ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 8:03 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by கே. பாலா Today at 7:55 pm

» computer language தெரிந்துகொள்ள super website
by தம்பி வெங்கி Today at 7:53 pm

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm

» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by பிளேடு பக்கிரி Today at 7:42 pm

» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm

» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm

» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm

» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 6:57 pm

» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm

» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm

» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm

» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சிவா Today at 6:37 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm

» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm

» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm

» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm

» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 6:07 pm

» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm

» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm

» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm

» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm

» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by ஜாஹீதாபானு Today at 5:18 pm

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm

» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm

» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm

» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm

» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm

» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm

» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm

» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm

» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by பிஜிராமன் Today at 4:25 pm

» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm

» முதலிடம்...!
by பிஜிராமன் Today at 4:19 pm

» மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?
by ஜாஹீதாபானு Today at 4:19 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




ஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்!

View previous topic View next topic Go down

ஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்!

Post by சிவா on Wed Mar 10, 2010 1:58 am

'ஹலால்' என்றால் அனுமதிக்கப்பட்டது, ஆகுமானது என்று பொருள். தடை செய்யப்பட்டது. விலக்கப்பட்டது 'ஹராம்' ஆகும்.

இஸ்லாம் மார்க்கத்தில் இந்தச் செயல்களெல்லாம் நன்மை அளிப்பவை. இவற்றைச் செய்ய அனுமதி உண்டு என்று கூறப்பட்டவை ஹலால். இந்தச் செயல்களெல்லாம் தீமை பயப்பவை, பாவச் செயல்கள் எனவே இவற்றுக்கு அனுமதி இல்லை என்று விலக்கப்பட்டவை ஹராம்.

உதாரணமாக இஸ்லாத்தில் வியாபாரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. வட்டி தடை செய்யப்பட்டுள்ளது.

''வணிகத்தை ஆகுமாக்கி வைத்து வட்டியைத் தடுத்துவிட்டான் (இறைவன்). எவரேனும் பின்னும் (வட்டி வாங்க) முற்பட்டால் அவர்கள் நரகவாசிகளே!'' (திருக்குர்ஆன் 2:275)

வணிகம் செய்வதில் பரக்கத் (விளம்) உள்ளதாக நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் வட்டி வாங்கவோ கொடுக்கவோ கூடாது என்று கடுமையாகத் தடை செய்துள்ளார்கள்.

வியாபாரம் என்று சொல்லும்போது நேர்மையான வியாபாரத்தையே இசுலாம் பரிந்துரை செய்கிறது. ஒரு பொருளை விற்பனை செய்யும்போது அதன் சிறப்புகளை மட்டுமல்ல; குறைகளையும் சொல்லித்தான் விற்பனை செய்ய வேண்டும். இலாபத்துக்காக தரமற்ற பொருளை நுகர்வோரின் தலையில் கட்டிவிடக் கூடாது. நுகர்வோர் விழிப்புணர்ச்சி பற்றி 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். ஆனால் நுகர்வோருக்கான அறிவுரையாக அல்ல; வியாபாரிகளுக்கான அறிவுரையாக! அதிக லாபம் வைத்து விற்கக்கூடாது என்பதும் இசுலாமிய அறிவுரையே!

குறைந்த இலாபம் வைத்து அதிகமான பொருல்களை விற்பனை செய்வது மிகச் சிறந்த வணிகமாக நவீன காலத்தில் நிரூபிக்கப்பட்டு வருகிறது. இதனால் வியாபாரமும் பெருகிறது. செல்வமும் கொழிக்கிறது. இவற்றை நாம் நடைமுறையிலேயே கண்டு வருகிறோம்.

அடுத்து வட்டி. வட்டியின் கொடுமை உலகளாவியது. உலக வங்கியில் கடன் வாங்கிய நாடுகள் வட்டியிலேயே மூழ்கிவிடும் போல் தோன்றுகிறது. வட்டி என்பது அப்பட்டமான சுரண்டல் என்பது வட்டிக்குக் கடன் வாங்கி உழைப்பையெல்லாம் வட்டி கட்டுவதிலேயே செலவழிக்கும் ஏழைத் தொழிலாளர்களைப் பார்த்தாலே புரியும். வட்டி ஒரு கொடுமை என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று. ஆனால் அதுதானே உலகின் பொருளாதராத்தையே நிர்ணயம் செய்கிறது? வட்டியில்லாத வங்கி உலகில் இல்லை. ஆனால் வட்டியில்லாத வங்கிகளை உலகில் உருவாக்கி பொருளாதாரத்தில் புரட்சி ஏற்படுத்தி உள்ளது இசுலாம். மலேசியா, சவுதிஅரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார், பாகிஸ்தான் முதலான நாடுகளில் இசுலாமிய (வட்டியில்லா) வங்கிகள் உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன.

இசுலாமிய வங்கிகள் வட்டியில்லாமல் கடன் கொடுக்கின்றன. சேமிப்பாளர்களுக்குப் பங்குத்தொகை அளிக்கின்றது. சேமிப்பாளர்களுக்கு அல்லது முதலீட்டாளர்களுக்கு வட்டி அளிப்பதில்லை. லாபத்தில் பங்கு அளிக்கிறது. அதாவது வட்டியில்லாமல் வியாபாரம் செய்து லாபத்தில் பங்கு அளிக்கிறது. ஆக இதுதான் ஹலால்.

இசுலாத்தில் ஹலால் உணவு பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. இப்பொழுது ஹலால் அறுப்பு (ஹலால் கட்) பிரபலமாக உள்ளது. இறைச்சி உணவைப் பதப்படுத்தி விற்பனை செய்யும் நிறுவனம் 'ஹலால் கட்' என்று குறிப்பிட்டுச் சென்னையின் மையப்பகுதியில் பலகை வைத்துள்ளது.

'ஹலால் கட்' முஸ்லிம்களுக்கு மட்டும் நன்மை பயக்கவில்லை. எல்லா மக்களுக்கும் நன்மை அளித்துக் கொண்டிருக்கிறது. ஹலால் முறையில் அறுக்கப்பட்ட ஆடு, மாடுகளுக்குத்தான் நகராட்சிகள் முத்திரை குத்தி விற்பனை செய்ய அனுமதிக்கின்றன. இப்படித்தான் கோழி, ஆடுகளை அறுக்க வேண்டும் என்று இசுலாம் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதனால் மிருகங்களுக்கு துன்பம், சித்திரவதை ஏற்படுவதில்லை. அப்படி அறுக்கப்படும் இறைச்சியை உண்பதால் எந்தக் கேடும் வருவதில்லை. அது ஆரோக்கியமான உணவாகவும் ஆகிவிடுகிறது.

மிருகங்களைத் தலையின் பிடரியில் வெட்டக்கூடாது. கழுத்தில் உணவுக் குழல் செல்லும் பகுதியில் ரத்தநாளங்கள் அறுபடும்படி ('பிஸ்மில்லாஹி அல்லாஹ¤ அக்பர்' என்று கூறி மூன்று தடவை மட்டும்) அறுத்து ரத்தத்தை முழுமையாக வெளியேறச் செய்ய வேண்டும். தலையைத் துண்டிக்கக்கூடாது.

ரத்தம் முழுவதும் வெளியேறிவிடுவதால் அந்த இறைச்சியில் கிருமிகள் இருக்காது. சுவையும் குறையாது. (ரத்தம் உறைந்தால் அந்த இறைச்சி கெட்டு விடும். எனவே தானாக இறந்த மிருகங்களின் இறைச்சியை உண்ணக்கூடாது என்பது ஓர் இசுலாமியக் கட்டளை)

விலங்குகளில் ஆடு, மாடு, ஓட்டகம், பறவைகளில் கோழி, வாத்து, கொக்கு வகைகள் போன்றவை அனுமதிக்கப்பட்டவை. பறவைகளில் கூரிய நகம் உள்ளவை, கொத்திக் கிழிக்கக்கூடிய அலகு உள்ளவை (காக்கை, கழுகு) மிருகங்களில் பற்களால் கடித்துத் தின்னக் கூடிய மாமிசப் பட்சினி, ஒரே குளம்புள்ளவை (சிங்கம், கரடி, புலி, குதிரை) போன்றவை உண்பதற்கு தடை செய்யப்பட்டவை.

பன்றியின் இறைச்சி, உறுப்புகள் முற்றிலும் தடை செய்யப்பட்டவை. ஹலால் உணவு பற்றி பார்த்தோம். இது தவிர பொய் சொல்லாமல், ஏமாற்றாமல் சம்பாதிக்கும் உணவு ஹலால் உணவாகும் என்று இசுலாமிய அறிஞர்கள் அருமையாக விளக்கம் கூறுகிறார்கள்.

விபச்சாரம், திருட்டு, கோள்சொல்லுதல், அநீதியாகக் கொலை செய்தல், மது அருந்துதல், பிறரை மோசடி செய்தல் போன்றவற்றை இசுலாம் கடுமையாகப் பார்க்கிறது. மனித குலத்திற்குத் தகாதவை என்று தடை செய்துள்ளது.

இதுபோல் எண்ணற்ற துறைகளில் குர்ஆன் வேதம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையில் (ஹதீஸ்) நல்வழி காட்டுகின்றன.

எனவே எல்லாம் வல்ல இறைவன் அனுமதி அளித்தவற்றைக் கடைப்பிடித்து, தடுத்தவற்றை தவிர்த்து வாழ்வில் உயர்வோமாக!




பதிவுகள்: 716715 | உறுப்பினர்கள்: 14716 | தலைப்புகள்: 76958 | புதிய உறுப்பினர்: anuratha34

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 54546
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 2286

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்!

Post by kalaimoon70 on Wed Mar 10, 2010 2:03 am

ஹலால் கட்' முஸ்லிம்களுக்கு மட்டும் நன்மை பயக்கவில்லை. எல்லா
மக்களுக்கும் நன்மை அளித்துக் கொண்டிருக்கிறது. ஹலால் முறையில்
அறுக்கப்பட்ட ஆடு, மாடுகளுக்குத்தான் நகராட்சிகள் முத்திரை குத்தி விற்பனை
செய்ய அனுமதிக்கின்றன. இப்படித்தான் கோழி, ஆடுகளை அறுக்க வேண்டும் என்று
இசுலாம் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதனால் மிருகங்களுக்கு துன்பம்,
சித்திரவதை ஏற்படுவதில்லை. அப்படி அறுக்கப்படும் இறைச்சியை உண்பதால்
எந்தக் கேடும் வருவதில்லை. அது ஆரோக்கியமான உணவாகவும் ஆகிவிடுகிறது.

மிருகங்களைத்
தலையின் பிடரியில் வெட்டக்கூடாது. கழுத்தில் உணவுக் குழல் செல்லும்
பகுதியில் ரத்தநாளங்கள் அறுபடும்படி ('பிஸ்மில்லாஹி அல்லாஹ¤ அக்பர்' என்று
கூறி மூன்று தடவை மட்டும்) அறுத்து ரத்தத்தை முழுமையாக வெளியேறச் செய்ய
வேண்டும். தலையைத் துண்டிக்கக்கூடாது.

ரத்தம் முழுவதும்
வெளியேறிவிடுவதால் அந்த இறைச்சியில் கிருமிகள் இருக்காது. சுவையும்
குறையாது. (ரத்தம் உறைந்தால் அந்த இறைச்சி கெட்டு விடும். எனவே தானாக
இறந்த மிருகங்களின் இறைச்சியை உண்ணக்கூடாது என்பது ஓர் இசுலாமியக் கட்டளை)





kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: ஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்!

Post by இளமாறன் on Wed Mar 10, 2010 2:07 am

நல்ல தகவல் வாழ்த்துக்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்




இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12622
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1352

Back to top Go down

Re: ஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்!

Post by சபீர் on Wed Mar 10, 2010 5:40 pm

அழகான விளக்கம் தந்த அண்ணன் சிவாவிற்கு நன்றி

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: ஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்!

Post by சபீர் on Wed Mar 10, 2010 5:48 pm

கடலில் தானாக செத்தவை எதுவெல்லாம் ஹலால் எதுவெல்லாம் ஹராம்? முஹம்மத் -
கடலில் தாமாக செத்தவை எதுவாக இருந்தாலும் அவை ஹராமில்லை. அனைத்தும் ஹலால் தான்.
கடல் நீர் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது அதற்கு அவர்கள் 'கடல் நீர் தூய்மை செய்ய ஏற்றதாகும் அதில் உள்ளவை செத்து கிடைத்தாலும் ஹலாலாகும்" என்றார்கள். (ஜாபிர் (ரலி) இப்னு மாஜா - அஹ்மத் - இப்னு ஹிப்பான்)
பொதுவாக எல்லோருக்கும் ஹராம் என்று சொல்லக் கூடிய எதுவும் கடலில் இல்லை என்றாலும் கடல் உணவோ - தரை உணவோ எதுவாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இதில் எவருக்காவது இடையூறு ஏற்படுகிறது என்றால் அவர் அந்த உணவிலிருந்து தன்னை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள். (அல் குர்ஆன் 2:195)
இந்த வசன அடிப்படையில் ஒருவருக்கு கடலில் உள்ள வகைகளை சாப்பிடும் போது ஏதாவது உடல் கோளாறு ஏற்படுகிறது என்றால் அவர் அந்த உணவிலிருந்து தவிர்ந்துக் கொள்ள வேண்டும் என்பதை விளங்கலாம். மற்றப்படி கடலில் உள்ள அனைத்தையும் அனைவரும் சாப்பிடலாம் தடையில்லை.

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: ஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்!

Post by பிச்ச on Wed Mar 10, 2010 6:13 pm

ஒரு உயிரை கொல்றதே பாவம் அத கழுத்த அறுத்து முழு ரத்தமும் வடிந்த
பிறகு [அதாவது துடி துடிக்க விட்டு சாகடிக்கிறது] சாப்பிடலாம்னு
சொல்றது என்னால ஏத்துக்க முடியாது.
காந்தி சொன்னார் துடி துடித்துக்கொண்டிருக்கும் ஒரு கன்றுக்குட்டியை கொன்றுவிடுவதே மேல், அது துன்பப்படுவதை பார்த்த பின்னர்.

கொன்னால் பாவாம் தின்னால் போச்சிங்குரவங்களுக்கு இது வேணும்னா சரியா இருக்கலாம்...
மத்தபடி சொல்றதுக்கு ஒன்னும் இல்ல.
நான் எந்த மதத்திற்கும் எதிரியும் அல்ல.

நன்றி:

புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்

வந்தே மாதரம்!

தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே

இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே

தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடிபோல் சொந்தம் வேறு இல்லை

தாய் மண்ணைப் போலொரு பூமியில்லை

பாரதம் எங்களின் சுவாசமே

தாய் மண்ணே வணக்கம்!

பிச்ச
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

Back to top Go down

Re: ஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்!

Post by சபீர் on Wed Mar 10, 2010 6:38 pm

சரவணன் wrote:ஒரு உயிரை கொல்றதே பாவம் அத கழுத்த அறுத்து முழு ரத்தமும் வடிந்த
பிறகு [அதாவது துடி துடிக்க விட்டு சாகடிக்கிறது] சாப்பிடலாம்னு
சொல்றது என்னால ஏத்துக்க முடியாது.
காந்தி சொன்னார் துடி துடித்துக்கொண்டிருக்கும் ஒரு கன்றுக்குட்டியை கொன்றுவிடுவதே மேல், அது துன்பப்படுவதை பார்த்த பின்னர்.

கொன்னால் பாவாம் தின்னால் போச்சிங்குரவங்களுக்கு இது வேணும்னா சரியா இருக்கலாம்...
மத்தபடி சொல்றதுக்கு ஒன்னும் இல்ல.
நான் எந்த மதத்திற்கும் எதிரியும் அல்ல.

நன்றி:

புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி


உங்கள் கருத்துப்படி பார்க்கபோனால் நாம் அன்றாடம் உண்ணும் தாவரம்களும் உயிர்தான் அதை பறிக்கும் போதும் அதுவும் அழுகின்றன தான்
அது நமக்கு தெரிவதில்லை ஆனால் இன்று விஞ்சானிகள் கூறுகின்றனர்

சுருக்கமா சொல்லப்போனால் இவ்வுலகில் படைக்க பட்ட அனைத்தும் மனிதனின் தேவைக்குத்தான் என்று மார்க்கம் சொல்கின்றது

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: ஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்!

Post by தாமு on Wed Mar 10, 2010 6:40 pm

நல்ல தகவல் வாழ்த்துக்கள்


http://azhkadalkalangiyam.blogspot.com


புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

தாமு
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13857
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009
மதிப்பீடு: 376

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum