ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by புரட்சி Today at 10:01 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 9:55 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை காலிபண்ணும் முரட்டுசிங்கம்

View previous topic View next topic Go down

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை காலிபண்ணும் முரட்டுசிங்கம்

Post by Tamilzhan on Sat May 08, 2010 8:46 pm




மக்களை அடிமைப்படுத்துகிற முதலாளிகளை கடைசியா மக்களே அடிச்சு கொல்றாங்க என்பதுதான் இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கத்தின் ஒன்லைன். சுற்றியிருக்கிற ஆறு ஊரையும் அடிமைப்படுத்தி வச்சிருக்கு இரும்புக்கோட்டை உஷா நகர். இதில் செவ்விந்தியர்கள் வாழுற ஊரும் ஒன்னு.

இதை ஜெய்ஷங்கர்புரத்தை சேர்ந்த சிங்கம் தட்டிக்கேட்கிறார். அவரை இ.கோட்டை அரசு கொன்றுவிடுகிறது. இந்த விஷயம் ஜெய்சங்கர்புர ஊர்வாசிகளுக்கு தெரியாது. அதுல தளபதியா இருந்த நால்வர், சிங்கம் போலவே உருவ ஒற்றுமை கொண்டவரை ஷோலேபுரத்தில்(சத்தியமா கதையில வர்ற ஊர் பேருதானுங்கோ)கண்டெடுத்து சிங்கங்களே போற்றும் சிங்கமா(அட கதாநாயகன் வந்துட்டாறு)மாற்றி இ.கோட்டைக்கு எதிரா போராட கைக்கிறாங்க.

அடிமைகளா இருக்குற மக்களை இந்த சிங்கம் மீட்டாரா என்பதுதான் மீதிக்கதை. உலகம் முழுக்க உள்ள கவ்பாய் வரலாற்றை சொல்லியபடியே 18ம் நூற்றாண்டில் கதை தொடங்குறதா திரையில் இயக்குநர் சொன்னாலும் அமிதாப் தொடங்கி இன்றைய காலத்து நடிகர்களையெல்லாம் காட்டுகிறார்கள்.

தூக்கு மேடையில பேந்த பேந்த சிங்கம் நிற்க, அதாங்க ஹீரோ லாரன்ஸ்... அவரை மௌலி, ரமேஷ்கண்ணா, வையாபுரி, இளவரசு குதுரையில் வந்து ஜம்முன்னு காப்பாத்தும் போதே காமெடி அலப்பறை தொடங்குகிறது.

’நம்மளோட மார்ஷல், மேஜர் சுந்தர்ராஜன் இங்கிலீஷ்ல பேசுறதையே தமிழ்லயும் பேசும் திறமைசாலி’ன்னு அறிமுகப்படுத்தும் போதும், ‘நம்ம கடவுள் ஜெய்சங்கருக்கு எதிரா வில்லன் அசோகன் வர்ராரு..பரம்பரை பரம்பரையா வர்ற பகையை சிங்கம் நீ தான் தீர்க்கனும்’னு மனோரமாவும்-டெல்லி கணேஷும் சீரியசாக சொல்லும் போதும் படம் பார்ப்பவர்கள் வயிறு வலிக்க சிரிக்காமலிருக்க மாட்டார்கள்.

டாஸ்மாக்கை பாஸ்மார்க் என்றும், பஜாரை ஷோலேபுரம்- ஜெய்சங்கர்புரம்ன்னு தமிழ்ப்படத்தை நினைவுபடுத்தினாலும் செம காமெடி. சிங்கமா வரும் லார்ன்ஸ் பேந்த பேந்த முழிக்கிறதும், துப்பாக்கி சுட கத்துக்கொள்ளும் போது செய்ற அலப்பறையும், சீட்டு கட்டை வச்சு மேஜிக் காட்டுறதும், இறுதிக்காட்சி்யில் உண்மையாகவே சிங்கமா சீறுறதும்னு படம் நெடுக பட்டைய கெளப்புறாரு.

பத்மப்பிரியா, லட்சுமிராய், சந்தியான்னு மூணு ஹீரோயின் கூடயும் சேர்ந்து போதையேத்துராறு. செவ்விந்தியரா வர்ற சந்தியா ஒரு பாட்டுக்கு மட்டும் பயன்படுறாரு. லட்சுமிராய் வில்லி. வில்லனுக்கு ஆமாம் போடுறதும், குதிரையில ஜம்முன்னு உட்கார்ந்திட்டு போறதும், வர்றதும், ஒரு கவர்ச்சியாட்டம் போடுறதும் தான் இவரது வேலை.

நடிப்புல ஸ்கோர் பண்ணி மனசுல நிக்கிறது பத்மப்பிரியாதான். கவுன், குட்டி டயனா தொப்பின்னு வந்து கலக்குறாங்க. தெலுங்கு நடிகர் சாய்குமார், நம்ம அசோகன் போல நடிக்க முயற்சி பண்ணியிருக்கிறாரு. செவ்விந்தியர் தலைவரா வர்ராறு பாஸ்கர். அவர் செவ்விந்தியர் மொழின்னு ஒன்னு பேசுறாரு பாருங்க. தியேட்டரே குலுங்குது.

டஜன் கணக்கில் நட்சத்திர பட்டாளம் இருந்தாலும் படத்தை ஒன் மேன் ஆர்மியாக தூக்கி நிறுத்தியிருப்பது நாசர்தான். இங்கிலீஷ் பாஷை, சென்னை பாஷை இரண்டிலும் கலந்துக்கட்டி அடிக்கிறார். அரசியல் வசனங்களும் அதை நகைச்சுவை காட்சிகளோடு கலந்து சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கிறது சிம்புதேவனின் திரைக்கதை.

வில்லன் ஏரியாவுக்கு usa(உஷா) என்று பெயர் வைத்ததோடு மட்டுமல்லாமல், குண்டுகள் தருவோம்..ஆனால் எங்களை கேட்காமல் சுடக்கூடாது. எங்கள் வீரர்கள் உங்க ஊரு பொன்னுங்கள கற்பழிச்சா நஷ்ட ஈடு கேட்க கூடாது’ன்னு கட்டுப்பாடுகளை விதிச்சிக்கிட்டே போவாங்க வில்லனுங்க. அப்போ வி.எஸ்.ராகவன், குசு விட்டுக்கலாமா’ன்னு கேட்க, அதுவும் ரெண்டு நாளைக்கு ஒரு முறைதான்னு கட்டுப்பாடு விதிக்கும் படி காட்சி அமைத்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நையாண்டியால் காலிபண்ணுகிறார் சிம்புதேவன்.

’காத்து, தண்ணி எல்லோருக்கும் அவசியம் என்றாலும் மனிதன் உயிர்வாழ சுதந்திரமும் உரிமையும் அடிப்படை அவசியம்’ போன்ற டயாலாக்குகள் நச். புதையல் இடம்..புத்தர் சிலை என்று மெனக்கெட்டிருக்கிறார் ஆர்ட் டைரக்டர் முத்துராஜ். பருத்திவீரன் ராஜாமுகம்மது எடிட்டிங்க் படத்திற்கு பலம்.

வைரமுத்து எழுதியிருந்தாலும் பாடல்கள் சுமார் ரகமே. உடைஞ்சது அவன் மண்டை மட்டுமல்ல, என்...என்..என்று பத்மப்பிரியா இழுத்துப்பேசும் டபுள் மீனீங் டயலாக் முகம் சுளிக்க வைக்கிறது. அட சண்டாளா என்று கோபத்தில் மனோரமா வில்லன்களை திட்டுவது நெருடலாக இருக்கு. சாதீய சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மக்களை இழுவுபடுத்த உருவாக்கப்பட்ட இது போன்ற வார்த்தைகளை சிம்புதேவன் போன்ற சனநாயகவாதிகள் தவிர்த்துக்கொள்ளலாமே. கிங் சாலமன் மைன்ஸ், இந்தியானா ஜோன்ஸ், மெக்னாஸ் கோல்டு பாணியில் குழந்தைகளை குஷிப்படுத்த வந்திருக்கும் இ.கோ.முரட்டுசிங்கத்தை வரவேற்கலாம்.

நக்கீரன் -தமிழ்

Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 7965
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192

Back to top Go down

Re: அமெரிக்க ஏகாதிபத்தியத்தை காலிபண்ணும் முரட்டுசிங்கம்

Post by சிவா on Sat May 08, 2010 8:50 pm

இறுதித் தீர்ப்பு என்ன? படம் பார்க்கலாமா வேண்டாமா!




பதிவுகள்: 790034 | உறுப்பினர்கள்: 15362 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: sluxtpr

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: அமெரிக்க ஏகாதிபத்தியத்தை காலிபண்ணும் முரட்டுசிங்கம்

Post by Tamilzhan on Sat May 08, 2010 8:55 pm

சிவா wrote:இறுதித் தீர்ப்பு என்ன? படம் பார்க்கலாமா வேண்டாமா!


திருட்டு டிவிடி யிலதானே நீங்க கேட்ப்பிங்க..? ஆனா தியோட்டருக்கே போய் பார்க்கலாம்...!

Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 7965
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192

Back to top Go down

Re: அமெரிக்க ஏகாதிபத்தியத்தை காலிபண்ணும் முரட்டுசிங்கம்

Post by ARR on Sat May 08, 2010 8:57 pm

இம்சை அரசன் இயக்குநரின் கைவரிசையாயிற்றே.. நகைச்சுவைக்குப் பஞ்சமென்ன இருக்கமுடியும்..?

ஒருமுறை பார்த்து வைக்கலாம் என்பதாகத்தான் தெரிகிறது..!

ARR
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1115
வசிப்பிடம்: மனசுக்குப் பிடித்த மன்னார்குடி
சேர்ந்தது: 08/05/2010
மதிப்பீடு: 82

http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: அமெரிக்க ஏகாதிபத்தியத்தை காலிபண்ணும் முரட்டுசிங்கம்

Post by சிவா on Sat May 08, 2010 8:59 pm

Tamilzhan wrote:
சிவா wrote:இறுதித் தீர்ப்பு என்ன? படம் பார்க்கலாமா வேண்டாமா!


திருட்டு டிவிடி யிலதானே நீங்க கேட்ப்பிங்க..? ஆனா தியோட்டருக்கே போய் பார்க்கலாம்...!


தியேட்டருக்கு போனா நம்ம இமேஜ் என்ன ஆகுறது! அதனாலதான்!!!

பத்து வெள்ளிக்கு ஐந்து படங்கள் எங்கு கிடைக்கும்!!!




பதிவுகள்: 790034 | உறுப்பினர்கள்: 15362 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: sluxtpr

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: அமெரிக்க ஏகாதிபத்தியத்தை காலிபண்ணும் முரட்டுசிங்கம்

Post by maniajith007 on Sat May 08, 2010 9:15 pm

அண்ணா லக்ஷ்மி ராய் நடிப்பை சிறப்ப எழுதுலையா(அது சரி அவங்க எங்க நடிக்கிறாங்க )

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum