|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» வரலாற்றில் இன்று !by முஹைதீன் Today at 9:30 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by realvampire Today at 9:26 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by முஹைதீன் Today at 9:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by முஹைதீன் Today at 9:14 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by முரளிராஜா Today at 8:27 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by யினியவன் Today at 2:27 am
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Yesterday at 5:41 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மரபுப் பா பயிலரங்கம்
Page 2 of 34 • Share •
Page 2 of 34 •
1, 2, 3 ... 18 ... 34 
மரபுப் பா பயிலரங்கம்
First topic message reminder :
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- எழுத்து

Last edited by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:27 pm; edited 1 time in total
தமிழநம்பி- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 219
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 12
Re: மரபுப் பா பயிலரங்கம்
மிக்க நன்றி ஐயா !

நிலாசகி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79
Re: மரபுப் பா பயிலரங்கம்
எழுத்துப் பெரிதாகத் தெரிய யாரேனும் உதவுங்கள்.
தொல்லைக்குப் பொறுத்திடுக.
தொல்லைக்குப் பொறுத்திடுக.
தமிழநம்பி- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 219
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 12
Re: மரபுப் பா பயிலரங்கம்
- Code:
[size=x-small][color=red]small
text[/color][/size]
small/normal,large,huge
[size=18]அம்மா [/size]
திருத்து சென்று அளவு எண்ணை
மாற்றி முயற்சி செய்யவும் ஐயா

நிலாசகி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79
Re: மரபுப் பா பயிலரங்கம்
நன்றி நிலாசகி அவர்களே.
தமிழநம்பி- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 219
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 12
Re: மரபுப் பா பயிலரங்கம்
பயனுள்ள தொடர் தொடர்ந்திடுங்கள் தொடர்கின்றோம். இதுவரைக்கும் ஏதும் சந்தேகம் இல்லை.

வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: மரபுப் பா பயிலரங்கம்
Aathira wrote:யாப்பு ப்யிற்றுவிக்க வந்துள்ள் தமிழ்ப் பெருமகனார் அவ்ர்களுக்கு ஈகரை
தழிழ்க் கழஞ்சியத்தின் சார்பில் நெஞசார்ந்த நன்றி. தங்கள் தமிழ்ப் பணி
தொடர இறைவனை வேண்டுகிறோம்.![]()
![]()
அனபுடன்
ஆதிரா
ஒரு
Re: மரபுப் பா பயிலரங்கம்
3. அசை பிரித்தல்
சீர் குறித்துத் தெரிந்து கொள்வதற்கு முன்னர், அசைபிரிப்பது குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முற்றே உலகு.
– இந்தக் குறளை ஏழு பகுதியாகப் பிரித்து எழுதுகிறோம்.
அகர
முதல
எழுத்தெல்லாம்
ஆதி
பகவன்
முதற்றே
உலகு - இவற்றைச் சீர்கள் என்கிறோம்.
சீர் பற்றிய விளக்கம் பின்னர் காண்போம்.
அசை பற்றிப் படித்தோம் அல்லவா?
இப்போது சீர்களில் அசை பிரிப்பது எவ்வாறு எனத் தெரிந்து கொள்வோம்.
அசை பிரிப்பதில் கவனத்தில் கொள்ள வேண்டியவை :
1. இரண்டு குறில்கள் சேர்ந்து வரின் இணைக்குறில் – நிரையசை.
மூன்று குறில் சேர்ந்து வரின், முதல் இரண்டும் இணைக்குறில் – எனவே நிரையசை அடுத்துள்ளது தனிக்குறில் ஆக – நேரசை.
நான்கு குறில் சேர்ந்து வரின், முதல் இரண்டும் ஓர் இணைக்குறில் – நிரையசை; அடுத்த இரண்டும் இன்னொரு இணைக்குறிலாக இன்னொரு நிரையசை.
2. அசை பிரிக்கும் போது, ஓர் அசையை அடுத்து நிற்கும் புள்ளி(ஒற்று) எழுத்தையும் அசையின் இறுதியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டு :
(அ). குதிக்கும் – என்கின்ற ஒரு சீரில்,
குதிக் – என்பதை இணைக்குறில் ஒற்று எனப்பிரித்து நிரையசை என்று கொள்ள வேண்டும்;
கும் – குறில் ஒற்று எனக்கொண்டு நேரசையாகக் கருத வேண்டும்.
(ஆ) பார்க்கிறேன் – என்கின்ற ஒரு சீரில்.
பார்க் – என்பதை (இரண்டு புள்ளி எழுத்தையும் சேர்த்து) நெடில் ஒற்று எனக்கொண்டு நேரசையாக ஏற்க வேண்டும்.
கிறேன் – என்பது குறில் நெடில் ஒற்று; எனவே நிரையசையாக்க்கொள்ள வேண்டும்.
3. சீரின் முதலிலும் இடையிலும் தனிக்குறில் ஓர் அசை ஆகாது. சீரின் இறுதியில் தனிக்குறில் அசை ஆகும்.
காண்க : அகர என்பதில் அக - இணைக்குறில் ஓர் அசை ஆனது.
சீரின் இறுதியில் ர – தனிக்குறில் அசை ஆனது.
மிகா – என்றால், குறில்நெடில் > நிரையசையாகவே வரும்.
ஆனால்,
காமி – என்று வந்தால், கா – தனி நெடில் > நேரசை;
மி – சீரின் இறுதியில் தனிக்குறில் > நேரசை. இவ்வாறு இரண்டு அசைகளாகும்.
4. சீரின் தொடக்கத்தில் நிற்கும் ஐ வரிசை எழுத்துக்கள் நெடிலாகக் கொள்ளப்படும்; இடையிலும் இறுதியிலும் அவை குறிலாகக் கொள்ளப்படும்.
எடுத்துக்காட்டு :
கையில் – கை – நெடில் > நேரசை.(சீரின் முதலில் ஐ வரிசைச் சொல்)
போகையில் – கையில் – குறில்இணை ஒற்று > நிரையசை (சீரின் இடையில் ஐ வரிசைச் சொல்)
புன்னகை – னகை – குறிலிணை > நிரையசை. ( சீரின் இறுதியில் ஐ வரிசைச்சொல்)
5. அசை பிரிக்கும் போது பொருள் பார்த்தல் கூடாது. பெரும்பாலான அசைகளுக்குப் பொருளே இராது.
6. ஒரு சீரில் இருக்கும் எழுத்துக்களை மட்டும் அசையாகப் பிரித்தல் வேண்டும்; மற்றொரு சீரில் உள்ள எழுத்தைச் சேர்த்துப் பிரித்தல் கூடாது.
7.இடையில் மெய்யெழுத்து இருந்தால் அசை வேறாகப்பிரிந்துவிடும்
* * * * *** *** ***
இனி, அக் குறளின் சீர்களை அசை பிரித்துப் பார்ப்போம்.
அகர என்ற சீரில்,
அக – இணைக் குறில் (ஈருயிர்) எனவே நிரையசை.
அடுத்துள்ள ர தனிக்குறில் (ஓருயிர்) எனவே நேரசை.
முதல என்ற சீரில்,
முத – இணைக்குறில் > நிரையசை
அடுத்துள்ள ல தனிக்குறில் > நேரசை
எழுத்தெல்லாம் என்ற சீரில்,
எழுத் – இணைக்குறில் ஒற்று > நிரையசை
தெல் – குறில்ஒற்று > நேரசை
லாம் – நெடில் ஒற்று > நேரசை
ஆதி என்ற சீரில்,
ஆ – தனிநெடில் > நேரசை
தி – தனிக்குறில் > நேரசை
பகவன் என்ற சீரில்,
பக – இணைக்குறில் > நிரையசை
வன் – குறில்ஒற்று > நேரசை
முதற்றே என்ற சீரில்,
முதற் – இணைக்குறில் ஒற்று > நிரையசை
றே – தனி நெடில் > நேரசை
உலகு என்ற கடைசிச் சீரை ஓரசைச் சீர் என்பர். இதைப்பற்றிப் பின்னர் அறிந்து கொள்ளப்போகிறோம்.
அசை பிரித்தல் கவனத்தோடு புரிந்து கொள்ள வேண்டிய பகுதி.
இதில் கண்டிப்பாக ஐயம் எழ வாய்ப்புண்டு.
தயங்காமல் கேளுங்கள்.
அடுத்து சீர் பற்றிய செய்திகளைப் பார்க்கலாம்.

Last edited by தமிழநம்பி on Sat Mar 13, 2010 1:07 pm; edited 2 times in total
தமிழநம்பி- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 219
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 12
Re: மரபுப் பா பயிலரங்கம்
நன்றி திரு தமிழநம்பி அவர்களே!!! 

பதிவுகள்: 790026 | உறுப்பினர்கள்: 15362 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: sluxtpr
Contact Administrator
Re: மரபுப் பா பயிலரங்கம்
நன்றி..பள்ளியில் தமிழ் வகுப்பு நியாபகங்கள் வருகிறது

நிலாசகி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79
Re: மரபுப் பா பயிலரங்கம்
சிவா wrote:நன்றி திரு தமிழநம்பி அவர்களே!!!

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: மரபுப் பா பயிலரங்கம்
3(அ). அசை பிரித்தல் பயிற்சி
அசை பிரித்தல் தொடர்பாக ஐயம் ஏதும் கேட்கப்படாததால், புரிந்து கொண்டிருப்பதாகக் கருதுகிறேன்.
உறுதிப்படுத்திக் கொள்ள ஒரு சிறு பயிற்சி.
கீழே இரண்டு குறட்பாக்கள் உள்ளன. அவற்றின் சீர்களை அசை பிரித்து எழுதிக் காட்டும்படிக் கேட்டுக் கொள்கின்றேன்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
நீங்கள் விரும்பினால் வேறு பாடலுக்கும் அசை பிரித்துக் காட்டலாம்.
அடுத்ததாக, சீர் பற்றிய செய்திகளைப் பார்ப்போம்.

Last edited by தமிழநம்பி on Thu Mar 18, 2010 8:55 pm; edited 1 time in total
தமிழநம்பி- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 219
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 12
Re: மரபுப் பா பயிலரங்கம்
ஐயா வணக்கம். தங்களின் அருமையான பா பயிற்றுவித்தலுக்கு என் மனமாரந்த நன்றி. மேலும் மேலும் இத்தமிழ்த் தொண்டாற்ற தங்களுக்கு இறைவன் நிறையருள் தர மனமாற வேண்டுகிறேன்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
1. எப் / பொருள் - - நேர் நிரை
2. யார் / யார் / வாய்க் - நேர் நேர் நேர்
3. கேட் / பினும் - - நேர் நிரை
4. அப் / பொருள் - - நேர் நிரை
5. மெய்ப் / பொருள் - - நேர் நிரை
6. காண் / ப - - நேர் நேர்
7. தறி /வு - - நிரை பூ
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
1. துப் /பார்க் / குத் - நேர் நேர் நேர்
2. துப் / பா /ய - நேர் நேர் நேர்
3. துப் / பாக் /கித் - நேர் நேர் நேர்
4. துப் / பார்க் /குத் - நேர் நேர் நேர்
5. துப் / பா / ய - நேர் நேர் நேர்
6. தூ / உம் - நேர் நேர்
7. மழை - நிரை
ஐயா சீர் பிரித்து எழுதியுள்ளேன். சரியா என்று பார்த்து சொல்லவும்.
வணக்கத்துடன்

Last edited by Aathira on Sat Mar 13, 2010 2:10 pm; edited 1 time in total
Re: மரபுப் பா பயிலரங்கம்
ஆதிரா,
நீங்கள் சரியாக அசை பிரித்துக் காட்டியிருக்கிறீர்கள்.
பாராட்டு.
நிரை, நிரைபு என்பதில் இடையின ரகரமாகத் திருத்தி விடுங்கள்.
குறளில் கடைசிச் சீர் ஓரசைச் சீர் என்பர். அதைப் பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம்.
இன்னும் யாரேனும் வேறு ஏதாவது குறளைத் தாங்களே தேர்ந்தெடுத்து, அதை அசை பிரித்துக் காட்டினால் வரவேற்பேன்.
கடைசிச் சீர் பற்றி எதுவும் இப்போது குறிப்பிடத் தேவையில்லை.
நீங்கள் சரியாக அசை பிரித்துக் காட்டியிருக்கிறீர்கள்.
பாராட்டு.
நிரை, நிரைபு என்பதில் இடையின ரகரமாகத் திருத்தி விடுங்கள்.
குறளில் கடைசிச் சீர் ஓரசைச் சீர் என்பர். அதைப் பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம்.
இன்னும் யாரேனும் வேறு ஏதாவது குறளைத் தாங்களே தேர்ந்தெடுத்து, அதை அசை பிரித்துக் காட்டினால் வரவேற்பேன்.
கடைசிச் சீர் பற்றி எதுவும் இப்போது குறிப்பிடத் தேவையில்லை.
தமிழநம்பி- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 219
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 12
Re: மரபுப் பா பயிலரங்கம்
நன்றி ஐயா

தண்டாயுதபாணி- தளபதி

- பதிவுகள்: 1303
வசிப்பிடம்: தென்கொரியா
சேர்ந்தது: 24/10/2009
மதிப்பீடு: 12
Page 2 of 34 •
1, 2, 3 ... 18 ... 34 
Page 2 of 34
Permissions in this forum:
You cannot reply to topics in this forum