ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…!
 ayyasamy ram

ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்…
 ayyasamy ram

நீ…நீயாக இரு….!
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
 ayyasamy ram

மாற்றுதிரனாளிகள் சிறுதொழில் தொடங்கிட உதவி
 கனகராஜ் பசுமைசங்ககிரி

கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ்.
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
 ayyasamy ram

இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
 ayyasamy ram

அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
 ayyasamy ram

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 vashnithejas

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )
 MANOJMAHE

இது வாட்ஸ் அப் கலக்கல்
 ayyasamy ram

கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
 ayyasamy ram

மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 ayyasamy ram

மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
 ayyasamy ram

2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
 ayyasamy ram

மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
 ayyasamy ram

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
 ayyasamy ram

ஆங்கில நாவல்கள் தமிழில்
 Saravana2945

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
 T.N.Balasubramanian

என்னவென்று நான் சொல்ல" - முத்துலட்சுமி ராகவன் 1 முதல்3 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
 ayyasamy ram

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
 ayyasamy ram

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?
 Pranav Jain

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Pranav Jain

Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
 Pranav Jain

பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
 ayyasamy ram

சஸ்பென்ஷன்’ பாலம்
 ayyasamy ram

புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
 ayyasamy ram

முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
 ayyasamy ram

பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
 ayyasamy ram

ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
 ayyasamy ram

மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
 sinjanthu

இலவசமாக தரவிறக்கம் -லட்ஷ கணக்கில் புத்தகங்கள்
 sinjanthu

(REQ) சிவகாமி பர்வம் பாகுபலி பாகம் 1
 sinjanthu

மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
 ayyasamy ram

அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
 M.Jagadeesan

உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
 ayyasamy ram

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 T.N.Balasubramanian

சண்முகத்தின் சயாம் மரண ரயில் என்ற நாவல் தேவை
 pon.sakthivel

அறிமுகம்
 T.N.Balasubramanian

முத்துலட்சுமி ராகவன்- " அம்மம்மா கேளடி தோழி" 1 முதல் 5 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 மகேந்திரன்

என். சீதாலக்ஷ்மி யின் " மலரும் இதழே" தமிழ் நவல்
 ANUSUYA DHURGAIMUTHU

என் . சீதாலக்ஷ்மி-யின் " அன்பில்லார் எல்லாம் " தமிழ் நவல்
 ANUSUYA DHURGAIMUTHU

ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
 M.Jagadeesan

ஜாக்கியின் காதல் பரிசு..!
 vashnithejas

பூவே இளைய பூவே
 ayyasamy ram

இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..
 anikuttan

iசென்னையில் மழை -விளையாட்டில் வெற்றி மழை.-கிரிக்கெட் /பேட்மிண்டன்
 ayyasamy ram

நீ நடக்குமிடமெல்லாம் அழகு ! (ஸ்வீடன் மொழிப்பாடல்)
 sinjanthu

தொடத் தொடத் தொல்காப்பியம்(459)
 Dr.S.Soundarapandian

வீழ்வதற்கல்ல! - கவிதை
 Dr.S.Soundarapandian

தலைவருக்கு எது அலர்ஜி?
 Dr.S.Soundarapandian

முரண்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
 Dr.S.Soundarapandian

அழகுத் தேவதை ! (இத்தாலிய நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள்

View previous topic View next topic Go down

வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள்

Post by சிவா on Thu Mar 04, 2010 12:45 pm


வான் நிலைஅறிவு


ஐப்பசி, கார்த்திகை ஆகிய இருமாதங்கள் மழைக் காலம். கார்த்திகை மாதத்தில் அசுவினி நட்சத்திர நாளன்று இடி இடிக்கக்கூடாது. அந்த நாளில் இடி இடித்து மழை பொழிந்தால் தொடர்ந்து ஆறுமாத காலம் மழை இல்லாமல் இருக்கும் என்று வானிலையை அடிப்படையாகக் கொண்டு அறிந்திருந்தனர் தமிழர். 'அசுவினி கார்த்திகையில் இடிஇடித்தால் ஆறு கார்த்திகைக்கு மழை இல்லை' என்ற பழமொழி இந்நுட்பத்தை உணர்த்துகின்றது. இது போலவே ஆனி மாதத்திலும் வானம் மழைக்குறியுடன் குமுறக் கூடாது என்று அறிந்திருந்தனர். ஆனி மாதத்தில் வானம் குமுறினால் தொடர்ந்து இரு மாதங்களுக்கு மழை பொழியாது. இதனை 'ஆனி குமுறினால் அறுபது நாளைக்கு மழையில்லை' எனவரும் மழைமொழி சுட்டுகிறது.

ராசி நட்சத்திரம்

பன்னிரண்டு இராசிகளில் துலாராசியும் ஒன்று. துலா இராசியில் சுக்கிரன் இருந்தால் மழை பொழியும் என்பதைத் 'துலாத்தில் வெள்ளி உலாத்தில் பெய்யும் மழை' எனவரும் பழமொழியால் உணரலாம். பரணி நட்சத்திரத்தில் மழை பெய்யத் தொடங்கினால் எல்லாப் பகுதியிலும் பரவலாக மழை பொழியும் என்று அறிந்திருந்தனர். 'பரணி மழை தரணியெல்லாம் பொழியும்' எனவரும் பழமொழி இதனை விளக்குகின்றது. நீண்ட நாள்கள் மழை பொழியாமல் காய்ந்து கிடக்கும் வானம் மழை பொழியத் தொடங்கினால் விடாமல் பொழிகின்ற இயல்பு உண்டு என்பதை 'காய்ந்த வானம் பேய்ந்தால் விடாது' என்ற பழமொழியால் உணரலாம். இங்ஙனம் வான்நிலையையும் கோள் நிலையையும் அனுபவத்தால் அறிந்து சிறந்திருந்தனர் பண்டைத் தமிழர்.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள்

Post by சிவா on Thu Mar 04, 2010 3:10 pm

மழைக் குறிகள்

வானத்தின் இயல்பினால் மட்டுமின்றி, உயிரினங்களின் இயக்கங்கள் வாயிலாகவும் மழை பொழியப் போகும் குறிகளை ஓர்ந்து அறியும் திறம் பெற்றிருந்தனர் பண்டையோர்.'அடிவானங் கறுத்தால் அப்பொழுதே மழை' என்ற பழமொழி வானத்தின் அடிமட்டம் மழை மேகக் கூட்டத்தால் கறுத்துக் காட்சி தந்தால் மழை பொழியும் என்று உணர்ந்திருந்த தன்மையை உரைக்கின்றது. 'வடக்கே கறுத்தால் மழை வரும்' என்ற பழமொழியும் இப்பொருண்மை உடையதே.

உயிரினங்களில் ஈசல் என்பதும் ஒன்று. அந்திப் பொழுதில் ஈசல் பறப்பது மழை வருவதன் அறிகுறி.'அந்தி ஈசல் அடைமழைக்கு அறிகுறி', 'அந்தி ஈசல் பூத்தால் அடைமழை அதிகரிக்கும்', 'ஈசல் பறந்தால் மழை' என வரும் ஈசல் மொழிகள் இதனை இனிதுறச் சுட்டுகின்றன.

உயிரினங்களில் நுண்ணுயிரினமாகிய எறும்புகள் தங்கட்கு உரிய உணவை ஏந்தி மேட்டுப் பகுதிகளை நோக்கி ஊர்ந்து செல்வதும் மழை வருவதை முன்னரே அறிவிக்கும் அறிகுறியாகும் என்பதை 'எறும்பு முட்டை கொண்டு திட்டையேறின் மழை பெய்யும்' என்ற பழமொழி உணர்த்துகின்றது.

தட்டான் பூச்சி என்பதும் பிறிதொரு வகை உயிரினம். இந்த உயிரினம் தாழ்ந்த மட்டத்தில் பறப்பது மழை வருவதன் அறிகுறியாக உணரப்பட்டது. இச் செய்தியைத் 'தட்டான் பூச்சி தாழப் பறந்தால் தப்பாமல் மழைவரும்' என்னும் பழமொழி உணர்த்துகின்றது. தப்பாமல் மழை வரும் என்னும் தொடர் இம்மழைக் குறியில் மக்கள் கொண்டிருந்த உறுதிப்பாட்டை உணர்த்துகின்றது.

தும்பி பறந்தால் தூரத்தில் மழை' என்பது பிறிதொரு பழமொழி. தூரத்தில் எங்கோ ஓரிடத்தில் மழை பொழிந்து கொண்டிருப்பதைக் கூட அறியும் அனுபவத்திறன் இப் பழமொழியால் வெளிப்படல் காணலாம். ஈசல் பறத்தல் மழை வருவதைக் குறிப்பிடும் அறிகுறி என முன்னர்ச் சுட்டப்பட்டது. புற்றுக்களில் இருந்த ஈசல் பறத்தற்காகப் புறப்பட்டாலும் மழை பொழியப் போவதை அறிவிக்கும் குறியே. மண்ணிலே கறையான் பூச்சிகள் கூடுவதும் பிறிதோர் அறிகுறி. மழை வருவதை முன்னரே அறியும் இந்த அறிகுறிகளைப் 'புற்றிலே ஈசல் புறப்பட்டாலும் மண்ணிலே கறையான் கூடினாலும் மழை வர வேண்டும்' என்ற பழமொழி விளக்குகின்றது. 'மழை வரவேண்டும்' என்னும் தொடர் மக்கள் தங்கள் அனுபவத்தில் கொண்டிருந்த உறுதிப்பாட்டை விளக்கி நிற்கின்றது.

கால்நடைகளில் மாடுகளுக்கும் மழை வருவதை முன்னரே அறியும் நுட்பவுணர்வு இருந்தது. 'மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை பெய்யும்' என்ற பழமொழி இக் குறிப்பை விளக்கும். மாடுகள் மயங்கி நின்று வானத்தைப் பார்ப்பதும் மழை பொழியப் போவதை முன்னரே அறிவிக்கும் அறிகுறி என்பதை இப் பழமொழியால் அறியலாம். இங்ஙனம் தத்தம் பட்டறிவால் பல்வேறு குறிகளை ஓர்ந்து மழை பொழியப் போவதை முன்னரே அறியும் திறன் வாய்க்கப் பெற்றிருந்தனர் பண்டையோர்.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள்

Post by kalaimoon70 on Thu Mar 04, 2010 3:16 pm

காலத்தால் மறைக்கப்பட்டாலும்,
எக்காலமும் இருக்கும் இம் மொழி.
தமிழ்த் தரும் பழமொழி.
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum