ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.
 T.N.Balasubramanian

தமிழ்த்துறை வாழ்த்து
 M.Jagadeesan

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 T.N.Balasubramanian

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 krishnanramadurai

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 krishnanramadurai

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 krishnanramadurai

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஷாரூக்கான் சொன்னதில் என்ன தவறு?

View previous topic View next topic Go down

ஷாரூக்கான் சொன்னதில் என்ன தவறு?

Post by தாமு on Sat Mar 06, 2010 5:33 am

ஷாரூக்கான் சொன்னதில் என்ன தவறு?
ரு சின்ன விஷயம்… யோசித்துப் பார்த்தால் உண்மையிலேயே சின்ன விஷயம்தான். ஆனால் அதை பால், உத்தவ் தாக்கரேக்கள் ஊதி ஊதிப் பெரிதாக்கி, பெரிய அரசியல் ஆதாயம் தேடி வருகின்றனர்.
ஐபிஎல் என்ற வர்த்தக ரீதியிலான கிரிக்கெட் போட்டிகளில் இந்த ஆண்டு பாகிஸ்தான் வீரர்களை எந்த அணியின் உரிமையாளரும் ஏலம் எடுக்கவில்லை, கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாரூக்கான் உள்பட.
இது பின்னர் தேசிய அளவிலான பிரச்சினையாக மாற, இருநாட்டு அதிகாரிகளும், வாரியங்களும் பேசி.. மோதிக் கொண்டன. இதில் தாமாக மூக்கை நுழைத்த சிவசேனா, மும்பையில் பாகிஸ்தான் வீரர்கள் கால் வைக்கக் கூடாது என்றும், அவர்களை ஐபிஎல் போட்டியில் யாரும் ஏலம் எடுக்காதது நல்லதுதான் என்றும் கூறியிருந்தது.
இந்த நேரத்தில் இன்னொரு விஷயமும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது… அது மும்பை மும்பைவாசிகளுக்கே என்ற சிவசேனாவின் மூர்க்கத்தனம். இதற்கு மாற்றாக கருத்து கூறிய டெண்டுல்கர், அமிதாப், அமீர்கான் எல்லாம் பால் தாக்கரேயின் அரசியல் வாணலியில் வறுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போதுதான், ‘பாகிஸ்தான் வீரர்களும் விளையாடியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே’ என்று கருத்து சொன்னார் ஷாரூக்கான்.
யார் வசமாகக் கிடைப்பார்கள், குதிரை சவாரி செய்யலாம் என்று காத்திருந்த சிவசேனாவுக்கு, ஷாரூக்கான் ராஜ குதிரையாகத் தெரிந்தார். போதாக்குறைக்கு அவரது இஸ்லாமிய அடையாளம் வேறு.. இந்த சீஸனுக்கு இவர் போதும் என்று கப்பென்று பிடித்துக் கொண்டார் பால் தாக்கரே.
கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்த சேனாவின் அரசியல் இமேஜை உயிர்ப்பிக்க ஷாரூக்கின் மை நேம் ஈஸ் கான் மிகவும் தேவைப்பட்டது. அதைப் பலிகொள்ள முழு வீச்சில் களமிறங்கினார்கள் பால் தாக்கரேயும் அவரது மகன் உத்தவ் தாக்கரேயும்.
வழக்கம்போல, ஷாரூக்கான் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் படத்தை ரிலீஸ் பண்ண விடமாட்டோம் என்று பேச ஆரம்பித்தனர் தாக்கரேக்கள். மகாராஷ்ட்ர காங்கிரஸ் அரசு ஷாரூக்கானுக்கு தங்கள் முழு ஆதரவை தெரிவித்தது.
டம் வெளியாகும் நாள் நெருங்க நெருங்க, மகா டென்ஷன் ஷாரூக்கானுக்கு மட்டுமல்ல, மும்பைவாசிகளுக்கும்தான்.

இதுகுறித்து மும்பைவாசியும் நமது பத்திரிகை நண்பருமான சுஜன் பட்டீல் (டைம்ஸ் குழுமம்) இப்படிக் கூறுகிறார்:
“மும்பை மக்களுக்கு என்ன ஆனது? ஏன் இந்த மூடத்தனமான அரசியல் வியாதிகளைப் பார்த்து இப்படி பம்முகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஷாரூக்கான் சொன்னது ஒரு சாதாரண விஷயம். அதற்கு பாகிஸ்தான் ஆதரவு சாயம் பூசுவதை மத்திய அரசு முளையிலேயே கிள்ளியெறிவதை விட்டு ஏன் வேடிக்கைப் பார்க்கிறது? இதற்கும் ஒரு திரைப்படம் வெளியாவதற்கும் என்ன சம்பந்தம்? அரசியல்வாதிகள் அரசியல்வாதிகளுடன் மோதாமல், சினிமா பப்ளிசிட்டிக்கு ஆசைப்படுவதைத்தான் இந்த சம்பவம் காட்டுகிறது. இந்த லட்சணத்தில் சில புத்திஜீவி சைக்கோக்கள், இது ஷாரூக்கானின் வியாபார டெக்னிக் என்று பிதற்ற ஆரம்பித்துவிட்டன. ஒரு பத்திரிகையாளனாக, நாட்டின் மன நிலையைப் பார்த்து என்னால் பரிதாபப்படத்தான் முடிகிறது” என்றார் கோபத்துடன்.
இதனை ஒரு மும்பைவாசியின் கருத்தாகவே பார்க்கலாம். பலரும் இத்தகைய மனநிலையில் இருந்தாலும், வெளிப்படையாக எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளனர் என்கிறார் சுஜன்.
படம் வெளியானபோது நடந்தவை அவமானத்தின் உச்சம். சிவசேனாவுக்கு பயந்து கொண்டு ஷாரூக்கானுக்கும் அவரது பட வெளியீட்டுக்கும் ஆதரவு தரக்கூட திரையுலகம் முன்வரவில்லை. சல்மான்கான், அபிஷேக் பச்சன், காஜோல் என சிலர் மட்டுமே வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்தனர். மற்றவர்கள் கூட்டுக்குள் தலையை இழுத்துக் கொண்டனர். காங்கிரஸ் தவிர பிற கட்சிகள் கண்டுகொள்ளாமல் போய்விட்டன.
சிவசேனாவின் ஆட்டம் பேயாட்டமாகிவிட, படத்தைத் திரையிட முதலில் முன்வந்த தியேட்டர்காரர்கள் அப்படியே பல்டியடித்தனர். வெள்ளிக்கிழமை பகல் காட்சியை மும்பை மக்கள் பார்க்க முடியவில்லை. காரணம் சிவசேனாவின் பகிரங்க பயமுறுத்தல்.
அதேநேரம், ஷாரூக்கான் ஓடோடி வந்து தன்னைச் சந்திக்க வேண்டும்… மன்னிப்புக் கோர வேண்டும், காலில் விழுந்து ஆசி பெற வேண்டும் என்பது பால் தாக்கரேயின் விருப்பமாக இருந்தது.
ஆனால் ஷாரூக்கான், ‘எதற்காக நான் மன்னிப்பு கோர வேண்டும்?’ என்று கேட்டுவிட்டு, தனது கருத்தில் உறுதியாக நின்றார். இதனால் ஷாரூக்கின் மை நேம் ஈஸ் கான் வெளியாகவிருந்த திரையரங்குகள் சில நொறுக்கப்பட்டன. இதைப் பார்த்து மற்ற திரையரங்குகளும் இந்தப் படத்தை திரையிட மறுத்தன. மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் கூட்டம் போட்டு, இந்தப் படம் வேண்டாம் என்றனர்.
இன்னொரு பக்கம் ஷாரூக்கும் இயக்குநர் கரண் ஜோஹரும் இந்தப் படம் திட்டமிட்டபடி வெளியாகியே தீரும் என்றனர். மும்பையில் எந்த தியேட்டரும் படத்தை வெளியிடாவிட்டாலும் பரவாயில்லை என்பது அவர்கள் நிலை. படத்தை திரையிடும் அனைத்து திரையரங்குகளுக்கும் மராட்டிய அரசு முழு பாதுகாப்பு தருவதாக உறுதியளித்திருந்தது.
அதேநேரம் தங்கள் உறுதிமொழியை புறக்கணித்தனர் தியேட்டர்காரர்கள். இரண்டு நாள்களுக்கு முன்பு வரை மும்பையில் 63 திரையரங்குகளில் வெளியாகவிருந்த மை நேம் ஈஸ் கான், வெள்ளிக்கிழமை காலை வெறும் 3 திரையரங்குகளில் மட்டுமே வெளியானது. அவற்றில் ஒன்றில் படம் பார்த்தவர் மாநில உள்துறை அமைச்சர் ஆர்ஆர் பாட்டீல்.
இந்தப் படம் தரத்தில், தயாரிப்பில், நடிப்பில் இந்தியாவின் மிகச் சிறந்த படைப்பாக அனைவரும் கொண்டாட ஆரம்பிக்க, வேறு வழியின்றி படிப்படியாக மற்ற தியேட்டர்களும் வழிக்கு வந்தன. ரசிகர்களும் பயமின்றி படம் பார்க்க வரத் துவங்க, பிற்பகலுக்குப் பிறகு மேட்னி ஷோவை பெரும்பாலான திரையரங்குகள் மை நேம் ஈஸ் கானுடன் தொடர்ந்தன. அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ் புல்.

இந்த நேரத்தில் ஷாரூக்கான் ட்வீட்டரில் ஒரு செய்தி அனுப்பினார்: “என்னால் மும்பை மக்களுக்கு எத்தனை சிரமங்கள்.. இதை நினைத்து வருத்தப்படுகிறேன். உங்கள் அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன்..’ என்று அதில் கூறியிருந்தார்.
அடுத்த நிமிடமே சிவசேனா அலுவலகத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். எதற்கு?
‘ஷாரூக்கான் மன்னிப்பு கேட்டு விட்டார்… சிவசேனாவுக்கு வெற்றி’ என்று.
வரிசை வரிசையாக வந்து பால் தாக்கரேக்கு மாலை சூட்டினர். இந்தப் பிரச்சினையில் அவர் ஜெயித்து விட்டாராம். மும்பை மக்களின் ஏகபோக ஆகரவு அவருக்குத்தானாம்! எத்தனை அல்பத்தனம்!!
இவர்களைப் பொறுத்தவரை, யாராக இருந்தாலும், தவறே செய்யாவிட்டாலும் இவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் மும்பையில் இருக்க முடியாது அல்லது நடித்த படம் ரிலீஸ் ஆகாது. ‘சினிமா, கிரிக்கெட் என்ற பொழுதுபோக்கு சாதனங்கள் போதும், அரசியல் பிழைக்க!’ என்பது தாக்கரேக்கள் சொல்லாமல் சொல்லும் வாதம்.
வெறும் வன்முறை, கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் அரசியல் செய்து வரும் சிவசேனா, ஷாரூக்கானைப் பற்றி மட்டுமல்ல, இந்த நாட்டின் கடைசி குடிமகனையும் விமர்சிக்கும் அருகதையற்றது என்பதே உண்மை.
அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, விலைவாசி போன்ற நியாயமான பிரச்சினைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து தங்கள் அரசியல் இருப்பை வெளிப்படுத்தத் திராணியற்ற இதுபோன்ற அரசியல்வாதிகளை தொடர்ந்து பேயாட்டம் போட விட்டு மத்திய அரசு வேடிக்கைப் பார்ப்பதன் காரணம் என்னவென்றே புரியவில்லை.
பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் விஷயத்தில் ஷாரூக்கான் சொன்னதை விடுங்கள்… மக்களின் கருத்து என்ன? கிரிக்கெட் என்பது தேசத்தின் மானப் பிரச்சினை அல்ல. அது வெறும் விளையாட்டு மற்றும் வியாபார சமாச்சாரம் மட்டுமே. இங்கே தேசப்பற்று எங்கே வந்தது?
பாகிஸ்தானுடன் விளையாட்டு உள்ளிட்ட தொடர்புகளே இல்லை என்று மத்திய அரசு கொள்கை முடிவை அறிவித்து, அதை மீறும் வகையில் ஷாரூக்கான் கருத்து தெரிவித்திருந்தால் கூட பால்தாக்கரேவின் எதிர்ப்பை நியாயப்படுத்தலாம்.
பேச்சுவார்த்தைக்கு வா வா என்று இன்னும் பாகிஸ்தானை அழைத்துக் கொண்டுதானே உள்ளது இந்தியா… இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடிக் கொண்டுதானே உள்ளது? பிறகெதற்கு இந்த இரட்டை நிலை?
பாகிஸ்தான் வீரர்களை வைத்து கிரிக்கெட் வியாபாரம் நடத்தினால் ஜோராக இருக்கும் என்றுதானே ஷாரூக்கான் சொன்னார். இதே கருத்தை பெரும்பான்மையான நடிகர்களும் கூட சொன்னார்களே… ஓ அவர்கள் படம் எதுவும் வெளியாகவில்லையோ…!
சிவசேனாவின் இந்த விதண்டாவாத, வரட்டுத்தனமான, மூர்க்கமான போராட்டத்தால் ஒரு பலன் கிடைத்துள்ளது. எத்தனை குட்டிக் கரணம் அடித்தாலும், மக்களை வெறும் பயத்தால் மட்டும் ரொம்ப நாள் அடக்க முடியாது என்பதே அது.
இந்த உண்மை புரிந்ததும்தான் தாக்கரே இப்படி அறிக்கை விட்டிருக்கிறார்… “சரி.. யாரெல்லாம் பாகிஸ்தான் அபிமானி ஷாரூக்கான் படம் பார்க்க விரும்புகிறார்களோ அவர்கள் தாராளமாய் போய் பாருங்கள். சிவசேனா போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்கிறது!”
ஹை.. தாக்கரே ஸாப், மூஞ்சியில மண் ஒட்டலை (அவருக்குதான் மீசை இல்லையே…)!
-வினோ
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ஷாரூக்கான் சொன்னதில் என்ன தவறு?

Post by கலைவேந்தன் on Sat Mar 06, 2010 10:06 am


கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஷாரூக்கான் சொன்னதில் என்ன தவறு?

Post by kalaimoon70 on Sat Mar 06, 2010 2:15 pm

முதலில் தமிர்களை அடித்து விரட்டிய கூட்டம் இது!இதுக்கூட தமிழ் நாட்டில் அமைப்பும் அதருக்கு தலைவருமுண்டு! வெக்ககேடு!
மராட்டியருக்கே மும்பை சொந்தம் என்றால் முதலில் ,அங்கு விற்கப்பட்டு
விலை மாதாக ஆக்கப்பட்ட மற்ற மாநில பெண்களை வெளியே அனுப்பட்டும்!அங்கு
அங்கிரிக்கப்பட்ட விபச்சாரத்தை ஒழிக்கட்டும் வாய்ச் சவால் விடும்,
தாதாக்கள் இவர்கள்!
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: ஷாரூக்கான் சொன்னதில் என்ன தவறு?

Post by சிவா on Sat Mar 06, 2010 2:18 pm

@kalaimoon70 wrote:முதலில் தமிர்களை அடித்து விரட்டிய கூட்டம் இது!இதுக்கூட தமிழ் நாட்டில் அமைப்பும் அதருக்கு தலைவருமுண்டு! வெக்ககேடு!
மராட்டியருக்கே மும்பை சொந்தம் என்றால் முதலில் ,அங்கு விற்கப்பட்டு
விலை மாதாக ஆக்கப்பட்ட மற்ற மாநில பெண்களை வெளியே அனுப்பட்டும்!அங்கு
அங்கிரிக்கப்பட்ட விபச்சாரத்தை ஒழிக்கட்டும் வாய்ச் சவால் விடும்,
தாதாக்கள் இவர்கள்!

சிறப்பான பதிலடி, நானும் வழிமொழிகிறேன்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஷாரூக்கான் சொன்னதில் என்ன தவறு?

Post by ஸ்ரீசிவா on Sat Mar 06, 2010 2:20 pm

@kalaimoon70 wrote:
மராட்டியருக்கே மும்பை சொந்தம் என்றால் முதலில் ,அங்கு விற்கப்பட்டு
விலை மாதாக ஆக்கப்பட்ட மற்ற மாநில பெண்களை வெளியே அனுப்பட்டும்!அங்கு
அங்கிரிக்கப்பட்ட விபச்சாரத்தை ஒழிக்கட்டும் வாய்ச் சவால் விடும்,
தாதாக்கள் இவர்கள்!
அவர்களால் என்ன முடியுமோ???
அதை செய்து பிழைக்கிறார்கள்

avatar
ஸ்ரீசிவா
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஷாரூக்கான் சொன்னதில் என்ன தவறு?

Post by Tamilzhan on Sat Mar 06, 2010 2:21 pm

@kalaimoon70 wrote:முதலில் தமிர்களை அடித்து விரட்டிய கூட்டம் இது!இதுக்கூட தமிழ் நாட்டில் அமைப்பும் அதருக்கு தலைவருமுண்டு! வெக்ககேடு!
மராட்டியருக்கே மும்பை சொந்தம் என்றால் முதலில் ,அங்கு விற்கப்பட்டு
விலை மாதாக ஆக்கப்பட்ட மற்ற மாநில பெண்களை வெளியே அனுப்பட்டும்!அங்கு
அங்கிரிக்கப்பட்ட விபச்சாரத்தை ஒழிக்கட்டும் வாய்ச் சவால் விடும்,
தாதாக்கள் இவர்கள்!

avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: ஷாரூக்கான் சொன்னதில் என்ன தவறு?

Post by கோவை ராம் on Sat Mar 06, 2010 3:17 pm

இதில் பெரிய வேற்பாடு எனக்கு தெரியவில்லை .அவரவர் பகுதிக்கு அவரவர் சொந்தம் கொன்டாடுகிரோம்.
கர்நாடகா நமக்கு தண்ணீர் தருவதில்லை
நாம் பான்டிக்கு தண்ணீர் தருவதில்லை
கோவை கிழ்க்கு மன்டலம் மேற்கு மன்டலதிற்கு தண்ணீர் தருவதில்லை
நாங்கள் பொள்ளாசியில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் தருவதில்லை
கேரளா பரம்பிகுளத்தில் இருந்தும்,பெரியர்ரில்
இருந்தும் தண்ணீர் தருவதில்லை
மெரினாவில் இருக்கும் இறண்டு குப்பங்கலெ ஒருவருக்கொருவர் கடலில் மீன் பிடிக்க விடுவதில்லை.
தமிழ் மீனவர்கள், ஆந்திர மீனவர்கள்,கேரளா மீனவர்கள் ஒருவரும் மற்றவர்களை தன் இடங்களில் அனுமதிப்பது இல்லை
ஒரு கிராமம் அடுத்த கிராமத்திற்கு தண்ணீர் தருவதில்லை (இப்பிரச்சினை இந்தியா முழுவதும் உண்டு)
நமது கிராமங்களில் பக்கத்து ஊர் மக்கள் சின்ன அலம்பல் பன்னாலெ அடி விழும்.
பின் நம் மீனவர்கள் எல்லை கடந்தால் அடி விழாதா? உங்கல் இன்திய படை மட்டும் இலங்கை மீனவர்களை பிடிகிறது
மகாபலிபுரத்திலும் ,மதுரையிலும் எல்லா சுற்றூலா இடங்களிலும் நீங்கள் வெளிநாட்டினரை என்ன பாடு படுத்துகிறீர்கள்

பக்கத்து ஊர்காறனை நீ அடிக்கும்ப்போது பம்பாய்காரன் உன்னை அடிக்க மாட்டானா?
என் தமிழனே,இந்தியனே அரசியல்வாதியை நம்பி அன்டை மாநிலத்துடனும்,நாட்டோடும் பகமை பாராட்டாதே

எப்பொதும் உரிமை பற்றி பேசாமல் கடமை செய்.
நமக்கு வானம் வசப்படும்.
avatar
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

Re: ஷாரூக்கான் சொன்னதில் என்ன தவறு?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum