ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா"
 ANUSUYA DHURGAIMUTHU

கா(த)ல் பந்து – கவிதை
 ayyasamy ram

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
 ayyasamy ram

திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
 ayyasamy ram

Introduction
 chandram

''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 ayyasamy ram

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
 ayyasamy ram

போக்குவரத்து விளக்கு உருவான கதை..!
 ayyasamy ram

திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
 ayyasamy ram

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 ayyasamy ram

முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
 ayyasamy ram

கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
 ayyasamy ram

கோல்கட்டாவில் இன்று இந்தியா-ஆஸி., இரண்டாவது ஒருநாள் போட்டி
 ayyasamy ram

'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
 ayyasamy ram

மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 M.Jagadeesan

மாறுகை – கவிதை
 T.N.Balasubramanian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 T.N.Balasubramanian

நான் விட்டுவிடமாட்டேன் !
 ayyasamy ram

கண்ணம்மா – கவிதை
 Dr.S.Soundarapandian

காலம் கற்றுத் தந்த பாடம்…!
 ayyasamy ram

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 ayyasamy ram

அது ஒரு காதல் அலை…! – கவிதை
 ayyasamy ram

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 Dr.S.Soundarapandian

மீன்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

தாமதம் -- கவிதை
 Dr.S.Soundarapandian

நீ…நீயாக இரு….!
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(460)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…!
 ayyasamy ram

ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்…
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
 ayyasamy ram

மாற்றுதிரனாளிகள் சிறுதொழில் தொடங்கிட உதவி
 கனகராஜ் பசுமைசங்ககிரி

கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ்.
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
 ayyasamy ram

இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
 ayyasamy ram

அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
 ayyasamy ram

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )
 MANOJMAHE

கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
 ayyasamy ram

மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
 ayyasamy ram

மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
 ayyasamy ram

2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
 ayyasamy ram

மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
 ayyasamy ram

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
 ayyasamy ram

ஆங்கில நாவல்கள் தமிழில்
 Saravana2945

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
 T.N.Balasubramanian

என்னவென்று நான் சொல்ல" - முத்துலட்சுமி ராகவன் 1 முதல்3 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
 ayyasamy ram

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
 ayyasamy ram

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?
 Pranav Jain

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Pranav Jain

Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
 Pranav Jain

பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
 ayyasamy ram

சஸ்பென்ஷன்’ பாலம்
 ayyasamy ram

புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
 ayyasamy ram

முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
 ayyasamy ram

பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்

Post by சிவா on Fri Apr 23, 2010 9:33 am

''குடும்ப விளக்கு'' எழுதிய 1942 ஆம் ஆண்டிலே வெளிவந்த இசையமுது, முதற்பகுதியில் ''ஆண் உயர்வென்பது பெண் உயர் எனபதும் நீணிலத் தெங்கிலும் இல்லை''என பாவேந்தர் உறுதியிட்டு கூறியுள்ளார்.

சமுதாயக் கருத்து மாற்றத்துக்கு வித்திட்ட பாவேந்தர், மகளிர் உரிமைப் போராட்டத்திற்கும் வித்திட்டவர்.


[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்

Post by சிவா on Fri Apr 23, 2010 9:36 am

குடும்ப விளக்கு
முதற் பகுதி


ஒருநாள் நிகழ்ச்சி

அகவல்
காலை மலர்ந்தது


இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை,
இரவு போர்த்த இருள் நீங்கவில்லை.
ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல்,
நள்ளிரவு மெதுவாய் நடந்துகொண் டிருந்தது.
தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த
கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது.
புலர்ந்திடப் போகும் பொழுது, கட்டிலில்
மலர்ந்தன அந்த மங்கையின் விழிகள்.

அவள் எழுந்தாள்

தூக்கத் தோடு தூங்கி யிருந்த
ஊக்கமும் சுறுசுறுப் புள்ளமும், மங்கை
எழுந்ததும் எழுந்தன இருகை வீசி;
தெளிவிலாக் கருக்கலில் ஒளிபடும் அவள்விழி
குளத்து நீரில் குதிக்கும் கெண்டைமீன்!

கோலமிட்டாள்

சின்ன மூக்குத் திருகொடு தொங்கும்
பொன்னாற் செய்த பொடிமுத் தைப்போல்
துளிஒளி விளக்கின் தூண்டு கோலைச்
செங்காந் தள்நிகர் மங்கை விரலால்
பெரிது செய்து விரிமலர்க் கையில்
ஏந்தி, அன்னம் வாய்ந்த நடையடு,
முல்லை அரும்பு முத்தாய்ப் பிறக்கும்,
கொல்லை யடைந்து குளிர்புதுப் புனலை
மொண்டாள்; மொண்டு, முகத்தைத் துலக்கி
உண்டநீர் முத்தாய் உதிர்த்துப் பின்னும்
சேந்துநீர் செங்கை ஏந்தித் தெருக்கதவு
சார்ந்ததாழ் திறந்து, தகடுபோற் குறடு
கூட்டி, மெருகு தீட்டிக் கழுவி,
அரிசிமாக் கோலம் அமைத்தனள்; அவளுக்குப்
பரிசில் நீட்டினான் பகலவன் பொன்னொளி!

காலைப் பாட்டு

இல்லத்தினிலே எகினாள்; ஏகி
யாழின் உறையினை எடுத்தாள்; இசையில்
'வாழிய வையம் வாழிய' என்று
பாவலர் தமிழிற் பழச்சுவை சேர்த்தாள்.
தீங்கிலாத் தமிழில் தேனிசைக் கலவைபோய்த்
தூங்கிய பிள்ளைகள், தூங்கிய கணவனின்
காதின் வழியே கருத்தில் கலக்கவே,
மாதின் எதிர்அவர் வந்துட் கார்ந்தனர்.
அமைதி தழுவிய இளம் பகல்,
கமழக் கமழத் தமிழிசை பாடினாள்.

வீட்டு வேலைகள்

பறந்தனள் பச்சைப் பசுங்கிளி; மாடு
கறந்தனள்; வீட்டை நிறம் புரிந்தனள்;
செம்பு தவளை செழும்பொன் ஆக்கினாள்;
பைம்புனல் தேக்கினாள், பற்ற வைத்த
அடுப்பினில் விளைத்த அப் பம் அடுக்கிக்
குடிக்க இனிய கொத்து மல்லிநீர்
இறக்கிப் பாலொடு சர்க்கரை இட்டு
நிறக்க அன்பு நிறையப் பிசைந்த
முத்தான வாயால் முழுநிலா முகத்தாள்
"அத்தான்" என்றனள்; அழகியோன் வந்தான்.

கணவனுக்கு உதவி

வந்த கணவன் மகிழும் வண்ணம்
குளிர்புனல் காட்டிக் குளிக்கச் சொல்லி,
துளிதேன் சூழும் களிவண்டு போல
அன்பனின் அழகிய பொன்னுடல் சூழ்ந்து,
மின்னிடை துவள, முன்னின் றுதவி,
வெள்ளுடை விரித்து மேனி துடைத்தபின்,


Last edited by சிவா on Fri Apr 23, 2010 10:27 am; edited 1 time in total


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்

Post by சிவா on Fri Apr 23, 2010 9:37 am

குழந்தைகட்குத் தொண்டு

" பிள்ளைகாள்" என்றனள்! கிள்ளைகள் வந்தனர்!
தூய பசும்பொன் துளிகளைப் போன்ற
சீயக் காய்த்தூள் செங்கையால் அள்ளிச்
சிட்டுக் காட்டியும் சிறுகதை சொல்லியும்
தொட்டுத் தேய்த்துத் துளிருடல் நலங்காது
நின்ற திருக்கோலப் பொன்னின் சிலைகட்கு
நன்னீ ராட்டி நலஞ்செய்த பின்னர்
பூவிதழ் மேற்பனி தூவிய துளிபோல்
ஓவியக் குழந்தைகள் உடலில்நீர்த் துளிகளைத்
துடைத்து நெஞ்சில் சுரக்கும் அன்பை
அடங்கா தவளாய் அழகுமுத் தளித்தே,
"பறப்பீர் பச்சைப் புறாக்களே"என, அவர்
அறைக்குள் ஆடைபூண் டம்பலத் தாடினார்.

காலையுணவு

அடுக்களைத் தந்தி அனுப்பினாள் மங்கை;
"வந்தேன் என்று மணாளன் வந்தான்;
"வந்தோம் என்று வந்தனர் பிள்ளைகள்.
பந்தியில் அனைவரும் குந்தினர் வரிசையாய்.
தழைத்த வாழைத் தளிரிலை தன்னில்
பழத்தொடு படைத்த பண்டம் உண்டனர்;
காய்ச்சிய நறுநீர் கனிவாய்ப் பருகினர்.

தய்தான் வாத்திச்சி

நேரம் போவது நினையா திருக்கையில்
பாய்ச்சிய செங்கதிர் பட்டது சுவர்மேல்;
அவள்கண்டு, காலை "ஆறுமணி" என
உரைத்தாள்; கணவன், "இருக்கா" தென்றான்.
உண்டுண் டுண்டென ஒலித்தது சுவரின்
அண்டையில் இருந்த அடுக்கும் மணிப்பொறி.
பாடம் சொல்லப் பாவை தொடங்கினாள்.
அவள் வாத் திச்சி அறைவீடு கழகம்;
தவழ்ந்தது சங்கத் தமிழ்ச்சுவை; அள்ளி
விழுங்கினார் பிள்ளைகள்; "வேளையா யிற்றே!

பள்ளிக்குப் பிள்ளைகள்

எழுங்கள்" என்றனள், எழுந்தனர்; சுவடியை
ஒழுங்குற அடுக்கி, உடை அணிவித்துப்
புன்னை இலைபோல் புதையடிச் செருப்புகள்
சின்னவர் காலிற் செருகிச் சிறுகுடை
கையில் தந்து, கையடு கூட்டித்
தையல், தெருவரை தானும் நடந்து,
பள்ளி நோக்கித் தள்ளாடி நடக்கும்
பிள்ளைகள் பின்னழகு வெள்ளம் பருகிக்
கிளைமா றும்பசுங் கிளிபோல் ஓடி
அளவ ளாவினாள் ஆள னிடத்தில்.


Last edited by சிவா on Fri Apr 23, 2010 10:28 am; edited 1 time in total


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்

Post by சிவா on Fri Apr 23, 2010 9:38 am

கடைக்குப்போகும் கணவன்

கடைக்குச் செல்லக் கணவன், அழகிய
உடைகள் எடுத்தே உடுக்க லானான்.
"கழுத்துவரை உள்ள கரிய தலைமயிர்
மழுக்குவீர் அத்தான்"என்று மங்கை சொன்னாள்.
நறுநெய் தடவி நன்றாய்ச் சீவி
முறுக்கு மீசையை நிறுத்திச் சராயினை
இட்டிடை இறுக்கி எழிலுறத் தொங்கும்
சட்டை மாட்டத் தன்கையில் எடுத்தான்.
பொத்தலும் கிழிசலும் பூவை கண்டாள்;
தைத்தாள் தையற் சடுகுடு பொறியால்.
ஆண்டநாள் ஆண்டு மாண்ட செந்தமிழ்ப்
பாண்டிய மன்னன் மீண்டது போல,
உடுத்திய உடையும் எடுத்த மார்பும்
படைத்த கணவனைப் பார்த்துக் கிடந்தாள்.

வெற்றிலைச் சுருள்

ஒற்றி வைத்த ஒளிவிழி மீட்டபின்,
வெற்றிலைச் சுருள் பற்றி ஏந்தினாள்;
கணவன் கைம்முன் காட்டி, அவன்மலர்
வாயில் தரத்தன் மனத்தில் நினைத்தாள்.
தூயவன் அப்போது சொன்ன தென்னெனில்,
"சுருளுக்கு விலைஎன்ன? சொல்லுவாய்?" என்ன;
"பொருளுக்குத் தக்கது போதும்" என்றாள்.
"கையிற் கொடுப்பதைக் காட்டிலும் சுருளை
வாயிற் கொடுத்திடு மங்கையே" என்றான்.
சேயிழை அன்பாய்ச் செங்கை நீட்டினாள்.
குடித்தனப் பயனைக் கூட்டி எடுத்து
வடித்த சுவையினை வஞ்சிக் களித்தல்போல்
தளிர்க்கைக்கு முத்தம் தந்து,
குளிர்வாய் வெற்றிலை குழைய ஏகினனே!

அறுசீர் விருத்தம்
அவளின் காதலுள்ளம்


உணவுண்ணச் சென்றாள், அப்பம்
உண்டனள், சீனி யோடு
தணல்நிற மாம் பழத்தில்
தமிழ்நிகர் சுவையைக் கண்டாள்!
மணவாளன் அருமை பற்றி
மனம்ஒரு கேள்வி கேட்க,
'இணையற்ற அவன் அன்புக்கு
நிகராமோ இவைகள்' என்றாள்.

பிள்ளைகள் நினைவு


பள்ளிக்குச் சென்றி ருக்கும்
பசங்களில் சிறிய பையன்
துள்ளிக் குதித்து மான்போல்
தொடர்ந்தோடி வீழ்ந்தானோ, என்(று)
உள்ளத்தில் நினைத்தாள்;ஆனால்
மூத்தவன் உண்டென் றெண்ணித்
தள்ளினாள் அச்சந் தன்னை!
தாழ்வாரம் சென்றாள் நங்கை!

வீட்டு வேலைகள்


ஒட்டடைக் கோலும் கையும்
உள்ளமும் விழியும் சேர்த்தாள்;
கட்டிய சிலந்திக் கூடு,
கரையானின் கோட்டை யெல்லாம்
தட்டியே பெருக்கித் "தூய்மை"
தனியர சாளச் செய்து,
சட்டைகள் தைப்ப தற்குத்
தையலைத் தொட்டாள் தையல்!

தையல் வேலை

ஆடிக்கொண் டிருந்த தையற்
பொறியினை அசைக்கும் ஓர்கை;
ஓடிக்கொண் டிருக்கும் தைத்த
உடையினை வாங்கும் ஓர்கை!
பாடிக்கொண் டேயிருக்கும்
பாவையின் தாம ரைவாய்;
நாடிக்கொண் டேயிருக்கும்
குடித்தன நலத்தை நெஞ்சம்!


Last edited by சிவா on Fri Apr 23, 2010 10:30 am; edited 1 time in total


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்

Post by சிவா on Fri Apr 23, 2010 9:38 am

மரச்சாமான்கள் பழுது பார்த்தல்முடிந்தது தையல் வேலை.

முன்உள்ள மரச்சா மான்கள்

ஒடிந்தவை, பழுது பார்த்தாள்;

உளியினால் சீவிப் பூசிப்

படிந்துள்ள அழுக்கு நீக்கிப்

பளபளப் பாக்கி வைத்தாள்.கொல்லூற்று வேலைஇடிந்துள்ள சுவர் எடுத்தாள்;

சுண்ணாம்பால் போரை பார்த்தாள்.மாமன் மாமிக்கு வரவேற்புநாத்தியார் வீடு சென்ற

நன்மாமன், மாமி வந்தார்.

பார்த்தனள்;உளம் மகிழ்ந்தாள்.

பறந்துபோய்த் தெருவில் நின்று

வாழ்த்திநல் வரவு கூறி

வணக்கத்தைக் கூறி, "என்றன்

நாத்தியார், தங்கள் பேரர்

நலந்தானா மாமி" என்றாள்.வண்டிவிட் டிறங்கி வந்த

மாமியும், மாமனும், கற்

கண்டொத்த மரும கட்குக்

கனியத்த பதிலுங் கூறிக்

கொண்டுவந் திட்ட பண்டம்

குறையாமல் இறக்கச் சொன்னார்.

வண்டியில் இருந்த வற்றை

இறக்கிடு கின்றாள் மங்கை.மாமி மாமன் வாங்கி வந்தவைகொஞ்சநாள் முன்வாங் கிட்ட

கும்ப கோணத்துக் கூசா,

மஞ்சள்,குங் குமம், கண்ணாடி,

மைவைத்த தகரப் பெட்டி,

செஞ்சாந்தின் சீசா,சொம்பு,

வெற்றிலைச் சீவற் பெட்டி,

இஞ்சியின் மூட்டை ஒன்றே,

எலுமிச்சைச் சிறிய கோணி,புதியஓர் தவலை நாலு,

பொம்மைகள்,இரும்புப் பெட்டி

மிதியடிக் கட்டை,பிள்ளை

விளையாட மரச்சா மான்கள்;

எதற்கும்ஒன் றுக்கி ரண்டாய்

இருக்கட்டும் வீட்டில் என்று

குதிரினில் இருக்கும் நெல்லைக்

குத்திட மரக்குந் தாணி;தலையணை, மெத்தைக் கட்டு,

சல்லடை, புதுமு றங்கள்,

எலிப்பொறி, தாழம் பாய்கள்;

இப்பக்கம் அகப்ப டாத

இலுப்பெண்ணெய், கொடுவாய்க் கத்தி,

இட்டலித் தட்டு, குண்டான்,

கலப்பட மிலாநல் லெண்ணெய்;

கைத்தடி,செந்தா ழம்பூ;திருமணம் வந்தால் வேண்டும்

செம்மரத் தினில்முக் காலி;

ஒருகாசுக் கொன்று வீதம்

கிடைத்த பச்சரிசி மாங்காய்;

வரும்மாதம் பொங்கல் மாதம்

ஆதலால் விளக்கு மாறு;

பரிசாய்ச் சம்பந்தி தந்த

பாதாளச் சுரடு, தேங்காய்;மூலைக்கு வட்டம் போட்டு

முடித்தமே லுறையும், மற்றும்

மேலுக்கோர் சுருக்குப் பையும்

விளங்கிடும் குடை, கறுப்புத்

தோலுக்குள் காயிதத்தில்

தூங்கும்மூக் குக்கண் ணாடி,

சேலொத்த விழியாள் யாவும்

கண்டனள் செப்ப லுற்றாள்:


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்

Post by சிவா on Fri Apr 23, 2010 9:39 am

மருமகள் வினா"இவையெல்லாம் வண்டிக் குள்ளே

இருந்தன என்றால் அந்த

அவைக்களம் தனிலே நீவிர்

எங்குதான் அமர்ந்திருந்தீர்?

சுவைப்புளி அடைத்து வைத்த

தோண்டியின் உட்பு றத்தில்

கவர்ந்துண்ணும் பூச்சி கட்கும்

கால்வைக்க இடமிராதே?"மாமி விடைஎன்றனள்; மாமி சொல்வாள்:

"இவைகளின் உச்சி மீதில்

குன்றுமேல் குரங்கு போல

என்றனைக் குந்த வைத்தார்!

என்தலை நிமிர, வண்டி

மூடிமேல் பொத்த லிட்டார்;

உன்மாமன் நடந்து வந்தார்.

ஊரெல்லாம் சிரித்த" தென்றாள்!மாமன் பேச்சு"ஊரெல்லாம் சிரிக்க வைத்தேன்

என்றாளே உன்றன் மாமி!

யாரெல்லாம் சிரித்து விட்டார்?

எனஉன்றன் மாமியைக் கேள்;

பாரம்மா பழுத்த நல்ல

பச்சைவா ழைப்ப ழங்கள்!

நேரிலே இதனை யும்பார்

பசுமாட்டு நெய்யின் மொந்தை!வண்டியில் எவ்வி டத்தில்

வைப்பது? மேன்மை யான

பண்டத்தைக் காப்ப தற்குப்

பக்குவம் தெரிந்தி ருந்தால்

முண்டம்இப் படிச் சொல்வாளா?

என்னதான் முழுகிப் போகும்

அண்டையில் நடந்து வந்தால்?"

என்றனன், அருமை மாமன்.மருமகள் செயல்மாமனார் கொண்டு வந்த

பொருளெலாம் வரிசை செய்து,

தீமையில் லாத வெந்நீர்

அண்டாவில் தேக்கி வைத்துத்

தூய்மைசேர் உணவு தந்து,

துப்பட்டி விரித்த மெத்தை

ஆம்,அதில் அமரச் சொல்லிக்

கறிவாங்க அவள் நடந்தாள்.கடையிலே செலவு செய்த

கணக்கினை எழுதி வைத்தாள்;

இடையிலே மாமன் "விக்குள்

எடுத்தது தண்ணீர் கொஞ்சம்

கொடு"எனக் கொடுத்தாள். பின்னர்க்

கூடத்துப் பதுமை ஓடி

அடுக்களை அரங்கில், நெஞ்சம்

அசைந்திட ஆட லானாள்.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்

Post by சிவா on Fri Apr 23, 2010 9:39 am

என்ன கறி வாங்கலாம்?கொண்டவர்க் கெது பிடிக்கும்

குழந்தைகள் எதை விரும்பும்

தண்டூன்றி நடக்கும் மாமன்

மாமிக்குத் தக்க தென்ன

உண்பதில் எவரு டம்புக்(கு)

எதுவுத வாதென் றெல்லாம்

கண்டனள், கறிகள் தோறும்

உண்பவர் தம்மைக் கண்டாள்!பிள்ளைகள் உள்ளம் எப்படி?பொரியலோ பூனைக் கண்போல்

பொலிந்திடும்; சுவை மணக்கும்!

"அருந்துமா சிறிய பிள்ளை"

எனஎண்ணும் அவளின் நெஞ்சம்;

இருந்தந்தச் சிறிய பிள்ளை

இச்சென்று சப்புக் கொட்டி

அருந்தியே மகிழ்ந்த தைப்போல்

அவள்காதில் ஓசை கேட்கும்!அத்தானுக்கு எது பிடிக்கும்?பொருளையும் பெரிதென் றெண்ணாள்,

பூண்வேண்டாள்; தனைம ணந்தோன்

அருளையே உயிரென் றெண்ணும்

அன்பினாள், வறுத்தி றக்கும்

உருளைநற் கிழங்கில் தன்னை

உடையானுக் கிருக்கும் ஆசைத்

திருவுளம் எண்ணி எண்ணிச்

செவ்விள நகைசெய் கின்றாள்.எதிர்கால நினைவுகள்இனிவாழும் நாள் நினைத்தாள்

இளையவர் மாமன் மாமி;

நனிஇரங் கிடுதல் வேண்டும்;

நானவர்க் கன்னை போல்வேன்.

எனதத்தான் தனையும் பெற்று

வாழ்ந்தநாள் எண்ணும் போதில்

தனிக்கடன் உடையேன், நானோர்

தவழ்பிள்ளை அவர்கட் கென்றாள்.கிழங்கினை அளியச் செய்வாள்,

கீரையைக் கடைந்து வைப்பாள்

கொழுங்காய்ப்பச் சடியே வைப்பாள்

கொல்லையின் முருங்கைக் காயை

ஒழுங்காகத் தோலைச் சீவிப்

பல்லில்லார் உதட்டால் மென்று

விழுங்கிடும் வகை முடித்து

வேண்டிய எலாம் முடித்தே.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்

Post by சிவா on Fri Apr 23, 2010 9:40 am

முதியவருக்குத் துணைதூங்கிய மாமன் "அம்மா

தூக்கென்னை" என்று சொல்ல,

ஏங்கியே ஓடி மாமன்

இருக்கின்ற நிலைமை கண்டு,

வீங்கிய காலைப் பார்த்தாள்

"எழுந்திட வேண்டாம்!" என்றாள்;

தாங்கியே மருந்து பூசிச்

சரிக்கட்டிப் படுக்க வைத்தாள்.அவளோர் மருத்துவச்சிநாடியில் காய்ச்சல் என்றே

நன்மருந் துள்ளுக் கீந்தாள்;

ஓடிநற் பாலை மொண்டு,

மருவுலைக் கஞ்சி ஊற்றி,

வாடிய கிழவர்க் கீந்தாள்;

மாமிக்கோ தலைநோக் காடாம்,

ஓடிடச் செய்தாள் மங்கை

ஒரேபற்றில் நொடிநே ரத்தில்.அள்ளி அணைத்தாள் பிள்ளைகளைகுழந்தைகள் பள்ளி விட்டு

வந்தார்கள்; குருவிக் கூட்டம்

இழந்தநல் லுரிமை தன்னை

எய்தியே மகிழ்வ தைப்போல்;

வழிந்தோடும் புதுவெள் ளத்தை

வரவேற்கும் உழவரைபோல்,

எழுந்தோடி மக்கள் தம்மை

ஏந்தினாள் இருகை யாலும்!உடை மாற்றினாள்பள்ளியில் அறிஞர் சொன்ன

பாடத்தின் வரிசை கேட்டு,

வெள்ளிய உடை கழற்றி,

வேறுடை அணியச் செய்தே,

உள்வீட்டில் பாட்டன் பாட்டி

உள்ளதை உணர்த்தி, அந்தக்

கள்ளினில் பிள்ளை வண்டு

களித்திடும் வண்ணம் செய்தாள்!தலைவி சொன்ன புதுச்செய்திஅன்றைக்கு மணம் புரிந்த

அழகியோன் வீடு வந்தான்;

இன்றைக்கு மணம் புரிந்தாள்

எனும்படி நெஞ்சில் அன்பு

குன்றாத விழியால், அன்பன்

குளிர்விழி தன்னைக் கண்டாள்;

"ஒன்றுண்டு சேதி" என்றாள்;

"உரை"என்றான்; "அம்மா அப்பாவந்தார்"என் றுரைத்தாள், கேட்டு

"வாழிய" என்று வாழ்த்தி,

"நொந்தார்கள்" என்று கேட்டு

நோயுற்ற வகை யறிந்து,

தந்தைதாய் கண்டு "உங்கள்

தள்ளாத பருவந் தன்னில்

நைந்திடும் வண்ணம் நீங்கள்

நடந்திட லாமா? மேலும்,


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்

Post by சிவா on Fri Apr 23, 2010 9:40 am

முதியோர்க்குஒக்கநல் லிளமை கண்டீர்

கல்விநல் லொழுக்கம் கண்டீர்;

மெய்க்காதல் மணமும் பெற்றீர்;

இல்லற வெற்றி பெற்றீர்;

மக்களைப் பெற்றீர்;வைய

வழ்வெலாம் பெற்றீர்; என்னால்

எக்குறை பெற்றீர்? இன்னும்

ஏனிந்தத் தொல்லை ஏற்றீர்?அதிர்ந்திடும் இளமைப் போதில்

ஆவன அறங்கள் செய்து,

முதிர்ந்திடும் பருவந் தன்னில்

மக்கட்கு முடியைச் சூட்டி,

எதிர்ந்திடும் துன்ப மேதும்

இல்லாமல் மக்கள், பேரர்

வதிந்திடல் கண்டு, நெஞ்சு

மகிழ்வதே வாழ்வின் வீடு!"அறிவுக்குத் திருவிளக்குஎன்றனன்; தந்தை சொல்வார்:

"என்னரும் மகனே, மெய்தான்

ஒன்றிலும் கவலை கொள்ளேன்

உன்னைநான் பெற்ற தாலே!

அன்றியும் உன்பெண் டாட்டி

அறிவுக்கோர் திரு விளக்காம்,

இன்றுநான் அடைந்த நோய்க்கும்

நன்மருந் திட்டுக் காத்தாள்.செல்லப்பா உணவு கொள்ளச்

சிறுவர்கள் தமையும் உண்ணச்

சொல்லப்பா!" எனவே, அன்பு

சொரிந்திடச் சொல்லி டுந்தன்

நல்லப்பா மகிழும் வண்ணம்

நல்லதப் பாஎன் றோதி,

மெல்லப்பா வைபு ரிந்த

விருந்தினை அருந்த லுற்றான்.பிள்ளைக்கு அமுதுகுழந்தைகள் உடனி ருந்து

கொஞ்சியே உண்ணு கின்றார்

பழந்தமிழ்ப் பொருளை அள்ளிப்

படித்தவர் விழுங்குதல் போல்!

ஒழுங்குறு கறிகள் தம்மில்

அவரவர் உளம றிந்து

வழங்கினாள் அள்ளி அள்ளி,

வழிந்திடும் அன்புள் ளத்தாள்.பாடு என்றான்அனைவரும் உண்டார் அங்கே!

கூடத்தில் அமர்ந்தி ருந்தார்.

சுனைவரும் கெண்டைக் கண்ணாள்

துணைவனை அணுகி, "நீவிர்

எனைவரும் படிஏன் சொல்ல

வில்லை" என்றாள் சிரித்தே!

'தினைவரும் படிஇல் லார்க்கும்

திருநல்கும் தமிழ்பா' டென்றான்.யாழ் எடுத்தாள்குளிர்விழி இளநகைப் பூங்

குழலினாள் குந்தினாள்; தன்

தளிருடல் யாழ் உடம்பு

தழுவின; இரு குரல்கள்

ஒளியும் நல்வானும் ஆகி

உலவிடும் இசைத்தேர் ஏறித்

"தெளிதமிழ்" பவனி வந்தாள்

செவிக்கெலாம் காட்சி தந்தாள்.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்

Post by சிவா on Fri Apr 23, 2010 9:40 am

கவிதை பாய்ச்சினாள்உள்ளத்தில் கவிதை வைத்தே
உயிரினால் எழுப்பி னாள்;அவ்

வெள்ளத்தில் சுவையைக் கோத்தாள்;

வீணையின் அளவிற் சாய்த்தாள்;

தெள்ளத்தெ ளிந்த நீர்போல்,

செந்தமிழ்ப் பொருள்போல் நெஞ்சப்

பள்ளத்தில் கோடைத் துன்பம்

பறந்திடப் பாய்ச்சி விட்டாள்.உயிரெல்லாம் தமிழில் தொக்கினவீடெல்லாம் இசையே; வீட்டில்

நெஞ்செலாம் மெருகே; நெஞ்ச

ஏடெலாம் அறிவே; ஏட்டின்

எழுத்தெலாம் களிப்பே; அந்தக்

காடெலாம் ஆடும் கூத்தே;

காகங்கள் குருவி எல்லாம்

மாடெல்லாம் இவ்வா றானால்

மனிதர்க்கா கேட்க வேண்டும்?கடையை மறந்தீரோ?இடையினில் தனை மறந்தே

இருந்ததன் கணவன் தன்னைக்

"கடையினை மறந்து விட்டீர்

கணக்கர்காத் திருப்பார்" என்று

நடையினில் அன்னம் சொன்னாள்;

நல்லதோர் நினைவு பெற்ற

உடையவன் "ஆம் ஆம்" என்றான்;

ஆயினும் "உம் உம்" என்றான்.மனைவியிடம் பிச்சை கேட்டான்"கண்ணல்ல; நீதான் சற்றே

கடைக்குப் போய்க் கணக்கர் தம்மை

உண்பதற் கனுப்பி, உண்டு

வந்தபின் வா; என் னாசைப்

பெண்ணல்ல" என்று சொல்லிச்

சோம்பலால் பிச்சை கேட்டான்.

கண்ணல்ல, கருத்தும் போன்றாள்,

"சரி"என்று கடைக்குச் சென்றாள்.கடையின் நடைமுறைமல்லியை அளப்பார்; கொம்பு

மஞ்சளை நிறுப்பார்; நெய்க்குச்

சொல்லிய விலை குறைக்கச்

சொல்லுவார்; கொள் சரக்கின்

நல்லியல் தொகை கொடுப்பார்;

சாதிக்காய் நறுக்கச் சொல்வார்

வெல்லம்என் றொருகு ழந்தை

விரல்நீட்டும் கடைக்கு வந்தாள்.அவள் வாணிபத் திறமைகளிப்பாக்குக் கேட்பார்க் கீந்து

களிப்பாக்கிக் கடனாய்த் தந்த

புளிப்பாக்கி தீர்ந்த பின்பு

கடனாகப் புதுச்ச ரக்கை

அளிப்பார்க்குப் பணம்அ ளித்தாள்;

அதன்பின்னர் கணக்கர் எல்லாம்

கிளிப்பேச்சுக் காரி யின்பால்

உணவுண்ணக் கேட்டுப் போனார்.இளகிய நெஞ்சத் தாளை

இளகாத வெல்லம் கேட்பார்;

அளவாக இலாபம் ஏற்றி

அடக்கத்தை எடுத்து ரைப்பாள்!

மிளகுக்கு விலையும் கூறி

மேன்மையும் கூறிச் சற்றும்

புளுகாமல் புகன்ற வண்ணம்

புடைத்துத்தூற் றிக்கொ டுப்பாள்.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்

Post by சிவா on Fri Apr 23, 2010 9:41 am

கணவனிடம் கணக்கு ஒப்புவித்தாள்கொண்டவன் வந்தான்; கண்கள்

குளிர்ந்திடக் கண்டாள்: "அத்தான்

கண்டுள்ள கணக்கின் வண்ணம்

சரக்குகள் கடன்தந் தார்க்குத்

தண்டலும் கொடுத்தேன்; விற்று

முதலினைத் தனியே வைத்தேன்;

உண்டங்கு வேலை" என்றே

உரைத்தனள்; வீடு சென்றாள்.வீட்டறை மருத்துவமைனைபடுக்கையில் மாம னாரைப்

பார்த்தனள்; "காலில் இன்னும்

கடுக்கை தீர்ந்திலதோ" என்று

கனிவோடு கேட்டு டுக்கும்

உடுக்கையும் மாற்று வித்து,

மட்டான உணவு தந்து

தடுக்கினி லிருந்து தூக்கிச்

சாய்வு நாற்காலி சேர்த்தாள்.மற்றும் வீட்டு வேலைவரிசையாய்க் காய வைத்த

வடகத்தை, வற்றல் தன்னைப்

பெரிசான சாலில் சேர்த்தாள்;

பிணைந்துள்ள மாடு கன்றுக்(கு)

உரியநல் தீனி வைத்தாள்;

உறிவிளக் குகள்து டைத்தாள்;

வரும்மக்கள் எதிர்பார்த் திட்டாள்;

வந்தனர்; மகிழ்ச்சி பெற்றாள்.கடற்கரையில்சிற்றுண வளித்தாள்; பின்பு

திரைகடற் கரையை நாடிப்

பெற்றதன் மக்கள் சூழப்

பெருவீதி ஓர மாகப்

பொற்கொடி படர்ந்தாள் தேனைப்

பொழிந்திடு பூக்க ளோடு!

வற்றாத வெள்ளக் காட்டின்

மணற்கரை ஓரம் வந்தாள்!கடற்கரைக் காட்சிஅக்கரை செலும்உள் ளத்தை

அளாவிடக் கிடந்த வில்லும்,

இக்கரை அலையின் ஆர்ப்பும்,

இவற்றிடைச் செவ்வா னத்தின்

மிக்கொளி மிதக்கும் மேனி

விரிபுனற் புரட்சிப் பாட்டும்,

"ஒக்கவே வாழ்க மக்காள்"

என்பதோர் ஒலியும் கேட்டாள்;காட்சி இன்பம்குளிர்புனல் தெளிவி லெல்லாம்

ஒளிகுதி கொள்ளும்; வெள்ளத்

துளிதொறும் உயிர்து டிக்கும்;

தொன்மைசேர் கடல், இவ் வைய

வெளியெலாம் அரசு செய்யும்

விண்ணெலாம் ஒளியைச் செய்யும்!

களியெலாம் காணக் காணக்

கருத்தெலாம் இன்பம் பொங்கும்!கடற் காற்றுகடலிடைப் புனலில் ஆடிக்

குளிரினிற் கனிந்த காற்றை

உடலிடைப் பூசு கின்ற

ஒலிகடற் கரையின் ஓரம்

அடர்சிற கன்னப் புட்கள்

அணிபோல அலைந டக்கும்

நடையடு நடந்து வீடு

நண்ணினாள் மக்க ளோடு.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்

Post by சிவா on Fri Apr 23, 2010 9:41 am

இரவுக்கு வரவேற்புமேற்றிசைக் கதிர்ப்ப ழத்தை

விருந்துண்டு, நீல ஆடை

மாற்றுடை யாய் உடுத்து

மரகத அணிகள் பூண்டு,

கோற்கிளை ஒடுங்கும் புட்கள்

கோட்டிடும் இறகின் சந்தக்

காற்சிலம் பசையக் காதற்

கரும்பான இரவு தன்னை;திருவிளக் கேந்தி வந்து

தெருவினில் வரவேற்கின்றாள்.

உருவிளக் கிடவீட் டுக்குள்

ஒளிவிளக் கனைத்தும் ஏற்றி

ஒருபெருங் கலயத் துள்ளே

உயர்நறும் புகை எழுப்பிப்

பெரியோரின் உள்ளம் எங்கும்

பெருகல்போல் பெருகச் செய்தாள்.அத்தானை எதிர்பார்க்கின்றாள்கட்டுக்குள் அடங்கா தாடிக்

களித்திடும் தனது செல்வச்

சிட்டுக்கள், சுவடிக் குள்ளே

செந்தமிழ்த் தீனி உண்ண

விட்டுப்பின் அடுக்க ளைக்குள்

அமுதத்தை விளைவு செய்தாள்;

எட்டுக்கு மணி அடிக்க

அத்தானை எதிர்பார்க் கின்றாள்எண்சீர் விருத்தம்

கட்டில் அழகுசரக்கொன்றை தொங்ககவிட்ட பந்த லின்கீழ்

தனிச்சிங்கக் கால்நான்கு தாங்கும் கட்டில்

இருக்கின்ற மெத்தைதலை யணைகள் தட்டி

இருவீதி மணமடிக்கும் சந்த னத்தைக்

கரைக்கின்ற கலையத்துட் கரைத்துத் தென்றல்

கலக்கின்ற சன்னலினைத் திறந்து, நெஞ்சில்

சுரக்கின்ற அன்பினால், தெருவில் மீண்டும்

துடிக்கின்றாள் கணவனது வரவு பார்த்தே!அவன் மலை போன்ற செல்வம்பறக்கின்ற கருங்குயிலாள் மீண்டும் வீட்டில்

பழக்குலையைத் தட்டத்தில் அடுக்கிப் பாலைச்

சிறக்கின்ற செம்பினிலே ஊற்றி வைத்துச்

சிரிக்கின்ற முல்லையினைக் கண்ணி யாக்கி,

நிறக்கின்ற மணிவிளக்கைச் சிறிது செய்து

நினைக்கின்ற இன்பத்தை நெஞ்ச வீட்டில்

மறைக்கின்ற படிமறைத்து மற்றும் சென்று

மலைபோன்ற செல்வத்தின் வரவு பார்த்தாள்.பிள்ளைகட்குப் பரிசுகால்ஒடிந்து போகுமுன்னே அவனும் வந்தான்;

கதையன்று கேட்டாயா? எனவுட் கார்ந்தான்.

மேலிருந்து "பிள்ளைவளர்ப் புப்போ ட்டிக்கு

விடைவந்து சேர்ந்த" தென்றான்; எவ்வா றென்றாள்.

"ஆல்ஒடிந்து வீழ்ந்தாலும் தோள்கள் தாங்கும்

அப்படி நாம் பிள்ளைகளை வளர்த்த தாலே,

பாலொடுசர்க் கரைகலந்த இனிய சொல்லாய்

பரிசுநமக் குத்தந்தார் பாராய்!" என்றான்.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்

Post by சிவா on Fri Apr 23, 2010 9:42 am

பழங்காலக் கிழங்கள்அறையினிலே படுத்திருந்த பெற்றோர் காதில்

அதைப் போடத் துவக்கினான். "வளர்ப்புப் போட்டி

அறியோமே எம்நாளில்" என்றார் பெற்றோர்.

அப்படி என்றாலின்ன தெனவி ளக்கிக்

"குறையின்றி வளர்ப்பவர்கள் பரிசு கொள்ளல்"

கூறினான். "குழந்தைகளை விசாரித் துத்தான்

அறிந்தாரோ?" எனக் கேட்டார் அக்கா லத்தார்;

அதன்விரிவும் கூறியபின் மகிழ்வு கொண்டார்.அடுக்களையிற் பிள்ளைகள்பரிசுதனைப் பெற்ற பிள்ளை, ஓடி வந்தான்;

பலருமே சூழ்ந்தார்கள்; குருவிக் கூட்டம்

பெரிசாக, இன்மொழிகள் செவிபி ளக்கப்

பெருமானும் பெருமாட்டி தானும், அன்பின்

அரசாட்சி செலுத்தியபின், எல்லா ரும்போய்

அடுக்களையிற் கூடாரம் அடித்து விட்டார்;

ஒருபெரும்போர்க் களம்புகுந்தார், உணவைத் தூக்கி

'ஓடிப்போ டா' என்றார்; "பசி"ப றந்தான்.குழந்தைகள் தூங்கியபின்அவன்பாடிக் கொண்டிருந்தான் அறைவீட் டுக்குள்

அருமையுள்ள மாமனார் மாமி யார்க்கும்,

உவந்தருள உணவிட்டுக் கடன் முடித்தாள்;

உட்பக்கத் தறைநோக்கி அவரும் போனார்;

குவிந்திருக்கும் சுவையுணவு தானும் உண்டாள்;

கொக்கரிக்கும் நெஞ்சுக்குத் துணிவு கூறி,

அவிழ்ந்துவரும் நிலாஒளியால் இதழ்கள் மூடும்

அல்லிப்பூ விழிகள்குழந் தைகள் மூட.கதவைத் தாழிட்டாள்கண்டுபடுக் கைதிருத்தி உடைதிருத்திக்

காற்றில்லாப் போதினிலே விசிறி வீசி,

வண்டுவிழி திறக்குமொரு குழந்தை, "தண்ணீர்

வை" என்னும்; ஒன்றுதலை தூக்கிப் பார்க்கும்;

பண்டிதர்கள் பழங்கதையின் ஓட்டைக் கெல்லாம்

பணிக்கையிடல் போல்அனைத்தும் தணிக்கை செய்தே

ஒண்பசு,நற் கன்றுக்கு வைக்கோல் ஈந்தே

உட்கதவு, வெளிக்கதவின் தாழ்அ டைத்தாள்.கட்டிலண்டை மங்கைதொண்டையினில் ஒன்றுமே அடைக்க வில்லை;

துணைவனவன் சிறுகனைப்புக் கனைக்க லுற்றான்;

அண்டையிலே மங்கைபோய் "அத்தான்" என்றாள்.

அத்தானா தூங்கிடுவான்? "உட்கார்" என்றான்.

திண்தோளில் சந்தனத்தைப் பூசு கின்றாள்;

சேயிழைக்கு முல்லைமலர் சூட்டு கின்றான்.

கண்டான்!கண் டாள்! உவப்பின் நடுவிலே,"ஓர்

கசப்பான சேதியுண்டு கேட்பீர்" என்றாள்!


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்

Post by சிவா on Fri Apr 23, 2010 9:42 am

பொதுத்தொண்டு செய்தோமா?"மிதிபாகற் காய்கசக்கும்; எனினும் அந்த

மேற்கசப்பின் உள்ளேயும் சுவைஇ ருக்கும்;

அதுபோலத் தானேடி! அதனாலென்ன?

அறிவிப்பாய் இளமானே" என்றான் அன்பன்;

அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும்

அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்,

இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்?

என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவு மில்லை.வீட்டுத் தொண்டா பொதுத் தொண்டு?"இன்றைக்குக் கறிஎன்ன? செலவு யாது?

ஏகாலி வந்தானா? வேலைக் காரி

சென்றாளா? கொழுக்கட்டை செய்ய லாமா?

செந்தாழை வாங்குவமா? கடைச் சரக்கை

ஒன்றுக்கு மூன்றாக விற்ப தெந்நாள்?

உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு

குன்றுநிகர் குடம் நிறையக் கறப்ப துண்டா?

கொடுக்கலென்ன? வாங்கலென்ன? இவைதாம் கண்டோம்.தன்னலத்தால் என்ன நடக்கும்"தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாமும்;

தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்பு கின்றோம்;

எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்;

எப்போது தமிழினுக்குக் கையா லான

நமதுழைப்பை ஒருகாசைச் செலவு செய்தோம்?

நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில்,

அமைவாகக் குந்திநினைத் தோமா? இல்லை;

அனைவருமிவ் வாறிருந்தால் எது நடக்கும்?"பெரும்படியான தொண்டு செய்துள்ளோம்கரும்படியின் சாறுநிகர் மொழியாள் இந்தக்

கனிந்தமொழி சொன்னவுடன் அவன்உ ரைப்பான்;

"வரும்படிவீ தப்படிநான் தரும்ப டிக்கு

வாக்களித்த படிகணக்கர் திங்கள் தோறும்

கரம்படி வீதித்தமிழர் கழகத் தார்கள்

கடைப்படியை மிதித்தவுடன் எண்ணி வைப்பார்

பெரும்படியாய்ச் செய்ததுண்டு; படிக்க ணக்கைப்

பேசிவிட்டாய் கண்டபடி" என்று சொல்ல.தமிழ் படிக்க வேண்டும் எல்லோரும்"அப்படியா! அறியாத படியால் சொன்னேன்;

அந்தமிழர் படிப்படியாய் முன்னேற் றத்தை

எப்படியா யினும்பெற்று விட்டால் மக்கள்

இப்படியே கீழ்ப்படியில் இரார்க ளன்றோ?

மெய்ப்படிநம் அறிஞரின் சொற்படிந டந்தால்,

மேற்படியார் செப்படி வித்தை பறக்கும்.

முற்படில் ஆகாததுண்டா? எப்ப டிக்கும்

முதற்படியாய்த் தமிழ்படிக்க வேண்டும்" என்றாள்.தமிழ்நாடு தலைதூக்க உயிரையும் தருவேன்"இழந்தபழம் புகழ்மீள வேண்டும் நாட்டில்,

எல்லோரும் தமிழர்களாய் வாழ வேண்டும்.

வழிந்தொழுகும் சுவைத்தமிழே பெருக வேண்டும்.

மாற்றலர்கள் ஏமாற்றம் தொலைய வேண்டும்.

விழுந்ததமிழ் நாடுதலை தூக்க என்றன்

உயிர்தனையே வேண்டிடினும் தருவேன்" என்றான்.

"பழம்இடுவேன் சர்க்கரைப்பால் வார்ப்பேன் உங்கள்

பண்பாடும் வாய்திறப்பீர் அத்தான்" என்றாள்.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்

Post by சிவா on Fri Apr 23, 2010 9:42 am

அன்றன்று புதுமை"அன்றிலடி நாமிருவர் பழமும் பாலும்

ஆருக்கு வேண்டுமடி! என்றன் ஆசைக்

குன்றத்திற் படர்ந்தமலர்க் கொடியே, மண்ணில்

குவிந்திருக்கும் சுவையுள்ள பொருள்கள் எல்லாம்

ஒன்றொன்றும் மறுநாளே பழமை கொள்ளும்;

ஒன்றொன்றும் சிலநாளில் தெவிட்டிப் போகும்;

அன்றன்று புதுமையடி, தெவிட்ட லுண்டோ?

ஆருயிரே நீகொடுக்கும் இன்பம்" என்றான்.இரவுக்கு வழியனுப்பு விழாநள்ளிரவின் அமைதியிலே மணிவி ளக்கும்

நடுங்காமல் சன்னலுக்குள் புகுந் தென்றல்

மெல்லஉடல் குளிரும்வகை வீசா நிற்கும்;

வீணையில்லை காதினிலே இனிமை சேர்க்கும்;

சொல்லரிதாய். இனிதினிதாய் நாழி கைபோம்;

சுடர்விழிகள் ஈரிரண்டு, நான்கு பூக்கள்,

புல்லிதழிற் போய்ஒடுங்கும்; தமைம றந்து

பூரிப்பார் நலம்பாடி இரவு செல்லும்.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்

Post by சிவா on Fri Apr 23, 2010 9:43 am

இரண்டாம் பகுதி

விருந்தோம்பல்சிந்துக் கண்ணி

தலைவன் கடைக்குச் சென்றான்
அன்பு மணவாளன்

ஆன வுணவருந்திப்

பின்பு, மனைவிதந்த

பேச்சருந்தித்-தன்புதுச்சட்டை யுடுத்துத்

தனிமூ விரற்கடையில்

பட்டை மடித்த

படியணிந்து-வட்டநிலைக்கண்ணாடி பார்த்துக்

கலைந்த முடியதுக்கிக்

"கண்ணேசெல் கின்றேன்

கடைக்"கென்றான்-பெண்வாய்க்கடைவிரித்துப் புன்னகைப்புக்

காட்டி "நன்" றென்றாள்;

குடைவிரித்துத் தோள்சாய்த்துக்

கொண்டே-நடை விரித்தான்.தலைவி விருந்தினரை வரவேற்றாள்தன்னருமை மக்கள்

தமிழ்க்கழகம் தாம்செல்லப்

பின்னரும் ஐயன்செல்லப்

பெண்ணரசி-முன்சுவரில்மாட்டி யிருந்த

மணிப்பொறி "இரண்டென்று"

காட்டி யிருந்ததுவும்

கண்டவளாய்த்-தீட்டிச்சுடுவெயிலில் காயவைத்த

சோளம் துழவி

உடல்நிமிர்ந்தாள் கண்கள்

உவந்தாள்-நடைவீட்டைத்தாண்டி வரும்விருந்தைத்

தான்கண்டாள் கையேந்திப்

பூண்ட மகிழ்வால்

புகழேந்தி-வேண்டி"வருக!அம் மாவருக!

ஐயா வருக!

வருக! பாப்பா தம்பி"

யென்று-பெருகன்பால்பொன்துலங்கு மேனி

புதுமெருகு கொள்ள,முகம்

அன்றலர்ந்த செந்தா

மரையாக-நன்றேவரவேற்றாள்; வந்தவரின்

பெட்டி படுக்கை

அருகில் அறைக்குள்

அமைத்தாள்-விரைவாகஅண்டாவின் மூடி

அகற்றிச்செம் பில்தண்ணீர்

மொண்டுபுறந் தூய்மை

முடிப்பிரென்று-விண்டபின்சாய்ந்திருக்க நாற்காலி

தந்தும்வெண் தாழையினால்

வாய்ந்திருக்கும் பாய்விரித்தும்

மற்றதிலே-ஏய்ந்திருக்கவெள்ளையுறை யிட்டிருக்கும்

மெத்தை தலையணைகள்

உள்ளறையில் ஓடி

யெடுத்துதவி-அள்ளியே


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்

Post by சிவா on Fri Apr 23, 2010 9:44 am

தேன்குழலும் உண்ணத்

தெவிட்டாத பண்ணியமும்

வான் குழலாள் கொண்டுவந்து

வைத்தேகி-ஆன்கறந்தபாலும் பருகும்

படிவேண்டி, வெற்றிலைக்கு

நாலும் கலந்து

நறுக்கியகாய்-மேலுமிட்டுச்செந்தாழை, பல்பூக்கள்

பச்சையடு சேர்கண்ணி

வந்தாள் குழல்சூட்டி

மற்றவர்க்கும்-தந்துபின்நின்ற கண்ணாடி

நெடும்பேழை தான்திறந்(து)

இன்று மலர்ந்த

இலக்கியங்கள்-தொன்றுவந்தநன்னூற்கள் செய்தித்தாள்

நல்கி,"இதோ வந்தேன்"

என்று சமைக்கும்

எதிர்அறைக்குள்-சென்றவளைவிருந்தினர் வரவை மாமன் மாமிக்குவந்தோர்கள் கண்டு

மலர்வாய் இதழ்நடுங்க,

"எந்தாயே எந்தாயே

யாமெல்லாம்-குந்திவிலாப்புடைக்க வீட்டில்இந்த

வேளையுண வுண்டோம்

பலாப்பழம்போல் எம்வயிறு

பாரீர்-நிலாப் போலும்இப்போதும் பண்ணியங்கள்

இட்டீர் அதையுமுண்டோம்

எப்போதுதான் அமைதி"

என்றுரைக்க-"அப்படியா!சற்றேவிடை தருவீர்

தங்களருந் தோழர்தமைப்

பெற்றெடுத்த என்மாமன்

மாமியர்பால்-உற்ற செய்திசொல்லிவரு வேன்"என்று

தோகை பறந்தோடி

மெல்ல "மாமா மாமி

வில்லியனூர்ச்-செல்வர்திருமாவரச னாரும்

மலர்க்குழவி அம்மாவும்

நாவரசும் பெண்ணாள்

நகைமுத்தும்-யாவரும்வந்துள்ளார்" என்றுரைத்தாள்

மாமனார் கேட்டவுடன்,


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்

Post by சிவா on Fri Apr 23, 2010 9:44 am

மாமன் மாமி மகிழ்ச்சி"வந்தாரா? மிக்க

மகிழ்ச்சியம்மா!-வந்தவரைக்காணவோ கண்டு

கலகலெனப் பேசவோ

வீணவா உற்றேன்

விளைவதென்ன! நாணல்துரும்பென்றும் சொல்லவொண்ணா

என்றன் உடம்பை

இரும்பென்றா எண்ணுகின்றாய்

நீயும்-திரும்பிப் போய்க்கேட்டுக்கொள் நான்அவரை

மன்னிப்புக் கேட்டதாய்

வீட்டுக்கு வந்த

விருந்தோம்பு;-நாட்டிலுறுநற்றமிழர் சேர்த்தபுகழ்

ஞாலத்தில் என்னவெனில்,

உற்ற விருந்தை

உயிரென்று-பெற்றுவத்தல்;மோந்தால் குழையும்அனிச்

சப்பூ முகமாற்றம்

வாய்ந்தால் குழையும்

வருவிருந்தென்(று)-ஆய்ந்ததிருவள்ளுவனார் சொன்னார்

அதனைநீ எப்போதும்

உள்ளத்து வைப்பாய்

ஒருபோதும்-தள்ளாதே!ஆண்டு பலமுயன்றே

ஆக்குசுவை ஊண்எனினும்

ஈண்டு விருந்தினர்க்கும்

இட்டுவத்தல்-வேண்டுமன்றோ?வந்தாரின் தேவை

வழக்கம் இவைஅறிக

நந்தா விளக்குன்றன்

நல்லறிவே!- செந்திருவே!இட்டுப்பார் உண்டவர்கள்

இன்புற் றிருக்கையிலே

தொட்டுப்பார் உன்நெஞ்சைத்

தோன்றுமின்பம்-கட்டிக்கரும்பென்பார் பெண்ணைக்

கவிஞரெலாம் தந்த

விருந்தோம்பும் மேன்மையினா

லன்றோ?-தெரிந்ததா?"என்றுரைக்க, மாமி

இயம்பலுற்றாள் பின்னர்;


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்

Post by சிவா on Fri Apr 23, 2010 9:45 am

மாமி மருமகளுக்கு"முன்வைத்த முத்துத்

தயிரிருக்கும்-பின்னறையில்பண்ணியங்கள் மிக்கிருக்கும்

பழமை படாத

வெண்ணெய் விளங்காய்

அளவிருக்கும்-கண்ணேமறக்கினும் அம்மாவென்(று)

ஓதி மடிப்பால்

கறக்கப் பசுக்காத்

திருக்கும்-சிறக்கவேசேலத்தின் அங்காடிச்

சேயிழையார் நாள்தோறும்

வேலைக் கிடையில்

மிகக்கருத்தாய்-தோலில்கலந்த சுளைபிசைந்து

காயவைத்து விற்கும்

இலந்தவடை வீட்டில்

இருக்கும்-மலிந்துநீர்பாய்நாகர் கோவில்

பலாச்சுளையின் வற்றலினைப்

போய்நீபார் பானையிலே

பொன்போலே!-தேய்பிறைபோல்கொத்தவரை வற்றல்முதல்

கொட்டிவைத்தேன்; கிள்ளியே

வைத்தவரை உண்டுபின்

வையாமைக்-குத்துன்பம்உற்றிடச்செய்-ஊறுகாய்

ஒன்றல்ல கேட்பாய்நீ;

இற்றுத்தேன் சொட்டும்

எலுமிச்சை!-வற்றியவாய்பேருரைத்தால் நீர்சுரக்கும்

பேர்பெற்ற நாரத்தை

மாரிபோல் நல்லெண்ணெய்

மாறாமல்-நேருறவேவெந்தயம் மணக்கஅதன்

மேற்காயம் போய்மணக்கும்

உந்துசுவை மாங்காயின்

ஊறுகாய்-நைந்திருக்கும்காடி மிளகாய்

கறியோடும் ஊறக்கண்

ணாடியிலே இட்டுமேல்

மூடிவைத்தேன்-தேடிப்பார்இஞ்சி முறைப்பாகும்

எலுமிச்சை சர்பத்தும்

பிஞ்சுக் கடுக்காய்

பிசைதுவக்கும்-கொஞ்சமா?கீரைதயிர் இரண்டும்

கேடுசெய்யும் இரவில்

மோரைப் பெருக்கிடு

முப்போதும்-நேரிழையேசோற்றைஅள் ளுங்கால்

துவள்வாழைத் தண்டில்உறும்

சாற்றைப்போ லேவடியத்

தக்கவண்ணம்-ஊற்றுநெய்யை!வாழை இலையின்அடி

உண்பார் வலப்புறத்தில்

வீழ விரித்துக்

கறிவகைகள்-சூழவைத்துத்தண்ணீர்வெந் நீரைத்

தனித்தனியே செம்பிலிட்டு

வெண்சோ றிடுமுன்

மிகஇனிக்கும்-பண்ணியமும்முக்கனியும் தேனில்

நறுநெய்யில் மூழ்குவித்தே

ஒக்கநின்றே உண்டபின்பால்

சோறிட்டுத்-தக்கபடிகேட்டும் குறிப்பறிந்தும்

கெஞ்சியும் மிஞ்சுமன்பால்

ஊட்டுதல்வேண் டும்தாய்போல்

ஒண்டொடியே!-கேட்டுப்போ;எக்கறியில் நாட்டம்

இவர்க்கென்று நீயுணர்ந்தே

அக்கறியை மேன்மேலும்

அள்ளிவை-விக்குவதைநீமுன் நினைத்து

நினைப்பூட்டு நீர்அருந்த!

ஈமுன்கால் சோற்றிலையில்

இட்டாலும்-தீமையம்மாபாய்ச்சும் பசும்பயற்றுப்

பாகுக்கும் நெய்யளித்துக்

காய்ச்சும் கடிமிளகு

நீருக்கும்-வாய்ப்பாகத்தூய சருகிலுறு

தொன்னைபல வைத்திடுவாய்

ஆயுணவு தீர்ந்தே

அவர்எழுமுன்-தாயேஅவர்கைக்கு நீர்ஏந்தி

நெய்ப்பசை யகற்ற

உவர்கட்டி தன்னை

உதவு-துவைத்ததுகில்ஈரம் துடைக்கஎன

ஈந்து,மலர்ச் சந்தனமும்

ஓரிடத்தே நல்கியே

ஒள்இலைகாய்-சேரவைத்துமேல்விசிறி வீசுவிப்பாய்

மெல்லியலே!" என்றுரைத்தாள்.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்

Post by சிவா on Fri Apr 23, 2010 9:45 am

தலைவி விருந்தினரிடம்கால்வலியும் காணாக்

கனிமொழியாள்-வேல்விழியைமிக்க மகிழ்ச்சி

தழுவ விடைபெற்றுத்

தக்க விருந்தினர்பால்

தான்சென்றே-"ஒக்கும்என்அன்புள்ள அம்மாவே

ஐயாவே, அம்முதியோர்

என்பு மெலிந்தார்

எழுந்துவரும்-வன்மையிலார்.திங்களை அல்லி

அரும்புவந்து தேடாதோ?

தங்கப் புதையல்எனில்

தங்குவனோ-இங்கேழை?பெற்ற பொழுதன்பால்

பெற்றாள்தன் பிள்ளையினைப்

பற்றி அணைத்துமுகம்

பார்க்கஅவா-முற்றாளா?தாய்வந்தாள் தந்தைவந்தான்

என்றுரைக்கத் தான்கேட்டால்

சேய்வந்து காணும்அவாத்

தீர்வானோ-வாயூறிப்போனாரே தங்களது

பொன்வருகை கேட்டவுடன்

ஊன்உறுதி யில்லை

உமைக்கானக்-கூனிவரஇயலா மைக்காக

மன்னிப்புத் தாங்கள்

தரஇயலு மாஎன்று

சாற்றி-வருந்தினார்"என்றுரைத்தால் இல்லத்

தலைவி, இதுகேட்டு,


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்

Post by சிவா on Fri Apr 23, 2010 9:45 am

தலைவிக்கு விருந்தினர்"நன்றுரைத்தீர் நாங்கள்போய்க்

காணுகின்றோம்"-என்றுரைத்தார்.அன்பு விருந்தினர்கள்

அங்கு வருவதனைத்

தன்மாமன் மாமியார்பால்

சாற்றியே-பின்னர்அறையை மிகத்தூய்மை

ஆக்கி, அமர

நிறையநாற் காலி

நெடும்பாய்-உறஅமைத்துச்"செல்லுக!நீர்" என்றுரைத்தாள்

செல்வி; விருந்தினர்கள்

செல்லலுற்றார் சென்றே

வணக்கமென்று-சொல்லலுற்றார்.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்

Post by சிவா on Fri Apr 23, 2010 9:46 am

விருந்தினரைக் கண்ட முதியோர்வந்த விருந்தினர்க்கு

வாழ்த்துரைத்துக் கையூன்றி

நொந்த படியெழுந்தார்

நோய்க்கிழவர்-அந்தோ!விருந்தினர் முதியோர்க்கு"படுத்திருங்கள் ஐயா!

படுத்திருங்கள் அம்மா!

அடுத்திருந்து பேசல்

அமையும்-கடற்கிணையாம்ஆண்டு பலவும்

அறமே புணையாகத்

தாண்டி உழைத்தலுத்துத்

தள்ளாமை-ஈண்டடைந்தீர்!சென்றநாள் என்னும்

செழுங்கடலில் மாப்புதுமை

ஒன்றன்பின் ஒன்றாய்

உருக்காட்டி-பின்மறையக்கண்டிருந்த தங்கள்

அடிநிழலில் காத்திருந்து

பண்டிருந்த செய்தி

பருகோமோ-மொண்டு மொண்டு!வில்லியனூர் விட்டு

விடியப் புறப்பட்டோம்

மெல்லநடக் கும்வெள்ளை

மாட்டினால்-தொல்லை!கறுப்புக்குத் தக்கதாய்க்

காளையன்று வாங்கப்

பொறுப்புள்ள ஆளில்லை!

பூட்டை-அறுத்தோடிமூலைக் குளத்தண்டை

முள்வேலந் தோப்பினிலே

காலைப் பரப்பியது

கண்டுபின்-கோல்ஒடித்துக்காட்டிப் பிடித்துவந்து

வண்டியிலே கட்டிநான்

ஓட்டிவந்தேன்; இங்கே

உயர்வான நாட்டுப்புடவைபல தேவை

அதனால் புதுவைக்

கடைகளிலே வாங்கக்

கருதி-உடன்வந்தேன்"என்றுரைத்துப் பின்னும்

இயம்புகையில், அவ்விடத்தில்


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்

Post by சிவா on Fri Apr 23, 2010 9:46 am

தலைவி விருந்துவந்த பெண்ணாளிடம்நின்றிருந்த வீட்டின்

நெடுந்தலைவி-நன்றேவிருந்துவந்த பெண்பால்

விரும்பிய வண்ணம்

இருந்தொருபால் பேசி

இருந்தாள்-பொருந்தவே.நாவரசும் நகைமுத்தும்நாவரசும் முத்தாள்

நகைமுத்தும் வீதியிலே

பூவரச நீழலிலே

போய்அமர்ந்தார்-மாவரசர்தம்சேதி கூறிப்பின்

தங்களுடல் முன்னைவிடக்

கொஞ்சம் இளைப்பென்று

கூறிடவே-"மிஞ்சாமல்முதியவர்தம் பழைய நினைப்புஇன்னும் இருக்குமோ

இளமைப் பருவந்தான்?"

என்று கிழவர்

இயம்பலுற்றார்-இன்றைக்குமுன்புதைத்த சட்டைக்கு

மூன்றிலொன்று தான்உடம்பு

முன்புதைத்த மூங்கில்தான்

என்என்பு-மின்னுதளிர்மாவிலைபோல் மேனி

வளவளத்துப் போயிற்றே

பாவில் ஐந்துபாடி

மகிழுதற்கும்-நாவிலையேமாடிப் படியேறும்

வாய்ப்பில்லை பேரர்களை

ஓடி அணைக்க

உறுதியில்லை-தேடிவரும்தங்களைப் போன்றோர்க்குத்

தக்கவர வேற்பளித்தே

அங்கிங் கழைத்தேக

ஆர்வமுண்டு-நுங்கின்இளகல் உடலால்

இயலுமா? வில்லின்

வளைவுதனை நாணால்

வகுப்பர்-வளைவுடலைநாளன்றோ ஆக்கிற்று

நாம்என்செய் வோம்அந்த

நாளில் இளமை

நலத்தைஇந்-நாளில்நினைத்தால் நமது

நெடுந்தோளோ இவ்வாறு

அனைத்தும் புரிந்ததென

ஐயந்-தனைக்கொள்வேன்.காட்டாறு காளைப்

பருவமன்றோ, கேளுங்கள்

நீட்டாய் நிகழ்ந்த

சிலவற்றை-நாட்டிலுறு


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்

Post by சிவா on Fri Apr 23, 2010 9:46 am

மற்றும் முதியவர்காவிரியில் என்றன்

கணையாழி தேடுகையில்

பாவிரியப் பண்பாடிப்

பையன்ஓர்-ஆவினைஆற்றில் குளிப்பாட்டும்

போதில் அதன்கால்கள்

சேற்றிலே மாட்டித்

திகைத்தலைநான்-மாற்றுதற்குப்போய்முழுகி னேன்என்

புறமுதுகில் காலூன்றி

மாய்வின்றி மாடு

கரையேறச்-சேய்நானும்மாட்டின்வால் பற்றியதால்

சேற்றினிலே மாயவில்லை;மேலும் முதியவர்கேட்டீரா இன்னும்

கிளத்துகின்றேன்-மாட்டுவண்டிமுன்னிருந்த பிள்ளை

முடிய நெருங்கையில்நான்

பின்னிருந்த கையால்

பிடித்திழுத்தேன்-என்னவலிவாய் எருதிழுத்தும்

ஓடவில்லை வண்டி!

நலிவொன்றும் பிள்ளைக்கு

நண்ண-இலையன்றோ!


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன்

Post by சிவா on Fri Apr 23, 2010 9:47 am

இன்னும் முதியவர்நீட்டில்லை ஒன்று

நிகழ்த்துகின்றேன் நற்பழங்கள்

ஊட்டி வளர்த்தாலும்

உரிமையெண்ணிக்-கூட்டில்இருக்கப் பிடிக்காத

கிள்ளைபோல் இல்லத்

தெருக்கதவை மெல்லத்

திறந்தே-இருட்டில்அயலூரில் கூத்துப்பார்த்(து)

ஆலடியில் தூங்கி

வெயில்வருமுன் வீட்டில்

புகுந்து-துயில்வதுபோல்காட்டிக் கலைக்கழகம்

சென்றேன் கதையில்வந்த

பாட்டை முணுமுணுத்துப்

பாடுகையில்-நீட்டுப்பிரம்பால் கணக்காயர்

பின்ஒன்று வைத்தார்

'அரம்பைவந்தாள்' என்றந்தப்

பாட்டில்-வரும்வரியைவாய்தவறிச் சொன்னேன்

கணக்காயர் வாய்ப்பறிந்து

பாய்தலுற்றார் தந்தைக்கும்

பாக்குவைத்தார்-போய்வீட்டில்நான்பட்ட தாலையிலே

நற்பஞ்சு தான்படுமா?

ஏன்பட்டான் என்றுதான்

யார்கேட்டார்!-தேன்போலும்


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum