ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

பழைய தமிழ் திரைப்படங்கள்
 மூர்த்தி

ஆனந்த விகடன் 24.01.18
 Meeran

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 மூர்த்தி

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

தெரிஞ்சதும் தெரியாததும்
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 KavithaMohan

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
மூர்த்தி
 
heezulia
 

Admins Online

சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை

View previous topic View next topic Go down

சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை

Post by kalaimoon70 on Sun Feb 07, 2010 5:15 am

"நம் பிள்ளைகளுக்குப்
பல் முளைக்கும் முன்பே இந்த சினிமா
மீசை முளைக்க வைத்து விட்டது.
இந்த அழுக்குத் திரை
சலவை செய்யப்படுமா?
இல்லையெனில்...
மக்களைச் சுருள வைக்கும்
திரைப்பட சுருளையெல்லாம்
ஒரு தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்'
- வைரமுத்து


கவியரசின்
வரிகளுக்கு ஒப்புதல் அளிப்பது போல், "அனைத்து குற்றங்களுக்கும் காரணம்
சினிமா' என, மதுரை ஐகோர்ட் நீதிபதி வி. தனபாலன், வழக்கு விசாரணை ஒன்றில்,
சாட்டையை சுழற்றியுள்ளார். இது, நம்மூர் சினிமாக்காரர்கள் காதில்
விழவில்லை போலும்; இல்லையென்றால் கிளம்பியிருப்பர், கண்டனக் கூட்டமொன்று
நடத்த. திரைப்படம் என்பது ஒரு உன்னதக்கலை தான்; மறுப்பதற்கில்லை; அது,
நல்ல விஷயங்களை தரும் போது. இன்றைய தமிழ் சினிமா, எந்த உணர்வை மக்களிடம்
அதிகம் பரப்புகிறது? காதலா, கடமையா, வன்முறையா, ஆபாசத்தையா, மூட
நம்பிக்கையா என்று கேள்விகள் பலவற்றை எழுப்பினால், விடையை நான் சொல்லத்
தேவையில்லை; உங்களுக்கே புரியும் சற்று சிந்தித்துப் பார்த்தால். "கல்யாண
நாள் பார்க்கச் சொல்லலாமா' என்ற காலம் போய், "பிள்ளக் குட்டி
பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா?' என்ற ரீதியில் அல்லவா சென்று
கொண்டிருக்கிறது நமது கலாசாரம்.


கலாசார
சீரழிவு, வன்முறை, மாணவர்களிடையே ஹீரோயிசம் என, சமூகத்தை சீரழிக்கும்
செயல்கள் அனைத்திற்கும் வித்திடுவதில், இன்றைய சினிமா முக்கிய இடத்தைப்
பிடிப்தை யாராலும் மறுக்க முடியாது. நாகரிகமற்ற வார்த்தைகள், ஆபாசமான
அசைவுகள், அருவறுப்பான காட்சிகள், இரட்டை அர்த்தமுள்ள ஜோக்குகள்
ஆகியவற்றையே கதையம்சங்களாக கொண்டு பெரும்பாலான படங்கள் வெளிவந்து
கொண்டிருக்கின்றன. இதற்கு அர்த்தம், நல்ல படங்களே வெளிவருவதில்லை
என்பதல்ல; அற்புதமான கதை, தொழில்நுட்ப நேர்த்தி, ஒளிப்பதிவு என, அனைத்து
நல்ல அம்சங்களுடன் கூடிய படங்களும் வந்து கொண்டு தான் இருக்கின் றன.
ஆனால், அப்படிபட்ட படங்கள் எத்தனை வெளி வருகின்றன என்பதே மிகப் பெரிய
கேள்வி. ஒரு குடத்துத் தண்ணீரில், ஒரு சொட்டுப் பாலை கலந்தால் அது
பாலாகிவிடுமா? முன்பெல்லாம் தியேட்டருக்குச் சென்றால் தான் சினிமா. ஆனால்
இன்று? தொலைக்காட்சி மூலம் சினிமா நம் வீட்டுக்குள் நுழைந்து விட்டது.
வீட்டுக்குள் வந்த சினிமா, எல்லா வித உறவுகளோடும் அமர்ந்து பார்க்கும்
படியாகவா உள்ளது? அதிலும், தனியார் தொலைக்காட்சிகள் பலவும், போட்டி போட்டு
சினிமா நிகழ்ச் சிகளை ஒளிபரப்பி, தொலைக் காட்சி யை தொல்லைக்காட்சிகளாக
அல்லவா மாற்றிக் கொண்டிருக்கின்றன.


நம்
தமிழ் சமூகத்தில், சினிமாவின் தாக்கம் பெருமளவு இருப்பதை யாராலும் மறுக்க
முடியாது. நடிகைக்கு கோவில், நடிகன், "கட்-அவுட்'டுக்கு பாலாபிஷேகம்,
குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுக்க ஒரு நடிகை, வருமான வரியை கட்டச்
சொல்லி ஒரு நடிகர், அவ்வளவு ஏன்... புத்தகக் கண்காட்சியிலும் நடிகர்களே!
தீபாவளி, பொங்கல், என, அனைத்து விஷேச நாட்களிலும், நம் அனுமதி
இருந்தாலும், இல்லாவிட்டாலும், "டிவி' மூலம் வீட்டுக்குள் புகும்
சினிமாக்காரர்கள். இதாவது பரவாயில்லை... குடியரசு, சுதந்திர தின
நாட்களிலும் நடிகர்களே! அந்தோ பரிதாபம்... இந்த நிலையைப் பார்க்க தேசத்
தந்தை காந்தியுமில்லை; பாட்டுக்கொரு புலவன் பாரதியுமில்லை;
இருந்திருந்தால், வாங்கிய சுதந்திரத்தை, "வாபஸ்' பெறக் கோரி, தேசத்தந்தை
மீண்டும் ஒரு சத்தியாகிரகத்தை செய்தாலும் வியப்பதற்கில்லை. பள்ளி மாணவன்
என்றால் அவனுக்கு ஆசிரியரை கலாய்க்கத் தெரிய வேண்டும்; கல்லூரி மாணவன்
என்றால், அவனுக்கு கட்டாயமாக, "காதல்' வர வேண்டும். இது, சினிமாவின்
எழுதப்படாத இலக்கணம். இந்த இலக்கணத்தை படிப்பதால் தானே, பள்ளி
மாணவர்களும், "பன்ச்' டயலாக்குகளை பரவலாய் பேசுகின்றனர்.


"கருத்தம்மா'
படமெடுத்தாலும், அதில், "செவத்தம்மாவை' போட்டால் தான் படம் ஓடும்; அதனால்,
ரசிகர்கள் ரசனை அறிந்து அவர்கள் கேட்பதையே நாங்கள் தருகிறோம் என்பதே
இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் பதிலாக இருக்கும். அப்படியானால்,
இவர்கள் கூறுவது என்ன? தமிழனுக்கு ரசனையே கிடையாதா? ஆபாசத்தையும்,
அசிங்கத்தையும், பார்ப்பதையும், சிந்திப்பதையும் தவிர அவனுக்கு வேறு
சிந்தனையே கிடையாதா? தமிழர்கள் உயர்ந்த விஷயங்கள் பலவற்றையும் ரசிப்பதே
இல்லையா? இளைஞர்கள் மனதில் சுய முன்னேற்றம், சமூக பொறுப்புணர்வு பற்றிய
சிந்தனையே இல்லையா? இல்லை ரசிப்பதற்கு தகுதியற்றவர்களா?


மக்கள்
விரும்புகிறார்கள் என்பதற்காக, சமூக அக்கறையில்லாமல், வெட்டு, குத்து,
ஆபாசத்தை அள்ளித் தெளிப்பதா? ஆரம்பத்தில் இது போன்ற படங்களை மக்கள் தாழ்
பார்வையுடன் பார்த்தாலும், பின் அவற்றையும் வேறு வழியின்றி ஜீரணிக்கக்
கற்றுக் கொண்டு விட்டனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. காவிரி
பிரச்னைக்கும், ஈழத்தமிழர் படுகொலைக்கும் உண்ணாவிரதம் இருந்து பேராட்டம்
நடத்தி, தமிழன் மீதும், தமிழகத்தின் மீதும் அக்கறை உள்ளவர்களாய் வேஷம்
போடும் இவர்களுக்கு, தமிழ் சினிமாவால் இந்த சமூகம் பாழாய்
போய்கொண்டிருப்பது தெரியாதா? "அம்மா-அப்பா வாயில சோத்தைப் போடு, அடுத்தவன்
வாயில மண்ணைப் போடு' என, இவர்கள் பணம் சம்பாதிக்க, இளைஞர்கள் மட்டுமின்றி,
குழந்தைகளையும் கெடுத்து, குடும்பங்களை நாசமாக்கி சமுதாயத்தை சீரழிக்கும்,
இதுபோன்ற படங்களை சென்சார் என்ன செய்ய போகிறது? கதைக்கு தேவையென்றால்,
ஆபாசத்தை அனுமதிப்போம் என்று இன்னும் கதை சொல்லிக் கொண்டு தான் இருக்கப்
போகிறதா?


அப்படியானால், ஆபாசத்தை
அள்ளித் தெளித்துக் கொண்டு இருக்கும் படங்கள் அனைத்துமே, உண்மையில்
கதைக்கு தேவையானதாக தான் இருக்கிறதா அல்லது கரன்சிகள் கைமாறியதால் கதையோடு
தொடர்புடையதாக்கப்பட்டதா? பாடல்கள், படங்கள் என அனைத்திலும் ஒழுக்க மீறல்,
ஆபாசம். இந்த ஒழுக்க மீறல்களையும், வக்கிரத்தையும் ஆட்சேபனை
தெரிவிக்காமல், இன்னும் நாம் ஆதரித்து வந்தால், அவை போகப் போக மோசமான
விளைவை சமுதாயத்தில் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. தமிழ் சினிமா... சில
ஆண்டுகளுக்கு முன் அப்படி இருந்தது; தற்போது, இப்படி இருக்கிறது என்று
இனியும் கூறிக் கொண்டிருக்காமல், வரும் காலத்தில் எப்படி இருக்க வேண்டும்
என்பதை நிர்ணயிக்கப் போவது யார்? பூனைக்கு மணிகட்டப் போவது யார்? கேளிக்கை
வரியைக் கேலி கூத்தாக்கிய அரசாங்கமா? கறைபடிந்து, கண்களை மூடிக் கொண்டு
இருக்கும் சென்சார் போர்டா? இனியும் இந்த நிலை தொடருமானால்...
பொறுப்பதற்கில்லை... வாருங்கள் தோழர்களே கைகோர்ப்போம்; வைரமுத்து வரிகளை
வாய்மையாக்க.
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை

Post by kirupairajah on Sun Feb 07, 2010 9:21 am

@kalaimoon70 wrote:"நம் பிள்ளைகளுக்குப்
பல் முளைக்கும் முன்பே இந்த சினிமா
மீசை முளைக்க வைத்து விட்டது.
இந்த அழுக்குத் திரை
சலவை செய்யப்படுமா?
இல்லையெனில்...
மக்களைச் சுருள வைக்கும்
திரைப்பட சுருளையெல்லாம்
ஒரு தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்'
- வைரமுத்து


நல்லதோர் பதிவு, நன்றி கலை

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை

Post by snehiti on Sun Feb 07, 2010 10:42 am

வாருங்கள் தோழர்களே கைகோர்ப்போம்; வைரமுத்து வரிகளை
வாய்மையாக்க. வருங்கால சந்ததியினரை காக்க‌
avatar
snehiti
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1157
மதிப்பீடுகள் : 39

View user profile

Back to top Go down

Re: சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை

Post by அப்புகுட்டி on Sun Feb 07, 2010 10:46 am

@snehiti wrote:வாருங்கள் தோழர்களே கைகோர்ப்போம்; வைரமுத்து வரிகளை
வாய்மையாக்க. வருங்கால சந்ததியினரை காக்க‌
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை

Post by Manik on Sun Feb 07, 2010 11:06 am

கட்டிப்பிடி கட்டிப்பிடிடா

சிரிச்சி சிரிச்சு வந்தா சீனாதானா டோய்

ஓ போடு ஓ போடு

இந்த மாதிரி பாட்டுகளும் வைரமுத்து தான் எழுதியது

இது மட்டும் இன்றைய இளைஞர்களை திருத்தக்கூடிய வரிகளா தன் முதுகை துடைத்துவிட்டு பிறகு அடுத்தவர் குறையை போக்கச்சொல்லுங்கள்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை

Post by அப்புகுட்டி on Sun Feb 07, 2010 11:16 am

நல்லவைகளை நாம் தேடுவோம் நமக்கும் நல்லது நடக்கும்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை

Post by Manik on Sun Feb 07, 2010 11:21 am

நல்லதுதான் தேடிட்டு இருக்கோம் நடுவுல இந்த கெட்டது வருதே என்ன பன்றது நம்மளும் மனுசன் தானே
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை

Post by அப்புகுட்டி on Sun Feb 07, 2010 12:23 pm

மறக்க முயற்சி பண்ணுவோம் நண்பா
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை

Post by Manik on Sun Feb 07, 2010 1:09 pm

இப்படித்தான் சொல்றோம் ஆனா முடியலையே
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சினிமாவில் சிதையும் பண்பாடு : உரத்த சிந்தனை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum