ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராஜமுத்திரை -சாண்டில்யன்
 sukumaran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

உடல் காட்டும் அறிகுறிகள்!
 ayyasamy ram

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."

View previous topic View next topic Go down

"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."

Post by BPL on Sat Feb 06, 2010 1:04 pm

ஆஸ்திரேலியாவில் பதினாறாவது முறையாக உதை
வாங்கியிருக்கிறார்களாம் ”இந்தியர்கள்”.

கடந்த வாரம் கூட ஒரு “இந்தியர்” கும்மாங்குத்து
வாங்கி மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறாராம்.

ஆஸ்திரேலிய அரசு ”இனவெறி”யுடன் நடந்து
கொள்கிறதாம்.

இது நிச்சயம்
கண்டிக்கத்தக்கது தான்...அதில் மாற்றுக்கருத்து இல்லை...

இத்தகைய தாக்குதல்கள் ஒரு புறம்
நடந்துகொண்டிருக்க....தனது காரை ஆஸ்திரேலியர்கள் இனவெறி காரணமாக எரித்துவிட்டார்கள்
என்று புகார் கொடுத்த இந்தியர் ஒருவரின் மோசடி புலன் விசாரணையில் அவர் இன்சூரன்ஸ்
தொகைகு நடத்திய நாடகம் என தெரியவந்திருக்கிறது...சில இந்தியர்கள் சாராயக்கடையில்[
நாகரிகமாக (Bar) ] ஏற்பட்ட தகறாரில் தாக்கப்பட்டிருக்கிறார்கள்

ஆனால் இந்த தாக்குதல்களுக்கே ”இனவெறி” என்று
கூச்சல் போட்டால்..…. கணக்கிலடங்கா மழலைகள்…. பெண்கள்…. முதியவர்கள்…. என்று எந்த
இரக்கமும் இன்றி பாஸ்பரஸ் குண்டுகளாலும்…. புல்டோசர் ஏற்றியும் எங்கள் தமிழர்கள்
இலங்கையில் கொல்லப்பட்டார்களே…. அதனை என்னவென்று சொல்வீர்கள்.?

அதற்கே
குய்யோ…. முறையோ என்று கூப்பாடுகள்….

பிரதமரின்
எச்சரிக்கை….

உள்துறை,
வெளியுறவுத் துறையின் அலறல்கள்….

தூதுவர்களின்
கண்டனம்….

வட இந்திய
தொலைக்காட்சிகளின் ஓலங்கள்….

எம் இனத்தின் தளிர்களும்…. இளம் குருத்துக்களும்
கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டு. மொத்த தமிழினமும் துயரத்தின் உச்சியில் நின்று
குமுறியபடி ஆதரவுக் கரங்களுக்காய் அலைபாய்ந்தபோது. ஒருவரும் வரவில்லை.

வாயைத்
திறக்கவில்லை பிரதமர்.

வாயைத்
திறக்கவில்லை தூதரகங்கள்.

வாயைத்
திறக்கவில்லை உள்…. வெளி அமைச்சகங்கள்.தமிழகத்தின்
சகல ஜீவன்களும் தங்கள் உறவுகளுக்காய் கதறிக் கண்ணீர் விட்டபோது கை கட்டி நின்று
வேடிக்கை பார்த்தது மத்திய அரசு.

குடும்பம் குடும்பமாய் கூடி அழுதோமே நாம்.

தமிழகத்தின்
தெருக்கள்தோறும் சந்தித்துக் கொண்டவர்கள் “என்னவாச்சு என் தலைவனுக்கு? ”

“என்னவாச்சு முற்றுகையில் சிக்கியுள்ள மக்களின்
கதி?” என்றுதானே பரிதவித்தார்கள்.

’கதியற்றோருக்கு கடவுளே துணை’ என நம்பியவர்கள்
கோயில்களில் குமுறித் தீர்த்தனர்….

மசூதிகளில்
மனம் வெதும்பி மண்டியிட்டனர்….

தேவ ஆலயங்களில்
அழுது புலம்பினர்…


மனிதரை நம்பியவர்களோ…. யுத்தத்தையே நடத்தும் மத்திய
அரசைக் கண்டித்து வீதியில் இறங்கினர்.எதற்கும் செவிசாய்க்கவில்லை அவர்கள்.

வாயும் வயிறும்
எரிகிறது.

குண்டடி பட்டு செத்து வீழ்வதும் தமிழன்.

அவனுக்காய் தொண்டை வற்றிக் குரல் கொடுப்பவனும்
தமிழன்.

ஆனால்….
ஆஸ்திரேலியாவில் அடிபட்டவன் அப்படி இல்லையே.

எமது கண்ணீரைக்
கூட கேலி செய்தது வட இந்திய‌ மீடியாக்கள்.

தமிழர்களும் அவர்களது நகரங்களும்
தரைமட்டமாக்கப்பட்டபோது பட்டாசு வெடித்து கொண்டாடாதது ஒன்றுதான் பாக்கி.

நாம் அழுது
கொண்டிருந்த வேளையில் அவர்கள் குதூகலித்துக் கொண்டிருந்தார்கள்.ஆனால் நாம்
அப்படியா இருந்தோம்?

குஜராத்தில் பூகம்பம் என்றால் கண்ணீர் வடித்தோம்.
கட்டியிருந்தது போக மிச்சமிருந்ததை அள்ளிக் கொடுத்தோம்.

ஒரிசாவில் வெள்ளம் என்றால் வாய்ப்பு இருந்தவர்கள்
தங்கள் ஒரு நாள் சம்பளத்தையும்…. வசதியற்றவர்கள் தங்கள் உண்டியலின் சேமிப்பையும்
கூட துயர் துடைக்கக் கொடுத்தோம்.

கார்கிலில்
போர் மேகங்கள் என்றால் கலை நிகழ்ச்சிகள் நடத்தி யுத்த நிதி அளித்தோம்.

அன்று அவர்கள்
அழுதபோது நாமும் அழுதோம்.

ஆனால் இன்று
நாம் அழும்போது நாம் மட்டுமே அழுகிறோம்,

என்ன கொடுமை இது?

ஆனால் இந்தப் பாராபட்சம் இன்று மட்டுமில்லை.
என்றும்தான்.

வளைகுடாப்
போரில் மலையாளிகள் மாட்டிக் கொண்டனர் என்றதும் ஓடோடிப் போனார் அமைச்சர் உன்னிக்கிருஷ்ணன்.

பிஜித் தீவில் குஜராத்திகளுக்கு பிரச்சனை என்றபோது
குமுறி எழுந்தது இந்திய அரசு.

ஆஸ்திரியாவில்
இரண்டு சீக்கியர்களுக்குள் நடந்த சண்டையில் ஒருவர் செத்தார் என்பதற்காக பஞ்சாப்பே
பற்றி எரிந்தது.

அடுத்த கணமே
”காப்பாற்ற நானிருக்கிறேன் கவலைப்படாதீர்கள்” என தானாடா விட்டாலும் தன் தசை ஆடியது
இந்தியப் பிரதமருக்கு.

அன்றிலிருந்து
இன்றுவரை இதுதான் நமது கதி..

அது ”மாமா”
நேரு காலமாக இருந்தாலும் சரி…..

அது “அன்னை”
இந்திரா காலமாக இருந்தாலும் சரி…..

அது
“அன்னை”யின் தவப்புதல்வன் காலமாக இருந்தாலும் சரி…..

அது ”அன்னை”யின் மருமகள் காலமாக இருந்தாலும்
சரி…..

அன்றிலிருந்து
இன்றுவரை தமிழனுக்கு இதுதான் கதி..


ஆக,

தமிழனென்று
சொல்லுவோம்.

தலை நிமிர்ந்து
செல்லுவோம்.

நமது தலையை
மற்றவர்கள் விட்டுவைக்கும்பட்சத்தில்.

நன்றி - நண்பரே.
avatar
BPL
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 350
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: "ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."

Post by darulchand on Sat Feb 06, 2010 1:23 pm

நன்றாகச் சொன்னீர்கள்.இங்குதான் தன்மானத்தமிழனென்று சொல்லிக் கொண்டு, வடஇந்தியன் சொல்படி ஆடுகிறதே தமிழன் தலை.இதிலெங்கே நிமிர்ந்து நிற்பது?
avatar
darulchand
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: "ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."

Post by அன்பு தளபதி on Sat Feb 06, 2010 1:27 pm

சொரணை உள்ளவர்களாக இருக்கிறோமா என யோசிக்கவேண்டும்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: "ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."

Post by உதயசுதா on Sat Feb 06, 2010 1:39 pm

இதுக்கு காரணம் நாடாள்பவர்கள் யாரும் இலங்கை பிரச்சினையை தமிழர்கள் பிரச்சினையாக பார்க்கவில்லை.இது இன்னொரு நாட்டு பிரச்சினையாக பார்த்தார்கள்.இலங்கை தமிழர்கள் அங்கு நிரந்தரமாக குடியேறிவிட்டார்கள்.அவர்களால் இந்திய நாட்டுக்கு எந்த பலனும் இல்லை.அதுவும் ஒரு காரணம்.
ஆஸ்திரேலியா இனவெறிக்கு குரல் கொடுப்பதன் காரணம் இந்தியாவில் இருந்து
அடிபட்டவர்கள் வேலைக்கோ படிப்பதற்கோ சென்றவர்கள்.வேலைக்கு சென்றவர்கள் என்றால் அன்னிய செலாவணி கிடைக்கும்.படிப்பதற்கு சென்றவர்கள் என்றால் எதிர்காலத்தில் அன்னிய செலாவணி கிடைக்கும்.

எங்கு இருந்தாலும், அவர்களால் பயன் இருந்தாலும்,இல்லை என்றாலும் நம் மக்கள் என்ற எண்ணம் வராத வரை இலங்கை தமிழர்களுக்கு யாரும் குரல் கொடுக்கப் போவதில்லை.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: "ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."

Post by kirupairajah on Sat Feb 06, 2010 1:54 pm

UDAYASUDHA wrote:இதுக்கு காரணம் நாடாள்பவர்கள் யாரும் இலங்கை பிரச்சினையை தமிழர்கள் பிரச்சினையாக பார்க்கவில்லை.இது இன்னொரு நாட்டு பிரச்சினையாக பார்த்தார்கள்.

தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக்கொல்கிறானே சிங்களப்படை, இதற்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லையே, அவர்கள் இந்தியநாட்டு குடிமக்கள் இல்லையா?

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: "ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."

Post by நிலாசகி on Sat Feb 06, 2010 1:59 pm

இந்தியா என்றைக்கோ ஊனமாகிவிட்டது
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: "ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."

Post by kirupairajah on Sat Feb 06, 2010 2:10 pm

"இந்தியா எங்கள் நாடு" என்று சொல்லிக்கொண்டு பெருமைப்படும் தமிழர்கள், இந்த நியாயமான கேழ்விக்கு பதில் சொல்லட்டும். பதிவிற்கு நன்றி BPL

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: "ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."

Post by யமுனாஸ் on Sat Feb 06, 2010 2:13 pm

[You must be registered and logged in to see this link.] wrote:இந்தியா என்றைக்கோ ஊனமாகிவிட்டது

அது மட்டும் அல்ல தமிழர்கள் என்றோ ஊமைகளாகவும் சுயனலர்கலாகவும் மாறிவிட்டது தான் காரணம்
avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: "ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."

Post by anbutannaan on Sat Feb 06, 2010 3:01 pm

ஒவ்வொரு இந்தியனும் ஊமைதான்.................
இலங்கை தமிழனின் அவலம் அடங்கும்வரை..............
avatar
anbutannaan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 273
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: "ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."

Post by கலைவேந்தன் on Sat Feb 06, 2010 3:27 pm

என்ன சொல்வது என்றே தெரியவில்லை...

இந்திய மேலாண்மையின் கேவலமான செய்கை எம்மை இந்தியர் என்று சொல்லவே வெட்கப்பட வைக்கிறது எனச்சொன்னால் அது மிகையில்லை.

இந்த சமயம் என் கவிதை ஒன்று நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.

அறிவாரோ எண்ணற்ற அழிவுகளும் எம்மினத்தின்
விழிதிறவா மழலைகளின் மவுனமான மரணந்தனை
ஒளிகிடைக்குமென்றெண்ணி ஏற்றிவைத்த தீபங்களே
அழிவதற்கும் காரணமாய் குடிலெரித்த சோகம்தனை...

ஒருபக்கம் பாலூட்டிய கொங்கைகளின் குவியல்கள்
மறுதிசையில் மழலைகளின் வாய்திறந்த பசிக்கோலம்
அண்ணன்மார் காப்பாரென்று ஆசுவசித்த தங்கைகளும்
கண்ணீரால் குளிப்பாட்டி குழிபுதைந்த சோதரரும்...

எரிதணலில் சிக்கிவிட்ட மண்புழுவா தமிழரினம்?
உரிமைகளை வேண்டிநின்றால் அழிந்திடுமோ மனிதரினம்?
விரிவிழிகள் குத்திநிற்க நரப்பலிகள் சம்மதமோ?
மரித்தபின் கிட்டிடுமோ எம்மினத்தின் சுதந்திரமும்?

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: "ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."

Post by jayakumari on Sat Feb 06, 2010 4:40 pm

எரிதணலில் சிக்கிவிட்ட மண்புழுவா தமிழரினம்?
மரித்தபின் கிட்டிடுமோ எம்மினத்தின் சுதந்திரமும்?

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

jayakumari
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1612
மதிப்பீடுகள் : 48

View user profile

Back to top Go down

Re: "ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."

Post by nandhtiha on Sat Feb 06, 2010 7:44 pm

வணக்கம்
//

தமிழனென்று
சொல்லுவோம்.

தலை
நிமிர்ந்து
செல்லுவோம்.

நமது தலையை
மற்றவர்கள்
விட்டுவைக்கும்பட்சத்தில்.
//

இனமானத்தலைவர்கள் என்று பெயர் சூட்டிக் கொண்டவர்கள் ஈனமான தலைவர்கள் ஆனார்கள். தமிழனுக்கு ஒரு தலவன் தமிழினத்திலிருந்து வராத வரை இந்த நிலை நீடிக்கும். போலிகளும் புரட்டர்களும் தம்மைத் தமிழர் தலைவனாக அறிவித்துக் கொண்டனர், அதைத் தமிழர்களும் நம்பி இருக்கின்றனர், இந்த வெட்கக்கேடான நிலை என்று மாறுமோ அன்றுதான் தமிழன் குரலைத் தரணி கேட்கும்.
அன்புடன்
நந்திதா

[You must be registered and logged in to see this link.]

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: "ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."

Post by இளமாறன் on Sat Feb 06, 2010 7:50 pm

கவலை தருகிறது
உண்ர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் போவது. [You must be registered and logged in to see this image.]
avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: "ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."

Post by nandhtiha on Sat Feb 06, 2010 7:52 pm

திரு இளமாறன் அவர்களே
வணக்கம்
தங்கள் பதிவு என்னைக் குறித்தா?
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: "ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."

Post by இளமாறன் on Sat Feb 06, 2010 7:58 pm

[You must be registered and logged in to see this link.] wrote:திரு இளமாறன் அவர்களே
வணக்கம்
தங்கள் பதிவு என்னைக் குறித்தா?
அன்புடன்
நந்திதா

இல்லை .. தனி நபர் இல்லை

ஈழதமிழர்களின் உண்ர்வுகளை சொன்னேன்...

இந்த ப்ரச்சனைக்கு தீர்வு காண நீங்களோ நானோ எதாவது செய்யமுடியும் என்றால்
செய்யலாம் ஆனால் இது பொது விஷயம்..
பொருள் தேடும் அரசியல் இடையே
ஆடுகள் போல் நாம்..
avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: "ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."

Post by nandhtiha on Sat Feb 06, 2010 8:02 pm

திரு இளமாறன் அவர்களே வணக்கம்
விளக்கத்துக்கு நன்றி, ஒரு நிமிடம் துடித்துப் போய் விட்டேன்
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: "ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."

Post by இளமாறன் on Sat Feb 06, 2010 8:08 pm

மன்னிக்கவும் தவறாக சொல்லி இருந்தால்..

கண்களால் காண்பதும் பொய்யாக இருக்கலாம்
avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: "ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."

Post by கலைவேந்தன் on Sat Feb 06, 2010 9:45 pm

[You must be registered and logged in to see this link.] wrote:எரிதணலில் சிக்கிவிட்ட மண்புழுவா தமிழரினம்?
மரித்தபின் கிட்டிடுமோ எம்மினத்தின் சுதந்திரமும்?

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

நன்றி ஜெயகுமாரி அவர்களே...!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: "ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."

Post by antokkuly on Sun Feb 07, 2010 12:34 am

அன்று உலகிலேயே தலைநிமிர்ந்து வாழ்ந்த இனம்.ஆனால் இன்று உலகிலேயே பாவப்பட்ட இனம்.அரசியல் என்ற போர்வையில் உள்ள போலிகள் இருக்கும்வரை தமிழனை யாராலும் காப்பாற்ற முடியாது.
avatar
antokkuly
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 44
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: "ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."

Post by அப்புகுட்டி on Sun Feb 07, 2010 1:57 am

தமிழண் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்றது அப்போது
ஆனால் இப்போது தமிழண் என்றால் தலை குனிய வேண்டிய நிலை இலங்கையில் காலப்போக்கில் தமிழ் இனம் ????????? அழுகை அழுகை
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: "ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."

Post by Manik on Sun Feb 07, 2010 3:59 pm

ரொம்ப வருத்தமா இருக்கு இதை படிக்கும் போது
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: "ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."

Post by antokkuly on Sun Feb 07, 2010 8:43 pm

என்றோ நான் இந்தியன் என்ற உணர்வு போய்விட்டது.நான் தமிழன்.தமிழன்
மட்டும்தான்.தனது மகன் மற்றும் பேரனுக்கு பதவிக்காக டெல்லிக்கு ஓடும்
தமிழ் தலைவர்கள் உள்ளவரை தமிழனுக்கு விடிவு களம் இல்லை.
avatar
antokkuly
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 44
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum