ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நதிக்கரை - கவிதை
 T.N.Balasubramanian

வேலன்:-புகைப்படத்தினை வேண்டியவாறு மாற்றி பயன்படுத்திட -Cpix
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

அந்த நாள் -செப் 22 --2016
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கவிதை
 ayyasamy ram

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
 ayyasamy ram

அறிமுகம் சந்திரசேகரன்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
 ayyasamy ram

2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
 ayyasamy ram

பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
 ayyasamy ram

7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
 ayyasamy ram

முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
 ayyasamy ram

இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
 ayyasamy ram

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

நான் சாகவில்லை!
 Dr.S.Soundarapandian

விஷ சேவல் கோழி மீன்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

. விநோதமான வேலை!
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 Dr.S.Soundarapandian

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 Dr.S.Soundarapandian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
 ayyasamy ram

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
 ayyasamy ram

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
 ayyasamy ram

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
 ayyasamy ram

சின்னச் சின்ன வரிகள்!
 Pranav Jain

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
 Pranav Jain

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
 T.N.Balasubramanian

கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு
 T.N.Balasubramanian

ஐபோன் பரிசு
 T.N.Balasubramanian

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 T.N.Balasubramanian

குந்தியும் நிஷாத பெண்களும்
 ayyasamy ram

கா(த)ல் பந்து – கவிதை
 Dr.S.Soundarapandian

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Dr.S.Soundarapandian

நான் விட்டுவிடமாட்டேன் !
 Dr.S.Soundarapandian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 Dr.S.Soundarapandian

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
 Dr.S.Soundarapandian

செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 Dr.S.Soundarapandian

முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா"
 ANUSUYA DHURGAIMUTHU

திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
 ayyasamy ram

''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
 ayyasamy ram

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
 ayyasamy ram

போக்குவரத்து விளக்கு உருவான கதை..!
 ayyasamy ram

திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
 ayyasamy ram

முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
 ayyasamy ram

கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
 ayyasamy ram

கோல்கட்டாவில் இன்று இந்தியா-ஆஸி., இரண்டாவது ஒருநாள் போட்டி
 ayyasamy ram

'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
 ayyasamy ram

மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 M.Jagadeesan

மாறுகை – கவிதை
 T.N.Balasubramanian

கண்ணம்மா – கவிதை
 Dr.S.Soundarapandian

காலம் கற்றுத் தந்த பாடம்…!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 10:31 pm

First topic message reminder :

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு வைரமுத்து


'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா 2006 டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட, முதல் நூலை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.


[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:15 am

காலம் இருக்கே காலம் அது ரெண்டு கையிலயும் புழுதியும் விபூதியும் புடிச்சு உக்காந்திருக்கு. எவ்வளவு பெரிய வெற்றியா இருக்கட்டும்... சீ! மறைஞ்சு போன்னு புழுதியடிச்சு வெற்றிய மறைச்சுவிட்டுப் போயிருது. எவ்வளவு பெரிய துன்பமாயிருக்கட்டும்... சூ! மறந்து போன்னு விபூதியடிச்சுத் துன்பத்த மறக்கடிச்சிட்டுப் போயிருது.

காலத்துக்குன்னு மாறாம இருக்கிற கொணம் இது ஒண்ணுதான். இன்னொண்ணும் கவனிக்கணும் நீங்க. காலம் செய்யிற வேலை என்ன தெரியுமா? மனுசப்பயலச் சன்னஞ் சன்னமாத் தடவிக் குடுத்து அவனச் சாவுக்குத் தயாரிக்கிறது தான்.

ஒரே நாள்ல சாவு வந்தா பயந்து கழிஞ்சிருவான் மனுசன்னு தெரியும் காலத்துக்கு. தோல்வி, கண்ணீரு, சிக்கல் சீக்கு ஏமாற்றம் பிரிவு உள்சாவு வெளிச் சாவு இடி மழை பூகம்பம் காத்து இது களக் காட்டிக்காட்டி மனுசனச் சின்னச் சின்னதாச் சாகவச்சு, கால் மாகாணி உசுரை மட்டும் விட்டுவச்சுருக்கு கடைசிச் சாவுக்கு. ஒவ்வொரு பிறப்பும் இந்த பூமிக்கு ஒரு படிப்புப் படிச்சுட்டுப் போக வருது ஒவ்வொரு இறப்பும் இந்த பூமிக்கு ஒரு பாடம் சொல்லிட்டுப் போகுது யாரு பெறந்தாலும் ஆகாயத்துல வெள்ளி மொளைக்கிறதுமில்ல யாரு செத்தாலும் சூரியன் நெஞ்சப் புடிச்சு நின்டுபோறதுமில்ல.

காலம்தான் ஞானம் காலத்தைப் போல மனசு வச்சிருக்கிறவன் ஞானி. காலம் வீசியடிச்ச விபூதியில ஆறே மாசத்துக்குள்ள அழுத கண்ணு காஞ்சுபோச்சு கனகத்துக்கும் பவளத்துக்கும். கல்லு விழுந்த மோதிரத்த கருவாச்சிக்கே அவுக திருப்பிக் குடுக்க, அவ அதை வித்து சொக்கத்தேவன்பட்டி யிலயே பொட்டிக்கடை போட்டுக் குடுத்தா கைம்பொண்டாட்டிக ரெண்டு பேருக்கும்.

அந்த வருசம் காடு வெளஞ்சுபோச்சு கருவாச்சிக்கு. வரவு வந்தா செலவும் சேந்து வருமா இல்லையா... வந்திருச்சு.

அழகுசிங்கத்தப் பள்ளிக்கூடம் சேக்கிறேன்னு ஆடம்பரம் பண்ணி அதிரி புதிரி பண்ணிப்புட்டா.

சாணி மொழுகின மூங்கில் மொறத்துல ஒரு சீப்பு வாழப்பழம் வச்சு, ஒரு செரட்டையில குங்குமம் நெப்பி, ஒரு செரட்டையில சந்தனம் கொழச்சு, அச்சுவெல்லம் பரப்பி, வெத்தல பாக்கு மேல தச்சண வச்சா ஒண்ணே கால் ரூவாய.

"எங் குலதெய்வமா நெனச்சுக் கும்புட றேன் சாமி உருப்படி பண்ணிவிட்ரு என் ஒத்தமகன" கண் ணெல்லாம் தண்ணி தவ்வக் கை புடிச்சுக் குடுத்தா கண்ணாடி வாத்தியார்கிட்ட. வாத்தியாரப் பாத்தவுடன பயந்துபோனான் பய. கண்ணாடி போட்ட சிங்கம் கையில பெரம்பு வச்சு நிக்கிற மாதிரியே இருக்கு அவரப் பாக்கையில அவனுக்கு. பாவப்பட்ட மொசக்குட்டிகளாத் தெரியிறாங்க பள்ளிக்கூடப் பயக.

"ஒம் பேர் சொல்லப்பா..."

தன் பேரு தனக்கு மறந்துபோனவன் மாதிரி ரொம்ப நேரம் யோசிச்சு அழக முழங்கிட்டுச் சிங்கத்தத் துப்பினான்.

"வயசு என்னம்மா பிள்ளைக்கு?"

"அஞ்சு முடிஞ்சிருச்சு பங்குனி யோட ஆறு ஆரம்பம்."

பயல உத்துஉத்துப் பாத்தாரு வாத்தியாரு.

சின்னக் கண்ணு மொக்க மூக்கு பட்ட நெத்தி பணியாரக் கன்னம் அழுத்தமான உதடு ஆத்தா நெறம் கல்லு ஒடம்பு கனத்த நெஞ்சுக்கூடு. சும்மா சொல்லக் கூடாது பஞ்சமில்லாமக் கஞ்சி ஊத்தி வஞ்சகமில்லாமத்தான் வளத்திருக்கா கருவாச்சி.

"அழகுசிங்கம்... சோத்தாங்கையத் தூக்கித் தலையச் சுத்தி மறு காதத் தொடு." செய்ய மாட்டேன்னு மொதல்ல கூனிக்குறுகிக் குன்னிப் போன பய அப்பறம் என்ன நெனச்சானோ ஏது நெனச்சானோ எக்கி எக்கித் தொட்டேபுட்டான்.

"நீ சொன்னது சரிதான். அஞ்சு வயசு ஆகாத கையி தலையச் சுத்திக் காது தொடாது தாயி நீ போயிட்டு வா. போப்பா... போயி உக்காரு."

உடம்புக்கு வெளிய புடைச்சு நிக்கிற புதுச்சட்ட மாதிரியே பொருந்தாமப் போயி உக்காந்தான் பாவம். அடிச்சு வளக்க அப்பனும் அணச்சு வளக்க ஆத்தாளும் இல்லாத பிள்ளைக பெரும்பாலும் புத்தியழிஞ்சு பொழப்பத்துப் போயிருதுக. அப்பன் இல்லாம ஆத்தாளோ, ஆத்தா இல்லாம அப்பனோ பிள்ள வளக்கிறது ஒத்தக் கையில தயிர் கடைஞ்ச கததான். வெண்ணெயும் தெரளாது வெளங்கவும் வெளங்காது.

தகப்பன் இல்லாத பிள்ளைன்னு தாங்கித் தாங்கி வளத்ததுல அழகுசிங்கம் அடிமாறிப் போறதக் கண்டுபுடிக்க மாட்டாமப் போனா கருவாச்சி. மொளைச்ச முள்ள மொளையிலயே கிள்ளாம, அவன் குத்தங்களக்கூட அவ கொண்டாட ஆரம்பிச்சது தப்பாப் போச்சு.

பசுமாட்டுல பால் பீச்சிக்கிட்டே யிருப்பா கருவாச்சி பாத்துக்கிட்டே யிருப்பான் அழகுசிங்கம். சீலயத் தெரட்டி ஏத்திக்கிட்டு ரெண்டு கால் இடுக்குல பித்தளச் செம்ப வச்சு, சொரசொரன்னு இருக்கிற காம்புல வெண்ணெயத் தடவி நீவிவிட்டு அவ சர்ருசர்ருன்னு பீச்சுற சத்தமிருக்கே, சரஸ்வதி வீணை வாசிச்சா அத நிறுத்திட்டு இங்க வந்து இதக் கேக்கணும்.

செம்பு நெறை யுதோ நெறையலயோ மூணு காம்பு எனக்கு ஒரு காம்பு ஒங் கன்டுக்குன்னு ஒதுக்கிவிட்டு எந்திரிச்சிருவா. கன்ட அவுத்துவிடு கண்ணு அழகுசிங்கம்னு சொல்லிட்டு அவ வேலயப் பாக்க அடுப்படிக்குப் போயிருவா. கொண்ணவாயன் அந்த நேரம் கூலம் புடுங்கப் போயிருவான்.

ரெண்டு மாசமாச்சு... மூணு மாச மாச்சு. தோலு மாதிரி சுருங்கிக்கிட்டே போகுது கன்டுக்குட்டி. சாலு மாதிரி விரிஞ்சுக்கிட்டே வாரான் அழகுசிங்கம். என்னா ஏதுன்னு கடைசியில கண்டு புடிச்சா... கன்டுக்குட்டியக் கொலபட்னி யாப் போட்டுப்புட்டு, உள்ள தலையச் செலுத்தி ஒத்தக் காம்புப் பால இவனா உறிஞ்சுக்குடிச்சிருக்கானய்யா இத்தன நாளா.

ஏண்டா! நீ கருவாச்சிக்குப் பொறந் தியா, காராம் பசுவுக்குப் பொறந் தியா?ன்னு அவனப் பாவப்பட்ட ஒரு பார்வை பாக்குது கன்னுக்குட்டி.

"எப்பிடிடா மகனே பசுமாட்டுக் கவுட்டுக்குள்ள பயப்படாமப் பாலு குடிக்கிற வித்தை படிச்ச?" விரல் தடம் பதிய அடிச்சிருக்க வேண்டிய காரியத்துக்கு, கன்னத்துல உதடு பதிய முத்தம் குடுத்து உச்சி குளுந்துபோனா கருவாச்சி. தப்ப மெச்சிக்கிட்டேயிருந்தா, அதுவே தர்மமாயிருதா இல்லையா. அந்தக் கணக்காகிப்போச்சு அழகுசிங்கம் கத.

முந்தானையில முடிஞ்சுவச்ச காச ஆத்தா அவுக்கிற வரைக்கும் பொறுமை யில்ல அறுத்துப்புடறான் அறுத்து. அடுப்புல கூட்டிவச்ச கறி வேகிற வரைக்கும் பொறுமையில்ல அகப்பைய அளாவி அரிச்சுப்புடறான் அரிச்சு. ஒடைச்ச தேங்காயில சில்லெடுக்கிற வரைக்கும் பொறுமையில்ல சிரட்டை யோட சேத்துக் கடிச்சுப்புடறான் கடிச்சு. வீட்ல வளக்குற புலி பம்முறதும் பாயறதும் செல்லச் சேட்ட பண்றதும் குட்டியா இருக்கி றப்ப கொண்டாட்ட மாத்தான் இருக்கும். மீசையும் நகமும் வளந்திருச்சுன்னா அப்பறம் அதப் பாயில போட்டுப் பக்கத்துலயா போயிப் படுக்க முடியும்?

கருவாச்சி ஒண்ணு நெனைக்க காலம் என்னமோ நெனைக் குது. விளையும் பயிர் மட்டுமா களையுந் தான் தெரிஞ்சு போகும் மொளை யிலயே.

"அடே அழகு சிங்கம்! வாடா இப்படி... அனா எழுதச் சொல்லித் தர்றேன்"வாஞ்சையாத்தான் கூப்பிட்டாரு வாத்தியாரு. வேப்ப மரத்து நெழலு வெள்ள மணலு. ஆனாலும் ஆணி மேல உக்காந் தவன் மாதிரிதான் உக்காந்தான் அழகுசிங்கம்.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:16 am

"நல்லாப் பாத்துக்க"உள்ளங்கையில மெழுகி மணலச் சமம் பண்ணி நிதானமா அன்னு எழுதுனாரு எழுதி எழுதி அழிச்சாரு. அழிச்சு அழிச்சு எழுதுனாரு. கடைசியா எழுதுனத அழிச்சாரு. "இப்ப நீயே உன் கையால அனா எழுதி அந்த எழுத்து மேல இத அடுக்குடா"ன்னு புளிய வெதைகள அள்ளிப் போட்டாரு. எழுதுறான் பய எழுதுறான் விரல் வணங்கல. அவுக்கு ஆரம்பச் சுழியான அந்த வட்டமே வருவனாங்குது. இந்த அவுக்குள்ளயே ஆயுசு முடிஞ்சாலும் முடிஞ்சிரும்னு நெனைக்கிறான் பய. எல்லாப் பயலுகளும் அரைகுறையா எழுதிட் டானுக. புளிய வெதை யையும் எண்ணம் போல அடுக்கிட்டானுக. இவன் பொழப்பு சுழியிலயே மாட்டிக்கிட்டுச் சுத்துது. ரெட்டக் குழல் துப் பாக்கி மாதிரி அவனையே குறிவைக்குது கண்ணாடிக் குள்ள இருக்கிற வாத்தி யார் கண்ணு. முரட்டுப் பயதான் அன்னைக்கித் தான் மொதமொதலா வேர்த்துச்சு பாவம் அவனுக்கு. கையப் புடிச்சுப் புடிச்சு எழுதிக்காட்டி யும் கதை ஆகல கடைசியில வச்சாரு ஒரு குட்டு. தலைக்குள்ளயிருந்த ஒண்ணு பாக்கியில்லாம எல்லாம் செதறிச் சின்னாபின்னமாகி திரேகத்துக்குள்ள அங்கங்க போயி ஒதுங்கிட்ட மாதிரி பொறி கலங்கிப்போச்சு. வலி தெரிஞ்சதும் அவன் வம்சத்துக் குண்டன கோவம் உள்ளுக்கிருந்து எந்திரிச்சுருச்சு. வாத்தியார் அங்கிட்டுத் திரும்பவும் புளிய வெதைகள அள்ளி ரெண்டு கால் சட்டைப் பைகளுக்குள்ள யும் போட்டுக்கிட்டு விறுவிறுவிறுன்னு வீட்டுக்கு வந்துட்டான்.

கொண்ணவாயன விட்டுப் புளிய வெதைய வறுத்து ஊறவச்சான். விடிய்ய ஆத்தாகிட்டக் குடுத்து அவிச்சு அவனே தின்டுபுட்டான். அப்பறம்தான் தெரிஞ்சது அவன் அவிச்சுத் தின்னது பள்ளிக்கூடத் துப் புளிய வெதைன்னு. பெறகு என்ன பண்றது?

கூலிக்கு வந்த புளியம் பழத்தையெல்லாம் வாசல்ல போட்டு ஒரே தட்டாத் தட்டி ஓடெடுத் துப் பழத்தக் கோணி ஊசியில குத்திக்குத்தி வெத பிதுக்கியெடுத்து அரப்படி வெத சேத்து வாத்தியாருக்குக் குடுத்துக் கெஞ்சிக் கூத்தாடிப் பிள்ளைய மறுபடியும் சேத்துவிட்டா கருவாச்சி. ஆனா விதி விட்டுச்சா? எழுத்துல தீந்த பகை எண்ணுல வந்து முட்டிக் கிருச்சு. ஒண்ணு ரெண்டு மூணு சொல்லிக் குடுத்தாரு வாத்தியாரு. இவரு சொல்லச்சொல்ல பயக ஒரே குரல்ல மொத்தமாத் திருப்பிச் சொல்லணும். மொத்தமாச் சொல்றதுல ஒரு வசதி. சரியாச் சொல்லத் தெரியாத பயக கூட்டத்தோட கூட்டமா தப்ப நசுக்கிச் சத்தத்துல தேச்சுவிட்ரலாம்.

வாத்தியாரும் சின்னப் பிள்ளையில அப்படித் தேச்சுவிட்ட ஆள்தான..? "இப்பத் தனித்தனியாச் சொல்லுங்க"ன்னாரு அங்க மாட்னான் அழகுசிங்கம். ஒண்ணு ரெண்டு மூணு சொல்லி வந்ததுல இருவத்தி ஒம்போது வரைக்கும் ஆண்டவன் அருள் அவன் பக்கந்தானி ருந்துச்சு. முப்பது வந்தவுடன கடவுளே அவனக் கைவிட்ருச்சு. முப்பதுன்னு சொல்லத்தான் அவன் நெஞ்சு நெனைக்குது. ஆனா நுப்பதுன்னு தான் நாக்குல வருது.

"நுப்பது இல்லடா முப்பது."

"நுப்பது."

"மு...மு...மு...சொல்லு."

"மு...மு...மு."

"வந்திருச்சு இப்பச் சொல்லு. மு...மு...மு... முப்பது."

"மு...மு...மு... நுப்பது."

சில பொம்பளைக ஒழுங்காத்தான் தோச போடுவாக. பெரட்டிப் போடத் தெரியாமப் பிச்செடுத்துருவாக. அந்த மாதிரி இந்தப் பய எழுத்துல ஒழுங்கா இருக்கான் வார்த் தையில ஒலப்பிடுறானே!

அவன் பாவம் வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றான்? வரல. "இன்னைக்கு ஒனக்காச்சு எனக் காச்சுடா மகனே... பாத்திருவோம்." மனசுக்குள்ள வேட்டிய மடிச்சுக் கட்டி ஒரு மல்யுத்தத்துக்குத் தயாராயிட்டாரு வாத்தியாரு.

"இப்பச் சொல்றா மு...மு...மு... முப்பது."

"மு...மு...மு... நுப்பது."

என் முப்பத்தோரு வருச அனுபவத் தையும் இவன் வம்புக்கிழுக்கிறானே! தோல உரிச்சுக்க. நாக்கத் துண்டா அறுத்துட்டுப் போயி விடிய விடிய வீட்ல வச்சுச் சொல்லிக்குடு. வரவே வராதுங்கிறான் பய. அவன் கண்ணு ரெண்டும் கம்மாயாப் போச்சு. பொத்திப்பொத்தி வச்சிருந்த பொறுமை ஒடைஞ்சு வேர்வையா ஓடுது வாத்தியாருக்கு. கொதிக்கிற வெயில்ல குறுமணல்ல கடைசி மணி அடிக்கிற வரைக்கும் ஆள முட்டிக் கால் போடவச்சிட்டாரு. முழங்கால்ல முள்ளுத் தச்ச மாதிரி வலி. பள்ளிக் கூடத்துப் பயக நாப்பத்திரண்டு பேரும் கேவலமாப் பாக்கிறாங் களேங்கிற *உள்ளிங்கம். நம்ம நல்லதுக் குத்தான வாத்தியாரு செஞ்சாருன்னு நெனைக்காம, பழிவாங்குற எண்ணம் பதிபோட்டு உக்காந்திருச்சு அவன் மனசுல.

ஒவ்வொரு வகுப்பையும் ரெண்டு ரெண்டு வருசமாத் தாண்டி வந்ததுல அஞ்சாவது முடிக்குமுன்ன பதினாலு வயசாகிப் போச்சு அழகுசிங்கத்துக்கு. பதினாலு வயசுலேயே முக்கா ஆம்பளைக்கும் முழு ஆம்பிளைக்கும் மத்தியில தெரண்டு நிக்கிறான். கூடப் படிக்கிற பயலுக அவனப் பாத்துப் பயப்படறாங்க. வாத்தியாரப் பழி வாங்கணுங்கிற எண்ணம் மட்டும் தண்ணிக்குள்ள கெடக்கிற கல்லு மாதிரி அப்படியே கெடக்கு மனசுக்குள்ள.

காப்பரிச்சை லீவு. ஊருக்குப் போகலாம்னு அன்னஞ்சியில நிக்கி றாரு வாத்தியாரு. ஒரு நாளைக்கு ஒரே ஒரு பஸ்ஸுதான் அன்னஞ்சிக்குள்ள வந்து போகும் அத விட்டா அடுத்த நாளுதான். பொட்டிக்கடையில கூட்டாளிகளோட கடல உருண்ட வாங்கித் தின்னுக் கிட்டு வாத்தியாரையே பாக்குறான் அழகுசிங்கம்.

"இன்னைக்குப் பழிதீத்திர வேண்டியதுதான்."

வந்திருச்சு பஸ்ஸு.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:16 am

ஒரு கையில பொட்டியும் மறு கையில வாழத்தாரும் புடிச்சு அவரு ஏறப்போக மளார்னு தவ்வி ஓடி வந்து வாத்தியார் காலக் கெட்டியாப் புடிச்சுக்கிட்டு, "என்னிய மன்னிச்சிருங்கய்யா... என்னிய மன்னிச்சிருங் கய்யா"ன்னு கத்திக் குமிச்சுக் கதறி அழுகிறான் அழகுசிங்கம்.

"ஏய் விடப்பா... ஏய் விடப்பா."

"விட மாட்டேன்ய்யா... ஒங்க கால எங் கண்ணீர்ல கழுவுனாத்தான் எம் பாவம் போகும்."

புடிச்ச உடும்புப்பிடி இறுகிக்கிட்டே போகுது. தவறி விழுந்த பொட்டி தொறந்திருச்சு வாழத்தார்ல அஞ்சாறு காயி உதிந்திருச்சு. கண்டக்டர் பொறுத்துப் பொறுத்துப் பாத்தான். வாத்தியார் வாராப்ல இல்ல பையன் விடுறாப்ல இல்ல. "போலாம் ரைட்டு"ன்னு போயிட்டான் பாவம். பஸ்ஸு போகவும் ஒண்ணுமே நடக்காதது மாதிரி அவன்பாட்ல போயிட்டான் அழகுசிங்கம். அனாதிக் காட்ல நின்ன வாத்தியாரு அடுத்த நாள் வரைக்கும் காத்திருந்தாரு அடுத்த வண்டிக்கு.

இந்தச் சம்பவம் பட்டிதொட்டி யெல்லாம் பரவிப்போச்சு.

"யப்பா சடையத்தேவா! வம்சக் கூரோட பெறந்து வளந்திருக்கானப்பா ஒன் பேரன். குடும்பி பிடிக்காம விட மாட்டானப்பா ஒன் குடும்பத்த. சரிதான்! கரட்டுக்காட்டுக்கு மொரட்டு மம்பட்டி இனி என்னென்னா கூத்து நடத்தப்போறானோ... பாப்பம்."

காலம் ஒரு தார்முள்ளத் தயார் பண்ணிருச்சு சடையத்தேவரு கூன்ல அழுத்திக் குத்துறதுக்கு!

மேலுதட்டுல சாம்பல் பூத்த மாதிரி சன்னமா இருந்த மீச கரு கருன்னு கறுப்படிக்க அஞ்சாவது முடிச்சிட்டான் அழகுசிங்கம். கைக்குச் சிக்காத காத்து மாதிரி வசத்துக்கு வராத ஆளா வளந்து நிக்கிறான் பய. அவனுக்குக் காசு ஒண்ணுதான் கடவுள் தின்பண்டம் வாங்கித் தார ஆளு தெய்வம். அன்னாக்கயிறுங்கிறது அவனுக்கு வெறும் கோவணந் தாங்கின்னு நெனச்சீகளா? இல்ல... ஓட்டை முக்காத் துட்டக் கோர்த்துவைக்கிற உண்டியல்.

அவனுக்குப் புடிச்சது பணியாரம் புடிக்காதது பள்ளிக்கூட வாத்தியார். அவனளவுல ஆத்தா நல்லவ தான் பாவம் ஆனா உப்புக் கல்லுக்கு ஆகாதவ. அவனுக்குப் புடிச்ச பொழுது போக்கு கால்சட்டையக் கழத்தி இது என்னதில்லன்னு எறிஞ்சிட்டு முண்டமாக் கொளத்துல தவ்வி முங்கு நீச்சல் அடிக்கிறது. ஒரு பெரிய கெட்ட கொணம் இருக்கு அவன் பெறவியிலேயே... ஒரு ஆள மொத மொதலா மூஞ்சி பாக்குறப்ப அவனுக்கு என்ன தோணுதோ அது மண்டையப் போடற வரைக்கும் மாத்திக்கிரமாட்டான்.

ஒரு நல்ல கொணமும் இருக்கு. ஒரு காரியத்துக்குச் சரின்னு தலையாட்டிட்டான்னா ஆட்டுன தலைய அடகுவச்சா கிலும் அத முடிக்காம விட மாட்டான். அகமலையில ஒரு ஆளு கிட்டக் கஞ்சா வாங்கி, அல்லி நகரத்துல கொண்டாந்து ஒரு வீட்ல சேத்துட்டா, கால்ரூவா கூலிங்கிறது பேச்சு. அகமலக்காரன் குடுத்த கஞ்சாவப் பழைய துணியில பரப்பி, அத இடுப்பச் சுத்தி இறுக்கிக் கட்டி முடிபோட்டு, ஏத்துன சட்டைய இறக்கிவிட்டு, நான்தான் காந்தி மகாத்மான்னு ஒண்ணுந் தெரியாதவன் மாதிரி ஒத்தையடிப் பாதையப் புடிச்சு அல்லிநகரம் வந்து சேந்தான் அழகுசிங்கம். இடுப்புக் கஞ்சாவ அவுத்து நிறுத்துப் பாத்தான் அல்லிநகரத்து ஆளு. பாத்துட்டு இந்தாடா காசுன்னு குடுத் தான். எண்ணிப்பாத்தா முக்காலணா.

"கணக்குப்படி கால்ரூவா தரணுமே... என்னப்பா இது முக்காலணா..?" அவன் அப்பன் மாதிரியே மூக்கு மேல கோபம் முட்டிநிக்குது அழகு சிங்கத்துக்கு.

"கஞ்சா முழு வீச இல்லப்பா, நிறுத்தா முக்கா வீசதான் வருது."

"கொறைஞ்சா நானா பொறுப்பு..? குடுத்தவனக் கேளு."

"கொறையுதே கால் வீசக் கஞ்சா. அதக் குடுத்துட்டுக் காசு வாங்கிட்டுப் போ."

"அகமலையில குடுத்தத அல்லிநகரத் துல சேத்துட்டேன். நான் எதையும் எடுக்கல." "சத்தியமா எடுக்கல?" "எங்க ஆத்தா மேல சத்தியமா நான் எடுக்கல."

"பெறகென்ன அப்பன அறியாத நாயி... ஆத்தா மேலதான் சத்தியம் பண்ணுவ."

அம்புட்டுத்தான். அழகுசிங்கத்துக் குள்ள இருந்த இத்துனூண்டு மனுசனும் நான் போயிட்டு வாரேன்னு போயிர ஒறங்கிக்கிட்டிருந்த முக்கா மிருகம் முழிச்சிருச்சு. முட்டுக்கெடா மாதிரி தலையக் கவுந்து கஞ்சாக்காரன் நெஞ்சில முட்டித் தலைய விசுக்குன்னு தூக்கி அவன் தாடையில தட்டி மோவாயப் பேத்துட்டு இன்னது நடக்குதுன்னு தெளியுமுன்ன அவன் சில்லி மூக்க ஒடச்சு, எடது கையத் தூக்கிப் புலியடிச்சது மாதிரி அடிச்சான் பாருங்க... உதடு வெடிச்சு ஒழுகுது ரத்தம்.

அந்த முக்காலணாவ எறிஞ்சிட்டுக் கால்ரூவாய எடுத்துக்கிட்டு, "புடிங்கடா... புடிங்கடா..." ங்கிற சத்தம் அடங்குறதுக்குள்ள விசுக்குன்னு ஏறி வேலி தவ்விச் சோளக்காட்டு வழி ஓடிவந்துட்டான் சொக்கத்தேவன் பட்டிக்கு.

அப்பன் இல்லாத பயன்னு முதுகுக்குப் பின்னால லேசுபாசா பேசுவாகளே தவிர இப்படி மூஞ்சியில குத்துன மாதிரி ஒரு பய சொன்னதில்ல. பருத்திக் கெடங்குல தீ விழுந்த மாதிரி பத்திக்கிருச்சு இன்னைக்கு. அருள் வந்த கோடங்கி மாதிரி ஆவேசமா வாரான் ஊருக்குள்ள. களையெடுத்த காசுக்குச் சோள அரிசியும் சூத்தக் கத்தரிக்காயும் வாங்கி வீட்ல வச்சுட்டுக் கனகம் வீட்டுக்குப் போயிக் கரண்டியில எரவல் தீ வாங்கிட்டு எதுக்க வர்றா கருவாச்சி. ஊரே வேடிக்க பாக்க நடுத் தெருவுல ஆத்தாள வழிமறிக்கிறான் அழகுசிங்கம். என்னைக்குமில்லாம அன்னைக்கி அந்த வேசம் கட்டி வந்தவனப் பாத்து, கையில இருக்கிற நெருப்பு வயித்துலயும் எரிய நிக்கிறா கருவாச்சி.

"ஆத்தா! நீ நல்லவதான?"

"அய்யா அழகுசிங்கம் ! ஒனக்கு என்னய்யா ஆச்சு?"


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:16 am

"இந்த ஆச்சு போச்சுங்கிற பேச்ச விட்ரு சொல்லு, என்னிய நீ எவனுக்குப் பெத்த?"

"நீ என் மகன்டா ராசா." ஈரக்கொல நடுங்குது அவளுக்கு.

"ஆமா! பொட்டச்சி நீயே பெத்துக்கிட்டியாக்கும். இந்த நெருப்பு மேல சத்தியம் பண்ணு. என்னிய நீ யாருக்குப் பெத்த?" வில்லடிபட்ட மண்பான கடகட கடன்னு ஒழுகிற மாதிரி சொல்லடிபட்ட பொம்பள சொதசொதசொதன்னு அழுகுறா.

"சடையத்தேவரு மகன் கட்டையனுக் குத்தாண்டா மகனே ஒன்னிய ஒங்காத்தா பெத்தா."

"அவனுக்குத்தான் என்னியப் பெத்தேன்னு நீ சொல்ற. அவனுக்குத் தான் நான் பெறந்தேன்னு அவன் சொல்றானா?"

ஒரு பதினஞ்சு வயசுப் பய அப்பன அவன் இவன்னு சொல்லக் கேட்டு நெஞ்சுப் புடிச்சு நின்னு தெருவே வேடிக்க பாக்குது.

"சொல்லு, அவனுக்குத்தான் என்னியப் பெத்தேன்னு நீ சொல்ற... அவனுக்குத்தான் நான் பெறந்தேன்னு அவன் சொல்றானா?"

"இன்னைக்கி வரைக்கும் சொல்லல."

"சொல்ல வைக்கிறேன். நாந்தாண்டா ஓந் தகப்பன்னு சொல்ல வைக்கிறேன். சொல்ல வச்சுட்டு நான் இல்லடா ஒம் மகன்னு சொல்லிட்டும் வந்திடறேன்."

"அய்யா ராசா வேணாம்டா. அவனுங்க பழிபாவத்துக்கு அஞ்சாத பாவிகடா. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒன்னு வச்சிருக்கேன். கண்ணப் புடுங்கிக் காக்காய்க்குப் போட்ருவாங்கடா."

"ஆத்தா! சிங்கம்னு பேரு வச்சுப் பன்னிக் குட்டிக்கா பால் குடுத்து வளத்த? சடையத்தேவனச் சந்திக்கு இழுத்துக் கட்டையத்தேவன அவன் ஆத்தா குடுத்த பாலக் கக்க வைக்கல... நான் எங்க ஆத்தாளுக்குப் பெறந்தவன் இல்ல. இது இந்தத் தீ மேல சத்தியம்." ரெண்டு கையிலயும் இறுக்கிப் புடிச்சான் எரியிற தீக் கரண்டிய... கையி வெந்துபோச்சு கனல் அணஞ்சுபோச்சு.

காத்திக மாசம் பேத்திக்குக் காதுகுத்து வச்சாரு சக்கணன். காதுகுத்துங்கிறதுக்கு ரெண்டு மூணு கணக்கு இருக்கு ஊர் நாட்ல. காதுகுத்திட்டா ஒரு ஒச்சமாகிப் போகுமாம் பிள்ளைகளுக்கு. ஒச்சமான பிள்ளைகள எமன் ஏறெடுத்தும் பாக்க மாட்டானாம். காதுகுத்துக்கு இது ஒரு சாமி கணக்கு. காதுல ஓட்ட போட்டதும் சலசலசலன்னு ஒழுகுதா இல்லையா ரத்தம்.... ரத்தம் ஒழுங்கு மொறையா இருந்தா செத்தவெடத்துல ஒறையணும். அப்படி ஒறையற சக்தி இருக்கா இல்லையான்னு சோதிக்கிறதுதான் காதுகுத்தாம் இது ஒரு வைத்தியக் கணக்கு. ரெண்டுமில்லப்பா! அப்பன் சொத்துல பங்கு இல்லாத பொம்பள... பெத்த பிள்ளையச் சாக்கு வச்சு, தனக்கு உண்டானதுல ஒரு பங்கத் தாய்மாமன் மூலமா தண்டம் போட்டு வசூல் பண்றதுதானப்பா காது குத்து. இது காசு பணக் கணக்கு.

எந்தக் கணக்கா இருந்தா எங்களுக் கென்ன... எழுதற மொய்யிக்கு நெஞ்சு முட்ட நெல்லுச் சோறு திங்கலாமில்ல இது சொந்தபந்தம் போடுற சோத்துக் கணக்கு.

தாய்மாமன் ஊரு கெங்குவார்பட்டி பசப்பும் பசையும் உள்ள ஊர் அது. தண்ணி செழிச்ச பூமி. பதினோரு மரக்கா பச்ச நெல்லு, வாழப்பழத்தாரு, வகைவகையாச் சீரு. அய்யம்பாளையம் தேங்கா, பிறந்தவளுக்குச் சீல துணிமணி, மருமகளுக்குக் கொலுசுமணி எல்லாம் சொமந்து சொக்கத்தேவன்பட்டியையே ஒரு சுத்துச்சுத்தி சாதிசனமே பாத்துக்க... ஆடு மாடே பாத்துக்கே... கோழி குருமானே பாத்துக்கன்னு தாம்பாளத் தட்டத் தல மேல சொமந்து வாராக தாய்மாமன் வீட்டு ஆளுக.

மொட்டையடிச்ச தலையில சந்தனம் அப்பி, பகுமானமாப் பட்டுப் பாவாட சட்டை போட்டுத் தாய்மாமன் மடியில உக்கார வச்சு பொன்னாசாரி கடுக்கன எடுத்துத் திருகாணி கழத்தவும் கண்ணுல தண்ணி தவ்வ ஆரம்பிச் சிருச்சு காது குத்துற பிள்ளைக்கு. மாங்கொழுந்து மாதிரி இருக்கிற பிஞ்சுக் காதுமடல்ல குத்தாணி எடுத்துச் சுருக்குன்னு குத்தவும் கொதக் குன்னு குதிச்சிருச்சு ஒரு சொட்டு ரத்தம்.

வீல்னு சங்கூதுற மாதிரி கத்தி அழுகுது சின்னப் புள்ள. ரத்தத்துல தண்ணியடிச்சு, குத்து வாயில சந்தனம் தொட்டு வச்சும் அடங்கல பிள்ளைக்கு அழுக.

"ஏய் கத்துன... ஒன்னியக் கடிச்சுக் கொன்டேபுடுவேன்." அந்தப் பிள்ள அழுத கட்டைக்கு அடுத்த கட்டையில அமட்டுறான் தாய்மாமன்.

இன்னொரு காதுலயும் குத்திருங்க பொறுத்துக்கிர்றேன் இந்த ஆளமட்டும் அமட்டாம இருக்கச் சொல்லுங்கன்னு அதுக்கு மேல கத்துது பிள்ள.

முடிஞ்சது. எல்லாரும் நின்ட எடத்துலயே அங்கங்க ஒக்காந்தாக. எல தெரியாமச் சோறு வாங்கிச் சாப்பிட்டாக. இப்பத் திண்ணையோரமா ஆளுக்குப் பின்னால ஆளுகளா நிக்கிறாக மொய்யெழுத. இங்கதானய்யா சடையத்தேவர் மொதமொதலா மூஞ்சி பாக்குறாரு பேரன. அப்பப்ப எட்டத்துல பாத்தது. கிட்டத்துல பாக்கப் போறது இன்னைக்குத்தான். மொய்யெழுத முன்னுக்க நிக்கிது பெருசு பின்னுக்க நிக்கிறான் பேரன்.

"செல்லாண்டித்தேவர் மகன் சடையத்தேவர்... முழு ரூபா ஒண்ணு எழுதப்பா."

அவன் தன் பேரத்தான் எழுதறானான்னு எழுத்துக்கூட்டிப் படிச்சுக்கிட்டே சடையத்தேவரு நெஞ்சுக்கூட்டு உள் பையில கைவிட்டு, சில்லறைக்கு மத்தியில முழு ரூபாயத் தடவித் தடுமாற.... பின்னுக்கிருந்து ஒரு கொரல் கேக்குது:

"கட்டையத்தேவர் மகன் அழகுசிங்கம் ஒண்ணேகால்... எழுதப்பா."

தடவுன ரூபாய நழுவ விட்டுட்டு, கிழட்டு யான மாதிரி முழு ஒடம்பு திருப்பி எவண்டா அவன்னு பாத்தா அடிச்சு வச்ச கல்லுச் செல மாதிரி கையில ஒண்ணேகால் ரூவாயப் புடிச்சுக் கெழவன ஒரு ஒரசு ஒரசி நிக்கிறான் அழகுசிங்கம்.

தன்னையும் மகனையும் பெணைஞ்சு பெணைஞ்சு செஞ்ச பெறவின்னு ஒரே பார்வையில தெரிஞ்சுபோகுது கெழவனுக்கு. அவன் கண்ணுலயும் மூக்குலயும் அப்படியே அப்பன அப்பி வச்சிருக்க, நெத்தி காது இத்தியாதிகள்ல தன் அடையாளம் பாத்து மனசுல ஒரு இருட்டு மூலையில சந்தோசப்பட்டுக்கிருது கெழட்டு உசுரு.

இருந்தாலும் வைராக்கியத்த விடுமா வங்கெழடு?

மொய் எழுதுறவன் மூலமா எகத்தாளத்துக்கு எசப்பாட்டுக் கட்ட ஆரம்பிக்கிறாரு சடையத்தேவரு.

"காத்துவாக்குல யாரோ கட்டையத்தேவன் மகன்னு சொன்ன மாதிரி இருந்துச்சு. அது எந்தக் கட்டையத் தேவன்னு கேளுங்கப்பா."

படிக்காத சடையத்தேவ னுக்கே இந்த லந்துலகள இருந்துச்சுன்னா... அஞ்சாவது பத்து வருசம் படிச்சவனுக்கு எம்புட்டு இருக்கும்? அடிச்சான் திருப்பி அழகுசிங்கம். "இந்த ஊர்லயே சத்துக் கெட்டுப்போன சடையத்தேவர்ன்னு ஒரு ஆளு இருக்காரில்ல... அந்தச் சடையத் தேவன் மகன் கட்டையன்தான் எங்கப்பன்னு எழுதுங்கப்பா."


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:17 am

"சீலப்பேனு செந்தட்டி சொல்ற தெல்லாம் நம்பி எழுதாதீக. தம் மகன் யாருன்னு எம் மகன்தான் சொல்ல ணுமப்பா."

"கட்டையன்தான் எங்கப்பன்னு நான் சொல்றனப்பா."

"இப்படித்தான் அனாதிக அஞ்சாரு ஊர்ல சொல்லி அலையுது கப்பா."

"எங்க ஆத்தாளாத் தள்ளி வச்சிட்டாலும் அப்பன் இல்லேன்னு போயிராதப்பா."

"அப்பன் வேணும்ன்னு ஆசப் படற பயலுகளயெல்லாம் ஆத்தாளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லுங் களப்பா."

"கெழவா! ஒன்னியக் கொல்லாம விடமாட்டேன்." தத்துப்பித்துன்னு தவ்விட்டான் அழகுசிங்கம். "போடா! போடா! பொடிப் பயலே... சோத்துல கெடக்குற கல்லப் பெறக்க முடியாதவன்
சொக்கநாதர் கோயில் கல்லப் பெரட்டப் போறானாம்." கிண்டல் பண்ணுது கெழடு. கெழவனும் பேரனும் மொத மொதலா முட்டிக்கிட்டு நிக்கிறதப் பாத்ததும் பந்தியில இருந்த பாதி சனம் எந்திருச்சு வந்திருச்சு.

உருமாப் பெருமாத்தேவரு உள்ள வந்து விழுகிறாரு. "ஏம்ப்பா சடையத்தேவா! இதென்னப்பா சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு. அவன் ஒன் பேரன்தான்னு ஊருக்கே தெரியுமில்ல. உரிமை இல்லேன்னாலும் உறவு இல்லேன்னு போயிருமா?"

"அடப் போப்பா... வாந்தியெடுத்த பொருளத்தூக்கி வாய்க்குள்ள போட்டுக்கிர முடியுமா? விட்டா வெறும்பய வீட்டுக் குள்ள வந்திருவான் போலிருக்கே!"

"வர மாட்டேன்னு நெனைக்கிறியா? வாரேன்... விடிய்ய வாரேன்." முறுக்கி நிக்கிற பேரனையும் மூக்கு வெடைக்கிற தாத்தனையும் பக்குவமாப் பிரிச்சுவிட்டுட்டுப் பந்தியில போய் ஒக்காந்திருச்சு ஊரு.

"வேணாமடா மகனே! குடிக்கிற கூழுக்கும் குடியிருக்கிற வீட்டுக்கும் கேடு வந்திருமடா. பொறுமையாயிருந்து பொழைச்சுக் காமிக்கணுமடா"ராத்திரியெல்லாம் மகனக் கட்டிப்புடிச்சு அழுது கோழி கூப்புட ஒறங்கிப் போனா கருவாச்சி.

விடிய்ய... செங்கமங்கலா இருக்கிறப் பவே சடையத்தேவன் வீட்டுக் கதவ ஓங்கி ஒரு எத்து எத்தி உள்ள புகுந்துட் டான் அழகுசிங்கம்.

"ஏய் சடையத்தேவன் கெழவா... மகன் கூப்பிடுறான்னு எங்க அப்பன எழுப்புய்யா." காத்திக மாசக் குளிருக்குப் பயந்து கம்பளிக்குக் கீழே கெடக்கான் கெழவன் ஒண்ணும் பதிலக் காணோம்.

அம்மி மேல படுத்துக் கெடந்த நாய் மட்டும் உர்ருன்னுச்சு. திருகக் கல்லத் தூக்கி நாய் மேல போட்டான். வால் மட்டும் அந்து வள்வள்ன்னு கத்திக் கிட்டுத் தப்பிச்சு ஓடி ருச்சு நாயி. திருகக்கல் விழுந்ததுல ரெண்டா ஒடைஞ்சு துண்டா விழுந்திருச்சு அம்மி.

"இன்னைக்கு அம்மிக் கல்லு. நாளைக்கு ஒங்க தல." சொல்லிட்டு வெளியேறிருச்சு சூறாவளி.

சீ! வெளையாட்டுப் பயன்னு நெனைச்சது வெனையாப் போச்சே. "ஏலே... எந்த ஊர்ல எந்தத் தே...யா வீட்ல கெடக்கானோ? தூக்கிட்டு வாங்கடா கட்டையன." மசங்க வந்து சேந்தான் கட்டையன். "மகனே! மொத மொதலா அப்பனுக்கு அச்சம் வருதடா. பொழைச்ச பொழப் பெல்லாம் போயிரும் போலருக்குடா. மண்புழுவுன்னு நெனச்ச பய காலச்சுத்துற கட்டுவிரியனாகிப் போனாண்டா. என்னடா பண்ணப் போற?"

"அவனக் கண்டதுண்டமா வெட்டிக் கத்திரிக்காச் சாக்குல அள்ளி வருச நாட்டுச் சொனையில சொமந்து போட்டுட்டு வந்திரட்டுமா?"

"நீ செய்வ. அப்புறம் நீயும் நானும் இந்த ஊர்ல இருக்கணுமா இல்லையா..? மகனே சொல்றேன் கேளு. எம்பொழப்பு இன்னைக்கோ நாளைக்கோ. நீ ஊருக் கொரு பொம்பள வச்சு அலையிற. வீட்டுக் கொரு பொம்பள வேணாமா? வம்சத்துக் கொரு வாரிசு வேணாமா? ஒனக் கொண்ணும் வயசு போகல நாப்பத்தஞ்சு தான். இந்த ஊரே ஒண்ணு திரண்டு எதுத்தாலும் சரி கல்யாணம் பண்ணிவைக்கிறேன் கட்டிக்க. வருசத்துக்கொரு பிள்ளைன்னு வாரிசு குடு. நாலு தலமொறையாக் கட்டிக்காத்த சொத்துல ஒரு நாய் வந்து வாய்வைக்கிறதா? நம்ம பொழச்ச பொழப்பு நாறிப்போகாதா? சரி சொல்றா மகனே!"

கட்னவனுக்கு ஒரு பொண்டாட்டி கட்டாதவனுக்குப் பல பொண் டாட்டின்னு திரிஞ்ச கட்டையன் கடைசியில சரி சொல்லிட்டான். தை பெறக்க... வந்துட்டாளய்யா கட்டையன் கட்ன புதுப்பொண்டாட்டி எடது காலத் தூக்கி எட்டுவச்சு.

"ஏய் அங்க பார்ரா... கட்டையன் கட்ன புதுப் பொண்டாட்டிய..."

எரநூறு முந்நூறு வருசமிருக்கலாம் சொக்கத்தேவன்பட்டிங்கிற ஊரு உண்டாகி, அது ஆயுசுக்கும் பாத்ததில்ல அப்படி ஒரு பொம்பளைய. நாந்தான் சூரியன், பொம்பள வேசம் கட்டி பூமிக்கு வந்திருக்கேங்கிற மாதிரி அவ தெரு வழியா நடந்து போறதப் பாத்ததும் சொக்கத்தேவன்பட்டியே உத்து உத்துப் பாத்து சும்மா சொக்கிப்போச்சு சொக்கி.

மஞ்சக் குளிச்ச மாங்கொழுந்து மாதிரி ஒரு நெறம் வளந்து மலந்து நிக்கிற திரேகம் வசதியான ஒயரம் உருண்டை மூஞ்சி ஓயாமச் சிமிட்டுற கண்ணு அவ ஒதட்டுல வெத்தல புடிச்சிருக்கா இல்ல வெத்தலைய ஒதடு புடிச் சிருக்காங்கிற வெவகாரம் தீராத செவப்பு. நான் சண்டைக்குப் போற சாதிக் குதிரைன்னு போறா டக் டக்குன்னு எட்டுவச்சு. ஊருக்குள்ள ஒரு பொம்பள புதுசா வாரேன்னு தண்டோராப் போட்டுக் கிட்டே போகுது அவ தண்டைமணி. சீலக்கட்டு கெண்டைக் காலுக்குமேல அரையரைக்கா அடி ஏறி நிக்க பளீர்னு வந்து பச்சப் பாம்பு மாதிரி கண்ணக் கொத்திப்போகுது பச்ச நரம்பு. எத்தன பவுன் நகை போட்டு வந்திருக்கான்னு இவளக் கேக்காதீக இடுப்பு மட்டும் இருபது பவுனுன்னு கூப்பிட்டுக் கூப்பிட்டுச் சொல்லுது கொசுவம். தூக்காணாங்குருவிக் கூட்ட நிமித்தித் தூக்கிக் கட்ன மாதிரி இருக்கிற அவ கொண்டை என்னையும் சேத்துதான் இவ ஒயரத்த அளக்கணும்னு கூத்தடிக்குது கூத்து.

கட்டையன் பொண்டாட்டி ஊருக்குள்ள வந்ததுல ஒரு சரித்திர சம்பவம் என்னான்னா, லவுக்க போட்டு ஒரு பொம்பள ஊருக்குள்ள வந்தது அதான் மொதத் தடவை. அந்தக் கிளிப் பச்சை லவுக்க அவ திரேகத்த இந்த இறுக்கு இறுக்குதே... துணிய மேனியில போட்டு ஒட்டித் தச்சுக்கிட்டாளா? இல்ல லவுக்கக் குள்ள திரேகத்த நொழச்சுக்கிட் டாளா...? கிண்டல் பழுத்த பெருமூச்சுல கேக்குறாளுக கெழவிக. போறபோக்குல வகுத்துக் குள்ள வெரலவிட்டு, இறுக்கிப் புடிச்ச லவுக்கப்பட்டைய அவ ஒரு சுண்டு சுண்டுறதுல இடி தாக்கி நொறுங்கிக் கெறங்குதுக இளவட்டங்க, அவ வாளிப்பு முப்பதுன்னு மதிக்கச் சொன்னா லும் வயசு என்னமோ இருபத்தேழு தான்.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:56 am

தங்கமூக்கு, தாம்பாளக் கன்னம், மூக்குத்தி, பொட்டுமணி, தண்டட்டி, தாலி, எந்தச் செயில்ல போட்டு என்னிய எப்படிக் கட்டிவச்சாலும் தப்பிச்சே தீருவேன்னு தவ்வப் பாக்குது தனம். பேச்சத் தொலச்சிட்டுப் பித்துப் புடிச்சு, வெத்தலைய ஒரல்ல போட்டுட்டு வெளிய குத்துதுக ருசுக. அவல நெனச்சு ஒரல இடிச்ச மாதிரி இவள நெனச்சு வெளிய இடிச்ச தையாகிப்போச்சு.

அவ அம்சத்தையும் அழகையும் பொறுக்க முடியாத ஒரு பொம்பள சொல்றா: "எத்தன ளைக்கி இந்த அலங்காரத்தோட இவ அலையப்போறா? கோடிச்சீல ஒரு *வெள்ளையோட ரி கொமரிப் பிள்ள ஒரு பிள்ளையோட சரி."

"பின்னத்தேவன்பட்டிக்கு அவுக பெரியத்தா வீட்டுக்கு விருந்தாளியா வந்தவளாம். ஈரவேட்டிய சிக் கோழிய அமுக்கிற மாதிரி அமுக்கிக் கூட்டிட்டே வந்துட்டானாம்"

"சரியான கட்டையத்தான் புடிச்சுட்டு வந்திருக்கான் கட்டையன்."

"இது வெறுங்கட்டை இல்லடா... திம்சுக்கட்டை."

அவ சொந்தப் பேரு என்னான்னு யாருக்கும் தெரியாது ஆனா அன்னைக்கு வச்ச பேரு தொலங்கிருச்சு திம்சு பாதிக் கெழவனான பிறகு கல்யாணம் பண்ணிருக்கான்... சுட்டுப்பாடு வேணாம்னு விட்ருச்சு ஊரு. இருந்தாலும், சேத்துல விழுந்த காசுலயும் சகதி ஒட்டுற மாதிரி அந்தக் குடுமபத்து மேல இருந்த வெறுப்பு வந்தவ மேலயும் ஒட்டிக்கிருச்சு. ஆனா நடந்த கதையே வேற. வந்தவ இருக்காளே... வல்லாளகண்டி. கால் வீச பாகக்காயில அரை வீச சக்கரப்பாகு எடுத்து ஒரு வீச அல்வாக் கிண்டுறவ.

வந்தவ வீடு பெருக்கி விளக்கேத்திவச்சுட்டு ஊர ஒரு நோட்டம் விட்டா. அந்த ஊர்ல மண்ணுக்கு என்ன மணம் மனுசங்களுக்கு என்ன குணம்னு ரெண்டே நாள்ல மோப்பம் புடிச்சா. வாக்கப்பட்டு வந்த குடும்பத்துக்கும் ஊருக்கும் எதனால ஏழாம் பொருத்தம்னு வெலாவாரியா விசாரிச்சா. விடிய விடிய யோசிச்சு விடிய்...ய்யக் காய் நகத்திட்டா.

மொத வேலையா வீட்டுக்குள்ள இருந்த ஒரலத் தூக்கித் தெருவுல போட்டா. புதுசா வாங்குன அம்மி திருகை ரெண்டையும் வெளித் திண்ணையில போட்டுவச்சா. "எங்க வீட்டு ஒரலு அம்மி திருகை ஊருக்குப் பொது. யாரும் வந்து அரச்சுக்கிரலாம் யாரும் வந்து இடிச் சுக்கிரலாம்." சொல்லிட்டு சொளகுல சோளம் பொடைச்சு வாசல்லயே ஒக்காந்துட்டா. ஒருத்தி வரல ஊரே இறுகி உள்தாப்பாப் போட்டுக்கிருச்சு.

பொழுசாய...

குறுணிச் சோளத்தக் கூடையில போட்டு எட்டு மேல எட்டுவச்சு வந்தா இடுப்புச் செத்த கெழவி ஒருத்தி, உரல்ல சோளம் கொட்டி ஒலக்கைய எடுத்தா. ஓங்கிப் போடச் சத்து இல்ல பாவம் அவளுக்கு. முக்கிமுக்கிப் பாக்குறா... ஒண்ணும் வேலைக்காகல. பாத்தா திம்சு. முந்தானைய இழுத்து இடுப்புல செருகிக்கிட்டு, கொண்டா ஒலக்கையன்னு வாங்கிப் போடறாளய்யா பெரும்போடு.

கண்ணாடி வளவிச் சத்தம் தெருவையே தெரட்டியடிக்க சும்மா ணங்கு...ணங்கு...ணங்குன்னு எறங்குற ஒலக்க ஒரலுக்குள்ள புகுந்து கல் வாத்தியம் வாசிக்க ஏறி ஏறி எறங்குற அவ மார்பு ரெண்டும் மனுசப் பொழப்பும் இப்படித்தாண்டான்னு தன்னால தத்துவம் பேச வெறும் விரல்கடை அளவு மட்டுமே தெரிஞ்ச அவ இடுப்பு, இப்பக் கையளவு தெரிஞ்சு கண்காட்சி காட்ட ஓங்கி ஓங்கி ஒலக்க போட்டா சொங்கவிட்டுச் சோளஅரிசி எட்டிப்பாக்குற மாதிரி வீட்டவிட்டு வந்து வெளிய எட்டிப்பாக்குது ஊரு.

"யாரு பெத்த மகராசியோ?" குத்தவச்ச கெழவி கும்புட்டு உக்காந் திருக்கா ஒரு ஓரமா. இருங்கச் சோளம் மட்டும் குத்தி யெடுத்தாப் பத்தாது. அரிசியத் தொவைக் கணும் இல்லாட்டி வெளங்காது. ஒரல்ல குத்துன சோளத்தை அவளே அள்ளுனா பொடச்சா, அரிசி மேல லேசாத் தண்ணி தெளிச்சு பழையபடி ஒரல்ல போட்டுப் பொய்க் குத்தாக் குத்தித் தும்பப்பூ மாதிரி தொவைச்சும் குடுத்திட்டா.

அவளக் கும்பிட்டு வாங்கி அழுதுபோறா கெழவி.

"திம்சு நல்ல குணவதி போலிருக்கே."

ஊருக்குள்ளே சின்னச்சின்னதா சின்னச்சின்னதா நல்ல பேரு பரவுது அவளுக்கு. நல்லதுக்கு றெக்கை கட்டிவிடுறதும் கெட்டதுக்குக் கொம்பு சீவிவிடுறதும் ஊருக்குள்ளே மூணே மூணு பேருதான்.

ஒண்ணு சலவைக்காரன்
ரெண்டு சவரக்காரன்
மூணு ஊர்மாடு மேய்க்கிறவன்.
மூணு பேரையும் கூப்பிட்டா.

"யப்பா எல்லா வீட்டுக்கும் ஏனம் எடுத்து அலையாதீக. இன்னைக்கிருந்து நான் திங்கிற சுடுசோத்துல சரிசோறு உங்களுக்கு காயோ கறித்துண்டோ எங்க வீட்டுக் குழம்புல எனக்கில்லைன் னாலும் ஒங்க சட்டியில ஒங்களுக்கு விழுகுமப்பா."

சொக்கத்தேவன்பட்டிய மூணாப் பிரிச்சு மூணு பேருக்கும் பட்டாப் போட்டுக் குடுத்த மாதிரி கெறங்கிக் கிறுகிறுத்துப்போனாக மூணு பேரும். சடையத்தேவரப் பெரிய மாமுன்னு கூப்பிட்டுப் பழகிட்டா கட்டையன மாமுன்னு கூப்பிட்டுப் பழகிட்டா திம்சு.

"பெரிய மாமு! கொடியில கெடக்கே... கிழிஞ்சுபோன பழைய வேட்டிசட்ட... என்னப் பண்ணப்போறீக?"

"என்னத்தப் பண்றது? அழிஞ்சு போற வரைக்கும் அங்கேயே கெடக்கும் தாயி"

"நான் எடுத்துக்கிரட்டுமா?"

"எடுத்துக்க"

கிழிஞ்சுபோன வேட்டி சட்டைகள எல்லாம் கூப்பிட்டுவச்சுக் குடுக்கவும் நொண்டி நொஞ்சானெல்லாம் திடும்னு விழுந்திருச்சுக திம்சு கால்ல.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:56 am

"குடுக்கச் சொன்னது பெரிய மாமு. அவரு கால்ல விழுங்க"

உள்ள கூட்டிட்டுப் போயி சடையத் தேவர் கால்ல மளார் மளார்னு அவ விழுகவைக்கவும் முதுகுத்தண்டுல மழை விழுந்து கும்பி குளுந்துபோச்சு கெழவனுக்கு. சடையத்தேவர் அந்த மொத மயக்கத்தவிட்டு முழுசாத் தெளியுமுன்ன ரெண்டாம் வைத்தியம் ஆரம்பிச்சுட்டா திம்சு. சடையத்தேவருக்கு முடி வெட்டச் சொன்னா சவரக்காரனக் கூப்பிட்டு.

பொத்தக் கள்ளி மூஞ்சி
நெருஞ்சி முள்ளு ரோமம்
வேலாம் பட்டத் தோலு.
பாறைக்கெல்லாம் சவரம் பண்ணா தீங்கப்பான்னு படபடக்குது கத்தி.
முடிஞ்சது.

கோவணத்தக் கட்டிவிட்டு ஒரு ஓரமா உக்காரவச்சா கெழவன. நல்லெண்ணெய ஊத்துனா கரண்டியில. பட்டமொளகா ஒண்ணு, வெள்ளப்பூடு ரெண்டு பல்லு, கருமொளகு மூணு, மூணையும் உள்ள போட்டு எண்ணெயச் சுடவச்சா. ஒரு எளம் வெதும்பல்ல எடுத்தா தொங்குற சீலயச் சுருட்டித் தொடையிடுக்குல செருகிக்கிட்டா. கர கரகரன்னு தேச்சா பெரிய மாமன் தலையில.

மண்டையில கொஞ்சங்கொஞ்சமாக் கொறைஞ்சுக்கிட்டிருந்த உசுரு ஊறி வருது கெழவனுக்கு. பொறி பறக்குது நெத்தியில. நீ என்ன சொன்னாலும் சரி தாயின்னு ஆடுது தல அதுபாட்டுல. எளஞ்சூட்டு எண்ணெய இரு காதுலயும் ஊத்திப் பருத்திப் பஞ்சவச்சு அடைச்சா மூஞ்சியில எண்ணெவச்சு நெத்தி தடவுனா இரு கட்ட விரல்லயும் இரு புருவம் நீவிவிட்டா கண்ணுல வெரல விட்டுப் பீழை பிதுக்கியெடுத்தா, தேஞ்ச கழுத்தெலும்ப எண்ணெவிட்டு வழிச்செடுத்து இழுகிவிட்டா சொறிபுடிச்சுச் சொரசொரன்னு போன முதுகப் பிஞ்சு நகம் வச்சுச் சொரண்டிச் சுத்தப்படுத்தினா வத்திப்போன நெஞ்சுக்கூட்ல வழியவழிய எண்ண தடவி, நரை முடியச் சிக்கெடுத்தா சதையில்லாத தொடையெலும்ப அழுத்தாம அழுத்தி ஆதரவு பண்ணுனா கெண்டக்கால் சதையப் பச்சப்புள்ள கன்னத்தப் புடிச்சுவிடுற மாதிரி பதறாம நசுக்கிவிட்டா பத்து வெரல்லயும் சொகமாகச் சொடக்கெடுத்தா நகக்கண்ணுல அழுக்கெடுத்தா சீவராசிகக் கூடு கட்டிக் குடியிருக்கிற குதிகால் பித்த வெடிப்புல வேப்பங்கொழுந்தும் மஞ்சளும் ஆமணக்குவித்தும் அரச்சுப் பூசுனா. சொந்த மக மாதிரி வந்த மருமக சேவை பண்ணி விடவும் நாப்பது வருசமாத் தொலஞ்சுபோன பொழப்ப ஒரே நாள்ல பொழச்சு முடிச் சிட்டதாக் கிறுக்கு புடிச்சுப்போச்சு கெழவனுக்கு. பொலபொலபொலன்னு தண்ணி ஒழுகுது புருவம் நரைச்ச கண்ணுல.

கரம்ப மண்ணப் போட்டுத் தேச்சுத் தலையில வெதுவெதுவெதுன்னு வெந்நி விடவும், யாரு பெத்த மகளோ, நீ நல்லாருன்னு சொல்லிக் கண்ணு ரெண்டையும் இறுக்க மூடிக் கோவணத்தோட உக்காந்து கும்புடறாரு கெழவன்.

இப்படி ரெண்டு மூணு தண்ணி ஊத்திவிட்டா பல்லுப்போன கெழவனுக்குப் பஞ்சு மாதிரி சுட்டுக் குடுத்தா ஆட்டு ஈரல. இந்த சொகத்துலயும் சோங்குலயும் சொக்கிப்போன சடையத்தேவரு "எங்கிட்ட இருந்தா என்ன... ஒங்கிட்ட இருந்தா என்ன... இந்தா தாயி! இத நீயே வச்சுக்க"ன்னு எடுத்துக் குடுத்துட்டாரு சாமி படத்துக்குப் பின்னால இருந்த சாவிய. புருசன்காரன அவ போட்ட போடு இருக்கே... பொறி கலங்கிப்போச்சு அவனுக்கு.

குலதெய்வத்த ஒரு ஓரமா ஒதுக்கிவச்சுட்டு இவளக் கும்புட ஆரம்பிச்சுட்டான். சாயங்காலமானாச் சட்டை வேட்டி மாத்தி வெளிய கெளம்புறதும் நடுச்சாமத்துல வந்து கதவு தட்றதுமா இருந்தான் கட்டையன்.

ஒரு நாள் வெள்ளையுஞ் சொள்ளையுமா அவன் வெளிய கெளம்ப, "செத்தவடம் உள்ள வந்துட்டுப் போ மாமூ"ன்னா. உள்ள போனா.

மோர் மொளகா சுட்டுவச்சு, முட்டை வறுத்துவச்சு, ஊறுகாயும் எடுத்துவச்சிருந்தா ஒரு ஓரமா. உறியில துண்டாத் தொங்கவிட்டிருந்த ஈயத் தூக்குவாளிய எடுத்தா தெறந்தா. சும்மா பட்டையக் கெளப்புது பட்டச்சாராய வாசன.

ஒக்காரு மாமூன்னா உக்காந்தான்.

"மாமூ! கூத்துப் பாக்கிறதாயிருந்தாக் கூட்டத்தோட பாக்கணும் குடிக்கிறதா யிருந்தா ஒத்தையில குடிக்கணும். ஒனக்கு என்னா சரக்கு வேணும் சொல்லு. தாண்டிக்குடி மல தாண்டிக் கூட வாங்கிட்டு வந்து தாரேன்.

இங்கேயே குடி. என்னாடா இது இளைய குடியாளா வந்தவ, இருக்கிற குடியக் கெடுத்துருவா போலருக்கேன்னு நெனைக்கிறியா? நெனைக்காத. இது வரைக்கும் நீயி எப்பிடி இருந்தியோ அப்பிடியே இருந்துக்க. ஒனக்கு மட்டுந்தான் நான் பொண்டாட்டி. எனக்கு மட்டுமே நீ புருசன் இல்ல நீ போற வழியில போய்க்க. எங்க போற எதுக்குப் போறன்னு கேட்டா செருப்ப எடுத்துக்க. ஆனா எப்ப வருவன்னு மட்டும் கேப்பேன். எதுக்குன்னா, ஒனக்கு நான் வெடக்கோழி அடிச்சு வெள்ளச் சீசா வாங்கிவைக்கணுமே அதுக்கு."

அன்னைக்கி விழுந்தவன்தான் கட்டையன். விழுந்த பள்ளம் அவனுக்கு வேண்டிய பள்ளமாயிருந்துச்சு. எந்திரிக்க மனசே வரல எந்திரிக்கல.

அடுத்து அழகுசிங்கம் மேல எந்த அம்பத் தொடுக்கலாம்னு அவ மண்ட காஞ்சு நிக்க... காலமே கொண்டாந்து அவ காலடியில சேக்குது அவன. கட்டையன் வீட்டுக்குள்ள புகுந்து ஒரு கெடாயப் புடிச்சுக் காளியாத் தாளுக்கு வெட்னாத்தான் பலியும் பழியும் ஒரே நேரத்துல தீரும்னு முடிவு பண்ணுனான் அழகுசிங்கம்.

கெடாயும் புடிக்கணும் யாரோ புதுசா வந்திருக்காளாமில்ல ஒரு பொறம்போக்குச் சிறுக்கி... அவளையும் ஒரு ஒச்சம் பண்ணிட்டு வந்திரணும் சிறுகச்சிறுகத் திட்டம் போட்டான். கட்டையன் வீட்டுக்குள்ளதான் கெடா கட்டிக் கெடக்குங்கிறத் துப்பறிஞ்சு ஒரு நாள் பொழுதிருக்கப் புகுந்துட்டான் அந்த வீட்டுக்குள்ள. அன்னைக்கின்னு பாத்து சடையத் தேவர் வீட்ல இல்ல கட்டையன் ஊர்ல இல்ல. போனவன் ஓட்டு வழியா ஏறி உள்ள குதிக்கவும், சடார்னு அவன் கால்ல சரிஞ்சிருச்சு கட்டத் தூணு. கணுக்கால் எலும்பு நசுங்கிச் சப்பழிஞ்சு போச்சு. "யாத்தே"ன்னு கத்தி அவன் சாணியில கெடக்க, சத்தங் கேட்டுத் திமுதிமுன்னு ஓடிவந்தா திம்சு.

வந்தவன் அழகுசிங்கம்தான்னு அனுமானிச்சுக்கிட்டு அவன மளார்னு தூக்கி மடியில போட்டுக்கிட்டா. முந்தானையக் கிழிச்சுக் குளுதாணியில நனச்சுக் காயத்துல கட்டுப் போட்டு ரத்தத்த நிறுத்திப்புட்டா.

லோகிதாசன மடியில போட்டு சந்திரமதி மயான கண்டத்துல அழுகிற மாதிரி குய்யோ முறையோன்னு அழுகையில கூடிட்டா.

ஆடு களவாண வந்தவன் ஆடிப்போயிட்டான்.

"இந்த வீட்ட அரசாள வேண்டிய ராசா நீ அடிபட்டுக் கெடக்குறியே." அவன் தலைய நெஞ்சுல தாங்கி நடந்து திண்ணையில உக்காரவச்சுத் தண்ணி குடுத்தா.

"தண்ணி குடுக்கிறியா தண்ணி...." செம்போட தூக்கி விட்டத்துல விட்டெறிஞ்சான்.

"அய்யா மகனே! அழகுசிங்கம்! ஊரே எம்மேல வெறுப்பேறி நிக்கிது காறித் துப்புது. ஒம் பங்குக்கு நீயும் எத்தி மிதிக்கிறியா... எத்து. ஒங்க பொழப்பக் கெடுக்கவா நான் வந்தேன்...? எங்க அக்கா கருவாச்சி போட்ட மடிப்பிச்சதான் இந்தப் பொழப்புன்னு எனக்குத் தெரியாதா? தாயும் மகனும் பாத்து நீ இருன்னா இருக்கேன் போன்னாப் போயிர்றேன். நான் இங்க வீட்டுக்காரி இல்லடா மகனே. ஒங்க சொத்துபத்து சிந்தாமச் சிதறாமக் கட்டிக் காக்க வந்த காவக்காரி."

அவன் கால் ரெண்டையும் கட்டிப் புடிச்சுக் காயத்த அழுத்தாம அவ அழுது பொலம்பவும் அழகுசிங்கத்துக்கே அழுக வந்திருச்சு.

"சரி சரி எந்திரி... கால விடு."

"நீ சின்னத்தான்னு சொல்றவரைக்கும் புடிச்சபுடி விட மாட்டண்டா மகனே."

கொஞ்ச நேரம் யோசிச்சான்.

"சரி எந்திரி சின்னத்தா."

எந்திரிச்சுக் கண்ணத் தொடச்சு முந்தானைய அவுத்து முழு ரூவா ஒரு ரூவா குடுத்தா. மொதல்ல வெறுப்பா வெறிச்சு வெறிச்சுப் பாத்த பய கடைசியாக கை நீட்டிட்டான்.

"நாம நெனச்சது தப்பு. நல்லவதான் போலிருக்கே."

அவன் நொண்டி நொண்டிப் போறதையே வச்ச கண்ணு வாங்காமப் பாத்து நிக்கிறா திம்சு.

இப்பிடி...


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:57 amவெந்நியில சாச்சுட்டா கெழவன
தண்ணியில சாச்சுட்டா புருசன
கண்ணீர்ல சாச்சுட்டா மகன.
இன்பம் துன்பங்கிற ரெண்டும்
துண்டு துண்டாவா இருக்கு?
கெடையாது அடுத்தடுத்த வீடு.
இன்பத்தைப் பெரட்டிப்
போட்டாத் துன்பம்
துன்பத்தப் பெரட்டிப்போட்டா இன்பம்.
பூமி இன்பம் பூகம்பம் துன்பம்.
காத்து இன்பம் புயல் துன்பம்.
மழை இன்பம் வெள்ளம் துன்பம்.
தீபம் இன்பம் தீப்புடிச்சாத் துன்பம்.
ஆகாயம் இன்பம் இடி துன்பம்.
ஒடம்பு இன்பம் நோய் துன்பம்.


சொல்லப்போனா சீவராசிகளும் மனுசப் பயகளும் உண்டான காலத்துல யிருந்து துன்பங்கிறதுதான் இயற்கை இன்பங்கிறது ஏற்பாடு மனுசனாப் பாத்து உண்டாக்கிக் கிட்டது. இயற்கைக்கு எதிரா மனுசனால உண்டாக்கப்பட்டது நிக்குமா? அதான் பொட் பொட் பொட்டுன்னு விழுந்திருது.

துன்பங்கிற நெருப்ப எடுத்துக் கையில வச்சுக் கிட்டே அலையுது காலம். தட்டுப்படுற ஆளுக தலையிலயெல்லாம் வச்சு வச்சுப் பாக்குது.

"நீ சருகாயிருந்தாக் கருகிக் காணாமப் போயிருவ.
தங்கமாயிருந்தா மெருகாகிப் போயிருவ. நீ சருகா தங்கமான்னு சோதிக்கிறேன்"

தீயவச்சிட்டுக் கண்ணச் சிமிட்டிச் சிமிட்டிச் சிரிக்குது காலம். கல்லுமேலயே நடந்து நடந்து பாதம் கெட்டிப்பட்டுப் போற மாதிரி, சள்ளப்பட்டு மொள்ளப் பட்டே மனசும் மரத்துப்போச்சு கருவாச்சிக்கு.

"சாமி! எம்மேல கல்லெறியிறதே ஒனக்கொரு வெளையாட்டாப் போச்சு. இன்னம் எத்தன கல்லு எறியப்போறயோ எறி. கடைசியில கணக்குப் பாப்பம் ஒடையறது என் எலும்பா நீ எறிஞ்ச கல்லான்னு." கருவாச்சி சொன்னது சாமிக்குக் காது கேட்டிருச்சு போலருக்கு. இது வரைக்கும் சல்லிக்கல்ல எறிஞ்ச சாமி, இப்ப ஒரு பாறையவே உருட்டி விடுது.

பொழைச்ச பொழப்புக்கு ஒரே மிச்சம்னு எந்த மகன நெனச்சாளோ செஞ்ச சத்தியத்த செயிச்சுக்காட்ட மலபோல வந்துட்டான்னு எந்த மகன நம்புனாளோ அந்த மகனுக்குப் புத்தி கோணிப்போச்சு போக்கு மாறிப்போச்சு. வாக்கப்பட்டு வந்த ரெண்டே வருசத்துல முக்காத்துட்டெடுத்து முந்தானையில முடியிற மாதிரி திம்சு அவன முடிஞ்சுபுட்டா முடிஞ்சு.

கைநெறையச் செலவுக்குத் துட்டு பைநெறைய நொறுக்குத்தீனி தூக்குவாளி மூட முடியலேன்னு முணு முணுக்குற அளவுக்குக் கறிச்சோறுன்னு குடுத்துக் குடுத்து வேல வெட்டியில்லாத வெடலப்பயல மார்லபோட்டுத் தாலாட்டித் தாலாட்டித் தலக்கிறுக்குப் புடிக்க வச்சுட்டா திம்சு.

"ஆத்தா ஒரு அவத்தச் சிறுக்கி. நல்லத்தா நீதானத்தா நல்ல ஆத்தா." அவன் வாயாலயே ஆத்தாள வைய வச்சு வீட்டுக்குப் போகாம அவன் வெளித்தங்கல் பண்ற மாதிரி பண்ணிப்புட்டா.

"மகனே அழகுசிங்கம்... நீ ஒங்க அப்பன் வீட்டுக்கு வரக்கூடாது. அப்பனுக்கு ஒன்னியக் கண்டா ஆகாது. ஒங்க ஆத்தா வீட்டுக்கும் நான் எதையும் குடுத்துவிட முடியாது ஒங்க ஆத்தாளுக்கும் ஆகாது. அதனால காசோ கறிக்கொழம்போ நான் பவுனு வீட்ல குடுத்திடறேன். அவகிட்ட வாங்கிக்கடா மகனே."

மூக்குல ஈ ஓட்டுன ஆட்டுக்கெடா மாதிரி அவன் அங்கிட்டும் இங்கிட்டும் தலையாட்டிச் சரின்னுட்டான், ஆத்தா கூடக் காய் விட்டுட்டு திம்சு கூடப் பழம் ஆகிட்டான்.

தாய் மீனுக்குக் குஞ்சுமேல ஆச குஞ்சு மீனுக்குப் புழுமேல ஆச. என்ன பண்றது? ஆத்துக்கு மீன் புடிக்கவும் போவான் அழகுசிங்கம். தூண்டி போட்டா மீன் சேராது. வல போட்டாலும் மீன் மாட்டும்னு சொல்ல முடியாது. வேட்டைக்குப் போனா வெறுங்கைய வீசியா வீடு வாரது? மீன் புடிக்க ஒரு குறுக்கு வழியக் கண்டு புடிச்சான் அழகுசிங்கம். ஆத்த மறிச்சான் மணலக் குமுச்சுக் குமுச்சு, மேல ஒரு அண கட்னான் கீழ ஒரு அண கட்னான். அண ஒடை யாம இருக்க ஓரமா ஒருபக்கம் வழி ஒதுக்கி விட்டான். இப்ப ரெண்டு அணைக்கும் மத்தியில தேங்குன தண்ணியில வெட்டி வெட்டி அமுக்குறானய்யா கொடிக்கள்ளிய.

இந்தக் கொடிக்கள்ளி இருக்கே கெட்ட கழுத. கொடிக் கள்ளிப்பால் வெசம். கொடிக்கள்ளிய அமுக்கித் தண்ணிக்கு நஞ்சூட்டி விட்டுட்டான் நாசமாப் போற பய. செத்தவடத்துல கொடிக் கள்ளி நெடி தாங்காம செத்து மெதக்குதுக பொடி மீனெல்லாம் தண்ணிக்கு மேல வந்து அரை மயக்கத்துல அல்லாடுதுக பெரிய மீனெல் லாம். பாத்துக்கிட்டேயிருக்க, தண்ணி தெரியாம மீனா மெதக்குது. அம்புட்டுத்தான் வேட்டிய விரிச்சு அரிச்சுப் புட்டான் அரிச்சு. ஆனா புடிச்ச மீன்ல பாதிதான் கருவாச்சி வீட்டுக்குப் போச்சு. மிச்சம் எங்க போச்சுன்னு தெரியல.

மொச வேட்டைக்கும் போய் பழகிட்டான் அழகு சிங்கம். அந்த வருசம் நல்ல மழை. பொதரெல்லாம் மண்டி மதாலிச்சுக் கெடக்குதுக காமக்கா பட்டிக்கரடெல்லாம். ஈச பறக்குற மாதிரி மொச பறக்குதுன்னு கேள்வி. நீட்டமா ஒரு நூல் கயிறு வாங்குனான் அழகுசிங்கம். அதுல ஒரு முப்பது சுருக்குப் போட்டு நூல்வளையம் பின்னிப் பின்னி ஒரு மொசக்கண்ணி பண்ணி முடிச்சான். கரட்டுக்குப் போனான் மசங்க. காரா முள்ளும் எலந்த முள்ளுமா வெட்டி வெட்டி, மொசக்கூட்டம் மேய வார வழியில வேலி கட்டிப் புட்டான். மொசக் கண்ணிய விரிச்சான் வேலியோரமா.

வேலியும் தாண்டாதாம் வெட்டுக் கெணத்துத் தண்ணியும் குடிக்காதாம் மொச!

தலக்கோழி கூப்புடப் போயிப் பாத்தா முப்பது வளையத்துல ஏழு மொச விழுந்து கழுத்துல சுருக்குப் பட்டுக் காலுசுராக் கெடக்குதுக.

விழுந்த ஏழு மொசல்ல மூணுதான் வீடு வந்து சேந்துச்சு நாலக் காணோம். அப்பத்தான் ஒரு சேதி அரசபுரசலா வருது கருவாச்சி காதுக்கு.

"பய பவுனு வீட்லயே கெடக்கானே... என்னா ஏதுன்னு பாரு"ன்னா பவளம்.

"பவுனுன்னு பேரு வச்சாப் பவுனாயிருமா? பித்தளையாக்கூட இருக்கும். கருப்பட்டியிலயும் கல்லிருக்குமாத்தா... என்னான்னு பாரு." தலவலிச்சாக் காதுல மருந்து ஊத்துறமாதிரி சுத்தி வளைச்சுப் பேசுனா வைத்தியச்சி.

தெப்பத்துப்பட்டியில வாக்கப்பட்டுத் தீத்துட்டு ஆறு மாசக் கைப்பிள்ளையோட வீட்ல வந்து இருக்கிறவ பவுனு. அப்பன் ஆத்தா கெடையாது. அப்பத்தா மட்டுந்தான். அவளும் சீக்காளி. கட்டில அவ விடமாட்டேங்கிறா கட்டிலு அவள விட மாட்டேங்குது. அழகுசிங்கத்துக்குத் திம்சு சொல்லிவிடறது அந்த வீட்டுக்குத்தான்.

பவுனு நெறம் பவுனு இல்லேன்னாலும் அம்சமான எளங்கறுப்பு. அவ கண்ணச் சிமிட்டாமப் பாத்தான்னா கலவரமாகிப் போகும், மீச தொங்கிப்போன கெழவனுக்கும். ஊடமாடப் போயி வந்த பய அங்கயே கெடையாக் கெடக்க ஆரம்பிச்சுட்டான். அவ கைப் பிள்ளையக் கக்கத்துல வச்சுக்கிட்டே திரிக்கிறது, மாவாட்டறது, ஒரல்லபோட்டு ஒலக்க குத்திக் குடுக்கறதுன்னு ஆரம்பிச்சுட்டான்.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:58 am

கைப்பிள்ளையக் குடுக்கவும் வாங்கவுமா இருக்கிறப்ப, தெரிஞ்சு பட்டுச்சோ, தெரியாமப் பட்டுச்சோ, அதுல ஒரு பொறி பறந்துச்சு. திரும்ப அந்தப் பொறி வேணுமேன்னு அவனுக்கு மனசு தீயா எரியுது. அவனக் காங்கலேன்னா அவளுக்கும் புத்திக்குள்ள பூரான் ஊருது. மீன வெண்டைக்காயா நெனச்சு அறுக்கிறா வெண்டைக்காய மீனா நெனச்சு ஒரசுறா. அவகளுக்குள்ள வெறும் வெளையாட்டுத்தானா வேற வெனையும் இருக்கானு ஒண்ணும் துப்புக் காண முடியல. தண்ணியில இருக்கிற மீனு குடிச்சதக் கண்டது யாரு..? குடியாததக் கண்டது

யாரு..? வெளங்கல.

ஒரு முடிவுக்கு வந்துட்டா கருவாச்சி.

சமஞ்ச பிள்ள சமைச்ச சோறு
வெளைஞ்ச கருது கறந்த பாலு
செத்தபொணம் பட்ட கடன்
இதுகளயெல்லாம் சட்டுன்னு சோலிய முடிச்சுப்புடணும்
தள்ளிப்போட்டாத் தப்பாப் போயிரும்.


ஆத்தா பெரியமூக்கி எப்பவோ சொன்னது மூளையில மொளகா வச்சதுமாதிரி இப்ப ஒறைக்குது.

மொதலக்கம்பட்டிக்குத் தன் அண்ணந்தம்பி வகையறாவுக்கு ஆள் சொல்லிவிட்டுப் பொண்ணும் பாத்துட்டா. மொதலக்கம்பட்டியில அவ சித்தப்பன் மகன் பேத்தி ஒருத்தி இருக்கா. செந்துருக்கம் செந்துருக்கம்னு பேரு அவளுக்கு. வயசுக்கு வந்துட்டாலும் இடுப்பெலும்பு முத்தாத எளம்பொண்ணு. ஆனா, சும்மா சொல்லக் கூடாது. சூட்டிகையான பிள்ள. எம்பது ஆடுகள அவளாப் பத்தி அவளா மேச்சு அவளாத் தொழுவுல அடைக்கிறவ.

அந்த ஊர்லயே பெரும்படிப்பு படிச்சதும் அவதான். மூணாவது முடிச்சவ. அது வேறொண்ணுமில்ல. பள்ளிக்கூடத்துல சேக்கலாமா வேணாமான்னு அவுக அப்பன் யோசிச்சுக்கிட்டே இருந்ததுல, வயசு ஒம்போது ஆகிப்போச்சு பிள்ளைக்கு. என்னொண்ணுக்கும் போயிட்டு வரட்டும்னு ஒண்ணாவதுல சேத்தாக ஒம்போது வயசுல. ரெண்ட முடிக்க வயசு பன்னெண்டு. மூணாவது முடிக்க வயசு பதினஞ்சு ஆகிப்போச்சு. முழுப்பரீட்சை லீவுல வயசுக்கு வந்திருச்சு பிள்ள. தலைக்கும் பள்ளிக்கூடத்துக்கும் தண்ணி ஊத்தி முழுகிவிட்டுட்டாக.

இன்னைக்கி எழுத்துக்கூட்டிப் படிச்சதெல்லாம் மறந்துபோனாலும், கையெழுத்துப் போடறத மறக்கல பிள்ள. பொழைக்கத் தெரிஞ்ச பொண்ணாப் போனா. ரெங்கசமுத்திரம் நாயக்கருக்குச் சாணிவித்துச் சாணிவித்தே சங்கிலி வாங்கிப்புட்டா. தோள்பட்டை சதை வைக்காமத் தொத்தலாக் கெடந்தாலும் காரியம் பாக்குறதுல வீரியமா இருந்தா செந்துருக்கம்.

அவுக வீட்ல ஒரு சல்லிக்கட்டுக்காள வளத்தாக. சும்மா ஆயிரங்கால் மண்டபத் துல நாலு காலக் களவாண்டு வந்த மாதிரி காலு நாலு. ஒரு திண்ணையத் தூக்கி முதுகுல வச்சமாதிரி திமிலு. கருப்பணசாமி கத்திகள வாங்கித் தலையில நட்டு வச்சமாதிரி ரெண்டு கொம்பு. அலங்காநல்லூர் சல்லிக்கட்ல அந்தக் கொம்புல சுத்திவிடுவாக தங்கச் சங்கிலிய அணஞ்சவன் எடுத்துக் கன்னு. இதுவரைக்கும் வாடி வாசல்லயிருந்து வாரபோதே கொம்புல கொடலச் சுத்தி வந்திருக்கே தவிர, சங்கிலிய விட்டுட்டு வந்ததில்ல.

அப்பேர்ப்பட்ட காளைய தன் இடுப்புல கயிறு கட்டி மேய்க்கிறவ இவ. இப்பேர்ப்பட்டவ அழகுசிங்கத்துக்கு வாக்கப் பட்டுப் போறேன்னு வாக்கும் கொடுத்துட்டா. சொந்தபந்தத்த அனுசரிச்சு வீட்டாளுகளும் சரி சொல்லிட்டாக. மொதலக்கம்பட்டிக்கு நடையா நடந்து "வெள்ளிக்கிழம மாப்ள வீடு பாக்க வாங்க"ன்னு சொல்லிட்டு வந்துட்டா கருவாச்சி.

வியாழக்கிழமை ராத்திரி.

தட்டுல விழுந்த கேப்பக் களியத் தலயப் பிச்சு, கடைஞ்ச மகிழிக் கீரையில முக்கி முழுங்கிக்கிட்டே மொனகுறான் அழகுசிங்கம். "இன்னைக்கும் கீரையும் கேப்பக்களி யும் தானா? சாணியத் தொட்டு மண்ணத் திங்கற மாதிரி இருக்கு. என்னைக்கு நல்லசோறு திங்கப் போறனோ?"

"எத்தன நாளைக்குடா மகனே எங் கைக் கஞ்சி குடிக்கப் போற? ஒனக்குன்னு ஒல வைக்க ஒருத்தி வராமலா போயிரப் போறா?"

"வாரப்ப வரட்டும். அதுவரைக்கும் ஒழுங்காக் கஞ்சி காச்சி ஊத்து."

"என்னைக்கோ எதுக்கு வரணும்? நாளைக்கே வந்தா ஆகாதா?"

"விட்டா நாளைக்கே பொண்ணு வீடு பாக்கப் போகலாம்னு சொல்லுவ போலிருக்கே..."

"பொண்ணு வீடு பாத்தாச்சு மகனே. நாளைக்கு மாப்ள வீடு பாக்கத்தான் வாராக."

அவ சொல்லி முடிக்கல வாய்க்குக் கொண்டுபோன களியத் தட்ல அடிச்சான் தட்ல இருந்த களியத் தூக்கிச் சுவத்துல அடிச்சான். களி ஒட்டிக்கிருச்சு சுவத்துல கீரை ஒழுகுது தரையில. அதத் தின்ன வந்த பூனமேல அவன் தண்ணிச் சொம்ப எடுத்து எறியவும், நான் இன்னிக்கிருந்து விரதம்னு ஒரே ஓட்டமா ஓடிப் போயிருச்சு பூன.

"எனக்குச் சொத்துச் சேத்து வச்சிருக்கியா? தோப்பு துரவு இருக்கா? இல்ல வேல வெட்டி பாக்குறேனா? ஒழக்குக்கே தானியமில்லாத வீட்ல மரக்கா எதுக்கு மரக்கா?"

"சொன்னாக் கேளப்பா. ஒனக்கு மாலையும் வேலையும் ஒண்ணா வரப்போகுதுடா மகனே. ஒனக்குப் பொண்ணும் கொடுத்து கட்டவண்டி யும் ஒருசோடி மாடும் தாராக மொதலக்கம்பட்டி ஆளுக. விடிய்ய வீடுபாக்க வாராக சரி சொல்றா தங்கம்."

"என்னா அவசரம் கல்யாணத் துக்கு? ஏன் கால்ல வெந்நி ஊத்தி அலையறவ?"


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:58 am

"மகனே ஒன்ன வச்சுத்தாண்டா உசுர வச்சிருக்கேன். தீப்புடிச்ச வீட்ல வெடக்கோழி சிக்குன மாதிரி எதிரிக்கு மத்தியில பொழைச்சுக் கிட்டிருக்கோம்டா. ஒலகத்த செயிச்சு ஒன்கிட்டக் குடுக்க சக்தியில்லடா. ஒன்னவச்சு உலகத்த செயிக்க சக்தி இருக்குடா. நீயும் எம்பேச்சக் கேக்காமத் தெரிஞ்சதப் பாருன்னு திரும்பிட்டேன்னு வச்சுக்க... ஒன்னியப் பெத்தும் பிரயோசனமில்லடா."

"பெத்ததுதான் என்னியக் கேக்காமப் பெத்த. கல்யாணமாவது என்னியக் கேட்டு பண்ணலாமில்ல..?"

அவன் கேட்ட அந்த ஒத்தக் கேள்வியில இத்து இடுப்பொடிஞ்சு புத்தியில கத்தி குத்தித் தத்தித் தடுமாறித் தலசுத்திக் குத்தவச்சு நெஞ்சப் புடிச்சு நெலப்படியில உக்காந்து போனா கருவாச்சி. என்னியக் கேக்காம ஏன் பெத்தேன்னு கேட்டுப்புட்டானே பெத்த பய. அவனப் பெத்துப்போட்ட காவக் குடிசை ஞாபகம் வந்திருச்சு.

சீலயத் தெரச்சுக்கிட்டுப் பிள்ளையப் பெத்தெடுக்க அத்துவானக் காட்ல அனாதையா மண்டியிட்டது, வலி தாங்காமத் தொங்கி அந்து விழுந்த சொரக்குடுக்க, பிள்ள பிதுங்கி வெளிய வந்து விழுகவும் ஆணா பெண்ணான்னு எட்டிப்பாத்த ஆச தொப்பூழ்க் கொடி அறுத்த பண்ணருவா, எல்லாம் படபடபடன்னு ஞாபகம் வரவும்...

பொல பொல பொலன்னு அழுதுட்டா கருவாச்சி. ஆத்தா கண்ணீரப் பாத்ததும் கல்லுமனசு கரையுது மகனுக்கு.

"சரி... என்னிய என்ன செய்யச் சொல்ற சொல்லு" உணர்ச்சியில்லாம வார்த்தையையும் ஒரே தொனியில சொல்றான் அழகுசிங்கம். கண்ணத் தொடச்சுக்கிட்டா கருவாச்சி. பூட்டுனாத் தொறக்க முடியா துன்னு தொறந்தே கெடக்கிற பழைய தகரப்பொட்டியிலருந்து, சந்தையில தச்சு வாங்கிட்டு வந்த கட்டம்போட்ட சட்டையையும் புது வேட்டியையும் எடுத்து நீட்டினா.

"நாளைக்கிப் புதுசு கட்டிப் புதுமாப்ளையா இருடா மகனே."

இங்கிட்டுத் திரும்பிக்கிட்டு எடது கையில வாங்கிக்கிட்டான், ஆத்தா குடுத்தத. விடியுது வெள்ளிக்கிழமை.

இம்புட்டு ஆளுக கூடி வருவா கன்னு எதிர்பார்க்கல கருவாச்சி.

செந்துருக்கமும் அவ மேய்க்கிற ஆடுமாடுகளும் தவிர, எல்லாம் வந்துட்டாக. பவளம், கனகம், வைத்தியச்சி, உருமாப்பெருமாத் தேவரு, காவக்காரச் சக்கணன் இப்படி உள்ளூருச் சனம் வேற ஒண்ணுகூடிப் போச்சு.

மாப்ளைய மட்டும் காணோம்.

"எங்க... எங்க"ங்கிறாக எல்லாரும் எங்கயும் காணோம்.

எல்லாருக்கும் பலகாரம் காப்பித்தண்ணி குடுக்கச் சொல்லிட்டு, முந்தானைய இழுத்து இடுப்புல சொருகிக் கிட்டு, தெருவுல எறங்கித் தேடுறா பாவம்!

"யாத்தா"! எம் பிள்ளையப் பாத்த?"

"இல்லையே"

"யண்ணே! அழகுசிங்கத்தப் பாத்தியா?"

"பாக்கலையே தாயி."

சந்தையில சாமான் வாங்கித் தலச் சொமயோட வாரான் முத்துக்கருப்பு.

"யப்பா முத்துக்கருப்பு! எம் மகன் அழகுசிங்கத்தப் பாத்த?"

தலச் சொமையோட கழுத்த வேறபக்கம் திருப்பி, "பாத்தேன்"னு சொன்னான் முத்துக்கருப்பு.

"எங்கப்பா பாத்த எம்பிள்ளைய?"

"சொன்னா வருத்தப்படுவ மதினி."

"சொல்லப்பா."

"அம்புலிப்புத்தூர் ஓடைமேட்டுல"

"அம்புலிப்புத்தூரா?"

கண்ணு பஞ்சடைஞ்சு, நெஞ்சப்புடிச்சு இத்த மண்சொவரு இடிவிழுந்து சரியிற மாதிரி, மண்தரையில மட்டமல்லாக்கா விழுந்து போனா கருவாச்சி.

அம்புலிப்புத்தூர் இருக்கே... அந்தக் காலத்துல அது ஒரு விவகாரமான ஊரு. சுத்து வட்டாரத்துல இருக்கிற மைனர்களுக்கெல்லாம் அது மாமியார் ஊரு. மதுரை ராமநாதபுரம் வரைக்கும் அம்புலிப்புத்தூர் பேரச் சொன்னா எளந்தாரிக சிலுத்துக்கிருவாக கெழடுக சிரிச்சுக்கிருவாக.

அந்த ஊர்ல ரெண்டு மூணு தெருவுக்கு அது மட்டும்தான் தொழிலு. கோடீஸ்வர சமீன்தார்ல யிருந்து கூலிக்காரன் வரைக்கும் கொடுப்பினை உள்ள ஆளுக்குக் குடுத்துவச்சிருக்கு துட்டுக்குத் தக்கன. அங்க போன ஆளுகள்ல பல பேரு வீடோ வேட்டியோ தொலைக்காம வந்ததில்ல.

அம்புலிப்புத்தூருக்குப் போயிட்டான் அழகுசிங்கம்னு கேள்விப்பட்டதும் குடி கெட்டுப்போச்சேன்னு கும்பி கருகிப்போனா கருவாச்சி. மாப்ள வீடு பாக்க வந்தவுக போயிட்டு வாரேன்னு போயிட்டாலும் விடிய விடிய ஒறக்கம் வரல விடிஞ்சும் அவன் வரல. கஞ்சிப் பொழுதுக்கு வெளியேறிட்டா கருவாச்சி வெயிலேற. அம்புலிப்புத்தூர் போகணும்னா அஞ்சாறு மைலுக்கு ஒரு முள்ளுக் காடு கடந்தாகணும். காடு வங்காடு கையில ஈரப் பசை காஞ்சுபோன அன்னைக்கிக் கடவுள் படைச்சது.

வைகாசி வெயிலு தகதகதகன்னு தகிக்குது நேரம் போகப் போக விரியன்பாம்பு வெசம் மாதிரி ஏறுது. எட்டுமாத்தி எட்டு வைக்கிறதுக்குள்ள குதிகால் கொதிக்குது. கண்ணுக்கு எட்டுன மட்டும் காஞ்ச காடு. சின்னப் புள்ள சீப்பெடுத்து ஆத்தாளுக்கு வகிடெடுத்துவிட்ட மாதிரி கோணல் மாணலா ஒரு ஒத்தையடிப் பாதை. ஒத்தையடிப் பாதை முடியிற தூரத்துல வெயில்ல உருகி ஒழுகுது அடிவானம்.

சல்லிக்கல்லு சரளக்கல்லு கத்திக்கல்லு கருங்கல்லு குண்டாங்கல்லு கூழாங்கல்லுமாக் கெடக்குற ஒத்தையடிப் பாதையில ஒத்தையில போறாளய்யா கருவாச்சி சீதையைத் தேடி அனுமாரு போறமாதிரி தாசி வீட்டுக்கு மகனத்தேடி. பாதையோரமா வளைஞ்சு வளந்திருந்த வேலாங்கொப்பு முள்ளண்ணு அவ மூஞ்சியில ரத்தப் பசை இருக்கான்னு மோந்து பாத்துட்டுப் போகுது. ஒத்தையடிப் பாதை ரெண்டு பக்கமும் அரை மைல் நீளத்துக்கு அடச்சு நிக்கிது சில்லிமுள்ளு. மீனுகளையெல்லாம் படைச்சுக் குடும்பத்தோட சமுத்திரத்துல விட்ட மாதிரி முள்ளுகளையெல்லாம் படைச்சு இங்கயே கெடங்கன்னு விட்டுட்டாரு போலருக்கு கடவுளு.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:58 am

ஒரு முள்ளா... ரெண்டு முள்ளா... காரா முள்ளு சூரா முள்ளு எலந்த முள்ளு இண்ட முள்ளு கருவேல முள்ளு வேலா முள்ளு மதுக்கார முள்ளு முக்குறுணி முள்ளு கிளுவ முள்ளு ஒடசாலி முள்ளு, நெருஞ்சி முள்ளு சில்லி முள்ளு கள்ளி முள்ளு எலக் கத்தாழை சிவனார் வேம்பு இந்த முள்ளுகளுக்கு மத்தியில ஒத்தையடிப் பாதை போற மாதிரி, கருமாயங்களுக்கு மத்தியில எம் பொழப்பு போகுதேன்னு பொலம்பிக்கிட்டே போறா கருவாச்சி.

ஆவாரஞ் செடியும் எருக்கிலையும் மட்டும்தான் இந்த வெப்பல்லயும் உசுர் புடிச்சுப் பச்சகட்டி நிக்கிதுக. பொறுக்கல சூடு பொசுங்குது உள்ளங்காலு. வழியில ஆவாரஞ் செடியப் பாத்தா அதுல அஞ்சாறு கெளைய ஒடிச்சா. அதத் தரையில போட்டா, அதுல ஏறி நின்டுக்கிட்டா. ஆவாரங் கொழையில இருந்த குளிச்சி அவ உள்ளங்கால்ல பட்டுப் பாதத்துப் பள்ளத்துல பரவி அதுலருந்து ஏறிக் கெண்டைக்கால் சதையக் கிளுகிளுப்புப் பண்ணித் தொடை வழியாத் தொடுத்து எலும்புகளுக்குள்ள எளங்காத்து வீசி, இருதயக் கூட்டுக்குள்ள எளந்தூரல் போட்டு மூளக்குள்ள போயி முணுமுணுன்னு மழை பெய்யுது. குனிஞ்சா கொழையை எடுத்துக் கக்கத்துல வச்சுக்கிட்டா நடந்தா. எங்கெங்க தவிப்பாறணுமோ அங்கங்க ஆவாரங் கொழையக் கீழபோட்டு அது மேல ஏறி நின்னுக்கிட வேண்டியது. ஆட்டுத்தோல் மாட்டுத் தோல்ல பண்றதெல்லாம் அசைவச் செருப்பு ஆவாரங் கொழையில பண்றது சைவச் செருப்பு. கண்டுபுடிச்சது யாரோ? கையெடுத்துக் கும்புடணும் அந்தக் கடவுள. எங்கயோ கத்துது ஒரு கதுவாலி சத்தம் சரியில்ல. அதுக்கோ தொணைக்கோ ஆபத்து போலருக்கு.

நரிக அப்பப்ப நாட்டாமை பண்ற காடு அது. அஞ்சாறு நரி சேந்தா ஒரு ஆள அடிச்சுப்புடுமாம். சங்கக் கடிச்சு ரத்தம் குடிச்சு வெலாவக் கீறி ஈரல மட்டும் எடுத்துக்கிட்டுப் போதும் போதும்னு போட்டுட்டுப் போயிருமாம். நரி முகத்துல முழிச்சா நல்லதாம்! முழிச்சவுகளுக்கா... நரிக்கான்னு முழு வெவரம் சொல்லாம விட்டுட்டாக.

மத்தியானக் கஞ்சி குடிக்க நிழல் தேடி அலையுதுக ஆடுமாடு மேய்க்கிற ஆணும் பொண்ணும். நாக்க நனைக்கத் தண்ணி தேடி அலையுதுக ஆடுமாடுக. மாடு நடக்க நடக்க அது கவுட்டு நெழல்லயே தவ்வித் தவ்விப் போகுது ஒரு கரிச்சான் குருவி. காத்தோட சேந்து காடு பூரா மெதந்து மெதந்து வருது கானல் அல. விசுக்கு விசுக்குன்னு எட்டுவச்சுப் போற கருவாச்சிக்கு வேர்வை ஊற ஊற, இதுக்கு மேல ஊற என்னால ஆகாதாத்தான்னு நின்னுபோச்சு எச்சி. மயக்கமாக் கெடக்கேன் தண்ணி தெளிச்சு எழுப்பிக்கன்னு ஒட்டிக்கிருச்சு உள்நாக்கு.

ஆவாரங் கொழையக் கீழ போட்டு நின்டுக்கிட்டு, வலது கையத் தூக்கி நெத்தியில சாரங்கட்டி தட்டுப்படுதா தண்ணின்னு பல பக்கமும் பாக்குறா. கண்ணுக்கெட்டினமட்டும் காஞ்ச பூமியாத்தான் தெரியுது. ஆவாரங் கொழையக் கக்கத்துல அணைச்சுக்கிட்டே நடையில கூடி வாரா. ஒத்த ஆலமரம் கடந்தா சுழியாம்பாறை, அது மேல ஒரு கல்லுக் குழி. கல்லுக்குழியில கரேர்ன்னு கெடக்கு எப்பவோ பேஞ்ச மழைத் தண்ணி. தண்ணியக் காணாதவரைக்கும் நாக்குல மட்டும்தான் தாகம் எடுக்கும் தண்ணியக் கண்டதும் திரேகமெல்லாம் தாகம் எடுக்கும். கக்கத்துல இருந்த கொழையத் தரையில போட்டுட்டு முக்காடெடுத்து மூஞ்சி தொடச்சுக்கிட்டே கல்லுக்குழிப் பாறையில உக்காந்து கை ரெண்டையுஞ் செலுத்தி அள்ளுனா தண்ணிய. அள்ளுன தண்ணியில வாய் வைக்கப் போக தஸ்ஸு புஸ்ஸு ன்னு கேக்குது ஒரு சத்தம். மோசமான சத்தமாயிருக்கேன்னு மூஞ்சி தூக்கிப் பாத்தா வாலத் தண்ணிக்குள்ள தொங்க விட்டு, தலையத் தரையில போட்டு வேலா மரத்து நெழல்ல பாறை மேல படுத்திருக்கய்யா ஆறடிக்குக் கொறையாத ஒரு பெரும் பாம்பு.

பயத்துல வெலவெலத்துப் பித்துப்பிடிச்சுப்போனவ, கைத் தண்ணியத் தண்ணியிலவிட்டா சத்தங் கேக்குமின்னு பாறையில பதறாம வடியவிட்டு அசங்காம எந்திருச்சு, நெஞ்சப் புடிச்சுக்கிட்டே பின்னெட்டு வச்சுப் போறா. நல்லவேள! பாக்கல பாம்பு அவள. தொவச்சுப் போட்ட துணி மாதிரி அசையாமக் கெடக்கே! இது என்னா கூத்துடியாத்தான்னு பம்மி நிக்கிறா சூராம் புதர் ஓரமா. புதருக்குப் பின்னால நின்னு தன்ன ஒளிச்சுக் கிட்டுக் கண்ண மட்டும் மேயவிடுறா.

அசையல பாம்பு அப்படியே கெடக்கு. செத்துக்கித்துப் போச்சா. தலைக்கு மேல ஒரு பெராந்து அங்கனக்குள்ளயே வட்டம் போட்டு அலையுது. செத்த பாம்பாயிருந்தா பெராந்து வந்து செந்தூக்காத் தூக்கிட்டுப் போயிருக்குமே! சாகல. இம்புட்டு நீளம் சாரப் பாம்புக்குத் தவிர வேற பாம்புக்கு இல்லையே! சாரைதானோ? சாரைக்கு அடிவகுறு மஞ்சப் பூத்து இருக்குமே! இது சாரையுமில்ல. புதருக்கு வெளிய இவ லேசாத் தலையத் தூக்கவும் பாம்பும் தலையத் தூக்குச்சு. சிமிட்டாமப் பாக்குறா. விரியம் பாம்போ? இல்லையே! விரியனுக்கும் சாரைக்கும் மொனையாத்தான இருக்கும் மூக்கு. இது சப்பட்டையா இருக்கே. இன்னுங் கொஞ்சம் உத்துப் பாத்தா. ரெண்டு சக்கரம் தெரியுது தலையில. நல்ல பாம்பேதான்!

நல்ல பாம்பேதான்!

என்னா பண்ணுது பாம்பு? ஏன் இப்பிடிக் கடப்பாரை மாதிரி நேராப் படுத்திருக்கு? எரையுண்ட மயக்கத்துல எளப்பாறிக் கெடக்கோ? இல்லையே! வயிறு எங்கயும் புடைக்கலையே! ஒரே சீரா இருக்கே. என்னதான் பண்ணுதுன்னு இருந்து பாத்திருவோம். என்னதான் தகிரியத்த ஏத்தி நெஞ்ச நிமித்திக்கிட்டாலும் நல்ல பாம்பு வெறியெடுத்துத் தன்ன வெரட்னா என்ன ஆகும்ன்னு நெனைக்கிறப்ப கர்ப்பப்பைக்குள்ள கலக்கமாகுது கருவாச்சிக்கு. "நல்ல பாம்பு வெரட்னா மட்டும் நேரா ஓடப்படாதுடி . வளஞ்சு வளஞ்சு ஓடுனாத்தான் தப்பிக்கலாம்." ஆத்தா பெரியமூக்கி எப்பவோ சொன்னது இப்ப நெஞ்சுக்குழியில வந்து நிக்கிது.

அவ பாத்துக்கிட்டேயிருக்க, தலைய லேசாத் தூக்கித் தரையில மூக்கத் தேய்க்குது பாம்பு. செத்தவடத்துல சிட் சிட்ன்னு சின்னதா ரெண்டு சத்தங் கேட்டுச்சு. தலப்பக்கம் வாய்ப் பூட்டு வெடிச்சு, பஞ்சுமாதிரி ஒரு பொருளு பட்டீர்ன்னு வெளிய வந்துச்சு. ஒடம்புலயிருந்து வெடிச்சு வந்த பஞ்சில தலையும் கண்ணும் படமும் அச்சடிச்ச மாதிரி அப்படியே இருக்கு.

யாத்தே! பாம்பு சட்டை உரிக்குது சாமி கருவாச்சி நெஞ்ச இறுக்கிப்புடிச்சு நின்னுபோனா. இருதயம் கூட்டுக்குள்ள அடிக்கிற சத்தமும் மூக்கு வழி காத்து போக்குவரத்து நடத்துற சத்தமும் மட்டும்தான் அவ காதுக்குக் கேக்குது இப்ப.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:59 am

பாம்பு சட்டை உரிக்கிறதப் பாக்கணும் பாம்பு சட்டை உரிக்கிறதப் பாக்கணும்ன்னு சின்ன வயசுலருந்து நான் சேத்துவச்ச ஆசை, எம்பிள்ளைய நான் தேடிப்போற இந்த அத்துவானக் காட்லதான் பலிக்கணுமா?

தலச் சட்ட கழத்துறவரைக்கும் தவிச்சுப்போய்க் கெடந்த பாம்பு அப்பறம் சுறுசுறுப்பாயிருச்சு. தலைய ஒரு ஆட்டு ஆட்டித் தலச்சட்டையக் கழுத்துக்குக் கீழ தள்ளிட்டு, தன் சக்தியெல்லாம் ஒண்ணு கூட்டித் தலைய முன்னுக்க நீட்டி முன்னேறுது. படுத்த எடத்துல படுத்த மேனிக்குப் பாறையோட சட்டை ஒட்டிக்கெடக்க, சட்டைய விட்டு வெளி யேறுது பாம்பு சரசரன்னு. பாம்பு மேல் பக்கம் அகலமாவும் கீழ்ப் பக்கம் குறுக லாகவும் இருப்பத னால கீழ்ச் சட்ட உரிக்கிறது லேசா இருக்கு பாம்புக்கு. காணக் கெடைக் காத இந்தக் கண் காட்சியக் கண்ட கருவாச்சி திகில் புடிச்சுத் திக்குமுக்காடிப் போனா. ஆறடி நீளச் சட்டையக் கீழ போட்டுட்டு அதுலயிருந்து பாம்பு விறுவிறுன்னு வெளியேறிப் போறதக் கண்ணால பாக்குறா. பயமாத்தான் கெடக்கு ஆனா பயத்துமேல சந்தோசம் நுரை கட்டியிருக்கு. குகைய இருந்த எடத்துல விட்டுட்டு, ரயிலு மட்டும் குகைய விட்டு வெளிய வார மாதிரி சட்டையக் கழட்டி அங்கேயே போட்டுட்டு முன்னுக்கப் போயிருச்சு பாம்பு.

தங்கச் சங்கிலி நெளிஞ்சு நெளிஞ்சு தரையில போகுதா இல்ல மின்னலு பாறையில விழுந்து மினுக்கி மறையுதா? சட்டை கழத்துன பாம்பு மேனி தகதகப்பு இருக்கே. காணக் கண்ணாயிரம் காணாது. கொஞ்ச தூரம் ஓடுன பாம்பு ஒரு ஓரமா ஒதுங்கித் தன்னச் சுருட்டிக் சும்மாடு ஆக்கிக்கிட்டுத் தம்பாயமில் லாமக் கெடந்துச்சு. சட்ட கழத்துன அலுப்போ? இல்ல இது எனக்கு இன்னொரு பெறவிங்கிற நெனப்போ? கொஞ்ச நேரம் கழிச்சுப் பாத்தா அது இருந்த எடத்துல இல்ல கண்காணாமப் போயிருச்சு.

இப்பப் பயம் தெளிஞ்சு போச்சு. பொதரவிட்டுப் பொத்துனாப்புல வெளிய வந்தா கருவாச்சி. கல்லுக்குழி தாண்டிப் போயிப் பாம்புச் சட்டையத் தொட்டுப் பாத்தா சுட்டுச்சு. இப்பத்தான் கழட்டிப் போட்டுச்சு இது வெயில் தாக்குன சூடா இருக்காது. சட்டைக்கு உள்ளயிருந்த பாம்போட ஒடம்புச் சூடுதான் போலருக்கு. நுரை மாதிரி இருந்த சட்டைக்குள்ள வெரலவிட்டுத் தொட்டுப் பாத்தா என்னமோ ஒட்டுச்சு. உரிக்கிற சட்டை உரிஞ்சு வரத் தோதா பாம்பு ஒடம்பு லேருந்து ஊறிவார எண்ணெயோ பசையோ என்னமோ?

பாறையத் தொட்டுக் கும்புட்டுக் கிட்டா தண்ணி குடிச்சா ஆவாரங் கொழையக் கக்கத்துல வச்சுக்கிட்டா பாதையில கூடிட்டா. எங்கேயோ ஒரு மரங்கொத்தி பட்டுப் போன ஒரு மரத்த லொட்டு லொட்டுன்னு தட்டிக்கிட்டே இருந்துச்சு. காடுபூரா ஒரு நூறு பேரு கருங்கல்லுச் சல்லிகள வச்சு ஒரசிக்கிட்டேயிருக்கிற மாதிரி "கரிச்...கரிச்...கரிச்"ன்னு கத்திக்கிட்டே திரியுதுக கரிச்சான் குருவிக. அந்தா தெரியுது பாரு... உப்பம் பொட்டல். அதைத் தாண்டிப்போனா ஓணான் கரடு. ஓணான் கரடு எறங்க ஓடைவரும். ஓடை மேடேற அம்புலிப்புத்தூர் வந்திரும். அந்த ஊர்ப் பேரச் சொன்னாலே நையாண்டி பண்ணி நசுக்கி நசுக்கிச் சிரிக்குது ஒலகம். ஊரு என்ன பண்ணும் ஊரு? மனுசன் பண்ண கூத்துக்கு!

அந்தக் காலத்துல நெலம் வச்சிருந்தவுக ராசாக்கமாரும் சமீந்தாரும் மேல்சாதி ஆளுகளும்தான். கோயில்ல ஆட வார பொம்பளைக்குச் சொந்த நெலத்துல கொஞ்ச நெலம் குடுத்து, மண்ண நீ வச்சுக்க, ஒன்ன நான் வச்சுக்கிறேன்னு ஒப்பந்தம் போட்டுக்கிட்டாக. கோயில் கதவு மூடுற நேரத்துல ஒங் கதவ எனக்குத் தொறக்கணும்னு உத்தரவும் போட்டுவிட்டாக. இது என்னடா மானங்கெட்ட பொழப்பாயிருக்குன்னு ஆட்டக்காரி களெல்லாம் ஒண்ணு கூடி "அய்யா எங்களுக்கு மண்ணும் வேணாம், பொன்னும் வேணாம். ஒரு மஞ்சக் கயிறு போதும்"ன்னு கேட்ருக்காக. கழுத்துல தாலி ஏறக் கால்ல சலங்கைய அவுத்துடறோம்ன்னும் சொல்லியிருக்காக.

"இதென்னடா இது... கொழுந்து வெத்தல ஒண்ணு குடுன்னா கொடிக்காலையே எழுதிக் கேக்குறாளுக" பதறிப்போனாக ராசாக்கமாரும் சமீந்தாரும். படிச்ச புத்தி வேல செய்யுமா இல்லையா? செஞ்சிருச்சு.

"அம்மணிகளா ஒங்களுக்கும் வேணாம் எங்களுக்கும் வேணாம். ஆண்டவனக் கல்யாணம் பண்ணிக்குங்க நீங்க ஆண்டு அனுபவிச்சுக்கிர்றோம் நாங்க"ன்னு கடவுளுக்கு அவகளக் கல்யாணம் பண்ணிவச்சுப் பொட்டுக்கட்டி விட்டுட்டாக.

இதுதான் பாவம் எளிய பொம்பளைகள வலிய சாதி ஆளுக ஏச்சு எச்சி எல ஆக்குன கதை. காலம் மாறி, கருத்து மாறி, ஆட்சி மாறி, அரசாங்கம் மாறி, கோயிலும் வருமானமும் கொலஞ்சுபோகவும் அந்தப் பொம்பளைக தலைமொறை பொழப்பத்துப் போச்சு. வக்கத்த பயலுகளுக்கெல்லாம் வடிகாலாகிப் போச்சு. பத்துப் பதினஞ்சு தலமொறையாப் பலிகடாவாகிப் போனாக அந்தப்பாவி மக்க. அதுல எச்சமும் சொச்சமும்தான் அன்னைக் கிருந்தது அம்புலிப்புத்தூர்ல.

பொழுது மேற்க சாய, அம்புலிப்புத்தூர்ல நொழஞ்சிட்டா கருவாச்சி. அந்த ஊர்ல இருக்கிறதே ஏழெட்டுத் தெருவுதான். அதுல மூணு தெருவுதான் அந்தத் தெருங்கிறாக. "இதுல எந்தத் தெரு அந்தத் தெருன்னு பாப்பேன்? எந்த வீட்ல எம் மகன்னு கேப்பேன்?"

அரசமரத்துப் பிள்ளையார் கோயில்ல முந்தா னைய ஒதறி விரிச்சுக் கல் திட்டுல உக்காந் துட்டா.

வாடிவாசல் வழியாத்தான காள வரணும். எங்கிட்டி ருந்தாலும் எம்பிள்ள இங்கிட்டுத்தான வந்தாகணும்.

கண்ண முழிச்சு முழிச்சுப் பாத்து ஒக்காந்திருக்கா. புத்துப்பாம்பு மாதிரி அவ அங்கிட்டும் இங்கிட்டும் தலையத் தூக்கிப் பாத்ததுல மூணாம்தெரு மொனையில காட்டாமணக்கு வேலியில காயுது மகனுக்கு அவ வாங்கிக் கொடுத்த கட்டம்போட்ட சட்ட.

நேத்து இந்நேரம் அம்புலிப்புத்தூருக்குள்ள அழகுசிங்கம் நுழைய, நனைஞ்ச கருப் பட்டியில ஈய்க்கிற மாதிரி நாலஞ்சு தரகனுங்க மொய்ச்சிட்டாங்க மொய்ச்சு. வெத்தல பாக்கு வைக்கல மேளம் அடிக்கல. மத்தபடி புதுமாப்பிள்ளைய மச்சினங்க வரவேற்புப் பண்ற மாதிரி வா வா ன்னு பிச்சு எடுத்துட்டாங்க பிச்சு.

அம்புட்டுப் போட்டியிலயும் அழகுசிங்கத்த அணச்சு ஓரங்கட்டிட்டான் ஒரு ஒத்தக்காலன். ஒரு கால் வெளங்கல பாவம் அவனுக்கு. ஆனா, ஒத்தக் கால அழுத்திக்கிட்டு ஒத்தக் கால இழுத்துக்கிட்டு ரெண்டாளு நடை நடந்தான்.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Fri Dec 27, 2013 4:41 am

"கோழிதான வேணும். வாங்கித் தாரேன் வா. குஞ்சுக் கோழி இருக்கா பிஞ்சுக் கோழி ருக்கா வெடக் கோழி இருக்கா முழுக் கோழி இருக்கான்னு விசாரிச்சுக்கிட்டேயிருந்தாக் கதையாகுமா? கோழிப் பண்ணைக்கே ஒன்னக் கூட்டிட்டுப் போயிட்டா நெனச்ச கோழியப் பிடிச்சுக்கிடலாமா இல்லையா?"

மூணாந் தெரு மொன வீட்ல விட்டுட்டு இவங்கிட்ட எட்டணா, கதவு தொறந்த கெழவிகிட்ட எட்டணா வாங்கிக்கிட்டு நாலு கால் பாய்ச்சல்ல ஓடிப் போனான் ஒத்தக்காலன். வீட்டுக்குள்ள போன பய முழிக்கிறான். நான் வேட்டைக்கு வந்த நாயா? வெட்டுப்பட வந்த கெடாயா? பக்குப்பக்குன்னு அடிக்குது கண்ணு திக்குத்திக் குன்னு அடிக்குது நெஞ்சு. வந்த வாலிபப் பயல உத்துப் பாத்தா கெழவி. மொன வளைஞ்சாலும் நிமிந்து நிக்கிற அருவா மாதிரி கூனு விழுந்தாலும் குண்டாங் கல்லு மாதிரி கிண்ணுன்னு இருக்கா கெழவி. ஆயுசுல எத்தன ஆம்பளைகளப் பாத்த கெழவி. ஒரு அட்டப்பார்வ பாத்தாலே போதும் வந்தவன் வயசு என்ன, வகிசி என்ன, வெளிப் பையில காசு இம்புட்டி ருந்தா உள் பையில எம்புட்டி ருக்கும், அவன் ஆஸ்திபாஸ்தி என்ன? அகல நீளம் என்னன்னு குத்துமதிப்பாக் கணக்குப் போட்டாள்னா பத்துக்கு ஏழு பழுதாகாது.

பாத்தவுடனே அவ கணக்குப் போட்டுட்டா, கன்னுக்குட்டி புதுசு. இந்தப் பால் குடிக்க இப்பத்தான் வந்திருக்கு. உக்காரு ராசான்னா உள் வீட்டுத் திண்ணையக் காமிச்சு.

உக்காரல அவன், மேய விட்டான் கண்ண வீட்டுக்குள்ள. போதப்புல் போட்ட கூரை வீடு. சாணி மொழுகிக் குத்துமதிப் பாக் கோலம் போட்ட தரை. அவன் நிக்கிற எடம் நடுவீடு. ஆக்குப்பாரை இல்லாம மூணு அறையாத் தடுத்திருக்கு உள்வீடு. அதுல ரெண்டுக்குக் கதவா சாக்குக தொங்குது. ஒரு அறைக்குக் கதவு டண்டணக்கம் பலக. ஆக்குப்பாரைய ஒட்டியிருக்கிற கதவத் தொறந்தாக் கொல்லப்புறம். அது தொறந்தவெளி.

அதுக்குக் காட்டாமணக்கு உயிர்வேலிதான் இடுப்பளவு மறைப்பு. அதுல தண்ணி நெப்பிக் குளிக்க ஒரு அண்டா, குளிகல்லு மேல ஒரு பித்தளச் செம்பு. தெறிச்ச வெத்தல எச்சியா... நசுக்குன மூட்டைப் பூச்சியான்னு கண்டுபுடிக்க முடியாதபடிக்கு சுண்ணாம்புச் செவத்துல தாறுமாறாச் செவப்புக் கோடு. இங்கயும் நாங்க காவல் இருப்பமில்ல... சிரிக்குதுக சாமிக & சுவத்துல படத்துல. சாக்குக் கதவுக்குப் பின்னாலயிருந்து வளவி, கொலுசு, சிரிப்பு, செல்லச்சேட்டைன்னு விதவித மான சத்தங்க வந்து கலவரம் பண்ணுதுக காதுக்குள்ள.\

"அடியே பொண்டுகளா! ராசா வீட்டுக் கன்னுக் குட்டி ஒண்ணு வந்திருக்குடி. புடிக்குச் சிக்காத புதுக் கன்னுக்குட்டி. மேய்க்கிற யோகம் யாருக்குன்னு பாப்பம். போடி மூத்தவளே! போயி பாயெடுத்துப் போடு போ."

கோரம் பாயோட வந்தா மூத்தவ. கிளிப்பச்சை லவுக்கயும் கோவம்பழச் சீலையுமா கோடாலிக் கொண்ட போட்டு அதுல வலையடிச்சுப் பிரிமணை சுத்தின மரிக்கொழுந்துமா, கழுத்துல பொட்டுமணியும் கால்ல தண்டையுமா. ஒடம்பு எளசா, மூஞ்சி முத்தலுமா.

"உக்காருங்க"ன்னு சொல்லிட்டு விரிச்ச கோரம் பாய ஓரம் சரிசெய்ற மாதிரி ஒரசி நின்னுக்கிட்டுக் குதிகாலத் தரையில ஊனித் தன் கட்ட வெரலத் தூக்கி அவன் கட்ட வெரல மெதுவா மிதிச்சு எதமா நசுக்கி ஒரு இன்ப இம்சை பண்ணிட்டு ஓடியே போனா. இப்ப ஒத்தக்காலன் சொன்னது ஒலிக்குது காதுல. இந்த முத்தல்தான் முழுக் கோழி போலிருக்கு. முதல்ல தெரியல இப்ப வலிக்குது நசுக்குன கட்ட வெரலு.

"தாகமா வந்திருக்கும் தம்பி. அடியே அடுத்தவளே. நீர்மோரு குடுடி நீ போயி."

நீர்மோர் கொண்டு வந்தவ நெறம் கம்மி. ஆனா, பாத்ததும் நெஞ்சுல பச்ச குத்துற லட்சணமான மூஞ்சி. என்னியப் பிச்சித் தின்னுக்கன்னு சொல்லுது கன்னம். அதுக்குள்ள ஒன்னியத் தின்னுபுடுவேன்னு மெரட்டுது கண்ணு. வந்த ரெண்டு பேர்லயும் இவதான் பெருந்தனக்காரி. முழுப் பூசணிக்காயச் சோத்துலயும் மறைக்க முடியாது முந்தானையிலயும் மறைக்க முடியாது இல்லையா...
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Fri Dec 27, 2013 4:42 am


உக்காந்திருந்தவன் மூஞ்சிக்கு நேரா நெஞ்சக் கொண்டாந்து நிப்பாட்டி, "குடிங்க"ன்னா மோர. பித்துப்பிடிச்சுப் பேதலிச்சுப் போனவன் மோர அண்ணாக்காக் குடிச்சுட்டுச் சொம்ப அவகிட்ட நீட்ட, ஒழுகின வாய் தொடச்சுவிடுற சாக்குல முழுசா எடுத்துட்டா முந்தானைய. அவன் இறுக்க மூடிக்கிட்டான் கண்ண. மல்லியப்பூ வாசன நடந்து கடந்து போறவரைக்கும் தொறக்கல கண்ண. இதுதான் வெடக் கோழியோ? இருந்தாலும் இருக்கும்.

அடுத்து வருது பிஞ்சுக் கோழி அரிசிப்பொரி, வறுத்தகடல, அச்சுவெல்லம் எடுத்துக்கிட்டு. இது முக்காக் கை லவுக்க போட்டி ருக்கு. லவுக்க முடியிற எடத்துலருந்து வளவிய அள்ளி அப்பியிருக்கு. என்னைப் பார், என் கொலுசைப் பார்னு கொஞ்சம் ஏத்தியும் கட்டியிருக்கு சீலய. கழுத்துல பவளம் பாசி, காதுல சிமிக்கி, ஒரு முத்தம் குடுத்தாக் கரைஞ்சாலும் கரைஞ்சிருவேன்னு சொல்ற பிஞ்சு உதடு. என் எதிர்காலம் இன்னும் நல்லாயிருக்கும்னு சொல்லாமச் சொல்ற சோடி மாதுளங்கா. அப்பத்தான் குளிச்சு முடிச்சுத் தொவைச்சுத் தோள்ல காயப்போட்ட கனத்த முடி. ஆளு குட்டை ஆனாலும் அழகு. குள்ள மயிலு.

அரிசிப்பொரித் தட்டப் பாயில வச்சவ படக்குன்னு அஞ்சு வெரலயும் அவன் தலமுடிக்குள்ள செலுத்திக் கோதிவிட்டுக் கோலம் போட்டு நகத்துலயே கீறிக் கிண்டிக் கெழங்கெடுத்து அவன் கண்ணு சொக்கு துன்னு தெரிஞ்சு ஒரு சுத்து சுத்திவிட்டுச் சொல்லாமப் போயிட்டா.

பித்தம் தெளிய அவனுக்குச் செத்தவடமாச்சு. ஆசையில பயலுக்கு முதுகுத்தண்டுல மினுக்கிட்டான் பூச்சிகளாப் பறக்குது. ஆனா பயத்துல வயித்துல மின்னல் வெட்டி ஒடைஞ்சு ஒடைஞ்சு உள்ள விழுகுது. இனி குஞ்சுக் கோழி தான் பாக்கி. அதையும் பாத்துருவோம்னு பாத்தா, கெழட்டுக் கோழி வந்து நிக்குது எதுக்க.

"பாத்துக்கிட்டியா ராசா. மூணு கனிக(ள்) மாதிரி வச்சிருக்கேன் மூணு பொட்டை கள.

அத்தினி... சங்கிணி... சித்தினி... எவ வேணுமோ எடுத்துக்க."

பய நிதானம் தப்பிப் போனான். பூன பிறாண்டுது அவனுக்குப் புத்திக்குள்ள. ஆச நண்டு தோண்டுது அடிமனச. ஆனா, கண்ண மூடுனா அடிக்கடி வந்து போகுது ஆத்தா மூஞ்சி. ஒடம்பு இங்க இருக்கு மனசு அங்க கெடக்கு. கெழவிக்கு ஒண்ணும் புடிபடல. வில்லும் அம்புமா வந்த பய ஏன் தொவண்டு தொங்கிப்போனான். பயலுக்குத் துட்டுப் பத்தலையா தகிரியம் பத்தலையா?

கிட்ட வந்தா. ரெண்டு கையிலயும் அவன் ரெண்டு கன்னத்தையும் தொட்டு வழிச்சு, தன் நெத்திப் பொட்டுல வெரல்கள மடக்கி நெட்டி முறிச்சா. சடசடசடன்னு வெடிச்சுச் சத்தம்
போடுது வெரலு.

"யாத்தே! கண்ணு பட்ருக்கே என் கன்னுக் குட்டிக்கு."

அவன் நெளிய நெளியத் தடவிக் குடுத்தவ அவன் பைக்குள்ள கண்ணவிட்டுக் கணக்குப் பாத்துட்டா. கட்டம் போட்ட அவன் சட்டைப் பையில ஒண்ணுக்கு மேல ஒண்ணு ஏறி மூணு பச்ச நோட்டுக எட்டி எட்டிப் பாக்குதுக. பயல ராத்தங்கல் தங்கவச்சே அனுப்பலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Fri Dec 27, 2013 4:42 am


முடிவெடுத்துட்டா கெழவி.

சீ! வராத எடத்துக்கு வந்துட்டமே. ஒண்ணும் சொல்லாம ஓடிப்போகலாமா?ன்னு அவன் நெனைக்க...

"ஏய்! தவிச்சுவந்த பிள்ளைக்குத் தலைக்குத் தண்ணி ஊத்துங்கடி..." சொல்லி முடிக்கு முன்ன மூத்தவ கடகடகடன்னு கழட்டிப்புட்டா அவன் சட்டைய. அள்ளையில குத்தி அவன அல்லாடவிட்டு உள்ள இழுத்த வயிறு வெளிய வாரதுக்குள்ள அவன் வேட்டிய உருவிப்புட்டா எளையவ. என்னா நடக்குது அங்கன்னு அவன் புத்திக்கு எட்டுறதுக்குள்ள எண்ணெ காய வச்சு எடுத்துட்டு வந்துட்டா அடுத்தவ.

எளஞ்சூட்டு எண்ணெய உள்ளங்கையில ஊத்தி அவன் உச்சந்தலையில வச்சு, சப்புச்சப்புச்சப்புன்னு நாலு அடி அடிச்சுக் கரகரகரன்னு கைய வச்சுத் தேச்சு அவனப் பித்து ஏத்துறா பெருந்தனக்காரி.

வீட்டத் தூக்கி வெளிய வைக்குதய்யா எண்ணெ வாசன. சித்தகத்திப் பூவும் பழுத்த பட்டமொளகாயும் சாதிக்காயும் போட்டுச் சிவீர்னு செவக்கக் காய்ச்சி எடுத்த செக்கெண்ணெயாச்சே.

எண்ணெ தேய்க்கிறபோதே வெந்நி கொதிக்குது அடுப்புல. தலயில வச்ச எண்ணெ கண்ல ஒழுகி விழுந்தப்பக் கண்ண மூடுனவன்தான் தெறக்கவேயில்ல. மூஞ்சில தேச்சு, நெஞ்சில தேச்சு, கை கால் உருவிவிட்டு, கோவணத்துல எண்ணெபட்ருச்சேன்னு சின்னவளும் மூத்தவளும் மாறிமாறிச் செல்லச்சேட்ட பண்ணி, கண்ணில்லாத கபோதியக் கைத்தாங்கலாக் கூட்டிட்டுப் போற மாதிரி கொண்டு போறாக குளிப் பாட்ட.

புண்ணாக்குத் திங்க வந்தவன் செக்குல தலயக் குடுத்த கதையாகிப்போச்சு அவன் கத. வளவிக்காரி ஆச தீரக் குளிப்பாட்டி விடுறா அழகு சிங்கத்த. தலைக்கொரு சொம்பு தண்ணி ஊத்தி அள்ளி எடுத்தா அரப்புப் பொடிய. சும்மா காத்துல கமகம் பாடுது அரப்புப் பொடி. நயம்பொடி அரப்புப் பொடி. உசிலைஎலை மஞ்சள் பூலாங்கெழங்கு வெந்தயம் & மருதாணி மருக்கொழுந்து எல்லாம் ஒண்ணாப்போட்டு எளங் குமரிகளாக் கூடி இடிச்சது.

ஓங் குடுமி எங் கையிலன்னு அவ இழுத்துப் புடிச்சு அழுத்தித் தேய்க்கத் தேய்க்க அங்க தேயி இங்க தேயின்னு அவளுக்கே உத்தரவு போட்டு உசுப்பிவிடுது அவ வளவி. தலைக்குத் தண்ணி ஊத்த அவ மொதச் சொம்ப மோந்தாளோ இல்லையோ "யாத்தே!

தீ"யின்னு அவ ஆத்தாகாரி ஆக்குப்பாரையில சத்தம்போட, என்னமோ ஏதோன்னு அங்க ஓடிப் போனாளுக எல்லாரும். ஒரு கரித்துணி தீப்புடிச்சதுக்கே கத்திக் குமிச்சுப்புட்டா ஆத்தாகாரி.

இங்க பாவம்... ஒத்தப் பிள்ளையார் மாதிரி உக்காந் திருக்கவனுக்குக் கண்ணுல அரப்புப் பொடி விழுந்து காந்துது. கண்ணத் தெறக்காம அவன் தடவித்தடவிச் சொம்பத் தேடுறான். இப்ப ஒரு கொலுசுச் சத்தம் வந்து அவன் முன்னுக்க நின்னு குளிப்பாட்டுதய்யா அவன.

அவன் உச்சந்தலையில தண்ணிவிட்டு அஞ்சு வெரல் நொழஞ்சு ஆஞ்சு அலசிவிட கண்ணு தெறக்காம இருக்கிற பயலுக்குக் கபாலத்துக்குள்ள பூப்பூக்குது. கண்ணத் தெறந்து பாக்கிறான். பாவாட தாவணி யோட தலைக்குத் தண்ணி ஊத்திக்கிட்டிருக்கிறா ஒரு தங்கச் செல. யாத்தே! இது கனாவா? செடி ஒயரத்துக்கு ஒரு செம்பருத்திப் பூவா? குத்தவச்சதும் குடிசு பிரிக்கு முன்ன ஓடிவந்த கொமரிப் புள்ளயா? முழிச்ச கண்ணு மூடாமப் பாக்கிறான்.

நனைஞ்சிரும்னு சுருட்டி நடுத் தொடையில வச்சிருக் கியே... அந்தப் பாவாடையாகக் கூடாதா நானு? தண்ணியில நனஞ்சு உன் கொலுசுமணிக் குள்ள மாட்டி நீட்டிக்கிட்டிருக்கே ஒரு குறுமுடி... அது செஞ்ச புண்ணியம் நான் பண்ணலையே பாவிமகளே!

தலைக்கு அவ தண்ணி ஊத்த ஊத்த முக்காலடி தூரத்துல முட்ட முட்ட வந்து முட்டாமப் போற மொசக் குட்டிக, தண்ணி ஊத்திக் குளிக்கிறவன் தலையில தணல வாரி எறியுதுக.

"ஓ! இவதான் இந்தக் கோழிப்பண்ணையில குஞ்சுக் கோழியோ?"
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Fri Dec 27, 2013 4:42 am


"ஏண்டி சின்னவளே! கொல்லப்புறத்துல என்ன வேல? கொமட்டுல குத்து அவள. ஓடிப் போடி உள்ள."

இவள ஏன் காமிக்கல? பிஞ்சுக் கோழிய இன்னம் சந்தையில எறக்கல. வீட்டுக்குள்ள போன கொலுசு தேஞ்சு ஓஞ்சுபோன எடத்தில இத்து விழுந்துபோச்சு இவன் உசுரு.

அன்னைக்கு ராத்திரி அக்கா தங்கச்சிக மூணு பேரும் மாத்தி மாத்தி உள்ள போயி வந்தாக ஒண்ணும் வேலைக்காகல.

என்னா வெவரம்னு விடிய விடியக் கெழவி விசாரிச்சும் பாத்தா. ரெண்டு தொடைகளையும் இறுக்கிப் பூட்டிக்கிட்டுப் பய படுத்துக்கிட்டானாம் முத்தம் குடுக்கப்போனா மூஞ்சியத் திருப்பிக் கவுந்துக்கிட்டானாம்.

"ஏண்டி! நம்ம சுத்தபத்தம் புடிக்கலையா சொறிப்பயலுக்கு. எங்க பாக்குறது சுத்தம்? எர புடிக்கிற வேட்டை நாய் வாயி பழங் கொத்துற பறவ வாயி பால் குடிக்கிற கன்னுக்குட்டி வாயி முத்தங் குடுக்குற பொம்பள வாயி இதுலயெல்லாம் சுத்தம் பாக்கப்பிடாதுன்னு சொல்லுவாகளே... எவ எடுத்துச் சொல்றது அந்த எடுபட்ட பயலுக்கு?"

ராவெல்லாம் கண்ணுறங்காத பயலுக்குக் கண்ணுக்கு முன்னுக்க வந்துபோறது ரெண்டே மூஞ்சிதான். அந்தக் குஞ்சுக் கோழி மூஞ்சி வந்து வந்து போகுது. ஆத்தா மூஞ்சி அப்பப்ப வருது லேசுல போக மாட்டேங்குது.

விடிய்ய வாசத் தெளிக்க ஒறங்கிப்போனவன் பகலெல்லாம் ஒறங்கிக் கண்ணு முழிக்கையில பொழுது மசங்கிப்போச்சு. போகணும் ஊருக்குன்னு புத்திக்குள்ள கவுளி கத்துது. கெழவி கணக்குப் பாத்தா. தேச்ச எண்ணெய்க்கு தின்ன சோத்துக்கு தொவைச்ச துணிக்கு இருந்த இருப்புக்கு அஞ்சரை எடுத்துக்கிட்டு ஒம்போதரையக் கையில குடுத்து போயிட்டு வா ராசா போன்னுட்டா கெழவி.

அவன் சுத்தியும் முத்தியும் பாத்துட்டு ஒரே தவ்வாத் தவ்வி உள்ள போயி சின்னவ கையில அஞ்சு ரூவாய வச்சு அமுக்கிட்டு, தும்பு திரிச்ச கன்னுக்குட்டி மாதிரி மடார்னு கதவத் தெறந்து சடார்னு தெருவுக்கு வந்துட்டான்.

வெளிய வந்து பாத்தா முக்காட்டுக்குள்ள மூஞ்சி பொத்தி, தெருத் திண்ணையில குத்தவச்சு, காவக் காக்கிறவ மாதிரி உக்காந்திருக்காய்யா கருவாச்சி.

பேயடிச்சவன் மாதிரி பேச்சுமூச்சில்லாமப் போச்சு பயலுக்கு. பிள்ளையப் பாத்ததும் அழுகையா ஊத்துது அவளுக்கு. அவன் அழுகல. அழுகை வார வழியப் பாறாங்கல்லு வச்சு அடைச் சுப் புடுச்சு வெக்கம். முன்ன அவ நடக்க பின்ன அவன் நடக்க ஒரு வார்த்தையும் பேசிக்கிரல தாயும் மகனும்.

மாப்பிள வீடு பாக்க ஆளுகள வரச்சொல்லிட்டுப் பொம்பள வீடு தேடிப் போயிட்டானே புத்திகெட்ட பய. அம்புலிப்புத்தூர் ஓடை தாண்டி ஆலமரம் கடக்க ஆத்தா அழுதுக்கிட்டே கேட்டா:

"ஏண்டா தங்கம்! ஏதுடா ஒனக்கு இம்புட்டுத் துட்டு?"

அங்கிட்டுப் பாத்துக் கிட்டே சொன்னான் அழகுசிங்கம்

"நல்லத்தா குடுத்துச்சு."

"நல்லத்தான்னா..?"

"அதான்... திம்சு."

புழுதியிலே கெடந்த ஒரு முள்ளு சுருக்குன்னு கால்ல குத்த, அவன் சொன்ன சொல்லு நறுக்குன்னு நெஞ்சுல குத்த, ரெண்டு வலியில எந்த வலி பெருங்கொண்ட வலின்னு தெரியாம நின்ட எடத்துல நின்டுபோனா கருவாச்சி, ஒத்தக்கால மட்டும் ஒசக்கத் தூக்கி.

சில பேரப் பாத்தாலே தெரிஞ்சு போயிரும் நல்லவுகன்னு. அவுகளுக்கு மறைக்கத் தெரியாது இருதயக் கூடு என்னா நெனைக்கு துன்னு கண்ணாடி மாதிரி காட்டிக் குடுத்திரும் கண்ணு. சில பேரப் பாத்தவுடன தெரிஞ்சுபோயிரும் சீ! சீர் கெட்ட ஆளு கோளாறா இல்லாட்டிக் குடி கெட்டுப்போயிரும்னு. வெசமும் வெனயமும் அவுக கண்ணுலயே திட்டுத்திட்டாத் தெரியும். ஒதுங்கிப் போயிரலாம் ஒரு தொந்தரவு இல்ல. ஆனா, இருதயம் நெனைக்கிறது என்னான்னு கண்ணுல துப்புக் காமிக்காத ஆளுக இருக்காகளே அவுகதான் ஆபத்தான ஆளுக. அவுகள ஆழங் காண முடியாது. அழுக்குத் தண்ணி ஆழங் காமிக்குமா? காமிக்காதில்ல.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Fri Dec 27, 2013 4:44 am

திம்சு... அப்படியாப்பட்ட ஆளு. இன்னது நெனைக்கிறாங்கிறதக் கண்ல காமிக்க மாட்டா. அப்படியே காமிச்சாலும் பொய்ய நெசமாக் காமிப்பா நெசத்தப் பொய்யாக் காமிப்பா. அவளத்தான் மத்தவுக கண்டு புடிக்க முடியாதே தவிர, அவ எல்லாரையும் கண்டுபுடிச்சு வச்சிருப்பா.

இன்னாருக்கு இன்னது புடிக்கும்ங் கிறதக் கண்டறியவே ஒரு பெரும் புத்தி வேணுமா இல்லையா? அழுத புள்ளைக்குப் பாலும் புள்ளத்தாச்சிக்குப் புளியங்காயும் புடிக்கும்னு எல்லாருக்கும் தெரியும். குடிகாரனுக்குக் காரக் கறி புடிக்கும் கூலிக்காரனுக்கு எச்சாக் காசு குடுத்தாப் புடிக்கும் கொமரிப் புள்ளைக்கு நொறுக்குத் தீனி புடிக்கும் சாகப்போற கெழவனுக்குச் சொந்த பந்தம் வந்து நெத்தி தொட்டாப் புடிக்குங்கற தெல்லாம் திம்சுக்குத்தான் தெரியும்.

அத்தனையும் தெரிஞ்சுக்கிட்டு அவுகளுக்குப் புடிச்சத மடிப்பிச்சை போட்டுவிட்டுட்டு, தன் போக்குல போயித் தன் காரியம் முடிக்கிறவ திம்சு. கெழட்டு மாமனுக்கு என்ன கொறைங்கிறதத் துருவித்துருவித் துப்பறிஞ்சுக்கிட்டா. தனக்கு வெவரம் தெரிஞ்ச நாள்லயிருந்து தன்ன யாரும் மதிக்கிறதில்லங்கறதுதான் கெழவனுக்கு இருக்கிற பெருங்கொண்ட கவலை பெறவிக் கவலைன்னு அன்னைக்கே கண்டுக்கிட்டா அதுக்குத் தக்கன காய் நகத்திட்டா.

வெள்ளி, செவ்வாயில தலைக்கு முழுகி சாம்பிராணி காமிச்சு மடார்ன்னு போயி விழுந்தா கெழவன் கால்ல. "எந்திரி தாயி எந்திரி"ன்னு பதறிப்போச்சு பெருசு. ஆனாலும் வறண்ட கெணத்துல திடீர்ன்னு ஊத்தடிச்ச மாதிரி ஊத்துது கண்ணீரு. அப்பறம்... எப்படா வரும் வெள்ளி, செவ்வாய்ன்னு ஏங்கி வீங்கிப்போச்சு பெரும் மனசு.

ரெண்டு மூணு வருசத்துலயே கெழவனக் கிறுக்குப் புடிக்கவச்சுப் பிட்டா. குழைய வடிச்ச சோறு வெந்து மலந்த ஈரலு மாறாத வெத்தல மங்காத வெள்ளை தலமாட்ல வெந்நி எச்சி துப்ப ஏனம் கம்பளி மேல கண்டாங்கிச் சீல அவிச்ச மொச்ச இடிச்ச தொக்கு (வேணுங்கிற வெல்லம் போட்டு).

இப்படியெல்லாம் உச்சி குளிர உபசாரம் பண்றதுமில்லாம, பேச்சுத் தொணைக்கு அப்பப்ப சில பெருசுகளையும் கூட்டிவிட்ருவா.

சடையத் தேவருக்கு அந்தச் சுத்துவட்டாரத்துலேயே தான்தான் மெத்தப் படிச்ச மேதாவின்னு நெனப்பு. ஆடு குட்டி போட்டாலும் ஆள் செத்துப்போனாலும் அது அதுக்குன்னு ஒரு சொலவம் சொல்லி அலையிற ஆளு. தானும் வெவரங்கெட்ட சிறுக்கி இல்ல... வெவரமான பொம்பளதான்னு தன் அறிவு மூட்டைய ஒரு ஓரமா ஒரு நாள் அவுத்துவுட்டா திம்சு.

"ஊருக்கெல்லாம் சொலவம் சொல்றீகளே... நான் ஒரு சொலவம் சொல்றேன். அதுக்கு அர்த்தம் சொல்றீகளா பெரிய மாமா?"

"சொல்லு தாயி சொல்லு."

"ஊரான் பிள்ளைய ஊட்டி வளத்தா, தம் பிள்ள தானே வளரும்னு சொலவம் சொல்லுதே... என்னா அர்த்தம்?"
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Thu Sep 18, 2014 5:00 am


வர மாட்டேன்னு சொன்ன மீசை மேல வம்படியாக் கை போட்டு மேல தூக்கிவிட்டுத் தொண்டையச் செருமிக்கிட்டே சொல்றாரு சடையத் தேவரு.

"குடுத்து வாழ்றவனுக்குத்தான் கொலம் தழைக்கும். அதான் தாயி அர்த்தம்."

இழுத்து அம்மியரைச்சுக் கிட்டிருந்தவ அத நிறுத்திட்டு, "இல்லே"ன்னா. "ஊரான் பிள்ளைன்னா நானு. ஒங்க வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்தவ. என்னிய நீங்க ஊட்டி வளத்து உருப்படியா வச்சிருந்தா ஒங்க பிள்ளைய நான் ஒழுங்கு மரியாதையா வச்சுக்குவேன். அதான் அதுக்கு அர்த்தம்."

ஒடம்புல ஒரு பாதி மட்டும் ஓடுற கொஞ்சநஞ்ச நாடியும் ஒரேயடியா ஒடுங்கிப்போச்சு சடையத் தேவருக்கு.

"யாத்தே! அந்த சரஸ்வதியே வாக்கப்பட்டு வந்து சாணியள்ளி சமையல் பண்ணிப் போடுறா சடையத்தேவன் குடும்பத்துக்கு" மெரண்டு போனாரு கெழவன்.

வெளஞ்சு வளஞ்ச கட்டைகளுக்கெல்லாம் அப்பப்ப ஒரு சந்தேகம் வந்திரும்: ஏஞ் சொத்தும் அதிகாரமும் ஏங்கிட்டயேதான் இன்னும் இருக்கா? இல்ல விழுந்த பல்லு மாதிரியே அதுவும் கழண்டுபோயிருச்சா.? அப்படியெல்லாம் சந்தேகப்படாதீக. நீங்க நீங்கதான்னு கண்ணாடி புடிச்சுக் காமிச்சுக்கிட்டேயிருக்கணும் அப்பப்ப அவுக மூஞ்சிய.

திம்சு அதைச் செஞ்சா கெழவனுக்கு ஒரு கதையும் சொன்னா கால அமுக்கி விட்டுக்கிட்டே.

"ஒரு காட்ல சிங்கமும் நரியும் சிநேகமா இருந்திச்சுக மாமா. நரி சொல்லுச்சு காட்டு ராசா! காட்டு ராசா! நீங்க வேட்டைக்குப் போனா ஒங்களப் பாத்து மாடும் மானும் யானையும் புலியும் ஓடி ஒளிஞ்சுபோகுதுக பல நாள் பட்டினியும் கெடக்கீக. எங்க எது மேயுதுன்னு நான் உள் காடு போயி வந்து ஒளவு சொல்றேன். நீங்க அரவ மில்லாமப் போயி அடிச்சுத் தின்னுங்க. மிச்சம் மீதி எனக்கு."

"நல்லதுடா நரிப்பயலே அப்படியே செய்"ன்னு சொல்லிருச்சு சிங்கம். நரி ஒளவு பாக்க, சிங்கம் அடிக்க, சிங்கம் காட்ல ஒரே எலும்பு மழைதான். நாள் ஆக ஆக நரிக்கு மப்பு ஏறுது. ஒரு நாள் நரி சொல்லுது "காட்டு ராசா! நித்தம் நீ என்னால தான் எலும்பு கடிக்கிற. நான் இல்லாம நடக்குமா காரியம்? அதனால இன்னைக்கிருந்து என்னிய நரிப்பயலேன்னு கூப்பிடாத. கால் சிங்கம்ன்னு கூப்பிடு." போனாப் போகுதுன்னு சிங்கமும் நரியக் கால் சிங்கம்ன்னு கூப்புட ஆரம்பிச்சிருச்சு.

இப்படியே காலம் போகப் போக கால் சிங்கம் அரைச் சிங்கமாகிப் போச்சு அரைச் சிங்கம் முக்காச் சிங்கமாகிப் போச்சு. சிங்கத்துக்கு வயசாகவும் நரி நாட்டாம பண்ணப் பாக்குது. ஒரு நாள் "இனிமே என்னிய முழுச் சிங்கம்ன்னு கூப்பிட்டாத்தான் நான் ஒளவு பாக்கப் போவேன்"னு ஒக்காந்திருச்சு நரி. சரி! அறிவுகெட்ட நரி ஆசைப்படுது... "இன்னிக்கிருந்து நீ முழுச் சிங்கந்தானப்பா"சொல்லிருச்சு சிங்கம்.

கொஞ்ச நாள்ல சிங்கம் சீக்கு விழுந்து போச்சு. நான்தான் முழுச் சிங்கமாச்சேன்னு நரி கெளம்பிருச்சு வேட்டைக்கு. கூட ஒரு நொண்டி நரியத் தொணைக்குச் சேத்துக் கிருச்சு. யானக் கூட்டம் மேயற எடத்துக்குப் போயி சிங்கம் மாதிரியே பதி போடுது நரி. வம்படியாத் தரையில வால அடிக்குது.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Thu Sep 18, 2014 5:02 am


"சிங்கம் மாதிரியே எனக்கும் கண்ணு செவக்குதா பார்றா. "கோவப்பழமா செவந்திருக்குது ராசா" பொய் சொல்லுது நொண்டி நரி. இப்ப நரி பாயுது யான மேல. சிங்கம் பாஞ்சா யான முதுகுல ஏறி உக்காந்து தலையில அடிச்சுத் தரையில போட்டுரும். இது சிங்கம்ன்னு பேரு வச்ச நரிதானே... இது யானத் துதிக்கையில போயி அடிக்கப்போச்சு. கடைசியில அது கொம்புல மாட்டிக் கொடல் அந்து செத்துப்போச்சு.

பெரிய மாமா! கால் சிங்கம் அரைச் சிங்கம்ன்னு பேரு வச்சுக்கிட்டாலும் சிங்கம் மாதிரி நாட்டாம பண்ண முடியுமா நரி? ஒங்க மகன் நரிதான். சீக்காக் கெடந்தாலும் நீங்க சிங்கம்தான்."

காலப் புடிச்சுவிட்டது சொகமா? இல்ல அவ கத சொன்னது சொகமா? சடையத் தேவரு கெறங்கிக் கிறுகிறுத்துக் கெடந்தப்ப அடிச்சு எறக்குறா இன்னொரு ஆப்ப.

"பெரிய மாமா! ஒங்க மகன் குடிகாரராப் போயிட்டாரு. போற எடம் வார எடம் சரியில்ல. எத வித்து எதத் திம்பாருன்னு தெரியாது சொத்து எம் பேர்லயிருந்தா என்னைக்கும் அழியாது. எழுதிவையுங்க எம் பேர்ல சொத்த"ன்னு சொன்னா. பெரியகுளத்துக்கு வைத்தியத்துக்குப் போற மாதிரி குதிரை வண்டியி லேயே கூட்டிட்டுப் போயி பத்திரமும் தன் பேர்ல பதிவு பண்ணிப்புட்டா. பத்திரத்துலதான் தெரியுது அவ பேரு பேயம்மா.

அடுத்து... புருசனயும் போட்டுத் தள்ளிப்புட்டா.

சிங்கத்தையே கழுதையா மாத்துனவளுக்கு நரிய நாயா மாத்த எம்புட்டு நேரமாகும்? மாத்திப்புட்டா தன் சவுரிமுடிங்கிற சாட்டை யில சும்மா பம்பரமாச் சுத்திச் சுழட்டிவிட்டுட்டா கட்டையன.

சாராயங் குடிச்சுக் குடிச்சுச் சிறுகச் சிறுகச் செத்துப்போன நாக்குக்கு ஒறப்பா உப்புக் கண்டம் வறுத்துக் குடுத்தா. பானையில ஒளிச்சுவச்சிருந்த கஞ்சாவ எடுத்து இந்தான்னு நீட்டுனா. ஒறக்கம் வராமப் பெரண்டு பெரண்டு படுக்கிற குடிகாரப் பயலுக்குக் காதுக்குள்ள கோழி எறக விட்டு எளம் குடைசல் கொடஞ்சு கொடஞ்சு ஒறக்கத்த உண்டு பண்ணினா. அவன் ஊர் மேஞ்சு ஒலகம் சுத்தி நடுச்சாமத்துல வந்து கதவத் தட்னாலும் சுடுசோறு போட்டு விசிறிவிட்டா.

அது என்ன எழவோ தெரியல... அவன் எப்பவும் கோழி கூப்பிடத்தான் காலத் தூக்கிப் போடறது அதுக்கும் எனக்காச்சு ஒனக்காச்சுன்னு எப்பவும் ஈடுகுடுத்தா. பல சகதி பெரண்ட பன்னி மாதிரி ராத்திரிக்கு அவன் வீட்டுக்கு வந்தாலும் விடிய்ய கொக்கு மாதிரி வெளியேற நித்தம் ஒரு வெள்ள வேட்டி வெளுத்துவச்சா. இதுலயெல்லாம் சொகங்கண்ட கட்டையன அவ உக்கிபோட்டு உக்காரவச்சுப்பிட்டா. அப்பன்கிட்டயிருந்து மகனப் பிரிச்சிட்டா அவளுக்கு ஆடு புலி ஆட்டம் லேசு.

அப்பனுக்கொரு கத சொன்ன மாதிரி மகனுக்கும் ஒரு கத சொன்னா. இது வேற கத அப்பன் மகனப் பிரிக்கிற கத. ஒரு காதுல கோழி எறகு வச்சுக் கொடஞ்சுக்கிட்டே மறு காதுல ஆணியடிக்கிறா.

"ஒரு ஊர்ல ஒரு கெழவன். மக்கமாரு மூணு பேரு. கெழவி செத்ததும் மூணு பேருமே கஞ்சி ஊத்தல. தெரிஞ்சதப் பாருன்னு தெருவுல விட்டுட்டாக. கெழவன் கஞ்சி குடிக்கணுமே...


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Thu Sep 18, 2014 5:03 am


என்னடா வழின்னு யோசிச்சாரு உள்ளூர் நாட்டாம. ஒரு பெரிய காரீய உருண்ட வாங்கினாரு. முடிஞ்சு கெழவன் பையில போட்டாரு. இந்தாப்பா... இத வச்சுக்க எக்காரணம் கொண்டும் தெறந்து காட்டிராத தெறக்கவிட்றாத. நான் செத்தா மூணு பேருமாப் பங்கு போட்டுக்கங்கன்னு சொல்லிப்புடுன்னு சொல்லிக் குடுத்தாரு.

கெழவன் என்னமோ பெரும்பொருள் வச்சிருக்கான்னு மகன்களும் மருமகள்களும் தாங்குதாங்குன்னு தாங்குறாக. திண்ணையில கெழவன் உக்காந்தாலும் எந்திரின்னு எழுப்பித் திண்ணையும் தொடைச்சுவிடுறாக வேட்டியையும் கட்டிவிடுறாக. தீவாளி பொங்கலுக்குக்கூடக் கெழவனுக்குக் கறித்தண்ணி காமிக்காத பொம்பளைக வெள்ளி செவ்வாயிலகூட ஆடு கோழின்னு அடிச்சுப் போடு றாளுக. என்னாப்பா உம் பிள்ளை களுக்குப் பாசம் பொத்துக்கிட்டுப் பொங்குதுன்னு கேக்குது ஊரு. எல்லாம் ஒரு காரியத்துக்குத் தான்கிறான் கெழவன்.

ஒறங்கினாலும் ஒக்காந்தாலும் நடந்தாலும் பையை விடுறதில்ல கெழவன். ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போனாலும் தொங்குது பை தோள்லயே. என்னாதான் இருக்கு பையிலன்னு கேட்டா, அதுல ஒரு காரியமிருக்கப்பான்னு கண்ணச் சிமிட்டுறான் கெழவன்.

இப்படி ஏகபோகமா இருக்கையில தான் சாகப்போறது தெரிஞ்சுபோச்சு கெழவனுக்கு. மக்கமாரு மருமக்கமாரக் கூப்பிட்டு நான் யார் வீட்ல சாகுறனோ அவுகளுக்குத்தான் பெரிய பங்குன்னுட்டான் கெழவன். உடனே மூணு பேரும் என் வீட்ல சா... என் வீட்ல சா...ன்னு இழுக்கிறாக கையப் புடிச்சு. நாஞ் செத்தா முப்பதாம் நாளு காரியம் முடியாம அவுத்திராதீகன்னு சொல்லிட்டு, நாட்டாமையக் கூப்பிட்டுக் குடுத்திட்டாரு பைய.

ஒரு நாள் தெருவுல சுருண்டு விழுந்து மண்டை யப் போட்டுட்டான் கெழவன். இப்ப மூணு தேரு கட்டுறானுங்க மூணு பேரும். எந் தேர்லதான் அப்பன் போகணும்... எந் தேர்லதான் அப்பன் போகணும்... அண்ணந் தம்பிகளுக்குள்ள அடிதடியாகிப் போகுது. கடைசியா மூணு தேர்லயும் மாத்தி மாத்திப் பொணத்தக் கொண்டு போயிப் பொதச்சிட்டு வந்தாங்க. முப்பது நாள் காரியமும் முடிஞ்சது. அண்ணந்தம்பிக கூடி அவுத்தாக பைய. பாத்தா, உள்ள பெரிய காரீயம் இருக்கு. எல்லார் மூஞ்சியிலயும் இருளடிச்சுப் போச்சு. காரியமிருக்கப்பா காரியமிருக்கப்பான்னு எல்லாரையும் ஏய்க்காம ஏய்ச்சுட்டுப் போயிட்டானப்பா. அப்பத்தான்

அது நெசமாவே எழவு வீடாப் போச்சு."

கத சொல்றதையும் காது குடையறதையும் ஒரே நேரத்துல நிறுத்துனா திம்சு.

"இந்தக் கதைய ஏன் எனக்குச் சொல்றவ?"


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Fri May 15, 2015 2:02 am

[You must be registered and logged in to see this image.]

"அந்தக் கெழவனுக்கு ஒரு காரீயமாவது இருந்திச்சு. ஒங்க கெழவனுக்கு ஒரு ஒட்டுக் கோமணமாச்சும் இருக்கா?"

"ஏன் இந்த வீடும் காடும் இல்லையா?"

"ஆமாம். இந்த வெளங்காத வீடும் வெளை யாத காடும் உப்புக் கல்லுக்கு ஆகுமா? ஏதோ ஒன் தாட்டியத்துல ஓடிக்கிருக்கு வண்டி. நீ வட்டிவாசிக்குக் குடுத்து வாங்குற காசிலதான மாமன் மஞ்சக் குளிச்சுக்கிட்டிருக்கு.

"என்னடி சொல்ற?"

"வைத்தியம் பண்ண வாங்கித் தின்னன்னு வார காசெல்லாம் கெழவனுக்கே போயிட்டா நாளப்பின்ன நம்மளுக்குன்னு என்ன இருக்கு? நாளக்கி நீயும் விழுந்திட்டன்னு வச்சுக்க ஒன்னையும் நாந்தான தூக்கிச் சுமக்கணும்? எம் முந்தானையில முடிஞ்சுவைக்க என்ன இருக்கு?

என் புருசனத் தவிர?" இப்படி எத்தனையோ தடவ எறும்பா ஊரி ஊரி அந்தக் கல்ல தேய்ச்சிட்டா.

தானியம் வித்த பணத்தையும் வட்டிவாசிக்கு வார காசையும் பொண்டாட்டி பொறுப்புல விட்டுட்டான் கட்டையன். போகப் போகத் தகப்பனுக்கும் மகனுக்கும் பேச்சுவார்த்தை இல்லாமப் பிரிச்சேபுட்டா திம்சு.

ஒரு கோட்டைச் சுவர் இருக்கு. எங்கிருந்தோ ஒரு பறவை பறந்து வந்து அதுல உக்காருது. எச்சமிடுது. அதுலருந்து ஒரு வெத விழுகுது. விழுந்த வெத மொளைக்குது. அது வேர்விட வேர்விட விரிசல் கண்டுபோகுது சுவரு. தெரியாமச் செய்யுது பறவை தெரிஞ்சே செய்றா திம்சு.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Fri May 15, 2015 2:12 am

[You must be registered and logged in to see this image.]

அம்புலிப்புத்தூர விட்டு அழகுசிங்கத்த மீட்டு வந்தன்னைக்கிருந்து கண்ணுல ஒறக்கம் தங்கல கருவாச்சிக்கு. நெஞ்சாங்கூட்ல கத்தி குத்தி முதுகுப் பக்கம் முள்ளுத் தச்ச கதையாகிப்போச்சு
கருவாச்சி கதை.

அழகுசிங்கத்த நெனச்சா அவளுக்கு அழுகையா வருது. எதிரிகள விலாவுல குத்தி விழுத்தாட்டிட்டுக் கொம்புல குடல் மால சுத்தி வர வேண்டிய என் வீட்டுக் காரிக்காள, இப்பிடி எச்சி எல மேயப் போயி ஈனப்பட்டு நிக்குதே... இது நெஞ்சாங்கூட்டுல பாஞ்சு நட்டுக்குத்தலா நிக்கிற கத்தி.

யாருக்கும் தெரியாமக் காசு குடுத்து அவனத் தேவடியா வீட்டுக்கு ஏவிவிட்ருக் காளே ஒரு எழவெடுத்த சிறுக்கி... அது முதுகுல குத்தி முனையடிஞ்சு நிக்கிற முள்ளு.

ஏதோ லவுக்க போட்ட லம்பாடி பொழச்சுப் போகட்டும்னு கண்டுங் காணாம இருந்த கருவாச்சி இப்பப் பளிச்சுன்னு முழிச்சுக்கிட்டா.

இவ யாரு?

எந்தக் காட்டுச் சிறுக்கி?

ஒழுங்கு மொறையான பொம்பளதானா?

ஒண்டவந்த பிடாரியா?

மேட்டு நெலத்துல நட்டவனும் கெட்டான் மேனாமினுக்கியக் கட்டுன வனும் கெட்டான்னு சொல்லுவாகளே... இவ நல்ல சிறுக்கியா? மேனா மினுக்கியா?

இவளக் கண் கொத்திப் பாம்பு மாதிரி கவனிச்சே ஆகணும்னு பொட்டுல பொறிதட்டுது கருவாச்சிக்கு.

நான் பொத்தி வளத்த மகனக் காப்பாத்தணுமே இந்தப் பொட்ட நரி கடிக்காம. "ஆம்பளச் சாமிகளா! பொம்பளச் சாமிகளா! எல்லாம் தொலஞ்சு எல்லாம் கழிஞ்சு ஏம் பொழப்புல ஈவுன்னு நான் மிச்சம் வச்சிருக்கிறது ஒத்தையில பெத்த ஏம் பிள்ள ஒண்ணுதான்.

ஏம் பிள்ளையப் பெராந்து தூக்கிட்டுப் போயிராமக் காபந்து பண்ணிக் கரை சேத்துருங்க."

குத்துக் கல்லக் கண்டாலும் கும்புட்டுக் கும்புட்டுக் காலுக்கு விழுந்திர்றா கருவாச்சி.

ஆனா, ஆத்தாள ஆத்துல விட்டுட்டு அவன் போக்குல போயிக்கிட்டிருக்கான் மகன்காரன். பெரும் பாதையை விட்டுப் பிரிஞ்சு ஓடி ஒதுங்கி ஒடுங்கி, கண்காணாத காட்டுக்குள்ள காணாமப் போகுதா இல்லையா ஒத்தையடிப் பாதை... அப்படி ஆத்தா பிடிய விட்டு வெலகி வெலகி வெளிய வெகு தூரம் போறான் பய. ஆத்தா என்ன செஞ்சாலும் அது சொத்த இது சொத்தைங் குறான். இல்லாத நொட்டச் சொல்லெல் லாஞ் சொல்லி ஆத்தாளக் கிறுக்குக் குத்துறான்.

அன்னைக்குக் களிக் கிண்டிக் கருவாட்டுக் குழம்பு வச்சதுல ஒரு கூத்தாகிப்போச்சு.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Sat May 16, 2015 3:34 am

[You must be registered and logged in to see this image.]மீனாட்சின்னா மூக்குத்தி கண்ணகின்னா செலம்பு வேலு நாச்சின்னா கத்தி ஆண்டாள்னா மால பாஞ்சாலின்னா சீலங்கிற மாதிரி கருவாச்சின்னா ஞாபகம் வாரது கரு வாட்டுக் குழம்புதான். கருவாட்டுக் குழம்பு வைக்கிறதுல சில்லாவுல அவள அடிக்க ஆள் கெடையாது. அவ கைப்பதம் யாருக்கும் வராது. பாதகத்தி குழம்பு வச்சா கருவாடு மீனாப் போகும் கத்திரிக்கா தேனாப் போகும்.

அம்மியில மஞ்ச மொளகா வச்சு அரச்சு, தேங்காயில ஒரு எளஞ்சில்லு எடுத்து நச்சுன்னு நசுக்கி, சின்ன வெங்காயம் ரெண் டெடுத்து மேல் தோலச் செல்லமா ஒரு உரி உரிச்சு, பெத்த பிள்ளைய அடிக்கிற மாதிரி பொத்துனாப்புல ரெண்டு தட்டுத் தட்டிக் கொழவிய இழுத்து அரைச்சு அரைச்சத ஒண்ணு தெரட்டி, அதுல அறுத்து வச்ச கத்திரிக்காயையும் கருவாட்டையும் உப்பையும் போட்டு அஞ்சு வெரலையும் விட்டுப் *பெசறி, அளந்து தண்ணி வச்சு அடுப்புக் கூட்டி, அங்கிட்டும் இங்கிட்டும் போகாம அங்கேயே இருந்து அளவாத் தீ எரிச்சு, ஒரு கொதி ரெண்டு கொதி விட்டு மூணாங் கொதி கொதிச்சு அடங்கிப் பொருந்தப் புளியக் கரைச்சு ஊத்தி, நாலாங் கொதி கொதிக்க நறுக்கா எறக்கி வைக்கிறதுதான் ஊர்நாட்ல கருவாட்டுக் குழம்புக்குண்டான கம்ப சூத்திரம். இப்படித்தான் வைப்பாக எல்லாரும்.

இதுக்கெல்லாம் மேல கருவாட்டுக் குழம்புக்கு யாரும் பாக்காத ஒரு பண்டுதம் பாப்பா கருவாச்சி. மூணாங் கொதியில புளி கரைச்சு ஊத்தி நாலாங் கொதியில எறக்குறதுக்கு முன்னால கரண்டியில சுட வச்ச நல்லெண்ணயக் கருவாட்டுக் குழம்புச் சட்டிக்குள்ள எறக்கி, சாமிக்குச் சூடம் காமிக்கிற மாதிரி ஒரு அளாவு அளாவி மினுமினுமினுன்னு எண்ணெ மெதக்க எறக்கி வப்பா பாருங்க... அந்த வாசன அடுத்த தெரு வரைக் கும் அடிக்கும் நாக்குச் செத்த ஆளுக்கும் நமநமங்கும்.

அன்னைக்கி வச்ச கருவாட்டுக் குழம்புல ரெண்டு ஒச்சமாகிப்போச்சு. அங்க இங்க தேடியும் கத்திரிக்கா சிக்கல பாவப்பட்ட பொம்பளைக்குப் பாகக்காயிதான் சிக்குச்சு. தாளிக்கலாம்னு சீசாவ எடுத்துப் பாத்தா, சரீரத்துக்குள்ள ஆத்மாவக் கண்டுபுடிச்சுப் புடலாம் போலிருக்கு சீசாவுக்குள்ள நல்லெண்ணையக் கண்டுபுடிக்க முடியல.

அடித் தூர்ல மஞ்சளாத் தெரியுதே... அது எண்ணெயாத்தான் இருக்கும்ங்கற ஒரு தெய்வ நம்பிக்கையில கவுத்தா, இருந்த ஒண்ணு ரெண்டு சொட்டும் தாய் வீட்லருந்து மாமியா வீட்டுக்குப் போற புள்ளத் தாச்சி மாதிரி நிதானமா... வேண்டா வெறுப்பா எறங்கி வந்துச்சு.

மூதாக்கமாரு செஞ்ச தர்மம்... வருது நல்லெண்ணன்னு அவ சாமியக் கும்பிட்டுப் பாத்துக்கிட்டே இருக்க, சிவபெருமான் தொண்டை யோட நின்னுபோன நஞ்சு மாதிரி, இறங்கி வந்த எண்ணெ சீசாவோட கழுத்துலயே சீவன விட்டிருச்சு.

கேப்பக் களிய மூணு வெரல்ல பட்டும் படாமப் பிச்சுக் கருவாட்டுக் குழம்புல ஒரு முக்கு முக்கி என்னமோ நாவப் பழத்த வாய்க்குள்ள எறியிற மாதிரி களித் துண்ட நாக்குல எறிஞ்சவன், கண்ண இறுக்கி மூடிக் களியத் த்தூன்னு துப்புனான் பாருங்க...

பசுமாட்டுக்குச் சோளத்தட்ட வெட்டிக்கிட்டிருந்த கொண்ண வாயன் மூஞ்சியில களிமண் அடிச்ச மாதிரி ஓடி ஒட்டிக்கிருச்சு களி.

"அய்யா ராசா! என்னாச்சுய்யா... என்னாச்சு?"

"ராசாவாம் ராசா... கருவாட்டுச் சாறுக்குக் கத்திரிக்கா வாங்க வக்கில்லாத சிறுக்கி... நீ பெத்த மகன் மட்டும் ராசா எங்கிட்டு ஆகிறது ராசா..?

அடிச்சான் தட்டத் தூக்கித் தலகீழா.

நெளிஞ்சுபோச்சு தட்டு செதறிப் போச்சு களி தெறிச்சு ஓடி வெறச்சு விழுந்ததுல ரெண்டாஞ் சாவு செத்துப்போச்சு கருவாடு.

ஊர் ஒடுங்கிருச்சு.

அரசமரத்துக் கல்திட்டுல வேட்டிய இழுத்துப் பொத்தி ஒரு கையத் தலைக்கும் ஒரு கையத்தொடை இடுக்குலயும் வச்சு அழுதுக்கிட்டே படுத்துக்கெடந்த அழகுசிங்கத்த, கையில தூக்குவாளியோட எழுப்புறா சலவைக்காரி.

"எம் மகன் பட்டினி கெடந்தா எனக்கு ஒறக்கம் வராதுன்னு ஒங்க நல்லத்தா குடுத்துவிட்டுச்சு. சாப்பிட்டுச் சட்டியக் குடு நான் இங்கயே இருக்கேன்." தெறந்து பாத்தா சட்டி கொள்ளாம அமுக்கி அடச்ச நெல்லுச் சோறு அது மேல ரெண்டு அவிச்ச முட்ட. அவன் ஆவலாதியாக் கைவிட்டு அள்ளப் போனா, கால் சட்டிச் சோத்துக்குச் கீழ கறியா அடைஞ்சு வச்சிருக்கா திம்சு.

அவன் அள்ளித் திங்கத் திங்க சோறு மாதிரி நெஞ்சுக்குள்ள போறா திம்சு அவன் விட்ட ஏப்பம் மாதிரி அவனுக்குள்ளயிருந்து வெளியேர்றா கருவாச்சி.

லட்சுமிபுரத்துல பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா. இந்த வருசம் கரகாட்டமாம். அம்புலிப்புத்தூர் கனகு ஆட வாராளாம். பத்துப் பதினஞ்சு பஞ்சாயத்து எல்லைக்குள்ள அம்புலிப் புத்தூர் கனகு பேரச் சொன்னா வளஞ்ச வாழத்தண்டும் பத்திக்கிரும் அவ கரகம் சுத்துனான்னா பல பேருக்கு ஒலகம் சுத்தும்.

அம்புலிப்புத்தூர் அண்டான்னு வயசுப்பயக அவளுக்குச் செல்லமா வச்ச பேரு செல்லுபடியாகிப்போச்சு. தலையில தூக்கிவச்சதையும் சேத்து மொத்தம் அவளுக்கு மூணு கரகம்னு சீட்டுக் கிழிஞ்ச சில பெருசுக சிரிச்சுச் சிரிச்சுப் பேசிக்கிருவாக.

அம்புலிப்புத்தூர்க்காரி கரகம் பாக்க ணும்னு ஆச வந்திருச்சு அழகு சிங்கத்துக்கு.

சும்மா வெறுங்கைய வீசிப் போய் வந்திர முடியுமா? வழிச் செலவுக்கும் வாங்கித் திங்கவும் காசு வேணாமா? அடுக்குப் பானைய உருட்டிப் பாத்தான் அஞ்சறைப் பெட்டியப் புரட்டிப் பாத்தான் கொண்ணவாயன உருட்டிப் பாத்தான் ஒண்ணும் கதைக்காகல.

மலட்டுப் பொம்பள அரச மரத்தச் சுத்திச்சுத்தி வார மாதிரி ஆத்தாளச் சுத்திச்சுத்தி வாரான்.

காய்ச்சல்னு நெத்தியில பத்துப் போட்டுக் கட்டில்ல படுத்துக்கெடக்கா கருவாச்சி. எப்படிக் கேக்குறது?

கையேந்தி நின்னாக் கேவலம் களவாண்டுட்டுப் போனா வீரம்னு அவன் புத்தி சொல்லுது.

அவ முந்தானை யில எப்பவும் காசு முடிஞ்சுவச்சிருப்பா. முந்தான எங்க இருக்குன்னு மோப்பம் புடிச்சுப் புடிச்சுப் பாக்குறான் கண்ணுக் குச் சிக்கல. புத்துக்குள்ள இருக்கிற புதையலப் பாம்பு பாதுகாத்துப் படுத்துக் கெடக்கிற மாதிரி முந்தானையச் சுருட்டித் தலயணைக்குக் கீழவச்சு அதுக்கு மேல தலயவச்சுப் படுத்திருக்கா கருவாச்சி. கண்ணுக்குச் சிக்காதது கைக்கு எங்க சிக்கப்போகுது? இப்பப் பெரண்டு படுப்பா அப்பறம் பெரண்டு படுப்பான்னு பய மருகி மருகி நிக்கிறான்.

சீரங்கத்துல ரங்கநாதரு ஒருக்களிச்சுப் படுத்த மாதிரி படுத்தவதான் ஆடல அசையல.

முந்தானையில முடிஞ்ச காச முழுசா எனக்குக் குடுத்திரு பாதிய உண்டியல்ல போடுறேன்னு பத்திர காளியம்மனுக்கும் நேந்துக்கிட்டான்.

அது மூணு தலமொற கண்ட கயித்துக் கட்டிலு. உரிச்ச ஆட்டுக் கொடலு சரியும் பாருங்க... அப்படிக் கயிறு ஒழுகி நிக்கிற கட்டிலு அது. அவன் நேந்தது வீண்போகல பத்திரகாளியம்மன் பார்வை பட்டிருச்சு. தலகாணிய விட்டுத் தப்பிச்சுக் கயித்துக் கட்டில் ஓட்ட வழி இப்பத் தொங்குதய்யா முந்தான முடிச்சு. அது ஆட ஆட அழகுசிங்கம் ஆவியே ஊசலாடுது.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon May 18, 2015 12:55 am

[You must be registered and logged in to see this image.]
கட்டிலுக்குக் கீழ தலையக் குடுத்து, கத்திய வச்சு ஆத்தா முந்தானைய அறுத்துப் பாத்தா ரெண்டே ரெண்டு கால் ரூவா ஈன்னு இளிக்குது. ரெண்டு ஒரு ரூவாய எதிர்பார்த்த பய ரெண்டு கால் ரூவாயக் கண்டதும் சீ! பிச்சக்காரச் சிறுக்கின்னு கத்துனானோ இல்லையோ, கண்ணு முழிச்சு எந்திரிச்சுட்டா கருவாச்சி.

"பொழப்பா பொழைக்கிற பொழப்பு... இந்தா இத நீயே வச்சுக்க. நீ செத்தா ஒனக்கு ஒரு நெத்திக் காசு. நான் செத்தா எனக்கு ஒரு நெத்திக் காசு." அவ மூஞ்சியிலயே விட்டெறிஞ் சிட்டு விறுவிறுவிறுன்னு வெளியேறிட்டான் அழகுசிங்கம்.

நேரா சலவைக்காரி வீட்டுக்குப் போனான். கழுதை கத்துனா நல்ல சகுனம்னு நெனச்சானோ என்னமோ, அத ஓங்கி ஒரு எத்து எத்திக் கத்தவிட்டான்.

"கரகாட்டம் பாக்கப் போறேன். நல்லத்தாகிட்டக் காசு வாங்கிட்டு வா"அவள ஏவிவிட்டுட்டுத் திண்ணையில அவ வாங்கிவச்சிருந்த ஊர்ச்சோறு தின்டு உக்காந்திட்டான்.

தெள்ளக் கடஞ்சவ திம்சு. இந்த மொரட்டு முட்டாப்பயலக் கவுட்டுக்குள்ள நொழைக்கக் காலம் பாத்துக்கிட்டிருந்தா காலம் அவ காலுக்குள்ள வந்து நிக்குது இப்ப.

ஒரு தீக்குச்சி இருந்தா கரடிக்கிட்டத் தப்பிச்சுக்கிரலாம். மரமேறத் தெரிஞ்சா புலிகிட்டத் தப்பிச்சுக்கிரலாம். பள்ளத்துல எறங்கிக்கிட்டா யானகிட்டத் தப்பிச்சுக் கிரலாம். ஓடாமத் திரும்பிப் பாக்காம நின்னு நிதானமாப் போனா நாய்கிட்டத் தப்பிச்சுக்கிரலாம். இப்படி எல்லாம் தெரிஞ்ச வளுக்கு, காசும் கறித்தண்ணியும் குடுத்தாத்தான் இந்த மொரட்டு முட்டாப் பயகிட்டயிருந்து தப்பிக்க முடியும்னு தெரியாதா?

பச்ச அஞ்சு ரூவாயப் பாத்தா பகவானப் பாக்குற மாதிரியிருந்த காலத்துல முழு ரெண்டு ரூவாயத் தூக்கிக் "கரகாட்டம் பார்றா மகனே"ன்னு குடுத்துவிட்டுட்டா.

சோத்துல பள்ளம் வெட்டிக் காசுல மூடிப்புட்டா. அன்னைக்கி விழுந்தவன் தான் எந்திரிக்கவேயில்ல.

காலம் நகர நகர, அவ காயும் நகருது.

கட்டையன் கூட்டாளிகள வேரோட வெட்டிவிடத் திட்டம் போட்டா திம்சு. ரெண்டு மூணு வருசத்துல சாதிச்சும்புட்டா.

கட்டையன் கண்ணுல எப்பப்பக் கங்கு தெரியுதோ அப்பப்ப எண்ணெய ஊத்தி எரியவிட்டா.

"மாமா! கூட்டாளியப் பத்திக் குறை சொல்றாளே சிறுக்கின்னு கோவிச்சுக்கிராதிக. ஒங்க பாண்டிப் பய பார்வை சரியில்ல. எப்பவும் என்னியக் கண்ணப் பாத்துப் பேசாமக் கழுத்துக்குக் கீழேயே பாத்து வெறிச்சு நிக்கிறான் பய." அவன் சீட்டக் கிழிச்சா அன்னைக்கிருந்து.

"ஒங்க ஒலக்கையன் ஒரு கடன் காரப்பய. நீ இல்லாத நேரம் பாத்து வந்து காசு குடு, காசு குடுன்னு குரும்பைய அணில் கடிக்கிற மாதிரி காதோரம் வந்து கறிச் கறிச்சுங்கிறான்".

அன்னைக்கிருந்து வீட்டுக்குள்ள சேக்கவிடாம ஒலக்கையன வெலக்குனா.

"மாமோய்! எப்பத் தண்ணி மோந்து குடுத்தாலும் இந்தப் பன்னியாம்பேரன் செம்புக்குள்ள கைவிட்டு என் விரலக் கிள்ளாம வாங்குறான் இல்ல." அன்னைக்கிருந்து ஓஞ்சுபோச்சு அவன் கதையும்.

நடை தளந்துபோனாரு சடையத் தேவரு. சாராயமும் ஈரலும் போதும்னு சாஞ்சு கெடக்கான் கட்டையன். அவ "தோ தோ தோ"ன்னு கூப்பிட்டதும் அவ கால மோந்து பாக்குற கறுப்பு நாயாகிப் போனான் அழகுசிங்கம்.

அவ வாக்கப்பட்டு வந்து வருசம் ஏழாகியும் பிள்ளை இல்ல என்னா எவடம்னு கேட்கவும் நாதியில்ல.

நல்ல வெயிலு. சுட்டுக்கெடக்கு சொக்கத்தேவன்பட்டி.

ஈ ஆடல எறும்பாடல வேப்ப மரத்துல எல ஆடல. அகமலையில கட்டிக் குடுத்த மக வீட்டுக்கு, சொக்கத்தேவன்பட்டி வழியாப் போற குப்பணம்பட்டிக் கெழவி ஒருத்தி, கருவாச்சி வீட்டு வேப்பமரத்து நெழல்ல ஒதுங்கி வேர்வையத் தொடச்சு அதே முந்தானையில விசிறிக்கிட்டிருக்கா.

வாழப்பழம் ஒரு கையிலயும் வடை ஒரு கையிலயுமா வாங்கி, இந்த ஊர ஆள வந்த மகாராணி நாந்தானாக்கும்னு திடும் திடும்னு அந்த வழியா எட்டுவச்சுப் போறா திம்சு.

குறுகுறுகுறுன்னு அவளையே பாத்தா கெழவி திரும்பித் திரும்பிக் கெழவியையே பாத்தா திம்சு. படக்குன்னு தலையக் கவுந்து விசுக்குன்னு எட்டுவச்சு வெரசா ஓடி ஒளிஞ்சுபோனா.

முதுகுத்தண்டுல சிலீர்னு தண்ணியடிச்ச மாதிரி வளஞ்ச கூனு நிமிந்து ஒக்காந் துட்டா கெழவி.

யாரோ அசலூர்க் கெழவி... வீட்டு வாசல்ல வேர்த்து உக்காந்திருக்கா. தவிச்ச வாய்க்குத் தண்ணி குடுப்போம்ன்னு புளிச்ச தண்ணியக் கொண்டாந்து குடுத்தா கருவாச்சி.

புளிச்ச தண்ணிச் சொம்ப வலது கையில வாங்கி வச்சுக்கிட்டு, "அந்தா போறா பாரு லவுக்க போட்டு... அவ யாரு தாயி?"ன்னு கேட்டா கெழவி.

"திம்சு."

"இல்ல ஆத்தா. அவ பேரு பேயம்மா. இந்த ஊர்ல அவளுக்கு என்னா சோலி?"

"ரெண்டாந் தாரமா வாக்கப்பட்டு வந்திருக்கா."

"ரெண்டாந் தாரமாவா?"

"ஆமா, பிள்ளையில்லாத ஒரு பெரிய வீட்டுக்கு வாரிசு குடுக்க வந்திருக்கா!"

"வாரிசா? கூமுட்டை எப்படிக் குஞ்சு பொரிக்கும்?"

"என்னாத்தா சொல்ற?"

"ஆமா தாயி! கர்ப்பப்பை இல்லாதவ எப்படிப் பிள்ள பெற முடியும்?"

"கர்ப்பப்பை இல்லையா? நெசமாவா?"

"பொய்யா சொல்றேன். அவளுக்குக் கருக்கலச்சவ நானு கர்ப்பப்பை எரிஞ்சு போச்சுன்னு

சொன்னவ நானு. நான் கும்புடுற மூணுசாமி மேல சத்தியம்."

நெஞ்சப் புடிச்சு நின்னுபோன கருவாச்சி, கெழவியக் கையப் புடிச்சு இழுத்து வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போனா.

கெழவி உள்ள போனதும் அடைக்குது கருவாச்சி கதவு அரவமில்லாமக் கமுக்கமாத் தொறக்குது

திம்சோட கடந்த காலக் கதவு.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Jul 13, 2015 12:02 am


"அந்தக் கெழவனுக்கு ஒரு காரீயமாவது இருந்திச்சு. ஒங்க கெழவனுக்கு ஒரு ஒட்டுக் கோமணமாச்சும் இருக்கா?"

"ஏன் இந்த வீடும் காடும் இல்லையா?"

"ஆமாம். இந்த வெளங்காத வீடும் வெளை யாத காடும் உப்புக் கல்லுக்கு ஆகுமா? ஏதோ ஒன் தாட்டியத்துல ஓடிக்கிருக்கு வண்டி. நீ வட்டிவாசிக்குக் குடுத்து வாங்குற காசிலதான மாமன் மஞ்சக் குளிச்சுக்கிட்டிருக்கு.

"என்னடி சொல்ற?"

"வைத்தியம் பண்ண வாங்கித் தின்னன்னு வார காசெல்லாம் கெழவனுக்கே போயிட்டா நாளப்பின்ன நம்மளுக்குன்னு என்ன இருக்கு? நாளக்கி நீயும் விழுந்திட்டன்னு வச்சுக்க ஒன்னையும் நாந்தான தூக்கிச் சுமக்கணும்? எம் முந்தானையில முடிஞ்சுவைக்க என்ன இருக்கு? என் புருசனத் தவிர?" இப்படி எத்தனையோ தடவ எறும்பா ஊரி ஊரி அந்தக் கல்ல தேய்ச்சிட்டா.

தானியம் வித்த பணத்தையும் வட்டிவாசிக்கு வார காசையும் பொண்டாட்டி பொறுப்புல விட்டுட்டான் கட்டையன். போகப் போகத் தகப்பனுக்கும் மகனுக்கும் பேச்சுவார்த்தை இல்லாமப் பிரிச்சேபுட்டா திம்சு.

ஒரு கோட்டைச் சுவர் இருக்கு. எங்கிருந்தோ ஒரு பறவை பறந்து வந்து அதுல உக்காருது. எச்சமிடுது. அதுலருந்து ஒரு வெத விழுகுது. விழுந்த வெத மொளைக்குது. அது வேர்விட வேர்விட விரிசல் கண்டுபோகுது சுவரு. தெரியாமச் செய்யுது பறவை தெரிஞ்சே செய்றா திம்சு.

அம்புலிப்புத்தூர விட்டு அழகுசிங்கத்த மீட்டு வந்தன்னைக்கிருந்து கண்ணுல ஒறக்கம் தங்கல கருவாச்சிக்கு. நெஞ்சாங்கூட்ல கத்தி குத்தி முதுகுப் பக்கம் முள்ளுத் தச்ச கதையாகிப்போச்சு கருவாச்சி கதை.

அழகுசிங்கத்த நெனச்சா அவளுக்கு அழுகையா வருது. எதிரிகள விலாவுல குத்தி விழுத்தாட்டிட்டுக் கொம்புல குடல் மால சுத்தி வர வேண்டிய என் வீட்டுக் காரிக்காள, இப்பிடி எச்சி எல மேயப் போயி ஈனப்பட்டு நிக்குதே... இது நெஞ்சாங்கூட்டுல பாஞ்சு நட்டுக்குத்தலா நிக்கிற கத்தி.

யாருக்கும் தெரியாமக் காசு குடுத்து அவனத் தேவடியா வீட்டுக்கு ஏவிவிட்ருக் காளே ஒரு எழவெடுத்த சிறுக்கி... அது முதுகுல குத்தி முனையடிஞ்சு நிக்கிற முள்ளு. ஏதோ லவுக்க போட்ட லம்பாடி பொழச்சுப் போகட்டும்னு கண்டுங் காணாம இருந்த கருவாச்சி இப்பப் பளிச்சுன்னு முழிச்சுக்கிட்டா.

இவ யாரு?

எந்தக் காட்டுச் சிறுக்கி?

ஒழுங்கு மொறையான பொம்பளதானா?

ஒண்டவந்த பிடாரியா?

மேட்டு நெலத்துல நட்டவனும் கெட்டான் மேனாமினுக்கியக் கட்டுன வனும் கெட்டான்னு சொல்லுவாகளே... இவ நல்ல சிறுக்கியா? மேனா மினுக்கியா? இவளக் கண் கொத்திப் பாம்பு மாதிரி கவனிச்சே ஆகணும்னு பொட்டுல பொறிதட்டுது கருவாச்சிக்கு.

நான் பொத்தி வளத்த மகனக் காப்பாத்தணுமே இந்தப் பொட்ட நரி கடிக்காம.

"ஆம்பளச் சாமிகளா! பொம்பளச் சாமிகளா! எல்லாம் தொலஞ்சு எல்லாம் கழிஞ்சு ஏம் பொழப்புல ஈவுன்னு நான் மிச்சம் வச்சிருக்கிறது ஒத்தையில பெத்த ஏம் பிள்ள ஒண்ணுதான். ஏம் பிள்ளையப் பெராந்து தூக்கிட்டுப் போயிராமக் காபந்து பண்ணிக் கரை சேத்துருங்க."

குத்துக் கல்லக் கண்டாலும் கும்புட்டுக் கும்புட்டுக் காலுக்கு விழுந்திர்றா கருவாச்சி.

ஆனா, ஆத்தாள ஆத்துல விட்டுட்டு அவன் போக்குல போயிக்கிட்டிருக்கான் மகன்காரன். பெரும் பாதையை விட்டுப் பிரிஞ்சு ஓடி ஒதுங்கி ஒடுங்கி, கண்காணாத காட்டுக்குள்ள காணாமப் போகுதா இல்லையா ஒத்தையடிப் பாதை... அப்படி ஆத்தா பிடிய விட்டு வெலகி வெலகி வெளிய வெகு தூரம் போறான் பய. ஆத்தா என்ன செஞ்சாலும் அது சொத்த இது சொத்தைங் குறான். இல்லாத நொட்டச் சொல்லெல் லாஞ் சொல்லி ஆத்தாளக் கிறுக்குக் குத்துறான்.

அன்னைக்குக் களிக் கிண்டிக் கருவாட்டுக் குழம்பு வச்சதுல ஒரு கூத்தாகிப்போச்சு. மீனாட்சின்னா மூக்குத்தி கண்ணகின்னா செலம்பு வேலு நாச்சின்னா கத்தி ஆண்டாள்னா மால பாஞ்சாலின்னா சீலங்கிற மாதிரி கருவாச்சின்னா ஞாபகம் வாரது கரு வாட்டுக் குழம்புதான். கருவாட்டுக் குழம்பு வைக்கிறதுல சில்லாவுல அவள அடிக்க ஆள் கெடையாது.

அவ கைப்பதம் யாருக்கும் வராது. பாதகத்தி குழம்பு வச்சா கருவாடு மீனாப் போகும் கத்திரிக்கா தேனாப் போகும்.

அம்மியில மஞ்ச மொளகா வச்சு அரச்சு, தேங்காயில ஒரு எளஞ்சில்லு எடுத்து நச்சுன்னு நசுக்கி, சின்ன வெங்காயம் ரெண் டெடுத்து மேல் தோலச் செல்லமா ஒரு உரி உரிச்சு, பெத்த பிள்ளைய அடிக்கிற மாதிரி பொத்துனாப்புல ரெண்டு தட்டுத் தட்டிக் கொழவிய இழுத்து அரைச்சு அரைச்சத ஒண்ணு தெரட்டி, அதுல அறுத்து வச்ச கத்திரிக்காயையும் கருவாட்டையும் உப்பையும் போட்டு அஞ்சு வெரலை யும் விட்டுப் *பெசறி, அளந்து தண்ணி வச்சு அடுப்புக் கூட்டி, அங்கிட்டும் இங்கிட்டும் போகாம அங்கேயே இருந்து அளவாத் தீ எரிச்சு, ஒரு கொதி ரெண்டு கொதி விட்டு மூணாங் கொதி கொதிச்சு அடங்கிப் பொருந்தப் புளியக் கரைச்சு ஊத்தி, நாலாங் கொதி கொதிக்க நறுக்கா எறக்கி வைக்கிறதுதான் ஊர்நாட்ல கருவாட்டுக் குழம்புக்குண்டான கம்ப சூத்திரம். இப்படித்தான் வைப்பாக எல்லாரும்.

இதுக்கெல்லாம் மேல கருவாட்டுக் குழம்புக்கு யாரும் பாக்காத ஒரு பண்டுதம் பாப்பா கருவாச்சி. மூணாங் கொதியில புளி கரைச்சு ஊத்தி நாலாங் கொதியில எறக்குறதுக்கு


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum