ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜுனியர் விகடன்
 Meeran

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 ayyasamy ram

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 ayyasamy ram

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 ayyasamy ram

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 ayyasamy ram

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 ayyasamy ram

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 ayyasamy ram

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ayyasamy ram

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 sugumaran

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 மூர்த்தி

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஏழுவின் ஐ.பி.எல் அல்ல, இது இ.பி.எல்

View previous topic View next topic Go down

ஏழுவின் ஐ.பி.எல் அல்ல, இது இ.பி.எல்

Post by balakarthik on Sat May 15, 2010 6:17 pm

அன்று எங்கள் கல்லூரியில் இரண்டாமாண்டு மின்னியல் துறைக்கும், மூன்றாமாண்டு இயந்திரவியல் துறைக்கும் கிரிக்கெட் போட்டி. ஏழு ஒரு நல்ல ஸ்பின்னர். சொல்லப் போனால் நாங்கள் இறுதிப் போட்டி வரை வந்ததற்கு முழுக் காரணமும் அவன் தான். எங்கள் கெட்ட நேரம் அதற்கு முந்தைய இரவு தலை ஃபுல் மப்பு. வழக்கம் போல காலையிலும் போதையுடனே கிரவுண்டிற்கு வந்தான். பாலாஜிதான் அணி கேப்டன்.
மச்சி. டாஸ் போடப் போறாங்க. என்ன எடுக்கலாம் என்றான் பாலாஜி.
மறக்காம டாஸ் போட்ட காச எடுத்துட்டு வந்துடு மச்சி என்ற ஏழுவை மிதித்துவிட்டு டாஸ் தோற்க சென்றான் பாலாஜி.
நான் ஏழுவிற்கு மோரும், மற்றவர்களும் ஆரஞ்சு ஜூசும் வாங்கி வந்தேன். மோரை குடித்த ஏழு கேட்டான் ஒரு கேள்வி ”இதுக்கு ஏன் ஆரஞ்சுன்னு பேரு வந்தது தெரியுமா?”
தல ஃபுல் ஃபார்மில் இருந்தத்தை அறிந்த நான் நீயே சொல்லு என்றேன்.
அதுக்குள்ள பதினோரு சுளை இருக்கும் மச்சி. ஆறும் அஞ்சும் பதின்னொனுதானே என்றவனை அடிக்கும் நிலையில் நானின்ல்லை. அவனை நம்பித்தானே மேட்ச்சே இருக்கு. டாஸ் தோத்த பாலாஜி வந்தான். “மச்சி.பவுலிங். ஓக்கேதானே?”
30 ரன் எடுத்த மேட்ச்சில் கூட ஏழு ஏழு விக்கெட் எடுத்து ஜெயிக்க வைத்தான். அப்படியிருக்க பாலாஜி டாஸ் வென்று பவுலிங் எடுக்க வாய்ப்பில்லை என்பதை நாங்களறிவோம். கையில் மோர் பாக்கெட்டுடன் களமிறங்கிய ஏழு சொன்னான் “பெப்சி கோக்குன்னு விளம்பரத்தில் வர வேண்டியவனை மோருக்கு ஆக்ட் பண்ண வச்சிட்டியேடா. அட்லீஸ்ட் ஒரு சன்ரைஸ்க்காவது விளம்பரம் பண்ணியிருக்கலாம்
முதல் ஓவரை வீச சென்றான் பாலாஜி. ஃபீல்டிங் செட்டப் செய்து கொண்டிருந்தான். ” ஏழு.ஸ்லிப்புல நில்லு” என்று கத்தினான்.
நானே நிக்க முடியாம ஸ்லிப் ஆயிட்டு இருக்கேன்.கேட்ச்ச விட்டா பர்வால்லையா என்று வடிவேலுவைப் போல கேட்டான்.
கடுப்பேத்தாத.ஃபைன் லெக்லயாவது நில்லு.
லெக்கு சரியா நிக்க மாட்டேங்குது. அதான் மச்சி பிரச்சினை.
சரி.பாயிண்ட்டுல நில்லு.
எவன்டா இவன். லெக்லயே நிக்க முடியலன்னு சொல்றேன். நீ வேற பாயிண்ட்டுல நிக்க சொல்ற. நான் என்ன சர்க்கஸ்காரனா என்றவனை முறைத்துக் கொண்டே எங்கேயாச்சும் நில்லு என்றான் பாலாஜி.
நாலு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள். ஏழு பால் போடு என ஏழுவை அழைத்தான் பாலாஜி. படு ஸ்டைலாக நடந்து வந்து பந்தை வாங்கிய ஏழு அமபையரிடம் சென்று எஸ்.பி என்று சொல்லிவிட்டு முதல் பந்தை போட்டான்.நோ பால் என்ற அம்பையர் காட்(guard) சொல்லவில்லை என்றார். சண்டைக்கு சென்றான் ஏழு,
நான் ஹாஃப் ஸ்பின்னர். அதுக்குத்தான் எஸ்.பி(SP) ன்னு சொன்னேனே என்றவனை அங்கேயே அடித்தான் பாலாஜி. ஒழுங்க காட் சொல்லிட்டு போடு என்று மிரட்டி நகர்ந்தான். அவன் காதில் விழும்படி சத்தமாக சொன்னான். “முருகன், பிள்ளையார், ஜீஸஸ்”.
பின் பாலாஜி வந்து கெஞ்சிக் கேட்டவுடன் ரைட் ஆர்ம் ஆஃப் ஸ்பின் என்று சொல்லிவிட்டு முதல் பந்திலே விக்கெட் எடுத்தான். சந்தோஷத்தில் துள்ளியது எங்கள் டீம். அந்த ஓவரில் மீதிப் பந்துகளில் ரன் ஏதும் அடிக்கவில்லை. ஆறு பந்து முடிந்ததும் ஏழு ஏழாவது பந்தை வீச வேண்டும் என்று அடம் பிடித்தான். ஏண்டா என்று ஓடிவந்தான் பாலாஜி சோகமாக.
நீதானே மச்சி. ஏழு பால் போடுன்னு முதல்ல சொன்ன. ஆறு பால் தான் ஆயிருக்கு என்றவனிடம் என்ன சொல்ல முடியும்? கோச்சிக்கிட்டு விக்கெட் எடுக்கவில்லை என்றால் பாலாஜியை காய்ச்சி விடுவார்கள். பாலாஜியை ஓரங்கட்டி விட்டு நானே ஏழுவை சமாளித்து போட வைத்தேன். எதிரணியை 62க்கு சுருட்டினோம்.
பிரேக்கில் வெஜ் ,நான் வெஜ் என இரண்டும் இருந்தது. நான் வெஜிட்டேரியன் என்றபடி வந்த ஏழுவை எங்கள் வகுப்பிற்கு கோவையில் இருந்து வந்த புது ஃபிகரான மாமி வந்து வாழ்த்தியது. குதுகலித்த ஏழு சாப்பிடறியா என்றான். ம்ம்ம் நான் சைவம் என்றது அந்தச் சிலை. நானும்தான் என்றான் ஏழு.
நான் வெஜ் சொன்னிங்க இப்போ.
அப்போ Non veg. இப்போ நான் veg என்றான்.
எப்பவுமே Naan veg தான்டா என்ற என்னைப் பார்த்து ஹாய் என்றாள். வளராத தாடியைத் தடவிக் கொண்டே நகர்ந்த ஏழு புலம்பினான் “gap விட மாட்டேனே.புதுசா ஒன்னு வந்து உடனே புடிச்சுடுவான்” என்றவன் காதில் சொன்னேன்
”Spinners seldom get new ball da”


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஏழுவின் ஐ.பி.எல் அல்ல, இது இ.பி.எல்

Post by balakarthik on Sun May 16, 2010 1:52 pm

அன்று வழக்கம்போல தேவி பாரில் பீராபிஷேகம் முடிந்து, தேவி பேரடைசில் படம் பார்த்துக் கொண்டிருந்தோம். உன்னைக் கொடு என்னைத் தருவேன் என்ற அந்தக் காவியத்தை அரை மப்பிலும் முழுமையாக கண்டு களித்தார் ஏழு. அரங்கிற்குள் பாலாஜி மறைத்து எடுத்து வந்த பியர் பாட்டில் ஏழுவின் கண்களில் பட்டுவிட, எங்களை ஏமாற்றி அதில் பாதியை அடித்து விட்டான். வெளியே வந்தவன் அடுத்தக் காட்சிக்காக நின்றுக் கொண்டிருந்தவர்களிடம் சென்றான்.

அய்யா.அம்மா.. கெஞ்சிக் கேட்டுக்கறேன். இந்தப் படத்துக்கு மட்டும் போயிடாதீங்க.

ஏண்டா இப்படி செய்ற என்று அடித்து இழுத்து வந்தான் ஆறு. செஞ்ச பாவத்த இப்படியாவது கழுவிக்கலாம்ன்னு பார்த்தேன் மச்சி என்றான்.

வெளியே வந்தவனை பஸ்ஸில் ஏற்றுவதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது. இவன் ஏறும்போது கண்டக்டர் சாந்தி எல்லாம் இறங்கு என்று கத்திக் கொண்டிருந்தார். எதிரில் இறங்கிய ஃபிகரிடம் கேட்டார் ஏழு

சிஸ்டர். உங்க பேரு சாந்தியா?.

முறைத்துக் கொண்டே சென்றாள் சாந்தி. ச்சே. ஃபிகர். ச்சே. அந்தப் பெண். பஸ்சில் கொஞ்சம்தான் கூட்டம் என்றாலும் நாங்கள் அனைவரும் ஃபுட்போர்டிலே நின்றுக் கொண்டிருந்தோம். ஏழுவும் எங்களோடு வந்து சேர்ந்துக் கொண்டான். கையிலிருந்த புத்தகத்தை ஜன்னலோர ஆண்ட்டியிடம் கொடுத்தான். அவரும் முறைத்துக் கொண்டே வாங்கிக் கொண்டார்.

ஃபுட்போர்டுல நிக்கறவங்க டிக்கெட் எடுத்தாச்சா? ரெட் சட்டை..(ஏழுவைத்தான்)எங்க போறீங்க என்றார் கண்டக்டர்.

டிக்கெட் எடுத்தா நான் சொர்க்கதுக்கு. இவனுங்க எல்லாம் நரகத்துக்கு என்றான் ஏழு.

மெலிதாக சிரித்த கண்டக்டர், சொல்லுப்பா. அடுத்த ஸ்டாப்புல செக்கிங் இருக்காங்க. எங்க போனும் என்றார்.

ஹாஸ்டலுக்கு என்றான் ஏழு.

நக்கலா?இந்த முறை முறைந்துக் கொண்டே சொன்னார்.

ஆறு..அடையாறு.. மானிக் பாட்ஷா ரேஞ்சில் சொன்னான் ஏழு.

எத்தனை?

அதான் சொன்னேனில்ல. ஆறு.. அடையாறு.. என்றான் மீண்டும்.

24 ரூபாய் என்றபடி கைகளில் டிக்கெட்டை திணித்தார். 24 ரூபாயா என்று அலறியவன் கண்டக்டரிடம் கெஞ்சினான்.

சார். நான் ஸ்பான்சர்ஷிப்ல படிக்கிறேன் சார். எங்கம்மா கஷ்டப்பட்டு என்னைப் படிக்க வைக்கறாங்க சார். இவ்ளோ காசு கொடுக்க முடியாது. கொஞ்சம் பார்த்து போட்டுக் கொடுங்க சார்.

கடுப்பான கண்டக்டர் எங்களை முறைத்தார். நரகத்துக்கு போவாங்கன்னு சொன்னா சிரிக்கறியா? மவனே அவன்கிட்ட மாட்டிட்டு சாவுன்னு மனதுக்குள் நினைத்துக் கொண்டு திரும்பி விட்டோம்.

டிக்கெட் எடுக்கலன்னு அடுத்த ஸ்டாப்புல புடிச்சிட்டா போச்சு. எங்கிட்டவே விளையாடறிங்களான்னு எஸ்.கேனார்(அதாங்க.. பொலம்பினார்) அவர்.

கட்டண உயர்வை எதிர்த்து நூதன முறையில் மாணவர்கள் போராட்டம் என்று சொன்ன ஏழு, “தமிழக அரசே தமிழக அரசே: என்றுக் கத்த தொடங்கியதும் ஆறுவிற்கு உதற தொடங்கியது. அவனே பணத்தைத் தந்தான். ஏழுவிடன் நோட்டைக் கொடுத்த ஆண்ட்டி, இது என்ன வெயிட்டாவா இருக்கு? கைல வச்சிக்க முடியாதான்னு கோவத்துடன் தந்தது.

நோட்டை வாங்கிய ஏழு சொன்னான்,” நாங்க மெக்கானிக்கல் ஸ்டூண்ட்ஸ் ஆண்ட்டி. மெக் வெய்ட்டு தெரியுமில்ல”

டேய்.பேசஞ்சர் கிட்ட கலாட்டா பண்ணா போலிஸ் ஸ்டேஷன்தான் போகனும் என்றார் கண்டக்டர்.

மச்சி. நம்மள எல்லாம் படிச்சு என்னத்த கிழிச்ச கேட்கறாங்களே. இவர கண்டக்டர் ஆகி என்னத்த கிழிச்சன்னு கேட்கவே முடியாதில்ல என்றான்.

கடுப்பான அவர், டிரைவரிடம் வண்டியை போலிஸ் ஸ்டேஷனுக்கு ஓட்ட சொன்னார். அந்த ரூட்டில் எந்த போலிஸ் ஸ்டேஷனுல்ம் இல்லை என்பதை அறிந்து சிரித்துக் கொண்டிருந்தோம் நாங்கள்.

உங்க ஃபோன் நம்பர் கொடுங்கண்ணா. இது ஏழு

எதுக்குடா? சும்மா வாயா மூடிட்டு வா என்றான் ஆறு.

இல்ல மச்சி. எத்தனை நாள்தான் கண்டக்டராவே இருப்பாரு. நாம ஒரு கால் போட்டா கண்”டா”க்டர் ஆயிடுவாரில்ல என்ற ஏழுவின் அறிவு செறிந்த ஜோக்கு புரியாமல் விழித்தார் நடத்துனர்.

மச்சி இப்படியே பேசிட்டு இரு. உன்னை ட்ரங்க அண்ட் ட்ரைவ்ல புடிச்சி உள்ளப் போட போறாங்க என்றேன் நான்.

டிரைவர் தான்டா ஓட்டறாரு. என்னை ஏன் புடிப்பாங்க?

நீயும் தண்ணியடிச்சிட்டு எல்லோரையும் ஓட்டிட்டுத்தானே வற்ர என்ற என்னை அடிக்க மொத்த குழுவும் துரத்தியது.


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஏழுவின் ஐ.பி.எல் அல்ல, இது இ.பி.எல்

Post by கலைவேந்தன் on Sun May 16, 2010 2:06 pm

நலலா அருமையா கதை நகர்த்தும் விதம் கண்டு அதிசயிக்கிறேன்..

கிரிக்கெட் பற்றிய அறிவு இருப்பதால் முதல் கதையை நன்கு ரசிக்க முடிந்தது...

இளசுகளின் இரண்டாவது கொட்டம் யதார்த்தமாக இருந்தது,,,

இது எல்லாம் உங்கள் சொந்த அனுபவம் போல தெரிகிறது கார்த்திக்...

அசத்துறீங்கப்பு...

புதிதாக எதுவும் பதிவிடும் போது எனக்கு ஒரு தனிமடல் அலர்ட் கொடுங்க கார்த்திக்...

மிஸ் பண்ணாம முதல் ஆளா படிக்க ஆசை...

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஏழுவின் ஐ.பி.எல் அல்ல, இது இ.பி.எல்

Post by balakarthik on Sun May 16, 2010 2:08 pm

கலை wrote:நலலா அருமையா கதை நகர்த்தும் விதம் கண்டு அதிசயிக்கிறேன்..

கிரிக்கெட் பற்றிய அறிவு இருப்பதால் முதல் கதையை நன்கு ரசிக்க முடிந்தது...

இளசுகளின் இரண்டாவது கொட்டம் யதார்த்தமாக இருந்தது,,,

இது எல்லாம் உங்கள் சொந்த அனுபவம் போல தெரிகிறது கார்த்திக்...

அசத்துறீங்கப்பு...

புதிதாக எதுவும் பதிவிடும் போது எனக்கு ஒரு தனிமடல் அலர்ட் கொடுங்க கார்த்திக்...

மிஸ் பண்ணாம முதல் ஆளா படிக்க ஆசை...

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஏழுவின் ஐ.பி.எல் அல்ல, இது இ.பி.எல்

Post by சரவணன் on Sun May 16, 2010 3:27 pm

நல்ல நகைச்சுவை உணர்வோடு உள்ளது,
மனமார்ந்த வாழ்த்துகள் & பாராட்டுக்கள்!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஏழுவின் ஐ.பி.எல் அல்ல, இது இ.பி.எல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum