ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மழைத்துளி
 பொற்கொடிமாதவன்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 SK

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 குழலோன்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சினிமாவை பற்றிய சில செய்திகள்

View previous topic View next topic Go down

சினிமாவை பற்றிய சில செய்திகள்

Post by mohan-தாஸ் on Tue Apr 06, 2010 10:30 am

பரத் போட்ட பிரேக்

பம்பரமாக சுழன்று‌க் கொண்டிருக்க வேண்டிய நேரம், பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு ஹாங்காங் சென்றிருக்கிறார் பரத். எதற்கு?

கோடை வந்துவிட்டதால் குளுகுளு ஏ‌ரியாவுக்கு வண்டியேறுவதை ஒரு பழக்கமாக கொண்டிருக்கிறார் பரத். இந்தமுறை அவர் சென்றிருப்பது ஹாங்காங். இந்த திடீர் பயணத்தால் அப்செட்டில் இருக்கிறாராம் பேரரசு.

திருத்தணி படத்தை முடித்து திரைக்கு கொண்டுவரும் அவரது எண்ணத்துக்கு ஸ்பீடு பிரேக் போட்டிருக்கிறது பரத்தின் ஹாங்காங் ட்‌ரிப். பேரரசு திருத்தணி படத்தை இயக்குவதுடன் இசையமைக்கும் வேலையையும் எடுத்துக் கொண்டிருக்கிறார். இவரது இசையில் விஜய டி.ஆர். பாடியிருக்கும் பாடல் திருத்தணியின் ஹைலைட்களில் ஒன்று.

இன்னும் ஓ‌ரிரு மாதங்களில் திருத்தணி திரைக்கு வருகிறது.
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: சினிமாவை பற்றிய சில செய்திகள்

Post by mohan-தாஸ் on Tue Apr 06, 2010 10:31 am

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஈழத்தமிழரின் தமிழ்ப்படம்

கனடியவாழ் ஈழத் தமிழர் சுரேஷ் ஜோக்கிம் 12 நாட்களில் தயாரித்து, நடித்த சிவப்பு மழை என்ற திரைப்படம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

கின்னஸ் புத்தக நிறுவனத்திடமிருந்து இதற்கான சான்றிதழ் சமீபத்தில் சிவப்பு மழை குழுவினருக்கு அனுப்பப்பட்டது.

இப்படத்தில், சுரேஷ் ஜோக்கிம், மீரா ஜாஸ்மின், இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பாளர் நெல்லை சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார். படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார்

1990ம் ஆண்டு பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று 13 நாள்களில் ஒரு படத்தை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது. ஆனால் சிவப்பு மழை படம் 12 நாட்களிலேயே அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இதன் மூலம் இந்தப் படம் பழைய சாதனையை முறியடித்துள்ளது.

ஈழப் போராட்டப் பின்னணியில் இந்தப் படம் உருவாக்கப்பட்டதால், இந்தியாவில், சென்சார் சான்றிதழ் பெறுவதில் பல போராட்டங்களை சிவப்பு மழை திரைப்படம் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: சினிமாவை பற்றிய சில செய்திகள்

Post by mohan-தாஸ் on Tue Apr 06, 2010 10:31 am

கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம்! தமன்னா கண்டனம்!!


கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்களுக்கு நடிகை தமன்னா கண்டனம் தெரிவித்துள்ளார். கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை தமன்னா, கல்லூரி, கண்டேன் காதலை, பையா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக திகழ்ந்து வரும் தமன்னாவுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அகில இந்திய தங்கப்பதுமை தமன்னா ரசிகர் மன்றம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் அந்த ரசிகர் மன்றம் விரைவில் மற்ற மாவட்டங்களிலும் தொடங்கப்பட இருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் தூத்துக்குடியில் பையா படம் ரீலிஸ் ஆன தியேட்டரில் தமன்னாவுக்கு 50 அடி உயர கட்-அவுட் வைத்த ரசிகர்கள், கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகமும் செய்து அசத்தியுள்ளனர்.

இதுபற்றி கேள்விப்பட்ட தமன்னா, தனது கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், தூத்துக்குடியில் எனது பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கி இருப்பது பற்றி என் கவனத்துக்கு இதுவரை வரவில்லை. என் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ததாக கேள்விப்பட்டேன். கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. கடவுளுக்கு இணையாக இதுபோல் பால் அபிஷேகம் செய்யும் காரியங்களை நான் எப்போதும் ஊக்கப்படுத்த மாட்‌டேன், என்று கூறியுள்ளார்.

ஹீரோ, ஹீரோயின்களின் கட்-அவுட்களுக்கு பால் அபிஷேகம், நடிகைகளுக்கு கோயில் என ரசிகர்கள் தங்களது பாசத்தை காலம் காலமாக காட்டி வந்தாலும் அதனை பெரும்பாலான நட்சத்திரங்கள் கண்டித்ததில்லை. ஆனால், இதுபோன்ற காரியங்கள் தவறு, அதனை நான் ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டேன் என்று தமன்னா கூறியிருப்பது அவரது பெருந்தன்மையையே காட்டுகிறது
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: சினிமாவை பற்றிய சில செய்திகள்

Post by mohan-தாஸ் on Tue Apr 06, 2010 10:32 am

விஜய்யின் அடுத்த படம் 'காவல்காரன்'!


இந்தப் பக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் படத் தலைப்புகளை தனுஷ் ரிசர்வ் செய்துவிட, அந்தப் பக்கம் புரட்சித் தலைவரின் படப் பெயர்களை விஜய் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்.

அவர் அடுத்த நடிக்கும் படத்துக்கு காவல்காரன் என்ற பெயரைச் சூட்டியுள்ளார். படப்பிடிப்பும் இன்று ஆரம்பித்துள்ளது.

குண்டடிபட்டு பேச முடியாமல் மருத்துவமனையிலிருந்த எம்ஜிஆர் மீண்டும் வருவாரா, படங்கள் நடிப்பாரா என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் விரைவில் குணமடைந்து முன்னிலும் வேகத்தோடு நடித்துக் கொடுத்த படம் காவல்காரன். பெரிய ஹிட்!

இந்தத் தலைப்பைத்தான் விஜய் தனது 51வது படத்துக்குப் பயன்படுத்தியுள்ளார்.

ஏற்கெனவே வேட்டைக்காரன் என்ற தலைப்பைப் பயன்படுத்தினார் விஜய். உரிமைக்குரல், மீனவ நண்பன், எங்கள் தங்கம் போன்ற படங்களின் பெயர்களையும் பதிவு செய்து வைத்துள்ளனர் விஜய்க்காக.

காவல்காரன் படத் தலைப்புக்காக சத்யா மூவீஸாருடன் பேசி அனுமதியும் வாங்கி விட்டனராம்.

மலையாளத்தில் வெளியான பாடிகார்டு படத்தின் தமிழாக்கம்தான் இந்த காவல்காரன். விஜய்க்கு இதில் ஜோடி அசின். இருவரும் இணையும் மூன்றாவது படம் இது.

வடிவேலு படம் முழுக்க விஜய்யுடன் வருகிறார். காரணம் அவருக்கு விஜய்யைக் கண்காணிக்கும் வேடமாம்!

ராஜ்கிரண் முதல் முறையாக விஜய்யுடன் நடிக்கிறார். படத்தில் இவரது மகளான அசினுக்குதான் பாடிகார்டாக வருகிறார் விஜய். மீதிக் கதையும் காட்சிகளும் உங்களுக்கே தெரிகிறதல்லவா...!
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: சினிமாவை பற்றிய சில செய்திகள்

Post by mohan-தாஸ் on Tue Apr 06, 2010 10:33 am

பிரசன்னாவின் புது முடிவுகள்


நோ நான்சென்ஸ் நடிகர்கள் என்று இரண்டு பேரை குறிப்பிட்டார் பிரகாஷ்ரா‌ஜ். ஒருவர் பிருத்விரா‌ஜ், இன்னொருவர் பிரசன்னா. எந்த வேடம் கொடுத்தாலும் மீட்டருக்கு மேலோ, கீழோ நடிக்காத ஒழுங்கு இவர்கள் இருவருக்கும் உண்டு.

மலையாளத்தில் பிருத்விரா‌ஜின் கொடி உயரப் பறக்கிறது. இவரது நடிப்பில் வெளிவந்திருக்கும் தாந்தோணி படம்தான் இப்போது மலையாளத்தின் சூப்பர்ஹிட். ஆனால், பிரசன்னா?

பிருத்விரா‌ஜ் அளவுக்கு நல்ல படங்கள் தமிழில் பிரசன்னாவுக்கு அமையவில்லை. இதன் காரணமாக சில முடிவுகள் எடுத்திருக்கிறறார்.

நல்ல கதையம்சம் உள்ள படத்தில் மட்டுமே நடிப்பது என்பது அதில் ஒன்று. தற்போது மிஷ்கின் உதவியாளர் இயக்கும் முரண் படத்தில் நடிக்கிறார். பிரசன்னா எதிர்பார்த்த எல்லா அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கிறதாம். அதனால் முரண் முடிந்த பிறகே அடுத்தப் படம் என தீர்மானித்துள்ளார்.

மூன்றாவது முடிவு, கௌரவ வேடங்களில் இனி நடிப்பதில்லை. கோவாவுக்குப் பிறகு எடுத்த முடிவாம் இது. ஹீரோக்களுக்கு பஞ்சம் என்று புலம்பும் இயக்குனர்கள் இந்த நல்ல நடிகரை ஏன் ஒதுக்குகிறார்கள் என்பதுதான் பு‌ரியாத புதிர்.
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: சினிமாவை பற்றிய சில செய்திகள்

Post by mohan-தாஸ் on Tue Apr 06, 2010 10:34 am

ஆண்ட்‌ரியாவின் குழந்தை ஆசை


ஆண்ட்‌ரியா திரைத்துறையில் நுழைந்தது பாடகியாக. கௌதம் மேனனின் கண்களுக்கு அவர் ஒரு நடிகையாக‌த் தெ‌ரிய, பச்சைக்கிளி முத்துச்சரத்தில் ஹீரோயினாக கிடைத்தது புரமோஷன். இப்போது அவர் பாடலாசி‌ரியரும் கூட.

மதராசப்பட்டினம் படத்தில் நா.முத்துக்குமார் எழுதிய தமிழ்ப் பாடலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார் ஆண்ட்‌ரியா. மதராசப்பட்டினத்தின் ஹீரோயின் ஆங்கில நடிகை என்பதால் பாடல் ஆங்கிலத்திலும் வருகிறது.

இத்துடன் முடியவில்லை, ஆண்ட்‌ரியாவின் அவதாரங்கள். விரைவில் ஒரு படத்தையும் இயக்கப் போகிறார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செல்வராகவனிடம் உதவி இயக்குனர் ரேஞ்சுக்கு பணியாற்றினாராம். அதில் வந்த தை‌ரியம்தான் இந்த படம் இயக்கும் ஐடியாவாம்.

தனது முதல் படம் குழந்தைகளை பற்றியதாக இருக்கும் எனவும் தெ‌ரிவித்துள்ளார் இந்த அழகான நடிகை. சிறப்பு ஆலோசகர் யார், செல்வராகவனா?
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: சினிமாவை பற்றிய சில செய்திகள்

Post by mohan-தாஸ் on Tue Apr 06, 2010 10:34 am

பிரதமர் வேடத்தில் நடிக்கப் போகிறார் நாசர்!


புதிதாக உருவாகி வரும் ஒரு படத்தில் நடிகர் நாசர் பிரதமர் வேடத்தில் நடிக்கப்போகிறார். மம்முட்டி - அர்ஜூன் இணைந்து நடிக்கும் புதிய படம் வந்தேமாதரம். இப்படத்தில் மம்முட்டி ஜோடியாக சினேகா நடிக்கிறார். அறுவடை என்ற பெயரில்தான் இப்படத்தின் சூட்டிங் தொடங்கப்பட்டது. பின்னர் என்ன ‌காரணத்தினாலோ படத்தின் பெயர் வந்தே மாதரம் என மாற்றப்பட்டது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்ட நிலையில், முக்கிய காட்சிகள் சிலவற்றை எடுக்க தாமதமானதால் படத்தை திரைக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. வந்தேமாதரம் படத்தில் இடம்பெறும் கேரக்டர்களில் முக்கியமானது பிரதமர் கேரக்டர். இந்த கேரக்டரில் நடிக்க பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை கேட்டிருந்த‌னர். தேதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் சூட்டிங்கை முடிக்க தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் வேடத்தில் நடிக்க நடிகர் நாசரை ஒப்பந்தம் செய்துள்ளது வந்தேமாதரம் குழு. நடிப்பு தவிர திரைக்கதை, வசனம், பாடலாசிரியர், பாடகர் உள்ளிட்ட பல அவதாரங்களை எடுத்து வெற்றி பெற்றிருக்கும் நாசர், கலைமாமணி உள்ளிட்ட ஏராளமான பட்டங்களையும், விருதுகளையும் பெற்றிருக்கிறார். ஏற்கனவே ஒரு படத்தில் முதல்வர் வேடத்தில் நடித்திருக்கும் நாசர், இப்போது பிரதமர் வேடத்தில் நடிக்கப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: சினிமாவை பற்றிய சில செய்திகள்

Post by mohan-தாஸ் on Tue Apr 06, 2010 10:35 am

பையா விமர்சனம்


பாதுகாப்பான பின் சீட்டை விட, பரபரப்பான முன் சீட் விரும்பிகளுக்காக எடுக்கப்பட்ட பயணப்படம் இது. காதல், மோதல் என்று வழக்கமான ரூட்தான் என்றாலும், எப்படா க்ளைமாக்ஸ் வரும் என்ற சலிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுக்கிற ஆசை வரணுமே, ம்ஹ¨ம்!

வழியிலே பார்த்த பெண்ணுக்காக குழியிலே கூட விழலாம் என்கிற அளவுக்கு லவ்வில் விழுந்து வைக்கிறார் கார்த்தி. அவரை மயக்கிய அந்த அழகான பெண் தமன்னா. அதென்னவோ தெரியவில்லை, இவர் போகும் இடத்துக்கெல்லாம் தமன்னாவும் வருகிறார் சொல்லி வைத்த மாதிரி. அப்படிதான் ரயில்வே ஸ்டேஷனிலும் ஒரு சந்திப்பு. உடன் வரும் ஆசாமி, கார்த்தியை டாக்சி டிரைவர் என்று நினைத்துக் கொண்டு "வண்டி சென்னை வருமா" என்று கேட்க, மனசுக்குள் ஹார்ன் அடிக்கிறது கார்த்திக்குக்கு. ஆனால், ஆசாமி எதற்காகவோ இறங்குகிற நேரம் பார்த்து "வண்டிய கிளப்பு" என்கிறார் தமன்னா. அவ்வளவுதான் விருட்டென்று 120 க்கு போகும் கார்த்தி, தமன்னாவின் விருப்பத்திற்கேற்ப மும்பை வரைக்கும் போகிறார் காரிலேயே. ஆசைப்பட்ட பெண் அருகில் இருந்தாலும், பயணம் என்னவோ பதற வைக்கிறது.

தமன்னாவை தேடி ஒரு கும்பலும், கார்த்தியை தேடி இன்னொரு கும்பலும் விரட்ட, இருவரையும் புஜபலத்தால் வென்று தமன்னாவை மும்பைக்கே கொண்டு சேர்க்கிறார் கார்த்தி. அப்போதும் கூட தன் காதலை சொல்லாத கார்த்தியிடம், எப்படி சேர்ந்தார் தமன்னா? முடிவு.

அவிழ்த்துவிட்ட காளையிடம், குடையை விரித்து காட்டிய மாதிரி ஒரு ஆக்ரோஷம் கார்த்தியிடம். அதே நேரத்தில் குணா கமல் மாதிரி தமன்னாவை காதலால் கசிந்துருகுவதும் அற்புதம். லிப்ட் கேட்கிற சாப்ஃட்வேர் ஆசாமியை வண்டியில் ஏற்றி, பின்பு காதலுக்கு வேட்டு வைப்பானோ என்று அஞ்சி நட்ட நடுவழியில் இறக்கிவிடுகிற காட்சியெல்லாம் கலகலப்பு. தமன்னாவுக்கு யார் மீதும் லவ் இல்லை என்கிற போது வண்டியின் ஸ்பீடா மீட்டர் எகிறுவதும், அடுத்த காட்சியிலேயே சொய்ங்ங் என்று கிழிறங்குவதுமாக கார்த்தியின் சேஷ்டைகளில் தியேட்டரை கலகலக்கிறது.

அவ்வப்போது வண்டியை நிறுத்தி இயற்கையை ரசிப்பதும், மழையில் நனைந்து ரசிகர்களை குளிர வைப்பதும்தான் தமன்னாவின் மெயின் நடிப்பாக இருக்கிறது. தேனும் தித்திப்பும் மாதிரி, இணைந்தே இருக்கிறது தமன்னாவும் கவர்ச்சியும். போதாதா? பேஸ்த் அடித்துப் போகிறது மொத்த தியேட்டரும்.

இடையிடையே வரும் தாதாக்களின் எபிசோடு, பல முறை ஷேவ் செய்யப்பட்ட பிளேடு. தமிழ்சினிமாவிலேயே தாதாக்கள் மாறி ரொம்ப வருஷம் ஆச்சுங்க சாரே... சண்டக்கோழி, ரன் என்று முந்தைய படங்களின் சாயலை விட முடியவில்லை லிங்குசாமியால். அவருக்கேயுரிய காதல் நகாசுகள் இந்த படத்தில் மிஸ்சிங். சண்டக்கோழியில் மீராஜாஸ்மினின் குறும்புகள் மறுபடியும் நினைவில் வந்து ஏங்க வைக்கிறதே சாமி...

பையனின் துள்ளாட்டம் யுவன்சங்கர் ராஜாவிடம்தான். பின்னணி இசை மிரட்டல் என்றால், பாடல்கள் எல்லாமே தாலாட்டு. அடடா மழை போன்ற மெலடிகளும், யுவனே பாடியிருக்கும் ஒரு சோகப்பாடலும் இந்த வருடத்தின் சூப்பர்ஹிட் வரிசையில்.

மயங்க வைத்த மற்றொருவர் ஒளிப்பதிவாளர் மதி. ஆக்ஷன் காட்சிகளில் அதிர வைக்கிற அதே கேமிரா, டூயட்டுகளில் அழகாகிவிடுகிறதே, அற்புதம். கார் சேசிங் காட்சிகளில் ஆங்கில படங்களை நினைவுபடுத்தியிருக்கிறார். எடிட்டர் ஆன்ட்டனியின் 'கட்டிங்'கும் கூட செம போதைதான்! விசாலமாக பயணிக்க முடியாமல் காருக்குள்ளேயே முடங்கிப் போனதால், பிருந்தாசாரதியின் பேனாவும் 'மூடி'யாகவே இருக்கிறது. கிடைத்த சந்தர்ப்பத்தில் அதையும் மீறி மனசுக்குள் 'இங்க்' தெளிக்கிறார் மனுஷன்.
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: சினிமாவை பற்றிய சில செய்திகள்

Post by mohan-தாஸ் on Tue Apr 06, 2010 10:36 am

சினிமா கேரி​ய​ரில் மறக்க முடி​யாத நபர் அஜித்


புல்​வெ​ளிப் பனித்​துளி,​ப்ளம் கேக்,​ஃபி​ரிட்​ஜில் வைத்த

ஐஸ்க்​ரீம்,​செர்​ரிப் பழம்....​ "அடியே கொல்​லுதே...'

என்று கொடிப்​பி​டித்து பாடத் தோன்​று​கி​றது.​

ஷமீரா ரெட்​டி​யைப் பார்த்​தால்...​

* அஜித்​து​டன் நடித்த அனு​ப​வம் எப்​படி?​ ​ ​

சினிமா கேரி​ய​ரில் மறக்க முடி​யாத நபர் அஜித்.​ அவ​ரி​டம் கற்​றுக்​கொள்ள வேண்​டிய விஷ​யங்​கள் நிறைய இருக்​கின்றன.​ ஷூட்​டிங் ஸ்பாட்​டில் மிக​வும் சிம்​பி​ளாக இருப்​பார்.​ அவ​ரைப் பார்த்து நான் சில விஷ​யங்​க​ளைக் கற்​றுக் கொண்​டேன்.​

""காற்றை நிறுத்​திக் கேளு...'' பாட​லுக்​காக நிறைய டிப்ஸ் கொடுத்​தார்.​ இந்​திய சினி​மா​வில் சில​ருக்​குத்​தான் "மாஸ்' இருக்​கி​றது.​ அதில் முக்​கி​ய​மான நபர் அஜித்.​ ஸ்டைல்,​​ பேச்சு,​​ குணம் என அனைத்​தி​லும் அவர் தனித்து இருக்​கி​றார்.​ என் வாழ்​வில் சந்​தித்த மிக​வும் புத்​து​ணர்ச்​சி​யான மனி​தர் அவர்.​ அவ​ரு​டன் நடிக்க இப்​போ​தும் ஆவ​லாக இருக்​கி​றேன்.​

* ரஜி​னி​யு​டன் நடிக்க விருப்​ப​மாமே?​ ​ ​

யாருக்​குத்​ தான் விருப்​பம் இல்லை?​ "ரஜி​னி​யு​டன் நடிக்க ஆசை இருக்​கி​றதா?​' என சில தொலைக்​காட்சி நிரு​பர்​கள் என்​னி​டம் கேட்​ட​னர்.​ "இருக்​கி​றது' என்​றேன்.​ அது பலித்​தால் அது​தான் என் திரை வாழ்க்​கை​யின் முக்​கி​ய​மான தரு​ணம்.​ இப்​போது ரஜினி நடிக்​கும் "எந்​தி​ரன்' திரைப்​ப​டத்தைப் பாலி​வுட் திரை​யு​ல​கம் பெரி​தும் எதிர்​பார்க்​கி​றது.​ நானும் அந்​தப் படத்தை பார்க்க ஆசை​யாக இருக்​கி​றேன்.​ படத்​தின் ஸ்டில்​க​ளைப் பார்த்​தேன் ரஜி​னி​யும்,​​ ஐஸ்​வர்​யா​வும் புது​சாய் இருக்​கி​றார்​கள்.​

* நீங்​கள் நடித்த ஹிந்தி படங்​களை விட,​​ மற்ற மொழிப் படங்​கள்​தான் ஹிட் ஆகு​தாமே?​ ​ ​

அப்​பவே சொன்​னாங்க...​ சென்னை மீடி​யாக்​க​ளி​டம் ஜாக்​கி​ர​தை​யாக இருக்​க​ணும்னு!​ இது​வ​ரைக்​கும் ஹிந்​தி​யை​யும் சேர்த்து மூன்று மொழி​க​ளில் நடித்​தி​ருக்​கி​றேன்.​ இந்​தி​யா​வில் இன்​னும் எத்​த​னையோ மொழி​கள் இருக்கு.​ ஷமீ​ரா​வின் சேவை எல்லா மொழி​க​ளுக்​கும் தேவை.​ இன்​னும் சில மொழி​க​ளில் நடித்த பிறகு இந்த "கம்ப்​ளெய்ன்ட்'டைச் சொல்​லுங்க..​ அப்​போது பதில் சொல்​கி​றேன்!​

இப் ​போ​தைக்கு மூன்று மொழி​க​ளில் நடிக்​கி​றேன்.​ சில சினி​மாக்​கள் ஜெயிக்​கி​ன்றன.​ ஹிந்தி சினிமா நன்​றாக இருக்​கி​றது.​ சில மொழி ரசி​கர்​க​ளுக்கு நான் புது​சா​கத் தெரி​கி​றேன்.​ கொஞ்ச நாள் போனால் நானும் ரசி​கர்​க​ளுக்​குப் பழ​சா​கத் தெரி​வேன்.​ இது​தானே உண்மை?​!​

* அடுத்து தமி​ழில் நடிப்​பது எப்​போது?​ ​

இப்​போ​து​தான் அஜித்​து​டன் ஒரு பெரிய படத்தை முடித்​தி​ருக்​கி​றேன்.​ அடுத்து கௌ​தம் சார் ஒரு படம் பண்​ண​லாம்னு சொல்​லி​யி​ருக்​கி​றார்.​ நிச்​ச​யம் தமி​ழி​லும் சாதிப்​பேன்.​ பாலி​வுட்​டில் இருப்​ப​வர்​கள் தமிழ் சினி​மா​வைப் பெரி​தும் ரசிக்​கி​றார்​கள்,​​ புகழ்​கி​றார்​கள்.​ அப்​ப​டிப்​பட்ட தமிழ் சினி​மா​வில் நடிப்​பது சந்​தோ​ஷம்​தான்.​

* பொது விழாக்​க​ளில் கவர்ச்​சி​யான ஆடை அணி​வ​தாக உங்​கள் மீது ஒரு குற்​றச்​சாட்டு இருக்​கி​றதே?​

சில மீடி​யாக்​கள் அப்​ப​டிச் சொல்​கின்​றன.​ எல்லா இடங்​க​ளி​லும் ஒரே மாதி​ரி​யா​கத்​தான் டிரெஸ் அணி​கி​றேன்.​ சினிமா,​​ ஃபங்​ஷன் எனப் பிரித்​துப் பார்ப்​ப​தில்லை.​ டிரெஸ் அணி​வது என் தனிப்​பட்ட விஷ​யம்.​ அதைப் பெரி​தாக எடுத்​துக்​கொள்​ள​வேண்​டாம்.​

* சரி,​​ "லவ் கிரா​ஃப்' எப்​ப​டி​யி​ருக்​கி​றது?​ ​

சினி​மா​வுக்கு அடுத்து என் லவ்...​ வீடியோ கேம்ஸ்.​ தமி​ழுக்கு இப்​போ​து​தான் வந்​தி​ருக்​கி​றேன்.​ இந்​தக் காதல் கிசு​கி​சு​வெல்​லாம் அடுத்த பேட்​டி​யில் வெச்​சுக்​க​லாமே.​
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: சினிமாவை பற்றிய சில செய்திகள்

Post by mohan-தாஸ் on Tue Apr 06, 2010 10:36 am

விஜய் கலந்து கலக்கிய பையா பிரீமியர் ஷோ


நேற்று முன் தினம், சத்யம் தியேட்டரில் திரையிடப்பட்ட 'பையா' திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் சத்யம் தியேட்டரில் காண்பிக்கப்பட்டன.லிங்கு சாமி இயக்கத்தில், லுங்கியில் இருந்து பேண்ட், டீஷார்ட்டிற்கு அதிரடியாக மாறி நடித்துள்ள கார்த்தியின் மூன்றாவது திரைப்படமென்பதால், படத்தை பற்றி பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது படக்குழு! மீடியாக்களிடம் அதிகம் பிடிபடாத சங்கீதாவும், விஜய்யுடன் இணைந்து வந்திருக்க, சிபிராஜ் ரேவதி தம்பதியினரும், வெங்கட் பிரபு, ப்ரேம்ஜி, ஜெய், பார்த்தீபன், விவேக் என பெரியவொரு நடிகர் பட்டாளமே படம் பார்க்க வந்திருந்தது.


'லிங்கு சாமி, கார்த்தி, தமனா அனைவரும் எனது நண்பர்கள் என்ற வகையில், இந்நிகழ்வுக்கு வந்ததில் பெருமைப்படுவதாக கூறினார் விஜய்! படத்தின் நட்சத்திர திறப்பு விழாவுக்கு, இப்படி அநேக நட்சத்திரங்கள் நேரடியாக வந்து கலந்துகொண்டதால் மகிழ்ச்சியில் இருக்கும் லிங்கு சாமி, நாளை முதல், இரயில்களிலும் பஸ்களிலும், இப்பட விளம்பரத்தினை மேற்கொள்ளப்போகிறாராம்!
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: சினிமாவை பற்றிய சில செய்திகள்

Post by mohan-தாஸ் on Tue Apr 06, 2010 10:49 am

தெலுங்கு சந்திரமுகியில் அனுஷ்கா
‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தெலுங்கில் இயக்குகிறார் பி.வாசு. இதில் வெங்கடேஷ் ஹீரோ. சந்திரமுகி வேடத்துக்கு இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவிடம் பேசினர்.

கால்ஷீட் பிரச்னையால் அவர் நடிக்கவில்லை. இதனால் அனுஷ்கா நடிக்கிறார். அவர் தவிர, கமாலினி முகர்ஜி, ஸ்ரத்தா தாஸ், பூனம் கவுர், ரிச்சா கங்கோபாத்யாய ஆகியோரும் நடிக்கின்றனர். அடுத்த மாதம் இதன் ஷூட்டிங் தொடங்குகிறது
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: சினிமாவை பற்றிய சில செய்திகள்

Post by ரிபாஸ் on Tue Apr 06, 2010 10:50 am

சூப்பர் தாஸ் ஜி நம்ம ஆளு சூப்பர்லெ
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: சினிமாவை பற்றிய சில செய்திகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum