|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்by கேசவன் Today at 9:42
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by முரளிராஜா Today at 8:27
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by யினியவன் Today at 2:27
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 22:53
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 22:45
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 21:56
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 21:30
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 21:20
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 21:16
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 20:48
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 20:42
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 20:06
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 19:56
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 19:49
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 19:43
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 18:59
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 18:48
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 18:47
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 18:13
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Yesterday at 17:41
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கலைவேந்தனின் - மீராவின் முக்தி...நிறைவுப்பகுதி..!
Page 1 of 12 • Share •
Page 1 of 12 • 1, 2, 3 ... 10, 11, 12 
கலைவேந்தனின் - மீராவின் முக்தி...நிறைவுப்பகுதி..!
[You must be registered and logged in to see this image.]
கலைவேந்தனின்.....மீராவின் கண்ணன்!
1.
ஒருநாள் உன்னோடு வாழ்ந்தாலே போதும்..
ஓராயிரம் சொர்க்கம் ஒன்றாகச் சேரும்!
மீராவின் குரல்கேட்டும் வாராத தேனோ
சீராட்டி நீயென் குழல்கோது கண்ணா!
2.
என்றாவது உன்னுள் கலந்திடத் தானே
என்றன் உயிரைக் கையகம் வைத்தேன்
இன்றோ நாளையோ இடறாமல் நீயும்
நன்றே வந்து நகையாட்டு கண்ணா!
3.
நீயாகப் பேசாமல் புன்னகைத் தாலும்
ஓயாமல் உன்னைப் பாராட்டு வேனே
வாயாற நீயும் வாழ்த்திடு வாயே
சேயாக என்னை சீராட்டு கண்ணா!
4.
துயிலாடும் போதென் துகிலாடு மென்று
துயர்காத்து உன்னைத் தருவாயென் றெண்ணி
துயில்துறந் தென்றும்உன் வழிபார்த்து நின்றேன்
தூயவனே எனைக் காத்திடு கண்ணா!
5.
தீராமல் விளையாடி ஓயாத உன்னை
சேராமல் எங்ஙனம் நான்வாடி நிற்பேன்?
ஓராயிரம் முறை உன் நாமம் சொல்வேன்
பாராமுகம் ஏனோ பார்த்திடு கண்ணா!
6.
பூதகி மார்பில் பூவிதழ் பதித்தாய்
சாதலின் மூலம் சாபமும் தீர்த்தாய்
ஓதிட ஓதிட உன்நாமம் இனிக்கும்
வேதத்தின் மூலனே வேய்ங்குழல் கண்ணா!
7.
பார்த்தனின் மயக்கம் தெளிவித் தவனே
தேர்தனை வலித்து தேர்வித தவனே
ஓர்முறை யேனும் என்னரு கில்வா
மார்பகம் புதைந்துன் மனம்மகிழ கண்ணா!
8.
பூவிதழ் உந்தன் பூமணம் காண
தாவியுன் செவ்விதழ் சுவைத்திட ஏங்கும்
பாவியென் பாவம் தொலைத்தெனை ஏந்தியே
ஓவிய மாயுறைந் திடவா கண்ணா!
9.
உந்தன் ஓர்முத்தம் பெறவேண்டி நானும்
எந்தன் ஓர்ஜென்மம் நானும் இழப்பேனே கண்ணா!
சிந்தும் ஓர்முத்து இதழமுதம் என்றும்
எந்தன் ஓராயுள் வரைதன்னில் காத்திருக்கும் கண்ணா!
தொடரும்....
கலைவேந்தனின்.....மீராவின் கண்ணன்!
1.
ஒருநாள் உன்னோடு வாழ்ந்தாலே போதும்..
ஓராயிரம் சொர்க்கம் ஒன்றாகச் சேரும்!
மீராவின் குரல்கேட்டும் வாராத தேனோ
சீராட்டி நீயென் குழல்கோது கண்ணா!
2.
என்றாவது உன்னுள் கலந்திடத் தானே
என்றன் உயிரைக் கையகம் வைத்தேன்
இன்றோ நாளையோ இடறாமல் நீயும்
நன்றே வந்து நகையாட்டு கண்ணா!
3.
நீயாகப் பேசாமல் புன்னகைத் தாலும்
ஓயாமல் உன்னைப் பாராட்டு வேனே
வாயாற நீயும் வாழ்த்திடு வாயே
சேயாக என்னை சீராட்டு கண்ணா!
4.
துயிலாடும் போதென் துகிலாடு மென்று
துயர்காத்து உன்னைத் தருவாயென் றெண்ணி
துயில்துறந் தென்றும்உன் வழிபார்த்து நின்றேன்
தூயவனே எனைக் காத்திடு கண்ணா!
5.
தீராமல் விளையாடி ஓயாத உன்னை
சேராமல் எங்ஙனம் நான்வாடி நிற்பேன்?
ஓராயிரம் முறை உன் நாமம் சொல்வேன்
பாராமுகம் ஏனோ பார்த்திடு கண்ணா!
6.
பூதகி மார்பில் பூவிதழ் பதித்தாய்
சாதலின் மூலம் சாபமும் தீர்த்தாய்
ஓதிட ஓதிட உன்நாமம் இனிக்கும்
வேதத்தின் மூலனே வேய்ங்குழல் கண்ணா!
7.
பார்த்தனின் மயக்கம் தெளிவித் தவனே
தேர்தனை வலித்து தேர்வித தவனே
ஓர்முறை யேனும் என்னரு கில்வா
மார்பகம் புதைந்துன் மனம்மகிழ கண்ணா!
8.
பூவிதழ் உந்தன் பூமணம் காண
தாவியுன் செவ்விதழ் சுவைத்திட ஏங்கும்
பாவியென் பாவம் தொலைத்தெனை ஏந்தியே
ஓவிய மாயுறைந் திடவா கண்ணா!
9.
உந்தன் ஓர்முத்தம் பெறவேண்டி நானும்
எந்தன் ஓர்ஜென்மம் நானும் இழப்பேனே கண்ணா!
சிந்தும் ஓர்முத்து இதழமுதம் என்றும்
எந்தன் ஓராயுள் வரைதன்னில் காத்திருக்கும் கண்ணா!
தொடரும்....
Last edited by கலை on Fri 21 May - 14:34; edited 12 times in total
Re: கலைவேந்தனின் - மீராவின் முக்தி...நிறைவுப்பகுதி..!
படித்தது என்றாலும் படிக்குந்தோறும் புதுமையாகப் பொலிவு தரும் மீராவின் காதல் ரசம். அதை இங்கு பதிவதற்கு மிக்க நன்றி கலை. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
Re: கலைவேந்தனின் - மீராவின் முக்தி...நிறைவுப்பகுதி..!
அனைத்தும் அழகான அருமையான முத்தான வரிகள் நன்றி சார் உங்கள் அடுத்த தொடரை மிக விரைவிலே எதிபார்கிறேன்
Re: கலைவேந்தனின் - மீராவின் முக்தி...நிறைவுப்பகுதி..!
Aathira wrote:படித்தது என்றாலும் படிக்குந்தோறும் புதுமையாகப் பொலிவு தரும் மீராவின் காதல் ரசம். அதை இங்கு பதிவதற்கு மிக்க நன்றி கலை. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
நன்றி ஆதிரா...!
Re: கலைவேந்தனின் - மீராவின் முக்தி...நிறைவுப்பகுதி..!
அருமையாக உள்ளது அண்ணா உங்கள் திறமையில் மீதி உண்டெங்கிள் அடியேனுக்கு பகிரக்கூடாதா அண்ணா. வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: கலைவேந்தனின் - மீராவின் முக்தி...நிறைவுப்பகுதி..!
சபீர் wrote:அனைத்தும் அழகான அருமையான முத்தான வரிகள் நன்றி சார் உங்கள் அடுத்த தொடரை மிக விரைவிலே எதிபார்கிறேன்
மிக்க நன்றி சபீர்,,,! [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
Re: கலைவேந்தனின் - மீராவின் முக்தி...நிறைவுப்பகுதி..!
அப்புகுட்டி wrote:அருமையாக உள்ளது அண்ணா உங்கள் திறமையில் மீதி உண்டெங்கிள் அடியேனுக்கு பகிரக்கூடாதா அண்ணா. வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
உங்களுக்கு கிடைத்த குரு சற்றும் குறைந்தவர் இல்லை அப்பு...நீங்கள் பயிலும் பாடம் உங்கள்கவிதைகளில் பிரதிபலிக்கின்றதே... நன்றி அப்பு தம்பி...! [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
Re: கலைவேந்தனின் - மீராவின் முக்தி...நிறைவுப்பகுதி..!
கலை wrote:அப்புகுட்டி wrote:அருமையாக உள்ளது அண்ணா உங்கள் திறமையில் மீதி உண்டெங்கிள் அடியேனுக்கு பகிரக்கூடாதா அண்ணா. வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
உங்களுக்கு கிடைத்த குரு சற்றும் குறைந்தவர் இல்லை அப்பு...நீங்கள் பயிலும் பாடம் உங்கள்கவிதைகளில் பிரதிபலிக்கின்றதே... நன்றி அப்பு தம்பி...! [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />


அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: கலைவேந்தனின் - மீராவின் முக்தி...நிறைவுப்பகுதி..!
தமிழ் வார்த்தைகளுக்கு இவ்வளவு அழகா என வியக்கும் வகையில், ஒவ்வொரு வரியிலும் அழகாக தொடுத்த மலர்மாலை போல் தமிழ் வார்த்தைகள் காதல் ரசம் சொட்ட கவி பாடியுள்ளது!

பதிவுகள்: 790029 | உறுப்பினர்கள்: 15362 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: sluxtpr
[You must be registered and logged in to see this link.]
Re: கலைவேந்தனின் - மீராவின் முக்தி...நிறைவுப்பகுதி..!
அழகான பக்தி காதல் ...... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
துயிலாடும் போதென் துகிலாடு
மென்று
துயர்காத்து உன்னைத் தருவாயென் றெண்ணி
துயில்துறந்
தென்றும்உன் வழிபார்த்து நின்றேன்
தூயவனே எனைக் காத்திடு கண்ணா!
அருமையான வரிகள் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
துயிலாடும் போதென் துகிலாடு
மென்று
துயர்காத்து உன்னைத் தருவாயென் றெண்ணி
துயில்துறந்
தென்றும்உன் வழிபார்த்து நின்றேன்
தூயவனே எனைக் காத்திடு கண்ணா!
அருமையான வரிகள் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: கலைவேந்தனின் - மீராவின் முக்தி...நிறைவுப்பகுதி..!
கண்ணன் மீது கொண்ட காதலை மீரா சொல்லும் தமிழ்,காதலையும்,தாபத்தையும்,மீறாமல்,சொல்லும் அழகு அருமை .தமிழோடு வாழும் நிலைமை ,இந்த கவிதை தரும் இனிமை.பாராட்டுக்கள் தோழரே.இன்னும் படிக்க.... வரும் கவிதைக்கு கண்கள் ஏங்குது...

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: கலைவேந்தனின் - மீராவின் முக்தி...நிறைவுப்பகுதி..!
சிவா wrote:தமிழ் வார்த்தைகளுக்கு இவ்வளவு அழகா என வியக்கும் வகையில், ஒவ்வொரு வரியிலும் அழகாக தொடுத்த மலர்மாலை போல் தமிழ் வார்த்தைகள் காதல் ரசம் சொட்ட கவி பாடியுள்ளது!
மிக்க நன்றி சிவா... [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
Re: கலைவேந்தனின் - மீராவின் முக்தி...நிறைவுப்பகுதி..!
இளமாறன் wrote:அழகான பக்தி காதல் ...... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
துயிலாடும் போதென் துகிலாடு
மென்று
துயர்காத்து உன்னைத் தருவாயென் றெண்ணி
துயில்துறந்
தென்றும்உன் வழிபார்த்து நின்றேன்
தூயவனே எனைக் காத்திடு கண்ணா!
அருமையான வரிகள் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
நான் எழுதியபின் மிகவும் ரசித்த வரிகள் அவை இளா...நன்றி இளவலே...! [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
Re: கலைவேந்தனின் - மீராவின் முக்தி...நிறைவுப்பகுதி..!
kalaimoon70 wrote:கண்ணன் மீது கொண்ட காதலை மீரா சொல்லும் தமிழ்,காதலையும்,தாபத்தையும்,மீறாமல்,சொல்லும் அழகு அருமை .தமிழோடு வாழும் நிலைமை ,இந்த கவிதை தரும் இனிமை.பாராட்டுக்கள் தோழரே.இன்னும் படிக்க.... வரும் கவிதைக்கு கண்கள் ஏங்குது...
மிக்க நன்றி தோழரே,,,இன்னும் சுவைக்க சற்று நேரத்தில் இரண்டாம் பகுதி இடுகிறேன் நண்பரே.... [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
மீராவின் கண்ணன் - இரண்டாம் பகுதி..!
[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
10.
கண்ணாடி முன்நின்று பார்த்தே உன்னைப்
பெண்ணாக நான் மாற்றினேனே! நானும்
நீயாக மாறித்தான் போனேன் என்றும்
சேயாக என்னோடு வாழாயோ கண்ணா!
11.
ஆயர் பாடியில் வாழ்ந்திட்ட போதும்
மாயப் போர்வைகள் போர்த்திட்டபோதும்
வேயப் புல்லாங் குழலூதும் போதும்
தூயன் உன்மீதென் காதலென்றுமே கண்ணா!
12.
உலகமே என்னைக் கூறுஇட்ட போதும்
கலகமே செய்தென்னைக் கொன்றிட்டபோதும்
விலகவே சொல்லியே விலங்கிட்டபோதும்
நிலைமாற மாட்டேனே நீங்கேனே கண்ணா!
13.
என்மேனி காத்தது பசலை என்றும்
உன்மேனி தழுவவே உருகினேன் என்னை
தின்னாலும் மண்ணுக்கு தரமாட்டேன் உயிரை
உன்னுடைமை என்றுமே என்னுயிர் கண்ணா!
14.
காதலர் என்றே பலபேரும் சொல்லியே
பாதக காமமே கலந்திட வந்தார்
சோதனை என்றே எத்தனை வந்திடினும்
நாதனே உன்சரண் அடைவேனே கண்ணா!
15.
கட்டாய மென்னுடன் புரிந்திட்ட போதிலும்
சுட்டாலும் என்மேனி பட்டாலும் புண்பல
விட்டாலும் சிறையில் ஏறுடன் தனித்துமே
தட்டாமல் உன்னுடனே கலப்பேனே கண்ணா!
16.
வேதமே மூலமாம் சான்றோர்க்கு என்றென்றும்
சாதமே தெய்வமாம் ஏழைகளுக் கென்றென்றும்
பாதமே கடவுளின் பகதருக் கென்றென்றும்
நாதனே நீயேஎனக் கென்றென்றும் கண்ணா!
17.
தலைசீவிப் பூச்சூட்டும் போதும் மாய
நிலைகாட்டும் கண்ணாடி முன்நின்ற போதும்
குலையாமல் உடையணியும் போதும் உந்தன்
விலையிலா மெய்க்காதல் உணர்கிறேன் கண்ணா!
18.
நடக்கின்ற போதும்உன் நினைவு மஞ்சத்தில்
கிடக்கின்ற போதும்உன் உணர்வு உணவு
படைக்கின்ற போதும்உன் கனவு மரணம்
கிடைக்கின்ற போதும்உன் நினைவுதான் கண்ணா!
தொடர்வேன்...
10.
கண்ணாடி முன்நின்று பார்த்தே உன்னைப்
பெண்ணாக நான் மாற்றினேனே! நானும்
நீயாக மாறித்தான் போனேன் என்றும்
சேயாக என்னோடு வாழாயோ கண்ணா!
11.
ஆயர் பாடியில் வாழ்ந்திட்ட போதும்
மாயப் போர்வைகள் போர்த்திட்டபோதும்
வேயப் புல்லாங் குழலூதும் போதும்
தூயன் உன்மீதென் காதலென்றுமே கண்ணா!
12.
உலகமே என்னைக் கூறுஇட்ட போதும்
கலகமே செய்தென்னைக் கொன்றிட்டபோதும்
விலகவே சொல்லியே விலங்கிட்டபோதும்
நிலைமாற மாட்டேனே நீங்கேனே கண்ணா!
13.
என்மேனி காத்தது பசலை என்றும்
உன்மேனி தழுவவே உருகினேன் என்னை
தின்னாலும் மண்ணுக்கு தரமாட்டேன் உயிரை
உன்னுடைமை என்றுமே என்னுயிர் கண்ணா!
14.
காதலர் என்றே பலபேரும் சொல்லியே
பாதக காமமே கலந்திட வந்தார்
சோதனை என்றே எத்தனை வந்திடினும்
நாதனே உன்சரண் அடைவேனே கண்ணா!
15.
கட்டாய மென்னுடன் புரிந்திட்ட போதிலும்
சுட்டாலும் என்மேனி பட்டாலும் புண்பல
விட்டாலும் சிறையில் ஏறுடன் தனித்துமே
தட்டாமல் உன்னுடனே கலப்பேனே கண்ணா!
16.
வேதமே மூலமாம் சான்றோர்க்கு என்றென்றும்
சாதமே தெய்வமாம் ஏழைகளுக் கென்றென்றும்
பாதமே கடவுளின் பகதருக் கென்றென்றும்
நாதனே நீயேஎனக் கென்றென்றும் கண்ணா!
17.
தலைசீவிப் பூச்சூட்டும் போதும் மாய
நிலைகாட்டும் கண்ணாடி முன்நின்ற போதும்
குலையாமல் உடையணியும் போதும் உந்தன்
விலையிலா மெய்க்காதல் உணர்கிறேன் கண்ணா!
18.
நடக்கின்ற போதும்உன் நினைவு மஞ்சத்தில்
கிடக்கின்ற போதும்உன் உணர்வு உணவு
படைக்கின்ற போதும்உன் கனவு மரணம்
கிடைக்கின்ற போதும்உன் நினைவுதான் கண்ணா!
தொடர்வேன்...
Page 1 of 12 • 1, 2, 3 ... 10, 11, 12 
Page 1 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








