ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்

View previous topic View next topic Go down

இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்

Post by சிவா on Sun Feb 07, 2010 1:38 pm

இனியவை நாற்பது
பூதஞ்சேந்தனார் இயற்றியது
(பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று)


( இனியது நாற்பது, இனிது நாற்பது, இனிய நாற்பது என்னும் பெயர்களானும் இந்நூல் வழங்குதலுண்டு )

கடவுள் வாழ்த்து

கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது.

நூல்

பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே
நற்சலையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. 1

உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால்
மனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின்
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத் தான்இனிது நன்கு. 2

ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே
நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே
ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே
தேரிற்கோள் நட்புத் திசைக்கு. 3

யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே
ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே
கான்யாற் றடைகரை யூர்இனி தாங்கினிதே
மான முடையார் மதிப்பு. 4

கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயஞ்
செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல்
எய்துங் திறத்தால் இனிதென்ப யார்மட்டும்
பொல்லாங் குரையாமை நன்கு. 5

ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்இனிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்
காப்படையக் கோடல் இனிது. 6

அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே
தந்தையே ஆயினுந் தானடங்கான் ஆகுமேல்
கொண்டடையா னாகல் இனிது. 7

ஊருங் கலிமா உரனுடைமை முன்இனிதே
தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக்
கார்வரை யானைக் கதங்காண்டல் முன்இனிதே
ஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை
பேதுறார் கேட்டல் இனிது 8

தங்க ணமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே
அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே
பங்கமில் செய்கைய ராகிப் பரிந்துயார்க்கும்
அன்புடைய ராதல் இனிது. 9

கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே
நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே
மனமாண்பி லாதவரை யஞ்சி யகறல்
எனைமாண்புந் தான்இனிது நன்கு. 10


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்

Post by சிவா on Sun Feb 07, 2010 1:38 pm

அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே
குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே
உயிர்சென்று தான்படினும் உண்ணார்கைத் துண்ணாப்
பெருமைபோற் பீடுடையது இல். 11

குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
சுழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
திருவுந்தீர் வின்றேல் இனிது. 12

மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே
தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே
ஊனமொண் றின்றி உயர்ந்த பொருளுடைமை
மானிடவர்க் கெல்லாம் இனிது. 13

குழவி தளர்நடை காண்டல் இனிதே
அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே
வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து
மனனஞ்சான் ஆகல் இனிது. 14

பிறன்மனை பின்னோக்காப் பீடினி தாற்ற
வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே
மறமன்னர் தங்கடையுள் மாமலைபோல் யானை
மதமுழக்கங் கேட்டல் இனிது. 15

சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது. 16

நாட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும்
ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன்இனிதே
பற்பல தானியத்தது ஆகிப் பலருடையும்
மெய்த்துணையுஞ் சேரல் இனிது. 17

மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே
எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக்
கண்டெழுதல் காலை இனிது. 18

நட்டார்ப் புறங்கூறான் வாழ்தால் நனிஇனிதே
பட்டாங்கு பேணிப் பணிந்தொழுதல் முன்இனிதே
முட்டில் பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது
தக்குழி ஈதல் இனிது. 19

சலவாரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது. 20


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்

Post by சிவா on Sun Feb 07, 2010 1:38 pm

பிறன்கைப் பொருள்வெளவான் வாழ்தல் இனிதே
அறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
திறந்தெரிந்து வாழ்தல் இனிது. 21

வருவா யறிந்து வழங்கல் இனிதே
ஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே
பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார்
திரிபின்றி வாழ்தல் இனிது. 22

காவோ டறக்குளம் தொட்டல் மிகஇனிதே
ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே
பாவமும் அஞ்சாராய்ப் பற்றுந் தொழில்மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது. 23

வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே
ஒல்லுந் துணையும்ஒன்று உய்ப்பான் பொறை இனிதே
இல்லாது காமுற் றிரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது. 24

ஐவாய வேட்கை யவாவடக்கல் முன்இனிதே
கைவாய்ப் பொருள்பெறினுங் கல்லார்கண் தீர்வினிதே
நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது. 25

நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே
உட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே
எத்திறத் தானும் இயைவ கரவாத
பற்றினின் பாங்கினியது இல். 26

தானங் கொடுப்பான் தகையாண்மைமுன் இனிதே
மானம் படவரின் வாழாமை முன்இனிதே
ஊனங்கொண் டாடார் உறுதி உடையவை
கோள்முறையாற் கோடல் இனிது. 27

ஆற்றாமை யாற்றென் றலையாமை முன்இனிதே
கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வனிதே
ஆக்க மழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வினியது இல். 28

கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே
உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே
எளியர் இவரென் றிகழ்ந்துரையா ராகி
ஒளிபட வாழ்தல் இனிது. 29

நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே
மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே
அன்றறிவார் யாரென் றடைக்கலம் வெளவாத
நன்றியின் நன்கினியது இல். 30


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்

Post by சிவா on Sun Feb 07, 2010 1:39 pm

அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே
கடன்கொண்டுஞ் செய்வன செய்தல் இனிதே
சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து
அறிந்துரைத்தல் ஆற்ற இனிது. 31

சுற்றறிந்தார் கூறுங் கருமப் பொருள்இனிதே
பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே
தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்
பத்திமையிற் பாங்கினியது இல். 32

ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே
தானே மடிந்திராத் தாளாண்மை முன்இனிதே
வாய்மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர்
தானை தடுத்தல் இனிது. 33

எல்லிப் பொழுது வழங்காமை முன்இனிதே
சொல்லுங்கால் சோர்வின்றச் சொல்லுதல் மாண்பினிதே
புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை
கொள்ளர் விடுதல் இனிது. 34

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன்இனிதே
முற்றான தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே
பற்றினலாய்ப் பல்லுயிர்க்கும் பாத்தூற்றுப் பாங்கறிதல்
வெற்வேறில்@ வேந்தர்க்கு இனிது. 35
@ வெற்றல் வேல்

அவ்வித் தழுக்கா றுரையாமை முன்இனிதே
செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே
கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று
வவ்வார் விடுதல் இனிது. 36

இளமையை மூப்பென் றுணர்தல் இனிதே
கிளைஞர்மாட் டச்சின்மை கேட்டல் இனிதே
தடமென் பணைத்தோள் தளிரிய லாரை
விடமென் றுணர்தல் இனிது. 37

சிற்றா ளுடையான் படைக்கல மாண்பினிதே
நட்டா ருடையான் பகையாண்மை முன்இனிதே
எத்துணையும் ஆற்ற இனிதென்ப பால்படுங்
சுற்றா உடையான் விருந்து. 38

பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்இனிதே
துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே
உற்றபே ராசை கருதி அறனொரூஉம்
ஒற்கம் இலாமை இனிது. 39

பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே
வித்துற்குற் றுண்ணா விழுப்பம் மிகஇனிதே
பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய
கற்றலிற் காழினியது இல். 40

இனியவை நாற்பது முற்றிற்று


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்

Post by சிவா on Fri May 24, 2013 2:40 pm

இனியவை நாற்பது - சாமி. சிதம்பரனார்

நூல் வரலாறு

நாற்பது வெண்பாக்கள் கொண்ட நூல்; நல்லவை இவை இவை என்று எடுத்துரைக்கின்றன. ஆகையால் இந்நூலுக்கு இனியவை நாற்பது என்று பெயர். இன்று 41 வெண்பாக்கள் இருக்கின்றன. முதற்பாட்டு கடவுள் வாழ்த்து. சிவன், திருமால், நான்முகன் மூவரையும் வாழ்த்துகின்றது. இவ்வாழ்த்து பிற்காலத்தாரால் பாடிச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்நூலைச் செய்த ஆசிரியர் பெயர் பூதஞ்சேந்தனார். இவர் இயற்பெயர் சேந்தனார்; இவர் தந்தை பெயர் பூதனார்; இந்தப் பூதனார் மதுரையில் வாழ்ந்தவர். இவர் தமிழ் ஆசிரியர். ஆதலால் இந் நூலாசிரியரை மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் என்று அழைத்தனர்.


இந்நூல் வெண்பாக்கள் ஒவ்வொன்றும் மக்கள் நலம் பெற்று வாழ்வதற்கான நல்லறங்களைக் கூறுகின்றன. பெரும்பாலான வெண்பாக்களில் மூன்று செய்திகள்தாம் சொல்லப்படுகின்றன. சில சிறந்த நீதிகள் இதில் உண்டு. இவ்வெண்பாக்கள் அவ்வளவு கடினமானவையல்ல. எளிதில் பொருள் தெரிந்து கொள்ளக்கூடியவை. மோனையும், எதுகையும் அமைந்த அழகிய வெண்பாக்கள், சில பஃறொடை வெண்பாக்களும் இதில் உண்டு.

பாடல் சிறப்பு

மெய், வாய், கண், மூக்கு, செவி யென்பன ஐம்பொறிகள். இவைகளை அடக்கி ஆளும் மனிதனே மன அமைதியுடன் வாழ முடியும். கல்லாத மூடர்களின் சேர்க்கையால் செல்வங் கிடைப்பதாயினும் அச்சேர்க்கையைக் கைவிடுதல்தான் நலம். நிலைத்த அறிவும், நெஞ்சிலே உரமும் இல்லாத மனிதருடன் சேர்ந்து வாழாமைதான் நன்மை தரும். இவ்வாறு அறவுரை கூறுகின்றது ஒரு செய்யுள்.

‘‘ஐவாய வேட்கை அவா அடக்கல் முன்இனிதே;
கைவாய்ப் பொருள்பெறினும் கல்லார்கண் தீர்வு இனிதே;
நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது.

ஐம்பொறிகளின் வழியால் வரும் நினைப்பையும் ஆசையையும்
அடக்கிக்கொள்வதே மிகவும் சிறந்தது; கையிலே பொருள்

கிடைப்பதாயிருப்பினும் கல்லாதவரை விட்டுப் பிரிதலே நன்று; நிலையில்லாத
அறிவும், நெஞ்சிலே உறுதியும் இல்லாத மனிதரைச் சேராமல்

இருப்பதே நலம்’’ (பா.26)

நன்மைகள் இவை என்று எடுத்துரைக்கும் மற்றொரு செய்யுளும்
மனத்திலே பதிய வைத்துக்கொள்ளத்தக்கதாகும்.

‘‘கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே,
உயர்வுஉள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே;
எளியர் இவர்என்று இகழ்ந்துரையார் ஆகி
ஒளிபட வாழ்தல் இனிது.

கீழ்த்தரமானவர்களுடன் சேராமல் வாழ்வது நலம்; தான் மேலும்
உயர்வதற்கு எண்ணி, அதற்காக ஊக்கம் பெற்று உழைத்தல் நலம்; இவர்
வறியவர் என்று ஒருவரையும் இகழ்ந்து பேசாமல் புகழுடன்
வாழ்வதே நலம்’’ (பா.30)

தன்மானம்

தன்மானத்துடன் வாழாதவன் மனிதன் அல்லன். தன்மானமே உயிர் எனக் கொண்டவன்தான் மக்களால் அவ்வுணர்ச்சியை எச்சமயத்திலும் இழந்துவிடுவதில்லை. சிலர் ஆபத்தும் மனச்சோர்வும் ஏற்படும்போது, அவ்வுணர்ச்சியை விட்டுவிடுகின்றனர். எச்சமயத்திலும் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதே மனிதத்தன்மை என்று கூறுகின்றது இந்நூல்.

‘‘உயிர்சென்று தான்படினும் உண்ணார் கைத்து உண்ணாப்
பெருமை போல் பீடுஉடையது இல்

பசியினால் உயிரே போவதானாலும், உண்ணத்தகாதவர் கையிலிருந்து
உணவைப் பெற்று உண்ணாத பெருமையே சிறந்தது; அதைப் போன்ற
பெருமை வேறு ஒன்றும் இல்லை’’

‘‘மானம் அழிந்தபின் வாழாமை முன்இனிதே

மானங்கெட்ட பின் உயிர் வாழ்வதைவிடச் செத்து மடிவதே
சிறந்ததாகும்’’ (பா.14)

‘‘மானம் படவரின் வாழாமை முன்இனிதே
மானம் கெடும்படியான நிலைமை வருமாயின், அந்நிலைமை வருவதற்கு
முன்பே இறந்துபடுதல் நன்று’’ (பா.28)

இவைகள், தன்மானத்தின் பெருமையை எடுத்துக் காட்டின.

அரசன் கடமை

நாடாளும் மன்னவன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் இந்நூல் எடுத்துரைக்கின்றது. அரசனுக்குக் கூறப்பட்டிருக்கும் அந்த அறிவுரை, அரசன் அற்ற குடி அரசுக்கும் ஏற்றதாகும்.

‘‘ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன்இனிதே;
முன்தான் தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே;

பற்றுஇலனாய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கு
அறிதல்
வெற்றிவேல் வேந்தர்க்கு இனிது. (பா.36)


ஒற்றர்களைக்கொண்டும் நாட்டிலே நடைபெறும் நிகழ்ச்சிகளைத் தெரிந்துகொள்ளுதல் சிறந்தது; நீதி வழங்குவதற்கு முன்பே, தான் நன்றாக ஆராய்ந்து உண்மையறிந்து நீதி வழங்குவதே சிறந்தது; ஒரு சார்பிலே நிற்காதவனாய், எல்லாவுயிர்களிடத்தும் சமமான நிலையில் நின்று, எல்லாரிடத்திலும் உள்ள நன்மை தீமைகளை அறிந்து கொள்ளுவதே வேந்தர்களின் கடமை’’

இந்த அறிவுரையைப் பின்பற்றி நடக்கும் அரசாங்கம் எப்பொழுதும் நிலைத்து நிற்கும்; மக்களால் தூற்றப்படாது; போற்றப்படும்.

சிறந்த அறங்கள்

இன்னும் பல சிறந்த அறங்களும் இந்நூலிலே கூறப்பட்டுள்ளன. அவைகளில் சிலவற்றைக் காண்போம்.

‘‘தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை’’ என்று நாம் படித்திருக்கின்றோம். தந்தையைத் தெய்வமாகப் போற்றவேண்டும் என்பதேஇதன் கருத்து. தந்தைமொழியைத் தட்டவே கூடாது என்று இன்றும் சிறுவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்றோம். இதற்கு மாறான கருத்தைஇந்நூலிலே காணலாம் ‘‘தந்தை ஒழுக்கம் அற்றவனாயிருந்தால், - நீதி இது, அநீதி இது, என்று அறியாதவனாயிருந்தால் - அவனுடைய சொல்லைக் கேட்கக்கூடாது. கேட்பதனால் யாதும் பயன் இல்லை’’ என்று கூறுகிறது இந்நூல்.

‘‘தந்தையே ஆயினும்தான் அடங்கான் ஆகுமேல்
கொண்டு அடையான் ஆகல் இனிது.

தந்தையாயிருந்தாலும் சரி அவன் அடக்க மற்றவனாயிருப்பின், அவன்
சொல்லைக் கேட்டு நடக்காமல் இருப்பதே நலம்’’ (பா.8)

‘‘பிச்சை புக்காயினும் கற்றல் இனிதே (பா.2)

பிச்சையெடுத்தாவது கல்வி கற்றல் மிகவும் சிறந்தது.” இது அனைவரும்
போற்றக்கூடிய சிறந்த அறிவுரையாகும்.

‘‘பற்பலநாளும் பழுதுஇன்றிப் பாங்குடைய

கற்றலின் காழ்இனியது இல்.

பல நாட்களும் சோர்வில்லாமல் சிறப்பு நூல்களைக் கற்பதைவிட மிகச் சிறந்தது வேறொன்றும் இல்லை’’ இவை கல்வியின் சிறப்பை வலியுறுத்தின.

‘‘ஊனைத்தின்று ஊனைப் பெருக்காமை முன் இனிதே

வேறு ஒரு உயிரின் உடம்பைத் தின்று, தன் உடம்பை வளர்க்காமல் இருப்பதே சிறந்த அறம்’’ (பா.5) என்று சொல்லி மாமிச உணவைக் கூடாது என்று மறுக்கின்றது.

‘‘கடம் உண்டு வாழாமை காண்டல் இனிதே

கடன் வாங்கி உண்டு வாழாத முறையைக் கண்டறிந்து வாழ்தலே
சிறந்தது’’ (பா.11)

‘‘கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே

பணம் இல்லை என்று செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாமல் விட்டுவிடக்கூடாது; கடன் வாங்கியாவது அவற்றைச் செய்து முடிப்பதே நன்று’’(பா.43) இவைகள் கடன் வாங்குவதை மறுத்தும், அவசியமானால் கடன் வாங்கலாம் என்றும் கூறின.

‘‘வினையுடையான் வந்து அடைந்து வெய்துறும் போழ்து
மனன் அஞ்சான் ஆகல் இனிது.

ஊழ்வினை தன்னை அடைந்து, அதனால் துன்பம் அடையும் பொழுதும், உள்ளத்திலே அச்சமும் சோர்வும் இன்றி உரிய கடமைகளைச் செய்வதே சிறந்தது’’ (பா.15) ஊழ்வினை ஒன்று உண்டு; ஆயினும், உள்ளத்திலே ஊக்கமும், ஆண்மையும் உள்ளவர் அவ்வினையை முறியடிக்கலாம்; என்று உரைத்தது இது.

‘‘ஊர் முனியா செய்தொழுகும் ஊக்கம் மிக இனிதே

தான் இருக்கும் ஊரார் வெறுக்கத் தகாத செயல்களைச் செய்து வாழும் ஊக்கமே சிறந்தது; ஊரார் வெறுக்கும் செயல்களைச் செய்பவன் துன்பத்திற்கு ஆளாவான்’’ (பா.34) இது ஊருடன் ஒத்துவாழ வேண்டும் என்று அறிவுறுத்தியது.

‘‘எத்துணையும் ஆற்ற இனிது என்ப பால்படும்
கற்றா உடையான் விருந்து (பா.39)

எந்த அளவிலும் மிகவும் பால் கறக்கும் கன்றோடு கூடிய பசுவை
உடையவன் செய்யும் விருந்தே சிறந்தது என்பர்’’

யார் செய்யும் விருந்து சிறந்தது என்பதை எடுத்துரைத்தது இச்செய்யுள். மற்றவர்கள் செய்யும் விருந்தைக் காட்டிலும் கறவைப் பசுவை வைத்திருக்கின்றவன் செய்யும் விருந்தே சிறந்ததாம். நல்ல பால், நல்ல நெய், நல்ல தயிர் இவை விருந்திற்கு வேண்டியவை. விலைக்கு வாங்கினால் அவ்வளவு நல்லதாகக் கிடைக்காது. சொந்தமாக மாடிருந்தால்தான், கலப்பற்ற பால், தயிர், நெய் கிடைக்கும். ஆதலால் கறவைப் பசுவையுடையவன் செய்யும் விருந்தே சிறந்த சுவையுள்ள விருந்தாகும் என்று கூறிற்று.

திருக்குறள்

இனியவை நாற்பதிலே திருக்குறளின் கருத்துக்கள் பல
காணப்படுகின்றன.

ஊனைத்தின்று ஊனைப் பெருக்காமை முன் இனிது

என்பது ‘‘தன் ஊன் பெருக்கற்குத்தான் பிறிதின் ஊன் உண்பான், எங்ஙனம்
ஆளும் அருள்’’ என்ற திருக்குறளின் கருத்தைக் கொண்டதாகும்.

ஆற்றுந் துணையால் அறம் செய்கை
முன் இனிதே (பா.7)

என்பது ‘‘ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே; செல்லும் வாய்
எல்லாம் செயல்’’ என்ற திருக்குறளின் கருத்தாகும்.

மானம் அழிந்த பின் வாழாமை முன் இனிதே (பா.14)

என்பது ‘‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார், உயிர் நீப்பர்
மானம் வரின்’’ என்ற குறளின் கருத்தைக் கொண்டதாகும்.

நட்டார்க்கு நல்ல செயலின் இனிது எத்துணையும்
ஒட்டாரை ஓட்டிக் கொளல் அதனின் முன் இனிதே (பா.18)

என்பது, ‘‘நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக்கொளல்’’ என்ற திருக்குறளின் பொருளை அப்படியே எடுத்துரைக்கின்றது. இவ்வாறே பல பாடல்களிலே திருக்குறளின் கருத்துக்கள் காணப்படுகின்றன.

இனியவை நாற்பதிலே உள்ள வெண்பாக்கள் அனைத்தும் சிறந்த கருத்தமைந்தவை; படிப்போர் மனத்திலே அப்படியே பதியக் கூடியவை; தமிழ் மக்கள் வாழ்க்கைச் சிறப்பைக் காண்பதற்கு இந்நூல் உதவி செய்கின்றது; அவர்களுடைய ஒழுக்கச் சிறப்பை விளக்கி உரைக்கின்றது.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum