ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மிஸ்டர் பெத்தேரி படுக்கை அறையில் ! (பின்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(461)
 Dr.S.Soundarapandian

முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
 Dr.S.Soundarapandian

புகைப்படம் - கவிதை
 Dr.S.Soundarapandian

நீ என்ன தேவதை – கவிதை
 Dr.S.Soundarapandian

ஈச்ச மரங்களுக்கு மேலே அவள் முகம் ! (ஈராக் நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

நதிக்கரை - கவிதை
 T.N.Balasubramanian

வேலன்:-புகைப்படத்தினை வேண்டியவாறு மாற்றி பயன்படுத்திட -Cpix
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

அந்த நாள் -செப் 22 --2016
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கவிதை
 ayyasamy ram

அறிமுகம் சந்திரசேகரன்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
 ayyasamy ram

2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
 ayyasamy ram

பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
 ayyasamy ram

7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
 ayyasamy ram

இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
 ayyasamy ram

நான் சாகவில்லை!
 Dr.S.Soundarapandian

விஷ சேவல் கோழி மீன்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

. விநோதமான வேலை!
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 Dr.S.Soundarapandian

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 Dr.S.Soundarapandian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
 ayyasamy ram

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
 ayyasamy ram

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
 ayyasamy ram

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
 ayyasamy ram

சின்னச் சின்ன வரிகள்!
 Pranav Jain

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
 Pranav Jain

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
 T.N.Balasubramanian

கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு
 T.N.Balasubramanian

ஐபோன் பரிசு
 T.N.Balasubramanian

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 T.N.Balasubramanian

குந்தியும் நிஷாத பெண்களும்
 ayyasamy ram

கா(த)ல் பந்து – கவிதை
 Dr.S.Soundarapandian

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Dr.S.Soundarapandian

நான் விட்டுவிடமாட்டேன் !
 Dr.S.Soundarapandian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 Dr.S.Soundarapandian

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
 Dr.S.Soundarapandian

செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 Dr.S.Soundarapandian

முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா"
 ANUSUYA DHURGAIMUTHU

திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
 ayyasamy ram

''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
 ayyasamy ram

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
 ayyasamy ram

போக்குவரத்து விளக்கு உருவான கதை..!
 ayyasamy ram

திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
 ayyasamy ram

முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
 ayyasamy ram

கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
 ayyasamy ram

கோல்கட்டாவில் இன்று இந்தியா-ஆஸி., இரண்டாவது ஒருநாள் போட்டி
 ayyasamy ram

'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 10:31 pm

First topic message reminder :

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு வைரமுத்து


'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா 2006 டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட, முதல் நூலை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.


[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:23 pm

பணம் பயம் ரெண்டுக்குந்தான வெவரமறியாத மக்க பணிஞ்சு பாழாப்போறது.

விடி...ய்யப் புலம்பல்ல கூடிட்டா பெரியமூக்கி.

"களையெடுக்க நாதியில்லையே... என் காடு போச்சே... வெதச்சது போச்சே. மகள மாடாக்கி வம்பாடு பட்டு உழுத காடு, முழிச்சிருக்க முழியத் தோண்டுன மாதிரி மூளியாப் போயிரும் போலருக்கே. ஏண்டி கருவாச்சி... என்னைக்கும் இல்லாத ஒறக்கம் இன்னைக்கு என்னாடி?


எங்க இருக்கவ?"
சுத்தியும்முத்தியும் பாத்து மகளக் காணமேன்னு நெஞ்சில அடிச்சு நிமிந்து பாத்தா, கையில கொத்தோட கால்ல செம்மண்ணோட கெறங்கிக் கிறுகிறுத்து வெளியிலிருந்து வீட்டுக் குள்ள வர்றா கருவாச்சி.

"கவலப்படாத ஆத்தா... கள வெட்டியாச்சு."

"பாதகத்தி மகளே! என்னாடி சொல்ற?"

"சுப்புலாபுரம் ஆளுகளுக்குச் சொல்லிவிட்டு, கால் ரூவா எச்சாக் குடுத்து நெலா வெளிச்சத்துல விடிய விடியக் களையெடுத்து முடிச்சிட்டுத் தான் வீட்டுக்கு வாரேன்."

"துட்டு..?"

"பசுமாட்டுச் சாணியக் குமிச்சுக் குமிச்சு எருவாக்கி வச்சிருந்தேன்ல... அத ஆமையன் கெழவனுக்கு நாலு ரூவாய்க்கு வித்தேன்."

"யாத்தே! நீ பொழைச்சாலும் பொழைச்சிருவ போலருக்கே..." மக மேல விழுந்து கட்டிப்புடிச்சு ஆச தீர அழுது பித்தேறிப்போனா பெரியமூக்கி.

அடுப்புச் சாம்பல அள்ளித் தெள்ளிப் பல்லு வெளக்கப் போனா கருவாச்சி.

ஒரு மாசமா ஒரே யோசன பெரியமூக்கிக்கு. 'எப்படிப் பொழைக் கப் போறா எம் மக இந்த ஊர்ல? ஒழவு காட்ல ஏர மறிக்கிறான்; களையெடுக்க விடுறானில்ல; நெஞ்சுல வம்மம் வச்சு அலையிறான். இன்னம் என்னென்ன செய்யக் காத்திருக்கானோ? எத்தன நாளைக்குத்தான் ஓடி வரும் மொதலக்கம்பட்டிச் சொந்தங்க? எத்தனை மொறைதான் நியாயங் கேட்டுக்குடுப்பாக உள்ளூர் ஆளுக? எங் கண்ணுள்ள காலம் வரைக்கும் எம் மக மேல துரும்பு விழுக விடமாட்டேன். நான் மண்டையக் கிண்டையப் போட்டுட்டா எப்படித் தப்பிக்கும் புலிக அலையிற ஊர்ல பொட்டையாட்டங்குட்டி?'

இப்படிப் பல மாதிரி யோசிச்சு ஊர்ப் பெருசுகளக் கலந்து ஒரு முடிவுக்கு வந்து சாவடிப்பட்டிக்கு ஆள் சொல்லிவிட்டுட்டா பெரிய மூக்கி.

பின்னந்தி வெயிலு. மூணு ஆம்பளைக. ரெண்டு பொம்பளை, ஆகமொத்தம் அஞ்சு ஆளுக வாராக சொக்கத்தேவன்பட்டி எல்லையில. நல்ல காரியத்துக்கு ஒத்தப்படை எண்ணிக்கையில போகணுங்கறது ஊர் ஆசாரம்.

வெள்ளையுஞ்சொள்ளையுமா கழுத்துல சுத்துன அங்கவஸ்திரம் காத்துல பறக்க, விலங்கு மாதிரி வெரல்கள்ல மோதிரம் போட்டு, கறுப்பு வெள்ளை மீசய முறுக்கி மேலேத்தி விட்டு முன்ன நடந்து வாராரு பாருங்க, அவருதான் சாவடிப்பட்டி விட்டி. மீச நரச்சாலும் எளந்தாரி ஒடம்பு.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:24 pm

அந்த வட்டாரத்துலயே ஏறு கையான ஆளு. நெலம் பொலம், தோப்பு தொரவு, சொந்தக் கிடைன்னு தாறுமாறான சொத்து; ரெண்டு வருசமாச்சு பொண்டாட்டி செத்து. ஒரே மகளக் குள்ளப்புரத்துல கட்டிக்குடுத்திட்டாரு, ஒரு பள்ளிக்கூட வாத்தியாருக்கு. பய ஒரே பய; பெறவியிலேயே புத்தி மாறாட்டமானவன். சங்கிலி கட்டிச் சாப்பாடு போடுறாக வீட்ல.

பூவு பழம் தேங்கா வச்ச மஞ்சப் பையைக் கையில புடிச்சு வாரவரு அவரு தங்கச்சி புருசன்.

அய்யா மேல விழுந்தது போக மிச்ச நெழல் நெலத்துல விழுந்தாலும் விழுகலாமே தவிர, தன் மேல விழுந்திரக் கூடாதுன்னு தள்ளிக் கொட புடிச்சு வாரான் பாருங்க... அவன் வேலைக்காரன்.

கெழவி... விட்டிக்கு நல்லத்தா. மொளகாப்பழ நெறத்துல பட்டுச்சேல கட்டி வாரவ விட்டி தங்கச்சி.

[You must be registered and logged in to see this image.]"வாங்கப்பா... வாங்க... வாங்க..." குட்டி போட்ட பூன மாதிரி அங்கிட்டும் இங்கிட்டும் ஓடிப் பரபரப்பாகிப்போனா பெரியமூக்கி.

ஓட்டுல மணலப் போட்டுக் கடல வறுத்துக்கிட்டிருந்த கருவாச்சிக்கு, வந்தவுக யாரு... எதுக்கு வந்திருக்காக ஒரு வெவரமும் தெரியல. மத்தியானத்தில் இருந்தே அவள நல்ல சீல கட்டச் சொன்னா ஆத்தா. அவ முந்தானைய இவ மூஞ்சில போட்டு அழுத்தி அழுத்தி எண்ண தொடச்சா. கட்டச் சீப்பு வச்சுச் சீவி வாரிவிட்டா. "போடி... போயி பொட்டுவச்சுக்க"ன்னு தள்ளிவிட்டா.

"என்னைக்கும் இல்லாம இன்னைக்கி ஆத்தா ஏன் இந்த அழிச்சாட்டியம் பண்றா?" எரிச்சலாயிருந்துச்சு கருவாச்சிக்கு.

மிக்சரையும் அதிரசத்தையும் பிரிச்சு, தனித்தனி ஏனம் சரியா வாய்க்காம ஒரே கும்பாவுல ரெண்டையும் போட்டுக் கொட்டி, "போடீ போ... சொந்தக்காரங்களுக்கு நீயே போய்க் குடுடீ"'ன்னு ஏவிவிடுறா மகள.

அவுக ஆளுக்கொரு கை மிச்சர அள்ளி, நாலு அதிரசம் ஏழு பேருக்கு வராதுங்கற கணக்குல ஆளுக்குப் பாதி கிள்ளி, கருவாச்சிய வச்ச கண் வாங்காமப் பாக்குறாக. பொண்ணு பாக்க வந்த எடத்துல கை கழுவக் கூடாதுங்கிற சாஸ்திரத் துக்குக் கட்டுப்பட்டு, துண்டு வேட்டி சீலையில தொடச்சுக்கிறாக பலகாரம் தின்ட கைய. கருவாச்சி பின்னாலயே போயி அவ முதுகுக்குப் பின்னால ஒக்காந்த விட்டி தங்கச்சி, மஞ்சப் பையிலயிருந்த மல்லிகப்பூவ எடுத்து கருவாச்சி தலையில வைக்கிறா. பூ வைக்கிற சாக்கில குடுமிய ஒரு இழு இழுக்கிறா. "யாத்தே"ன்னா கருவாச்சி. "ஒட்டு முடி இல்ல... நெச முடிதான்"னு சந்தோசப் பட்டுக்கிட்டா விட்டி தங்கச்சி. 'ஊமையில்ல, பேச்சும் வருது'ன்னு உறுதி பண்ணிக்கிட்டா.

ஒக்காந்த எடத்திலேயே அவ தரம், தண்டி, நெறம், ஒயரம், காதுல கெடந்த தண்டட்டி எல்லாத்தையும் எட போட்டவ, அவ கழுத்தப் பாத்ததும் "மளார்"னு எந்தரிச்சு பதறிப்போயி ஓடிவந்தா.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:32 pm

அண்ணன்கிட்டப் போய்க் காது கடிக்கிறா.

"யண்ணே! தாலி கட்டி அலையிறவளையா பொண்ணு பாக்க வந்த?"

"அதுக்கென்ன தங்கச்சி. நான் என்ன புதுமாப்பிள்ளையா..? இந்த வீட்டு மாடு கயிறோட நிக்கிது; நம்ம வீட்டுக்கு வாங்கிட்டுப் போறப்ப, புடி கயிறு மாத்திட்டாப் போச்சு."

அப்பத்தான் தெரியுது கருவாச்சிக்கு இது ஆத்தா நடத்தற கூத்துன்னு. தாழ்வாரத்த விட்டுத் திண்ணைக்கு விறுவிறுவிறுன்னு நடந்து வந்தா.

"நீங்க எல்லாம் எதுக்கு வந்திருக்கீக?"

"பொண்ணு பாக்கத்தான் தாயி... ஒன்னிய."

"பெரியவுகளா வந்திருக்கீகளே, மாப்பிள வரலையா?"

"இவர்தான் மாப்பிள."

"கழுத்துல தாலி இருக்கே, பரவாயில்லையா?"

"தெரிஞ்ச கதைதான. பரவாயில்லை."

"கழுத்துல தாலியிருந்தாப் பரவாயில்லேன்னு சொல்றீகளே... வயித்துல பிள்ளையிருந்தாலும் பரவா யில்லைன்னு சொல்லுவீகளா?"

வந்தவுகளுக்கு மூச்சுப்பேச்சு நின்னுபோச்சு.

அலறியடிச்சு எந்திரிச்சுப் பெரியமூக்கி கத்துறா: "என்னாடி சொல்ற... குடி கெடுக்க வந்தவளே?"

தணிஞ்ச குரல்ல கருவாச்சி சொல்றா: "ஆத்தா! நான் முழுகாம இருக்கேன்... மூணு மாசம்!"

[You must be registered and logged in to see this image.]


அடி மேல அடி விழுந்த வீட்ல இடி மேல இடி விழுந்த மாதிரி ஆகிப்போச்சு கருவாச்சி பொழப்பு. நல்லதுன்னு நெனச்சு நல்ல மனசோட எடுத்த முடிவு கெடுதல்ல போயி முடியுது.

'தாமரப் பூவு இருக்கே, அது தண்ணியிலதான் பெறக்குது. எந்தத் தண்ணியில பெறந்துச்சோ, அதே தண்ணியிலதான் கடைசியா அது அழுகி மெதக்குது. தாமர மொட்ட சூரியன்தான் தொட்டுத் தொறந்துவிடுது. எந்தச் சூரியன் தொட்டு மலர்த்திவிட்டுச்சோ அதே சூரிய வெப்பத்துலதான் அது காஞ்சு கருகிச் சருகாப் போகுது'ன்னு புலவனாருக கவி கட்டுவாக.

அந்தக் கவிக்குச் சாட்சி கருவாச்சி!

சொந்தத்துல வாழணும்னு ஆசப்பட்டா, அதே சொந்தந்தான் அவ வாழ்க்கையப் புடுங்கிட்டு வகுத்துல குடுத்து அனுப்பியிருக்கு.

பாறையில மழை பேஞ்சா, பேய்ஞ்ச மழை தெறிச்சோடும்; பாறை அப்படியே நிக்குமா இல்லையா... கருவாச்சி நிக்கிறா கல்லுப்பாறை மாதிரி; பெரியமூக்கி செதறி ஒடைஞ்சுபோனா மழைத் தண்ணி மாதிரி.

பிழிஞ்சு ஓஞ்சுபோன ஆரஞ்சுப் பழத்தப் போல, அழுது காஞ்சுபோனா பெரியமூக்கி, நின்ட முழி நின்ட மேனிக்கு நெஞ்சப் புடிச்சு ஒக்காந்தவதான்; மொனகிக்கிட்டே இருக்காளே தவிர முழுப் பேச்சுப் பேசறா இல்ல.

பொண்ணு பாக்க வந்தவங்க குடிக்காமப் போன கடுங்காப்பி கெடந்துச்சு அடுப்புல. கருவாச்சி அத ஊத்தி ஆத்திக் குடுக்குறா... மொறம் எடுத்து விசிறி விடுறா... ஒரு உணர்ச்சியும் இல்ல. நதிமூலம் வத்திப்போயிருச்சு போலிருக்கு கண்ணீருக்கு.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:32 pm

வீட்ல மூணு மாசமா முட்டுச் சீல விழுகலங்கிற சங்கதிய அப்பத்தான் நெனச்சுப்பாக்குறா பெரியமூக்கி.

"ஏ சாமி! பொச கெட்ட சாமி... ஏம் பொழப்பக் கெடுத்த சாமி... மஞ்சப் பூவக் காமிச்சு என் நெஞ்சுல குத்துன சாமி... நாங்க என்னா பாவம் பண்ணோம்? என்னையும் எம் பிள்ளையையும் இந்தப் பாடுபடுத்தற? ஒரே ஒரு பாவம் பண்ணேன்.... எம் பிள்ளைக்குக் கல்யாணம்ங்கற பாவம். அந்தப் பாவத்தத் தீக்கத்தான் அத்துவிட்டேன். அத்துவிட்ட பாவம் எம் மக வகுத்துக்குள்ள ஒக்காந்துக்கிட்டு இப்ப என்ன பண்ணுவ... "வவ்வ வவ்வ வவ்வே"ன்னு வக்கணை காட்டுதே... என்ன நியாயம்? அந்தப் பாவத்தக் கருவுலயே வச்சு வளக்கவா? இல்ல அழிக்கவா?"

ராத்திரியோட ராத்திரியாப் பெரியமூக்கி ஓடி வந்து வெவரம் சொல்லவும் பேச்சே வரல பெருசுகளுக்கு.

பெருமூச்சு விடுறாக. தலையத் தலைய ஆட்றாக. மீசையும் சேத்து ஒதடு கடிக்கிறாக. "என்னத்தச் சொல்ல தாயி..? ஏதோ வாய்த் தகராறு; கட்டையன்கூட கோவிச்சுட்டு வந்து ஓங்கூட இருக்கா கருவாச்சி; இன்னும் அவுகளுக்குள்ள ஒரு தொடுசு இருக்குன்னா கருவக் கலைக்க யோசன வராது. பிரிஞ்ச புருசன் & பொண்டாட்டி, பிள்ள பெறந்தா ஒண்ணு கூடிருவாங்கன்னா கலைக்காமவிடலாம் கருவ. இப்ப ரெண்டு பேருக்கும் துப்புரவா ஒட்டுமில்ல... ஒறவுமில்ல. பிள்ள பெத்து ரெண்டு பேரும் ஒண்ணு சேரப் போறதுமில்ல.

இவளோ சின்னப் பிள்ள; நாளப் பின்ன வயசிருக்கு; வாழ்விருக்கு. இன்னைக்கி இல்லாட்டியும் நாளைக்கு ஒருத்தன் கையில அவளப் புடிச்சுக் குடுக்கறப்ப, பசுவும் கன்டுமா இருந்தாப் பாக்கிறவன் என்ன நெனப்பான்? கண்ணுல கண்ட உசுரு நல்லாருக்கணும்; அதனால, கண்ல காணாத உசுரு அழிஞ்சாத் தப்பில்ல; அழிச்சிரு."

அவ நெனச்சதையே ஊர்ப் பெருசுகளும் சொல்லவும் இன்னொரு கும்புடும் சேத்துப்போட்டு எந்திரிச்சுட்டா பெரியமூக்கி... 'தள்ளிப் போடப்படாது; நாளைக்கே கலைச்சிரணும் கருவாச்சி கருவ'.

பாவம்! கத்தாழங் காட்டுக்குள்ள பூத்த ஆவாரம் பூவு கருவாச்சி... நாக்குல போட்டாக் கரைஞ்சுபோற பஞ்சு முட்டாய் மாதிரி லேசான மனசு.

ரொம்ப நாளைக்கு முன்ன ஒரு சம்பவம்...

அழுக்குத் துணிகள அள்ளிக் கொடம் நிறையத் திணிச்சுக்கிட்டுக் கொளத்துக்குத் தொவைக்கப் போனா. விடிய்ய கரையில போயி நின்னவ நின்னவதான். ஒரு துணியும் தொவைக்காம வெயிலேற வீடு வந்துட்டா. கேட்டாச் சொல்றா... "தன்ன மறந்து தண்ணி ஒறங்குது; எப்பிடி எழுப்ப?"

ஒரு நாள்.... கழுத்து கடுக்கச் சோளம் சொமந்து போய்க்கிட்டேயிருந்தவ கத்தாழம் பொதரக் கண்டதும் நின்டது நிக்க நின்னுட்டா... "மயிலு தோகை விரிச்சா சுருட்டிவச்சிருமா இல்லையா; எங்க கத்தாழையுந்தான் தோகை விரிச்சிருக்கு. விரிச்ச பெறகு என்னைக்காச்சும் சுருட்டிவச்சிருக்கா?"

"விட்டா கத்தாளையைக் கல்யாணமே பண்ணிக்கிருவா போலிருக்கே"ன்னு சிரிச்சு விழுந்துபோனாக கூடப்போன ஆளுக.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:38 pm

பசுமாடு கன்டு போடுறதப் பாத்திருக்கா. ஆடு குட்டி போடுறதப் பாத்திருக்கா. கோழி முட்டை போடுறதக்கூட பாத்திருக்கா. ஆனா ரொம்ப நாளா அவ இருதயக்கூட்ல கட்டிவச்சிருக்கிற ஆசைக ரெண்டு இருக்கு... மீன் குஞ்சு பொரிஞ்சு வெளியேர்றதப் பாத்திரணும்; பாம்பு சட்டை உரிக்கிறதப் பாத்திரணும்.

ஆனா இந்தக் கேடுகெட்ட காலத்துக்கு ஆச கருவாச்சி கரு கலஞ்சு வர்றதப் பாத்திரணும்!

வைத்தியச்சி ரங்கம்மா பெரிய்ய கெட்டிக்காரி. நாயக்கமாரு பொம்பள; தாட்டியமானவ. பேறு காலம் பாக்கிறதிலிருந்து நகச்சுத்திக்கு மருந்து கட்றது வரைக்கும் அவள அடிக்க ஆளு இல்ல எட்டூர்ல. வைத்தியமும் பாப்பா; களை கண்ணிக்கும் போவா; யாரு கூப்பிட்டாலும் ஊர் ஊருக்குப் போயி ஒப்புச் சொல்லி அழுது, அழுகாச்சிக்கு அரிசி பருப்பு வாங்கிட்டு வீடு வந்திருவா. 'குருவி மாதிரி ஒரே கூட்லயிருந்தாப் பொழப்பு நடக்காது; பாம்பு மாதிரி பல பொந்துகள்லயும் குடியிருந்து பழகணும்'னு தத்துவம் வேற வச்சிருக்கா.

மனுசனுக்கு மண்ட பூரா வலிச்சாப் பொறுத்துக்கிரலாம். ஒரு பக்கமா வலிக்கும் பாருங்க ஒத்தத் தலவலி... உசுரு போயி உசுரு வரும். வட்டிக்குச் சொத்தெழுதி வாங்குனவனுக்குக்கூட வரப்படாது அது. விடிய்ய மண்டையில குத்தி, வெயில் ஏற ஏற வலியும் ஏறும் பாருங்க...

மண்டைய எடுத்துத் துண்டா வச்சிரலாம்னு தோணும். அதுக்கும் ஒரு மருந்து வச்சிருக்கா ரங்கம்மா. புருசன் பேரு சொல்லாத பொம்பளைக மாதிரி அந்த மருந்துப் பேரையும் அவ சொல்றதில்ல.

[You must be registered and logged in to see this image.]

வெளிக்கிருக்கப் போறவ மாதிரி போயி, வேலிகள்ல படர்ந்திருக்கிற ஒரு கொழைய உருவி அது இன்ன கொழைன்னு யாரும் கண்டுபிடிக்க முடியாதபடிக்கிக் கசக்கிக்கிட்டே வீட்டுக்கு வருவா. தலவலி தாங்காம அனத்துற ஆள 'படு'ம்பா. எலயக் கையிலயே கசக்கிச் சாறெடுப்பா. புழிஞ்ச சாற, எடது பக்கம் தலவலின்னா வலது காதுல விடுவா; வலது பக்கம் வலின்னா எடது காதுல விடுவா. இப்படி மூணு நாள் ஊத்துனான்னா மண்டவலி இருந்துச்சா... இல்ல, மண்டையே இருந்துச்சான்னு சந்தேகம் வந்திரும் சம்பந்தப்பட்ட ஆளுகளுக்கு.

மூட்டுவலிக்கு அவ கண்ட மருந்து இருக்கே... வெள்ளக்காரனும் கண்டுபிடிக்க முடியாத வித்தைன்னு சொல்றாக ஊர் தேசத்துல. படுத்த படுக்கையாக் கெடந்தாரு கண்டமனூரூ சமீந்தாரு. கடுங்கொண்ட மூட்டுவலி.

ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போகவும் மூணு பேரு வேணும். பண்ணாத வைத்தியமில்ல. மயில் கழுத்து எண்ணெயிலருந்து, யானச் சாணி வச்சுக் கட்டிப்பாத்தும் வலி கொறையல. ரங்கம்மா வீடு தேடி வந்து கடைசியாச் சொன்னாரு கண்டமனூர்க் கணக்குப்பிள்ள. நாலே நாள்ல ரங்கம்மா செஞ்சாயா ஒரு மருந்து.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:38 pm

வெள்ளெருக்கம் பூவு கத்திரி மஞ்ச கருஞ்சீரகம் கருமொளகு பச்சக்கர்ப்பூரம் அஞ்சையும் அம்மியில வச்சு நசநசநசன்னு நசுக்கி, பூப்போலப் பொடி பண்ணி அத ஒரு படி நல்லெண்ணெய்யில போட்டு மூணு நாள் ஊறவச்சா. நாலாம் நாள் எடுத்து அடுப்புக் கூட்டிப் புளிய வெறகெரிச்சு ஒரு படி நல்லெண்ணெய அரப்படியாச் சுண்டவச்சா.

சமீன்தார் மூட்டுல மூணு நாள் தடவிவிட்டுக் கரம்ப மண்ணப் போட்டுக் கழுவிவிட்டா பாருங்க... விடிய்ய, வேட்டைக்குப் போகலாங்கற அளவுக்கு சமீந்தார் வலி ஊரவிட்டே ஓடிப்போச்சு.

ரங்கம்மா மேல காதலாகிக் கசிஞ்சுபோனாரு சமீன்தாரு. அப்ப அவ வெடலப்புள்ள. பொம்பளைக்குப் பொம்பளையே ஆசப்படுற அழகு. தொட்ட சொகம் வேற ஒட்டிக்கிட்டிருக்கு. அவ கையால தடவிட்ட எடத்தத் தன் கையால தடவிக்கிட்டே சமீந்தார் கேட்குறாரு:

"என்ன வேணும்... கேள் தாரேன். வருசநாட்டுக் காடு வேணுமா? பெரியகொளம் தோப்பு வேணுமா? பாளையத்து நஞ்சை வேணுமா? இல்ல, என் எடப்பக்க எடம் வேணுமா?"

"இல்ல சாமி... என் வைத்தியக் கூலி காலே அரைக்காரூவாதான்; அத மட்டும் குடுங்க"ன்னு வாங்கிக்கிட்டுக் கையெடுத்துக் கும்பிட்டு ஓடியே வந்துட்டா ஓடி. மானம் நியாயத்துக்குக் கட்டுப்பட்டவ ரங்கம்மா.

பெரியமூக்கி வந்து "கலைச்சுவிட்ரு கருவாச்சி கருவ"ன்னு சொன்னதும், "இது சரியா தப்பான்னு தெரியலயே ஆத்தா"ன்னு நெஞ்சுல கைய வச்சு அழுத்தி, கவுத்துப்போட்ட குத்துச்சட்டி மாதிரி குத்தவச்சு ஒக்காந்துபோனா ரங்கம்மா.

ரெண்டு பக்க நியாயத்தையும் அவ ஒருத்தியாவே பேசிப்பேசிக் கடைசியா முடிவெடுத்தா.

"உசுர அழிக்கிறது பாவந்தான். ஆனா இது பாவத்துல பெறந்த உசுரு. அழிச்சாப் பாவமில்ல".

அவளுக்கேத்த நியாயத்துக்கு வந்துட்டா.

ஒரு பப்பாளிப் பழம் வாங்கி, தோல் சீவிக் கனியெடுத்து, அதத் தண்ணி ஊத்திப் பெணஞ்சு பெணஞ்சு கூழ்ப்பதமாக்கி அதுல அர வீசச் சீனியும் போட்டு அடிச்சுக் கையில குடுத்திட்டா ரங்கம்மா.

"இந்தாத்தா பெரியமூக்கி... கருவக் கலைக்கக் கருவாச்சி ஒத்துக்கிருவாளா. மூணு மாசம் சொல்லாம மூடிவச்சவளாச்சே. மருந்து குடுக்கறது ஏம் பாடு; குடிக்க வைக்கிறது ஒம் பாடு. குடுத்துப்பாரு... மூணே நாள்ல தீட்டு வந்திரும்: சக்கம்மா மேல சத்தியம்." மருந்துன்னு சொல்லிக்குடுத்தா பெரியமூக்கி. நம்ம நல்லதுக்குத்தான ஆத்தா குடுப்பாங்கிற நம்பிக்கையில கடகடன்னு குடிச்சுட்டா கருவாச்சி.

ரெண்டு நாளாச்சு... மூணு நாளாச்சு.. குடுத்த மருந்து வேலைக்காகல... சீல நனையல.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:39 pm

பப்பாளிப் பழத்தையும் தின்டுப்புட்டுக் கருவக் கெட்டியாப் புடிச்சுப் படுத்துக்கெடக்கு ஒரு அசையாத ஆத்மா. ரெண்டு ரெண்டரை மாசக் கரு வரைக்கும்தான் பப்பாளி சாத்தியப்படும். அதுக்கு அங்கிட்டு அதுக்கு அதிகாரமில்ல; வேற மருந்திருக்கு.

இப்படித்தான்... எண்டப்புளி ராசம்மா இருக்க, புருசன் செத்துப்போனான் பாம்பு கடிச்சு. கலைக்க வேண்டியதாப் போச்சு. கறுப்பு எள்ளு வறுத்து, கருப்பட்டி போட்டு இடிச்சு வெறும் வயித்தில தின்னக் குடுக்க மூணாம் நாளே பேறு கால வலி மாதிரி குத்திக் குடைய 'ஆள விடுங்க'ன்னு வெளிய வந்து விழுந்திருச்சு விரல் தண்டிப் பிண்டம்.

ஒடம்புல ரத்தச் சத்து உள்ள பொம்பளைகளுக்குத்தான் மேற்சொன்ன ரெண்டு மருந்தும் கேக்கும். கருவாச்சி ரத்தம் செத்த பொம்பளையா இருக்கா. அதுக்குண்டான மருந்து என்னான்னு யோசிச்சா வைத்தியச்சி.

[You must be registered and logged in to see this image.]"கச்சேந்திரல எலை"ன்னு ஒண்ணு கெடக்கும் காடுகள்ல. கசப்புன்னாக் கசப்பு... வாயில வைக்க முடியாத கசப்பு. ஒரு எலைய மென்னு தின்னாலே வாய் வழியா வெளிய வந்து விழுந்திரும் கொடலு. அந்த எலைய மடி நிறையக் கொண்டாந்தா ரங்கம்மா. ஒரல்ல போட்டு இடிச்சா; சாறு எடுத்தா; கால் சொம்பு சாறுக்கு அரை வீச கருப்பட்டி போட்டா; அடுப்புக் கூட்டிக் கொதிக்கவச்சா; எறக்கி ஆற வச்சா; கசாயம்னு சொல்லி, விடிய வெறும் வயித்துல குடிக்கவச்சுட்டா. பாதியக் குடிச்சிட்டுப் பாதியத் துப்பிட்டுப் படுத்துக்கிட்டா கருவாச்சி.

உள்ள யானைக்குட்டியே இருந்தாலும் மூணே நால்ல முழுசா வந்திரும் வெளிய. சொல்லி நாலு நாளாகியும் ஒண்ணும் நடக்கல; ஒரு பொட்டுத் தீட்டு இல்ல. ரங்கம்மா மெரண்டுபோனா. அவ ஆயுசில இப்படி ஆனதில்ல.

"வைத்திய சாஸ்திரத்துக்கே விரோதமாயிருக்குடியாத்தா இந்த வெவகாரம். கருவாச்சி வகுத்துக்குள் பிண்டம்ங்கற பேர்ல ஒரு பிசாசு படுத்திருக்குடி"ன்னு ரங்கம்மா பொலம்ப, "பத்துக்கொறடு போட்டாகிலும் இருக்கிற கருவ எடுத்துவிட்ரு தாயி"ன்னு பதறிச் சொல்றா பெரியமூக்கி.

"கடைசியா ஒரே ஒரு வழிதான் இருக்கு. ஆனா கருவாச்சி உசுருக்கு உறுதி சொல்ல மாட்டேன்."

ரங்கம்மாவோட ரெண்டு கையையும் இழுத்து நெஞ்சுலவச்சுக்கிட்டு, "கருவக் கலைச்சு மகளக் காப்பாத்து"ன்னு கெஞ்சுறா பெரியமூக்கி.

அவ நெஞ்சில இருந்த இரண்டு கையையும் இழுத்து, தலைக்கு மேல வச்சு சாமியக் கும்புட்டு, "இரு... வாரேன்"னு வெளிய போறா ரங்கம்மா.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:40 pm

ஒரு சிரட்டைய எடுத்தா. அதுல பாதி சிரட்டைக்கு வெள்ளெருக்கம் பாலப் புடிச்சா. மல்லுத் துணி மாதிரி மெல்லிசா இருக்கிற வெள்ளத் துணி கிழிச்சா; வெள்ளெருக்கம் பால்ல அந்த வெள்ளத் துணிய ஊறப்போட்டா, பச்ச எருக்கிலையில் மஞ்சப் பூத்து ஓடுமே நரம்பு... அதுல ரெண்டு எடுத்தா. அந்த ரெண்டு ஈக்கிக்கு மத்தியில வெள்ளத் துணியத் திரிச்சுச் செருகுனா.

"இத இப்படியே ஆடாம அசங்காம அந்த ஜீவ துவாரத்துல செருகிவிட்டுட்டா, மூணே நாள்ல வெந்து வெளிய வந்து விழுந்திரும் எப்பேர்ப்பட்ட கருவும். இத வச்சுவிடவும் பொறுமை வேணும்; மூணு நாளும் வச்சுக்கிரவும் பொறும வேணும். எக்குத்தப்பா இந்தத் திரி எகிறிக் கருவுக்குள்ள சிக்கிக்கிருச்சுன்னு வச்சுக்க... அப்பறம் கருவாச்சியக் கண்ல பாக்க முடியாது... சொல்லிப்பிட்டேன்."

ஊர் ஒறங்கி ஓடுங்க மகள எழுப்புனா பெரியமூக்கி, "மகளே! மாட்டேன்னு சொல்லாத. இத வச்சுவிடுறேன்; வச்சுக்க."

"இது என்னாத்தா..? எதுக்கு?"

"எல்லாம் ஒன் நல்லதுக்கு."

"பட்டீர்"னு ஒரு மின்னல் மூளையில மின்ன, எல்லாம் வெளங்கிப்போச்சு கருவாச்சிக்கு. "ஏன் ஆத்தா கலைக்கப் பாக்குற?"

"அந்தப் பாவிப்பய மாதிரி ஒரு பிள்ள, இந்த வீட்ல வந்து பெறக்கணுமா?

"ஏன்? என்ன மாதிரி ஒரு பிள்ள இந்த வீட்ல வந்து பெறக்கப்படாதா?"

"நீ பெறப்போற சீவன், நான் பெத்த சீவன அழிச்சிருமோனு மனசு வேகுதடி மகளே! ஆத்தா சொல்றேன் கேளு. அந்தப் பாவத்த அழிச்சுவிட்ரு."

"உசுரே போனாலும் அழிக்க மாட்டேன். என் வயிறு... என் கரு... நானே சொமக்கிறேன்... நானே பெத்துக்கிறேன். இதுல கடவுளே குறுக்க வந்தாலும் கருவாச்சி மாறமாட்டா." ஆத்தா கையிலவச்சிருந்த குச்சிய எடது கையில புடுங்கி எறிஞ்சா பாருங்க... பாலுக்குத் தணல் காஞ்சுக்கிட்டிருந்த அடுப்புல விழுந்து சடசடன்னு எரிஞ்சு சாம்பலாப் போச்சு வெள்ளெருக்கம் துணி!


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Fri Jun 25, 2010 10:57 am

"ஏலே கொண்ணவாயா! ஏற்கெனவே ஒங்க வீட்ல ஒரு பசுமாடு கன்டு போட்ருக்கு... இன்னொரு பசு இப்ப செனையா இருக்காம்ல. எப்படா ஈத்தெடுக்கப்போகுது?"

மாடு மேய்க்கப் போன காட்ல கொண்ணவாயன் வாயக் கிண்டி லந்து லகள பண்றாங்க, பொறணியவே பொழுதுபோக்கா வச்சிருக்கிற சக மாட்டுக்காரங்க. அந்தக் கேள்வியில இருக்கிற பொடியைக்கூட புரிஞ்சிக்கிராத இந்த வெவரங்கெட்ட வெள்ளந்திப் பய, "எங்க வீ... வீ... வீ... வீட்ல ஒரே ஒரு பசுதான் இருக்கு, எங்க சீ... சீ... சீ... சின்னத்தாதான் மா... மா... மா..."ன்னு முக்கி நிக்கிறான்.

[You must be registered and logged in to see this image.]

"ஏ... ஏ... ஏ... நிறுத்துரா. சின்னத்தா மா... மா... மா... மாசமா இருக்கான்னு நீ சொல்லி முடிக்கிறதுக் குள்ள கருவாச்சி பேறுகாலமாகிப் பிள்ள பெத்து, தொட்டில் போட்டுத் தூங்கியும்
போவா". பொதுவாக் கிண்டலடிக்க, கிள்ளி வெளையாட, முன்ன விட்டுப் பின்ன பேச, முடிஞ்சா அள்ளையில குத்தி அழுகவிட தன்னவிடத் தாழ்வான ஒரு பெறவி தேடுது ஒவ்வொரு மனுச மனசும். அந்த ஊர்ல எல்லாருக்குமா அப்படி வாய்ச்ச ஒரு சீவராசி கொண்ண வாயன். ஊர்ல அவன அப்படி நெனைக்கக் காரணமிருக்கு. அவன் சம்பந்தப்பட்டு ரெண்டு மூணு கூத்து நடந்துபோச்சு ஊர்ல.

வளவிக்காரச் சுப்பஞ் செட்டியாருக்கு ரெண்டு பெண் மக்க. இப்ப வீட்ல இருக்கிறவ இளையவ பவளம். கல்யாணமாகிப் போனவ கனகாம்பரம். அவ கல்யாணத்துலதான் நடந்துச்சு
கொண்ணவாயன் கூத்து. சில்லறையாச் சேத்துவச்சு கடன ஒடன வாங்கி மூத்தவளக் கரை சேக்குறாரு சுப்பஞ் செட்டியாரு. அவ காது கழுத்துல ஒண்ணு ரெண்டு தங்கத்த ஒட்டவச்சது போக, விரல்ல வைர மோதிரம் போட்டாத்தான் அவ கழுத்துல தாலி ஏறும்னு தலகீழா நிக்கிறான் மாப்பிள்ளை. தேனிக்குத் தெக்க பழனிசெட்டிபட்டிக்காரன் அவன். கண்ணாடி விக்கிற ஆளு தங்கம் வாங்குறதென்ன லேசா? வைர மோதிரம் மட்டும் பாக்கிவச்சிட்டு இந்தா இந்தான்னு இழுத்துப் புடிச்சுக் கல்யாணம் வரைக்கும் வந்துட்டாரு சுப்பஞ் செட்டியாரு. அடுத்த சனிக்கிழமை பொண்ணு வீட்ல நிச்சயதார்த்தம். ஞாயித்துக்கிழமை பழனிசெட்டிபட்டி மாப்ள வீட்ல கல்யாணம்.

சொந்தபந்தங்கள சனிக்கிழமை பொழுசாய நிச்சயதார்த்தத்துக்கு வரச் சொல்லி, ஞாயித்துக்கிழமை கையோட கல்யாணத்துக்குக் கூட்டிட்டிப் போயி அப்படியே அனுப்பிட்டா, ஒரு நேரச் சாப்பாட்டோட கத முடிஞ்சுபோகும்ங்கிறது சுப்பஞ் செட்டி கணக்கு.

கொண்ணவாயனக் கூப்பிட்டாரு சொந்தபந்தங்களுக்கெல்லாஞ் சொல்லிவிட. "வாடா அய்யா கொண்ணவாயா. அடுத்த சனிக்கெழமை சாயங்காலம் நிச்சயம் ஞாயித்துக்கெழமை காலையில கல்யாணம். சுப்பஞ் செட்டி சொல்லிவிட்டார்னு சொல்லிட்டு வந்திரு ராசா"ன்னு லட்சுமிபுரம், புதுப்பட்டி, வடுகபட்டி, எண்டப்புளி புதுப்பட்டி, கருவாட்டு நாயக்கன்பட்டி, தேவதானப்பட்டி, தெப்பம்பட்டி, குச்சனூருன்னு ஏழூருப் பேரும் ஆளும் சொல்லி, கை நெறையச் சில்லறைய அள்ளி வலது கையிலருந்து எடது கைக்கு ஒண்ணொண்ணாப் போட்டு எண்ணி, "ரெண்டு கையும் புடிடா"ன்னு அவன் கையில போடும்போது மறுபடியும் எண்ணி, கார்ச் செலவு கைச்செலவு ரெண்டுக்கும் கணக்கும் சொல்லி, "சட்டுன்னு போய்ட்டு வாடா, என் சல்லிக்கட்டுக் காள!"ன்னு ஒரு நல்ல வார்த்தைய லஞ்சமாவும் குடுத்து நாலா தெசைக்கும் அனுப்பிவச்சாரு கொண்ணவாயன.

"சனிக்கிழமை நிச்சயம் ஞாயித்துக் கிழமை கல்யாணம்"னு சொல்லிக் கிட்டே போன பய, வழியில வெள்ளரிக்கா வித்த ஒரு கெழவிகிட்ட நின்னான். கால் ரூவாய்க்குக் கடை போட்டு, அரைக்கா ரூவா லாபம் பாக்க ஒக்காந்திருந்த கெழவி, இன்னொரு பொம்பளைக்கு யோசன சொல்லிக்கிட்டிருக்கா. "இந்தாடி... நாளும் கோளும் நாலுஞ் செய்யும்னு சும்மாவா சொன்னாக. மக பேறுகாலத்துக்குப் போறவ நல்ல நாளு பாத்துப் போக வேணாமா? சொல்றேன் கேட்டுக்க.

திங்கக்கெழமை திரும்பாப் பயணம் அன்னைக்குப் போகாத. செவ்வாயோ வெறும் வாயோன்னு சொல்லுவாக செவ்வாயும் வேணாம். பொன்னு கெடைச்சாலும் புதன்
கெடைக்காதும்பாக புதன்கெழமை போ". வெள்ளரிக்காயப் பொளந்து உப்புத் தூளயும் மொளகாத் தூளயும் அதோட ஆத்மா வரைக்கும்
போய்ச் சேரணும்னு அப்பிக்கிட்டிருந்த கொண்ண வாயனுக்குக் கெழவி சொன்ன சொல்லுல புத்தி மாறிப்போச்சு. எல்லா ஊர்லயும் பொறுப்பாப் போயி நின்னு பு... பு... புதன்கிழமை
நிச்சயம் வி... வி... வியாழக்கிழமை கல்யாணம்னு அழுத்திச் சொல்லிட்டு வந்திட்டான். புதன்கிழமை சாயங்காலம்.

"மத்தியானம் வச்ச கத்திரிக்காக் கொழம்புல மிச்சமிருந்தா ராத்திரி சோளக்களிக்குச் சரியாப் போகும் தாயி"ன்னு சுப்பஞ் செட்டியாரு சிக்கனம் பேசிக்கிட்டிருக்க... வீட்டு வாசல்ல வரிசை வரிசையா நிக்கிதுக வண்டிக வந்து. வீட்ல கூடிக் குமிஞ்சுபோச்சு ஒரு நாடகத்துக்குண்டான கூட்டம். சிறுசு பெருசு நண்டான் சுண்டான் கெழடு கட்டைன்னு வண்டி வண்டியா வந்து இறங்குது ஏழூருச் சொந்தம்.

திடீர்னு வெளவாலுக கூட்டங்கூட்டமா வீட்டுக்குள்ள வந்து மனுசன் மூஞ்சியில மாறி மாறி அறைஞ்சா எப்பிடியிருக்கும்? அப்பிடி ஆகிப்போனாரு சுப்பஞ் செட்டியாரு. தப்பு நடந்துபோச்சுன்னு சொல்லவும் முடியல சாப்பாடு ஏற்பாடு பண்ணவும் சக்தியில்ல. பொதுவா ஊர் ஆளுகளுக்கு ஒரு நல்ல பழக்கம். கல்யாண வீட்டுக்குப் போற யாரும் சொந்த வீட்ல சாப்பிட்டுப் போறதில்ல சில பேர் ரெண்டு நேரம் பட்டினிகெடந்தும் வருவாக. பொருந்தி உட்கார்ந்து சாப்பிட்டுட்டு வரலேன்னா கல்யாண வீட்டு ஆளுக கோவிச்சுக் கிருவாகலாம்.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Fri Aug 06, 2010 6:10 am

[You must be registered and logged in to see this image.]

வேறென்ன பண்றது? கல்யாணத் துக்கு இன்னும் மூணு நாள் இருக்கு. போயிட்டு வாங்கன்னு புடிச்சுத் தள்ள முடியுமா? இல்ல... கல்யாண வீட்ல கம்மஞ்சோறு போட முடியுமா?

விடிய விடிய என்ன செய்யலாம்னு அவரு மலச்சு நிக்க... வந்த வண்டி மாட்டுக்கு வைக்கோல் கெடைக்கு மான்னு மண்டையச் சொரண்டி நிக்கிறான் வண்டிக்காரன். புவ்வாவுக்கே வழியில்லங்கறப்ப பூவு கேட்டாளாம் பொண்டாட்டிங்கற கதையாகிப்போச்சு. கல்யாணச் செலவுக்கு முடிஞ்சுவச்ச காசு அவுத்து அரிசிச் சோறும் பருப்புச் சாறுமா அழுதுக்கிட்டே போட்டுப் போட்டு மூணே நாள்ல மூழ்கிப் போனாரு சுப்பஞ் செட்டியாரு.

கொண்ணவாயனயும் தேடுனாரு சோறு போடலாம்னு இல்ல கூறு போடலாம்னு அவன் சிக்கல. இதே மாதிரி இன்னொரு கூத்தும் ஆகிப்போச்சு.

சல்லிபட்டியில கட்டிக்குடுத்திருந் தாக காவக்காரச் சக்கணன் பெரியத்தா பேத்திய. சல்லிபட்டியிலிருந்து சொக்கத்தேவன்பட்டிக்கு மறுவீடு வாரான் மாப்பிள்ளை. வண்டிப்பாதை வழி போனா நாலு மைலு கள்ளிக்காட்டு வழி ஒத்தையடிப் பாதையில போனா ரெண்டரை மைலு. ஒன்றரை மைல் தூரத்த மிச்சம் பண்ண ஆசப்பட்ட பய, புதுப் பொண்டாட்டிய இழுத்தலைஞ்சு போறானய்யா முள்ளுக்காட்டு வழி.

ஆடிக் காத்துல பேய் பிடிச்சு ஆடுன கருவேல மரத்து முள்ளு ஒண்ணு பட்டீர்னு அடிச்சிருச்சு கண்ல. ஆத்தேன்னு அலறி அங்கயே ஒக்காந்து போனான். பதறிப்போன புதுப் பொண்டாட்டி கண்ணப் பிதுக்குறா வாய்வச்சு ஊதுறா. முந்தானையச் சுருட்டித் தன் வாய்க்குள்ள திணிச்சு அந்தக் கதகதப்புல வெதுவெதுப்பான வேது குடுக்குறா ஒண்ணும் நடக்கல. மழை பேஞ்சா எல வழியா ஒரே சீரா ஒழுகுமா இல்லையா.. அப்படித் தண்ணி தண்ணியா ஊத்துது கண்ணு. கொஞ்ச நேரத்துல ஒரு கண்ணு மட்டும் வெத்தல போட்டது மாதிரி செக்கச்செவேர்னு ஆகிப்போச்சு. அடிச்ச கருவேல முள்ளு கண்ணுக்குள்ள எங்கேயோ முறிஞ்சுகெடக்கு.
[You must be registered and logged in to see this image.]
ஒத்தக் கண்ணப் பொத்திக்கிட்டே ஊருக்குள்ள வந்த மாப்பிள்ள மாமியா வீட்டுக்கு இப்படியே போனா மரியாதை இருக்காது முன்னுக்க நீ போ பின்னுக்க நான் வாரேன்னு சொல்லிட்டு அந்தப் பக்கமா சோளத் தட்ட சொமந்து போய்க்கிட்டிருந்த கொண்ணவாயன நிறுத்தி, "இந்த ஊர்ல முள்ளெடுக்கிறவுக வீடு எது?"ன்னு கேக்க, "வா... வா... வா... வாங்க. கூ... கூ.... கூ... கூட்டிட்டுப் போறேன்"னு ஊர் எல்லையில இருக்கிற வீட்டுத் திண்ணையில ஒக்காரவச்சுட்டுப் போயிட்டான்.

ஒரு ஈ காக்கா இல்ல அந்தச் சுத்து வட்டாரத்துல. வீடு குச்சு வீடு, களவு கிளவு போயிருமோங்கிற பயத்துல பாது காப்புக்கு நாதாங்கி போட்டு அதுல ஒரு குச்சி வேற செருகியிருக்கு.
மத்தியானம் ஒக்காந்தவன்தான். பொழுது போயிக்கிட்டிருக்கு. ஊத்தெடுத்து ஒழுகுது ஒத்தக் கண்ணு வலி வேற. முள்ளெடுக்கிற ஆளுக வரல. அந்தப் பக்கம் எப்பவாச்சும் கடந்து போற ஆளுக அவன ஒரு மாதிரியாப் பாக்குறாக, கண்ணுல தண்ணி வடியுது. பொலம்புறான் வேற.

மொளகாப் பழம் மாதிரி செவந்திருக்கு முழி. "சொக்கத்தேவன்பட்டிக்கு வந்தும் கொறையலப்பா, சல்லிபட்டியில அடிச்ச சாராயம்"னு பேசிட்டுப் போறாங்க தெருவுல. இந்தா இந்தான்னு பல்லக் கடிச்சு ஒக்காந்து பாத்தா, பொழுசாய ரெண்டு கழுதைங்க வந்து நிக்குதுக வீட்டு வாசல்ல.

"யாருப்பா இங்க ஒக்காந்திருக் கிறது?"ன்னு கேக்குறா வெளுத்த பொதியோட வீடு திரும்புன வண்ணாரு வீட்டுப் பொம்பள.

"கண்ணுல முள்ளடிச்சிருச்சு முள்ளெடுக்க ஒக்காந்திருக்கேன்."

"அதுக்கு ஏன் இங்க ஒக்காந்தி ருக்கீங்க?"

"முள்ளெடுக்கிறவுக வீடு இதான்னு சொல்லி ஒக்காரவச்சுட்டுப் போனானே ஒரு பய...".

"நல்ல கூத்தா இருக்கே! நாங்க வெள்ளாவிக்கு முள்ளெடுக்கிற ஆளுக. கண்ல முள் எடுக்கிறவுக வீடு அடுத்த தெருவு".


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Fri Aug 06, 2010 6:16 am

[You must be registered and logged in to see this image.]

"என்னிய வலியோட கொன்னுட்டுப் போயிட்டானே ஒரு கொலகாரப் பாவி"ன்னு கத்துனவன்தான். அதுக்குப் பெறகு பொண்டாட்டி பேறுகாலத்துக் குக்கூட சொக்கத்தேவன்பட்டிக்கு வரல வாழ்நாள் பூரா வர மாட்டேன்னு சொல்லிட்டான். கொண்ணவாயன் கெடைக்குக் காவல் காக்கப் போன கத ஒரு சோகக் கத.

தை மாச ஒழவுக்கு முன்னால காடுகரைகள்ல கெடை அமத்துறது வழக்கம். ஆயிரம் உரம் போட்டாலும் ஆட்டுப் புழுக்கையும் கோமியமும் நெலத்துல விழுகிற மாதிரி வருமா? கெழக்க ராமநாதபுரம் சிவகங்கையில் இருந்து ஐந்நூறு ஆயிரம்னு ஆடுகள ஓட்டிக்கிட்டே மேற்க வருவாக கெடையாட்டுக்காரங்க. வேணும்ங்கிற வங்க பத்து நாள் பதினஞ்சு நாள் அவுகவுக நெலத்துல ஆடுகள அமத்திக்கலாம். பகல்ல எங்கிட்டு மேஞ்சாலும் பொழுசாய நெலத்துல கொண்டாந்து அத்தன ஆடுகளையும் அடைச்சுருவாக கெடையாட்டுக் காரங்க. களவாணிப் பயக யாரும் வந்தா கண்டு சொல்றதுக்கு உள்ளூர்ல கொறஞ்ச கூலிக்கு ஒரு ஆளு வேணும்னு கொண்ணவாயனப் பேசி அமத்திக்கிட்டாக, கெடை யாட்டுக்காரக.

வீட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு, பசுவுக்குத் தீவனம் வச்சிட்டு, ஆட்டுக்குப் புல் அள்ளிப் போட்டுட்டு, சம்பளம் வாங்கிற வீட்டுலயே சாப்பிட்டுட்டு, மசங்கக் கெடைக்கு வந்து விடியிற வரைக்கும் இருக்கணும். காலே அரைக்கா ரூவா சம்பளம் மாசத்துக்கு.

இவன் வேலைக்குச் சேந்த ஏழாம் நாளு கெடையில ஒரு குறும்பாட்டங் குட்டி செத்துப்போச்சு, கொண்ண வாயன் மசங்கக் கெடைக்குப் போக, குறும்பாட்டங் குட்டிய மொத்தமாக் கொழம்புவச்சுத் தின்னுபுட்டு சட்டியக் கவுத்திக்கிட்டிருக்கானுங்க கெடையாட்டங்காரங்க,

அவங்க கைவிரல் இடுக்குல இருந்த கொழுப்புப் பசையும் கொழம்பு மணமும் கொண்ணவாயன் கொடல்ல இருந்த பசியக் குத்திக் கெளறுது. கொண்ணவாயன் பொழுசாய வருவானே அவனுக்கு ஒரு இத்த எலும்பாச்சும் எடுத்து வைக்கணுமேன்னு எடுத்துவைக்கல பாவிப் பயக. அன்னைக்கின்னு கெடைய இவன்கிட்ட விட்டுட்டு, அரப்படித்தேவன்பட்டிக்கு வள்ளித் திருமணம் பாக்கப் போய்ட்டாங்க எல்லாரும்.

முன்பனிக்காலம், ஈரக்கொல நடுங்குது ஈரக் காத்துல, அவங்க கூட்டிவச்ச அடுப்புல மிச்சமிருந்த நெருப்புல செடிசெத்தைகளப் போட்டுக் *கூதக்காயிறான் கொண்ணவாயன். கவுத்துவச்ச சட்டிக்குள்ளயிருந்து கழுவியும் போகாத கொழம்பு வாசன மூக்கத் தொளைச்சு நாக்கத் தூக்குது. திடீர்னு கொண்ணவாயனப் புடிச்சிருச்சு கறி வெறி. ஆடுகளுக்கு கொழையறுத்துப் போடுற வாங்கருவாள எடுத்தான். எந்தெந்த ஆடுக கைக்குச் சிக்குதோ அந்தந்த ஆடுகளோட காதுகள மட்டும் சரக் சரக் சரக்னு அறுத்தான். சில ஆடுகள்ல ரெண்டு காது சில ஆடுகள்ல ஒரு காது. கலவரம் பண்ணி ஓடுதுக காதுகளத் தரையில போட்ட ஆடுக. கெடைக் குள்ள அஞ்சாறு புலிக புகுந்து காது கடிக்கிற மாதிரி அமளிதுமளியாகுது மந்தை. என்னமோ தரையில கெடந்த அரசு எலைகளப் பெறக்கிற மாதிரி கீழ கெடந்த காதுகள ஒண்ணுவிடாமப் பொருக்கிறான். கூதக்காய்ஞ்ச அடுப்புல மொத்தமாப் போட்டுச் சுட்டுச் சுட்டுத் திங்கிறான் சொரண்டிச் சொரண்டித் திங்கிறான். விடிய விடியத் தின்டுபாத்தும் பத்துக் காதுகளுக்கு மேல திங்க முடியல. விடிய்ய வந்துட்டாங்க நாடகம் பாக்கப் போனவங்க.

கத்திக்கிட்டே அலையுதுக காதுக இல்லாத ஆடுக. இந்தக் கூத்தப் பாத்ததும் அவங்களுக்கு அந்தக் கூத்து மறந்துபோச்சு. கெடை உண்டான காலத்திலிருந்து இது வரைக்கும் இல்லாத சரித்திரமா இருக்கே!

கெடைக்குள்ள நரிக புகுந்து காதுகளக் கடிச்சுக் கத்திரிச்சு எடுத்துக்கிட்டு ஓடிப்போச்சோ? இல்லையே கடிச்ச மாதிரி இல்லையே. அளந்து அறுத்த மாதிரியில்ல இருக்கு. அப்ப எதிரிக வேலையா இருக்குமோ? இருக்கும். திருப்புவனம் கெடைக்காரங்களுக்கும் நமக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்தான். அவங்க வேலையாகத்தான் இருக்கும். ஆனா, அவங்க ஆடு புடிக்கிற கூட்ட மாச்சே காதறுக்க மாட்டாங்களே... இப்படிப் பல தினுசா நெனச்சு, என்ன நடந்துச்சுன்னு கொண்ணவாயனவே கேட்டிருவோம்னு அவனத் தேடினா, பழைய கம்பளி பொத்திப் பம்மிப் பம்மி ஒக்காந்திருக்கான் பய. கிட்ட வர வர ஒரு கருகல் வாசன வருது.

இதென்னடா புதுசா இருக்கு.... எங்கியிருந்து வருது வாசனைன்னு பாத்தா, அடுப்புத் தீக் கங்குகள்லயிருந்து வருது. ஒரு குச்சியெடுத்து சரசரசரன்னு அடுப்பக் கிண்டிப்பாத்தா "எங்க கதியப் பாத்திகளா?"ன்னு வெடச்சுக் கெடக்குதுக கருகிப்போன காதுக.

"ஏலே! இது இவன் சோலி தாண்டா"ன்னு பதறிப்போய்த் திரும்பிப் பாத்தா, கம்பளிய ஒதறிட்டு ஓட்டத்துல கூடிட்டான் கொண்ண வாயன். அவன் ஒதறி எறிஞ்ச வேகத் துல அவன் சட்டைப் பையிலிருந்து துண்டா ஓடி விழுகுதுக அஞ்சாறு காதுக. "ஓங்காத அறுக்காம விட மாட்டோம்டி"ன்னு அவங்க வெரட்ட, இவன் ஓட... கரட்டுக்காட்ல நடக்குது ஓட்டப் பந்தயம்.வெடிச்சு விழுந்த பருத்திப் பஞ்சு காத்துல பறந்துபோறது மாதிரி போறான் பய.

ஒரு சிங்கம் முயலத் துரத்துனா, சிங்கத்தவிட வேகமா ஓடுமாம் முயலு. ஏன்னா, சிங்கம் துரத்துறது பசிக்காக முயல் ஓடறது உசுருக்குக்காக. பசிக்காக ஓடறதவிட உசுருக்காக ஓடற ஓட்டம் வேகம் குடுக்குமா இல்லையா? கொண்ணவாயன் தப்பிச்சு ஓடியே போனான். ஆனாலும், கெடைக்காரன் ஒருத்தன் வீசி எறிஞ்ச வாங்கருவா கொண்ணவாயன் காதோரமா ஒரசிக்கிட்டே போய் விழுந்ததில எலும்பில்லாத அடிக் காது ஒரு ஓரமா அந்துபோச்சு.

அவனுக்கு இடது காதுல இப்பவும் இருக்கிற ஒச்சம் காதறுத்த ஞாபகச் சின்னம். இப்படி எல்லா விசயத்திலயும் அரைக் கேணயனா இருந்த கொண்ண வாயன், ஒரே ஒரு விசயத்துல மட்டும் வெவரமா இருந்தான். தைப் பொங்க, தீவாளிக்குச் சொந்த ஊருக்குப் போக லைன்னா கிறுக்கு முத்திப் போயிரும் அவனுக்கு. பையில பலகாரம் வாங்கு வான் அப்பனுக்கு வேட்டி துண்டு வாங்குவான் அவனுக்கு யாரு வீட்ல யாவது திங்கத் தர்ற அதிரசம் முறுக்கத் திங்காம ஒண்ணு சேப்பான்.

கடைசியா சுப்பஞ் செட்டியார் வீட்டுக்குப் போயிக் கைக்கு ஏழு மேனிக்குப் பதினாலு வளவி வாங்குவான். அதை மட்டும் தனிப்பையில போட்டு முடிஞ்சு இடுப்புல சொருகிக்கிரு வான். முடவன் கொம்புத் தேனுக்கு ஆசப்படலாமான்னு ஒரு பழமொழி சொல்லுவாக. தப்பான பழமொழி அது. முடவன் கொம்புத் தேன் எடுக்க முடியாதுன்னு சொல்லலாம் ஆசப்படக் கூடாதுன்னு சொல்லலாமா? ஆசப்படறதுல என்ன தப்பு? அவன் ஆசப்பட்டுட்டான்.

கொண்ணவாயனுக்கும் ஒரு காதல் இருக்கு.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Fri Aug 06, 2010 6:19 am

"யப்பா கட்டையா! நான் பெத்த நல்ல மகனே! கேட்டியா..? மாசமா இருக்காளாம்டா, ஒம் பழைய பொண்டாட்டி, அத்து அனாதிக்காட்ல விட்டும் கழுத்துல தாலி வகுத்துல பிள்ள. தாலியக் கழத்தவும் மாட்டாளாம் கருவக் கலைக்கவும் மாட்டாளாம். நாளைக்கிப் பிள்ளையப் பெத்துக் கையில புடிச்சுட்டு வந்து, இவந்தாண்டா ஒன் அப்பன்.... இதாண்டா ஒன் சொத்துன்னு வம்புதும்பு பண்ணா என்ன பண்ணுவ? வழிவழியா வந்த சொத்துக்கு வாரிசு வேணுமடா மகனே! இன்னொரு கல்யாணம் பண்ணிக்க. நாளைக்கி வாராக செல்லம்பட்டி ஆளுக, மாப்ள வீடு பாக்க. செவக்காட்டுப் புழுதியில உழுது வந்தவன் மாதிரி சிவீர்னு வராம, குளிச்சு முடிச்சு வெள்ளையுஞ் சொள்ளையுமா வாடா மகனே!

சடையத்தேவர் வார்த்தைக்குச் சரி சொல்லிட்டான் கட்டையன். மாசமாயிருக்கிற ஒரு பொம்ப ளைக்குப் பத்து மாசமும் துன்பந்தானாம். அதுலயும் இந்த மொத அஞ்சு மாசமும் கடைசி ரெண்டு மாசமும் இருக்கே... வேணாமப்பா இந்த பொழப்புன்னு வெறுப்பே வந்திருமாம். கொமட்டலும் வாந்தி யும் கொடலப் பெரட்டுமாம் தூக்கந் தூக்கமா வருமாம் கண்ட எடத்துல கால நீட்டிக் கட்டையச் சாய்க்கச் சொல்லுமாம்.

[You must be registered and logged in to see this image.]வயித்துல ஒண்ணும் இல்லேன்னாலும் வாந்தி வாந்தியா வருமாம். ஒரு சின்னப் பல்லு மொளைக்குது, அதுக்கே ஈறு வலிக்குதே... ஒடம்புக் குள்ள ஒரு உசுரே மொளைக்கிற போது வலிக்காமப்போகுமா ஒரு பொம்பளைக்கு.

கருவாச்சி பாவம், எல்லாத்தையும் பல்லக் கடிச்சிக்கிட்டுப் பொறுத்துக் கிட்டா. ஆனா, இந்தச்சோறு பொங்குற வாசனையும் தாளிக்கிற வாசனையும் கறிக் குழம்பு வாசனையும் வந்தாப்போதும், ஊரவிட்டே ஓடிக் கரட்டுல போயிக் குடியிருக்கலாமான்னு தோணுது அவளுக்கு.

ஒண்ணுஞ் சாப்பிடப் புடிக்கல ஒறப்பும் புளிப்பும் தேடிச் சப்புக் கொட்டி நிக்கிது நாக்கு. புளியங்கொழுந்த உருவிப் பச்ச மொளகா வச்சு அரச்சு யார் குடுத்தாலும் கடவுளேன்னு கால்ல விழுந்திரலாம் போல இருக்கு. சோறு செல்லல ஆனா, ஊறவச்ச அரிசின்னா உசுராயிருக்கு.

திருநீறு கெடைச்சாத் தின்னே தீக்குறா, நாயன்மார் அறுபத்தி மூணு பேரும் ஆயுசு பூராக் கொழச்சுப் பூசின திருநீற-, அஞ்சே நாள்ல இவ தின்டுபுட்டா. சாம்பல், சாப்பாடுன்னு ஆகிப் போச்சு மாங்கா, தொட்டுக்கன்னு ஆகிப்போச்சு. இந்த நாலஞ்சு மாசத்துல அவ அள்ளித் தின்ன சாம்பல் இருக்கே... அதக் கரட்டுக் காட்டுக்கு ஒரமா அடிச்சிருந்தா பருத்தி வெடிச்சுப் பவுனா விழுந்திருக்கும். பான தலையில கொடம் இடுப்புல. கெணத்துல தண்ணி எடுத்துப் பொடிநடையா வாரா கருவாச்சி.

"ஏந்தாயி! சடையத்தேவர் வீடு எங்கிட்டு இருக்கு?"

தண்ணிப் பானையத் தலையில வச்சமேனிக்கு எல்லாரையும் நின்னு நிதானிச்சுப் பாக்குறா கருவாச்சி. ஆணும் பெண்ணுமாப் பத்துப் பதினஞ்சு பேர்கொண்ட கூட்டம் எதுக்க நிக்கிது.

"இப்படியே இடது கைப் பக்கம் போனீங்கன்னா சாவடி வரும் சாவடியத் தாண்டி வேப்ப மரம். வேப்பமரத்துலயிருந்து மூணாம் வீடு." வந்தவுக பூரிச்சுப்போனாக அவ வழி சொன்னதுக்கு இல்ல நிறைகுடம் எதுக்க வந்தா நல்ல சகுனமாம் சம்பந்தம் கூடி வருமாம் அதுக்கு.

அன்னைக்கே பாதிக் கல்யாண வீடாகிப்போச்சு சடையத்தேவர் வீடு. தெருவெல்லாம் ஊர்வலம் போயி திரும்பித் திரும்பி வருது சமையல் வாசனை. கல்யாணம் பேச வாரவகளுக்குக் கறிச்சாப்பாடு போடறதில்ல. போடறதாயிருந்தா கெடையில காணாமப்போயிருக்கும் ஏழெட்டுக் கெடா.

பொண்டாட்டி தீட்டா இருக்கிற வீட்ல மாமியாக்காரி வந்து பரிமாறது மாதிரி, கறி இல்லையேங்கிற கொறைய லேசா ஈடுகட்டும் நெய்யி. அஞ்சாறு ஊர்கள்ல சொல்லிவச்சு வாங்கி உருக்கிவச்ச நெய்யிருக்கும் ஒரு மரக்கா. நெய்யில நீச்சலடிக்கலாம்யா சடையத்தேவன் வீட்லன்னு பெருமை பேசி அலையுது பெருசு.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Fri Aug 06, 2010 6:21 am

[You must be registered and logged in to see this image.]

உக்காந்து வாழை எலையிலயும் சாப்பிடலாம் வாழை எலையிலயே உக்காந்தும் சாப்பிடலாம் பெருங் கொண்ட எலைக.

வாசலப் பெருக்கி வைக்கோல் போட்டு வைக்கோல்மேல சமக்காளம்போட்டு, "சம்பந்தம் அப்புறம் பேசுவோம் மொதல்ல சாப்பிடுங்கப்பா"ன்னு எல்லாரையும் உக்காரவைக்க, உள்ளவாராக உருமாப் பெருமாத் தேவரும், காவக்காரச் சக்கணனும், சுப்பஞ் செட்டியாரும். அவுக மூணு பேரையும் பாத்து மூஞ்சி செத்துப்போன சடையத்தேவரு "வாங்கப்பா! நீங்களும் ஒக்காருங்க பந்தியில"ன்னு சொன்னாரு ஒப்புக்கு.

"சடையத்தேவன் வீட்ல சாப்பாடு என்ன மெதமாவா இருக்கும்? சாப்பிடுவோம் பேசிட்டுச் சாப்பிடுவோம்".

"என்னப்பா பேச்சு ஒரு இழுவையா இருக்கு. சாப்பிட வந்தீகளா? சண்டபுடிக்க வந்தீகளா?

"நல்ல காரியம் நடக்கட்டுமப்பா, அப்புறம் வாரோம்".

"நீங்க வந்ததச் சொல்லலேன்னா நாங்க வெந்ததத் திங்க முடியாதப்பா. வந்த சோலியச் சொல்லுங்க".

"பரம்பரையாப் பெரிய பொழப்புப் பொழச்சதப்பா ஒங் குடும்பம். இன்னும் பல தலைமொறைக்குப் பால் பாலா இருக்கணும்."

"அதுக்கு என்ன குறை இப்ப?"

"ஒன் வீட்ல சம்பந்தம் பேச வந்திருக்காக சரிதான். கட்டையனுக்கு இன்னொரு கல்யாணம் பண்றதும் நல்லது தான். ஆனா, நம்ம கள்ள நாட்டு ஆசாரப்படி தீத்தவ கழுத்துல தாலி இருக்க இன்னொருத்திக்குத் தாலி கட்ட முடியாது புருசன்."

"அதுக்கு வேற வழி இருக்கா.. இல்லையா?"

"இருக்கு. புதுப் பொண்ணு கழுத்துல புருசன் கட்ட முடியாது தாலிய, மொதப் பொண்டாட்டி வந்துதான் மூணு முடிச்சுப் போடணும். அப்பத்தான் கல்யாணம் செல்லுபடியாகும், நம்ம
சமூகத்துக்கான சட்டப்படி."

"ஒண்ணு, அந்தச் சிறுக்கி மகளத் தாலி முடிச்ச அவுக்கச் சொல்லுங்க. இல்ல எம் புது மருமகளுக்கு முடிச்சுப் போடச் சொல்லுங்க."

"கழுதையக்கூட கட்டிக்கிரட்டும் முடிச்செல்லாம் போட முடியாதுன் னுட்டா கருவாச்சி".

"மீறி நாங்க கல்யாணம் பண்ணினா?"

"பண்ண மாட்டப்பா. நீ பாரதம் படிச்ச ஆளு. மீறி நடந்தா என்னாகும்னு ஒனக்குத் தெரியாதா? ஊரே கூடி ஒன் வீட்டுக் கூரையில வேப்பங் கொழையச் சொருகிவச்சிரும். வேப்பங் கொழையச் சொருகுன வீட்டுக்கும் ஊருக்கும் உள்ள உறவு அந்துபோகும். ஊருக்குள்ள அந்தக் குடும்பம் இருக்கும். அந்தக் குடும்பத்தோட ஊர் இருக்காது. எங்களவிடப் புத்தி முத்தி நிக்கிற ஆளு நீ. ஒனக்குப் போயி நாங்க சொல்றோம் பாரு."

"அவள அத்துவிட்டது தப்பு அடிச்சே கொன்றுக்கணும்"ஓடிப் போயி ஒலக்கைய எடுக்கிறான் கட்டையன்.

"கருவாச்சிக்கு மொதல்ல கருமாதி... அப்பறந்தான் எங்க வீட்ல கல்யாணம்" சோத்துச்சட்டி தூக்கிட்டு வந்த சலம்பல்பாண்டி சட்டியக் கீழ போட்டுட்டுத் தாம்தூம்னு தவ்வி, சோறுவச்ச எலைக மேல சேறு மிதிச்சு ஆடிட்டான்.

விசாரிக்காமலேயே எல்லா விசயமும் புரிஞ்சுபோச்சு சம்பந்தம் பேச வந்த ஆளுகளுக்கு. குடிக்கவச்ச தண்ணிய எடுத்து எலையிலயே கை கழுவிட்டு எந்திரிச்சுப் போயிட்டாக எல்லாரும். சமச்ச சோறு ஆறிப்போச்சு கொதிச்ச மனசு ஆறல.

"ஒனக்கு இருக்குடி பிள்ளா"கருவாச்சி மேல வம்மம் வச்சு, கட்டையன் ஒரே எத்தா எத்தித் தள்ளுனதுல திண்ணையில ஒழுகி வாசல்ல பெருகி மாட்டுக் கோமியத்துல ஓடிக் கலக்குது நெய்யி. ஐப்பசி மாசம், புனுபுனுங்குது மழை சொதசொதங்குது பூமி. மசங்குன மாதிரியிருக்கு மத்தியானம். வீட்டுக்குள்ள வெளிச்சம் பத்தாதுன்னு தெரு வாசப்படியில உள்வீடு பாத்துக் கருவாச்சிய ஒக்காரவச்சு, அவளுக்குப் பின்னுக்க ஒரு முக்காலி போட்டுப் பேன் பாத்துக்கிட்டிருக்கா பவளம்.

சிலபேர் சல்லிக்கட்டு மாடு புடிக்கிறதுல, சிலபேர் புலிவேட்டை ஆடுறதுல பெரிய ஆளுகளா இருக்கிற மாதிரி, பேன் பாக்குறதுல பெருங்கொண்ட பேரெடுத்தவ பவளம். அவ பேன் பாக்குற சொகத்துல சொக்கிப்போன சொக்கத்தேவன்பட்டிப் பொம்பளைக பேன் பாத்து விடுறது புண்ணியம்னு அவ காதுல பூவும் வச்சுவிட்டுட்டாளுக.

ஆட்டுப் பண்ணை, கோழிப் பண்ணை வச்சிருக்கிற மாதிரி தலையில பேன் பண்ணை வச்சு அலையிறாக அந்த ஊர்ல பல பொம்பளைக. காடுகரைகளே கதின்னு கெடக்குற பொம்பளைக நித்தம் சீவக்கா போட்டுச் சுத்தம் பண்ண முடியுதா? இல்ல வெள்ளி செவ்வாய்க்கு எண்ணெ தேச்சு முழுகத்தான் லாயக்கு இருக்கா?

தலையில குப்பை கூளம் சொமக்கிறது கெடச்ச எடத்துல தலவச்சு செடி செத்தையில படுக்கிறது வறுமைக் கொடுமையில தல சீவாமப் போறது முடியில தூசு தும்பு சேர்றது இதெல்லாம் பேனை வா வான்னு கூப்பிட்டுச் சோறு போட்டுச் சொந்தம் பாராட்டி வச்சுக்கிரும் தலையில.

ஒரு பேச்சும் பேசாமத் தலையப் பவளம்கிட்ட ஒப்படைச்சிட்டு, கால நீட்டித் தலையக் கவுந்து ஒக்காந்துட்டா கருவாச்சி. மாசம் அஞ்சு வரைக்கும் வயிறு எந்திரிக்காது பொம்பளைக்கு. நாலு முடிஞ்சு அஞ்சு ஆரம்பம். எறும்பு கடிச்ச உதடு மாதிரி லேசா மேடு கட்டின வயிறு, அவ இடுப்புல சரிஞ்சுகெடக்கு சந்தோஷமா.

"எந் தலையில யாரோ கூதக்காயுற மாதிரி அரிப்பா அரிக்குதுடீ"ங்கிறா கருவாச்சி. "தலையா வச்சிருக்கிற தல? காளவாச வச்சாலும் எரியாத ஓந் தலையில கூதக்காயுறாங்களாம் கூத?" சின்னதா ஒரு செல்லக் கோபம் கோவிச்ச பவளம், சிக்கும் சிண்டுமாயிருந்த கருவாச்சி முடியப் பிச்சுப் பின்னலெடுத்துப் பளார் பளார்ன்னு ஒதரி, கையில வெலக்கிக் காத்தாடவிட்டா. சல்லுச்சல்லுச்சல்லுன்னு அவ முடிய அடிச்சுத் தொவைச்சு அவ தோள்லயே காயப்போட்டா. அவ தலையில தலப்பெரட்டுப் பண்ணப் பண்ணத் துன்பத்துல ஒரு இன்பமாயிருக்கு இன்பத்துல ஒரு துன்பமாயிருக்கு. கெறங்கிக் கிறுகிறுத்துப்போறா கருவாச்சி.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Fri Aug 06, 2010 6:22 am

சிணுக்கறுக்கி, ஈருவல்லி, சீப்பு இந்த மூணு ஆயுதமுமில்லாம, பெண்ணாப் பெறந்தவ போகக் கூடாது பேன் வேட்டைக்கு. பவளம் சிணுக்கறுக்கி எடுத்தா சடை புடிச்சுக் கெடந்த கருவாச்சி குடுமியச் சன்னஞ் சன்னமாச் சிக்கெடுத்தா. அட்ச ரேகை பூமத்திய ரேகை போட்டுத் தலய பாகம் பிரிச்சா. ஒவ்வொரு முடியா வெலக்கி உள்ள போயிப் பாத்தா, ஒனக்கும் எங்களுக்கும் பந்தயம், புடிச்சிரு பாப்பம்னு சவால்விடுதுக ஆண் பேனும், பெண் பேனும். பேன்கள்ல ஆண் பேன் எப்பவும் சிறுசு பெண் பேனுதான் பெருசு. சென கொண்டு அலையிறதுனால பெண் பேன் வெரசா ஓடாது சிக்கிரும் சீக்கிரம். ஆண் பேன் அப்படியில்ல. இந்தா புடிச்சாச்சுன்னு நெனைக்கிறப்ப ஒத்த முடிக்குள்ள ஓடிப் போயிப் பாசாங்கு பண்ணிப் பதுங்கிரும். பேன் பாக்கிறவளக் கண்ணக் கட்டிக் காட்டுல விட்டிரும்.


[You must be registered and logged in to see this image.]
கருவாச்சி தலையப் பாத்துப் பயந்துபோனா பவளம். அவ ஆயுசுல பாத்ததில்ல இப்படி ஒரு பேன் காடு. பத்து வெரலையும் குடுமி வேர் வரைக்கும் செலுத்திப் பிறாண்டு பிறாண்டுன்னு பிறாண்டி விட்டா. அவ பிறாண்டுற பிறாண்டல்ல பேனுக்குக் கிறுக்குப் புடிக்கணும் அப்பத்தான் பேன இவ புடிக்க முடியும். வேட்டைக்குப் போறவுக டமாரம் தட்டி, பொதருக்குள்ள இருக்கிற வெலங்குகள வெளியில கெளப்புற மாதிரி இவ பிறாண்டல்ல பதுங்குகுழிய விட்டு வெளிய வந்து மெதக்குதுக பேனுக. செனப் பேனுக போதையேறிக் கெடந்த இடத்துலயே கெடக்கும் எங்கயும் போகாதுக.

மொதல்ல ஆண் பேனாப் புடிக்க ஆரம்பிச்சா. ஒவ்வொண்ணாப் புடிச்சுப் புடிச்சு ரெண்டு கட்டை வெரல் நகத்துக்கு மத்தியில வச்சு மொறுக் மொறுக்குன்னு குத்துறா சொடக் சொடக்குன்னு சத்தம் கேக்குது. அவ பத்து வெரலும் தலைக்குள்ள பரபரன்னு பயணம் போக, தலை யெல்லாம் பூப்பூக்குற மாதிரி ஒரு கெறக்கம் உண்டாக... அவ காது கழுத்து பொடனியில வெரல்படுற சொகம் ஒரு வீணை வாசிக்க... பேன் குத்துற சத்தம் ஒரு சங்கீதம் படிக்க... தலையில அரிப்பெடுக்கிற எடத்தில நண்டு மாதிரி நடந்துபோற வெரல் சொல்லாமச் சொறிஞ்சு சுரீர்னு சொகங் குடுக்க...

ஐப்பசி மாச மழைத் தூத்தலும் குதுகுதுன்னு ஒரு கூதக்காத்தும் முதுகுத்தண்டு வழி பாஞ்சு, மூளைக்குள்ள கிச்சுக்கிச்சுப் பண்ண... கண் மயங்கி ஒறங்கிப்போனா கருவாச்சி. எவ தலையக் கொடுத்தாளோ அவளப் பொதுவா ஒறங்கவிட மாட்டா பேன் பாக்குற பொம்பள. நான் கழுத்து வலிக்கக் கருமாயப் பட்டுப் பேன் பாக்க, நீ அந்த உல்லாசத்துல ஒறங்குறவளான்னு பேனப் புடிச்சுப் புடிச்சு ஒறங்குறவல எழுப்பிக் குத்துடி நீயும்னு குடுத்திருவா கையில. ஒறக்கம் தொலைச்சவ ஒறங்கட்டும் பாவம்னு பவளம் விட்டுட்டா. முதுகுல தொங்குற முடிய அள்ளி அவ மூஞ்சிக்கு முன்ன போட்டுட்டு, தாலியக் கொஞ்சம் பின்னுக்கிழுத்து முதுகுல போட்டுக்கிட்டு அவ பொடணிப் பள்ளத்தக் கண்டுபுடிச்சா பவளம்.

தோட்டம் துரவுல மேச்ச ஆடுமாடுகளத் கடைசியாத் தொழுவுல கொண்டாந்து அடைக்கிற மாதிரி, புடிச்ச பேனுகள அடைச்சுவக்கிற பள்ளம் அதுதான். அவ புடிச்சுப் போடப் போட நெம்பிப் போச்சு பொடணிப் பள்ளம். இந்தா இந்தான்னு எல்லாப் பேனையும் எடுத்தாச்சு. வெள்ளை வெள்ளையா ஈரு மட்டும்தான் மிச்சமிருக்கு. பேன் வைக்கிற முட்டைதான் ஈருங்கிறது. அது கைக்குச் சிக்காது கழுத. உருவுறா உருவுறா ஈருவல்லி போட்டு உருவிக்கிட்டே இருக்கா. ஒரு உருவு உருவ ஈருவல்லிய வெளிய எடுத்து ஒரு அமுக்கு அமுக்க ஈருவல்லி இடுக்குகள்ல அந்த ஈருக சடக் சடக்ன்னு ஒடையிற சத்தம் கேக்க... ஏதோ கனாவுல பாட்டுக் கேக்குற மாதிரியிருக்கு கருவாச்சிக்கு.

சிக்கெடுத்த தலையத் திரும்பவும் ஒரு தடவ ஒதறி, குதிரக் கயிறு மாதிரி இடது கையில அவ குடுமிய இழுத்துப் புடிச்சு, வலது கையில சீப்பெடுத்து அழுந்தச் சீவி முடிஞ்சதடியம்மா என் வேலன்னு ஒரு முடியும் போட்டு பவளம் எந்திரிச்சுத் தன் சீலயப் படீர் படீர்னு ஒதறவும், சோளக் கருது அடிச்சு முடிச்சவ சீலையி லிருந்து சொங்கு விழுகிற மாதிரி, ஈரும் பேனும் முடியுமா காத்துல பறக்குது. அவ வெரல் இடுக்குல யெல்லாம் பிசுபிசுங் குது பேன் குத்துன ரத்தம்.

"ஏ கருவாச்சி எந்திர்றீ"ன்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள கைகழுவப் போனா பவளம். கவுந்த தல கவுந்த மேனிக்கு அர மயக்கத்துலயே கெடக்கா கருவாச்சி. தெருவுல நடமாட்டமில்ல ஆள் சத்தமில்ல. வேப்பமரத்துல கத்திக்கிட்டிருக்கு மழையில நனஞ்சு தொண்டகட்டிப் போன காக்கா. காத்துல லேசா வருது யாரு வீட்லயோ கருவாடு சுடுற வாசன. "ம்மா"ன்னு அடிவயித்துலிருந்து கத்துது நாயக்கர் வீட்ல நேத்து ஈன்ட பசுமாடு. ஒரு அரத்தூக்க நெனப்புலயே இதை யெல்லாம் அனுமானிச்சுக் கவுந்து கெடந்த கருவாச்சி யாத்தேன்னு அலறித்துடிச்சு எந்திரிக்கிறா. அவ கழுத்துல யாரோ கயித்தவச்சு இறுக்குற மாதிரி இருந்திச்சு. எந்திரிச்சுப் பாத்தா, கழுத்துல கெடந்த தாலியக் காணோம்.

சேறும் சகதியுமா இருந்த தெருவுல யாரோ தடதடன்னு ஓடுற மாதிரியிருக்கு. நடந்தது என்னான்னு நின்னு நிதானிக்க முடியல. அய்யோன்னு கொடல் ஜவ்வு கிழியக் கத்துனா. தண்ணி மாதிரி தரையில கெடந் தவ தண்ணிப் பாம்பு மாதிரி எந்திரிச்சா. முந்தானைய எடுத்து இழுத்துச் சுத்துனா எடுப்புல. பளீர்னு தவ்வுனா வாசலுக்கு வெளிய தெருவுல. முழங்காலுக்கு மேல சுருட்டித் தூக்குனா சீலய. நடக்கக்கூட லாயக் கில்லாமக் கொழ கொழன்னு சேறாக் கெடந்த தெருவுல ஓடி வாராய்யா கருவாச்சி... உள்ள கெடந்த உசுரு உச்சந்தலையில முட்ட முட்ட!

"யாத்தே எந்தாலிய அத்துட்டுப் போறான். யாத்தே எந்தாலிய அத்துட்டுப் போறான்"

அவ போட்ட சத்தத்துல தீப்புடிக்குது நனஞ்சு நசநசன்னு கெடந்த தெருவு.

"அய்யோ எந் தாலி! அய்யோ என் தாலி..."

அஞ்சு மாசம் முழுகாம இருந்த பொம்பளைக்கு அந்தத் தெம்பும் தெறமும் எங்கிட்டிருந்து வந்துச்சுன்னே தெரியல. கொழஞ்ச சோத்தக் கொட்டிவச்ச மாதிரி சும்மா சொதசொதன்னு கெடக்குற ஐப்பசி மாசத் தெருவுல வெறிகொண்டு வெரட்டிப் போறா, தாலி அத்து ஓடுறவன் பின்னால.

மின்னல் மாதிரி ஓடி நாயக்கர் வீடு தாண்டி, கருவேலமுள்ளு அடைச்ச சந்து வழியாத் தவ்வப்பாத்து, சேறு வழுக்கித் தொப்புக்கட்டீர்னு விழுந்து போனான் தாலி அத்தவன் தாலியைத் தூக்கிப்பிடிச்ச கையோட மல்லாக்கக் கெடக்கான்.

தத்தக்கா பித்தக்கான்னு ஓடிவந்து, அவன் கையிலிருந்த தாலியை வெடுக்குன்னு புடுங்கிக் கழுத்துல கட்டிக்கிட்டு "நான் ஒனக்கு என்னாண்ணே பாவம் பண்ணேன்"னு கருவாச்சி கத்திக் கதறவும், வீட்டுக் குள்ளருந்த ஊரு வெளிய வந்திருச்சு.

மழைத் தண்ணியோட அழுதுக்கிட்டே, "ஒம் பொண்டாட்டி தாலி பால் பாலா இருக்கட்டும்"னு அவனக் கையெடுத்துக் கும்புட்டா, வல்லூறு வேகத்துல வந்தவ பாவம் வாத்து மாதிரி திரும்பிப் போறா.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Fri Aug 06, 2010 6:25 am

ஊரே வையிது, தாலிய அத்துட்டுப் போன ஒலக்கையன் தம்பிய.

"தாலிய அத்துப் பொழைக்கிறதுக்குத் தாலிய வித்துப் பொழைக்கலாமில்ல."

"இவன் பாவம் அம்பு கட்டையன் தான் வில்லு."

"சொந்த புத்தி எங்க போச்சு? பன்னி திங்கிறதத் திம்பானா கட்டையன் திங்கச் சொன்னா..?"

காறித் தெருவுல துப்புன எச்சியில, அவன் மூஞ்சியிலயும் தெறிச்சுப்போச்சு ஒண்ணு ரெண்டு. ஏழு மணிக்கே நடுச்சாமம் மாதிரி ஆகிப்போச்சு ஐப்பசி மாச ராத்திரி. "தாலியத்தவன் நாசமாகப்போக"ன்னு மண்ணள்ளித் தூத்துறேன்னு சேத்த அள்ளித் தூத்திட்டு வந்த பெரியமூக்கி, மேல்வலின்னு அனத்திப் படுத்திருக்கிற மகளுக்குக் கைகால் அமுக்கிவிடுறா.

கைகால் அமுக்கிவிடுறது பெரிய கம்பசூத்திரம் எல்லாருக்கும் வராது. பெரியமூக்கி அதுல தெள்ளக் கடைஞ்சவ. சில பேர் கைகால் அமுக்கிவிட்டா வலி வெளிய போயிரும் சுளுக்கு உள்ள வந்திரும். பெரியமூக்கி கைகால் அமுக்கிவிட்டா அம்பத்தாறு தேசத் துக்கு அங்கிட்டுப் போயிருந்தாலும் றெக்கைகட்டிப் பறந்து வந்து கண்ணுல சம்மணங்கால் போட்டு ஒக்காந்திரும் ஒறக்கம்.

மக குடுமிக்குள்ள கை செலுத்திக் கோலம் போட்டு, காதோரம் குருத்தெலும்புகளத் தடவிக் குடுத்து, தோள்பட்டையப் பந்து மாதிரி அமுக்கிப் புடிச்சு, பஞ்சு மாதிரி விடுதல பண்றா ஒடம்பவிட்டு வலி வெளிய போறதக் கண்ல பாக்குறா கருவாச்சி.

புடிச்சுவிடற துன்னா எல்லாத்துக்கும் ஒரே மாதிரி புடியா? கெடையாது. சதை யுள்ள சாராங்கத்துக்கு வேற புடி. எலும்புத் தாக்கான எடங்களுக்கு வேற புடி. பொடணிக்கு வேற பாதத்துக்கு வேற. அவ கைச் சதைய ரெண்டு கையிலயும் அமுக்கி விரல்கள்ல அழுத்தி உள்ளங்கைப் பள்ளத்துல கொண்டாந்து குவிச்சு, தவழ்ற பிள்ளையத் தரையில எறக்கிவிடுற மாதிரி பொத்துனாப்புல புடிச்சுவிட்டா, நெத்தியில வந்து ஒக்காந்திரும் நித்திரை.

கட்டை வெரலையும் சுட்டு வெரலையும் பொடணியில அழுத்திப் பதிச்சு ஒரு அங்குலம் சதையை ஒசக்க இழுத்து, பழுத்த வாழப்பழத்த அழுத்திப் பாக்குற மாதிரி வலிக்காம அமுக்கிவிட்டா. காச்சுப் போன அந்தக் கையில எங்கதான் மயிலிறக வச்சிருப்பாளோ? சும்மா மழை பேஞ்சு ஓஞ்ச மேகம் மாதிரி மெதக்குது ஒடம்பு. பாவிமக விரல்ல என்னதான் மந்திரம் வச்சிருக்காளோ? அவ சொன்னாச் சொன்னபடி கேக்குது சொடக்கு. வெரலப் புடிச்சுப் பெருவிரலால நகத்த ஒரு அழுத்து அழுத்தி, சொன்னா வந்திருன்னு ஒரு சுண்டு சுண்டுவா பாருங்க, சடக்சடக்குங்குற சத்தத்தோட ஒடஞ்சு வெளியேறும் சொடக்கு. இந்தக் கட்டை வெரல் நாலு மட்டும் எடக்குப் பண்ணும் சொடக்குப் போட, கட்டைவெரல் சொடக்குப் போட அவகிட்ட வேற சூத்திரம் இருக்கு. உள்ளங்கையில ஒரு கூடு பண்ணி உள்ளுக்கு இழுத்துக் கிருவா கட்டவெரல. அதத் தடவித் தன் வசமாக்கிப் படக்குன்னு இழுத்து மடக்குன்னு ஒடிப்பா கடக்குன்னு சத்தம் கேக்கும்.

தலையிலயிருந்து ஆரம்பிச்சுக் கடைசியாப் பாதசேவைக்கு வந்து சேர்ந்துட்டா. தூசுதும்பு பூச்சியெல்லாம் எடுக்கிறதுக்குத் தாய்க்கோழி குஞ்சுக் கோழிய மூக்கால கொத்தும் பாருங்க, அப்படிக் கருவாச்சி பாதத்த நகத்தால பட்டும்படாமக் கொத்திக் கொத்திவிடுறா பெரியமூக்கி. ஒடம்புல அலுப்ப எடுத்து எறிஞ்சிட்டு மூளைக்குள்ள அடைப்பு எடுக்குது அந்த நகக்கொத்து. எல்லாம் முடிச்சு, அணில் முதுகுல ராமர் மூணு கோடு போட்ட மாதிரி, பாதத்துல நகத்தால மூணு கோடு போட்டுட்டா முடிஞ்சது சோலின்னு அர்த்தம். எப்படிப்பட்ட ஆளாயிருந்தாலும் அதுக்குள்ள கொறட்ட விட்டாகணும். இத்தன பண்ணியும் அன்னைக்கு ஒறக்கம் வரல கருவாச்சிக்கு.

இவ ஆத்தாளா? அழுக்குச் சீல கட்டிவந்த கடவுளா? என்னிய விட்டா யாருமில்ல இவளுக்கு. எம் முந்தானையவிட நீளமில்ல இவ ஒலகம். நான் ஒறங்கிட்டதா நெனச்சுக்கிட்டு என் இடுப்ப இறுக்கிப் புடிக்குதுன்னு தளர்த்திவிடுறாளே இந்தச் சீல... இதச் செவக்கிக் கட்டச் சொல்லிக்குடுத்தது கூட இவதானே! பாவாடையில உருவாஞ்சுருக்குப் போடத் தெரியாம கல்லு முடிச்சுப் போட்டு அலைஞ்ச கேணச்சிறுக்கி நானு. இவதான் சொல்லிக் குடுத்தா சீல உடுத்த.

பதினாறு மொழப் பொடவையில ஒரு முந்தியெடுத்து இடுப்புல ஒரு சுத்துச் சுத்தி எடப் பக்கம் ஒரு சொருகு, வலப் பக்கம் ஒரு சொருகுச் சொருகி முடிஞ்சுக்கிட்டு, சின்னச் சின்னதா ஏழெட்டு விசிறி மடிப்பு மடிச்சு, சுங்கம் சேத்து அதைப் பின்பக்கம் தள்ளிக் கொசுவம்விட்டு, நெஞ்சோட சேத்துத் தச்சது மாதிரி ஒரு இறுக்கு இறுக்கி, முந்தானைய இடுப்புல சேத்து ஆப்படிச்சது மாதிரி சொருகிவிட்டுச் சொல்றா: "பிரிட்டிஷ்காரன் பீரங்கியில சுட்டா கட்டுன கோட்டை விழுந்தாலும் விழுந்திரும் கட்டுன சேல விழுந்திராது பாத்துக்க!" பக்கத்துலயே ஒருக்களிச்சுப் படுத்துக்கிட்டா ஆத்தா. கருவாச்சி மூஞ்சில விழுந்து ஒரசுது ஆத்தா முந்தான. இந்த முந்தானையப் பத்தி அவ சொன்ன சொல்லு இன்னும் காதுலயே இருக்கு.

"பதினாறு மொழத்துல மிச்சம் விட்ருக்கேனே... இந்த ரெண்டரை மொழம் முந்தான. இதுல இருக்குடி ஆத்தா ஒரு பொம்பள பொழப்பு. முந்தானைக்கு வேல ஒண்ணா ரெண்டா? படுக்க ஒக்கார முக்காடுபோட தலையில முண்டுகட்ட தலை தொவட்ட சும்மாடு சுத்த காசு முடிய விசிறி வீச கட்டுக்கட்ட ஞாபக முடி போட பண்டபாத்திரம் சுத்தம் பண்ண மூஞ்சி தொடைக்க ஒலை எறக்க அவசரத்துல புருசனுக்குப் பாய் விரிக்க...

எல்லாத் துக்கும் அந்த முந்தானதான். அஞ்சரை அடிப் பொம்பள பொழப்பு இருக்கு அந்த ரெண்டரை மொழத்துல..." ஆனா அவ சொன்னதெல்லாம் போக, சொல்லாத ஒரு வேலையும் செஞ்சது அவ முந்தான.

அப்ப... பத்துப் பதினோரு வயசிருக்கும் கருவாச்சிக்கு. ஆத்தாளும் மகளுமா கரட்டுக்காட்டுல கூலிக்குக் களையெடுத்தாக கண்ணுல சிக்குன காஞ்ச வெறகெல்லாம் ஒண்ணு சேத்துத் தலையில கட்டிச் சொமந்தாக பொழுதிருக்க வந்துக்கிட்டிருக்காக புடிச்சிருச்சு மழை. எங்க நிக்கிறது இடமில்லாத காட்ல..? நாம நனஞ்சாப் பரவாயில்ல. நனஞ்ச வெறகு எரியாதேங்கிற வருத்தத்துல வந்துக்கிட்டிருக்காக ரெண்டு பேரும்.


[You must be registered and logged in to see this image.]


மேகாட்ல மழை பேஞ்சு காட்டோடையில கரையறுத்து வருது செக்கச் செவேர்னு செந்தண்ணி. ஆத்தக் கடக்கணும் பாத்து வாடீன்னு சொல்லிட்டு, முழங்கால் தண்ணியில முன்னுக்கப் போறா பெரியமூக்கி. ஆத்தா முன்னுக்கப் போகட்டும். ஆழம் பாத்துப் பின்னுக்கப் போகலாம்னு கரையில நிக்கிறா கருவாச்சி. பெரியமூக்கி கரையேறிட்டா. ஆத்தாளுக்கு முழங்கால் தண்ணி இருந்தா இடுப்புத் தண்ணி இருக்கும் தனக்கு இது கருவாச்சி கணக்கு.

வெறகுக்கட்ட ஒத்தக் கையில புடிச்சுக்கிட்டே பாவாடைய இழுத்துச் சுருட்டி இடுப்புல சொருகி இறங்கிட்டா. பாதி ஓடை கடக்க, வெறகோட சேத்து அவள யாரோ இழுக்குற மாதிரி இருந்திச்சு. என்னா ஏதுன்னு நிதானிக்குறதுக் குள்ள மேகாட்ல பேஞ்ச மழையில இடைகாட்டுத் தண்ணியெல்லாம் ஒண்ணுகூடிக் கரை மீறி வருது காட்டாறு. ஆயிரம் தண்ணிப் பாம்புக ஒண்ணு சேந்து வார மாதிரி சீறிப் பாஞ்சு வருதுக செந்தண்ணி அலைக. கரையில ஏறி முழங்கால மடக்கிச் சீலயப் புழிஞ்சுக்கிட்டிருந்த பெரியமூக்கிக்குத் தெரிஞ்சுபோச்சு தண்ணிக்கொடம் ஒடைஞ்சு வந்த புள்ள தண்ணியில போகப் போகுதுன்னு.

"வந்துருடீ... கருவாச்சி வந்துருடீ" கத்துறா பாவம் கரையில கெடந்து. தண்ணிக்குள்ள தரைக்கும் காலுக்குமிருந்த பிடிமானம் போய்க்கிட்டிருக்கு... கருவாச்சி தத்தளிக்கிறா... அலைமோதுறா... தண்ணியும் குடிச்சுப்புட்டா. அப்பவும் மார்க்கண்டேயன் புடிச்ச சிவலிங்கம் மாதிரி வெறகுக் கட்டை விட மாட்டேங்கறா. "வெறக விட்டுர்றி கையக் கால ஒதறிக் கரைக்கு வாடீ" பெருங் கூச்சல் போடுறா பெரியமூக்கி.

கரையக் கொடஞ்சு கருவேலமரத்த விழுத்தாட்டி வேகவேகமா வருது வெள்ளம்.

சுத்தியும்முத்தியும் பாத்தா ஆத்தா. கடவுள் மாதிரி கெடந்துச்சு கரையில ஒரு கல்லு. என்ன வேகத்துல எடுத்தா... என்ன வேகத்துல அத முந்தானையில முடிஞ்சா... என்ன வேகத்துல அதத் தண்ணியில எறிஞ்சா... இன்ன வரைக்கும் அதை அறிய மாட்டா பெரியமூக்கி. கல்லோட வந்து தண்ணியில தொப்புன்னு விழுந்த முந்தானைய கருவாச்சி கெட்டியாப் புடிக்க.. இழு இழுன்னு அவள இழுத்துக் கரையில சேத்துட்டுத் தான் கால்பதிச்சு நின்னுருந்த கரை ஒடையவும் ஆத்துல விழுந்துபோனா பெரியமூக்கி. ஆத்தா இப்ப ஆத்தோட போக "யாத்தே யாத்தே"ன்னு கருவாச்சி கரையிலிருந்து கத்த... வெள்ளத்தோட மெதந்து வந்த மாட்டு வாலப் புடிச்சு ஒரு பர்லாங் தள்ளிக் கரையேர்றா பெரியமூக்கி. மக ஓடிப்போயி ஆத்தாளத் தூக்கிவிடவும் "என் தண்ணிக்கொடம் ஒடஞ்சு ஒரு பெறப்பு இன்னிக்குத் தண்ணியில ஒனக்கு மறுபெறப்பு மகளே"ன்னு காட்டோடைக் கரையில பாட்டுப் படிக்க ஆரம் பிச்சுட்டா. உசுரு பொழச்ச சந்தோசத்த விட, வெறகு போன வருத்தத்துல வீடு வந்து சேந்தாக தாயும் மகளும்.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Fri Aug 06, 2010 6:27 am

மூஞ்சியோரம் கெடந்த முந்தானைய எடுத்து மோந்து பாத்தா கருவாச்சி. ஆத்தா வாசன அடிச்சுச்சு அதுல. ஆத்தாள நெனச்சா ஊத்தா ஊத்துது கண்ணீரு. தொடச்சுக் கிட்டே எந்திரிச்சு ஆத்தாளுக்குக் கால் அமுக்கிவிடுறா கருவாச்சி. காடுகரடு கடந்த காலு என்னியத் தூக்கிக் கல்லுலயும் முள்ளுலயும் நடந்த காலு தேஞ்சு சிறுத்துப் போனாலும் ஓஞ்சுபோகாத காலு.

இந்தா படுத்திருக் காளே ஆத்தா! இதே எடந்தான். எனக்கு அப்ப ஏழெட்டு வயசிருக்கும். அம்மை பாத்துக் கெடக்கேன். எள்ளு விழுக எடமில்லாம ஒடம்பெல்லாம் அம்மை போட்டு நெறபூட்டுப் பூட்டியிருக்கா மாரியாத்தா. வாழ இலைய விரிச்சு என்னப் பெறந்தமேனியா உரிச்சுப் படுக்கவச்சிருக்கா ஆத்தா. ஒடம்பெல்லாம் முத்துப் போட்டிருக்கு அசைய முடியல. நாக்குலயும் கொப்புளம் போட்டிருக்கு முழுங்க முடியல. இமைக்கு மேல ரெண்டு மூணு அம்மை ஒறங்க முடியல.

அம்மை பாத்த வீட்டுக்கு ஆளுக யாரும் வாரதில்ல போறதில்ல. அந்த இருவத்தோரு நாளும் ஆத்தா பெரியமூக்கி பட்டிருக்கா பாரு ஒரு பாடு... அதை நெனச்சாப் போதும்
நெஞ்சுக்குழியில முட்டிக் கண்ணு வழியா எட்டிப் பார்க்கும் கண்ணீரு. தலமாட்டுல எப்பவும் எளநி வெட்டிவச்சு, வேப்பங்கொழை ஒடிச்சு விடாம நீவிவிட்டு, மஞ்சள், வேப்பங்கொழுந்து, அருகம்புல்லு, ஆமணக்கு வித்து நாலையும் அம்மியில வச்சு, கல் இல்லாத களிமண் மாதிரி அரைச்சு, "இதாண்டி அம்மன் காப்பு"ன்னு திரேகமெல்லாம் பூசிவிட்டு, இருவத்தோரு நாளும் கண்ணுறங்காம கண்ணுக்கெட்டின தூரத்துலயே இருந்தாளே... அதுகூடப் பெருசில்ல... ஒடம்பு முழுக்கப் போட்டிருக்கிற அம்மையில ஒவ்வொரு முத்தா ஒடஞ்சு, அதுல ஒழுகுன தண்ணி அடிவாழ இலையில ஓடி ஆறாப் பெருகி, வீடே வீச்சமெடுத்துக்கெடக்க, அம்மனப் பழிக்கப்படாது அத வெளக்கமாத்துல பெருக்கவும் படாதுன்னு ரெண்டு கையும் குமிச்சு அத வாரி எடுத்து மஞ்சத் தண்ணியோட வீதியில எறிஞ்சாளே... கடவுளாயிருந்தாலும் போதுமடி பிள்ளன்னு போயிருமா இல்லையா... ஆத்தா போனாளா?... இல்லையே! எல்லாக் கடவுளுக்கும் பிள்ளை இருக்கோ இல்லையோ... எல்லாப் பிள்ளைக்கும் கடவுள் இருக்கு ஆத்தா ரூபத்துல.

நம்மூர்ல காலங்காலமாப் பொம்பளைக்குன்னு வந்ததெல்லாம் ஆத்தா வழிவந்த அறிவுதான். கோலம் போடச் சொல்லிக்குடுத்தவ ஆத்தா. குழம்பு கூட்டிப் போடச் சொல்லிக்குடுத்தவ ஆத்தா. ரசம் வைக்கயில அது இளங்கொதி கொதிச்சு அடங்க, நுனி நகத்துல இத்துனூண்டு வெல்லங் கிள்ளி அதுல சுண்டிவிட்டு, இன்னொரு கொதிகொதிக்க எறக்கணும்னு சொல்லிக்குடுத்தவ ஆத்தா.

ஆத்து மீனும் கொளத்து மீனும் பெரிய மீனாயிருந்தா சுத்தம் பண்றது லேசு. உரசு உரசுன்னு உரசி அதுக வாயில இருக்குற பாசி தூசியக்கூட விரல விட்டு எடுத்து வெளியில எறிஞ்சிரலாம். அயிர மீனுக சின்னது. அதுக வாயில மண்ணு இருக்கும் எடுக்க வராது. அதுக்கும் ஒரு வழி சொல்லிக்குடுத்தவ ஆத்தா. உசுருள்ள அயிர மீனாத்தான் வாங்குவா. தண்ணி ஊத்தி நல்லா அலசிட்டு மீனுக மேல பால ஊத்திவிட்டுருவா. பாலு ஒண்ணு மட்டும் ஒவ்வாது அயிர மீனுக்கு. வாயிலிருக்கிற மண்ணுகளக் கக்கிப்புடும் கக்கி. அயிர மீனு நாத்தமும் போயிரும் மீனும் சுத்தமாயிரும்.

இன்னொண்ணும் சொல்லிக் குடுத்தா ஆத்தா. அப்பப் புரியல அது இப்பப் புரியுது. "ஒறங்கப் போகையில பாவாடையத் தெரட்டிப் பந்து சுருட்டித் தொடை இடுக்குலவச்சுத் தூங்குடீ"ன்னு சொல்லிக்குடுத்தா. ஏன் எதுக்குன்னு கேட்டதுக்குச் சொன்னா: "தூங்கப் போகையில யான தும்பிக்கையச் சுருட்டி வாய்க்குள்ள வைச்சிருக்கிரும்டீ... இல்லேன்னா புழுப் பூச்சிக உள்ள போயிருமா இல்லையா"... அவ சொன்னது பெரியவளாகிப் புரியறப்ப வெக்கம் வெக்கமா வந்துச்சு பின்னாடி நெனச்சா சிரிப்புச் சிரிப்பா வந்துச்சு.

கருவாச்சி இப்பவும் அதை நெனச்சுப் பல்லுத் தெரியாமச் சிரிக்கிறா பல்லி கத்துற மாதிரி சிரிக்கிறா விட்டுவிட்டுச் சிரிக்கிறா பட்டும்படாமச் சிரிக்கிறா. ஆனா, அப்படியாப்பட்ட ஆத்தாளுக்கு அதுதான் கடைசி ராத்திரின்னு தெரிஞ்சிருந்தா இந்தச் சிரி சிரிச்சிருக்க மாட்டா பாவம்!

[You must be registered and logged in to see this image.]கடந்த ஒரு மாசமாவே சொக்கத் தேவன்பட்டியே சோகமாகிப் போச்சு. வெதச்ச வெள்ளாமக் காடெல்லாம் குறுக்கொடிஞ்சு கெடக்கு. பதினாறு வயசுப் பொண்ணுக எண்ணெ வச்சுத் தல பின்னி நிக்கிற மாதிரி, தளதளன்னு இருந்த காடுகளுக்குள்ள வெள்ளக்காரன் படையெடுத்து வந்தது மாதிரி, வெட்டுக்கிளிக கூட்டமா வந்து குமுஞ்சிருச்சுக. ரம்பத்த வச்சு அறுத்த மாதிரி எளங்குருத்துகளக் கத்திரிச்சுக் கத்திரிச்சு அதுக தின்னுட்டுப் போனதுல பொணங்கள நின்டமேனிக்கு நிறுத்திவச்ச மாதிரி சுடுகாடுகளா நிக்கிதுக சோளக் காடுக. கையில இருந்த காசுகள எல்லாம் காடுகரைகள்ல போட்டுட்டு உள்ளதும் போச்சேன்னு நிக்கிது ஊரு.

வெவசாயம் அழிஞ்சு போனா வேலவெட்டி ஏது?

பெரியமூக்கியும் கருவாச்சியும் பித்துப் புடிச்சு நின்னாக. வெளையாமப்போச்சு காடு, மடி வத்திப்போச்சு மாடு குலுக்கையில இருந்த கம்பும் கேப்பையும் கொறைஞ் சுக்கிட்டே வந்துச்சு. அடகு வைக்கப் பொருளிருந்தாலும் அடகு வாங்க ஆள் இல்ல ஊர்ல. மொசப் புடிக்கப் பம்முற வேட்டை நாய் மாதிரி எப்ப வேண்ணாலும் பாஞ்சிருவேன்னு, ஊர் எல்லையில பதுங்கி நிக்கிது பஞ்சம். அன்னைக்கி விடிஞ்சும் எந்திரிக்கல ஆத்தா. தலவலி காய்ச்சல்னு படுத்தேகெடக்கா. சுக்குத் தண்ணியக் குடிச்சுக் குடிச்சு, ஒட்டிக்கெடக்குற உசுர அப்பப்ப ஊறவச்சுக்கிறா. அவளுக்கு நெல்லுக்கஞ்சியும் மொளகு ரசமும் வச்சுத் தரலாம்னா காப்படி அரிசி வாங்கக் காசில்ல கருவாச்சி கையில.

அப்பத்தான் அன்னஞ்சியில காளையன் கெழவன் செத்துப் போனான்னு சேதி வருது. கூலிக்கு மாரடிக்க ஆள் கூப்பிட ஆள் வந்திருக்கு. கல்யாணத்துலயும் சாவுலயும் தெரிஞ்சுபோகும் ஒரு மனுசன் இந்த பூமியில பொழச்ச பொழப்பு. காசு குடுத்துக் கூப்பிட்டுப் போனாலொழிய காளையன் கெழவனுக்கு அழுகுறதுக்கு ஆள் இல்ல அன்னஞ்சியில. கண்ணுல வெங்காயத்தப் புழிஞ்சுவிட்டாலும் கண்ணீர் வராது யாருக்கும். அழுகுறதுக்கு முகாந்திரமோ லாயக்கோ இல்லாத சாவு, கெழவன் சாவு.

காளையன் கெழவன் மாதிரி கஞ்சப்பய சில்லாவுலயே இல்லேன்னு செல்லம்பட்டிப் பட்டயத்துல தைரியமா எழுதிப்போடலாம். செத்தா, தன்னக் கேக்காமச் செலவழிச்சுப் புடுவாங்களேன்னுதான் தொண்ணூத் தஞ்சு வயசுல உசுரக் கையில புடிச்சு உக்காந்திருக்கான் கெழவன்னு ஊர்ல பேசுவாக.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Fri Aug 06, 2010 6:31 am

[You must be registered and logged in to see this image.]சொத்து விரிய விரிய மனசு சுருங்கிப்போச்சு கெழவனுக்கு. ஒரு மனுசன் கஞ்சப்பயலா இருக்கறதுனால பணக்காரனாகிறானா..? பணத்தைக் காப்பாத்தக் கஞ்சப்பயலாகிறானா? முந்துனது முட்டையா... கோழியாங்கிற மாதிரி பதிலுக்குச் சிக்காத கேள்வி இது. காளையன் கெழவன் அப்பப்ப ஊருக்குள்ள மூக்குப் பொடி கடன் குடுக்குறதும் உண்டு. ஒரே ஒரு நிபந்தனதான். பொடிய அவர்தான் குடுப்பாரு. திருப்பி அவரேதான் எடுத்துக்குவாரு. அதுல ஒரு சூட்சுமம் வச்சிருந்தாரு.

இடுப்பு வேட்டியில முடிஞ்சு வச்சிருப்பாரு பொடி டப்பாவ. யாராச்சும் கடன் கேட்டா, இடுப்புல இருந்து கிட்னியவே எடுக்குற மாதிரி நிதானமா எடுப்பாரு. சுட்டு வெரல டப்பாவுக்குள்ள செலுத்தி, சுட்டு விரல் நகத்துல என்ன வருதோ அத அப்படியே எடுத்து எதிராளிக்குக் குடுத்திட்டு, விரல்ல ஒட்டியிருக்கிற மிச்சப் பொடியத் தன் மூக்குல மாத்தி மாத்திச் செலுத்திச் சந்துபொந் தெல்லாம் இழுகிக்கிடுவாரு. கடன் குடுத்த பொடிய அப்புறம் வசூலிப்பாரு பாருங்க. அங்கதான் இருக்கு கெழவனோட கெட்டியத்தனம். இவரு பொடியக் கடன் குடுக்கறது சுட்டு விரல் நகத்துல வசூலிக்கிறது கட்ட வெரல் நகத்துல. அதுக்குன்னே கட்ட விரல் நகத்தக் கெடா கொம்பு வளத்த மாதிரி வளத்துவச்சிருப்பாரு.

வாழை மட்டையிலயோ டப்பாவுலயோ வெரல் நகத்த நொழச்சு ஒரு எம்பு எம்பி அள்ளுனாருனுன்னா, சல்லிக்கட்டுக் காள கொம்புல மண்ணக் குத்தி ஒரு நெம்பு நெம்புமா இல்லையா, அப்படி அள்ளிப்புடும் அள்ளி. அது பொடிக்கு அவர் வசூலிக்கிற ஒரு பொடி வட்டி. அப்பிடித்தான் உள்ளூர்ல ஒரு எழவு வீட்டுக்குப் போயிருந்தாரு காளையன் கெழவன், போனவரு பொணத்து நெத்தியில இருந்த கால் ரூவாயப் பாத்துட்டு, அதக் கொண்டாங்கப்பா, இந்தா எட்டணா இதை வைங்கன்னாரு. எழவு வீடே எந்திரிச்சு உக்காந்திருச்சு. இதென்னப்பா இது கூத்தாயிருக்கு? சாயம் போகாதுன்னு சொல்லி வெள்ள வேட்டிய வித்துப்புடற வினயமான ஆளு. காலணாவ எடுத்துட்டு எட்டணாவத் தர்றாறே. இன்னக்கிப் பொளந்துகட்டப்போகுதுடா மழைன்னு வந்த சனம் பேசுது.

எங்கிட்டிருந்து மழை பெய்யும்? ஒரு செல்லாத அரை ரூபாயப் பொணத்துக்கு வித்து அதிலயும் ஒரு கால் ரூபா லாபம் பாத்த காளையன் கெழவனக் கண்டு இறங்கி வந்த மேகம் திரும்பிப் போயிருமா இல்லையா?

எட்டூரும் மறக்காது காளையன் கெழவன் சாலு* இரவல் குடுத்த கதையை. "எலே, தொரக் கண்ணு... இந்தாடா சாலு எடுத்துக்க. என் ஆயுசுல யாருக்கும் சாலு தோலு இரவல் குடுத்ததில்லப்பா ஒனக்குக் குடுக்குறேன் ஓட்டகீட்ட ஒண்ணும் கெடையாது பாத்துக்க கன்னிப்பொண்ணு மாதிரி வச்சிருக்கேன். சேதமில்லாமத் திருப்பித் தந்தா வாங்கிக்கிறேன். ஒரு புள்ளி விழுந்தாக்கூட புதுச்சால் தரணும்டா. எடுத்துட்டுப் போ".

[You must be registered and logged in to see this image.]மறுநாள் சாலு திரும்பி வந்தப்ப உருட்டி உருட்டிப் பாத்து ஒரு ஓட்டையைக் கண்டு பிடிச்சிட்டாரு காளையன் கெழவன். புதுச்சாலு தந்தாலே ஆச்சுன்னு தகராறு பண்ண ஆரம்பிச்சுட்டாரு. துரைக்கண்ணு தலைகீழா நின்னு பாத்தான் நடக்கல, புதுச்சாலு வாங்கிக்கிட்டுத்தான் கழுத்துல போட்ட துண்ட எடுத்தாரு. ஏற்கெனவே அது ஓட்ட விழுந்த சாலுங்கறதும், களிமண்ணும் புளியும் வச்சு அடைச்சுக் குடுத்த ஓட்டைங்கறதும் காளையன் கெழவனுக்கும் கடவுளுக்கும்தான் தெரியும். காளையன் கெழவன் உண்மை சொல்றதில்ல கடவுள் பேசறதேயில்ல.

இப்படியாப்பட்ட ஆள் செத்துப்போனா எவன் கண்ல தண்ணி வரும்? மகனே அழுகல மகன் பிள்ள பேரன் பேத்திகளும் அழுகல.

சொக்கத்தேவன்பட்டிக்கு ஆள் வந்திருக்கு, கூலிக்கு மாரடிக்கிற பொம்பளை களக் கூட்டிட்டுப் போக. தொழில் கெடைச்சுப் போச்சுங்கிற சந்தோஷத் துல வைத்தியச்சி ரங்கம்மா, முக்குறுணி, இருளாயி மூணு பேரும் சீலய அவுத்து ஒதறி இழுத்துக் கட்டி அவுந்த குடுமிய அள்ளி முடிஞ்சு அன்னஞ்சிக்குப் புறப்பட, ஒங்ககூட நானும் வாரேன்னு ஓடிவந்து ஒட்டிக்கிட்டா கருவாச்சி.

"ஏய்! வகுத்துப் புள்ளக்காரி வரக் கூடாதுடீ எழவுக்கு". மூணு பேரும் ஒண்ணு சொன்னாப்புல தடுத்தாக.

"என் சிய்யான்கிய்யான் செத்துப்போனா வராம இருப்பனா. அப்படி நெனச்சுக்குங்க. வகுத்துல இருக்கிற பிள்ளையையும் காப்பாத் தணும் வகுத்துல சொமந்த ஆத்தாளயும் காப்பாத்தணும் கூட்டிட்டுப் போங்க. ஆத்தாளுக்கு மட்டும் சொல்லாதீக".


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Fri Aug 06, 2010 6:35 am

[You must be registered and logged in to see this image.]கூலிக்கு மாரடிச்சு வர்ற வருமானத்துல ரங்கம்மாவுக்குப் பாதிப் பங்கு மிச்சப் பாதியில மூணு பொம்பளைகளுக்கும் மூணு பங்கு இப்படி ஒரு ஒப்பந்தம் பேசி முடிச்சு ஒத்தையடிப் பாதையில நடையில கூடிட்டாக நாலு பேருமா. மசங்கலாயிருக்கு மத்தியானமே. இருட்டுக் கட்டியிருக்கு பூமி. காது வழியா நொழைஞ்சு நெஞ்சுக்குழியில உக்காந்து ஈரக் கொலைய அறுக்குது காத்து. தூசிகீசி விழுந்திருச்சோ என்னமோ... கண்ணக் கசக்கி நிக்கிது ஆகாயம்.

முந்தானைய எடுத்து இறுக்கி முக்காடு போட்டுக் கிட்டு ஒண்ணுக்குப் பின்னால ஒண்ணா ரயில் பெட்டி மாதிரி போறாக நாலு பொம்பளைகளும். அவிச்சு மடியில போட்டிருந்த கல்லுப்பயறை ஆளுக்கு ஒரு கை அள்ளிக் குடுத்து நாலு பேர்ல நாந்தான் பணக்காரின்னு நெஞ்ச நிமித்தி முன்னுக்க நடந்துபோறா முக்குறுணி. சுளீர்சுளீர்னு அடிச்ச காத்து இப்பச் சொழட்டிச்சொழட்டி அடிக்குது.

நடந்து நடந்து தொண்ட காஞ்சுபோச்சு கருவாச்சிக்கு. நாக்கும் மீனும் ஒண்ணோ என்னமோ... தண்ணி இல்லாட்டி ரெண்டுமே செத்துப்போயிரும் போலருக்கு. கஞ்சப்பய பிச்சை போடுற மாதிரி சில்லறை சில்லறையா விழுகிற மழைத் துளியில நாக்க வெளிய நீட்டி நனைச்சுக்கிர்றா கருவாச்சி. இதப் பாத்துட்டா பின்னுக்கு வந்த வைத்தியச்சி. நில்லுங்கடின்னு எல்லாரையும் நிறுத்திட்டு, போற வழியில பொதர்ல இருந்த ஒரு கள்ளிச் செடி மேல முந்தானைய விசுக்குன்னு வீசி, பொத்துனாப்புல இழுத்துக் காம்போட திருகி எடுத்தா ஒரு கள்ளிப் பழத்தை. சும்மா நீலமும் செவப்பும் பூத்து நிக்கிது அது. பாறையில போட்டு ஒரு மீன உரசுற மாதிரி முள்ள ஒரசுனா. குல்லாய எடுத்துத் துண்டா வைக்கிற மாதிரி மேல் தோல உச்சுனாப்புல பிச்சுட்டு, தின்னுடி ஆத்தான்னு திங்கக் குடுத்தா. தின்னவும் வெத்தல போட்ட மாதிரி ஆகிப்போச்சு கருவாச்சி வாயி.

தவிக்கிற வாய்க்கு அங்கங்க தண்ணி வச்சிருக்குடி கடவுளுன்னு சொல்லிக்கிட்டே நடந்தாக மேற்கொண்டு நாலு பேரும். வெள்ளக்காரனக் கட்டமொம்மு வெரட்டி வெரட்டி அடிச்ச மாதிரி கூடிவந்த மேகங்களக் கலைச்சுக் கலைச்சு வீசுது காத்து. திடீர்னு எறங்கி வந்து மூஞ்சியில படீர்னு அடிச்சுட்டு ஒரே ஓட்டமா ஓடி ஒளிஞ்சுபோகுது மழை. வெட்டவெளியில ஆதிக்கஞ் செலுத்தி நிக்கிது ஒரு கனத்த வேப்பமரம். அதுல போயி ஒதுங்குனாக.

"ஏண்டி இருளாயி! குத்துக்கல்லு மாதிரி பேசாம வாரதுக்குக் கூதலுக்கு ஒரு கதை சொல்றது..?"

[You must be registered and logged in to see this image.]"வெறுங்கதை எதுக்கு? விடுகதை சொல்றேன். விடுவி பாப்போம்".

"சொல்லு..?"

"கத்திபோல் எலையிருக்கும்
கவரிமான் பூப்பூக்கும்
திங்கப் பழம் பழுக்கும்
திங்காத காய் காய்க்கும்.
அது என்னா?"


"தெரியாதாக்கும். கருவாச்சிக்குப் புடுங்கிக் குடுத்தனே கள்ளிப்பழம்... அதானே?"

"இல்ல."

"ஆலமரம்."

"பொத்தாம் பொதுவாச் சொல்லாத ஆத்தா... புத்தியைச் செலவழி".

"கடைசியாக் கருவாச்சி சொன்னா: "நாம ஒதுங்கி நிக்கிறமே... வேப்பமரம், அதுதான?"

"அப்படிப் போடு தலை எல்லாம் மூளையடியம்மா கருவாச்சிக்கு".

ஆள் செத்த அடை யாளமே இல்ல அன்னஞ்சிக்குள்ள, பொணத்த நாற்காலியில உக்காரவச்சிட்டு ரெண்டு ஊதுவத்தியும் கொளுத்திவச்சிட்டு, சண்டைக்காரங்க மாதிரி ஒருத்தர ஒருத்தர் பாக்காம உக்காந்திருந்தாங்க பத்துப் பதினைஞ்சு ஆளுக. எழவு வீட்டுக்குன்னு ஒரு மூஞ்சி இருக்கா இல்லையா. அத மறக்காம எடுத்து மாட்டியிருந்தாக எல்லாரும். ஏழெட்டுக் கெழவிகளோட புலம்பல் வேற, கண்ணுல ஈரப்பசையே இல்லாம.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Fri Aug 06, 2010 6:35 am

உலகத்துலேயே பெரிய சோகம் கண்ணீர் வராம அழுகிறதுதான். அந்தக் கெழவிக அழுக முடியாம அழுகுறதப் பாத்தா... அழுகையே வந்துரும் அழுதறியாத ஆளுக்கும். காளையன் கெழவன் கடைசி மக கோம்பையில வாக்கப்பட்டவ "என்னப் பெத்த அப்பே"ன்னு தலைய விரிச்சுப்போட்டு நெஞ்சில அடிச்சு அழுது வர்றா. செயிக்கிற சீட்டு வந்து சேரலையேன்னு பெருங்கொண்ட சோகத்திலிருந்த காளையன் கெழவன் மகன் சீட்டை எறிஞ்சிட்டுத் திண்ணையவிட்டு மளார்னு எந்திரிச்சு, "நாசமாப் போகன்னு அப்பன மண்ண வாரித் தூத்திட்டுப் போன கழுத... இப்ப என்ன நெஞ்சில அடிச்சு நீலி மாதிரி அழுது வாரவ?"ன்னு சொல்லி... விட்டான் ஒரு அறை. ஒப்புச் சொல்லி அழுது வந்த ஒரே ஒருத்தியும் ஓஞ்சுபோனா.

"ஏ சொக்கத்தேவன்பட்டிப் பொம்பளைகளா, நீங்க மட்டும் அழுங்களா" ஒரு சாராயச் சத்தம் போட்டு சீட்டு வெளையாடப் போயிட்டான்.

"காக்கா பறக்காத
கள்ளிக்காட்டு பூமியில
கர்ணன் வந்து பெறந்தீரே
காளையனார் ரூபத்துல"
"ஊரெல்லாம் அன்னமிட்டு
உறவுக்குக் காசு தந்து
எமனுக்குத் தானமிட
ஏறிட்டீரோ பூந்தேரு?"

ரங்கம்மா இட்டுக்கட்டி மொத வரி பாட... முக்குறுணி ரெண்டாம் வரியில கூட... இருளாயி, கருவாச்சி ரெண்டு பேரும் பின்பாட்டுல சேந்து பின்னியெடுக்குறாக. இல்லாத கீர்த்தியெல்லாம் பாட்டுல கேக்கக் கேக்க சாவு ஆசை வருது கேட்டுக்கிட்டிருந்த கெழடுகளுக்கு.

பொழுதிருக்கப் பொணந் தூக்கியாச்சு. நாலு பொம்பளைகளுக்கும் சேத்து ஆறு ரூபா குடுத்தாக அழுத கூலி. பன்னாடை மாதிரி ஆளுக்கொரு நூல் சீலையும் தந்தாக. மாரடிச்ச பொம்பளைகளுக்கு இம்புட்டுக் கூலியாகும்னு தெரிஞ்சிருந்தா மண்டையப் போட்டிருக்க மாட்டாரு கெழவன். செத்துப்போனதனால இப்பத் தெரியவும் போறதில்ல தெரிஞ்சா வேகாம வெறச்சேகெடந் திருக்கும் நெஞ்சுக்கூடு.

பொழுதோட பொழுதா ஊரு போய்ச் சேந்திரலாம்னு பொம்பளைக நாலு பேரும் புறப்பட்டா, ஆலமரத்தத் தூக்கி அங்கிட்டு வைக்கிற மாதிரி அடிக்குது காத்து. காத்துன்னாக் காத்து கடுங்காத்து. கல்லுகளப் பேத்து ஆளுக மேல எறியிற காத்து. "இந்தக் காத்துல போனா ஊரு போய்ச் சேர மாட்டீக. இருந்து விடியப் போங்க"ன்னு சொல்லீட்டாக எழவு வீட்டு ஆளுக. சோளச் சோறும் மொச்சப் புளிக்குழம்பும் பசிக்கு ருசியா இருந்துச்சு. ஆத்தாகிட்டச் சொல் லாம வந்துட்டமேங்கிற நெனப்பு நெஞ்சுக்குழிய அறுக்க, ராத்திரி எல்லாம் கண்ணு மூடாமக்கெடந்தா கருவாச்சி.

விடியவிடிய அடிச்ச காத்து விடிய்... ய ஓஞ்சுபோச்சு. நடந்தா ஒத்தையடிப் பாதை மண்ணு மூடிக் கெடக்கு. வாரப்ப மழைக்கு ஒதுங்குன வேப்பமரம் என்னிய அடையாளம் தெரியலையான்னு குறுக்கொடிஞ்சு நிக்கிது. பாதிக் கெணறு மேடாகிப்போச்சு கெணத்துமேடு சரிஞ்சு. கடுங்காத்து தூக்கி எறிஞ்சதுல தோல் மாதிரி தொங்கிக்கெடக்கு வேலி முள்ளு மேல ஒரு வெள் ளாட்டங்குட்டி. குச்சி குச்சியா நின்ன வெள்ளாமக்காடு அறுத்துப் போட்ட மாதிரி தரையில கெடக்கு.

சொக்கத்தேவன் பட்டிக்குள்ள வந்தா வீடு தெருவுக்கு வந்துட்ட மாதிரியும், தெருவு வீட்டுக்குள்ள வந்துட்ட மாதிரியும் உருமாறிக்கெடக்கு ஊர். முள்முருங்கை மர மெல்லாம் நட்ட எடத்தைவிட்டு நாலடி தள்ளிக்கெடக்கு. தலையத் தரையில போட்டுக்கெடக்கு புன்னமரம் ரெண்டு. ஒரலு அம்மிக்கல்லத் தூக்கிக் குண்டு வெளையாடிட்டுப் போயிருக்கு காத்து. அலுப்பும் மயக்க முமா வந்த கருவாச்சி அதிர்ச்சியாகிப் போனா. வீடு தொறந்துகெடக்கு வீட்ல யாருமில்ல ம்மான்னு கத்திக் கத்திக் கயித்த இழுத்து இழுத்து அக்கப் பாத்ததுல கழுத்து புண்ணாகி நிக்கிதுக பசுவும் கன்டும். உள்வீடு ஏன் வெளிச்சமாயிருக்கு?

ஓடிப் போயிப் பாத்தா தலைக்கு மேல இருந்த ரெண்டு தகரத்தக் காணோம். மேல வச்சிருந்த கல்லத் தள்ளி விட்டுட்டுத் தகரத்தத் துண்டாத் தூக்கி எறிஞ்சிட்டுப் போயிருச்சு காத்து. கொண்ண வாயனக் காணோம். ஆத்தா எங்க போனா? தகரம் தேடிப் போயி ருப்பாளோ?

வீட்டத் தாண்டி, விழுந்துகெடக்குற படல்களத் தாண்டி சரிஞ்சுகெடக்குற படப்பு களத் தாண்டி தரையில கொட்டிக் கெடக்குற கூரைகளத் தாண்டிப் போனா, சீமக்கருவேலம் புதர் மேல தெரியுது ஒரு தகரம்.

ஆகா! ஏழேழு கடல் தாண்டிப் போனாலும் திரும்பி வந்திருமாமில்ல ஏலேலசிங்கன் பொருளு. ஆத்தா தண்டட்டிய வித்துப் போட்ட தகரம். எங்க போயிரும்? ஆளுக்கொரு பக்கம் புடிச்சுக் கருவாச்சியும் வைத்தியச்சியும் தகரத்தத் தூக்கிப் பாத்தா உள்ளுக்க... கழுத்தறுந்து செத்துக்கெடக்கா பெரியமூக்கி. வெட்டருவாளக் கையில புடிச்சு வெறகுக்கு முள்ளு வெட்ட வந்தவள, காத்துல பறந்து வந்த தகரம் கழுத்த அறுத்திருக்கு.

ஒறஞ்ச ரத்தம் குங்குமக்கட்டி மாதிரி ஒட்டியிருக்கு. பாதிக் கண்ணு தெறந்தே கெடக்கு. "யாத்தே"ன்னு கத்துனா பாருங்க கருவாச்சி... கர்ப்பம் கலங்கிருமோன்னு கையப் புடிச்சு இழுத்து அவள நெஞ்சில போட்டுக்கிட்டா வைத்தியச்சி.

"வந்துட்டியா மகளே வா.... கடைசியா ஒன்னியப் பாத்துட்டுப் போகலாம்னுதான் கண்ணு முழுசா மூடாமக் காத்துக்கெடக்கேன்... வா!"


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Fri Aug 06, 2010 6:38 am

பெரியமூக்கி பொணம் பேசுற மாதிரியே இருக்கு.

ஆடு மாடு செத்துப் போனாலே ஆள் செத்த மாதிரி அழுது பொலம்புற ஊரு அது. காத்துல பறந்து வந்த தகரத்துல கழுத்தறுபட்டுச் செத்துப்போனா பெரிய மூக்கின்னு கேள்விப்பட்டதும், எடுத்த பொருள நின்ட எடத்துல போட்டுட்டு ஓடிவந்து குமுஞ்சுபோச்சு ஊரு.

பெரியமூக்கி வீட்டுப் பசு அடிவயிறு ரெண்டாக்கிழிய ம்மான்னு ஒரு கத்துக் கத்துச்சு பாருங்க... ஊரு ஒறஞ்சு உசுர் வத்திப்போச்சு. சாவுக்குன்னே கத்துறதுக்கு வேற வேற சத்தம் வச்சிருக்குதுக சகல சீவராசிகளும்.

"பெ... பெ... பெரியத்தா... போ... போ... போயிட்டியா"ன்னு பொலம்பிக்கிட்டே கையில இருக்கிற சாட்டைக்கம்புல தன் மண்டையிலயே மாறிமாறி அடிச்சு, நெத்தியிலயும் புருவத்துலயும் ரத்தம் ஒழுகி நிக்கிறான் கொண்ணவாயன்.

"இந்தக் கடவுளுக்கும் கருவாச்சிக்கும் அப்படி என்னதான் சண்டையோ..? அவ குடுமியப் புடிச்சு இந்த ஆட்டு ஆட்டுதே..."

"ஆத்தாளுக்கு ஆத்தாளா... அப்பனுக்கு அப்பனா இருந்த ஒருத்தியும் போயிட்டா. கருவாச்சி பொழப்ப இன்னும் என்னென்ன சூறாவாளி சுத்தப் போகுதோ?"

இருளப்பக் கோடாங்கி, கடப்பாரைக் கவுண்டரு, அம்மைய நாயக்கரு, முக்குறுணி, பவளம், இருளாயி எல்லாரும் வாயிலயும் வயித்துலயும் அடிச்சுக்கிட்டே வந்து கூடிட்டாக அழுகாத சனம் பாக்கியில்ல. கருவாச்சி மட்டும் அழுகல. எந்த எடத்துல ஆத்தாளப் பொணமாப் பாத்தாளோ அந்த எடத்துலயே புத்தியப் போக்கடிச்சவ மாதிரி மூளையில முள்ளடிச்சு உக்காந்து போனா.

அவளுக்கு நெறம் தெரியுது உருவம் ஏறல கண்ணுல. சத்தம் கேக்குது சொல்லு விழுகல காதுல.

நடை மாறிப்போன உருமாப் பெருமாத்தேவரு "போய்ச் சேந்துட்டியா ஆத்தா"ன்னு பொலம்பிக்கிட்டே எழவு வீட்டுல வந்து நெஞ்சப் புடிச்சு ஒக்காந்திட்டாரு. அடிச்ச காத்து ஒடிச்சுக் கெணத்துக் குள்ள போட்டுப் போன கமலைய, வால்கயிறு கட்டி இழுத்துக்கிட்டிருந்த காவக்காரச் சக்கணன் தகவல் தெரிஞ்சு, ஊரடித் தோட்டத்தவிட்டு ஓடிவாராரு ஒத்த வரப்புல.

காத்துலயும் கவலையிலயும் நெறங் கொலைஞ்சு போன வீட்ட ஓடி ஓடி ஒழுங்கு பண்ணுதுக பெருசுக.

"ஏலே சின்னமாயி! அந்தக் கூரைத் தகரத்தப் போட்டுவிடப்பா. வீடே வீதிமாதிரி கெடக்கு".

படபடன்னு ரெண்டு பேரு ஏறுனாங்க. ஓரம் சாரம் பாத்து ஒழுங்காத் தகரம் சொருகி, எச்சா ரெண்டு கல்லையும் தூக்கி வச்சாங்க.

"யப்பா! அழகர் நாயக்கர் மகனே! நரியடிச்ச கோழி மாதிரி பொணம் கெடக்கு தரையில. ஒழுங்கு பண்ணிப் பொணத்த உக்கார வையப்பா." விறுவிறுன்னு வேல பாத்தாக ரெண்டு மூணு எளந்தாரிக. அந்த ஊர்லயே மொத்தம் மூணு பேரு வீட்லதான் நாற்காலியிருக்கு. அதுல ரெண்டு வீட்ல எழவுக்குத் தாரதில்ல. மூணாம் வீட்டு நாற்காலிய வாங்கிட்டு வந்து பெரியமூக்கி பொணத்தத் தாங்கிப் புடிச்சு உக்கார வைக்க, கைகால் நிக்கிது கழுத்து நிக்கல.

ஒரு கிழிஞ்ச துண்டெடுத்தாக காயம் மறைய அவ கழுத்துல சுத்துனாக. ஒரு சரடு எடுத்தாக ரெண்டு மூணு சுத்துச் சுத்திக் கழுத்த நிமித்திப் பின் நாற்காலியில முடிச்சுப் போட தலை நிமிந்திருச்சு பொணத்துக்கு. இப்பக் கட்ன கயிறு கண்ணுக்குத் தெரியுது. அவ குடுமியை எடுத்து உதறிப் பரப்பிக் கயித்த மூடுனாக. தொடையை நெருக்குனாக. கால் கட்ட வெரல் ரெண்டை யும் ஒட்டிக் கட்டி வச்சாக ஒண்ணு சொன்னாப்ல கை ரெண்டையும் நாற்காலியோட சேத்துக் கட்டவும் அம்சம் வந்திருச்சு பொணத்துக்கு.

பொணத்துக்குப் பக்கத்துல நெறை மரக்கால்ல நெல்லு வச்சு, ஊதுவத்தி கொளுத்தி வச்சு, ஒடையாத தேங்கா ரெண்டும் கண் தெறக்காத வாழப் பழம் அஞ்சும் வைக்கவும் பூரண மாகிப்போச்சு பொணவீடு. அழுகை அடங்கல, பொணமாக் கெடக்கிறவளப் போட்டுட்டு உசுரோட இருக்கிற கருவாச்சியப் பாத்துத்தான் ஊரே உச்சுக்கொட்டுது.

"மாசமா இருக்கவளுக்கு மயக்கம் வந்திரப் போகுது, புளிச்ச தண்ணியில கூழக்கரைச்சுக் குடுங்கடி"பல்லில்லாத கெழவிக பதறிச் சொல்றாக. உக்காந்தாப் புடிச்சு எந்திரிக்கத் தோதான எடம்பாத்து உக்காந்திருச்சுக வெளிவாசல்ல பெருசுக.

"யப்பா! இது ஆம்பளையில்லாத வீடு. அதுலயும் அத்துவிட்ட பிள்ள ஒத்தையில நிக்கிறா. தவிரவும் ஈருசுரா வேற இருக்கா. தோட்டிக்குத் துட்டுத் தரணும், எழவு சொல்லப் போறவனுக்குச் செலவு இருக்கு. பூக்காரன், சலவைக்காரன், சவரக்காரன், சாங்கியம் சம்பிரதாயம்னு இந்தா இந்தான்னு இழுத்திரும். பாவம்! எங்க போவா காசுக்கு இடுப்பொடிஞ்ச பிள்ள... ஆகையினால பொதுவுல பணம் போட்டுப் பொணம் தூக்கற துன்னு முடிவு பண்ணியிருக்கோம். நீங்க என்ன சொல்றீக."

"பெருசு சொன்னாச் சரிதானப்பா." அவுகவுக சக்திக்கு உட்பட்டு, காலு அரை ஒண்ணுன்னு வந்து விழுந்ததுல இழுத்துக்க பறிச்சுக்கன்னு பத்தே கால்ரூவா சேந்து போச்சு.

"இந்தாங்கப்பா... எம் பங்கு ரெண்டு ரூவா. என்னாயிருந்தாலும் அவ என் பழைய சம்பந்திகாரி யில்லயா?" எழவுக்கு சடையத்தேவர் வந்ததும் இல்லாம ரூவா ரெண்டும் எடுத்து நீட்னதும் பேச்சு மூச்சு இல்லாமப் போச்சு ஊரு.

"தானாடாவிட்டாலும் சதை ஆடும்னு சொல்லுவாகளேப்பா... சும்மாவா?"இப்படிக் குளுந்து பேசுது ஒரு கூட்டம். "சோழியன் குடுமி சும்மா ஆடுமா? என்னமோ சூட்சமம் இருக்கப்பா" இப்படி இழுத்துப் பேசுது இன்னொரு கூட்டம்.

எழவு வீட்டுக்கு விருந்தாடி வந்ததுமாதிரி வெள்ளையுஞ் சொள்ளையுமா ஒரு ஓரமா நிக்கிறான் அப்பன் கூட வந்த கட்டையன். அவன் கூட நிக்கிறான் ஒரு பரட்டைப்பய கண்ணுமட்டும் செவப்பா. அவன் யாருன்னா... பெரியமூக்கி புருசன் துரைச்சாமிக்கு அண்ணன் மகன். கருவாச்சிக்கு ஒண்ணுவிட்ட அண்ணன். வாத்துமாயின்னு பேரு அவனுக்கு. சொக்கத் தேவன்பட்டியில அவன் பங்குக்கு விழுந்த வீட்ட வித்துட்டு அஞ்சாறு வருசத்துக்கு முதல்லயே பச்சக் கோமாச்சி மலைக்குப் போயிட்டான். அங்க அவனுக்குக் கஞ்சா வெவசாயம். அதனால கட்டையனுக்கும் அவனுக்கும் நல்ல ராசி. கட்டையன் அவன் காதுக்குள்ள ஏதோ சொல்லச் சொல்ல, நிறுத்தாமத் தலையாட்டிக்கிட்டேயிருக்கான் வாத்துமாயி.

"யப்பா! இந்தச் சாவு தன் சாவு இல்ல அசம்பாவித மான சாவு. ஆகையினால பொதைக்கப் படாது எரிச்சாகணும். ரெண்டாவது பொணம் புதுப்பொணமில்ல நேத்துப் பொணம். இன்னிக்கி மத்தியானமே எடுத்தாகணும்."

ஒரு ஆளும் மறுத்துப் பேசல ஒப்புக்கிட்டாக.

எத்தன பாடை கட்ன கையோ! ஆரம்பிச்சிட்டான் தோட்டி அவன் வேலைய. ஆறு ஆறரை அடி நீளத்துல ரெண்டு பச்சை மூங்கில் வாங்கிட்டு வந்தான். இரண்டு அடி நீளத்துல ஊடுகுச்சி ஆறு. கொச்சக்கயிறு வச்சு ஏணி மாதிரி இறுக்கிக்கட்டிட்டான். கட்ன மூங்கி மரத்துல பச்சைத் தென்னங்கிடுக வச்சான். அதுமேல பசபசபசன்னு வைக்கோலப் பரப்புனான். தலை மாட்டுல ஒரு கயிறு விட்டான், போற பொணம் போறேன் போறேன்னு தலை யாட்டிட்டே போகாமக் கழுத்துல சேத்துக் கட்டுறதுக்கு. சலவைக்கார வீட்ல ஒரு பழைய சீலய வாங்கி, வைக்கோல் மேல போட்டுப் பொத்திப் பஞ்சு மெத்தையாக்கிட்டான் பாடையை. பாடை கட்டி முடிக்க...

தெரு முனையிலிருந்து அழுகையில கூடி மொது மொதுன்னு வந்து சேந்துட்டாக மொதலக் கம்பட்டி ஆளுக. பிறந்த வீட்டு ஆசாரப்படி பச்ச கொண்டுவந்து, பொணத்துக்குப் பக்கத்துல நட்டிருந்த கொடிக்கள்ளி மேல கோடி சாத்தி அழுதாக. வந்தவுக கட்டிப்புடிச்சு அழுதும் கருவாச்சி அழுகல. நீர்மால முடிஞ்சிருச்சு நேரம் நெருங்கிருச்சு. இப்பவோ பெறகோன்னு மேகம் வேற நெறமாசக்காரி மாதிரி நிக்கிது.

"எடுங்கப்பா எடுங் கப்பா"ன்னு வெளியே ஒரு சத்தம் கேக்கவும், தோட்டி உள்ள ஓடிவந்து "ஆத்தா மேல போத்திக் கொண்டுபோக ஒரு சீல இருக்கா"ன்னு கேட்டான். அது வரைக்கும் கல்லு மாதிரி உக்காந்திருந்த கருவாச்சி, தீ விழுந்த பட்டாசு மாதிரி திடீர்ன்னு வெடிச்சு எந்திரிச்சா. நேத்து மாரடிக்கப் போயிக் கூலியா வாங்கிட்டு வந்த சீலைய ஆத்தா மேல போட்டு "எம் மொதச் சம்பாத்தியமே உன் கடைசிச் சீலயாப் போச்சே ஆத்தா"ன்னு அழுதா பாருங்க... வந்திருந்த சனத்துக்கெல்லாம் நெஞ்சுக்கறி வெந்து போச்சு.

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Fri Aug 06, 2010 6:40 am

பொணந்தூக்க வந்த இரண்டு எளந்தாரிப் பயல்களத் தூக்கித் துண்டா எறிஞ்சுட்டு, ஆத்தா காலடியில மண்டிபோட்டு உக்காந்து அவ திரேகத்தையே வச்ச கண்ணு வாங்காமப் பாக்குறா கருவாச்சி.

நரம்பு தெரியப் பிரம்பு மாதிரி சுருங்கிக் கெடக்கு எனக்குக் கைகால் புடிச்சுவிட்ட கையி... நட்டுவச்ச குச்சியா வெறைச்சுப்போய் நிக்கிது காடுவெளி யெல்லாம் கல்லுக்குத்தி முள்ளுத்தச்ச காலு... ஈ உக்காந்து உக்காந்து ஈரப்பசையில்லாமக் கெடக்கு எனக்கு முத்தங் கொடுத்த வாயி... புழிஞ்சு காயப் போட்ட தோல் மாதிரி தொங்கிக் கெடக்கு நான் முட்டி முட்டிப் பால்குடிச்ச மொல... ஆனா, எங்கடி ஆத்தா ஓடி ஒளிஞ்சு போச்சு கருவாச்சின்னு என்னிய வாய் நெறையக் கூப்பிட்ட சொல்லு?

ரெண்டு கையாலயும் தன் மூஞ்சியில தானே சப்புச்சப்புன்னு அறஞ்சு அறஞ்சு அழுகிறா கருமாயப்பட்ட கருவாச்சி.

அவ அழுது ஓயட்டும்னு கொஞ்சம் ஒதுங்கி நிக்கிறாக, பொணம் தூக்க வந்த ஆளுக.

"போகாத ஆத்தா போகாத. புத்தியில்லாதவ நானு பொழைக்கத் தெரியாத சிறுக்கி. ஒன் சுண்டு வெரலப் புடிச்சே சுத்திவந்தவ. இப்பப் பொழச்சுப் பாருடின்னு சொல்லி, என்னிய ஒத்தையில விட்டுட்டுப் போறியே... ஒனக்கே இது நல்லாருக்கா? அப்பன் இல்லாமப் பொழைக்கிறது எப்படின்னு சொல்லிக் குடுத்தியே... ஆத்தா இல்லாமப் பொழைக்கிறது எப்படின்னு சொல்லிக் குடுத்தியா? நீ போயிட்டா எனக்கு நாதியிருக்கா? ஒன்னியத் தூக்கவிடமாட்டேன் தூக்கவிட மாட்டேன்."

"ஏலே! பொட்டச்சி அப்படித்தான் பொலம்புவா, ஆத்தாங்கிறதுக்காக உள்ளயே வச்சுப் பொணத்த ஊறுகாயா போட முடியும்? தூக்கிட்டு வாங்கடா."

வெளியயிருந்து பெருசுக வெரசு காட்டவும், நாற்காலியோட பொணத்த உச்சுனாப்புல தூக்கிட்டு ஓடிவந்தாங்க ரெண்டு எளந்தாரிப்பயக.

தரையை விட்டு ஆத்தாளத் தலைக்கு மேல தூக்கினவுடனே "யாத்தே"ன்னு அலறித் தரையில விழுந்து தம்பாயமிழந்து போனா கருவாச்சி.

[You must be registered and logged in to see this image.]

கொள்ளிக்கொடம் ஒடைக்க ஊர் மந்தை வரைக்கும் வந்தாகணும் அவ. மூஞ்சியில தண்ணி தெளிச்சு, "புள்ளத்தாச்சிடி... பாத்து"ன்னு பொத்துனாப்புல எழுப்பித் தாங்கிப் புடிச்சுக் கூடவே போறாக பொம்பளைக.

அன்னைக்குச் சனிக் கெழமை. சனிப் பொணம் தனியாப் போகாதாம். ஒரு கோழிக் குஞ்ச அடிச்சுப் பாடையில கட்டித் தொங்கவிட்டாக. தகரம் கொன்டுபுடுச்சு பெரியமூக்கிய சாஸ்திரம் கொன்டுபுடிச்சு கோழிக்குஞ்ச.

பெருங்கொண்ட கூட்டம் பின்னாலயே போகுது. முச்சந்தியில நிறுத்துனாக பாடைய. இடவலமா மூணு சுத்துச் சுத்துனாக எறக்கி வச்சாக.

"கொடம் ஒடைக்கிற பிள்ளையக் கூப்பிடுங்கப்பா."

தலைய விரிச்சுப்போட்டு அழுதுக் கிட்டே எடது தோள்ல கொடம் சுமந்து இடவலமாப் பொணம் சுத்தி வர்றா கருவாச்சி. ஒவ்வொரு சுத்து முடிய அருவாமூக்குல தோட்டி ஒரு தொளபோட, தன்பங்குக்குப் பெருங்கண்ணீர் வடிக்குது மண்கொடம். மூணாவது சுத்து முடிய "போடு... போடு...போட்ரு"ன்னு அஞ்சாரு பேரு கத்த, ஆத்தா கால்மாட்ல அவ கொடம் ஒடைக்க, அவ பொழைப்பு மாதிரியே மண்கொடமும் செதறிச் செதறிச் சில்லுசில்லாக "திரும்பிப் பாக்காம வந்திரு"ன்னு சொல்லிக்கிட்டே அவ தலையில ஒரு கோடிச் சேலயப் போட்டுக் கோழிய அமுக்குற மாதிரி அமுக்கிக் கூட்டிக்கிட்டே போயிட்டாக கூடவந்த பொம்பளையாளுக.

பாடையத் தூக்கி அதேமாதிரி மூணுசுத்து எதிர்த்திசையில சுத்தி, மந்தையிலருந்து சுடுகாட்டுப் பாதையில கூடிட்டாக எல்லாரும்.

கொட்டுக்காரன் முன்னுக்கக் கொட்டடிச்சுப் போக, மாட்டுச் செவந்தியையும் அரளிப்பூவையும் பூக்காரன் ரெண்டு பக்கம் பிச்சு ஒதறி வர கடுகும் பொரியும் அள்ளித் தெளிச்சுக்கிட்டே தோட்டி பின்னுக்கத் தொடர்ந்துவர போகுது பெரியமூக்கி பொணம் கடைசிக்காடு தேடி. கூட்டத்துல கட்டையன், வாத்து மாயி ரெண்டு பேரும் ஒரு எடத்துலயும் வெலகல ஒண்ணாவே போறாக. அவன் பேச இவன் தலையாட்ட... பின்னால கொண்ணவாயன் கூடவே வாராங்கிற கூருபாடு கூட இல்லாமக் குசுகுசுன்னு பேசுறாக.

"ஒனக்கு வாழ்வு வந்திருச்சுடா வாத்துமாயி. குண்டக்க மண்டக்க எதையாவது பண்ணிக் குடியக் கெடுத்திராத. துரைச்சாமித்தேவர் வகையறாவுக்கே நீ ஒருத்தன்தான் ஆம்பளை வாரிசு. மொட்ட போட்டுப் பெரியமூக்கிக்கு நீ கொள்ளிமட்டும் வச்சிரு. மிச்சத்த நாங்க பாத்துக்கிர்றோம். கொள்ளிவச்ச ஆளுக்குத்தான் சொத்து சொந்தம். அப்புறம் பெரியமூக்கி வீடு கருவாச்சிக்கில்ல ஒனக்கு. இன்னிக்கு ஆத்தா ஊருக்கு வடக்க வந்துட்டா. நாளைக்கு மக தெக்கபோக வேண்டியது தான் மொதலக்கம் பட்டிக்கு. என்னடா ஒழுங்கா மொட்டை யடிப்பியா?"

"வீடு வருதில்ல மாமா மசுரு போனாப் போயிட்டுப்போகுது. மொளைக்க மொளைக்க அடிக்கச் சொன்னாலும் அடிக்கிறேன்."

இதக் கேட்டதும் புத்தியில பாம்பு கொத்திருச்சு கொண்ணவாயனுக்கு. பொணத்த முன்னுக்க விட்டுட்டு அவன் பின்னுக்கு வந்துட்டான். சுடுகாட்டுக்கு நடக்கமாட்டாம இழவு வீட்லயே உக்காந்திருந்த உருமாப் பெருமாத்தேவரு கிட்டப் போயி ஒப்பிக்கவும், அவர் பதறிப்போனாரு. ஆத்தாளுக்கு மோட்ச வெளக்குப் போட்டு அழுதுக்கிட்டிருந்த கருவாச்சிய எழுப்பி, அவ காதுல ரெண்டு கோளாறு சொல்லி, "போ தாயி போ!"ன்னு அஞ்சாரு பொம்பளை களையும் சேத்து அனுப்பிவிட்டாரு. சுடுகாட்டுல வெறகு பரப்பி அதுமேல எருவடுக்கி எருமேல பொணந்தூக்கி வச்சு வாய்க்கரிசியும் போட்டு முடிச்சு வைக்கோலப் போட்டு மூடி சாந்து கொழைச்சு மூடுறதுக்கு முன்னால தோட்டி கேக்குறான்... "அய்யா! கொள்ளி வைக்கப் போறது யாரு?"

சாவுன்னு வந்துட்டா அய்யோ பாவமே குய்யோ முறையே!ன்னு அழுக ஆரம்பிச்சிருது ஊரு. ஊரு ஒலகம் பாக்குறது சாவோட ஒரு மூஞ்சிய மட்டும்தான் ஆனா அஞ்சாறு மூஞ்சி இருக்கு சாவுக்கு.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Fri Aug 06, 2010 6:50 am

[You must be registered and logged in to see this image.]சில சாவுகள்ல குடும்பமே ஓஞ்சு உக்காந்துபோகும் சில சாவுகள்ல உக்காந்த குடும்பம் எந்திரிச்சிரும். சில வீடுகள்ல சாவுங்கிறது பிரச்னைய உண்டுபண்ணிட்டு ஓடிப்போயிரும் சில வீடுகள்ல சாவு பிரச்னைகளை யெல்லாம் ஓச்சிட்டு சுபம்னு சொல்லிட்டுப் போயிரும். சில வீடுகள்ல சாவுங்கிறது நிர்க்கதி சில வீடுகள்ல சாவுங்கிறது நிம்மதி. சில வீடுகள்ல சாவுங்கிறது செலவு சில வீடுகள்ல வரவு. வாழ்க்கையில் திருப்பம்கிற சக்கரங்களச் சுத்திவிட்டுட்டுப் போறது சாவுதான்.

பெரியமூக்கி சாவு, கருவாச்சியோட பொழப்பு மனசு ரெண்டையும் பொரட்டிப் போட்டுட்டுப் போயிருச்சு. ஆத்தாளோட சேந்து செத்துப்போனா என்னன்னு மருகினது மொத நாளு ஆத்தா இம்புட்டுச் சீக்கிரம் செத்திருக்க வேணா மின்னு உருகுனது ரெண்டாம் நாளு ஆத்தாளுக்கும் சேத்துப் பொழைக்கணு மேன்னு வைராக்கியப் பட்டது மூணாம் நாளு.

கண்ணீரு வருத்தமா ஒறைஞ்சு, வருத்தம் வைராக்கியமா முத்துனாத்தான இத்துப்போன மனசு எந்திரிச்சு உக்காரும்?

எந்திரிச்சு உக்காந்துட்டா கருவாச்சி. மாசம் அஞ்சு. அரைப்பிள்ள இருக்கு வகுத்துல முழு வாழ்க்கை இருக்கு முன்னுக்க. முதுகச் சுவத்துல போட்டு, ஒரு காலத் தரையில நீட்டி, ஒரு கால ஊன்டி மடக்கி உக்காந்திருக்கா கருவாச்சி. ஊர்ப் பெருசுக... மொதலக்கம்பட்டிச் சொந்தங்களெல்லாம் கோழிக்கு அள்ளி எறிஞ்ச சோளம் மாதிரி அங்கங்க உக்காந் திருக்காக.

வெத்தல எச்சியத் துப்பிட்டு, துண்ட எடுத்து வாயத் தொடச்சுக்கிட்டு உருமாப் பெருமாத் தேவரு ஆரம்பிக்கிறாரு தொண்டையச் செருமிக்கிட்டு, "யம்மா கருவாச்சி! நீயும் என் மகதான் தாயி. கண்ணுக்கு எட்ன மட்டுக்கும் ஆதரவு இல்லையேன்னு அலபாஞ்சு நிக்காத. என் வீட்ல வந்து இரு. என் கண்ணுள்ள காலம் வரைக்கும் கஞ்சி ஊத்துறேன். ஒரு காலத்துல ஒங்கப்பன் ஓடி வந்து செஞ்ச உதவிக்கு நான் கடமைப்பட்டிருக்கேன். கன மழை பேஞ்சுபோச்சு ஒரு ஆடி மாசத்துல. பொட்டப் பிள்ளைகளாய் பெத்துக் குடுத்த எம் பொம்பளையாளு வேற செத்துப்போனா. ஊரே ஓடி ஓடி உழுது வெதைக்குது நான் கால்ல கட்டி வந்து காய்ச்சலோட படுத்திருக்கேன். அன்னைக்கித் தன் காட்டை விட்டுட்டு என் காட்டை உழுது குடுத்தவனம்மா ஓந் தகப்பன். வீண்போகுமா தகப்பன் செஞ்ச தர்மம்? வா... வந்து என் வீட்ல இரு". அவ ஒண்ணும் பேசல. கண்ணத் தொடச்ச முந்தானைய வாயில சுருட்டிவச்சுத் தணிஞ்சு தரை பாத்திருந்தா.

இப்ப சுப்பஞ்செட்டியார் பேசுறாரு: "எனக்குப் பொட்டப் புள்ளைக ரெண்டு இல்ல, மூணுன்னு நெனச்சுக்கிறேன் தாயி. இது ஒனக்குத் தாய் வீடு என் வீடு தகப்பன் வீடுன்னு நெனச்சுக்க. இப்பச் சொல்றேன்... எல்லாரும் கேட்டுக்குங்க, என் மூத்த மக கழுத்துல கெடக்கே மூணு பவுன் சங்கிலி... அது என் தங்கச்சி பெரியமூக்கி மொறக்கடனாக் குடுத்தது. அந்தச் சங்கிலி கழுத்துல ஏறலன்னா எம் மக கழுத்துல தாலி ஏறியிருக்காது. கருவாச்சி கல்யாணத்துக்கு வந்து பெரியமூக்கி சங்கிலியத் திருப்பிக் கேட்டா. சங்கிலி எறங்கினா அவ கழுத்துல தாலியும் எறங்கிரும் தாயின்னு கையெடுத்துக் கும்புட்டேன். பொழைச்சுக் கெடந்தா குடுங்கன்னு போயிட்டா. அந்தத் தர்மசீலி பெத்த மகள நாங்க தவிக்கவிட்ருவோமா. என் நெஞ்சுக்கூட்ல உசுரு இருக்கவரைக்கும் நெல்லுச் சோறாப் போடறேன்... வாம்மா."

இதுக்கும் அவ ஒண்ணும் பேசல. ஆத்தா பெருமை சொல்லவும் கடகடகடன்னு கொட்டுது கண்ணீரு.

அதுக்கு மேல பொறுக்க முடியல மொதலக்கம்பட்டி ஆளுகளுக்கு. "ஆளாளுக்கு ஒண்ணு சொன்னா எப்பிடி? நடக்கற கதையைப் பேசுங்கப்பா. தாய் வழிச் சொந்தம்னு நாங்க குத்துக்கல்லு மாதிரி குத்தவச்சிருக்க, அவ ஒங்க வீட்ல வந்து இருந்தா ஊர் ஒப்புமா? ஒண்ணு அவ இதே வீட்ல இருந்து பொழைக்கணும். இல்ல எங்க வீட்ல வந்து இருக்கணும். அதான் மொற" மொதலக்கம்பட்டி ஆளுக கோபமாச் சொன்னாலும் நியாயமா இருந்துச்சு.

முந்தானையில ஒரு முடிச்சுப் போடறது அவுக்கிறது. இன்னொரு முடிச்சுப் போடறது அவுக்கிறது. இப்படி முடிச்சுப் போடுறதும் அவுக்கிறதுமா இருந்த கருவாச்சி, ஒரு முடிவுக்கு
வந்துட்டா.

"ஒரு தகப்பனும் ஒரு தாயும் செத்துப்போனதுக்கு நீங்க இத்தன தகப்பனும் தாயுமா எனக்கு இருக்கீக. நீங்க தெம்புதெறம் சொல்லச் சொல்ல எனக்கு அழுகையா வருது. ஆத்தா சொல்லுவா... பறக்கப் பல காடு இருக்க ஒரு கூடுன்னு. இந்த வீடுதான் அந்தக் கூடு. இந்த வீட்டவிட்டு எப்பிடி நான் வெளி யேற முடியும்? ஆத்தா வாசன இந்த வீடெல்லாம் நெறைஞ்சு நிக்கிது. எங்க தொட்டாலும் அவ சத்தமா வருது. இந்த வீடு இருக்கிற வரைக்கும் ஆத்தா சாகல. அவ இந்த வீட்டுக்குள்ள இருக்கா. அவகூட நான் இருக்கப் போறேன்.

தவிரவும் நான் இந்த வீட்டவிட்டு வெளியேறிட்டேன்னு வச்சுக்குங்க... கறையான் கட்ன வீட்டுல கருநாகம் புகுந்திரும். வால உள்ள சுருட்டிவச்சு வாசல்ல நின்னு படமெடுக்கும். வீட்டக் காப்பாத்த நான் வீட்லதான் இருந்தாகணும். ஓட்டப் பந்தயம் மாதிரி இருக்கு பொழப்பு. ஓடிப் பாக்குறேன். அங்கங்க விழுந்தா ஆளும்பேருமா வந்து கை தூக்கிவிடுங்க" கும்புட்டு அழுதா பாவம் குமுறிக் குமுறி.

வந்தவுக போனவுக போடுபணம் போட்டுப் போனத எண்ணிப் பாத்தா, ஒரு இருபத்தி நாலே கால் தேறுச்சு. ரெண்டு மூணு மாசத்துக்கு வேணுங்கிற தானியங்களும் உப்புப் புளி மொளகாயும் வாங்கி உள்வீட்டுல வச்சிட்டு, மொதலக்கம் பட்டிச் சொந்தமும் போயிருச்சு.

வைத்தியச்சியும் முக்குறுணியும் பவளமும் ஆள் மாத்தி ஆள் வந்து தொணைக்குப் படுத்துக்கிட்டாக.

அஞ்சு முடிஞ்சு மாசம் ஆறு. இப்பத்தானய்யா பொம்பளைக்கு வகுறு தெரியுது. அஞ்சு மாசம் வரைக்கும் பூசுனாப்புல இருந்த வகுறு பூத்து எந்திரிச்சு நிக்கிது. அவ இழுத்து மறைச்சு சீமையில இல்லாத சீலக்கட்டு கட்டுனாலும் நெறஞ்ச வகுறு தெரிஞ்சுபோகுது.

பசியாப் பசிக்குது கருவாச்சிக்கு. மண்ணும் சாம்பலுமாத் தின்னு தீத்த வாயி இப்ப சகலமும் கேக்குது. கேப்பக் கூழு சோளக் கூழு புளிச்ச தண்ணியில கெடந்த பழைய கஞ்சி எது கெடைச்சாலும் அள்ளி அள்ளித் திங்க ஆசையா இருக்கு. நெல்லுக் கஞ்சி காய்ச்சி நெய்மீன் கருவாடு வறுத்துக் குடுத்தா வைத்தியச்சி.

"இதெல்லாம் இருக்கட்டு மாத்தா. ஊசிப்போன பருப்புச் சாறு இருந்தா ஒரு கிண்ணம் ஊத்திக் கொண்டா"னு வெக்கப் படாமக் கேட்டுச் சின்னதா ஒரு சிரிப்பும் சிரிச்சுக்கிறா. வயித்துச் சுவத்துக்குள்ள புள்ள முணுமுணுங்குது. உள்ள எறும்பு ஊர்ற மாதிரி சொகஞ்சொகமா ஒரு தொந்தரவு தெரியுது.

மூங்கிக் குச்சி மாதிரி நெடுநெடுன்னு இருந்த பொம்பள தூருகட்ன தென்னமரமாக் கனத்துப்போனா. வீட்ல சும்மா இருப்பாளா? அப்பப்ப வேல வெட்டிக்கும் போயிருக்கிறா.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Fri Aug 06, 2010 6:54 am

[You must be registered and logged in to see this image.]
ஆறு முடிஞ்சு மாசம் ஏழு.

"ஏ பெரியாத்தா! இங்க ஓடியா... ஓடியா... ஓடியா... எம் பிள்ள என் வகுத்துக்குள்ள சிலம்பு சுத்துது என்னான்னு கேளு."

மீன் குழம்புக்குக் கூட்டிப்போட்டு அடுப்புல வெறகு தள்ளிக்கிட்டிருந்த வைத்தியச்சி விசுக்குன்னு ஓடிவந்தா.

"தொட்டுப் பாரு... தொட்டுப் பாரு..." தொட்டுப் பாத்தா வகுத்துக்குள்ள பிள்ள ஒரு பக்கம் ஒதறுது ஒரு பக்கம் முண்டுது.

"ஒதர்ற பக்கம் காலு... முண்டுற பக்கம் தல... ஏண்டியாத்தா! வகுத்துல புலிக்குட்டி வளக்குறியா? இந்தத் துள்ளு துள்ளுது."

"ஒன்னியப் பாத்துத் தானத்தா இந்த ஒத ஒதைக்குது. நீதான அழிக்கப்பாத்தவ."

"போடீய்... ஏ போடீ..." செல்லமா அவ கொமட்டுல ஒரு குத்துக் குத்துனவ, "தாய் வகுத்துல பசை கொறைஞ்சாத்தானடி புள்ள முண்டும். அழுத பிள்ளைக்குப் பாலு முண்டுன பிள்ளைக்குச் சோறு இந்தா! இதைத் திண்டுக்கிட்டே இரு"ன்னு அவிச்ச கடலைய அள்ளி அவ மடியில போட்டுட்டு, அடுப்பாங்கரைக்குப் போயிட்டா.

பிள்ளத்தாய்ச்சி வகுறு அரிப்பா அரிக்குது கருவாச்சிக்கு. வகுத்துல தடிப்புத் தடிப்பா விழுந்திருச்சு, பத்து வெரல் நகத்துலயும் பிறாண்டிப் பிறாண்டி. அப்பப்ப சீப்ப எடுத்து வலிக்காம வருடி வருடிக் குடுத்துக்கிட்டேயிருக்கா வகுத்துல. முக்குறுணி சொல்றா: "வகுத்துல இருக்கிற பிள்ளைக்கு மயிர்க்கட்டு நெறையா இருந்தாத்தான் பிள்ளத்தாச்சிக்கு அரிப்பெடுக்குமடி மகளே. பொழுதுக்கும் சொரண்டாத புண்ணாப் போயிரும் வகுறு."

கடைசிவரைக்கும் ஓடியாடி வேலை செய்யிற பொம்பளைக்குப் பேறுகாலம் லேசு. படுத்தே கெடக்கிறவளுக்குக் கடுசு.

ஏழு மாசத்துலயும் கருவாச்சி களகண்ணிக்குப் போறா. கொழையறுக்கப் போறா. வேணுங்கிற பொம்பளைகளுக்கு ஒலக்க புடிச்சுச் சோளம் குத்திக் குடுத்து அரிசியும் தவிடும் வாங்கி வீடு வந்து சேர்றா. தவிட்ட வறுத்து, வெல்லம் போட்டு இடிச்சு உருண்ட புடிச்சு,கொண்ண வாயனுக்கு ரெண்டு குடுத்துட்டுத் தானும் ரெண்டு தின்டு தண்ணி குடிச்சுப் படுத்துக் கிர்றா.

படுக்கிற பக்குவம் சொல்லிக்குடுத்தா புள்ளத்தாய்ச்சிக்கு வைத்தியச்சி. "மகளே! மல்லாக்கப் படுத்திராத. ஓரமா வகுத்த ஒதுங்கப் போட்டு ஒருக்கழிச்சுப் படு. பெரண்டு படுக்கணும்னு வச்சுக்க ஒரு கைய ஊன்டி எந்திரி ஒக்காரு. ஒரு பூமாலய கழட்டிப் போடற மாதிரி பொத்துனாப்புல வயித்தத் தூக்கி மறுபக்கம் போட்டு மறுபடியும் ஒருக்கழிச்சுப் படுத்துக்க. அப்படியில்லாம மல்லாக்கப் படுத்து கடக்கு மடக்குன்னு புரண்டேன்னு வச்சுக்க... வயித்துல இருக்கிற பிள்ள நெரிஞ்சாலும் நெரிஞ்சுபோயிரும்."

தாய்தகப்பன் இல்லாத பிள்ளைத்தாச்சியாப் போனதால தயிர்ச் சோறும் புளிச் சோறும் தந்து ஊரே அவள ஊட்டி வளக்குது.

ஏழு முடிஞ்சு மாசம் எட்டு.

இப்ப ஊன்டி உக்கார முடியுது லேசுல எந்திரிக்க முடியல. கீழ கெடந்த வகுறு ஏறி நெஞ்சுல முட்டி நிக்குது. அவ செவக்கிக் கட்டாமச் சீல வெலகி உக்காந்திருந்தா, வகுத்துக்குள்ள பிள்ள முண்டி வெளையாடுறது எதுக்க இருக்க ஆளுக்கு அலை அலையாத் தெரியுது வகுத்துல ஒரு ஊமப் படம் ஓடுது. வைத்தியச்சிக்கும் முக்குறுணிக்கும் ஒரு கவல வந்திருச்சு.

"ஏண்டியாத்தா! இப்படி சாலு மாதிரி வகுறுவச்சு உக்காந்திருக்காளே... சுகப் பேறுகாலம் ஆகுமா இவளுக்கு. எட்டு ஒம்பது மாசம் வரைக்கும் புருசன் சேந்து படுத்துச் செல்ல விளையாட்டு வெளையாடிக்கிட் டேயிருந்தா புள்ள வெளிய வார வழி பூப்போல மலந்து கெடக்கும். மொழுக்குன்னு புள்ள கடக்குன்னு வந்திரும். இவ கதவு அடைச்சது அடைச்சதுதான் அதுக்குப் பெறகு தெறக்கவே இல்லையே."

"ஏ ரெங்கம்மா! அது ஒருவழிக்கு நல்லதுன்னு நெனச்சுக்க. அந்தக் கட்டையன் இப்ப இவகூட இருந்தான்னு வச்சுக்க. கருத்தக்கண்ணி கதையாகிப் போகும் கருவாச்சி கத."

"எந்தக் கருத்தக்கண்ணி..?"

"நம்ம முத்தணம்பட்டி கருத்தக்கண்ணி. அவளுக்கு எட்டு மாசம் முடிஞ்சு ஒம்போது பெறக்க, அவ புருசன் ஊமச்சாமி சாராயம் குடிச்சுட்டுச் சாமியாடிட்டே வந்து எக்குத்தப்பாப் புடிச்சு அமுக்கி எடக்குமடக்காப் பண்ணப் போக, வகுத்துல கெடந்த பிள்ள குபுக்குன்னு நெஞ்சில ஏறி சம்மணங்கால் போட்டு உக்காந்திருச்சு. மூச்சுப் போயி செத்துப் போனாளா இல்லையா?

சுடுகாட்டுல தோட்டியும் சவரக்காரனும் சேந்துதான் நெஞ்சக் கீறிப் பிள்ளையை எடுத்து, தாய் பிள்ளையை ஒண்ணுமேல ஒண்ணு வச்சு எரிச்சாங்க. கட்டையன் இன்னிக்கிக் கூடயிருந்தா அந்தக் கூத்தாயிப்போயிரும் கருவாச்சிக்கு. புண்ணியம் பண்ணுனவ பொழைச்சா."

இன்னும் கருவாச்சிதான் வாசத் தொளிக்கிறா. தனியாப் போயி தண்ணிப்பான சொமந்து வாரா. அவளாக் கஞ்சி காச்சி கொண்ண வாயனுக்கும் தூக்குச் சட்டியில குடுத்துவிடுறா. அத்தக் கூலிக்கும் அப்பப்பப் போயிட்டு வர்றா.

எட்டு முடிஞ்சு மாசம் ஒம்போது.

பிள்ள பெறப்போற ஒரு பிள்ளத்தாச்சி, பாவாட கட்டத் தெரியாத பள்ளிக்கூடத்துப் பிள்ள மாதிரி கேக்குறா. "சொல்லு ஆத்தா. எனக்கு ஆம்பளப் பிள்ள பொறக்குமா? பொம்பளப் புள்ள பொறக்குமா?"

"எந்தப் பிள்ள பெறந்தாலும் ஒன் சொந்தப் பிள்ளதான். ஆனாலும் சொல்றேன்... ஒனக்கு ஆம்பளப் பிள்ளதான் பொறக்கும்."

"எதவச்சுச் சொல்ற?"

"உக்காந்த ஒரு பிள்ளத்தாச்சி எப்பவும் வலது கைய ஊன்டி எந்திரிச்சான்னா அவளுக்கு ஆம்பளப் புள்ள. எடது கைய ஊன்டி எந்திரிச் சான்னா பொம்பளைப் புள்ள. நான் பாத்த அளவுல நீ வலது கைய ஊன்டித்தான் எந்திரிக்கிறவ. சக்கம்மா மேல சத்தியமாச் சொல்றேன், கருவாச்சி கருவுல சொமக்கிறது ஆம்பளப் புள்ளதான்டி அம்மா."

ஏழே நாள்ல நெஞ்சுல முட்டிநின்ன வயிறு ரெண்டு பக்கமும் சன்னஞ்சன்னமாச் சரிஞ்சுபோச்சு தொப்புள் மலந்துபோச்சு. பாத்தவுடன சொல்லிட்டாளுக பெரிய பொம்பளைக ரெண்டு பேரும். "ஒரு வாரமோ பத்து நாளோ பெத்துரு வடியம்மா பிள்ள. அந்த அங்காள ஈஸ்வரியும் ஆத்தா பெரிய மூக்கியும் ஓங்கூடவே இருப்பாக. கொற வராது."

பங்குனி கடைசி.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Fri Aug 06, 2010 6:59 am

வரப்போற சித்திரை வறுத்தெடுக் கிறதுக்கு முன்னால பூமி குளிர ஒரு போடு போட்டுட்டுப் போயிடறேன்னு கூடி நிக்கிது கோடை மேகம். பிள்ள பெற இன்னும் பத்து நாள் இருக்குங்கிற நம்பிக்கையில, அகமலையில விறகெடுத்துத் தலையில சொமந்து வறட்டாறு தாண்டி வந்துக்கிட்டிருக்கா நெறமாசக்காரி. எங்கிட்டிருந் தாலும் ஒரு சாரக்காத்து வந்து லேசா ஒரு தட்டுத் தட்டினா ஒடைஞ்சு ஒழுகிரும் மேகம்.

அதுக்கான அறிகுறி கண்டதும் ஓடி ஒளிஞ்சுபோச்சு ஆடுமாடு மேய்க்கிற கூட்டம். கண்ணுக்கெட்டின மட்டும் காக்கா, குருவி, கழுகு தவிர எதும் தட்டுப்படல. மேல ஆகாயம் கீழ பூமி. தலையில வெறகு வகுத்துல பிள்ள.

இடிக்கப் போறேங்குது மேகம். அடிக்கப் போறேங்குது மழை. கிழிச்சும் தைப்பேன் தச்சும் கிழிப்பேன்னு கிறுக்குப்புடிச்சு அலையுது மின்னலு.

சூராம் புதருக்குள்ள ஒரு சூறாவளி சுத்தி, வேரோட புடுங்க ஒரு இத்துப்போன மரமிருக்கான்னு விசில் அடிச்சு விசாரிச்சுக்கிட்டே வருது ஒரு கடுங்காத்து. ஒத்தையில நிக்கிறா கருவாச்சி, அத்துவானக் காட்டுல.

என்னத்தச் சொல்ல..?
எடுத்திருச்சய்யா இடுப்பு வலி!
காடு, நடுக்காடு.
காலம், சாயங்காலம்.

ஆகாயத்துல சூரியனையுங் காணோம் அக்கம்பக்கம் ஆளுகளையும் காணோம். என்ன பண்ணுவா பாவம் இடுப்பு வலி எடுத்தவ?

[You must be registered and logged in to see this image.]யாத்தே! என்னியக் காப்பாத்துங்கன்னு உசுர் கிழிய ஓங்கிக் கத்துனாலும் அந்த ஓசை கேக்குற ஒலி வட்டத்துக்குள்ள உசுருக எதும் இல்ல. வெலாப்பக்கம் மின்னல் சுளீர் சுளீர்னு வெட்டி வெட்டிச் சுண்டுது. இடுப்புக்குள்ள யாரோ குடியிருந்துக் கிட்டே கோடாலி எடுத்து வெட்டுற மாதிரியிருக்கு.

தடால்னு தூக்கித் தரையில எறிஞ்சா வெறக. பிள்ள பெறக்க ஒரு வாரம் பத்து நாள் ஆகும்னு கெழவிக சொன்னது தப்பாப்போச்சே. இந்த வலி பொய் வலியாத் தெரிய லையே... உசுரக் கிண்டிக் கெழங் கெடுக்கிற வலியாத் தெரியுதே!

"கடவுளே என்னியக் காப்பாத்திரு. தாயும் பிள்ளையும் தனித்தனின்னு ஆக்கிரு."

எங்க போயி விழுகிறது?
நிக்கிற பூமி நெருஞ்சிக் காடு.

கெழக்க வறட்டாறு மேற்க அகமலை வடக்க இண்டம்புதர்க்காடு தெக்க ஒரு கெணத்து மேடு. அங்க தெரியுது ஒரு காவக் குடிசை. ஒரு முந்நூறு அடி தூரந்தான் இருக்கும்... முந்நூறு மைலாத் தெரியுது இடுப்புவலிக்காரிக்கு. இடுப்புல கைய வச்சு அழுத்தி, வகுத்துல சிலுவை சொமந்து, ஒரு பக்கமா ஒருக்களிச்சு ஓரஞ்சாஞ்சு, நெருஞ்சி முள்ளு வழி நடந்து காவக் குடிசைக்குள்ள போயி விழுந்துபோனா.

சின்னக் குடிசை, குட்டையன்கூட அதுல குனிஞ்சுதான் போகணும். அகத்திக் கம்புகள ஊடுமரமா வச்சுத் தென்னங்கீத்துகள்ல கட்டிவச்ச குடிசை. சாமை வைக்கோலப் பரப்பியிருக்கு தரையில இத்த சாக்கு ஒண்ணு விரிச்சுக்கெடக்கு அதுக்கு மேல. மறுகு கருது அறுத்துவச்ச கம்பங்கருது மூடைக ரெண்டு ஓரத்துல. பச்சைப் பிள்ளக்காரி பிள்ளைய அட்டத்துல போட்டுப்படுத்திருக்க மாதிரி கம்பங்கருதுச் சாக்குகளுக்கு அங்கிட்டு ஒண்ணும் இங்கிட்டு ஒண்ணுமா ரெண்டு பூசணிக்கா. குடிசைக் கூரைக்கு மத்தியில கயிறு கட்டிச் சுக்காக் காஞ்சு தொங்குது சொரக்குடுக்க ஒண்ணு. இடுப்பப் புடிச்சு யப்பே! யாத்தேன்னு கத்திக் கதறிச் சாஞ்சு விழுந்து, சரிஞ்சு கெடக்கா கம்பங்கருது மூட்டையில கருவாச்சி.

"கடவுளே! ஒத்தையில பிள்ள பெறுன்னு என் நெத்தியில எழுதிட்டியா?"

இந்த ஒலகத்துல மொதல் பிள்ள பெத்த பொம்பளைக்கு எவ பிரசவம் பாத்தது? அப்பிடி ஆகிப்போச்சா இந்தக் கருவாச்சி கத?

முண்டித் தவிக்குது பிள்ள முட்டித் தெறிக்குது வலி. "இந்தப் பொழப்புக்குச் செத்தே போகலாம் போலிருக்கே!" பேறுகால வலியில துடிக்கிற எல்லாப் பொம்பளைகளும் ஒரு தடவையாவது போயிட்டுவார முடிவுக்கு அவளும் போயிட்டு வந்துட்டா.

"முன்னப்பின்னப் பிள்ள பெத்தவஇல்லையே... யாத்தே நான் என்ன பண்ணுவேன்? ஆளுக யாராச்சும் கூட இருந்தா நாம மல்லாக்கக் கெடக்கலாம் வேலைய அவுக பாப்பாக. இப்ப நானேதான் பிள்ளத்தாச்சி நானேதான் மருத்துவச்சி. மல்லாக்கக் கெடந்து எடக்குமடக்காகிப் போனா எந்திரிக்க முடியுமா?"

அனத்திக்கிட்டே ஒரு கையத் தரையிலஊன்டி ஒருக்களிச்சு எந்திரிச்சா. சரசரசரன்னு சீலயத் தெரைச்சுத் தொடைக்கு மேலே சுருட்டி இடுப்புக்கு மேல ஏத்திவிட்டா. பல்லக் கடிச்சு முனகிக்கிட்டே முன்னுக்க சாக்க இழுத்துப் போட்டு அதுமேல முட்டிக்கால் போட்டா. ரெண்டு பக்கமும் ரெண்டு கையத் தரையில அழுத்தி ஊன்டிக்கிட்டு ஆனமட்டும்தொடை ரெண்டையும் அகலப்படுத்திக்கிட்டா. தலைய முன்னுக்க இழுத்து லேசாக் குனிஞ்சு

"ஏலே! கடைசியில செயிச்சது யாரு? கருவாச்சி தான! அத்துவிட்டாக அழிச்சாட்டியம் பண்ணியும் பாத்தாக, நேத்து காட்ல பொதையலெடுத்த மாதிரி கையில பிள்ளையோட வந்துட்டாளா இல்லையா?

ஆதியிலேயே அப்பன் இல்ல, இப்ப ஆத்தாளுமில்ல. உள்ளங்கையில அடுப்புக் கூட்டி ஒருத்தியாக் கஞ்சி காச்சிற மாதிரி, ஒத்தையில பிள்ள பெத்து ஒண்ணும் நடக்காத மாதிரி நடந்து வந்துட்டாளப்பா. கட்டையன் கட்டின தாலி கழுத்துல கட்டையன் குடுத்த பிள்ள இடுப்புல. இன்னைக்கிக் சொல்றேன் எழுதிக்க, என்னைக்கிருந் தாலும் சடையத்தேவன் தேடிவச்ச சொத்தக் கட்டியாளப்போறது யாரு? கருவாச்சி மகன்தானப்பா!"


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Fri Aug 06, 2010 7:00 am

கட்டையன் மூஞ்சியில கரும்புள்ளி செம்புள்ளி குத்தாத குறை தான். அவன் காதுபடவே பேசுது கடந்துபோற சனம். காஞ்ச மொளகாயில வெதைகள்லாம் ஓடி வந்து மொளகா மூக்குல சேர்ற மாதிரி, அவன் ஒடம்புல இருக்கிற கோபமெல்லாம் ஒண்ணு கூடித் தெரண்டு மூக்கு நுனியில வந்து ஒக்காந்திருக்கிருச்சு, மூட்ட முடிச்சோட! தீக்குச்சி யெல்லாம் தேவையில்ல, அவன் மூக்கு மேல பத்தங்குல தூரத்துல வச்சாலும் பத்திக்கிரும் பீடி. அவன் சின்ன மூக்கு வெடைக்கிறப்ப துவாரம் ரெண்டும் விரிஞ்சு விரிஞ்சு ரெண்டு கொட்டாவி விடுது.

"சொத்து கேப்பாளா மில்ல சொத்து..? அவ பிள்ளையக் கண்டந் துண்டமாப் பிச்சுப் பிச்சுக் காக்காய்க்குப் போட்டுட்டா..? எங்கூட படுத்துப் பெற முடியுமா இன்னொரு பிள்ள..? ஏலே! நரி நண்டத் தூக்குற மாதிரி துண்டாத் தூக்கிட்டு வாங்கடா அவ பெத்து வச்சிருக்கிற பிண்டத்த." எரிஞ்சுக்கிட்டிருந்த பீடியத் தீயோட வாய்க்குள்ள தள்ளி, கறிச் கறிச்சுன்னு மென்னு தின்னு, நாக்கப் பல்லுல நறநறன்னு வழிச்சுக் கரேர்னு காறித் துப்புறான் கட்டையன்.

வீட்டு வாசல்ல கெடந்த வெளிக் கல்லுல ஒக்காந்து வெத்தல தட்டிக்கிட்டிருக்காரு சடையத்தேவரு. இடிச்ச கூலிக்கு எனக்கொரு பங்குன்னு எவனும் கேட்டுரக் கூடாதுங்கிறதுக்காக... அவரா இடிச்சு அவராப் போட்டுக்கிறது தான் அவரோட வெகுநாளைய வெத்தலக் கொள்கை.

விழுகட்டும் அவர் காதுலன்னு வேணும்னே பேசிட்டுப் போறாக வெவகாரம் புடிச்ச ரெண்டு மூணு ஆளுக.

"கருவாச்சி புள்ள கறுப்பா? செவப்பா?"

"குங்குமப்பூவப் பால்ல போட்டுக் கொடங்கொடமாக் குடிச்சாலும் சிவீர்னா இருக்கும் கட்டையனுக்கும் கருவாச்சிக்கும் பெறந்த பிள்ள? அவுக வம்ச நெறந்தான் கறுப்பு."

"பிள்ள யார் மாதிரி இருக்கு..? அவுக அப்பன் மாதிரியா? ஆத்தா மாதிரியா?"

"ரெண்டு கழுதைக மாதிரியும் இல்லையாம்."

"பெறகு?"

"அவுக தாத்தன் சடையத்தேவர் சாடையாம்."

காலம் முறுக்கிப் புழிஞ்ச முதுகுத் தண்டுக்குள்ள சிலீர்னு ஒரு மின்னல் ஓடி மறைஞ்சதுல சிலுத்துப்போகுது கெழவனுக்கு. வெத்தல ஒரல்ல தாளம் தப்புது. ஒத்தையில பிள்ளையெடுத்து வந்தவள ஊரே வேடிக்கை பாத்துட்டுப் போக, வீட்டு வெளிக்கதவச் சாத்திக் கிட்டு நடுவாசல்ல தயிர்ப் பலகையைப் போட்டு, கருவாச்சி ஒடம்பெல்லாம் மஞ்சப்பூசி அவள ஒட்டுத்துணியில்லாம ஒக்காரவச்சு, எட்டி நின்னுக்கிட்டு எளம் வெந்நிய சொம்புல மோந்து அவ மேல சல்லு சல்லுன்னு வீசியடிக்கிறா ரங்கம்மா.

சும்மா மஞ்சள் மழை பேஞ்ச மாதிரி ஒழுகி வருது தண்ணி ஒடம்பெல்லாம்.

"போதுமாத்தா போதுமாத்தா"கையில தண்ணியத் தடுத்துக் கத்துறா கருவாச்சி. "ஏய்! சும்மா இர்றீ. பிள்ள பெத்த பச்ச ஒடம்புல பிசுக்குப் போகணுமா இல்லையா?"

கிட்ட வந்து மூஞ்சி தேச்சு, முதுகு தேச்சு, முன் மார்பு கழுவிவிட்டவ, தண்ணி ஊத்திக்கிட்டே வகுத்தப் புடிச்சு வலிக்காம ஒரு எளங் கசக்குக் கசக்கிவிடுறா கச கச கசன்னு வெளியேறுது கழிவு கசடெல்லாம். ஒடம்புல ஒழுகுற மஞ்சத் தண்ணியும் உறுப்புல ஒழுகுற செந்தண்ணியும் சேந்து புது நெறம் குடுத்துப் போகுது வாசல் வழி.

பேறு காலம் ஆன பொம்பளைக்கு முப்பது நாளைக்கும் இருக்கும் தீட்டு. சில பொம்பளைகள மூணு மாசம் வரைக்கும் தீட்டிப்புடும் போட்டு. கருவாச்சிய கரகரகரன்னு தேச்சுக் கழுவி வந்தவ, யாத்தேன்னு அலறிட்டா... அவ உயிர்த்தலத்த உத்துப் பாத்ததும்.

"அடி பாதகத்தி மகளே! பூவா இருக்க வேண்டிய எடத்தப் புண்ணா வச்சிருக்கிறியே!" புண்பட்ட எடத்தப் புகையவிட்டு ஆத்துன்னு அதுக்கொரு வைத்தியம் ஆரம்பிச்சுட்டா ரங்கம்மா.

ஒரு மஞ்சட்டியில அடுப்புக் கங்குகள அள்ளிக் கொட்னா. அதுல சாம்பிராணிய அள்ளி எறிஞ்சா. அது மேல ஆவாரங்குழை பரப்பி அதுக்கு மேல வேப்பங்குழைய வச்சா. சட்டியில இருந்த சந்துகள்ல வெள்ளப்பூடுத் தொலியையும் அள்ளிப்போட்டா. "சுவத்தப் புடிச்சு நின்னுக்கிட்டுக் கால் ரெண்டையும் அகட்டி வையிடி ஆத்தா"ன்னு அதட்டுனா.

சீலயத் தெரட்டிச் சுருட்டி ரெண்டு காலையும் அவ அகட்டி நிக்க, காலுக்கு மத்தியில மஞ்சட்டிய நீட்டி இவ புகை மூட்டம் போட, கவுட்டு வழி போகுதய்யா புகை மண்டலம், புண்பட்ட எடம் தேடி. ஆவி புடிச்ச பொம்ளைய ஆதரவா அணச்சுப் பாயில படுக்கவச்சாக. தோலெல்லாம் திட்டுத்திட்டா ரத்தக் கட்டி, பிசுக்கு ஒட்டிக் கெடந்த பெறந்த பிள்ளையத் தூக்கி உடம்பெல்லாம் நசநசநசன்னு நல்லெண்ணெயத் தடவி, கம்மாக் கரம்பையத் தேச்சுக் கழுவிவிடவும், சும்மா பளபளன்னு கண்ணாடி மாதிரி ஆகிப்போனான் கருவாச்சி மகன். குளிப்பாட்ன பிள்ளைக்கு லேசா சாம்பிராணி காட்டி ஆத்தாளோட சேத்துவிடவும் அது மொதல் மொதலா வாய் பொருத்துது மொலையில. சப்புது பிள்ள தாய்ப்பால் இல்ல.

பேறுகாலம் பாக்க ஆத்தா இல்லையேங்கற வருத்தத்தில கடைசிப் பத்து நாளா அன்னந்தண்ணி இல்லாம அழுதுக்கிட்டேயிருந்த வளுக்கு, குழாயத் திருகிவிட்ட மாதிரி கொட்டவா போகுது பாலு?

"ஏலே கொண்ணவாயா! வெள்ளாட்டம்பால் இருந்தாப் பீச்சி வெரசாக் கொண்டாடா."

எங்க போயிப் புடிச்சானோ... எத்தனை ஆட்டுல பீச்சினானோ? கா(ல்) மணி நேரத்துல ஓடி வந்துட்டான் அரைக்காச் சொம்புப் பாலோட.

ஆட்டு ரோமம் பால்ல கெடந்தா மாட்டிக்கிரும் பிள்ளைக்குன்னு வெறும் துணியில வடிகட்டிச் சங்குல ஊத்துனா பால. பண்ணருவா எடுத்தா அத உள்ளடுப்புல போட்டு ஓரம் சுடவச்சா. சுட்ட பண்ணருவா மூக்க சங்குல செலுத்த சுரீர்னு சத்தம் போட்டுச் சுட்டுட்டேன்னு சொல்லுச்சு பாலு புகட்டிட்டா வைத்தியச்சி.

தாயில்லாத பிள்ளைகளுக்கும் தாய்ப் பால் இல்லாத பிள்ளை களுக்கும் ஆடும் மாடும்தான ஆத்தா.

தேனி சந்தைக்குப் போனா, திருக்கை மீன் கருவாடும் நெத்திலியும் வாங்கிட்டு வரணும். அதுல பச்சப்பூடு போட்டுக் கொழம்புவச்சுக் குடுத்தா, பால்கட்டும் பச்ச ஒடம்புக்காரிக்கு.

"நாலு ஆளுக கம்பு சுத்தி என்னிய வளச்சு வளச்சு அடிச்ச மாதிரி மேலுகாலு வலிக்குது. பேய்ப் பசி பசிக்குது. இப்ப என்ன குடுத்தாலும் திம்பேன். எதாகிலும் குடுங்க" வைத்தியச்சியையும் பவளத்தையும் கெஞ்சிக் கேக்குறா கருவாச்சி.

"இந்தாத்தா! வகுத்துப்புள்ளக்காரி எதையும் திங்கலாம் கைப்புள்ளக்காரி கண்டதையும் திங்கப்படாது. பிள்ளைக்கு ஆகாது. வாயக் கட்னவ பிள்ள வளப்பா வயித்தக் கட்னவ புருசன் வளப்பானு சும்மாவா சொன்னாக?"

விடிய்ய, அடுப்புல தண்ணிப் பான வச்சு, அதுல புளிய எலைய அமுக்கிக் கொதிக்க வச்சு, இடுப்புக்குத் தண்ணி ஊத்தி, சுக்குக் களி கிண்டிச் சூடு ஆறும் முன்ன நல்லெண்ணெயை ஊத்தி நறுக்கா கருப்பட்டி போட்டு அவ ரெண்டு வாய் திங்க... "என் பேரன் எங்க?"ன்னு கேட்டு வந்துட்டாரு சுப்பஞ் செட்டியாரு.

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum