ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்!

View previous topic View next topic Go down

'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்!

Post by சிவா on Thu Apr 29, 2010 6:15 am

பகவத் ராமானுஜர் திருக்கோட்டியூர் சென்று திருக்கோட்டியூர் நம்பிகளிடம் ஸ்ரீமன் நாராயணனின் மூல மந்திரம் பற்றி உபதேசம் கேட்டார். அதற்காக அவர் 18 முறை திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூர் சென்று வந்தார்.

18வது முறை சென்றபோதுதான் ராமானுஜருக்கு திருமந்திரமான எட்டெழுத்தை உபதேசித்தார் நம்பிகள். அப்போது, "இந்தத் திருமந்திரத்தை யாருக்கும் உபதேசிக்கக் கூடாது' என்றும், "அப்படிச் செய்தால் உயிராபத்து ஏற்படும்' என்றும் நிபந்தனை விதித்தார். ராமானுஜருக்கு எந்த அளவில் திருமந்திரத்தின் மீது பற்று உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளவே நம்பிகள் ராமானுஜரை அலைக்கழித்தார். இருந்தபோதிலும் ராமானுஜரிடம் அவருக்குப் பற்று இருந்தது. ஆனால் ராமானுஜரோ "மந்திரோபதேசம்' முடிந்த உடனே திருக்கோட்டியூர் கோயில் கோபுரத்தில் ஏறி நின்று, அங்கு கூடியிருந்தவர்களையெல்லாம் அழைத்து, அனைவருக்கும் காதில் விழும்படியாக "ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்தை உரக்கக் கூவினார். ""இந்த நாம ஜெபம் செய்தால் நீங்கள் அனைவரும் நல்ல கதியடைவீர்கள்'' என்று கூறினார்.

இதையறிந்த திருக்கோட்டியூர் நம்பிக்கு மிகவும் கோபம் வந்தது. தான் இட்ட நிபந்தனையை மீறி அரியதொரு திருமந்திரத்தை நாடறியச் சொன்ன ராமானுஜரைக் கண்டித்து, "இதனால் என்ன விளைவு நேரிடும் என்று தெரிந்தும் இவ்வாறு செய்துவிட்டீரே?' என்று கேட்டார். அதற்கு ராமானுஜர், ""இதனால் அடியேன் ஒருவனுக்கு நல்லது நடக்காமல் போனாலும், இதைக் கேட்ட மக்களுக்கு நல்ல கதி கிடைக்குமே என்ற நல்ல எண்ணத்தில்தான் இதைச் செய்தேன்'' என்றார். ராமானுஜரின் பதில் நம்பிகளின் மனதை வாட்டியது. "இந்த எண்ணம் எனக்கு இல்லாமல் போய்விட்டதே' என்று நினைத்த அவருக்கு ராமானுஜர் மீது பற்று அதிகமாயிற்று. அவரைப் பாராட்டி, ""உமக்குள்ள பரந்த மனப்பான்மை எனக்கு இல்லாமல் போய்விட்டதே. இனி வைணவ மதம் உமது பெயராலே "எம் பெருமானார் தரிசனம்' என்ற புகழுடன் விளங்கும்'' என்று வாழ்த்தி அனுப்பினார்.

எம்பெருமானார் திருவரங்கத்தில் வசித்துக் கொண்டிருந்தபோது தினந்தோறும் பிûக்ஷக்குச் சென்று அதைக் கொண்டே வாழ்ந்து கொண்டிருந்தார். ராமானுஜரின் கொள்கைகளைப் பிடிக்காத சிலர், அவரைக் கொன்றுவிட தீர்மானித்தனர்; ஒரு பெண்மணியிடம் ராமானுஜர் பிûக்ஷக்கு வரும்போது விஷம் கலந்து கொடுக்க ஏற்பாடு செய்தனர். அது அந்தப் பெண்மணிக்கு கவலையையும், பயத்தையும் உண்டு பண்ணிய போதிலும் ஒரு நாள் ராமானுஜர் வந்தபோது விஷம் கலந்த உணவை இட்டாள். இருந்தபோதிலும் தான் செய்த தவறை வெளியில் சொல்ல முடியாமல், தான் தவறு செய்துவிட்டதையும் உணர்ந்து கண்ணீர் மல்க ராமானுஜரின் பாதக் கமலங்களில் அடி பணிந்து கதறி அழுதாள்.

ராமானுஜருக்கு விஷயம் புரிந்துவிட்டது. அவள் கொடுத்த உணவை உட்கொள்ளாமல், அன்று முதல் உண்ணா நோன்பிருந்து வெறும் நீர் அருந்தியே வாழ்க்கையைத் தொடர்ந்தார். இதனால் அவரது உடலில் தளர்ச்சி ஏற்பட்டது. இவ்விஷயம் திருக்கோட்டியூர் நம்பிகளுக்கு எட்டியது. அவர் உடன் ராமானுஜரைக் காண திருவரங்கம் வந்தார். அவர் வரும் விவரமறிந்த ராமானுஜர், அவரை நோக்கி காவிரி மணலில் (நடுப்பகலில் ஆற்று மணல் மிகவும் சூடாக இருந்த நிலைமையிலும்) ஓடி வந்து வரவேற்றார்; அவர் பாதங்களில் வீழ்ந்து சரணடைந்தார்.

நடுப்பகலில் சூடான ஆற்று மணலில் நம்பிகளின் காலடியில் ராமானுஜர் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அனைவருக்கும் கவலை எழுந்தது. இதனால் "ராமானுஜரின் உடலுக்கு என்ன தீங்கு வருமோ?' என அஞ்சினர். நம்பிகளும் இதைக் கண்டும் காணாதவாறு இருந்தார். ஆனால் அக்குழுவிலே இருந்த கிடாம்பியாச்சான் என்பார், திருக்கோட்டியூர் நம்பிகளைப் பார்த்து, ""இது என்ன பரிதாபம்! ஆற்று மணலில் அடிபணிந்திருக்கும் ராமானுஜரை எழுந்திருக்கச் சொல்லும். இது என்ன ஆசார்ய-சிஷ்ய பாவம்...''

எனத் தானே ராமானுஜரைக் கைப் பிடித்து எழுந்து நிற்கச் செய்தார். அப்போது நம்பிகள் கூடியிருந்தோரிடம், ""உங்களில் யாருக்காவது ராமானுஜன் மீது அபிமானம் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் வெறுமனே இருந்தேன். அப்படி அபிமானம் உள்ள கிடாம்பியாச்சான் கிடைத்துவிட்டான்'' என்று மகிழ்ச்சியோடு கூறி, ""இனி ராமானுஜரின் ஆகார வசதிகளைக் கவனிக்கும் பொறுப்பை நீர் ஏற்க வேண்டும்'' என்று அவரிடம் கூறினார். அதன்படி ஆச்சானும் ராமானுஜருக்குத் தமது கைங்கர்யத்தைத் தொடர்ந்தார். கிடாம்பியாச்சானின் குமாரரும், குமாரத்தியும் ராமானுஜரைக் குருவாக ஏற்றனர்.

இவ்வாறு ராமானுஜர் மீது பரிவு கொண்ட நம்பிகளின் ஏற்பாட்டால் பின்னாளில் ராமானுஜருக்கு அந்தரங்க சிஷ்யராக கிடாம்பி ஆச்சான் விளங்கினார்.

எம்.என். ஸ்ரீநிவாசன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்!

Post by krishnaamma on Fri May 21, 2010 11:16 pm

Many times I read this story in many books. Also I saw the "Ramanuja" film by G.V.Iyer (want to get that DVD, any body having that? many times I searched in net but could not get it. If anybody having the link to download the film please give) in that film that particular scene when Sri Ramanuja do Namaskarams to his Guru, will bring tears in our eyes. Really thank you so much for sharing this nice article about our aachariya. ( we are Iyengars and followers of Sri Ramanujar.)


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: 'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்!

Post by veeram on Tue Aug 04, 2015 10:08 pm

ராமானுஜரின் வாழ்வில் 100 அற்புதங்கள் புத்தகம் இருந்தால் பதிவேற்றவும்.
avatar
veeram
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: 'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்!

Post by krishnaamma on Tue Aug 04, 2015 10:27 pm

@veeram wrote:ராமானுஜரின் வாழ்வில் 100 அற்புதங்கள் புத்தகம் இருந்தால் பதிவேற்றவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1155436

ராமானுஜர் - இந்திரா பார்த்தசாரதி

இப்போதைக்கு இதை பாருங்கள் , நீங்கள் கேட்ட புத்தகத்தை நம் நண்பர்கள் தருவார்கள் புன்னகை...காத்திருங்கள் !

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: 'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Tue Aug 04, 2015 11:29 pm

18 முறை அவர் ஸ்ரீரெங்கத்திளிருந்து கோட்டியூர் செல்லவேண்டியிருந்த்ததில் எவ்வளவு பிரயத்தனம் அந்தக்காலத்தில் இருந்திருக்கும்

அவர் ஒவ்வொரு முறையும் கோட்டியூர் உடையவர் கல்மாழிகை முன்பு நின்று அய்யா என்று அழைக்கும்போது யாரது என்று உள்ளிருந்தவாரே கேட்டாராம்

நான் ராமானுஜன் வந்திருக்கிறேன் என்று 17 முறை பதில் சொன்னாராம் . அப்படியா போய் அடுத்த முறை வா என பதில் வருமாம் ஆனால் 18 ம் முறை அடியேன் ராமனுஜன் வந்திருக்கிறேன் என பதில் சொல்லவும் இப்போதுதான் உனக்கு பக்குவம் கிடைத்திருக்கிறது வா என அழைத்துக்கொண்டு கோவில் முகப்பில் வைத்து காதில் உபதேசம் செய்தாராம்
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: 'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Tue Aug 04, 2015 11:54 pm

திருக்கோட்டியூர் பற்றிய குறிப்புகள் :

http://www.eegarai.net/t94552-topic
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: 'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்!

Post by krishnaamma on Wed Aug 05, 2015 1:18 am

@கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:திருக்கோட்டியூர் பற்றிய குறிப்புகள் :

http://www.eegarai.net/t94552-topic
மேற்கோள் செய்த பதிவு: 1155476

லிங்க் க்கு ரொம்ப நன்றி, கேசவன் போட்ட பதிவு படித்திருக்கேன், உங்களது நாளை வந்து படிக்கிறேன்.......புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: 'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்!

Post by ayyasamy ram on Wed Aug 05, 2015 8:21 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: 'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்!

Post by shobana sahas on Wed Aug 05, 2015 9:51 pm

@கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:18 முறை அவர் ஸ்ரீரெங்கத்திளிருந்து கோட்டியூர் செல்லவேண்டியிருந்த்ததில் எவ்வளவு பிரயத்தனம் அந்தக்காலத்தில் இருந்திருக்கும்

அவர் ஒவ்வொரு முறையும் கோட்டியூர் உடையவர் கல்மாழிகை முன்பு நின்று அய்யா என்று அழைக்கும்போது யாரது என்று உள்ளிருந்தவாரே கேட்டாராம்

நான் ராமானுஜன் வந்திருக்கிறேன் என்று 17 முறை பதில் சொன்னாராம் . அப்படியா போய் அடுத்த முறை வா என பதில் வருமாம் ஆனால் 18 ம் முறை அடியேன் ராமனுஜன் வந்திருக்கிறேன் என பதில் சொல்லவும் இப்போதுதான் உனக்கு பக்குவம் கிடைத்திருக்கிறது வா என அழைத்துக்கொண்டு கோவில் முகப்பில் வைத்து காதில் உபதேசம் செய்தாராம்
மேற்கோள் செய்த பதிவு: 1155462

அடியேன் என்கிற வார்த்தை அடக்கத்தை குறிக்கிறது என்று அழகாக சொல்லியுள்ளார் ..
நல்ல பதிவு. நன்றி அய்யா .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: 'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum