|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» வரலாற்றில் இன்று !by முஹைதீன் Today at 9:30 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by realvampire Today at 9:26 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by முஹைதீன் Today at 9:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by முஹைதீன் Today at 9:14 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by முரளிராஜா Today at 8:27 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by யினியவன் Today at 2:27 am
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Yesterday at 5:41 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மரபுப் பா பயிலரங்கம்
Page 10 of 34 • Share •
Page 10 of 34 •
1 ... 6 ... 9, 10, 11 ... 22 ... 34 
மரபுப் பா பயிலரங்கம்
First topic message reminder :
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- எழுத்து

Last edited by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:27 pm; edited 1 time in total
தமிழநம்பி- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 219
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 12
Re: மரபுப் பா பயிலரங்கம்
வழிப்போக்கனார்க்கு,
எங்கும் வாழும் அன்பே மூச்சாய்
துன்பம் தன்னை என்றும் தாங்கும்
நெஞ்சம் ஏற்கும் நட்பு..!
அருமை.
நல்ல கருத்தோடு எழுதிய வெண்டாழிசைப் பா.
பாராட்டுகிறேன்.
தொடர்ந்து எழுதுக.
எங்கும் வாழும் அன்பே மூச்சாய்
துன்பம் தன்னை என்றும் தாங்கும்
நெஞ்சம் ஏற்கும் நட்பு..!
அருமை.
நல்ல கருத்தோடு எழுதிய வெண்டாழிசைப் பா.
பாராட்டுகிறேன்.
தொடர்ந்து எழுதுக.
தமிழநம்பி- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 219
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 12
Re: மரபுப் பா பயிலரங்கம்
16. வெண்தாழிசை – 3
நாம் அடுத்து இன்னொருவகை வெண்தாழிசைப் பாடல் எழுத இருக்கின்றோம்.
இவ்வகையும் மூன்றடிப் பாடலே.
இவ்வகைத் தாழிசையில்...
1. முதல் இரண்டு அடிகள் நான்கு சீர்களாகவும் மூன்றாம் அடி முச்சீராகவும் இருக்கும்.
2. மூன்றாம் அடியின் ஈற்றுச்சீர் (பாடலின் இறுதிச் சீர்) தவிர மற்றவை கருவிள(நிரைநிரை)ச் சீர்கள்.
3. மூன்றடிகளிலும் ஓரெதுகை அமைய வேண்டும்.
4. ஈற்றுச் சீர் ஓரசைச் சீராக ‘நாள்’ அல்லது ‘காசு’ என்ற வாய்பாட்டால் முடியவேண்டும்.
எடுத்துக்காட்டு :
இனியநம் தமிழ்மொழி எழில்கெட விடுவதோ
இனிவிழித் திருந்துநாம் இழிவினை அகற்றிட
அணிவகுத் தெழுந்திடு வோம்.
இப்பாடலை எழுதியவர் நெய்வேலி ப.வனிதா.
இன்னொரு எடுத்துக்காட்டு:
தனக்கென வதிந்திடும் தமிழின இரண்டகர்
இனத்தினை அழித்திட எவர்க்குமே துணைசெலல்
சினமுறச் செயுஞ்செய லாம்.
நீங்கள் விரும்பும் கருத்தமைய இவ்வகைத் தாழிசைப் பாடலை
எழுதுக. எளிய முயற்சியுடன் எழுதலாம்; மிகுந்த மகிழ்ச்சி தரும்.

அடுத்த வெண்தாழிசையில் என் முயற்சி
ஐய்யா தமிழ நம்பி, வணக்கம் தங்கள் நலன் காப்பீர்!
மிகவும் தெளிவாக உள்ளது தாங்கள் பயிற்றுவிக்கும் முறை. இதுகுறித்து யாம் அளவிலா மகிழ்ச்சி அடைகிறோம். எம் நன்றிகளை ஏற்பீர்!
அடுத்த வெண்தாழிசையில் என் முயற்சி.
ஒன்று:
பழுத்தசெந் தமிழ்ப்பாட லெழுதிடும் பாவலரே
எழுத்தெடுத் தெழுதியே இனித்திடும் பாடலுடன்
கழுத்தசைத் துனைவணங் குவேன்.
---------------------
இரண்டு:
பூவும்காயும் குலுங்கிடும் அடர்சோலை மரங்களில்
கூவும்குயி லொடுதோகை மயிலெலாம் காணும்போது
நாவுமித யமுமினித் திடுதே!
அன்பு வணக்கங்களுடன்
யாதுமானவள்

யாதுமானவள்- இளையநிலா

- பதிவுகள்: 306
வசிப்பிடம்: வளைகுடா நாட்டில்
சேர்ந்தது: 30/05/2010
மதிப்பீடு: 40
Re: மரபுப் பா பயிலரங்கம்
யாதுமானவர்க்கு,
வணக்கம். உங்கள் ஈடுபாட்டிற்கு நன்றி.
இப்பொழுது எழுதும் வெண்தாழிசை -3 வகையில் கடைசிச் சீர்
தவிர மற்ற எல்லாச் சீர்களும் நிரைநிரை-சீர்களாக இருக்க வேண்டும்.
கடைசீச் சீர் (மூன்றாம் அடியின் இறுதிச்சீர்) ஓரசைச் சீர் - நாள் அல்லது காசு என்ற வாய்பாட்டில் வரவேண்டும்.
சில சிறு திருத்தங்கள் செய்ய வேண்டும். நீங்களே செய்துவிடலாம். தயக்கமாயிருப்பின், நான் திருத்துகிறேன்.
-தமிழநம்பி
வணக்கம். உங்கள் ஈடுபாட்டிற்கு நன்றி.
இப்பொழுது எழுதும் வெண்தாழிசை -3 வகையில் கடைசிச் சீர்
தவிர மற்ற எல்லாச் சீர்களும் நிரைநிரை-சீர்களாக இருக்க வேண்டும்.
கடைசீச் சீர் (மூன்றாம் அடியின் இறுதிச்சீர்) ஓரசைச் சீர் - நாள் அல்லது காசு என்ற வாய்பாட்டில் வரவேண்டும்.
சில சிறு திருத்தங்கள் செய்ய வேண்டும். நீங்களே செய்துவிடலாம். தயக்கமாயிருப்பின், நான் திருத்துகிறேன்.
-தமிழநம்பி
தமிழநம்பி- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 219
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 12
அக் கவிதையைத் தாங்கள் திருத்துங்கள். அதுவே என் எதிபார்ப்பு!
அய்யா காலை வணக்கம்.
அக் கவிதையைத் தாங்கள் திருத்துங்கள். அதுதான் சிறப்பு.
அதே போல் தவ(த்)ற்றிற்குப் பிறகு நான் மாற்றி எழுதியதையும் சரியக உள்ளதா எனக் கூறுங்கள்.
பழுத்தசெந் தமிழ்கவி தைபுணையும் புலவனே
எழுத்தெடுத் தெழுதியே இனித்திடும் கவிதையால்
கழுத்தசைத் துமைவணங் குவம்.
சிறுமல ரொடுகனி குலுங்கிடும் மலையினில்
கருங்குயி லொடுமயி லினங்களும் சுவைத்திட
நறுவிருந் துகளதி லுண்டு.
அன்புடன்
யாதுமானவள்
அக் கவிதையைத் தாங்கள் திருத்துங்கள். அதுதான் சிறப்பு.
அதே போல் தவ(த்)ற்றிற்குப் பிறகு நான் மாற்றி எழுதியதையும் சரியக உள்ளதா எனக் கூறுங்கள்.
பழுத்தசெந் தமிழ்கவி தைபுணையும் புலவனே
எழுத்தெடுத் தெழுதியே இனித்திடும் கவிதையால்
கழுத்தசைத் துமைவணங் குவம்.
சிறுமல ரொடுகனி குலுங்கிடும் மலையினில்
கருங்குயி லொடுமயி லினங்களும் சுவைத்திட
நறுவிருந் துகளதி லுண்டு.
அன்புடன்
யாதுமானவள்

யாதுமானவள்- இளையநிலா

- பதிவுகள்: 306
வசிப்பிடம்: வளைகுடா நாட்டில்
சேர்ந்தது: 30/05/2010
மதிப்பீடு: 40
Re: மரபுப் பா பயிலரங்கம்
யாதுமானவர்க்கு,
வணக்கம்.
சிறுமல ரொடுகனி குலுங்கிடும் மலையினில்
கருங்குயி லொடுமயி லினங்களும் சுவைத்திட
நறுவிருந் துகளதி லுண்டு.
நீங்களே திருத்திய இந்த வெண்தாழிசைப் பாடல் மிக அருமை.
இனி, முதல் பாட்டைப் பார்ப்போம்.
பழுத்தசெந் தமிழ்க்கவி தைபுனையும் புலவனே
எழுத்தெடுத் தெழுதியே இனித்திடும் கவிதையால்
கழுத்தசைத் துமைவணங் குவம்.
முதலடி மூன்றாம் சீர், தைபுனையும் என்பது கூவிளங்காய் ஆக உள்ளது. நாம் எழுதும் இப்பாடலில் நிரைநிரை அமைய வேண்டும்.
ஈற்றுச் சீர் ஓரசைச் சீர் குவம் என்பது மலர் என்னும் வாய்பாட்டில் உள்ளதைக் கவனிக்க.
நாம் எழுதும் இப்பாடலில் நாள் அல்லது காசு என்ற வாய்பாட்டிலேயே அந்த ஓரசைச்சீர் அமைய வேண்டும்.
இந்த இரண்டைத் தவிர, உங்கள் பாடல் நன்றாகவே அமைந்துள்ளது.
இந்தப் பாடலை கீழ்க் காணும் வகையில் நான் திருத்தி யிருக்கிறேன்.
பழுத்தசெந் தமிழினில் பழுதிலா இனியபா
எழுத்தெடுத் தெழுதியே இனிப்புற அளிப்பதால்
வழுத்தியே வணங்குகின் றோம்.
நீங்களே முயன்றால் இன்னும்கூடச் சிறப்பாகத் திருத்தி எழுதலாம்.
ஈடுபாட்டிற்கு நன்றி.
மற்ற நண்பர்களும் எழுத ஊக்கம் தருக.

தருந்தமிழ் இனிதெனச் சுவைத்திட வரும்கவி
அருவியாய் நனைத்திடும் பொழுதினில் பயிற்றிடும்
குருவினை நினைத்திடல் நன்று!
அருவியாய் நனைத்திடும் பொழுதினில் பயிற்றிடும்
குருவினை நினைத்திடல் நன்று!

வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: மரபுப் பா பயிலரங்கம்
வழிப்போக்கன் wrote:தருந்தமிழ் இனிதெனச் சுவைத்திட வரும்கவி
அருவியாய் நனைத்திடும் பொழுதினில் பயிற்றிடும்
குருவினை நினைத்திடல் நன்று!
அருமை!
வழிப்போக்கனார்க்குப் பாராட்டு!
தொடர்ந்து எழுதுக. ஈடுபாடுள்ள உள்ளங்களை ஊக்கி எழுதச்செய்க.
நன்றி.
தமிழநம்பி- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 219
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 12
Re: மரபுப் பா பயிலரங்கம்
நன்றி ஐயா தொடர்ந்தும் எழுதுவேன், மென் மேலும்கற்றிடும் ஆவலில் உள்ளேன்

வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
வெண்தாழிசை - 3 ல் சில முயற்சிகள்
வணக்கம் அய்யா,
தாங்கள் எப்போதும் நலமுடனிருக்க தமிழன்னையிடம் வேண்டுகிறேன்.
இதோ இன்றும் வெண்தாழிசை - 3 ல் சில முயற்சிகள் செய்துள்ளேன். தங்களின் திருத்தமும் கருத்தும் அறியும் ஆவலுடன்...
இளங்காலை நேரம்பாயு மிளங்கதிரை காணுவதால் |
இளமையோ டானந்தமும் பெரும்பேறும் பெறுவாயே |
வளமுடன் வாழும்போதே நீ! |
ஏதுமறி யாதபேதை யாகவேயா னிருந்தேனே |
ஈதுஇது வெனயானின் றறிந்தபின் |
யாதுமான வளாகிநின் றேன். |
பலகாலம் முயன்றபின் அழகிய தமிழதன் |
இலக்கணப் பெருங்கடல் உளமதில் நுழைந்தபின் |
இலகிய முறையறிந் தேன் |
தாமரைம லரிலமர்ந் தேனுண்டிடும் பூவண்டுகள் |
காமமது தலைக்கேறி டமிகவ ழகாய்தமிழ் |
பாமாலை பாடிடுதே பார்! |
அன்புடன்
யாதுமானவள்

யாதுமானவள்- இளையநிலா

- பதிவுகள்: 306
வசிப்பிடம்: வளைகுடா நாட்டில்
சேர்ந்தது: 30/05/2010
மதிப்பீடு: 40
Re: மரபுப் பா பயிலரங்கம்
யாதுமானவர்க்கு,
நாம் இப்பொழுது எழுதும் வெண்தாழிசைப் பாடலில் கடைசிச் சீர் தவிர எல்லாச் சீர்களும் நிரைநிரை (கருவிளம்) சீர்களாக அமைக்க வேண்டும்.
மேலே உள்ள நீங்கள் எழுதியுள்ள நான்கு பாடல்களிலும் அவ்வாறு நிரைநிரை-யில் சீர்கள் உள்ளனவா என்பதை அன்புகூர்ந்து நீங்களே ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அவ்வாறு சரிபார்த்த பிறகு ஏதேனும் திருத்த வேண்டி இருப்பின்
நான் உதவுகிறேன்.
ஐயம் இருப்பின், பயிலரங்கின் பாடப்பகுதி 2 - 5 ஒருமுறை திரும்பப் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
பிறகு, எந்த ஐயம் தோன்றினாலும் தயங்காது கேளுங்கள், விளக்குகிறேன்.
-த.ந.
நாம் இப்பொழுது எழுதும் வெண்தாழிசைப் பாடலில் கடைசிச் சீர் தவிர எல்லாச் சீர்களும் நிரைநிரை (கருவிளம்) சீர்களாக அமைக்க வேண்டும்.
மேலே உள்ள நீங்கள் எழுதியுள்ள நான்கு பாடல்களிலும் அவ்வாறு நிரைநிரை-யில் சீர்கள் உள்ளனவா என்பதை அன்புகூர்ந்து நீங்களே ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அவ்வாறு சரிபார்த்த பிறகு ஏதேனும் திருத்த வேண்டி இருப்பின்
நான் உதவுகிறேன்.
ஐயம் இருப்பின், பயிலரங்கின் பாடப்பகுதி 2 - 5 ஒருமுறை திரும்பப் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
பிறகு, எந்த ஐயம் தோன்றினாலும் தயங்காது கேளுங்கள், விளக்குகிறேன்.
-த.ந.
தமிழநம்பி- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 219
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 12
திருத்தங்கள்
வணக்கம் அய்யா தமிழநம்பி அவர்களே,
தங்களின் உடலும் உள்ளமும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வழக்கம் போல் தமிழன்னையிடம் வேண்டுகிறேன்.
என்னுடைய அவசரத் தன்மைக்கு மன்னிப்பீர்களாக. அழகாகத் தாங்கள் விளக்கியபின்னும் தவறுகள் செய்துள்ளேன். இனி கவனமாக எழுத எனக்கு நானே கட்டளையிட்டுக்கொண்டு தொடர்கிறேன்.
கீழே உள்ள செய்யுட்களில் சிகப்பு எழுத்துக்களில் எனக்குத் தவறெனப் பட்டவற்றை மாற்றி உள்ளேன். மற்றவை சரியாக இருப்பது போலவே தோன்றுகிறது. சரியா என்பதைத் தாங்கள் எனக்கு அறியத் தருவீர்!
இளங்காலை நேரம்பாயு மிளங்கதிர் காணுவதால்
இளமையோ டானந்தமும் பெரும்பேறும் பெறுவாயே
வளமுடன் வாழும்போதே நீ!
தாமரைம லரிலமர்ந் தேனுண்டிடும் பூவண்டுகள்
காமமது தலைக்கேறி டமிகவ ழகாய்தமிழ்
பாமாலைகள் பாடிடுதே பார்!
என்றும் அன்புடன்
யாதுமானவள்
தங்களின் உடலும் உள்ளமும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வழக்கம் போல் தமிழன்னையிடம் வேண்டுகிறேன்.
என்னுடைய அவசரத் தன்மைக்கு மன்னிப்பீர்களாக. அழகாகத் தாங்கள் விளக்கியபின்னும் தவறுகள் செய்துள்ளேன். இனி கவனமாக எழுத எனக்கு நானே கட்டளையிட்டுக்கொண்டு தொடர்கிறேன்.
கீழே உள்ள செய்யுட்களில் சிகப்பு எழுத்துக்களில் எனக்குத் தவறெனப் பட்டவற்றை மாற்றி உள்ளேன். மற்றவை சரியாக இருப்பது போலவே தோன்றுகிறது. சரியா என்பதைத் தாங்கள் எனக்கு அறியத் தருவீர்!
இளங்காலை நேரம்பாயு மிளங்கதிர் காணுவதால்
இளமையோ டானந்தமும் பெரும்பேறும் பெறுவாயே
வளமுடன் வாழும்போதே நீ!
தாமரைம லரிலமர்ந் தேனுண்டிடும் பூவண்டுகள்
காமமது தலைக்கேறி டமிகவ ழகாய்தமிழ்
பாமாலைகள் பாடிடுதே பார்!
என்றும் அன்புடன்
யாதுமானவள்

யாதுமானவள்- இளையநிலா

- பதிவுகள்: 306
வசிப்பிடம்: வளைகுடா நாட்டில்
சேர்ந்தது: 30/05/2010
மதிப்பீடு: 40
Re: மரபுப் பா பயிலரங்கம்
சிறுநடை பயின்றிடும் மழலையின் அடியினைத்
தொடர்ந்திட மனமது மயங்கிடக் குறும்பொடு
குறுநகை புரிந்திடும் சேய்!
சிறு(நிரை)நடை(நிரை) பயின்(நிரை)றிடும்(நிரை) மழ(நிரை)லையின்(நிரை) அடி(நிரை)யினைத்(நிரை)
தொடர்ந்(நிரை)திட(நிரை) மன(நிரை)மது(நிரை) மயங்(நிரை)கிடக் (நிரை) குறும்(நிரை)பொடு(நிரை)
குறு(நிரை)நகை(நிரை) புரிந்(நிரை)திடும்(நிரை) சேய்!(நாள்)
ஒவ்வொரு சீரிற்கும் ஒவ்வொரு நிறமும் அச்சீர் ஈரசையில் நிரை:நிரை எனவும் ஈற்றுச்சீர் நாள் என்பதற்கமைய அமைத்துள்ளேன். அசைபிரித்தல் சரியாகவேண்டும் என்பதற்காகவும் இம்முறையினை பார்ப்போர் புரிவார்கள் எனும் நம்பிக்கையில் எனது அசை பிரித்தலைக் காட்டியுள்ளேன் சரியாக உள்ளதா ஐயா?....
பாடங்களை கற்பதற்காகக் காத்திருக்கின்றேன் ஐயா!

வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: மரபுப் பா பயிலரங்கம்
பலநிலை களிலுமே பயனிலா வினையெலாம்
உலகினில் இயற்றியே உழன்றிடும் உலுத்தரும்
மலர்மண மிலததும் ஒன்று.
உலகினில் இயற்றியே உழன்றிடும் உலுத்தரும்
மலர்மண மிலததும் ஒன்று.
Last edited by குணமதி on Mon Jul 05, 2010 10:49 pm; edited 2 times in total
குணமதி- புதியவர்

- பதிவுகள்: 9
வசிப்பிடம்: விழுப்புரம்
சேர்ந்தது: 02/02/2010
மதிப்பீடு: 0
Re: மரபுப் பா பயிலரங்கம்
பாலன்,
உங்கள் பாடலும் நீங்கள் அசை பிரித்துக் காட்டியுள்ளதும் சரியாக உள்ளன.
பாராட்டுகிறேன்.
உங்கள் பாடலும் நீங்கள் அசை பிரித்துக் காட்டியுள்ளதும் சரியாக உள்ளன.
பாராட்டுகிறேன்.
குணமதி- புதியவர்

- பதிவுகள்: 9
வசிப்பிடம்: விழுப்புரம்
சேர்ந்தது: 02/02/2010
மதிப்பீடு: 0
Page 10 of 34 •
1 ... 6 ... 9, 10, 11 ... 22 ... 34 
Page 10 of 34
Permissions in this forum:
You cannot reply to topics in this forum