ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேலன்:-புகைப்படத்தினை வேண்டியவாறு மாற்றி பயன்படுத்திட -Cpix
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

அந்த நாள் -செப் 22 --2016
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கவிதை
 ayyasamy ram

நதிக்கரை - கவிதை
 ayyasamy ram

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
 ayyasamy ram

அறிமுகம் சந்திரசேகரன்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
 ayyasamy ram

2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
 ayyasamy ram

பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
 ayyasamy ram

7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
 ayyasamy ram

முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
 ayyasamy ram

இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
 ayyasamy ram

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

நான் சாகவில்லை!
 Dr.S.Soundarapandian

விஷ சேவல் கோழி மீன்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

. விநோதமான வேலை!
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 Dr.S.Soundarapandian

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 Dr.S.Soundarapandian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
 ayyasamy ram

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
 ayyasamy ram

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
 ayyasamy ram

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
 ayyasamy ram

சின்னச் சின்ன வரிகள்!
 Pranav Jain

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
 Pranav Jain

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
 T.N.Balasubramanian

கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு
 T.N.Balasubramanian

ஐபோன் பரிசு
 T.N.Balasubramanian

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 T.N.Balasubramanian

குந்தியும் நிஷாத பெண்களும்
 ayyasamy ram

கா(த)ல் பந்து – கவிதை
 Dr.S.Soundarapandian

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Dr.S.Soundarapandian

நான் விட்டுவிடமாட்டேன் !
 Dr.S.Soundarapandian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 Dr.S.Soundarapandian

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
 Dr.S.Soundarapandian

செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 Dr.S.Soundarapandian

முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா"
 ANUSUYA DHURGAIMUTHU

திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
 ayyasamy ram

''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
 ayyasamy ram

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
 ayyasamy ram

போக்குவரத்து விளக்கு உருவான கதை..!
 ayyasamy ram

திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
 ayyasamy ram

முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
 ayyasamy ram

கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
 ayyasamy ram

கோல்கட்டாவில் இன்று இந்தியா-ஆஸி., இரண்டாவது ஒருநாள் போட்டி
 ayyasamy ram

'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
 ayyasamy ram

மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 M.Jagadeesan

மாறுகை – கவிதை
 T.N.Balasubramanian

கண்ணம்மா – கவிதை
 Dr.S.Soundarapandian

காலம் கற்றுத் தந்த பாடம்…!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தொல்காப்பியத்தில் காதல்

View previous topic View next topic Go down

தொல்காப்பியத்தில் காதல்

Post by சிவா on Fri May 14, 2010 5:47 pm

தொல்காப்பியர் களவியல், கற்பியல் இரண்டு பகுதிகளிலும் காதலைப்பற்றி மிகுதியாக கூறுகிறார். இரண்டிலும் உணர்ச்சிவழி செயல்பாடுகளைக் கூறுகிறார். எனினும் அச்செயல்பாடுகள் அறிவு வழி செயல்பாடுகளாக மாறிவிடுவதை€யும் காட்டிச் செல்கிறார். அதனால் தொல்காப்பியர் காலத்துக் காதலர்கள் எல்லாம் உணர்வழி அகற்றி, அறிவு வழி காதலித்தனர் என்றால் அது நகைப்பிற்கு இடமாகும். உணர்வுவழி காதலர்களாகும் ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு பின்னும் காதலர்களாக இருக்க அறிவுவழி செயல்பட வேண்டும் என்ற விருப்பத்தையே களவியல், கற்பியல் ஆகிய பகுதிகளில் கூறுகிறார் என்பது கட்டுரையாளரின் கருத்து. கம்பன் கொடுப்பாரும், கொள்வாரும் இன்றி எல்லா வளமும் எல்லாரும் பெற்று வாழவேண்டும் எனத் தான் விரும்பிய சமுதாயத்தை அயோத்தி சமுதாயமாகப் படைத்துக்காட்டினான் என்பர். அதுபோல காதலர்கள் களவிலும், கற்பிலும் செயல்படவேண்டிய தன் விருப்பங்கள் தொல்காப்பியர் தொல்காப்பியத்தில் படைத்துக்காட்டுகின்றார்.

தெய்வம் கூட்டவோ, அல்லது விதி வழியாகவோ ஆணும், பெண்ணும் எதிர்பாராத விதமாகச் சந்தித்துக் கொள்கின்றனர். இச்சந்திப்பு அவர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. பார்க்கின்ற எல்லா ஆண் அல்லது பெண்ணால் தாக்கம் ஏற்படுவதாகக் குறிக்கப்படவில்லை. பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, உறவு, அன்பு, நிறை, அருள், உணர்வு, திரு ஆகிய பத்து ஆளுமைக்குணங்கள் ஒன்றுபட்டிருக்கும். ஆணும் பெண்ணும் எதிர்படும்பொழுது இத்தாக்கம் ஏற்பட்டுப் பின் அது குறிப்பால் ஒருவர் எண்ணத்தை ஒருவர் அறிந்தபின் காதலாக மாறுவது நலம் என்பது தொல்காப்பியர் கருத்து. தமிழ்ச் சமுதாயம் தொல்காப்பியர் காலத்திலேயே ஆணாதிக்கச் சமுதாயமாக இருந்துள்ளது. எனவே மேற்கூறிய பத்து ஆளுமைகள் சிலவற்றில் மிக்கோனாக ஆண் மகன் இருப்பினும் எனக் கூறுகிறார். இன்றைய வாழ்விலும் இவ் ஆளுமைகள் ஒத்து இருக்குமேயானால் இவ்வாழ்க்கையில் உரசல்கள் தவிர்க்கப்படுவது உறுதி. எனினும், இக்குணங்கள் ஒத்தில்லாத தம்பதியர் ஒத்து வாழ்வதையும், இன்றைய நாளில் காண முடிகிறது. தொல்காப்பியர் காதல் வயப்படும் ஆணும், பெண்ணும் அறிவுவழி செல்ல வேண்டும் என்பதை அவர்களின் முதல் சந்திப்பிலேயே எச்சரித்து விடுகிறார். மேற்கூறிய பத்து ஆளுமைகள் பெரும்பான்மை ஒத்து இல்லாவிட்டால் அது பிரிவுக்கு வழி வகுக்கும் என்பதே அவர் கருத்து என அறியப்படுகிறது.

சந்தித்த ஆணும், பெண்ணும் காதல் வயப்பட்ட பின்பு ஒருவர் விருப்பத்தை இன்னொருவர் புரிந்து கொள்ளுதல் அவசியம். ஆனால் இதற்கு வாய் வார்த்தைகள் தேவையில்லை. கண் என்னும் ஊடகத்தின் வாயிலாகக் கருத்தை சொல்பவர் கேட்போரிடம் எவ்வகைத் தடங்கலுமின்றி தெரிவித்திட முடியும் என்கின்றார் தொல்காப்பியர்.

நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக்
கூட்டி யுரைக்கும் குறிப்புரையாகும்


பத்துக் குணங்களின் ஒன்றாகிய அறிவால் ஒத்த ஆண் பெண்ணால் தான் பிறர் அறியாமல், வாய்மொழி இல்லாமல் உள்ளக் கருத்தை ஒருவருக்கொருவர் தெளிவாக உணர்த்த முடியும் என்பது தொல்காப்பியர் எண்ணம். ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான பத்து ஆளுமைக் குணங்களைக் கூறிய தொல்காப்பியர் பெருமையும், உரனும் ஆணுக்குத் தேவையான கூடுதல் ஆளுமைப் பண்புகளாகக் குறிப்பிடுகிறார்.

பெருமையும் உரனும் ஆடுஉ மேன

அறிவு, ஆற்றல், புகழ், கொடை, ஆராய்தல், நல்லொழுக்கம், நட்பு, பழி பாவம் அஞ்சுதல் ஆகியவை பெருமைக்கும், பிடிப்பான கொள்கை, கலங்காத துணிவு உரனுக்கும் பொருளாகக் கூறப்படுகிறது.

ஆண்மகன் இல்லறத் தலைவனாகிற அதே நேரத்தில் சமுதாய நடவடிக்கைகளிலும் பங்கு கொள்கிறான். இல்லறம், சமுதாயம் இரண்டிலும் அறிவும், நற்குணங்களும், கொள்கைப் பிடிப்பும் முடிவெடுக்கும் துணிச்சலும் அவசியம் என்பதைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். அதேபோல் வீட்டில் மட்டும் தலைமை ஏற்கும் பெண்ணுக்கு அவர்கால வழக்கப்படி சில ஆளுமைப் பண்புகளைக் குறிப்பிடுகிறார்.

அச்சமும், நாணமும், மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்குரிய


என்கிறார். இக்காலப் பார்வைப்படி இச்சொற்கள் பெண்ணடிமைத்தனத்தின் செயல்பாடு என்றாலும், அக்காலச் சமுதாய அமைப்பை நமக்குக் கிடைத்திருக்கக் கூடிய இலக்சியச் சான்றுகள் கொண்டு எண்ணிப் பார்க்க வேண்டும். மன்னர்கள் ஆட்சியின் கீழ் பரப்பரப்பற்ற - போட்டிகள் குறைந்த தேவைகள் குறைந்த - வேளாண்மை சிறுதொழில்கள் மட்டுமே உள்ள மனிதப் பண்புகள் நிறைந்த - மாறுபட்ட சிந்தனைகள் இல்லாத சமுதாயமாக இருந்த காரணங்களினால் பெண்களின் பங்களிப்பு சமுதாயத்திற்கு தேவைப்படாத காலமாய் இருந்தது. அதனால் பெண்ணின் வாழ்க்கை இல்லறத்திற்குள்ளேயே நிறைவு பெற்றது. அதனால் தொல்காப்பியர் காலப்பெண் அச்சம், நாணம், மடம் நிறைந்தவளாகவே இருந்திருப்பாள். ஆயினும் அறிவு நிரம்பப்பட்டவள் என்பதை உணர்த்துகிறார் தொல்காப்பியர்.

காதல் வயப்பட்ட ஆணும், பெண்ணும் தனித்திருந்த தங்கள் காதலை வெளிப்படுத்துகின்ற தருணத்தில் பெண் தன்னுடைய வேட்கையைத் தன் காதலனிடம் கூறமாட்டாள். காதலியின் அக உணர்வைப் புரிந்து கொண்ட காதலன் அவளிடம் கேட்கும் பொழுது கூட அதைத் தன்வார்த்தைகளால் கூறாது புதுமண்கலத்தில் ஊற்றப்பட்ட நீரானது புறத்தே கசிவது போல தன் குறிப்பால் வெளிப்படுத்துவாள் என்கின்றார். தனித்திருக்கும் வேளையிலும் தன் புலன்களை அடக்கும் ஆளுமைப் பண்புகொண்ட அறிவுசால் பெண்ணின் தலைமை இல்லறத்தை இனிது நடத்தும் என்பதை தொல்காப்பியர் புலப்படுத்துகிறார். காதல் வயப்பட்ட பெண் வரம்புக் கடக்காதவளாக இருத்தல் நலம் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். காதலனும், காதலியும் பழகும் காலத்தில் யாருக்கும் தெரியாமல் சந்திக்கும் இடத்தைப் பெண்தான் தீர்மானிக்கிறாள். காரணம் தனக்குப் பாதுகாப்பாகவும், தங்கள் காதல் குறிப்பிட்ட காலம் வரை பிறர்க்குத் தெரியாமல் இருப்பதே நலம் என்று கருதியும் காதலி சந்திக்கும் இடத்தைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். ஆண் மகன் வரம்பு மீறினால் அதுகூட அவளுக்கு அறமில்லை என்ற காரணமும் இப்பொறுப்பை அவள் ஏற்கச் செய்கிறது.

அவன் வரம்பிறத்தல் அறந்தனக்கின்மையின்
களம் சுட்டும் கிளவி கிளவியதாகும்
தான் செலற்குரிய வழியாகலான


என களவுக் காலத்திலும் பெண்உணர்வுவழி ஒதுக்கி அறிவுவழிச் செல்ல வேண்டுமென விரும்புகிறார். திருமணத்திற்கு பின் பெண்ணுக்கு சில கூடுதல் பொறுப்புகள் அவசியம் என்கின்றார்.

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்


என்கின்றார். அறிவு முதலான பத்து ஆளுமைக்களைக் கொண்ட பெண்ணால்தான் எப்படிப்பட்டச் சூழலிலும் ஆணின் அன்பு மாறுபட்டு சென்ற காலத்தும், கற்பு, காமம், ஒழுக்கம், மென்மை, பொறை, நிறை, விருந்து, சுற்றம் காக்க முடியும் என்பது காப்பியர் கருத்து. பெண்ணுக்கு மேலும் சில கூடுதல் பண்புகளைக் கூறுகிறார்.

தாய்போல் கழறித் தழீஇக் கோடல்
ஆய்மனைக்கிழத்திக்கும் உரித்தென மொழிப


அதுபோல் தலைவனின் புகழுக்கு இழுக்கு வராமல் நடந்து கொள்ளுதலையும் வலியுறுத்துகிறார். கணவன் தன்னோடு ஒத்த சிறப்புகள் அல்லது மிக்க சிறப்புகள் கொண்டவனாயிருப்பினும் பெண் அவனிடம் தன்னைப் புகழ்ந்து கூறுதலைத் தவிர்த்து விடுதல் அவசியம் என்கின்றார்.

தற்புகழ் கிழவி கிழவன்முன் கிளத்தல்
எத்திறத்தானும் கிழத்திக்கில்லை


இவ்விடத்தில் தொல்காப்பியர் ஆணின் உளவியலை ஆண் வழி நின்று விளக்குகிறார். மிக்க அன்புடையவனாக இருப்பினும் மனைவி உண்மையிலேயே தன்னைவிட உயர்ந்தவளாக இருந்தாலும் ஆண்மனம் அதை ஏற்றுக் கொள்ளாது. மாறாக, எதிர்ச்செயல்களை விளைவிக்கும் என்பதை சமுதாயம் வழி நின்று விளக்குகிறார். இச்சமுதாயம் பெண்ணைவிட ஆணே உயர்ந்தவன் என்ற கருத்துடையது. அக்கருத்தே ஆண்மகன் எண்ணத்திலும் ஊறியிருக்கும். எனவே குடும்பத்தில் இலக்கணம் குறைய வாய்ப்புள்ளது என்பதால் அதைத் தவிர்க்க அறிவுறுத்துகிறார்.

தொல்காப்பியர் ஆணாதிக்கச் சமுதாயத்தைச் சார்ந்தவர். அக்காலச் சமுதாயத்தில் தோன்றிய ஆண் பெண்ணுக்கு இடையே ஏற்படும் காதலைக் கூறுகிறார். இல்லறத்தில் கணவன் மனைவியாக நுழையப்போகும் களவியல் காதலன் காதலிக்குத் தேவையான பத்து ஆளுமைப் பண்புகளைக் குறிப்பிட்டு களவு கற்பு இருகாலத்திலும் உணர்ச்சிவழிக் காதலை அறிவுவழிச் செலுத்தினால் நல்ல இல்லறத் தலைவர்களாக முடியும் என்கின்றார். பொதுவான ஆளுமைப் பண்புகளைக் குறிப்பிட்டு இருவருக்கும் தேவையான தனிச்சிறப்பு ஆளுமைப் பண்புகளையும் குறிப்பிட்டு பெண்ணுக்கு தேவையான கூடுதல் பொறுப்புகளையும் சுட்டிக்காட்டுகிறார். அவர் குறிப்பிட்ட குணநலன்களை உடைய ஆணும், பெண்ணும் வீட்டுக்கும் நாட்டுக்கும் தேவை என்னும் தன் விருப்பத்தை களவியல், கற்பியல் ஆண் பெண் மீது ஏற்றிக் கூறுகிறார். இப்பண்புகளை உடையோரின் காதல் வாழ்க்கை சிறக்கும் என்பது தொல்காப்பியரின் கருத்து.

நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தொல்காப்பியத்தில் காதல்

Post by Aathira on Mon May 31, 2010 5:38 pm

நல்ல பதிவு. காதலுக்கும் இலக்கணம் சொன்ன ஒரே மொழி தமிழ் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.. நன்றியும் வாழ்த்துக்களும் சிவா... நன்றி


[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: தொல்காப்பியத்தில் காதல்

Post by ஹாசிம் on Mon May 31, 2010 5:42 pm

அருமையான பதிவு தமிழ்ததாய் உங்களால் பெருமிதம் அடைகிறாள் அவள் புகழ் உரைப்பதால்
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: தொல்காப்பியத்தில் காதல்

Post by balakarthik on Mon May 31, 2010 5:47 pm

Aathira wrote:நல்ல பதிவு. காதலுக்கும் இலக்கணம் சொன்ன ஒரே மொழி தமிழ் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.. நன்றியும் வாழ்த்துக்களும் சிவா... நன்றி

ரிப்பீட்டு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தொல்காப்பியத்தில் காதல்

Post by ரிபாஸ் on Mon May 31, 2010 5:48 pm

ஹாசிம் wrote:அருமையான பதிவு தமிழ்ததாய் உங்களால் பெருமிதம் அடைகிறாள் அவள் புகள் உரைப்பதால்

சியர்ஸ் சியர்ஸ் சூப்பர் ஜி வாழ்த்துக்கள்


Last edited by ரிபாஸ் on Mon May 31, 2010 6:03 pm; edited 2 times in total
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: தொல்காப்பியத்தில் காதல்

Post by Aathira on Mon May 31, 2010 5:54 pm

balakarthik wrote:
Aathira wrote:நல்ல பதிவு. காதலுக்கும் இலக்கணம் சொன்ன ஒரே மொழி தமிழ் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.. நன்றியும் வாழ்த்துக்களும் சிவா... நன்றி

ரிப்பீட்டு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
யாருப்பா அது ரிப்பீட்டு கொடுத்துட்டு அப்பீட் ஆகரது? சுத்த சோம்பேறி... ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: தொல்காப்பியத்தில் காதல்

Post by balakarthik on Mon May 31, 2010 5:56 pm

Aathira wrote:
balakarthik wrote:
Aathira wrote:நல்ல பதிவு. காதலுக்கும் இலக்கணம் சொன்ன ஒரே மொழி தமிழ் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.. நன்றியும் வாழ்த்துக்களும் சிவா... நன்றி

ரிப்பீட்டு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
யாருப்பா அது ரிப்பீட்டு கொடுத்துட்டு அப்பீட் ஆகரது? சுத்த சோம்பேறி... ஜாலி ஜாலி

நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தொல்காப்பியத்தில் காதல்

Post by கோவை. மு. சரளா on Tue Aug 10, 2010 1:44 pm

அறிவு முதலான பத்து ஆளுமைக்களைக் கொண்ட பெண்ணால்தான் எப்படிப்பட்டச் சூழலிலும் ஆணின் அன்பு மாறுபட்டு சென்ற காலத்தும், கற்பு, காமம், ஒழுக்கம், மென்மை, பொறை, நிறை, விருந்து, சுற்றம் காக்க முடியும் என்பது காப்பியர் கருத்து. பெண்ணுக்கு மேலும் சில கூடுதல் பண்புகளைக் கூறுகிறார்.

// போதும் இலக்கியத்திற்கே இலக்கணம் வகுத்தது எங்கள் திறமைகளை பூட்டி வைத்து பூவை போல கசக்க நினைக்கும் உங்கள் வஞ்சக மனங்களை மாற்றுங்கள் தொல்காபிய்ரும் ஆண் என்பதால் பெண்ணுக்கான பூட்டு வலுவாக போடப்பட்டது அன்றே, இன்றேனும் திறந்திடுங்கள் ஆரோக்கியமான உயிரால் மட்டுமே ஆரோக்கியமான உயிரை உருவாக்க முடியும், ஊனப்பட்ட உயிரால் ஊனப்பட்ட உயிரை தான் உருவாக்க முடியும் பெண்ணாய் பார்க்காமல் சக உயிராய் மதியுங்கள் // தொல்காப்பியம் நல்லதை சொன்னாலும் சொல்லப்பட்ட விதத்தில் சமநிலை இல்லை

கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 264
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum