ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by சிவா Today at 8:57 pm

» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by சார்லஸ் mc Today at 8:57 pm

» ரசிக்க சில புகைப்படங்கள்
by சார்லஸ் mc Today at 8:54 pm

» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 8:25 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm

» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm

» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 8:03 pm

» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm

» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm

» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm

» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm

» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm

» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm

» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm

» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm

» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm

» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm

» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm

» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 6:07 pm

» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm

» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm

» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm

» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm

» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm

» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm

» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm

» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm

» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm

» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm

» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm

» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm

» முதலிடம்...!
by பிஜிராமன் Today at 4:19 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




மரபுப் பா பயிலரங்கம்

Page 17 of 34 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 25 ... 34  Next

View previous topic View next topic Go down

மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


Last edited by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:27 pm; edited 1 time in total

தமிழநம்பி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 219
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 12

Back to top Go down


Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி on Wed Aug 25, 2010 2:48 pm

21. தளை – 3.

3. இயற்சீர் வெண்டளை

நின்ற சீர் இயற்சீராக இருக்க, வரும் சீரின் முதலசை ஒன்றாததாக இருந்தால் இயற்சீர் வெண்டளை என்று கூறப்படுகிறது.

இயற்சீர் தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்னும் நான்கென அறிவோம்.

மா முன் நிரை வருவதும், விளம் முன் நேர் வருவதும் இயற்சீர் வெண்டளை ஆகும்.

கற்க X கசடற
கற்க என்பது தேமா(ச் சீர்); வரும்சீரின் முதலசை கச – நிரை ஆகும்.
எனவே, மா முன் நிரை இயற்சீர் வெண்டளை ஆகும்.
இவ்வாறே,
கசடறக் X கற்பவை
கசடறக் – என்பது கருவிளம்; வரும்சீரின் முதலசை
கற் – நேர் ஆகும்.
இங்கு, விளம் முன் நேர் வந்துள்ளது, இயற்சீர் வெண்டளை ஆகும்.
(இயற்சீர் வெண்டளை முன்பு பயின்ற இரண்டு ஆசிரியத் தளைககளின் மாறி வந்துள்ளதைக் காணலாம்)

4. வெண்சீர் வெண்டளை

நின்ற சீர் மூவசைக் காய்ச்சீர் ஆக இருந்து வரும் சீரின் முதலசை நேர் அசையாக அமைந்தால், அது வெண்சீர் வெண்டளை ஆகும்.
இதைச் சுருக்கமாகக் காய் முன் நேர் என்று கூறுவர்.

இல்வாழ்வான் X என்பான்
இல்வாழ்வான் – தேமாங்காய் – காய்ச்சீர்.
என் – நேர் அசை.
காய் முன் நேர் வெண்சீர் வெண்டளை ஆகும்.

(வெண்பாவில் இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை ஆகிய இரு தளைகள் மட்டுமே இடம்பெறும்)
ஐயம் எழுந்தால் தயங்காது கேட்க! தளைகளை நன்கு புரிந்து கொள்ளல் வேண்டும்.
ஏனைய தளைகளை அடுத்ததாகப் பார்ப்போம்.

------------------------------------------------------------------------------------------------


Last edited by தமிழநம்பி on Tue Aug 31, 2010 1:15 pm; edited 1 time in total

தமிழநம்பி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 219
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 12

Back to top Go down

Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி on Tue Aug 31, 2010 1:14 pm

22. தளை – 4.

5. கலித்தளை

காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை என்று பார்த்தோம். இதற்கு மாறாக, காய் முன் நிரை வருவது கலித்தளை ஆகும்.
பல்லுலகும் X பலவுயிரும்
பல்லுலகும் – கூவிளங்காய்; பல – நிரையசை
காய் முன் நிரை வந்ததால் கலித்தளை.

6. ஒன்றிய வஞ்சித்தளை
நின்ற சீர் மூவசைக் கனிச்சீராகவும் வரும் சீரின் முதலசை நிரையசையாகவும் இருப்பின் ஒன்றிய வஞ்சித்தளை ஆகும்.
தண்டாமரைத் X தனிமலர்மிசை
தண்டாமரைத் – தேமாங்கனி; தனி – நிரையசை
கனி முன் நிரை வந்ததால் ஒன்றிய வஞ்சித்தளை.

7. ஒன்றாத வஞ்சித்தளை
நின்ற சீர் மூவசைக் கனிச்சீராகவும் வரும் சீரின் முதலசை நேர் அசையாகவும் இருப்பின் ஒன்றாத வஞ்சித்தளை ஆகும்.
செந்தாமரை X நாண்மலர்மிசை
செந்தாமரை – தேமாங்கனி; நாண் – நேரசை
கனி முன் நேர் வந்ததால் ஒன்றாத வஞ்சித்தளை.


இனி, ஒரு குறளில் தளைகளைப் பார்ப்போம்:
அகர X முதல X எழுத்தெல்லா X மாதி X
பகவன் X முதற்றே X உலகு.

அகர X முதல
அகர – புளிமா; முதல என்பதில் முதல் அசை முத – நிரையசை.
எனவே, மாமுன் நிரை, இயற்சீர் வெண்டளை.
இவ்வாறே,
முதல X எழுத்தெல்லா
மா முன் நிரை, இயற்சீர் வெண்டளை.

எழுத்தெல்லா X மாதி
காய் முன் நேர், வெண்சீர் வெண்டளை.

மாதி X பகவன்
மா முன் நிரை, இயற்சீர் வெண்டளை.

பகவன் X முதற்றே
மா முன் நிரை, இயற்சீர் வெண்டளை.

முதற்றே X உலகு
மாமுன் நிரை(பு), இயற்சீர் வண்டளை. புரிகிறதா?

சரி, கீழ்க் காண்பவற்றிற்கு நீங்களே தளை கூறுங்கள்:
1. யாதும் ஊரே
2. வளிதிரிதரு திசையும்
3. கடுந்திண்டேர் களையினோ
4. வசையில்புகழ் பெற்றே
5. நெல்லும் உயிரன்றே
6. யாவரும் உரைப்பீர்
ஐயமிருப்பின் தயங்காது கேட்க!
புரியும் வரை விளக்கக் காத்திருக்கிறேன்.


தமிழநம்பி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 219
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 12

Back to top Go down

Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by kirikasan on Thu Sep 02, 2010 10:01 pm

ஐயா,
பயிற்சிகளை தாமதித்து தந்ததுக்கு மன்னிக்கவும். மறதி தேவன் மூளையை ஆட்சி புரியத் தொடங்கி நெடுநாள் ஆகிறது. எல்லாவற்றையும் திரும்ப பார்க்க வேண்டியதாயிற்று. ஆயினும், மீண்டும் முன்னையதுபோல் கவிப் பிரவாகத்தில் நீச்சலடிக்க தயாராகிவிட்டேன்.
இங்கே நான் செய்தது சரியா என்று பாருங்கள் ஐயா!

1. யாதும் ஊரே
யாதும் - தேமா, ஊ - நேர்,
எனவே மா முன் நேர் அதனால் நேர் ஒன்று ஆசிரியத்தளை

2. வளிதிரிதரு திசையும்
கனி முன் நிரை ஒன்றிய வஞ்சித்தளை

3. கடுந்திண்டேர் களையினோ
காய் முன் நிரை கலித்தளை

4. வசையில்புகழ் பெற்றே
கனி முன் நேர் ஒன்றாத வஞ்சித்தளை

5. நெல்லும் உயிரன்றே
தேமா -- மா முன் நிரை இயற்சீர் வெண்டளை

6. யாவரும் உரைப்பீர்
கூவிளம் -- விளம் முன் நிரை நிரை ஒன்று ஆசிரியத்தளை

அன்புடன் கிரிகாசன்

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1838
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 292

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி on Fri Sep 03, 2010 9:25 pm

kirikasan wrote:ஐயா,
பயிற்சிகளை தாமதித்து தந்ததுக்கு மன்னிக்கவும். மறதி தேவன் மூளையை ஆட்சி புரியத் தொடங்கி நெடுநாள் ஆகிறது. எல்லாவற்றையும் திரும்ப பார்க்க வேண்டியதாயிற்று. ஆயினும், மீண்டும் முன்னையதுபோல் கவிப் பிரவாகத்தில் நீச்சலடிக்க தயாராகிவிட்டேன்.
இங்கே நான் செய்தது சரியா என்று பாருங்கள் ஐயா!

1. யாதும் ஊரே
யாதும் - தேமா, ஊ - நேர்,
எனவே மா முன் நேர் அதனால் நேர் ஒன்று ஆசிரியத்தளை

2. வளிதிரிதரு திசையும்
கனி முன் நிரை ஒன்றிய வஞ்சித்தளை

3. கடுந்திண்டேர் களையினோ
காய் முன் நிரை கலித்தளை

4. வசையில்புகழ் பெற்றே
கனி முன் நேர் ஒன்றாத வஞ்சித்தளை

5. நெல்லும் உயிரன்றே
தேமா -- மா முன் நிரை இயற்சீர் வெண்டளை

6. யாவரும் உரைப்பீர்
கூவிளம் -- விளம் முன் நிரை நிரை ஒன்று ஆசிரியத்தளை

அன்புடன் கிரிகாசன்

கிரி, சரியான விடைகளைத் தந்திருக்கிறீர்கள். பாராட்டு -த.ந.

தமிழநம்பி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 219
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 12

Back to top Go down

Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி on Fri Sep 03, 2010 9:28 pm

அன்பர்களே! ஆளுக்கு ஒரு திருக்குறளை எடுத்துக்கொண்டு அதில் இடம் பெறும் தளைகளைக் கூறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். அதன்பின் நாம் பாட்டு எழுதுவதைத் தொடருவோம். - த.ந.

தமிழநம்பி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 219
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 12

Back to top Go down

Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி on Tue Sep 14, 2010 4:37 pm

அன்பர்கள் ஐயமிருப்பின் கேட்கலாம். தவறாக எழுதிவிடுவோம் எனத் தயங்க வேண்டா. தவற்றைத் திருத்திக் கற்றுக் கொள்ளலாம். துணிந்து எழுதுக. கறக கசடற கற்பவை ....என்று தொடங்கும் இந்தக் குறளில் அமைந்துள்ள தளைகளைக் குறிப்பிடுக.

தமிழநம்பி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 219
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 12

Back to top Go down

Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by kirikasan on Thu Sep 16, 2010 4:49 pm

ஐயா முன்னைய பயிற்சியில் சரியாக செய்துவிட்டேன். இதில் என்னவோ தெரியவில்லை. தங்கள் பார்வைக்குமுன் வைக்கிறேன்.

பயிற்சி

கற்க- கசடற மா முன் நிரை இயற்சீர்வெண்டளை
கசடறக் - கற்பவை விளம் முன் நேர் இயற்சீர் வெண்டளை
கற்பவை - கற்றபின் விளம் முன் நேர் இயற்சீர் வெண்டளை
கற்றபின் - நிற்க விளம் முன் நேர் இயற்சீர் வெண்டளை
நிற்க அதற்குத் மா முன் நிரை இயற்சீர்வெண்டளை
அதற்குத் - தக மா முன் நிரை இயற்சீர்வெண்டளை



நண்பர்களுக்கு:

கண்போகாக் காட்டுமரக் கூட்டத்துள்ளே
காதவெளி சஞ்சரித்த பிரபஞ்சத்தில்
வெண்ணிலவில் இறங்கிவிட்ட வேளைதன்னில்
விளையாடி ஒழித்துநிற்கு விதமாய்மௌனம்’’

என்னவென அறியேன் என் தோழர்கைகள்
எழுத்தாணி எடுக்கமறந் தெங்கே சென்றார்
சின்னநில வொளியெடுக்கச் சிறப்பேகொள்ள
செங்கதிரின் முன்னிலையில் சேர்வோம்வாரீர்

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1838
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 292

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by யாதுமானவள் on Sat Sep 25, 2010 11:40 am

வணக்கம் அய்யா தமிழநம்பி அவர்களே,

தங்கள் நலன் காக்க!

இலக்கண பயிற்சி இடைவிடாது செய்யவேண்டுமென்ற பேரவா உள்ளபோதும் பலவகை இடையூறுகள் நிமித்தம் நீண்ட இடைவெளி ஆகிவிட்டது. தாமதத்திற்கு வருந்துகிறேன்.

மிக அற்புதமாக உள்ளது தளை. பள்ளியில் நானும் படித்திருக்கிறேன். ஆனால் ஒன்றேனும் நினைவிலிருத்தாமல் வெறும் மதிப்பெண் பெறவேண்டியே படித்த பிழை இப்போது புரிகிறது. அது என்பிழையென்றும் ஏற்றுக்கொள்ள முடியாது காரணம், அவ்வயதில் இலக்கணத்தின் அவசியம் புரிந்திருக்க நியாயமில்லை. சரிதானே? இன்று தங்கள் தயவால், பக்குவப்பட்ட இவ்வயதில மீண்டும் படித்து அப்பிழையிலிருந்து மீண்டெழ ஓர் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என் நன்றிகள் ஏற்பீர்!

ஒரு ஐம்பது திருக்குறளாவது நேற்றிரவு தளை ஆய்ந்தேன்....இரண்டடி பொக்கிஷத்தில் இருதளைகளே புதைந்திருப்பது கண்டு அதிசயித்தேன். (நான் சரியா என்பது தாங்கள்தான் கூறவேண்டும்).

தமிழில் தட்டெச்சு செய்வது சற்று சிரமமாக உள்ளதால் சில குறள்கள் மட்டும் இங்கே கொடுத்துள்ளேன். சரியாக உள்ளதா என அறியத்தருவீர்.
*** ***

கடலோடா - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
கால்வல் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
நெடுந்தேர் - புளிமா(மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
கடலோடும் - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
நாவாயும் - தேமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
ஓடா - தேமா (மா முன் நிரை) - இயர்சீர் வெண்டளை
நிலத்து – பிறப்பு.
*** ***

அமிழ்தினும் - கருவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை
ஆற்ற - தேமா (மா முன் நிரை)- இயற்சீர் வெண்டளை
இனிதேதம் - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
மக்கள் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
சிறுகை - புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
அளாவிய - கருவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை
கூழ் – நாள்
*** ***
சொலல்வல்லன் -புளிமாங்காய் (காய்முன் நேர்) -வெண்சீர் வெண்டளை
சோர்விலன் - கூவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை
அஞ்சான் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
அவனை - புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
இகல்வெல்லல் - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
யார்க்கும் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
அரிது - நிரைபு.
*** ***

சிறுமை - புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
பலசெய்து - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை)
சீரழிக்கும் - கூவிளங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை)
சூதின் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
வறுமை- புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
தருவதொன்று - கூவிளங்காய் ( காய் முன் நேர்) -வெண்சீர் வெண்டளை
இல்-நாள்
*** ***
செய்க - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
பொருளைச் - புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
செறுநர் -புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
செருக்கறுக்கும் - கருவிளங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை)
எக்கதனிற் - கூவிளங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
கூரியது - கூவிளங்காய்( காய் முன் நேர்) -வெண்சீர் வெண்டளை
இல்-நாள்
*** ***
செல்லான் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
கிழவன் - புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
இருப்பின் -புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
நிலம்புலந்து - கருவிளங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை)
இல்லாளின் - தேமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
ஊடி - தேமா(மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
விடும்-மலர்
*** ***
நெருப்பினுள் - கருவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை)
துஞ்சலும் - கூவிளம்(விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை)
ஆகும் -தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
நெருனலும் - கருவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை)
கொன்றது - கூவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை
போலும் - தேமா(மா முன் நினை) - இயற்சீர் வெண்டளை
நிரப்பு-பிறப்பு
*** ***
ஆற்றுவார் - கூவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை)
ஆற்றல்- தேமா(மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
பணிதல் -புளிமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை)
அதுசான்றோர் - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை)
மாற்றாரை - தேமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
மாற்றும் - தேமா(மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
படை-மலர்.
*** ***
உறுவது - கருவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை)
சீர்தூக்கும் தேமாங்காய்(காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
நட்பும் -தேமா (மா முன் நிரை) - இயர்சீர் வெண்டளை)
பெறுவது - கருவிளம் (விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை)
கொள்வாரும் - கூவிளம்(விளம் முன் நேர்) - இயற்சீர் வெண்டளை
கள்வரும் -கூவிளம்(விளம் முன் நினை) - இயற்சீர் வெண்டளை
நேர்-நாள்
*** ***
அன்புடன்
யாதுமானவள்

யாதுமானவள்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 306
வசிப்பிடம்: வளைகுடா நாட்டில்
சேர்ந்தது: 30/05/2010
மதிப்பீடு: 40

Back to top Go down

Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி on Thu Sep 30, 2010 9:01 am

kirikasan wrote:ஐயா முன்னைய பயிற்சியில் சரியாக செய்துவிட்டேன். இதில் என்னவோ தெரியவில்லை. தங்கள் பார்வைக்குமுன் வைக்கிறேன்.

பயிற்சி

கற்க- கசடற மா முன் நிரை இயற்சீர்வெண்டளை
கசடறக் - கற்பவை விளம் முன் நேர் இயற்சீர் வெண்டளை
கற்பவை - கற்றபின் விளம் முன் நேர் இயற்சீர் வெண்டளை
கற்றபின் - நிற்க விளம் முன் நேர் இயற்சீர் வெண்டளை
நிற்க அதற்குத் மா முன் நிரை இயற்சீர்வெண்டளை
அதற்குத் - தக மா முன் நிரை இயற்சீர்வெண்டளை



நண்பர்களுக்கு:

கண்போகாக் காட்டுமரக் கூட்டத்துள்ளே
காதவெளி சஞ்சரித்த பிரபஞ்சத்தில்
வெண்ணிலவில் இறங்கிவிட்ட வேளைதன்னில்
விளையாடி ஒழித்துநிற்கு விதமாய்மௌனம்’’

என்னவென அறியேன் என் தோழர்கைகள்
எழுத்தாணி எடுக்கமறந் தெங்கே சென்றார்
சின்னநில வொளியெடுக்கச் சிறப்பேகொள்ள
செங்கதிரின் முன்னிலையில் சேர்வோம்வாரீர்


கிரி, தளைகளச் சரியாகவே தந்திருக்கிறீர்கள். நீங்கள் முறையாக யாப்பறியின், நல்ல பாவலராக வரவியலும். வாழ்த்துகிறேன்.

தமிழநம்பி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 219
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 12

Back to top Go down

Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி on Thu Sep 30, 2010 9:37 am

யாதுமானவருக்கு,
வணக்கம். வருக.
பயிலுவார் ஈடுபாடில்லாவிட்டால், பயிற்றுவார்க்கு வேலையில்லை.
உங்களைப் போலும் ஆர்வத்தோடு பயிலுவார் தொடர்ந்து பயிலரங்கில் ஈடுபட்டால்தான் என்னால் தொய்வின்றிப் பயிலரங்கைத் தொடர இயலும்.
அன்பர்கள் புரிந்துகொண்டு ஈடுபாட்டுன் தொடருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இனி, தளை பற்றிய விளக்கம்.
தளையைக் குறிக்கும் போது எந்த இரண்டு சீர்களுக்கு இடையிலானது என்று தெரியுமாறு குறிக்க வேண்டும்.

கடலோடா - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
கால்வல் - தேமா (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
நெடுந்தேர் - புளிமா(மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
கடலோடும் - புளிமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
நாவாயும் - தேமாங்காய் (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
ஓடா - தேமா (மா முன் நிரை) - இயர்சீர் வெண்டளை
நிலத்து – பிறப்பு.

இவற்றை முறையாகக் கீழ்க்காணும் வகையில் குறித்தலே மரபு. விளங்கிக்கொள்ளவும் எளிதாக இருக்கும்.

கடலோடா x கால்வல் - (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
கால்வல் x நெடுந்தேர் - (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
நெடுந்தேர் x கடலோடும் - (மா முன் நிரை) - இயற்சீர் வெண்டளை
கடலோடும் x நாவாயும் - (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
நாவாயும் x ஓடா - (காய் முன் நேர்) - வெண்சீர் வெண்டளை
ஓடா x நிலத்து - (மா முன் நிரைபு) - இயர்சீர் வெண்டளை

நீங்கள் தளையைப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள், குறிக்கும் முறை இப்போது விளங்கியிருக்கும். கீழ்க்காணும் திருத்தத்தைக் கவனிக்க.
கொள்வாரும் x கள்வரும் – காய் முன் நேர் – வெண்சீர் வெண்டளை

உங்கள் ஈடுபாடு ஊக்கம் தருகிறது.
பயிலரங்கில் தொடர்ந்து வருக.

இனி, அடுத்ததாக ஒருவகைப்பாடல் எழுதப் பயில்வோம்.

தமிழநம்பி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 219
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 12

Back to top Go down

Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி on Thu Sep 30, 2010 10:05 am

23. வெளிமண்டிலம் – 2

நாம் அடுத்து பயிலவிருப்பது இன்னொரு வகை வெளிமண்டிலப் பாடல்.

இப் பாடல்...


1. நான்கடி கொண்ட வெளிமண்டில வகையாகும்
2. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும் – நான்கு அடிகளின் இறுதியிலும் ஒரே தனிச்சொல்லும் அமைய வேண்டும்.
3. ஒவ்வொரு அடியும் வெண்டளை கொண்டிருக்க வேண்டும்.
4. நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5. முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவது சிறப்பு.


எடுத்துக்காட்டு :

இனம்மொழி நாடென ஏறி முழங்குவான் – காண்பீர்
கனன்றவை மீட்டிடக் கட்சிக் கழைப்பான் – காண்பீர்
நனவிற் பதவி நனிபெற மாறுவான் – காண்பீர்
தினவறத்தன்னலம் தேர்ந்திடு வானிவன் – காண்பீர்!


தயங்காமல் எழுதத் தொடங்குங்கள்.
இந்தவகைப்பாடலை எழுதியபின் பலவகை வெண்பாக்கள் எழுதுவது மிக எளிதாக இருக்கும்.
ஐயமிருப்பின் தயங்காமல் கேளுங்கள்.


தமிழநம்பி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 219
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 12

Back to top Go down

Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி on Fri Oct 01, 2010 11:44 pm

வெளிமண்டிலம் – 2

இன்னொரு எடுத்துக்காட்டு:

மண்ணின் மணமிருக்கும் மாயா ஒளியிருக்கும் – எந்தமிழில்
பண்ணின் இசையிருக்கும் பாசின் இனிப்பிருக்கும் – எந்தமிழில்
விண்ணின் உயர்விருக்கும் வேங்கை மறமிருக்கும் – எந்தமிழில்
கண்ணின் சிறந்திருக்கும் காதல் சுவையிருக்கும் – எந்தமிழில்!

- புலவர் அரங்க.நடராசன், புதுவை.


தமிழநம்பி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 219
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 12

Back to top Go down

Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by kirikasan on Sat Oct 02, 2010 12:49 am

ஐயா,
காலையில் ஒன்று எழுத தொடங்கினேன். சந்தேகம் வரவே இடை நிறுத்தியிருந்தேன். இப்போது இரண்டாவது எடுத்துக்காட்டு உதவி புரிந்தது. இன்னும் சொற்ப நேரத்தில் பயிற்சியுடன் வருவேன்

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1838
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 292

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by kirikasan on Sat Oct 02, 2010 12:12 pm

தமிழநம்பி ஐயா அவர்களுக்கு. எனது பயிற்சி.

தென்னை அசையுமதில் தேன்நிலவு தலைமறையும்- எங்கள் தேசம்
பின்னால் கரும்பேயாய் பெரும்பனைகள் சரசரக்கும் - எங்கள் தேசம்
உன்னிக் குரங்கோட ஒடிந்துமாங் கனிகொட்டும்- எங்கள் தேசம்
தின்னக் கிளிவந்து தெரிந்துண்ணப் பகல்மாயும் - எங்கள் தேசம்

சுட்ட பழங்கனிந்த சுவைநாவல் பொலிந்தவளம் - எங்கள் ஈழம்
முட்ட வளர்ந்தநெல் முகம்நாணித் தரைநோக்கும் - எங்கள் ஈழம்
தொட்டுக் கதைபேசுந் தென்றலுக்குச் சலசலக்கும் - எங்கள் ஈழம்
வட்ட மிடும்பறவை வயல்முழுதும் இசைபாடும்- எங்கள் ஈழம்

அன்புடன் கிரிகாசன்

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1838
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 292

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி on Sat Oct 02, 2010 2:52 pm

அன்பார்ந்த கிரி,
மிக்க மகிழ்ச்சி. நன்கு முயன்று எழுதியிருக்கிறீர்கள்.
முதன்முதலில் தளை அமைத்து எழுதுகையில் யாருக்கும் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும்.
சில திருத்தங்கள் கூறுகிறேன்.
செப்பமாக திருத்தமுற எழுத உதவும்.
ஒவ்வொரு அடியிலும் வெண்தளைகள் அமைய வேண்டும்.
எனவே, காய் முன் நேர், மா முன் நிரை, விளம் முன் நேர் அமையவேண்டும்.

அவ்வாறு அமையாத இடங்களில் திருத்தம் செய்துள்ளதைக் கவனிக்க.
தனிச்சொல், மூன்றசைகளுக்குள் அமைய எழுதுவதே சிறப்பு.

தென்னை அசையுமதில் தேன்நிலவு போய்மறையும்- எம்தேசம்
பின்னால் கரும்பனைகள் பேயாக மீஒலிக்கும் - எம்தேசம்
சின்னக் குரங்கோடத் தீங்கனிகள் மாஉதிர்க்கும் - எம்தேசம்
தின்னக் கிளிவந்து தேர்ந்துண்ணப் போம்பொழுதே - எம்தேசம்!

சுட்ட பழம்நாவல் தூயசுவை ஆன்றவளம் - எம்மீழம்
முட்ட வளர்ந்தநெல் மோதிமுகம் நோக்கும்மண் - எம்மீழம்
தொட்டுக் கதைபலவுந் சொல்தென்றல் ஓங்கொலிக்கும் - எம்மீழம்
வட்ட மிடும்பறவை வந்துவயல் பாடுமிசை - எம்மீழம்!


ஐயமிருப்பின் தயங்காது கேளுங்கள்.



Last edited by தமிழநம்பி on Sat Oct 02, 2010 3:13 pm; edited 1 time in total

தமிழநம்பி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 219
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 12

Back to top Go down

Page 17 of 34 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 25 ... 34  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum