பாதங்கள் பணிந்திடுவேன்!
குடுகுடு வென்றுடன் சடுதியில் காத்திட
குமரனின் தாயுன்னை வேண்டுகிறேன்!-----------------------(2)

ஐங்கரன் தாயுனை அனுதினம் போற்றியே
அடிதொழு துளமுடன் வணங்கிடுவேன்!
பைங்கனி சுவையொத்த உன்பெய ரோங்கிட
பாமரன் நானுனைப் போற்றிடுவேன்!
பைங்கிளி தோளினில் பாங்குடன் அமர்ந்திட
பார்ப்பவ ருளம்குளிர் விப்பவளே!
பைங்குழல் மகுடத்தைத் தாங்கிட ஜோதியாய்
பாரினில் வந்தெனைக் காத்திடுவாய்!----------------------------(3)

இந்த வரிகள் வார்த்தைகள் ஒன்றொன்றும் மறக்கவே முடியாது கலை....

2007 இல் ஒரு நாள் நீ எனக்கு கால் செய்து இந்த அழகிய மஹிஷாஷுர மர்த்தினி இனிய தமிழ்ல பாடி காமிச்சது நினைவிருக்கா?

நான் அப்படியே ஆச்சரியப்பட்டு அம்மாவை கூப்பிட்டு சொன்னப்ப அட அப்டின்னு அம்மாவும் ஆச்சரியப்பட்டாங்க....

திறமைகள் உள்ளடக்கிய சாதாரண எளிய மனதுடையவன் தான் கலை நீ...

ஆனால் அந்த மனசு முழுக்க அன்பு இருப்பது எனக்கு தெரியும்....

யோசிக்காது வேகமாக அடுக்கிய வரிகள் இவை....

மிக மிக அருமை கலை....

கலைமகளின் ஆசி இந்திரா அம்மாவின் ஆசி என்றும் உன்னுடன் இருக்கும்போது உன் கவிதைகளுக்கு பஞ்சமும் இருக்காது கலை...

அன்பான பாராட்டுக்கள்....

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9683
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by மஞ்சுபாஷிணி on Sat May 08, 2010 1:33 pm

கலை wrote:[You must be registered and logged in to see this image.]

காத்திருப்பு...!

யுகங்களாய்க்காத்திருந்தது
இப்படி கணங்களில் முடிவதற்கா...?

அக்கம் பக்கம் பார்த்து
எக்குத்தப்பாய் ஆகிவிடுமென்றே
திக்கித்தவித்து பயந்துபோய்
எக்கச்சக்க இன்பங்கள் இழந்தோம்...!

காத்திருப்பது தான் காலமெல்லாம் விதி என்றால்
அந்த
காதலுக்கே விடை சொல்லத்தோன்றிடுமோ..?

உனக்கென்ன நீ சூரியன்...
பலவித கிரகங்கள் உன்னைச்சுற்றிலும்...
எனக்கிருக்கும் ஒரே சூரியன் நீதானே..?

உற்றுப்பார்...
காத்திருப்பின் கொடுமைகளை
என் கண்களில் வழிந்த கண்ணீர்க்கோடுகள்
உனக்கு காட்டிக்கொடுக்கும்...!

காத்திருப்பது நிமிடங்கள் தான் என்றாலும் யுகங்களைப்போல் தெரிவது ஒரு நொடி கூட பிரிந்திருக்க முடியாத காதலின் நிலை அது.....

யுகங்களாய் காத்திருந்தாலும் இந்த காதல் கைகோர்க்கும் என்ற நம்பிக்கை மனதில் இருந்துவிட்டால் காத்திருப்பு இனிமையாகிவிடும்....

தனிமை ஒரு கொடுமை என்றால்..... காதலில் தனிமை இன்னொரு கொடுமை..... முள்ளைப்போல் நிரடும் நினைவுகள்..... என்னாச்சு ஏன் காணோம்? வந்துவிடுவாளா? ஏக்கங்களுடன் காத்திருப்பு இங்கே நரகம் தான்....

எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து அனுசரித்து போகும் மனது காதலுக்குள் விட்டுக்கொடுக்கும்... ஆனால் காதலை விட்டுக்கொடுக்கும் நிலை வந்தால் நெருப்பை உமிழும்... இத்தனை அன்பும் காதலும் என்னையன்றி வேறு யாரிடமும் கிடைக்காது என்று சத்தியம் உரைக்கும்.....

அழகிய வரிகள் காத்திருப்பின் சோகத்தை கண்ணீர் மட்டுமா காட்டிக்கொடுக்கும்?? இல்லை இல்லை இதோ அழகிய வரிகளால் எங்கள் மனதை நிரப்பும் அளவுக்கு கவிதையும் காட்டிக்கொடுக்கும்...

அன்பு பாராட்டுக்கள் கலை.....

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9683
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum