ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உடல் காட்டும் அறிகுறிகள்!
 ayyasamy ram

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திருவள்ளுவர் பக்கம்

View previous topic View next topic Go down

திருவள்ளுவர் பக்கம்

Post by சிவா on Wed Mar 17, 2010 4:16 pm

[You must be registered and logged in to see this image.]


திருக்குறள் பயன்

மாந்தனை மாந்தன் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனை சான்றோன் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனைத் தெய்வம் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனை இறைவன் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனைப் பெயராக் கடவுட் பெருநிலையில்
ஒன்றச் செய்வதும் திருக்குறள்.
மதுரை இளங்குமரனார்

திருக்குறள் செம்பொருள் நுகர்வு

"மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்"
"நன்றின்பால் உய்ப்ப தறிவு"

திருக்குறள் முழக்கங்கள்

"ஒத்த தறிவான் உயிர்வாழ்வான்"
"அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை"
"திருக்குறள் நம் மறை"திருவள்ளுவர் வரலாறு

திருவள்ளுவர் ஒப்பற்ற ஓர் உலகம்; அவர், வாழும் உலகத்தைத் தம்முள் கொண்டு, அவ்வுலகுக்காகத் தம் வாழ்வை ஒப்படைத்து, ஒப்பற்ற ஒரு நூலை ஆக்கிய பெருமகனார்.

திருவள்ளுவர் தமிழகத்தில் தோன்றியவர்; தமிழகத்தில் வாழ்ந்தவர்; 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்', 'ஒத்த தறிவான் உயிர் வாழ்வான்', 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' என்னும் இத்தகைய பெருநெறி பற்றியவர். இறைமை முதல் எல்லாம் பொதுமைக் கண் கொண்டு நோக்கியவர்: மாந்தரைத் தெய்வ நிலைக்கு ஏற்றும் மாணெறி படைத்த தெய்வர்.

திருவள்ளுவர் பன்மொழிப் புலமையர்: தம் காலத்து வழங்கிய நூற் பரப்புகளையெல்லாம் கண்டவர்; உலகியல், உயிரியல், உணர்வியல், உடலியல், குடியியல், படையியல், பொருளியல், தொழிலியல், அரசியல், மருத்துவ இயல், அருளியல், மெய்யியல் முதலாம் பல்வகை இயல்களில் திறமான புலமையுற்றவர்.

திருவள்ளுவர் இயற்கை இன்ப இல்வாழ்வை ஏற்று, அறவழி நின்று, பொருளீட்டி, இன்பந்துய்த்து, அறிவறிந்த நன்மக்களைப் பெற்று, எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு குடும்பக் கடமையும் நாட்டுக் கடமையும் நானிலக் கடமையும் சீருறச் செய்து சிறந்த செவ்வியர்.

சான்றோர்க்கு எந்நாடும் தம் நாடே என்றும், எவ்வூரும் தம் ஊரே என்றும், அறிவறிந்த நன்மக்கட்பேறு தம் பெற்றோரினும் இப்பேருலகுக்குப் பெருநலம் செய்யுமென்றும் உலகளாவிய பெருநெறி காட்டியவர்.

பெருமூதாளராக இலங்கிய நிலையில் தம் உண்மையறிவும் படிப்பறிவும் பட்டறிவும் மெய்யுணர்வுமாகிய எல்லாம் உலகை உய்விக்குமென்னும் அருளுள்ளத்தால் திருக்குறளை உலகுக்குத் தந்து தெய்வமாப் புகழ் எய்திய இறைமையர்.

இவை வள்ளுவ வழிக் கண்டவை.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருவள்ளுவர் பக்கம்

Post by சிவா on Wed Mar 17, 2010 4:17 pm

திருவள்ளுவர் ஆண்டும் நாளும்

சுறவத் (தை)த் திங்கள் ஐந்தாம் நாள் (18.1.1935) திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை பூண்டருளிய மறைமலை அடிகள், "கிறித்து பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்" என்று அறிவித்துத் திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார். "திருவள்ளுவர் ஆண்டைக் கிறித்து ஆண்டுடன் 31 ஆண்டைக் கூட்டிக் கணக்கிட வேண்டும்" என்பது அடிகள் குறிப்பு. அதனை அறிஞர் அவை ஏற்றுக் கொண்டது. அன்று தொட்டு அறிஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப் படுத்தப்படலாயிற்று.

திருவள்ளுவர் நினைவு மலர், பக் 117

1969 -இல் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டு ஆட்சிப் பொறுப்பு ஏற்றபின் பொங்கலுக்கு அடுத்த நாளைத் திருவள்ளுவர் நாளாகக் கொண்டு அரசு விடுமுறை அளிப்பது என்றும் 1.1.1970 முதல் இது நடைமுறைக்கு வருமென்றும் ஆணை இட்டார்.

சுறவத் (தை)த் திங்கள் இரண்டாம் நாளைத் திருவள்ளுவர் நாள் என்று அரசு 1974 முதல் கொண்டாடி வருகின்றது.

திருவள்ளுவர் ஆண்டு முறையைத் தமிழ்நாடு அரசு ஏற்று 1971 முதல் அரசு நாட்குறிப்பிலும், 1972 முதல் அரசிதழிலும், 1981 முதல் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகின்றது.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருவள்ளுவர் பக்கம்

Post by சிவா on Wed Mar 17, 2010 4:17 pm

திருவள்ளுவரைக் குறிக்கும் பிற பெயர்கள்:

செந்நாப் புலவர்
செந்தாப் போதார்
திருத்தகு தெய்வத் திருவள்ளுவர்
தெய்வத் திருவள்ளுவர்
தெய்வப் புலமைத் திருவள்ளுவர்
தெய்வப் புலவர்
தேவர்
தேவர் திருவள்ளுவர்
தேவிற் சிறந்த திருவள்ளுவர்
நாயனார்
புலவர்
பெருநாவலர்
பொய்ய மொழியார்
பொய்யில் புலவர்
மாதாநுபங்கியார்
முதற் பாவலர்
வள்ளுவ தேவன்(ர்)
வள்ளுவர்

திருக்குறளைக் குறிக்கும் பிற பெயர்கள்

அறம்
இரண்டு
உத்தரவேதம்
எழுதுண்டமறை
குறள்
தமிழ்மறை
திருவள்ளுவப் பயன்
திருவள்ளுவர்
தெய்வநூல்
தெய்வமாமறை
நம் மறை
பழமொழி
பால்முறை
புகழ்ச்சி நூல்
பொது மறை
பொய்யா மொழி
பொருளுரை
முதுநெறி
முதுமொழி
முப்பால்
முப்பொருள்
மெய்வைத்தசொல்
வள்ளுவ தேவன் வசனம்
வள்ளுவம்
வள்ளுவ மாலை
வள்ளுவர்
வள்ளுவர் வாய்மொழி
வள்ளுவர் வைப்பு
வள்ளுவன் வாய்ச்சொல்
வாய்மை
வாயுறை வாழ்த்து


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருவள்ளுவர் பக்கம்

Post by சிவா on Wed Mar 17, 2010 4:18 pm

திருக்குறளைத் தம்மில் ஒரு பகுதியாக வைத்துப் போற்றும் விளக்க நூல்கள்

இரங்கேச வெண்பா
சிவசிவ வெண்பா
சினேந்திர வெண்பா
சோமேசர் முதுமொழி வெண்பா
திருக்குறள் குமரேச வெண்பா
திருக்குறள் விளக்க வெண்பா
திருத்தொண்டர் வெண்பா
திருப் புல்லாணி மாலை
திருமலை வெண்பா
தினகர வெண்பா
பழைய விருத்த நூல்
முதுமொழி மேல் வைப்பு
முருகேசர் முதுநெறி வெண்பா
வடமலை வெண்பா
வள்ளுவர் நேரிசை


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருவள்ளுவர் பக்கம்

Post by சிவா on Wed Mar 17, 2010 4:19 pm

புகழ்மாலை

௧. பாடற் புகழ் மாலை
- திருவள்ளுவ மாலைத் தொகுப்பு

என்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும்
நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையது
-இறையனார்

தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால்
-கபிலர்

வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளவ வெல் லாம்அளந்தார் ஓர்ந்து
-பரணர்

தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
ஆனா அறமுதலா அந்நான்கும் -ஏனோருக்(கு)
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழிஉல கென்னாற்றும் மற்று
-நக்கீரர்

பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு
தெரிந்து திறந்தொறும் சேரச் -சுருங்கிய
சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்
வல்லாரார் வள்ளுவரல் லால்
-அரிசில் கிழார்

ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்
பாயிரத்தி னோடு பகர்ந்ததற்பின் -போயொருத்தர்
வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்
-நத்தத்தனார்

ஓதற் கெளிதாய் உணர்தற் கரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் -தீதற்றோர்
உள்ளுதொறுள்ளுதொ றுள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு
-மாங்குடி மருதனார்

எல்லாப் பொருளும் இதன்பால் உளதிதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால் -சொல்லால்
பரந்தபா வால்என் பயன்வள் ளுவனார்
சுரந்தபா வையத் துணை
-மதுரைத் தமிழநாகனார்


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருவள்ளுவர் பக்கம்

Post by சிவா on Wed Mar 17, 2010 4:20 pm

அறந்தகளி ஆன்ற பொருள் திரிஇன்பு
சிறந்தநெய் செஞ்சொல்தீத் தண்டு -குறும்பாவா
வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிருள் நீக்கு; விளக்கு
-நப்பாலத்தனார்

பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் அல்லாத
மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே -முப்பாலின்
தெய்வத் திருவள்ளு வர்செப் பியகுறளால்
வையத்து வாழ்வார் மனத்து
-தேனீக்கடிக் கீரனார்

அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின்
திறனறிந்தேம் வீடு தெளிந்தேம் -மறனெறிந்த
வாளார் நெடுமாற வள்ளவனார் தம்வாயால்
கேளா தனவெல்லாம் கேட்டு
-கொடிஞாழல் மாணி பூதனார்

சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய
வந்த இருவினைக்கு மாமருந்து -முந்திய
நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார்
பன்னிய இன்குறள்வெண்பா.
-கவுணியனார்

கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்
-இடைக்காடர்.

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்
-ஔவையார்.

இடைக்கால - பிற்காலப் புலவர்கள் இயம்புவன -பாடல்

சமயக் கணக்கர் மதிவழி கூறாது
உலகியல் கூறிப் பொருளிது என்ற வள்ளுவன்
-கல்லாடனார்

என்னடிகள் வெண்குறள் நேர் அடியிரண்டும்
என்றலையில் இருத்தும் இறை
-சிவப்பிரகாசர்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

திருக்குறள் உறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகு கருதியும்
-பாரதியார்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருவள்ளுவர் பக்கம்

Post by சிவா on Wed Mar 17, 2010 4:21 pm

வள்ளவர் செய் திருக்குறளை
மறுவற நன்குணர்ந்தோர்கள்
உள்ளவரோ மநுவாதி
ஒருகலத்துக் கொருநீதி.
-பேராசிரியர் பெ. சுந்தரனார்

வள்ளுவர் தந்த திருமறையைத் -தமிழ்
மாதின் இனிய உயிர்நிலையை
உள்ளம் தெளிவுப் போற்றுவமே -என்றும்
உத்தம ராகி ஒழுகுவமே.

புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றுச்
சித்தம் கலங்கித் திகைப்பதேன் -வித்தகன்
தெய்வப் புலவன் திருவள்ளு வன்சொன்ன
பொய்யில் மொழியிருக்கும் போது
-கவிமணி

தெள்ளு தமிழ்நடை சின்னஞ்சிறிய
இடண்டடிகள்
அள்ளு தொறுஞ் சுவை உள்ளு தொறுணர்
வாகும் வண்ணம்
கொள்ளு மறம்பொருள் இன்ப மனைத்தும்
கொடுத்ததிரு
வள்ளு வனைப்பெற்ற தாற்பெற்ற தேபுகழ்
வையகமே
வானுக்குச் செங்கதிர் ஒன்று -புனல்
வண்மைக்குக் காவிரி ஒன்றுண்டுநல்ல
மானத்தைக் காத்துவாழ என்றுமிந்த
வையத்துக் கொன்று திருக்குறள்
-பாவேந்தர்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருவள்ளுவர் பக்கம்

Post by jahubar on Wed Mar 17, 2010 4:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
jahubar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 471
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: திருவள்ளுவர் பக்கம்

Post by சிவா on Wed Mar 17, 2010 4:22 pm

உரைநடைப் புகழ்மாலை

திருவள்ளுவர் நூல் அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்ற முப்பாலால் ஆக்கப்பட்டது. அறமும் பொருளும் காதலும் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியன அல்ல. அவை மன்பதைக்கு -உலகுக்குப் பொது.

திருவள்ளுவர் என்னும் நினைவு தோன்றும் போதே, உலகமும் உடன் தோன்றுகிறது. இவ்வாறு தோன்றுதற்குக் காரணமென்ன? திருவள்ளுவர் உலகையே குறளாக எழுதினார். உலகின் எழுத்தோவியம் திருக்குறள் என்று கூறலாம்.

திருவள்ளுவர் உலகுக்கு என்றே பயின்றார்; உலகுக்கு என்றே வாழ்ந்தார்; அதனால் அவர்தம் உள்ளத்தில் உலகம் நின்றது. அவர் உலகம் ஆயினார்.. உலகம் அவராயிற்று. இத்தகைய ஒருவரிடமிருந்து பரிணமித்த ஒரு நூல் எந் நினைவையூட்டும்? அ·து உலக நினைவை ஊட்டுதல் இயல்பே. ஆகவே திருவள்ளுவர் நினைவு தோன்றும் போது உலகமும் உடன் தோன்றுவதில் வியப்பொன்றும் இல்லை.

திருவள்ளுவர் அருளிய திருக்குறள் என்னும் தெய்வ மறையினிடத்தில் எனக்குத் தணியாக காதல் உண்டு. காரணம் பலப்பல. சில வருமாறு: திருவள்ளுவர் முப்பால் கூறி வீட்டுப்பால் விடுத்தது. அறப்பேற்றுக்கு இல்வாழ்க்கையைக் குறித்தது. பெண்ணை வெறுத்தல முதலிய போலித் துறவுகளைக் கடிந்தது. மனமாசு அகற்றலே துறவென்று இயற்கை நுட்பத்தை விளக்கியது. இயற்கைப் பொது நெறியை அறிவுறுத்தியது. இன்ன பிற.

-திரு வி.க.

செயலுக்கு வரும் அறம் கரைவது திருக்குறள்; மக்கள் வாழ வழிவகுப்பது திருக்குறள்; பல நிலை அறம் தழுவியது திருக்குறள்; எந்நிலைய மாந்தரையும் முன்னேற்றுவது திருக்குறள்; உலகு ஒட்டும் நெறிகாட்டுவது திருக்குறள்; ஒருவன் வாழ்க்கை அவனைப் பொறுத்தது என்ற உண்மை அறைவது திருக்குறள்;

வள்ளுவர் தனிப்பொது நெஞ்சம் யாது?

செயல், செயல், செயல். சொல்வது செயலுக்கு வரவேண்டும். செயலுக்கு வருமாறு சொல்ல வேண்டும் என்னும் ஓர் அடிப்படைக் கருத்தினைத் தம் நெஞ்சில் நீள இருத்திக் கொண்டே குறள் எழுதியவர் வள்ளுவர். செயல் அடிப்படையை யாண்டும் மறவா உள்ளத்தினர் அப்பெருமகன். ஆதலால் செயலே வள்ளுவம் எனச் செய்க.

திருக்குறள் கருத்து வகையால் உலகமக்கட்கு எல்லாம் உரியது எனினும், மொழிகாரணமாய் நமக்கு உறவுடையது. ஆதலில் அதனை உள்ளவாறு நாம் உணர்தலும், உணர்ந்தவாறு மொழிபெயர்த்து உலகிடைப் பரப்பலும் நம் கடன். ஞாலத் திருக்குறளை உரிய தமிழ் வாயிலாகக் கற்க முயலுமின்! முயலுமின்! என்ற உணர்ச்சியைப் பிறமொழி மாந்தர்க்கு ஊட்டலும் நம் பொறுப்பு.

-மூதறிஞர் வ.சு.ப. மாணிக்கனார்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருவள்ளுவர் பக்கம்

Post by சிவா on Wed Mar 17, 2010 4:22 pm

திருக்குறள் ஒரு தனித்தமிழ் நூலாகும். திருக்குறள் அயற்கொள்கை எதிர்ப்பு நூலேயன்றி எந்த ஓர் அயற்கொள்கையையும் உடன்பட்டுக் கூறும் நூல் அன்று, 'தமிழர் வாழ்வே திருக்குறள். திருக்குறளே தமிழர் வாழ்வு' என்னும் அவ்வளவு இன்றியமையாச் சிறப்பினையுடைய நூல் திருக்குறள்.

தீங்கனியாகிய ஒரு மாம்பழத்தைப் பிழிந்தால் எவ்வளவு சாறு தேறும்? தேறும் சிறு அளவிற்றாய சாற்றினைச் சுண்டக் காய்ச்சிக் கற்கண்டு சேர்த்துத் துண்டாக்கினால் ஒக்க, திரண்ட காப்பியங்களையெல்லாம் பிழிந்து வடித்துக் காய்ச்சித் திரட்டி தீந்தமிழ்ச் சாற்றுக் கட்டியே திருக்குறள்.

-மறைமலையடிகள்.

தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் மக்கள் உய்யத் திருவாய் மலந்தருளிய தமிழ்மறை. உலகிருள் அகற்ற வந்த ஒற்றைத் தனியாழிப் பரிதி என்னின்; 'மனத்துக் கண் மாசிலனாதல் அனைத்தறன்' என்னும் குறட்பா அவ்வாழியின் அச்சாணி எனத்தக்க அருமை உடையதாதல் கண்டு உணர்ந்து உளங்கொளற் பாற்று.

-நாகை சொ. தண்டபாணியார்.

வள்ளுவர் குறள் தமிழில் தனிமுதல் அறநூலே.

-நாவலர் பாரதியார்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருவள்ளுவர் பக்கம்

Post by சிவா on Wed Mar 17, 2010 4:23 pm

உலகப் பெருஞ் சான்றோர்கள் உரைப்பன:

திருக்குறளை பற்றிச் சில செம்மொழிகள் உங்கள் வரவேற்பில் மிளிர்கின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன்னரே யான் தமிழ் பயிலத் தொடங்கியதற்குக் காரணம் திருக்குறள் மூலத்தையே நேராகப் படித்தல் வேண்டும் என்று உள்ளத்தில் எழுந்த ஆர்வமேயாம்.

-காந்தியடிகள்

வள்ளுவர் தம் குறளில் எளிய உயரிய வாழ்க்கையை இயல்பாகச் சிந்தித்துள்ளார். மாந்தன் தனக்குத்தானே செய்து கொள்ள வேண்டிய கடமைகள் உலகத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகள் முதலிய பலதரப்பட்ட கேள்விகளுக்கு வள்ளுவர் தரும் விடைகள் பெருந்தன்மையுடையன; அறிவுக்குப் பொருந்துவன. இத்தகைய உயரிய அறிவு நிறை முதுமொழிகளை உலக இலக்கியங்கள் எவற்றினும் காண இயலாது.

-ஆல்பர்ட்டு சுவைசர்.

திருக்குறளை நன்றாய்க் கற்பவர்களுக்கு வேறு கல்வி வேண்டியது இல்லை என்பது என் துணிவு. பேரறிஞர் மெக்காலே பிரவுவின் புத்தகக் களஞ்சியம் முழுவதையும் விட இவ்வியப்புக்குரிய நூல் ஒன்று மட்டும் சாலச் சிறந்தது என்றும், மாந்தர் இனத்திற்கு மிக நன்மை பயக்கக் கூடியது என்றும் எண்ணுகிறேன்.

தமிழர்களாகிய நாம் நம்முடைய பழந்தமிழ் நாகரிகத்தை எல்லாம் இழந்து வருவதாகப் பகர்கிறோம். பொருநை காவிரி முதலிய ஆறுகளையோ திருக்கோயில்களையோ அரண்மனைகளையோ பிற வளங்களையோ இழக்க நேர்ந்தாலும் திருக்குறளை இழக்க மாட்டோம்.

-எம். எசு. மைக்கேல்.

ஒரு பிரிவினர்க்கே உரிய கோட்பாடுகளைக் கொள்ளாது விலக்கி, உலகமக்கள் அனைவருக்கும் ஒருங்கே பொருந்தும் உண்மைகளையே தெரிந்தெடுத்துத் திருவள்ளுவர் மொழிந்துள்ளார். இவ்விரிந்த உணர்வால் மற்றை மனு முதலிய நூல்களில் கூறப்பெறும் கண்மூடித்தனம் எதுவும் இன்றி நூல் மேலோங்கித் திகழ்கின்றது.

-அறிஞர் துறு.

இன்பத்துப்பாலை அனைவரும் குற்றமற்ற முறையில் படித்து இன்புறுமாறு எழுதப்பட்டிருத்தல் பாராட்டத்தக்கது.

-போப் ஐயர்.

திருக்குறள் அமைப்பு வகையாலும் பாவகையாலும் வட மொழி தொடர்பு சிறிதும் இல்லாமல் தனித்தியங்கும் தனிப் பெருமையுடையது.

-இராபர்ட்டு கால்டுவெல்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருவள்ளுவர் பக்கம்

Post by சிவா on Wed Mar 17, 2010 4:23 pm

திருக்குறள் மேலும் விரிந்துரைக்க இயலாத கட்டுத்திட்ட அமைப்புடையது. அது சீரிய பளிங்குக்கல் பரப்பு. அதன் ஒரு சிறு கல்லின் அமைப்பிலோ வடிவிலோ வண்ணத்திலோ சிறியதொரு மாற்றம் செய்தாலும் அப்பரப்பின் முழுதுறு அழகும் பழுதுறும். குறள் தூய செந்தமிழால் இயன்றதொரு நூல். நல்லொழுக்கமே விளை நிலமாய் அமைந்த ஒரு நாட்டிலன்றி இத்தகைய நூல் தோன்றாது.

-முனைவர் இலாசரசு.

திருக்குறள் வழங்கும் செவ்விய இன்பம் இத்தகையது என்று எந்த மொழி பெயர்ப்பாலும் ஒரு சிறிதாயினும் கொடுக்க இயலாது. திருக்குறள் உண்மையாகவே வெள்ளியால் செய்யப்பெற்ற எழிற்பேழையில் இட்டு வைக்கப்பெற்ற பொன் ஆப்பிள் பழம் போன்றது ஆகும்.

-முனைவர் கிரெளல்.

ஒரு நாள் வழக்கப்படி திருக்குறள் படித்தபோது 'தாமின் புறுவதுலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்' எனக் குறள் ஒன்று தென்பட்டதும், இதைப் பார்த்தது தமிழர்கள் திருக்குறளைப் படித்துச் சுவைப்பதுபோல் உருசியக்காரர்களும் படித்துச் சுவைக்குமாறு ஏற்பாடு செய்யலாமா என்று நினைத்துக் கொண்டேன்.

-எம். அந்திரோனவ்.

திருக்குறளை ஓதி உணர்ந்தால் அல்லது எவனும் தமிழறிந்தவன் என்று கூறிக் கொள்ள முடியாது.

-பிரடெரிக்கு பின்கட்டு.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருவள்ளுவர் பக்கம்

Post by சிவா on Wed Mar 17, 2010 4:24 pm

வள்ளுவத்தின் வான்புகழ்

தால்சுதாய் 1906-இல் 'இந்து ஒருவருக்கு எழுதப்படும் கடிதம்' என்பதை எழுதியுள்ளார். அதில் திருக்குறளை 'இந்துக்களின் குறள் (The Hindu Kural) என்கிறார். அதில் தம் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்த திருக்குறட்பாக்கள் சிலவற்றை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அவை இன்னா செய்யாமை என்னும் அதிகாரத்தில் உள்ள குறட்பாக்கள் ஆகும். குறட்பாக்களைக் குறிப்பிடுவதுடன் விளக்கவுரையும் வரைகின்றார். இக்குறட்பாக்கள் தால்சுதாயின் இன்னாசெய்யாமை (அகிம்சை)க் கொள்கையை உருவாக்க உதவியுள்ளன. அறநெறியில் போராடுவதைப் பற்றிய அவருடைய சிந்தனைக்கு உரமாக அமைந்தன. தால்சுதாயின் இக் கடிதத்தினால்தான் காந்தியடிகள் திருக்குறளை அறிந்து கொண்டு, ஏரியல் என்பார் மொழி பெயர்த்த பிரெஞ்சு மொழி பெயர்ப்பு நூலைப் படித்து அதன் சிறப்புணர்ந்தார்.

"உறங்குவது போலும் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு"

என்னும் குறளைக் காட்டி "இதைவிடத் தெளிவாக இறப்பைப் பற்றிக் கூற இயலுமா?" என வினாவுகிறார்.

இங்கர்சால் என்னும் பகுத்றிவாளர் திருக்குறளிடத்துப் பேரீடுபாடு கொண்டு இருந்தார். திருவள்ளுவருடைய கட்டற்ற சிந்தனைப் போக்கும், அறிவை முதன்மையாகப் போற்றும் பண்பும் இங்கர்சாலின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தன.

"அறிவு அற்றம் காக்கும் கருவி" (321)

"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு" (453)

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு" (424)

என்னும் குறட்பாக்களை இங்கர்சால் அடிக்கடி மேற்கோளாகக் காட்டி எழுதியும் பேசியும் வந்துள்ளார்.

-சான்றோர் கண்ட திருவள்ளுவர் 328

"இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கு ஒன்றந்நோய் மருந்து"

என்னும் பாடலைச் செருமானிய அறிஞர்கால் கிரெளல் என்பவர் அறிந்தார். அதன் பொருள் ஆழத்திலும் கலை அழகிலும் ஈடுபட்டுத் திருக்குறளை முழுமையாகக் கற்றார். பின்னர் 1754-இல் செருமானிய மொழியிலும் 1856-இலத்தீன் மொழியிலும் திருக்குறளை மொழி பெயர்த்தார்.

உருசிய நாட்டுக் கிரெம்ளின் மாளிகையில் அமைந்துள்ள அணுத்துளையாச் சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள அரு நூல்களுள் ஒன்று திருக்குறள் ஆகும்.

விக்டோரியாப் பேரரசியார் தம் மறை நூலைப்போலப் போற்றி வைத்திருந்த நூல் திருக்குறள். காலையில் கண்விழித்ததும் கற்கும் நூலாகத் திருக்குறளைக் கொண்டு இருந்தார் என்பது அவரது பெருநிலைச் சான்றாவதுடன் திருக்குறளின் பெருமைச் சான்றுமாகும்.

இங்கிலாந்து நாட்டுக் காட்சிச்சாலையில் விவிலியத்துடன் வைத்துப் போற்றப்படும் திருநூல் திருக்குறள் ஆகும் என்பர்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருவள்ளுவர் பக்கம்

Post by சிவா on Wed Mar 17, 2010 4:25 pm

திருக்குறளால் தோன்றிய நூலகம்

தஞ்சைப் பகுதியை ஆட்சி செய்த சரபோசி மன்னர் ஒரு முறை காசிக்குச் சென்றார். அப்படியே கல்கத்தாவில் இருந்த அரசப் பேராளரைக் கண்டு மகிழ்ந்தார். அரசப் பேராளர் திருக்குறளை ஆங்கில மொழி பெயர்ப்பு வழியாகக் கற்றிருந்தவர். அதனால் தமிழ்ப் பகுதியில் ஆட்சி நடத்தும் சரபோசியின் வழியே திருக்குறளைப் பற்றி அறிய விரும்பினார்.

அதுவரை அதைப் பற்றி அறியாதிருந்த சரபோசி, "நான் ஊர் போய்ச் சேர்ந்ததும் அப்புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்" என்று விடை பெற்றுக் கொண்டார். அதன் பின்னரே தமிழ்ச் சுவடிகளைத் தொகுக்கத் தொடங்கினார். 'சரசுவதி மால்' என்னும் கலைக் கருவூலம் தோன்றுவதற்கு மூலமாக இருந்தது இத் தூண்டலேயாகும்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருவள்ளுவர் பக்கம்

Post by கலைவேந்தன் on Wed Mar 17, 2010 5:18 pm

திருக்குறளைப்பற்றி நாங்கள் அறிந்திடா பல தகவல்களைத் தொகுத்தளித்த சிவாவுக்கு தமிழ்வணக்கம்....! நன்றி சிவா..! [You must be registered and logged in to see this image.]

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: திருவள்ளுவர் பக்கம்

Post by Aathira on Fri Mar 26, 2010 7:50 am

இது எப்படி என் கண்களில் இத்தனை நாள் படாமல் இருந்தது என்று தெரியவில்லையே. இது போன்ற படைப்புகள் நம் ஈகரையை இலக்கிய தரமுள்ளதாகவும் ஆக்கும். இது வரை நான் அறியாத பல தகவல்களை அள்ளித்தந்த சிவாவுக்கு என் அன்னைத் தமிழ் சார்பில் நன்றி.

”இணையத் தெருவெங்கும் தமிழ் முழக்கம் முழங்கச் செய்வீர்”
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: திருவள்ளுவர் பக்கம்

Post by சிவா on Fri Mar 26, 2010 11:13 am

[You must be registered and logged in to see this link.] wrote:
”இணையத் தெருவெங்கும் தமிழ் முழக்கம் முழங்கச் செய்வீர்”
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருவள்ளுவர் பக்கம்

Post by எஸ்.அஸ்லி on Fri Mar 26, 2010 11:39 am

எனக்கும் தேவை படகூடிய ஒன்றுதான் அண்ணா தகவலை தந்ததுக்கு நன்றி
avatar
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1428
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: திருவள்ளுவர் பக்கம்

Post by தமிழ் on Fri Mar 26, 2010 11:42 am

அறியா தகவல்களை அறிய செய்தமைக்கு மிக்க நன்றி தோழர்
avatar
தமிழ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1153
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: திருவள்ளுவர் பக்கம்

Post by வேணு on Fri Mar 26, 2010 12:31 pm

வான் புகழ் வள்ளுவனை பற்றி நான் தெரிய சொன்னிர்கள் .........
நன்றி............
avatar
வேணு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 531
மதிப்பீடுகள் : 12

View user profile http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum