ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 7:58 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by கே. பாலா Today at 7:55 pm

» computer language தெரிந்துகொள்ள super website
by தம்பி வெங்கி Today at 7:53 pm

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm

» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by பிளேடு பக்கிரி Today at 7:42 pm

» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm

» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm

» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm

» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 6:57 pm

» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm

» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm

» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm

» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சிவா Today at 6:37 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm

» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm

» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm

» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm

» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 6:07 pm

» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm

» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm

» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm

» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm

» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by ஜாஹீதாபானு Today at 5:18 pm

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm

» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm

» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm

» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm

» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm

» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm

» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm

» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm

» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by பிஜிராமன் Today at 4:25 pm

» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm

» முதலிடம்...!
by பிஜிராமன் Today at 4:19 pm

» மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?
by ஜாஹீதாபானு Today at 4:19 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம்

View previous topic View next topic Go down

காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம்

Post by சிவா on Wed Mar 10, 2010 12:35 am

சென்னை மயிலாப்பூர் 'லஸ்' முனையிலிருந்து ஆழ்வார் பேட்டை வரும் லஸ் சர்ச் சாலையின் வலப்புறத்தில் இருக்கிறது பிரகாச மாதா தேவாலயம். நகரின் பரபரப்பான பகுதியில் அமைந்திருந்தாலும் தேவாலயத்தின் உள்ளே நுழைந்துவிட்டால் ஓர் அலாதி அமைதி.

சுற்றிச் சூழ நிற்கும் பூ மரங்களின் பசுமையும் குளுமையும், முன்னால் விரிந்து பரந்து கிடக்கும் திறந்தவெளி மைதானமும் தேவாலயத்திற்கு மேலும் பொலிவு சேர்க்கின்றன.

காட்டுக்கோயில்

நடுவில் கம்பீரமாக நிற்கிறது பிரகாச மாதா தேவாலயம். இதை இப்படியே சொன்னால் பலருக்கும் புரியாது. பிரகாச மாதா தேவாலயத்தைப் பலரும் 'காட்டுக்கோயில்' என்றே அழைக்கின்றனர்.

காட்டுக்கோயில் சென்னையில் உள்ள மிகப் பழமையான மாதா கோயில். ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டுக்கு வரும் முன்பிருந்தே இந்தக் கோயில் இங்கு இருந்து வருகிறது.

பிரான்சீஸ்கன் சபை

கோயிலின் முகப்பிலேயே கட்டிய ஆண்டு 1517 என்று பொறித்துள்ளனர்.1516 - ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய நாட்டில் உள்ள பிரான்சீஸ்கன் நகரில் அமைக்கப்பட்ட பிரான்சீஸ்கன் மிஷனரியினர், கிறிஸ்துவின் நற்செய்தியை எல்லோருக்கும் தெரிவிக்கும் ஆன்ம வேட்கை கொண்டு பல நாடுகளுக்கும் கடற் பிரயாணம் மேற்கொண்டனர். அவர்களில் சிலர் வங்கக் கடற்பகுதிக்கு வந்து திக்குத் திசை தெரியாமல் பல நாள்கள் தவித்துக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் இரவு மயிலைக் கடற்கரையில் தோன்றிய ஓர் ஒளி அவர்களின் கண்களில் பட்டு, கவனத்தைக் கவர்ந்தது. கப்பலை ஒளி தெரிந்த திசை நோக்கித் திருப்பினார்கள். அங்கேயே சென்று இறங்கவும் தீர்மானித்தார்கள்.

ஒளியின் திசையில் பயணித்துக் கரையை அடைந்தனர். கீழே இறங்கி. ஒளி வீசும் திசை நோக்கி நடந்தனர். அது உள் நோக்கிச் சென்று கொண்டேயிருந்தது. அவர்கள் பின் தொடர்ந்து சென்றனர். 200 ஆண்டுகளுக்கு முன்பு கூட மயிலாப்பூர் காடாகத்தான் இருந்தது என்கிறார்கள். 500 ஆண்டுகளுக்கு முன்பு என்றால் கேட்கவும் வேண்டுமா?

ஒளி காட்டிற்குள் வழிகாட்டிக் கொண்டே சென்றது. காட்டின் ஒரு அடர்ந்த பகுதிக்கு வந்ததும் ஒளி திடீரென மறைய அவர்கள் அங்கே தங்கி விட்டனர்.

ஒளியாக வந்து வழிகாட்டியது மாதாதான் என்பது அவர்கள் நம்பிக்கை. எனவே ஒளி மறைந்த அந்த இடத்திலேயே ஓர் தேவாலயத்தை எழுப்பினர். 'பிரகாச மாதா' என்று பெயரிட்டனர்.

காட்டுக்குள்ளேயே கோயில் அமைந்திருந்ததால் மக்கள் அதைக் 'காட்டுக்கோயில்' என்று அழைக்கத் தொடங்கினர். குடியேற்றம் அதிகரித்துக் காடு அழிந்து போய்ப் பரபரப்பான நகரின் முக்கிய பகுதியான பின்பும் 'காட்டுக்கோயில்' என்ற பெயர் மட்டும் மாறாமலிருக்கிறது.

இன்றும் திக்கற்று திகைக்கும் மக்களுக்குத் திசை காட்டும் ஒளிமாதாவாக வீற்றிருக்கிறாள் அன்னை. அதனையொட்டி பிரகாச மாதாவிற்கு என தனி வழிபாட்டு வாக்கியமே அமைத்துள்ளனர்.

'இறையருள் நிறை பெற்று மக்கள் இருள் போக்கும் பிரகாச மாதாவே,
தரணி வாழ் மக்களின் துயர் துடைக்கும் தூயவளே,
விண்ணவர் போற்றிடும் விமலியே,
உமது பரிந்துரைக்கும் ஆற்றலில், நம்பிக்கை கொண்டு
உம்மை நாடித் தேடி வரும் அடியோர்
எம்மைக் கடைக்கண் பாரும் அம்மா!
புயலில் சிக்கியவர்களுக்கு வழிகாட்டுகின்ற நட்சத்திரமே,
வாழ்க்கையில் பல துன்ப துயரங்களால் அலைக்கழிக்கப்பட்டு, அமைதியிழந்த நிலையில்
உம் திருமுன் நிற்கிறோம்.
எங்கள் துயரினைத் துடைத்து நாங்கள் வாழ்வில் வளம் பெற
அருள் புரியும் தாயே ஒளி நின்ற அன்னையே!
எங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் நிலையான அமைதி நிலவச் செய்யும்.
உடைந்த உள்ளங்களுக்கு உவகையூட்டும்.
புத்திக்கு ஒளியையும் சிந்தைக்குத் தெளிவையும் தந்தருளும்.
எங்கள் அருள் வாழ்வுக்கும், பொருள் வாழ்வுக்கும் தேவையான வரங்களை
எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய
இயேசு கிறிஸ்துவிடமிருந்து பெற்றுத் தாரும் தாயே - ஆமென்.'

என்று தினமும் தூய தமிழில் ஜெபம் நடக்கிறது. பங்குத் தந்தை டி.ஜே. ஜார்ஜ் ஜெபத்தை வாசிக்க மக்களும் உடன் சொல்லி ஆமென் என்கின்றனர்.




பதிவுகள்: 716709 | உறுப்பினர்கள்: 14716 | தலைப்புகள்: 76958 | புதிய உறுப்பினர்: anuratha34

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 54540
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 2286

http://www.sivastar.net

Back to top Go down

Re: காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம்

Post by சிவா on Wed Mar 10, 2010 12:37 am

குழந்தை ஏசுவின் குமிழ்ச் சிரிப்பு

கோயிலின் முன் உள்ள திறந்த வெளியின் முகப்பில் சிலுவையில் நிற்கும் ஏசுவின் சிற்பத்தை அமைத்துள்ளனர். சிலுவையிலும் துக்கத்தை வெளிக்காட்டாத ஏசுவின் தெளிவான முகம். கருணை ததும்பும் காட்சி அற்புதமாக உள்ளது. சிலுவையில் நிற்கும் அவர் 'பாரம் சுமக்கிறவர்களே என்னிடம் வாருங்கள் இளைப்பாறுதல் தருவேன்' என்று அரவணைக்க அழைக்கும் அவர் நமக்காகத் துன்பம் சுமப்பதைப் பார்க்கும்போது கண்ணில் நீர் துளிர்க்காமலில்லை.

வலதுபுறம் அலங்கரிக்கப்பட்ட கல் குகையில் குழந்தை ஏசுவுடன் மாதா சிற்பம் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே தந்தை ஜோசப்பின் ஆளுயரச் சிலையும் உள்ளது. அதனைத் தாண்டிப் புராதன அமைப்புடன் பிரகாச மாதாவின் கோயில். மேல் மாடத்தில் அணைத்துக் கொள்ள இரு கைகளை நீட்டி நிற்கும் ஏசு சிலை. அதன் மேல் ஹீப்ரு மொழியில் ஒளி வீசும் பின்னணியுடன் கோயில் கட்டப்பட்ட ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது ஒரு அரிய காட்சி.

உள்ளே மக்கள் அமர்ந்து ஜெபம் செய்யும் இடம். கடைசியிலும் அதி அற்புத பூ வேலைப்பாடுகளுடன் உள்ளது அன்னை பிரகாச மாதாவின் சன்னதி. மகனைக் கையில் ஏந்தி நிற்கிறாள். பெயருக்கு ஏற்றாற்போல் அன்னை முகம் பிரகாசமாக உள்ளது. பார்க்கும்போதே மனதில் நம்பிக்கை ஒளியை ஏற்றுவதாக அமைந்துள்ளது.

அன்னையின் புன்முறுவலும், அவள் கையில் உள்ள குழந்தை ஏசுவின் முகத்தில் தவழும் குமிழ்ச் சிரிப்பும் மனதில் ஆனந்தத்தையும் ஆறுதலையும் தருவதாக உள்ளன.

விதானத்தின் வேலைப்பாடுகள் கண்ணையும் கருத்தையும் கவருவதாக உள்ளது. வண்ண வண்ணப் பூ வேலைப்பாடும், தேவதைகளின் சிற்பங்களும் அதிஅற்புத அழகுடன் மிளிர்கின்றன.

போர்ச்சுகல், லத்தீன் மொழிக் கல்வெட்டுகள்

கருவறை மாடத்தின் முகப்பிலும் மாதா, பிதா சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. பழங்கோயில்களுக்கே உரிய கல்வெட்டுகள் பலவும் கோயிலின் பெருமைகளைப் பறைசாற்றுகின்றன.

போர்ச்சுகல், லத்தீன் மொழிக் கல்வெட்டுகள் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன. சுவர்களில் காணப்படும் பளிங்குக்கல் சிற்பங்கள் தத்ரூபமாக உள்ளன. கோயிலின் உள்ளேயும் வெளியேயும் தரை மட்டத்திற்குக் கீழே நிறைய கல்லறைகள் உள்ளன. பிரான்சீஸ்கன் மிஷனரியைச் சேர்ந்த பாதிரியார்கள் கல்லறையாக அவையிருக்கலாம் எனக் கருத இடமுண்டு. அவற்றின் மேல் லத்தீன், போர்ச்சுகல் மொழியில் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டில் காணப்படும் சிற்பங்களின் சிறப்புகள் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிக் காட்டுவதாக உள்ளன.

தாக்குதல்களுக்கு உள்ளான கோயில்

கால வெள்ளத்தில் இக்கோயில் பல தாக்குதல்களுக்கு உள்ளாகியும் கூட இன்றும் கம்பீரமாக நின்று அருளாட்சி நடத்தி வருகிறது. பலமுறை கோயில் பெருஞ்சேதமடைந்து மீண்டுள்ளது. 1662- இல் கோல்கொண்டா படையெடுப்பாலும், 1780-82-இல் ஹைதர் அலியின் முற்றுகையினாலும் கோயில் பெரிதும் நாசமடைந்துள்ளது. ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனி பல காலம் இக் கோயிலைத் தனதாக்கிக் கொண்டிருந்தது.

1516-ஆம் ஆண்டிலிருந்து 1847-ஆம் ஆண்டு வரை பிரான்சீஸ்கன் சபையாரே இக் கோயிலில் திருவழிபாடு நடத்தியும், பரிபாலித்தும் வந்துள்ளார்கள்.

1848-லிருந்து மேற்றிராசனக் குழுக்களின் மேற்பார்வையிலிருந்து வருகிறது. 1916-ஆம் ஆண்டில் கோயிலின் 4-ஆம் நூற்றாண்டு விழாவை மயிலை மேற்றிராசனம் வெகு விமரிசையாகக் கொண்டாடியது.

தற்போது பாதிரியார் டி.ஜே. ஜார்ஜ் நிர்வாகத்தில் கோயில் பணிகள் வெகு சிறப்பாக நடந்து வருகின்றன. ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில் கோயில் திருவிழா நடைபெற உள்ளது. வேண்டுவோருக்கு வேண்டுவதை அருளும் பிரகாச மாதா உங்களையும் அன்பொழுக அழைக்கிறாள்.




பதிவுகள்: 716709 | உறுப்பினர்கள்: 14716 | தலைப்புகள்: 76958 | புதிய உறுப்பினர்: anuratha34

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 54540
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 2286

http://www.sivastar.net

Back to top Go down

Re: காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம்

Post by kalaimoon70 on Wed Mar 10, 2010 12:53 am


kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம்

Post by இளமாறன் on Wed Mar 10, 2010 1:31 am

இப்படி ஒரு கோயிலா ... தகவலுக்கு நன்றி .. போட்டோ இருந்த்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்




இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12622
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1352

Back to top Go down

Re: காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம்

Post by சிவா on Wed Mar 10, 2010 1:50 am

Luz Church-Our Lady of Light


The Church of Our Lady of Light, more popularly known as the Luz Church, is located in a corner of Mylapore and has given a distinct identity to the areas around it. The road that leads up to it is known as the Luz Church road.

It is also known as”Kaatu Kovil”, or the church located in a forest

Address:
Luz Church road,
Mylapore,Chennai-600004













நன்றி: http://theindiatour.blogspot.com




பதிவுகள்: 716709 | உறுப்பினர்கள்: 14716 | தலைப்புகள்: 76958 | புதிய உறுப்பினர்: anuratha34

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 54540
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 2286

http://www.sivastar.net

Back to top Go down

Re: காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம்

Post by சபீர் on Mon Mar 22, 2010 9:33 pm

அருமையான விளக்கம் உங்கள் சிறந்த பதிவுக்கு நன்றிகள்

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம்

Post by நிலாசகி on Mon Mar 22, 2010 9:38 pm

சிவா wrote:Luz Church-Our Lady of Light


The Church of Our Lady of Light, more popularly known as the Luz Church, is located in a corner of Mylapore and has given a distinct identity to the areas around it. The road that leads up to it is known as the Luz Church road.

It is also known as”Kaatu Kovil”, or the church located in a forest

Address:
Luz Church road,
Mylapore,Chennai-600004













நன்றி: http://theindiatour.blogspot.com

நிலாசகி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79

Back to top Go down

Re: காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம்

Post by நவீன் on Tue Jul 06, 2010 7:15 pm

இப்படி ஒரு கோயிலா ... தகவலுக்கு நன்றி

நவீன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 4520
வசிப்பிடம்: பெங்களூர்
சேர்ந்தது: 29/05/2009
மதிப்பீடு: 29

Back to top Go down

Re: காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம்

Post by Aathira on Tue Jul 06, 2010 11:00 pm

தகவலுக்கு நன்றி

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9788
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 387

http://tamilnimidangal.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum