ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 ayyasamy ram

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

நன்றி
 SK

ஏங்குகிறது
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார்

View previous topic View next topic Go down

வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார்

Post by சம்சுதீன் on Thu Apr 08, 2010 3:08 am

வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார்மதுரை : வைட்டமின் மாத்திரைகளை உட்கொள்ளும் கர்ப்பிணிகள், குறிப்பிட்ட பேட்ச் எண்ணுடைய மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது என, மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் எச்சரித்துள்ளது.

சென்னையில் காலாவதி மருந்துகளை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்த கோயம்பேடு 'மீனா ஹெல்த் கேர்' என்ற மருந்து ஏஜன்சியைச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிறுவனம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு காலாவதியான மருந்துகளை அனுப்பியதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, மதுரையில் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் கோவிந்தகுமார் தலைமையில் மருந்து ஆய்வாளர்கள், அனைத்து மருந்து கடைகளிலும், மொத்த விற்பனையாளர்கள் கிடங்குகளிலும் சோதனையிட்டனர். காலாவதியான மருந்துகள் எதுவும் சிக்கவில்லை.

அதிகாரி ஒருவர் கூறியதாவது: மீனா ஹெல்த் கேர் நிறுவனத்திடமிருந்து மதுரைக்கு காலாவதியான மருந்துகள் அனுப்பப்படவில்லை. இருப்பினும், சந்தேகத்தின் அடிப்படையில் மருந்து கடைகளில் சோதனை செய்தோம். கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படும் வைட்டமின் மாத்திரை (பேட்ச் எண் 720/ 5795) காலாவதியானவை என சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பேட்ச் எண் கொண்ட மாத்திரைகளை மட்டும் கர்ப்பிணிகள் வாங்காமல் இருப்பது நல்லது. அதற்கு பதில், வேறு மாத்திரைகளை டாக்டர் அறிவுரைப்படி உட்கொள்ளலாம். மேலும், கோவையில் இருந்து மதுரைக்கு சப்ளை செய்யப்பட்ட இருமல் மருந்து (பேட்ச் எண் 0911091) தரமற்றதாக இருக்கலாம் என, எங்களுக்கு புகார் வந்தது. மொத்த மருந்து விற்பனையாளரிடம் இருந்த 100 பாட்டில்களை பறிமுதல் செய்து, ஆய்வுக்காக அனுப்பியுள்ளோம். ஆய்விற்கு பிறகு தான் முழுமையாக தெரியும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
காலாவதியான மருந்துகள் எவை? காலாவதி மருந்துகள் என போலீசார் தரப்பில் கைப்பற்றப்பட்டுள்ள மருந்துகளில் பெரும்பான்மை, நரம்பு சம்பந்தமான வியாதிகளுக்கான மருந்துகள், மல்டி விட்டமின் மாத்திரைகள், வயிற்றுக் கோளாறுகளை சரி செய்யும் மருந்துகள் மற்றும் பெண்களின் மாதவிடாய் மற்றும் கர்ப்ப கால பிரச்னைகள் தொடர்பானவை என கூறப்படுகிறது. இதில், ஜினடேக், ரினர்வ் பிளஸ், ரினர்வ் - ஜி 100, ஹோமோ - 16, கோடர்ன், ரினர்வ்லிவ், போல்டைஸ், பேன்தம் - டிஎஸ்ஆர், ஆர் - டிஎஸ்ஆர், ஜிபர் - எக்ஸ்டி சிரப் , ரினர்வ் - பிடி காப்சூல்கள், காக்னிக்ஸ் - பிடி சிரப், செட்னால் சிரப் மற்றும் அமாக்சலின் உள்ளிட்ட மருந்துகள் உள்ளன. குறிப்பாக, இவ்வாறு காலாவதியான மருந்துகள் மீண்டும் விற்பனை செய்யப்படுவதில், அதிகளவு விலை உயர்ந்த மருந்துகள் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. பொதுவாக, மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து, ஸ்டாக்கிஸ்ட்கள் மருந்துகளை பெற்று மருந்து கடைகளுக்கு அளிக்கின்றனர். இவ்வாறு அளிக்கப்படும் மருந்துகள் காலாவதி ஆகிவிட்டால், மீண்டும் ஸ்டாக்கிஸ்ட்கள் 35 சதவீதம் விலையை குறைத்து எடுப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு எடுக்கப்படும் மருந்துகள் மீண்டும் உண்மையான விலையிலேயே விற்கப்படும் போது, அவர்களுக்கு முதலீடில்லாமல் நிறைந்த லாபம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

குப்பை கொட்டுமிடங்களில் கண்காணிப்பு: காலாவதியான மருந்துகளை விற்பனைக்கு அனுப்பியவர்களை கைது செய்வது குறித்து சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: காலாவதி மருந்துகளை விற்பனைக்கு அனுப்பியது தொடர்பாக ஏழு பேரை கைது செய்துள்ளோம். மீதமுள்ள ஏழு பேரில் சஞ்சய்குமார், சேகர், பாஸ்கரன், பிரதீப் ஜோர்டியா, மீனாட்சி சுந்தரம் மற்றும் வெங்கடேசன் ஆகிய ஆறு பேர், முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் இன்று (நேற்று) தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. தலைமறைவாக உள்ள இவர்களை பிடிக்க, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் அவர்கள் பிடிக்கப்படுவர். காலாவதியான மருந்துகள் கொட்டப்படும் குப்பை கொட்டுமிடங்களில் இருந்து மருந்துகள் மீண்டும் எடுக்கப்படாமல் இருக்க, அவை முறையாக அழிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.
avatar
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8220
மதிப்பீடுகள் : 21

View user profile http://shams.eegarai.info/

Back to top Go down

Re: வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார்

Post by Aathira on Thu Apr 08, 2010 9:26 am

அறிய வேண்டிய நல்ல தகவல் சம்ஸ். பலர் மாத்திரைகளை வாங்கியவுடன் அதன் சாதகம் எதுவும் பார்க்காமல் முழுங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன்ர். இது போன்ற நபர்களுக்கு இக்கட்டுரை மிகுந்த பயனளிக்கும்...நன்றி...


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார்

Post by ஹனி on Thu Apr 08, 2010 11:09 am

@Aathira wrote:அறிய வேண்டிய நல்ல தகவல் சம்ஸ். பலர் மாத்திரைகளை வாங்கியவுடன் அதன் சாதகம் எதுவும் பார்க்காமல் முழுங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன்ர். இது போன்ற நபர்களுக்கு இக்கட்டுரை மிகுந்த பயனளிக்கும்...நன்றி...
சியர்ஸ் சியர்ஸ்
avatar
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2571
மதிப்பீடுகள் : 30

View user profile

Back to top Go down

Re: வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார்

Post by சபீர் on Thu Apr 08, 2010 12:05 pm

அறிய அருமையான தகவல் நன்றி நன்றி
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum