ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சுறா லேட்டஸ்ட் விமர்சனம்

View previous topic View next topic Go down

சுறா லேட்டஸ்ட் விமர்சனம்

Post by sathyan on Fri May 07, 2010 1:11 am

சுறா


குருவி, வில்லு, வேட்டைக்காரனில் பார்த்த அதே நாலு நாள் தாடி விஜய், அதே வசன உச்ச‌ரிப்பு, பன்ச் டயலாக், ஓபனி‌ங் பாடல், ஹிஸ்டீ‌ரியா வில்லன், கிச்சுகிச்சு வடிவேலு, அசமந்தான ஹீரோயின்... படத்தின் பெயர் மட்டும் வேறு, சுறா.
WD

யாழ் குப்பத்தின் செல்லப்பிள்ளை சுறா (விஜய்). குப்பத்து ஜனங்களுக்கு ஒரு கஷ்டமென்றால் கிராஃபிக்ஸ் சூறாவளியுடன் பொங்கியெழுவார். எண்பது வயது கிழவர், இதுவரை சுறாவோட வழிகாட்டலில் வாழ்ந்திட்டோம், இனி என்ன செய்யப் போகிறோம் என்று கண்கலங்கும் போது நமக்கு நெஞ்சு வெடிக்கிறது. முப்பது வயசு சுறா எண்பது வயசு பெ‌ரிசுக்கு எப்பிடிப்பா வழி காட்டினார்?

குப்பத்து மக்களின் ஒட்டுமொத்த பில்டப்பில் வாழும் சுறாவுக்குள் ஒரு லட்சியம் ஒளிந்திருக்கிறது. மொத்த குப்பத்துக்கும் தீயில் எ‌ரியாத, மழையில் ஒழுகாத காரை வீடு கட்டித்தர வேண்டும். லட்சியத்தை எப்படி அடைவது என்று சுறா யோசிக்கும் போது, உள்ளூர் அமைச்சர் குப்பத்தையே தூக்கிவிட்டு தீம் பார்க் கட்ட பிளான் பண்ணுகிறார். சுறா சுறுசுறுப்படைகிறார்.

ஓவர் நைட்டில் அமைச்ச‌ரின் கடத்தல் பொருட்களை கையகப்படுத்தி, மும்பையில் அதை விற்று காசாக்கி (100 கோடி) ஐம்பது லட்ச ரூபாய் கா‌ரில் அடுத்த நாள் காலை குப்பத்துக்குள் எ‌ண்ட்‌ரியாகிறார் விஜய். காசு குடு சந்தைக்குப் போணும், ஆத்தா வையும் சப்பாணி மாதி‌ரி அமைச்சர் நூறு கோடி கேட்டு விஜய்யை இம்சிக்க, அவர் தர மறுக்க, இறுதியில் விஜய்யின் காரை வீடு கனவு நிறைவேறியதா என்பதுடன் சுபம்.

திரைக்கதையில் ஓட்டையைப் பார்த்திருக்கிறோம். ஒரு ஓட்டையையே திரைக்கதையாக்கியிருக்கும் திறமைசாலி இந்தப் படத்தை இயக்கியிருக்கும் ராஜகுமார். புயலில் அறுபது மீனவர்கள் மாட்டிக் கொண்டார்களாம். அறுபது பேரையும் விஜய் தனியாளாக கரை சேர்த்தாராம் (ஏன், அந்த மீனவ நண்பர்களுக்கு நீச்சல் தெ‌ரியாதா?). ஆனால் அறுபது பேரை காப்பாற்றிய விஜய்யை மட்டும் காணவில்லை. விஜய்யின் அருமை பெருமைகளை குப்பம் அள்ளிவிடும் போது இடுப்பளவு தண்ணியிலிருந்து எம்பி வருகிறார் விஜய். தொடங்குகிறது ஓபனிங் சரவெடி பாட்டு.

ஐம்பது ரேஷன் கார்டையே பாதுகாப்பாக வைக்க முடியாமல் பா‌தி‌ரியா‌ரிடம் ஒப்படைக்கும் விஜய், நூறு கோடி பெறுமானமுள்ள லேப் டாப்களை கடத்தி மும்பை பார்ட்டியிடம் விற்று... அழகழகா பூச்சுற்றுகிறார்கள். அதிலும் சிவகாசி புஸ்வாணத்தை கொளுத்தி கடத்தல்காரர்களை ஓடவிடுவதெல்லாம் ‘தமிழ்ப்படத்தை’யே கிண்டலடிக்கும் சமாச்சாரங்கள்.


WD

விஜய்க்கு ஆ‌க்சனும், நடனமும் அற்புதமாக வருகிறது. ஆனால் இந்த ‘ஒளியும் ஒலி’யும் மட்டும் ஒரு படத்துக்குப் போதாது என்பதை அவர் எப்போது பு‌ரிந்து கொள்ளப் போகிறார்? அதேபோல் காமெடி என்றதும் தோளை குறுக்கி வாய்ஸை நாய்ஸாக மாற்றுவதையும் விட்டுவிட்டால் நல்லது. கோர்ட்டில் அவர் அடிக்கும் கொட்டம் காமெடி அல்ல, ராவடி.

தேவையேயில்லாத திணிப்பு தமன்னா. நாய் காணாமல் போனதுக்காக கடலில் விழுந்து சாகப் போகும் இவரது கேரக்டர் இந்த வருடத்தின் மொக்க ராசு. சி‌ரிக்க மட்டுமே தெ‌ரிந்த இவ‌ரிடமிருந்து நடிப்பை எதிர்பார்க்க முடியாது என்பதற்கு இந்தப் படம் இன்னொரு சாட்சி.

சுறாவின் தோஸ்தாக வரும் வடிவேலுக்கும் பெ‌ரிதாக ஸ்கோப்பில்லை. என்றாலும் கிடைக்கிற கேப்பிலும் கிச்சு கிச்சு மூட்டுகிறார். பாகவதர் வெண்ணிறாடை மூர்த்தியை பேசாமலே சதாய்க்கிறாரே... சபாஷ். முகர்ந்து பார்த்தே வெளியாள் தனது இடத்துக்கு வந்திருப்பதை கண்டுபிடிக்கும் வில்லன் தேவ் கில் அடுத்தடுத்த காட்சிகளில் தேய்ந்த கில்லாகிறார். தனது கெஸ்ட் ஹவுஸில் அவ்வளவு போலீஸுக்கு மத்தியில் விஜய்யை ஒன்றும் பண்ண முடியாமல் கையை பிசைவதெல்லாம் படா தமாஷ்.

படத்தின் ஆரம்ப காட்சிகள் ஏதோ சீ‌ரியல் பார்க்கும் எஃபெக்டையே தருகின்றன. ஏகாம்பரத்தின் கேமராவும், எடிட்ட‌ரின் கத்தி‌ரியும் இருந்ததால் பிழைத்தோம். படத்தின் ஆகப் பெ‌ரிய ப்ளஸ் பாடல்களும், விஜய்யின் நடனமும். கனல் கண்ணனின் ஆ‌க்சனில் புதிதாக ஒன்றுமில்லை.

விஜய் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் ‌ரியாஸ்கான் கஞ்சா கேஸ் போட்டு கோர்ட்டில் நிறுத்துவதும், விஜய் நீதிபதியிடம் காமெடி செய்து ‌ரியாஸ்கான் வீட்டை சோதனை போட வைப்பதும், அவர் வீட்டில் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பி, விஜய்யை விடுவித்து... ஐயா சத்தியமா நம்புங்க இந்த விஷயங்கள் எல்லாம் ஒரே நாளில் நடக்கிறது.

லெதர் கோட் போட்டு ஐம்பது லட்ச ரூபாய் கா‌ரில் சவு‌ரி முடி விக்க வந்தேன் என்கிறார் விஜய். அதுவும் பாம் இருப்பதாக தகவல் கிடைத்த அமைச்ச‌ரின் வீட்டில். அப்பிடிங்களாயா... நீங்க போய்ட்டு வாங்க என சல்யூட் அடித்து அனுப்பி வைக்கிறது போலீஸ். ஒருத்தரை ஹீரோவாக்க மத்தவங்க எல்லோரையும் முட்டாளாக்க வேண்டுமா?

கூரான உறுதியான பற்கள் அதிகம் இருப்பதால் ‘கடி’ப்பதில் சுறாவுக்கே முதலிடம். இந்த அறிவியல் உண்மையை அனுபவப்பூர்வ மாக்கியிருக்கிறார்கள் விஜய்யும், ராஜகுமாரும்.
avatar
sathyan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1199
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: சுறா லேட்டஸ்ட் விமர்சனம்

Post by ப்ரியா on Fri May 07, 2010 9:21 am

விஜய்யின் அருமை பெருமைகளை குப்பம் அள்ளிவிடும் போது இடுப்பளவு தண்ணியிலிருந்து எம்பி வருகிறார் விஜய்.

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: சுறா லேட்டஸ்ட் விமர்சனம்

Post by சாந்தன் on Fri May 07, 2010 9:32 am

priyatharshi wrote:விஜய்யின் அருமை பெருமைகளை குப்பம் அள்ளிவிடும் போது இடுப்பளவு தண்ணியிலிருந்து எம்பி வருகிறார் விஜய்.

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

அந்த கொடுமையை தான் நான் மூணு மணிநேரம் செத்து செத்து போலச்சேனே ......
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சுறா லேட்டஸ்ட் விமர்சனம்

Post by அன்பு தளபதி on Fri May 07, 2010 1:13 pm

மூணு மணி நேரம் மூச்சு தெனற தெனற அடிச்சான்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: சுறா லேட்டஸ்ட் விமர்சனம்

Post by சரவணன் on Fri May 07, 2010 1:16 pm

maniajith007 wrote:மூணு மணி நேரம் மூச்சு தெனற தெனற அடிச்சான்

கண்ணு, காதுகளிலிருந்து இரத்தமா வடியுது


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சுறா லேட்டஸ்ட் விமர்சனம்

Post by சாந்தன் on Fri May 07, 2010 1:16 pm

maniajith007 wrote:மூணு மணி நேரம் மூச்சு தெனற தெனற அடிச்சான்

நீங்கலுமா மணி மாட்டிகிட்டிங்க
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சுறா லேட்டஸ்ட் விமர்சனம்

Post by அன்பு தளபதி on Fri May 07, 2010 1:17 pm

நிர்மல் wrote:
maniajith007 wrote:மூணு மணி நேரம் மூச்சு தெனற தெனற அடிச்சான்

நீங்கலுமா மணி மாட்டிகிட்டிங்க

ரெண்டாம் நாளே சுறா கடிச்சு கொதரிடுச்சி
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: சுறா லேட்டஸ்ட் விமர்சனம்

Post by sathyan on Fri May 07, 2010 1:19 pm

என்னால விமர்சனதியே படிக்க முடியல ,படத்தை பார்த்தவங்க நிலைமை ?
avatar
sathyan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1199
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: சுறா லேட்டஸ்ட் விமர்சனம்

Post by ரபீக் on Sat May 08, 2010 1:14 pm

avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சுறா லேட்டஸ்ட் விமர்சனம்

Post by mohan-தாஸ் on Sat May 08, 2010 1:43 pm

அருமையான படம் சூப்பர்.........விஜய்க்கு ஒரு


ரசிக்காமல் பார்த்த எல்லோருக்கும்
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: சுறா லேட்டஸ்ட் விமர்சனம்

Post by உதயசுதா on Sat May 08, 2010 1:53 pm

இந்த மோகனுக்கு என்னமோ ஆயிடுச்சு. ஒரு நல்ல தரமான கடி படத்த சூப்பர் ன்னு சொல்றாரு.
மோகன் நீங்க விஜய் ரசிகரா இருக்கலாம்.அதுக்காக இப்படி அவன மாதிரி போய் முட்டைய அவுத்து விடாதீங்க
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: சுறா லேட்டஸ்ட் விமர்சனம்

Post by mohan-தாஸ் on Sat May 08, 2010 2:29 pm

@உதயசுதா wrote:இந்த மோகனுக்கு என்னமோ ஆயிடுச்சு. ஒரு நல்ல தரமான கடி படத்த சூப்பர் ன்னு சொல்றாரு.
மோகன் நீங்க விஜய் ரசிகரா இருக்கலாம்.அதுக்காக இப்படி அவன மாதிரி போய் முட்டைய அவுத்து விடாதீங்க

சுதா...எனக்கும் வேணா உங்களுக்கும் வேணா இப்போ விஜய் சுறா படம் நல்லமா கூடாதா என்று வோட் கேட்டு பார்ப்போமா எந்த அளுவுக்கு பதில் வருகுது என்று பார்ப்போம் ஆனால் இன்னமொன்று ஈகரையில விஜய் பிடிக்காத ஆற்கள் நிறைய இருக்கு அதுவும் எனக்கு தெரியும் ஆனால் நான் பார்த்த மட்டில என் நண்பர் எல்லோரும் சொன்னார்கள் அருமையாக உள்ளது என்றுதான்......ஆனால் இப்போ இதிலதான் நான் புதிசா பார்க்கிறேன் படம் கூடாது என்று சொல்கிறார்கள் ஐயோ ஐயோ.....இதில சுதா மேடம் வேற கூடாது என்று
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: சுறா லேட்டஸ்ட் விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum