ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

கடவுள் தந்த இருமலர்கள்...
 ரா.ரமேஷ்குமார்

அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

தமிழரின் தொன்மை
 sandhiya m

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 ayyasamy ram

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழக காவல்துறையின் வரலாறு

View previous topic View next topic Go down

தமிழக காவல்துறையின் வரலாறு

Post by snehiti on Thu Mar 04, 2010 8:33 pm

தமிழக காவல்துறையின் வரலாறு 1659ம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. அந்த சுவாரஸ்யமான தொகுப்பு இதோ...
1659 - மதராஸ்பட்டணத்தின் (பின்னர் மெட்ராஸ் - இப்போது சென்னை) பாதுகாப்புக்காக பெத்த நாயக் என்பவரை வெள்ளையர் அரசு நியமித்தது. இதுதான் காவல் என்கிற கட்டமைப்பின் முதல் படிக்கல்.
1770 - சென்னை மாகாண ஆளுநராக இருந்த ஜோசியோஸ் டூப்ரே போலீஸ் வாரியத்தை அமைத்தார். இதன் மூலம் பொது அமைதி, பொது சுகாதாரம், ஒழுங்கு பாதுகாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
1771 - சந்தைகளில் பொருட்கள் முறையாக விற்கப்படுகிறதா, மோசடிகள் நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க ஆளுநர் ஸ்ட்ரேட்டன் கொத்வால் என்கிற கண்காணிப்பாளர்களை நியமித்தார்.
1780 - காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) பதவி உருவாக்கப்பட்டது. மார்க்கெட்களை கண்காணித்து, பொருட்களின் விலை நிலவரத்தை கட்டுப்படுத்த இந்தப் பதவி உருவாக்கப்பட்டது.
1782 - தவறுகளைத் தடுக்கவும், மோசடிகளை தடுக்கவும், சுகாதாரத்தை முறைப்படுத்தவும் முறையான காவல்துறையை உருவாக்குவது குறித்த விரிவான திட்டத்ைத போஃபாம் என்பவர் உருவாக்கினார்.
1791 - கொத்வால் போலீஸ் முறை ஒழிக்கப்பட்டது. வியாபாரிகளிடம் இவர்கள் முறைகேடாக பணம் (லஞ்சம்) வாங்குவதாக புகார்களின் பேரில் இந்தப் பதவி ஒழிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக பாலிகர் என்ற பதவி முறை அமல்படுத்தப்பட்டது.
1806 - 3 போலீஸ் மாஜிஸ்திரேட்டுகளுடன் முதலாவது எஸ்.பி.யாக வால்டர் கிரான்ட் பதவிேயற்றார்.
1815 - மெட்ராஸ் எஸ்.பியாக பதவியேற்ற தாமஸ் ஹாரிஸ் மெட்ராஸை எட்டு பகுதிகளாகப் பிரித்து காவல் பணியை தொடங்கினார்.
1829 - 1832 - மெட்ராஸ் சிட்டி அட்வகேட் ஜெனரல் ஜார்ஜ் நார்ட்டனின் பரிந்துரையின் பேரில் பிளாக் டவுன் மாவட்டம், திருவல்லிக்கேணி மாவட்டம், வேப்பேரி மாவட்டம், செயின்ட் தாமஸ் மாவட்டம் (சாந்தோம்) என மெட்ராஸ் நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
1834 - முதல் இந்திய போலீஸ் மாஜிஸ்திரேட்டாக பிரான்சிஸ் கெல்லியும், டி.எஸ்.பியாக வேம்பாக்கம் ராகவாச்சாரியார் பொறுப்பேற்றனர்.
1856 - போலீஸ் சட்டம் 12 திருத்தப்பட்டது. அதன் படி மெட்ராஸ் சிட்டியின் முதல் காவல் ஆணையராக ஜே.சி. போட்லர்சன் நியமிக்கப்பட்டார்.
1858 - ராபின்சன் தலைமை போலீஸ் ஆணையராக (ஐஜி) நியமிக்கப்பட்டார்.
1859 - நவீன மெட்ராஸ் காவல்துறையின் தொடக்கம் இங்குதான் ஆரம்பித்தது. போலீஸ் சட்டம் 24 கொண்டு வரப்பட்டது. 1906ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போலீஸ் ஆணையத்திற்கு இதுதான் முன்னோடியாகும்.
1865 - தற்போதைய போலீஸ் (டிஜிபி) தலைமையிடம் அமைந்துள்ள கட்டடம் மாதம் 90 ரூபாய்க்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டது.
1874 - இந்தக் கட்டடத்தை மெட்ராஸ் மாகாண காவல்துறை ரூ. 20 ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கியது. மேலும் ரூ. 10 ஆயிரம் செலவழித்து பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
1884 - மலப்புரம் பகுதியில் (கேரளா) மாப்பிள்ளை வகுப்பினரால் அடிக்கடி கலவரம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து அங்கு மலப்புரம் சிறப்பு போலீஸ் படை உருவாக்கப்பட்டது.
1895 - கை விரல் ரேகைப் பிரிவு தொடங்கப்பட்டது.
1902 - மெட்ராஸ் நகரம் 2 சரகங்களாகப் பிரிக்கப்பட்டது. வடக்கு சரகம் துணை ஆணையர் தலைமையிலும், தென் சரகம் ஆணையரின் நேரடிக் கண்காணிப்பிலும் விடப்பட்டன.
1906 - குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடங்கப்பட்டது. பாவ்செட் புதிய டிஐஜியாக நியமிக்கப்பட்டார்.
1909 - கிங்க்ஸ் போலீஸ் பதக்கம் உருவாக்கப்பட்டது.
1919 - மெட்ராஸ் கமிஷனராக திவான் பகதூர் பராங்குசம் நாயுடு நியமிக்கப்பட்டார். இப்பதவிக்கு வந்த முதல் இந்தியர் இவர்தான். பி.பி. தாமஸ் ஐஜியாக நியமிக்கப்பட்டார்.
1928 - சிஐடி போலீஸ் பிரிவு சிறப்பு பிரிவு (எஸ்.பி.சிஐடி) மற்றும் குற்றப் பிரிவு (சிபிசிஐடி) என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
1929 - மெட்ராஸ் சிட்டி போலீஸில் குற்றப் பிரிவு, சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரிவாக பிரித்து அமைக்கப்பட்டது.
1935 - பொதுமக்கள் ஒத்துழைப்பை பெறும் வகையில் கிராம கண்காணிப்பு கமிட்டிகள் அமைக்கப்பட்டன.
1946 - போலீஸ் வயர்லஸ் பிரிவு தொடங்கப்பட்டது.
1947 - சென்னையைச் சேர்ந்த அதிகாரி சஞ்சீவி, டெல்லி ஐபியின் இயக்குநராக பொறுப்பேற்றார். இப்பதவியில் அமர்ந்த முதலாவது இந்தியர் இவர்தான்.
1951 - மெட்ராஸ் மோப்ப நாய்ப் படை உருவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர் மோப்ப நாய்ப் படைகள் மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் மிகவும் திறமையான மாநிலமாக தமிழகம் விளங்க இந்தப் படைதான் முன்னோடியாக அமைந்தது.
1956 - போலீஸ் ரேடியோ அலுவலகம் உருவாக்கப்பட்டது.
1959 - தமிழக காவல்துறை நூற்றாண்டு விழா கண்டது.
1960 - போலீஸ் ஆய்வு மையம் உருவாக்கப்பட்டது.
1961 - மதுரையில் மோப்ப நாய் பிரிவு உருவாக்கப்பட்டது.
- மாநில தடயவியல் ஆய்வகத்திற்கு அரசு அனுமதி அளித்தது.
1963 - மெட்ராஸ் போலீஸ் மருத்துவமனை முழு அளவிலான மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.
- ஹோம் கார்ட் எனப்படும் ஊர்க்காவல் படை உருவாக்கப்பட்டது.
1971 - போலீஸ் கம்ப்யூட்டர் பிரிவு உருவாக்கப்பட்டது. காவல்துறையில் கம்ப்யூட்டர்மயமாக்கலை தொடங்கிய முதல் மாநிலம் தமிழகம்தான்.
- கோபாலசாமி அய்யங்கார் தலைமையில் தமிழ்நாடு போலீஸ் கமிஷன் உருவாக்கப்பட்டது.
- தீவிரவாதிகளை ஒடுக்க சிறப்பு சிஐடி பிரிவு உருவாக்கப்பட்டது. இதுவே பின்னர் கியூ பிரிவாக உருவெடுத்தது.
1973 - தமிழக காவல்துறையில் முதன் முதலாக பெண் காவலர்களும், பெண் சப் இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்பட்டனர்.
1976 - ஆவடியில் போலீஸ் போக்குவரத்து பணிமனை, பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது.
- சிஐடி பிரிவில் பாதுகாப்புப் பிரிவு தொடங்கப்பட்டது.
1979 - தமிழக காவல்துறையின் தலைவர் பதவியாக டிஜிபி பதவி உருவாக்கப்பட்டது.
- தமிழக காவல்துறையின் முதலாவது டிஜிபியாக ஸ்ட்ரேஸி நியமிக்கப்பட்டார்.
1981 - தமிழ்நாடு காவல் வீட்டு வசதி வாரியம் உருவாக்கப்பட்டது.
1984 - சிஐடி வனப் பிரிவு உருவாக்கப்பட்டது.
1989 - தமிழ்நாடு காவல் வீட்டு வசதி கழகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துடன் இணைக்கப்பட்டது.
- காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது.
1991 - காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறையினரை தேர்வு செய்வதற்காக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உருவாக்கப்பட்டது.
- தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் தனியாக செயல்படத் தொடங்கியது.
1992 - சிறப்பு பாதுகாப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது.
- தமிழகத்தின் முதலாவது அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்னை ஆயிரம் விளக்கில் தொடங்கப்பட்டது. படிப்படியாக மாநிலம் முழுவதிலும் இது விரிவுபடுத்தப்பட்டது.
1993 - சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது.
1994 - கடலோரக் காவல் படைப் பிரிவு உருவாக்கப்பட்டது.
1997 - மதக் கலவரங்களைத் தடுக்க விரைவு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது.
2001 - புதிய நூற்றாண்டில், தமிழக காவல்துறை 91,331 போலீஸார், 11 சரகங்கள், 30 போலீஸ் மாவட்டங்ள், 2 ரயில்வே மாவட்டங்கள், 6 ஆணையரகங்கள், 189 துணை கோட்டங்கள், 287 சர்க்கிள்கள், 1276 காவல் நிலையங்களுடன் விஸ்வரூபம் எடுத்து நின்றது.
2002 - காவலர் குறை தீர்ப்பு தினம் தொடங்கப்பட்டது.
- சென்னை, மதுரை, கோவை, திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஐஜி தலைமையில் புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டன.
2003 - நெடுஞ்சாலைகளில் விபத்துக்களைக் குறைக்க ஒரு நடமாடும் காவல் நிலையம், 80 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் தொடங்கப்பட்டன.
- 177 போலீஸ் கிளப்கள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டது.
2004 - பெண் போலீஸாரைக் கொண்ட தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் பட்டாலியன் தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே இதுதான் அனைத்து மகளிர் போலீஸ் பட்டாலியன் ஆகும்.
- சந்தனக் கடத்தல் வீரப்பனை கொன்று தமிழக காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை பெரும் சாதனை படைத்தது.
2005 - செங்கை கிழக்கு காவல் மாவட்டம், சென்னை மாநகர காவல்துறையுடன் இணைக்கப்பட்டது.
2006 - ஆசியாவிலேயே மிகப் பெரியதும், நவீனமானதுமான புழல் மத்திய சிறை திறக்கப்பட்டது.
2007 - சென்னை காவல்துறை 150 ஆண்டுகளைத் தொட்டது.
avatar
snehiti
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1157
மதிப்பீடுகள் : 39

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum