ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 ayyasamy ram

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

நன்றி
 SK

ஏங்குகிறது
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பெண்களை பயமுறுத்தும் 5 'டாப்' நோய்கள்! (கட்டுரை)

View previous topic View next topic Go down

பெண்களை பயமுறுத்தும் 5 'டாப்' நோய்கள்! (கட்டுரை)

Post by இளமாறன் on Sun Mar 28, 2010 10:31 pm

பெண்களை பயமுறுத்தும் 5 'டாப்' நோய்கள்! (கட்டுரை)








- சுபத்ரா நாராயணன்

வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தாலும், வீட்டில் இருக்கும் பெண்ணாக இருந்தாலும், ஒரு வீட்டில்
கணவனை விட, அதிகம் வேலை செய்வது பெண்கள் தான்.

அதுபோல, ஆண்களை விட, அதிக நோய்களுக்கு ஆட்படுவதும் பெண்கள்தான். இதனால், ஆண்களை விட, பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது முக்கியம். பெண்களைத் தாக்கும் நோய்களில், முக்கியமாக ஐந்து நோய்கள் தான் பெரும்பாலோரை பயமுறுத்துகின்றன.

அவை:

1. இதய நோய்.

2. மார்பக புற்றுநோய்.

3. ஆஸ்டோபோரோசிஸ் என்ற எலும்புகள் அப்பளமாக நொறுங்கும் நோய்.

4. டிப்ரஷன் என்ற சோர்வு நிலை.

5. ஆட்டோ இம்யூன் நோய்கள் என்ற நூற்றுக்கும் மேற்பட்ட துணை நோய்கள்.

1. இதய நோய்!

மாரடைப்புக்கு இலக்காவதில் ஆண்கள் தான் அதிகம் என்கிற தோற்றம் சமூகத்தில் உள்ளது. உண்மை யில், ஆண்களை விட, மாரடைப்பு, இதய நோய்க்கு ஆளாவதிலும், இறப் பதிலும் பெண்கள் தான்
அதிகம். பெண்களில் இறப்பதற்கு காரணமாக இருக்கும் நோய்களில், 29 சதவீதத்தை இதய
நோய்கள் ஆக்ரமிக்கின்றன.

இதற்கு காரணம், ஆண்களை போல பெண்களின் வாழ்க்கை முறையிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது தான். ஆண்களை போலவே, சிகரட் பிடிப்பது மட்டுமின்றி, பான் பராக் போன்ற புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் பெண்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

பெண்களுக்கு சுரப்பிகளின் செயல்பாடுகள் மிக முக்கியம். இப்படிப்பட்ட பழக்க வழக்க மாற்றங்களால், பெண்களின் சுரப்பிகளின் செயல் பாடும் மாறுகிறது. இதய நோய் வர இவையெல்லாம் முக்கிய காரணங்கள்.

2. மார்பக புற்றுநோய்!

பெண்களுக்கு பொதுவாக வரும் நோய்களில் முக்கியமான இரண்டாவது நோய் மார்பக புற்று நோய்; பெண்களை அதிகம் பலி வாங்கும் புற்றுநோய்களின் பட்டியலில் இது இரண்டாவதாக உள்ளது. இறுதி
மாதவிடாய்க்கு பின், பெண்கள் பலரும் குண்டாகி விடுகின்றனர்; அவர்களின் சுரப்பிகள் செயல்பாடு அதிகரிப்பதாலும், போது மான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதாலும் மார்பக புற்றுநோய் வருகிறது.

இதெல்லாம், பத்தாண்டுக்கு முன் இருந்த பெண்களின் நிலையை வைத்து நிர்ணயிக் கப்பட்டது. இப்போது, பெண்கள் சிலர் சிகரட், மதுவால் ஈர்க்கப்பட்டு, உணவு, வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம். எனவே, முப்பது வயதிற்கு பின்,
'மெமோகிராம்' பரிசோதனை செய்து, மார்பக புற்றுநோய் இருக்கிறதா என்று அறிந்து கொள்வது நல்லது. அதன் பின், ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்வது நல்லது. முப்பது வயதை நெருங்கும் போதே, மார்பகத்தை அழுத்திப் பார்த்தால் வலி தெரியும். அப்படி வலி இருந்தால் அதுவே முதல் அறிகுறி டாக்டரிடம் செல்ல வேண்டிய எச்சரிக்கை.

3. ஆஸ்டோபோரோசிஸ்!

பெண்களில் 68 சதவீதம் பேரை பாதிக்கும் எலும்பு பாதிப்பு நோய் இது; எலும்புகள் பலவீனம் அடைவதால்,
இவர்கள் தடுக்கி விழுந்தால் கூட, எலும்பு முறிவு சுலபமாக ஏற்படும்.

பெண்களுக்கு முப்பது வயது வரை தான் எலும்புகள் வளரும். அதன் பின், சாப்பிடும் உணவு வகைகளால்
தான் எலும்புகள் திடத்தன்மையை காக்க முடியும்.

பெண்களின் வேலை, மனஅழுத்தம், சோர்வு உட்பட பல காரணங்களால் எலும்பு தேய்மானம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால், குழந்தை பருவத்தில் இருந்தே எலும்பு பாதுகாப்புக்கு பெண்கள் தனி கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

வைட்டமின் 'டி' சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது. 65 வயதான பின், தடுக்கினாலும், எலும்பு முறிவு அடிக்கடி ஏற்படும்.

4. டிப்ரஷன்!

பல்வேறு, சூழ்நிலை காரணமாக, ஆணை விட, பெண்ணுக்கு தான் அதிக அளவில் சோர்வு, மன அழுத்தம் வருகிறது.

'எட்டில் ஒரு பெண் வீதம் மன அழுத்தம், சோர்வு இருக்கிறது' என்று, தேசிய மன சுகாதார
ஆராய்ச்சி மையம் கூறுகிறது.

எதற்கெடுத்தாலும் பதட்டம், கவலை, படபடப்பு போன்றவை தான் இதற்கு அறிகுறிகள். அதை தடுத்துக்கொள்ள வேண்டியது பெண்ணிடம் தான் உள்ளது.

டிப்ரஷனை வர விடாமல், மனதை சீராக வைத்துக் கொண்டால், இதய நோய் உட்பட மன அழுத்த நோய்களை வர விடாமல் தவிர்க்கலாம்.

5. ஆட்டோ இம்யூன் நோய்கள்!

உடலில் எதிர்ப்பு சக்திகள் குறைந்துவிட்டால், உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறையும்;
சுரப்பிகள் செயல்படுவதிலும் மாற்றம் ஏற்படும். பலவீனம் ஏற்படும்; உடலில் பலவீனம்
வந்துவிட்டாலே போதும், தொற்று நோய்கள் உட்பட பல நோய்கள் பெண்களை பாதிக்க வைக்ககாத்
திருக்கின்றன. இப் படிப்பட்ட நோய்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை உள்ளன; இவற்றில்,
ஆண்களை விட, பெண்களை தான் அதிகம் பாதிக்கின்றன என்கிறது உலக சுகாதார மையம்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பெண்களை பயமுறுத்தும் 5 'டாப்' நோய்கள்! (கட்டுரை)

Post by சிவா on Sun Mar 28, 2010 10:36 pm

பயனுள்ள கட்டுரை, பகிர்ந்தமைக்கு நன்றி இளா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum