ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

குறுங்கவிதைகள்....
 ayyasamy ram

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மகப்பேறு

View previous topic View next topic Go down

மகப்பேறு

Post by செரின் on Tue Jun 30, 2009 3:03 pm

சாதாரணமாக மகப்பேறு உண்டாகும் காலகட்டங்களை மூன்று பகுதிகளாக முதல் பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாம் பகுதி என்று பிரித்து, குழந்தையின் வளர்ச்சி, இயக்கம், உடலமைப்புக்கள் என்று அனைத்தையும் அறியும் வண்ணம் மருத்துவர்கள் செயல்படுவர். குழந்தையின் மாறுபட்ட வளர்ச்சியை அளவறிந்து செயல்படுவது போலவே தாயின் உடல் மாற்றங்களையும், மருத்துவர்கள் கவனத்தில் கொள்வர்,. தாய்மைப் பேறு அடைந்த உடனேயே பெண்ணின் கருப்பையின் வாய் மென்மையாக (SOFT) மாறிவிடும். குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப கர்ப்பப்பையும் விரியும். எட்டாவது வாரத்தில், டென்னிஸ் பந்து அளவில் இருக்கும். இதை, வயிற்றுப் பகுதியை சோதித்தால் தெரியாது. பன்னிரண்டாம் வாரம் இடுப்பு முன் எலும்பிற்கு மேல் சற்றே பருமனாக கர்ப்பப்பை தெரியும். பதினாறாம் வாரம் இடுப்புமுன் எலும்புக்கும், தொப்புளுக்கும் இடைவரை விரியும். இருபதாவது வாரத்தில், தொப்புளுக்குக்கீழே இரண்டு விரற்கடை இடைவெளியில் கர்ப்பப்பை விரியும். குழந்தையின் துடிப்பு, இயக்கம் தெரியும் நிலையில் வயிற்றைப் பார்த்தாலே கருப்பையின் விரிந்த நிலையைத் தெரிந்து கொள்ளலாம். இருபத்தி நான்காம் வாரம் தொப்புள் வரை விரிந்திக்கும். கர்ப்பப்பை இருபத்தி எட்டாம் வாரம், அதையும் தாண்டி, கீழ் நெஞ்செலும்புக்கு சற்றே கீழ்வரை விரிந்து, பரந்திருக்கும். முப்பதாவது வாரம் கீழ் நெஞ்செலும்பு வரை விரிந்திருக்கும் கர்ப்பப்பை, முப்பதாவது வாரத்தில், குழந்தையின் கீழ்நோக்கி இறங்கும் நிலையால், அடிவயிறு பெருத்தும், மேல் வயிறு இறங்கியும் தோற்றம் அளிக்கும். நாற்பதாவது வாரத்திலோ அடிவயிற்றின் தசைகள், தசைநாண்கள் இயங்கத் துவங்கும். கர்ப்பப்பையின் வாய் மிகவும் மென்மையாகவும், குட்டையாகவும், எளிதில் விரியும் தன்மையுடனும் இருக்கும். மகப்பேறு உண்டாகும் நாள் நெருங்க, கர்ப்பப்ப சுருங்கி விரியும் தன்மையும், கர்ப்பப்பை வாயும் திறந்து, குழந்தை வெளியேறும்.

தாய்மை அடைந்தவுடன் மாதவிலக்கு நின்றுவிடும். 4வது வாரம் முதல் 14வது வாரம் வரை மசக்கை எனும் அறிகுறிகள் வெளிப்படும். தலைச்சுற்றல், வாந்தி, உணவில் விருப்பமின்மை, புளிப்புச் சுவையான உணவுப் பொருள்களின் மேல் விருப்பம் போன்றவை ஏற்படும். 12ஆவது வாரம் தொடங்கி அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும். நாளாக, நாளாக கர்ப்பப்பையின் பெருக்கம் சிறுநீர்ப்பையை அழுத்துவதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். கர்ப்பப்பையோடு சேர்த்து வயிறும் விரிவதால் , வயிற்றுத் தோலும் விரியும். அதனால், வயிற்றில் வடுக்கள் தோன்றும். அய்ந்தாம் மாதம் முதல் குழந்தை திரும்புதல், வயிற்றில் உதைத்தல் போன்ற உணர்வுகளை தாயால் அறிய முடியும். குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு, குழந்தையின் இயக்கம், நல்ல அறிகுறியாக, தாயால் அறிய முடியும். குழந்தையின் வளர்ச்சியும் சீராகஅமைந்து, குழந்தை தலைப்பகுதி கீழாக இருந்து, சரியான உடல்நிலை தாய்க்கு இருந்தால் மகப்பேறு இயல்பாக நிகழக்கூடிய ஒன்றுதான். மருத்து-வர்-கள் அதற்கு உதவுபவர்கள்தான். தமிழகத்-தில் சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஏ.லட்சுமணசுவாமி முதலியார் அவர்கள் தலைசிறந்த மகப்பேறு மருத்துவர். எலிஸபெத் மகாராணிக்கே பிரசவம் பார்த்த தலைசிறந்த மருத்துவர். அவர் எழுதிய மகப்பேறு பற்றிய நூல் இன்றளவும் மகப்பேறு பற்றிய புத்தகங்களிலேயே தலை-சிறந்த நூலாக உலகம் முழுதும் மதிக்கப்-படுகிறது. மரு. பழனியப்பன், மற்றொரு தலைசிறந்த மகப்பேறு அறிஞர். பகுத்தறிவு-வாதி, நம் இயக்க ஆர்வலர். நம் தமிழர் தலைவரின் அன்புக்குப் பாத்திரமான இவர், சென்னை பெரியார் மருத்துவமனையில் ஆலோசகராகவும் தொண்டாற்றுகிறார்.

மகப்பேறு என்பது உயிருள்ளவையின் அடிப்படை இயல்பான இனப்பெருக்கம் தான். ஆனால், ஆறறிவு உள்ள மனிதனிடம்-தான் இந்த இயல்பான நிகழ்ச்சிக்கு எத்தனை மூடநம்பிக்கை உறைகள். சோதிடம் என்ற ஒரு முட்டாள்தனம் நம் மக்களை எப்படி-யெல்லாம் ஆட்டிப்படைக்கிறது. குழந்தை பிறந்த நேரத்தைக் கணக்கிட்டு, சாதகம் கணிக்கப்படுகிறது. குழந்தை பிறந்த நேரப்படி கணிக்கப்பட்ட சாதகங்கள் எத்தனை பொய்யாகி விடுகின்றன? உடனே சோதிடக்-காரன் (மக்களை ஏமாற்றியே பிழைப்பை நடத்தும் சுயநலக்காரன்) மருத்துவர் தப்பான நேரம் சொல்லி விட்டார் என சரடு விடுவான். பிறப்பு நேரம் என்றால் எது? தந்தை பெரியார் கேட்டதுபோல், வலி எடுத்து, தலை வெளியே வரும் நேரமா? இல்லை உடல் முழுதும் வெளியே வரும் நேரமா? இல்லை குழந்தை முதன்முதல் அழும் நேரமா? நாம் ஏற்கனவே கூறியதுபோல் கால் வெளியில் முதலில் வந்தால் அதை பிறந்த நேரமாகக் கொள்ளலாமா? மகப்பேறு மருத்துவமனை தவறான நேரம் காட்டும் கடிகாரம் இருந்தால் என்ன செய்வது? இதை நம்பி, செவ்வாய் தோஷம் என்று கூறி எத்தனை இளம்பெண்-களுக்கு திருமணமே நடக்காத நிலையை, சோதிடக்காரர்கள் உண்டாக்கி விடுகிறார்கள். மூலநட்சத்திரம் என்கிறானே? அதிலும் ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம் என்கிறான். இதிலும் ஆணாதிக்கம். எத்தனை, எத்தனை இளம்பெண்கள், மூலநட்சத்திரம் என்று மூலையில் உட்கார வைக்கப்படு-கின்றனர். இது எல்லாவற்றையும்விட ஒரு நகைக்க வைக்கும் செய்தி! தாய்மைப் பேற்றை அடைந்த பெண்ணின் பெற்றோர், மருத்து-வரிடம் வந்து, டாக்டர், இன்று நாள் சரியில்லை, நாளை முகூர்த்த நாள், நாளை அறுவை மருத்துவம் செய்து குழந்தையை எடுத்து விடுங்கள் என கூறுவதை நாங்கள் பலமுறை கேட்டிருக்கின்றோம். அதைப் போன்ற நிலையில் குழந்தையின் பிறப்பு நேரத்தை நிர்ணயிப்பது யார்? கடவுளா? விதியா? மருத்துவரா? பெண்ணின் பெற்-றோரா? அப்படி பெற்றோரின் விருப்பப்படி அறுவை மூலம் பிறக்கும் குழந்தையின் சாதகம் உண்மையானதா? நன்கு சிந்தித்துப் பாருங்கள்.

குழந்தையே இல்லை என்றால் மலடிப்-பட்டம், பெண்களுக்கு! பிறக்கின்ற குழந்தை-கள் பெண் குழந்தைகளாகவே அமைந்து-விட்டால், பெற்றவள் பீடையாகி விடுகிறாள்! பிறக்கின்ற குழந்தையின் சாதகம் கணிப்-பதிலும் ஊழல். இவனின் முட்டாள் தனத்தால் தொழிலில் தொய்வடைந்தால், குழந்தை மூதேவியாகி விடும்! அதுவே தொழில் வளர்ந்தால் அந்த குழந்தை ஸ்ரீதேவி,லட்சுமி என்றெல்லாம் தூக்கித் தலையில் வைத்து ஆடப்படும் நிலை!

இந்தக் காரணங்களால் பெண் குழந்தை-களுக்கு பல சிக்கல்கள். திருமணம், சீர்செய்தல் போன்றவற்றால் பெண் குழந்தைகள் குடும்-பத்திற்குச் சுமையாகக் கருதப்படுகிறது. அதனால் பெண் சிசுக்கொலைகள். இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்கள் சிசுவாக வந்ததிலிருந்து வளர்ந்து, மரணம் வரை தொல்லைதான்! அதனால்தான் பெரியார் அய்யா சொன்னார்கள். கருப்பப்பையே பெண்ணின் அடிமைத்தனத்திற்குக் காரணம், அதனால் அதை தூக்கி எறிந்துவிடு என்று! உலகில் தோன்றிய எந்தப் புரட்சிக்காரனுக்கும் தோன்றாத பெண்ணியச் சிந்தனை, பெரியார் அய்யா அவர்களுக்குத் தோன்றியதால்தான், அவருக்குப் பெண்கள், பெரியார் என்று பட்டம் கொடுத்தார்கள்! அவரின் வழியே, செம்மாந்த நடைபோடும் ஆசிரியர் வீரமணி அய்யா அவர்களும், அண்மையில் அம்மா பெயரை முதல் எழுத்தாகப் போடவேண்டும் என்று தீர்மானம் போட்டார்! ஏனென்றால் அம்மா என்பது உண்மை; அப்பா என்பது நம்பிக்கை அல்லவா!
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: மகப்பேறு

Post by sudhakaran on Tue Jun 30, 2009 3:22 pm

மிகவும் தேவையான கட்டுரை....நன்றி
avatar
sudhakaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 441
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: மகப்பேறு

Post by aravind on Tue Jun 30, 2009 6:07 pm

very good Index! please send me : sweetstar1980@yahoo.com

aravind
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: மகப்பேறு

Post by Guest on Tue Jun 30, 2009 6:24 pm

சூப்பர்


Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum