ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Today at 9:16 pm

» திருமண அறிவிப்பு
by மகா பிரபு Today at 9:09 pm

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by சார்லஸ் mc Today at 9:08 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 9:08 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 9:00 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by பிஜிராமன் Today at 8:54 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by பிஜிராமன் Today at 8:50 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Today at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by கேசவன் Today at 7:55 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 6:58 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm

» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm

» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm

» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm

» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm

» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm

» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm

» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm

» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

கலைவேந்தனின் கவிதைகள்....!

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

View previous topic View next topic Go down

கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by கலைவேந்தன் on Thu Feb 04, 2010 9:31 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

மன்னித்தருள்வாயா தேவி...?


செருக்கெலாம் தகர்ந்ததுகாண் செந்தணலில் வீழ்ந்தனன்யான்
சுருக்கென்ற ஒருசொல்லால் சுகமனைத்தும் இழந்தனன்காண்
விருப்பின்றி வாழ்கின்றான் வினைதீர்க்கும் பாடறியான்
ஒருசொல்லால் ஒப்பற்ற சொர்க்கமும் சரிந்தது காண்...!

செந்தேளாய்க் கொட்டியவன் செந்தேனாய் இனியாவான்
நொந்தேதான் வாழ்கின்ற நோயாளி இவனறிவாய்
வெந்தேபோய் வீழ்கின்ற வெறும்வாழ்க்கை வாழ்கின்றான்
வந்திவனை நீகாத்து வரம் தருவாய் வாக்கரசி...!

மாயத்திரை யதனால் மக்கியது இவன் மனது
காயத்தால் புலம்புமிவன் கடுஞ்சொல் பொறுப்பாயோ
நேயத்தால் வந்ததென நெஞ்சம் நீ நெகிழ்வாயோ
போயவன் ஒழியட்டும் என்றவனை வெறுப்பாயோ?

திடமாக இவன்மனதைக் கட்டிடும் வழியறியான்
விடமாகப்பொழியும் வார்த்தைகளை மறந்திடுவாய்
முடமாகிப் போனவனுன் முகம்காணா ஏக்கத்தால்
சடமாக நிற்கின்றான் உன் பாதம் பணிகின்றான்...!

வலிபொறுக்கா இதயத்துடன் வாழ்க்கைதனைக் கடக்கின்றான்
கிலிகொண்டு மரணமதை என்னாளும் எதிர்நோக்கி
மெலிந்துபோன மனஉறுதி மெய்மறந்த ஏக்கமனம்
கலிநீங்கா கவலையுடன் உன்கழல் பணிகின்றான்...!

இனிமேலும் இவ்வாறு மனம்கிழித்து ரணமாக்கும்
கனிவில்லா சொற்களை கனவிலும் உதிர்த்திடான்
பனிபோன்ற் இன்சொல்லாள் ! நீபரிவுடன் மன்னிப்பாய்
உனில்தனைக் கரைத்துநின்று கால்பணிந்தான் அவன்ஏற்பாய்...!

கன்னித் தமிழால் கனிந்துன்னை வேண்டுகின்றான்
பின்னிப் பிணைந்தவனை மார்பனைத்து முகம்புதைத்து
முன்னிலும் பரிவாகத் தலைகலைத்து முத்தமிட்டு
மன்னித் தருள்வாயா மனமிரங்கி ஏற்பாயா...?

விரகத் தாபமில்லை வீணான ஐயமில்லை
இரவெலாம் முகம்புதைத்து இடைவிடா அழுகையினால்
வரவறியா வறியவன் போல் மனம்கலங்கிப் பேதலித்து
மரணம் தரும்வலி அவனுக்கிதனினும் கொடிதாமோ...?

தாயின்மேல் ஆணையாய் ஒன்றுசொல்வான் செவிதருவாய்
நாயினும் மேலான பாடுகள் பலபட்டும்
சேயொன்று முகம்பார்க்க தாயினுக் கேங்கிடும்
ஓயாத போராட்டம் உனைக்காண மட்டும் தான்..!

தன்னிலை விளக்கிவிட்டான் தன்னிதயம் திறந்துவைத்தான்
முன்னிலும் மேலதிகம் உனைக்காண விழைகின்றான்
அன்னவனில் நிறைந்து விட்ட தீக்குணங்கள் மன்னித்து
உன்னுடன் அணைப்பாயா உருகிநின்றான் கைகூப்பி...!


Last edited by கலை on Thu Mar 03, 2011 8:50 pm; edited 10 times in total

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down


Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by தமிழ் தினா on Mon May 10, 2010 7:14 pm

கலை wrote:[You must be registered and logged in to see this image.]

மன்னித்தருள்வாயா தேவி...?


செருக்கெலாம் தகர்ந்ததுகாண் செந்தணலில் வீழ்ந்தனன்யான்
சுருக்கென்ற ஒருசொல்லால் சுகமனைத்தும் இழந்தனன்காண்
விருப்பின்றி வாழ்கின்றான் வினைதீர்க்கும் பாடறியான்
ஒருசொல்லால் ஒப்பற்ற சொர்க்கமும் சரிந்தது காண்...!

செந்தேளாய்க் கொட்டியவன் செந்தேனாய் இனியாவான்
நொந்தேதான் வாழ்கின்ற நோயாளி இவனறிவாய்
வெந்தேபோய் வீழ்கின்ற வெறும்வாழ்க்கை வாழ்கின்றான்
வந்திவனை நீகாத்து வரம் தருவாய் வாக்கரசி...!

மாயத்திரை யதனால் மக்கியது இவன் மனது
காயத்தால் புலம்புமிவன் கடுஞ்சொல் பொறுப்பாயோ
நேயத்தால் வந்ததென நெஞ்சம் நீ நெகிழ்வாயோ
போயவன் ஒழியட்டும் என்றவனை வெறுப்பாயோ?

திடமாக இவன்மனதைக் கட்டிடும் வழியறியான்
விடமாகப்பொழியும் வார்த்தைகளை மறந்திடுவாய்
முடமாகிப் போனவனுன் முகம்காணா ஏக்கத்தால்
சடமாக நிற்கின்றான் உன் பாதம் பணிகின்றான்...!

வலிபொறுக்கா இதயத்துடன் வாழ்க்கைதனைக் கடக்கின்றான்
கிலிகொண்டு மரணமதை என்னாளும் எதிர்நோக்கி
மெலிந்துபோன மனஉறுதி மெய்மறந்த ஏக்கமனம்
கலிநீங்கா கவலையுடன் உன்கழல் பணிகின்றான்...!

இனிமேலும் இவ்வாறு மனம்கிழித்து ரணமாக்கும்
கனிவில்லா சொற்களை கனவிலும் உதிர்த்திடான்
பனிபோன்ற் இன்சொல்லாள் ! நீபரிவுடன் மன்னிப்பாய்
உனில்தனைக் கரைத்துநின்று கால்பணிந்தான் அவன்ஏற்பாய்...!

கன்னித் தமிழால் கனிந்துன்னை வேண்டுகின்றான்
பின்னிப் பிணைந்தவனை மார்பனைத்து முகம்புதைத்து
முன்னிலும் பரிவாகத் தலைகலைத்து முத்தமிட்டு
மன்னித் தருள்வாயா மனமிரங்கி ஏற்பாயா...?

விரகத் தாபமில்லை வீணான ஐயமில்லை
இரவெலாம் முகம்புதைத்து இடைவிடா அழுகையினால்
வரவறியா வறியவன் போல் மனம்கலங்கிப் பேதலித்து
மரணம் தரும்வலி அவனுக்கிதனினும் கொடிதாமோ...?

தாயின்மேல் ஆணையாய் ஒன்றுசொல்வான் செவிதருவாய்
நாயினும் மேலான பாடுகள் பலபட்டும்
சேயொன்று முகம்பார்க்க தாயினுக் கேங்கிடும்
ஓயாத போராட்டம் உனைக்காண மட்டும் தான்..!

தன்னிலை விளக்கிவிட்டான் தன்னிதயம் திறந்துவைத்தான்
முன்னிலும் மேலதிகம் உனைக்காண விழைகின்றான்
அன்னவனில் நிறைந்து விட்ட தீக்குணங்கள் மன்னித்து
உன்னுடன் அணைப்பாயா உருகிநின்றான் கைகூப்பி...!


ஈகரையில், உங்கள் கவிதைகளை வாசிக்க உள்நுழைந்தவனுக்கு, எப்படி ஒரு பரிசு தந்திருக்கிறீர்கள்

தக்க சமயத்தில் கேட்கப்படாத மன்னிப்பும், கொடுக்கப்படாத மன்னிப்பும் மனிதன் தன் பின் வாழ்நாட்களில் மிகவுமே வலியுடன் வருந்தச் செய்து விடக் கூடியது மட்டுமல்ல, சில நேரங்களில் பல வாய்ப்புகளை மறுக்கச் செய்யக் கூடியதும் கூட.

எங்கோ பறக்கச் செய்து விட்ட கவி வரிகள். கலங்கவும் செய்து விட்டது. சில நேரங்களில் முட்டாள் பட்டம் தேடித் தருபவை என்றாலும், அறிவாளியாய் இருப்பதை விட மானிடனாய் இருப்பதுதான் சிறப்பு, இல்லையா அய்யா..!?

தமிழ் தினா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 86
வசிப்பிடம்: தமிழகம்
சேர்ந்தது: 08/05/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by தமிழ் தினா on Mon May 10, 2010 7:20 pm

கலை wrote:[You must be registered and logged in to see this image.]


காத்திருப்பு...!

யுகங்களாய்க்காத்திருந்தது
இப்படி கணங்களில் முடிவதற்கா...?


அக்கம் பக்கம் பார்த்து
எக்குத்தப்பாய் ஆகிவிடுமென்றே
திக்கித்தவித்து பயந்துபோய்
எக்கச்சக்க இன்பங்கள் இழந்தோம்...!

காத்திருப்பது தான் காலமெல்லாம் விதி என்றால்
அந்த
காதலுக்கே விடை சொல்லத்தோன்றிடுமோ..?

உனக்கென்ன நீ சூரியன்...
பலவித கிரகங்கள் உன்னைச்சுற்றிலும்...
எனக்கிருக்கும் ஒரே சூரியன் நீதானே..?

உற்றுப்பார்...
காத்திருப்பின் கொடுமைகளை
என் கண்களில் வழிந்த கண்ணீர்க்கோடுகள்
உனக்கு காட்டிக்கொடுக்கும்...!


அய்யா, எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.
நன்றி நன்றி நன்றி

தமிழ் தினா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 86
வசிப்பிடம்: தமிழகம்
சேர்ந்தது: 08/05/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by கலைவேந்தன் on Mon May 10, 2010 8:00 pm

உண்மை தான் தினா... தவறுதல் மனித இயல்பும் மன்னித்தல் தேவ இயல்பும் உணராத மனிதரிடம் வாய் கிழியக்கத்தியும் பயனில்லை தான்...

எனது கவிதை தனை வாசித்து அருமையான கருத்திட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி தினா...

இன்னும் இன்னும் ஈகரையைச் சுற்றி வாருங்கள்... தெவிட்டாத தான்முதம் எங்கினும் மறைந்திருக்கக்கூடும்...

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by கலைவேந்தன் on Mon May 10, 2010 8:03 pm

மஞ்சுபாஷிணி wrote:
கலை wrote:மகிஷாசுர மர்த்தினியின் அயிகிரி னந்தினி கேட்டிருப்பிங்க தானே?
அந்த மெட்டில் நான் எழுதிய பாடல் ஒன்று!
பொதுவாய் நான் கடவுளைப்பற்றி பாடியது குறைவு!
இந்த பாடல் எப்படின்னு சொல்லுங்க!


[You must be registered and logged in to see this image.]

அன்னையே வணங்குகிறேன்!

அழகிய மலரினில் அமர்ந்திட்ட தேவியே
அடியவன் வேண்டுதல் கேட்டிடு நீ!
தழலினில் விழுந்திட்ட புழுவினைப் போலிங்கு
தவித்திடும் இவன் குரல் கேட்டிடு நீ!
நிழலினைப் போலிங்கு தொடர்ந்திடும் விதியெனை
நிம்மதி குலைப்பதைப் பார்த்திடு நீ!
இழந்திட்ட நிம்மதி திரும்பவும் பெற்றிட
இன்முகம் கொண்டிங்கு காத்திடு நீ!-----------------------------(1)


கொடுமைகள் புரிந்திட்ட அசுரரைக் கொன்றன்று
கொற்றனைக் காத்திட்ட தேவியும் நீ!
அடுத்தடுத் தெனையிங்கு ஆட்டிடும் ஊழ்தனை
அற்றொழித் துடனென்னைக் காத்திடு நீ!
விடுதலை யொன்றின்றித் துடித்திடும் அடியவன்
வீழ்ந்துந்தன் பாதங்கள் பணிந்திடுவேன்!
குடுகுடு வென்றுடன் சடுதியில் காத்திட
குமரனின் தாயுன்னை வேண்டுகிறேன்!-----------------------(2)


ஐங்கரன் தாயுனை அனுதினம் போற்றியே
அடிதொழு துளமுடன் வணங்கிடுவேன்!
பைங்கனி சுவையொத்த உன்பெய ரோங்கிட
பாமரன் நானுனைப் போற்றிடுவேன்!
பைங்கிளி தோளினில் பாங்குடன் அமர்ந்திட
பார்ப்பவ ருளம்குளிர் விப்பவளே!
பைங்குழல் மகுடத்தைத் தாங்கிட ஜோதியாய்
பாரினில் வந்தெனைக் காத்திடுவாய்!----------------------------(3)


இந்த வரிகள் வார்த்தைகள் ஒன்றொன்றும் மறக்கவே முடியாது கலை....

2007 இல் ஒரு நாள் நீ எனக்கு கால் செய்து இந்த அழகிய மஹிஷாஷுர மர்த்தினி இனிய தமிழ்ல பாடி காமிச்சது நினைவிருக்கா?

நான் அப்படியே ஆச்சரியப்பட்டு அம்மாவை கூப்பிட்டு சொன்னப்ப அட அப்டின்னு அம்மாவும் ஆச்சரியப்பட்டாங்க....

திறமைகள் உள்ளடக்கிய சாதாரண எளிய மனதுடையவன் தான் கலை நீ...

ஆனால் அந்த மனசு முழுக்க அன்பு இருப்பது எனக்கு தெரியும்....

யோசிக்காது வேகமாக அடுக்கிய வரிகள் இவை....

மிக மிக அருமை கலை....

கலைமகளின் ஆசி இந்திரா அம்மாவின் ஆசி என்றும் உன்னுடன் இருக்கும்போது உன் கவிதைகளுக்கு பஞ்சமும் இருக்காது கலை...

அன்பான பாராட்டுக்கள்....


உன் நினைவுக் கூர்மை மெச்சத்தக்கது மஞ்சு... எனக்கும் நினைவு வருகிறது மஞ்சு...

உனது பாராட்டும் வாழ்த்தும் மகிழ்வைத் தருகிறது மஞ்சு...

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by ஹாசிம் on Mon May 10, 2010 8:14 pm

தமிழின் பாசறை அண்ணா தங்களின் தமிழ் அமுதம் பருகித்தீராது அருமை அத்தனையும் நன்றி அண்ணா [You must be registered and logged in to see this image.]


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

ஹாசிம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 12718
வசிப்பிடம்: Qatar(இலங்கை)
சேர்ந்தது: 16/03/2010
மதிப்பீடு: 204

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by கலைவேந்தன் on Thu May 13, 2010 5:09 pm

ஹாசிம் wrote:தமிழின் பாசறை அண்ணா தங்களின் தமிழ் அமுதம் பருகித்தீராது அருமை அத்தனையும் நன்றி அண்ணா [You must be registered and logged in to see this image.]


மிக்க நன்றி ஹாசிம் தம்பி...! [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by Thanjaavooraan on Thu Oct 21, 2010 11:42 am

நறுங்கவிதை உன்னிடம் அடைக்கலம்!
அருந்தமிழே உனது படைக்களம்!!


வாழ்த்துக்களுடன்...
தமிழ்சேய், தஞ்சாவூரான்.
அமீரகம்.

Thanjaavooraan
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 820
வசிப்பிடம்: DUBAI
சேர்ந்தது: 16/09/2010
மதிப்பீடு: 18

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by கலைவேந்தன் on Sat Oct 23, 2010 1:17 am

நன்றி தஞ்சாவூரான்..!

- கும்பகோணத்தான்

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by ARR on Fri Dec 24, 2010 2:15 pm

அருமை கும்மோணத்தான்..!

_ மன்னாடியான்..

ARR
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1115
வசிப்பிடம்: மனசுக்குப் பிடித்த மன்னார்குடி
சேர்ந்தது: 08/05/2010
மதிப்பீடு: 82

http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by கலைவேந்தன் on Sat Jul 09, 2011 11:14 am

மிக்க நன்றி மன்னையாராரே..!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by மஞ்சுபாஷிணி on Sat Jul 09, 2011 11:54 am

அடுத்த கவிதை எப்போது கலை??????

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9683
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: கலைவேந்தனின் கவிதைகள்....!

Post by கலைவேந்தன் on Sat Jul 09, 2011 1:39 pm

இப்போதெல்லாம் என் மனம் வறண்டு கிடக்கிறது மஞ்சு. விரைவில் எழுதுவேன்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum