Latest topics
» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டுby வை.பாலாஜி Today at 3:47 pm
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by Raksha Today at 3:45 pm
» நாட்டுப் புற பாடல் - 1
by ஹிஷாலீ Today at 3:39 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by சதாசிவம் Today at 3:32 pm
» ரசிக்க சில படங்கள்
by அல்கெனா ரிஷி Today at 3:27 pm
» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !
by சதாசிவம் Today at 3:27 pm
» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by கோபி சதீஷ் Today at 3:26 pm
» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?
by கோபி சதீஷ் Today at 3:22 pm
» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by ஜாஹீதாபானு Today at 3:21 pm
» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by ஜாஹீதாபானு Today at 3:14 pm
» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!
by பிரசன்னா Today at 3:09 pm
» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm
» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm
» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm
» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm
» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm
» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm
» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm
» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm
» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm
» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm
» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm
» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm
» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm
» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am
» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am
» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am
» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am
» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am
» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am
» வாழ்க்கை...!
by ஹிஷாலீ Today at 9:55 am
» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
by சாந்தன் Today at 8:19 am
» என் படைப்பாளியின் படைப்பு ,கண்டத்தில் சில காணுங்கள் வர .........
by கோவிந்தராஜ் Today at 7:50 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
தேவர்கள் வழி வந்த தேவராட்டம்
Page 1 of 1 • Share •
தேவர்கள் வழி வந்த தேவராட்டம்
தேவர்கள் ஆடிய ஆட்டம் என்பதால் இந்த ஆட்டத்துக்கு இப் பெயர் வந்தது என்று கூறுகின்றனர். கம்பளத்து நாயக்கர்கள் இந்த ஆட்டத்தை ஆடி வருகின்றனர். இறப்பு தவிர்த்த அவர்களுடைய குடும்பச் சடங்குகள், நிகழ்வுகள் அனைத்துக்கும் இந்த ஆட்டம் ஆடப்பட்டு வருகின்றது. இந்த ஆட்டத்தின் தோற்றம் பற்றியதான ஒரு கதை சொல்லப்படுகிறது.
சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்வில் தேவலோக நடனப் பெண்களான ரம்பா, ஊர்வசி இருவரும் நடனம் ஆடுகின்றனர். அதற்கு நந்திதேவர் மிருதங்கம் வாசிக்கிறார். 'நம்மை விட்டால் இது போன்று பல விதமான இசைக்கருவிகளை வாசிக்கக் கூடியவர்கள் யார் இருக்கிறார்கள்?' என்னும் எண்ணம் நந்திக்குத் தோன்றவே, மிருதங்கத்தை மேற்கொண்டு வாசிக்காமல் பாதியிலேயே நிறுத்தி விடுகிறார். இதைக் கண்ட சிவன், நந்தியின் அகங்காரத்தை அடக்க வேண்டும் என்று எண்ணித் தன் கையில் இருக்கும் உடுக்கை போன்று பெரிய அளவில் ஆனால், அதன் வடிவிலேயே உள்ள ஒரு புதிய கருவியை உருவாக்கினார். அதன் பெயர் 'தேவ துந்துபி' என்று அழைக்கப்பட்டது. அந்தக் கருவியை நந்தியிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார் சிவன். நந்தியால் அந்தப் புதிய கருவியை வாசிக்க முடியவில்லை.
தேவலோகத்தில் பூக்கட்டிக் கொண்டிருந்த ஒரு நபரை அழைத்து, அவருக்கு அருள் கடாட்சம் அளித்து வாசிக்கச் சொன்னார். அவரும் அக் கருவியை வாசித்தார். அக் கருவியின் இடதுபுறத்தில் 'ஓம்' என்றும் வலது பக்கத்தில் 'சக்தி' என்றும் ஓசை எழுந்தது. அதற்கான ஆட்டத்தையும் சிவனே உருவாக்கி தேவர்களை ஆடச் செய்தார். இவ்வாறு தேவ துந்துபியின் இசைக்கு ஏற்றவாறு தேவர்கள் ஆடிய ஆட்டமே தேவராட்டம். அதன் பிறகே நந்தியின் அகம்பாவம் அடங்கியதாகக் கூறுகின்றனர் தேவராட்டக் கலைஞர்கள்.
''தேவர்களின் வழி வந்த நாங்கள் அந்த ஆட்டத்தைத் தொடர்ந்து ஆடி வருகிறோம்'' என்கின்றனர் கம்பளத்து நாயக்கர்கள். இந்த ஆட்டத்துக்கு இசைக்கருவி தேவ துந்துபி என்று அழைக்கப்படுகின்ற உறுமி மட்டுமே.
இன்று தேவராட்டத்தில் 72 அடவுகள் உள்ளன. இந்த ஆட்டத்தில் வேட்டைக்குச் சென்று வேட்டையாடுதல், பதுங்குதல், பாய்தல் போன்று பல்வேறு அம்சங்களும் அடங்கியுள்ளன. ஒவ்வோர் அடவிற்கும் ஒரு வகையான தாளக்கட்டு, சொற்கட்டு உள்ளது.
தேவராட்டத்துக்கு என்று தனியாக உடைகள் ஏதும் கிடையாது. மூன்று வேட்டிகள் மட்டுமே இதற்கான உடை. தலையில் உருமா என்று சொல்லப்படுகின்ற தலைப்பாகைக்கு ஒரு வேட்டி ; தோளில் மற்றொன்று. இரண்டு நுனிகளையும் இரு கைகளாலும் பிடித்து வேட்டியைக் கழுத்தில் போட்டிருப்பார்கள். மூன்றாவது வேட்டியை இடுப்பில் கட்டியிருப்பர். இதுவே இந்த ஆட்டத்துக்கான மரபு வழியான உடை. இன்று தலையில் தலைப்பாகையாக வண்ண வண்ணத் துணிகளைக் கட்டிக் கொள்கிறார்கள். ஜிப்பாவும் அணிந்து கொள்கின்றனர். இடையில் வேட்டியைக் கட்டிக் கொண்டு, அதைத் தார் பாய்ச்சிக் கட்டிக் கொள்கின்றனர். இரண்டு கைகளிலும் வெவ்வேறு வண்ணங்களில் கைக்குட்டைகளைப் பிடித்துக் கொண்டு ஆடுகின்றனர்.
உறுமி இசைக்கேற்ப ஆட்டக்காரர்கள் வரிசையாக நின்று முன்னும் பின்னும், பக்கவாட்டிலும் என்று ஆடி வருகின்றனர். பல்வகையான வடிவத்தில் ஆட்டத்தை அமைத்தும் ஆடுகின்றனர். திருமணம் போன்ற நிகழ்வுகளுக்குப் பல ஊர்களில் இருக்கும் உறவினர்களும் வந்து வெட்டவெளியில் பல்வேறு குழுக்களாக இணைந்து ஆடுகின்றனர். எல்லாக் குழுவுக்கும் பின்னணி இசையான உறுமி வாசிப்பவர்கள் களத்தின் நடுவில் நின்று கொள்கின்றனர். பல உறுமிகள் ஒன்று போல் முழங்க அந்தந்த ஊரின் பாணிக்கேற்ப ஆட்டக்காரர்கள் ஒன்று போல் முன்னும் பின்னுமாக ஆடுகின்றனர்.
தேவராட்டத்தின் இறுதியில் 'சேவையாட்டம்' என்றும் ஓர் ஆட்டம் ஆடப்படுகிறது. எல்லாக் குழுவினரும் களத்தைச் சுற்றி வரிசையாக ஆடி வருவதைத்தான் சேவையாட்டம் என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஆட்டத்தை ஆடியே தேவராட்டத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பது எழுதப் படாத விதி. தேவராட்டமும் சரி, சேவையாட்டமும் சரி ஒண்ணாம் காலத்தில் தொடங்கி துரித காலம் வரை சென்ற பின்னரே நிறைவடைகின்றது.
முன்பு போல் பரவலாக இந்த ஆட்டம் நிகழ்த்தப்படுவதில்லை என்றாலும், ஒரு சில கிராமங்களில் குறிப்பாக மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் தேவராட்டம் அதிகமாக நடத்தப்படுகிறது.

பதிவுகள்: 717214 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76977 | புதிய உறுப்பினர்: Raksha
Re: தேவர்கள் வழி வந்த தேவராட்டம்
நன்றி! வீடியோ கிடைக்குமா

நிலாசகி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79
Re: தேவர்கள் வழி வந்த தேவராட்டம்
நிலாசகி wrote:நன்றி! வீடியோ கிடைக்குமா
அடுத்தமுறை தமிழகம் வரும்பொழுது எடுத்து வருகிறேன் நிலா!

பதிவுகள்: 717214 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76977 | புதிய உறுப்பினர்: Raksha
Re: தேவர்கள் வழி வந்த தேவராட்டம்
[You must be registered and logged in to see this image.]சிவா wrote:நிலாசகி wrote:நன்றி! வீடியோ கிடைக்குமா
அடுத்தமுறை தமிழகம் வரும்பொழுது எடுத்து வருகிறேன் நிலா!

நிலாசகி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum