ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 ayyasamy ram

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 T.N.Balasubramanian

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

IAS - தலை நிமிரும் தமிழகம்!

View previous topic View next topic Go down

IAS - தலை நிமிரும் தமிழகம்!

Post by சிவா on Mon May 24, 2010 2:06 pmமனிதநேயம் பயிற்சி மையம் மகிழ்ச்சியில் துள்ளிக்கொண்டிருக்கிறது. காரணம்..?

- அங்கு படித்த லலிதா சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். தேசிய அளவில் 12 வது இடம் இவருக்கு சொந்தமாகி இருக்கிறது.

இயல்பான புன்னகை, கம்பீரமான பேச்சு, பேசும் விஷயத்தை அலசி ஆராயும் தன்மை, சமூகத்திற்கு தம்மால் முடிந்ததை செய்திட வேண்டும் என்ற உந்துதல்.. இத்தனையும் கலந்த கலவையாக இருக்கும் லலிதா விற்கு வயது 26. `மேக்-அப் 'பிற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் மிக எளிமையாகத் தோன்றுகிறார்.

பத்தாம் வகுப்புவரை இவரது கல்வியும், வாழ்க்கைச் சூழலும் பரந்து விரிந்ததாக இருந்திருக்கிறது. ஜம்மு காஷ்மீர், நாகாலாந்து, மராட்டியம், அசாம் போன்ற ஐந்தாறு மாநிலங்களைச் சுற்றிச்சுற்றி படித்திருக்கிறார். அங்கு கிடைத்த அனுபவங்கள் இவரை ஆழமான சிந்தனையாளராக மாற்றி இருக்கிறது."பல்வேறு மாநிலங்களில் வாழ்ந்து, அங்குள்ள மக்களிடம் பழகிய அனுபவம் இருப்பதால் எங்கும், யாரிடமும் என்னால் எளிதாக நட்பு பாராட்ட முடிகிறது. எல்லோரையும் ஒரே மாதிரி பாவிக்கிறேன். சாப்பாட்டு பிரச்சினை, மொழி பிரச்சினை எல்லாம் ஒரு பொருட்டாகவே எனக்கு தெரிவதில்லை. பத்து வயதிலே நான் நிறைய பெண் அதிகாரிகளை சந்தித்தேன். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நானும் உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டேன்..''-என்கிறார்.

இவரது தந்தை என்.ராஜேந்திரன் ராணுவத்தில் என்ஜினீயராக இருந்தவர். அவர் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றியதால், லலிதாவிற்கும் அங்கெல்லாம் வசிக்கும் வாய்ப்பு ஏற்பட் டிருக்கிறது. தாயார் தமிழரசி ஆசிரியையாக பணியாற்றியவர். அவர்களுக்கு லலிதா ஒரே மகள்.

பல்வேறு மாநிலங்களில் பள்ளிக் கல்வியை முடித்திருக்கும் உங்களுக்கு, அங்கு கிடைத்த மறக்க முடியாத அனுபவங்கள் என்ன?

"1989-ல் நாங்கள் ஸ்ரீநகரில் இருந்தபோது அந்தப் பகுதி மிக அமைதியாக பூலோக சொர்க்கம்போல் இருந்தது. 1995-ம் ஆண்டு நான் அங்கு மீண்டும் சென்றபோது அந்த பூலோக சொர்க்கம் பாலைவனம் போல் மாறி இருந்தது. தீவிரவாதத்தின் பாதிப்பை அப்போதே நான் உணர்ந்துவிட்டேன்.

நாகலாந்தில் மோன் என்ற பகுதி உள்ளது. அங்கு பெண்கள் நிர்வாண வாழ்க்கை நடத்துகிறார்கள். நதியில் குளித்துக்கொண்டிருப்பார்கள். காடுகளில் அலைந்து கடுமையாக உழைப்பார்கள். அவர்கள் வாழ்க்கை ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பதை உணர்ந் தேன். அங்குள்ள பெண்களை கிண்டல் செய்யும் ஆண்களால் உயிரோடு தப்பி வர முடியாது. அந்த ஆண்களை, தங்களுக்கு பிடித்துவிட்டால் பெண் களே திருமணம் செய்துகொள்வார்கள். அப்படி திருமணம் செய்துகொண்ட சில ஆண்களையும், பெண்களையும் நான் பார்த்திருக்கிறேன். நாகலாந் தில் அப்பாவுக்கு பணி முடிந்து திரும்பும்போது அவர்கள் கலாசாரப்படி எங்களுக்கு `தாவ்' என்ற வித்தியாசமான அரிவாளை பரிசாக அளித்தார்கள்.

நாகலாந்தில் உள்ள பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்தபோது ஆசிரியை ஒருவர் இன்னொரு மாணவியை அடிப்பதற்கு பதில் அடையாளம் தெரியாமல் என்னை அடித்துவிட்டார். பின்பு அவர் தப்பை உணர்ந்ததும் லிப்ஸ்டிக் போட்ட தன் உதடுகளால் என் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்து `சாரி' சொன்னார். நான் அன்று முழுக்க முகத்தைக் கழுவவில்லை, அந்த முத்தம் அழிந்துவிடக்கூடாதே என்று!''- இவ்வாறு தன் மறக்க முடியாத அனுபவங்களை விவரிக்கிறார்.

தந்தை பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற பின்பு திருச்சிக்கு வந்திருக்கிறார்கள். அங்குள்ள ஆர்.எஸ்.கே. பள்ளியில் பிளஸ்-டூ படித்தபோது லலிதாவிற்கு ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற ஆசை தோன்றியிருக்கிறது. அந்த ஆர்வத்தோடு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கற்க சேர்ந்திருக்கிறார்.

என்ஜினீயரிங் பட்டம் பெற்றதும் சென்னை விமான நிலையத்தில் இவருக்கு வேலை கிடைத்தது. வேலையில் தொடர்ந்தபடியே தன் ஐ.ஏ.எஸ். கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். மூன்று முறை அவர் எதிர்பார்த்தபடி தேர்வு முடிவு அமையாததால் நான்காவது முயற்சிக்கான முதல் வேலையாக, தனது வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். பின்பு முழு நேரமும் ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக படிக்கத் தொடங்கியிருக்கிறார்.

"முதல் நிலை மற்றும் மெயின் பரீட்சையை நன்றாக எழுதிவிட்டு இன்டர்விïவில் வெற்றிவாகை சூடுவதற்காக `சைதை துரைசாமியின் மனித நேயம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். இலவச பயிற்சி மையத்தில்' சேர்ந்தேன். அங்கு கிடைத்த பயிற்சியே நான்
சாதனை படைக்க உதவியது.

பல்வேறு துறைகளில் சிறப்பிடம் வகிப்பவர்களை எல்லாம் அழைத்துவந்து பயிற்சி தந்தார்கள். அடிக்கடி பல விதங்களில் எங்களுக்கு இன்டர்விï நடத்தினார்கள். அதில் நாங்கள் பதில் அளிப்பதை அப்படியே படமாக பதிவு செய்து எங்களிடமே தருவார்கள். அதை நாங்கள் போட்டுப் பார்த்து எங்களுடைய ஆளுமைத்திறன், தோற்றம் உள்பட அனைத்து விஷயங்களிலும் இருந்த குறைபாடுகளை களைந்தோம். எப்படிப்பட்ட கேள்வி வந்தாலும் அதை எதிர்கொள்ள முழுமையாக எங்களை தயார் செய்தார்கள். உணவு உள்பட எங்கள் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து சிறப்பாக பயிற்சியளித்தார்கள்....'' -என்கிறார்.

டெல்லியில் நடந்த ஐ.ஏ.எஸ். இன்டர்வியூ அனுபவம் எப்படி இருந்தது? டென்ஷன் ஆனீர்களா?"கடந்த இன்டர்வியூவில் எனக்கு டென்ஷன் இருந்தது. இந்த முறை கொஞ்சங்கூட டென்ஷன் இல்லை. என்னுடைய பதிலில் நான் யதார்த்தத்தையும், பாசிட்டிவ்வான கொள்கைகளையும் வெளிப்படுத்திக் காட்டினேன். தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது பற்றியும், பஞ்சாயத்து ராஜ் பற்றியும் கேள்விகள் எழுப்பியபோது என் அனுபவங்களைக் கலந்து யதார்த்தமாகவே பதிலளித்தேன்''

மிசவுரிக்கு நேரடி பயிற்சிக்கு செல்ல இருக்கும் இவர், பின்பு தமிழ்நாட்டிலே பயிற்சி கலெக்டராக பொறுப்பு ஏற்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

நீங்கள் கலெக்டர் ஆன பின்பு முன்னுரிமை கொடுக்கும் மூன்று திட்டங்களைப் பற்றி சொல்லுங்கள்?

"அரசு அறிவிக்கும் எல்லா திட்டங்களையும் அடித்தட்டு மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பேன். மனித நேயத்தை அனைவரிடமும் பரப்புவேன். எல்லோருக்கும் கல்வி கிடைக்க பாடுபடுவேன்''- என்கிறார், லலிதா.

23 வயது சண்முகப்பிரியா, ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் 36- வது இடத்தையும், தமிழக அளவில் 3- வது இடத்தையும் பிடித்திருக் கிறார். இவர் முதல் முயற்சியிலேயே முத்திரை பதித்திருக்கிறார். இவரது பெற்றோர்: என்ஜினீயர் ராஜசேகர்- லட்சுமி.

பத்தாம் வகுப்பு தேர்வில் வரலாறு, புவியியல் பாடத் தில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த சண்முகப்பிரியா, பிளஸ்-டூ தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெற்று ஏ.சி.காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பி.டெக் (பார்மசூட்டிகல்) படித்திருக்கிறார்.

"கல்லூரியில் படிக்கும்போது மூன்று ஆண்டுகள் என்.சி.சி.யில் இருந்தேன். அது எனக்கு மிகச் சிறந்த அனுபவங்களை தந்திருந்தது. தலைமைப் பண்பை வளர்த்தல், தலைமை தாங்கி முன்னெடுத் துச் செல்லுதல், குழுவை ஒருங்கிணைத்து நிர்வகித் தல் போன்ற பல சிறப்புக் குணங்கள் அப்போது எனக்கு கிடைத்தன. பயிற்சி முகாமில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடம் பிடித்திருக்கிறேன்''

முதல் முயற்சியிலேயே எப்படி சாதனை படைக்க முடிந்தது?

"நான் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பே அதற்கான முயற்சிகளில் இறங்கிவிட்டேன். மனிதநேயம் இலவச பயிற்சி மையத்தின் சிறப்பைப் பற்றி கேள்விப்பட்டதுமே, அதற்கான நுழைவுத்தேர்வு எழுதி, வென்று பயிற்சியில் சேர்ந்தேன். அங்கு மிக சிறப்பான பயிற்சி கிடைத்தது. அதுதான் இந்த வெற்றிக்கு அடிப்படை''

இந்த வெற்றிக்காக உங்களை எப்படி தயார் செய்தீர்கள்?

"நிறைய மாற்றங்களை எனக்காக நானே ஏற்படுத்திக்கொண்டேன். நான் ஒருபோதும் டீ, காபி பருகுவதில்லை. பால் எனக்கு பிடிக்காது. முன்பு ஐஸ்கிரீம் நிறைய சாப்பிடுவேன். சாக்லேட் சாப்பிடுவேன். அதை எல்லாம் குறைத்தேன். உடலுக்கும், உற்சாகத்திற்கும் தேவையான உணவுகளை உண்டேன்.

நமக்கு எல்லா விதத்திலும் தொந்தரவாக இருப்பது செல்போன்கள். அதை நான் நிரந்தரமாக `ஆப்' செய்து வைத்ததே நான் முதல் முயற்சியிலே வெற்றியடைய காரணமாக இருந்தது என்று கூறலாம். பலரும் படிக்கும் நேரத்தில் செல்போனில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். மிஸ்டுகால் வந்து அவர்களை தொந்தரவு செய்யும். தேவையற்ற அழைப்புகள் வந்துகொண்டே இருக்கும். ஐ.ஏ.எஸ்.சில் பாஸ் ஆன பின்புதான் நான் செல்போனை `ஆன்' செய்தேன். பொழுது போக்கிற்காக நான் நாளிதழ்களில் வரும் சுடோகு போட்டியை செய்வேன். என்னைப் பொறுத்த வரையில் எதையாவது படித்துக்கொண்டே இருக்க வேண்டும். புத்தகங்கள் படிக்காவிட்டால் எனக்கு பைத்தியம் பிடித்ததுபோல் ஆகிவிடும்"

இறுதிகட்ட இன்டர்வியூ அனுபவம் எப்படி இருந்தது?

"ஆந்திராவில் மருந்து பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சிறுவர்கள் சமீபத்தில் மரணமடைந்தார்கள். நான் பார்மசூட்டிகல் பயின்ற மாணவி என்பதால் அதைப் பற்றி என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். நான், `இப்படிப்பட்ட பரிசோதனைகளில் நியாயமுறைகளை கடைபிடிக்க எத்திக்கல் கமிட்டி இருக்கும். இந்த சம்பவத்தில் அந்த கமிட்டி தவறாக இயங்கி இருக்கிறது. குழந்தைகளுக்கான மருந்து என்றால்கூட அதை சோதனை செய்ய பெரியவர்களைத்தான் முதலில் பயன்படுத்த வேண்டும். சரியான அளவில் மருந்தை பயன்படுத்தவும் வேண்டும். அந்த நடைமுறைகளை எல்லாம் சரியாக கடைப்பிடிக்காமல் இருந்ததே மரணத்திற்கான காரணம்' என்றேன்.

`ஐ.எப்.எஸ். சர்வீஸ் கிடைத்தால் வெளிநாடுகளில் சென்று பணிபுரிவீர்களா? என்றார்கள். `என் நாட்டுக்காக பணியாற்ற எந்த நாட்டிற்கும் செல்வேன்' என்றேன்.

`இது ஆணாதிக்க சமுதாயம். இங்கே உங்களுக்கு முழு மரியாதை கிடைக்குமா?' என்றார்கள். `நான் அரசு சார்பில் பணியாற்றச் செல்லும் போது இந்த நாட்டின் பிரதிநிதி. என் பணியைத்தான் பார்க்க வேண்டும். நான் ஆணா, பெண்ணா என்று பார்க்கக் கூடாது' என்றேன்.

`ஜாதி விட்டு ஜாதி மாறி காதலித்தால், சில பகுதிகளில் அந்த ஜோடிகளை `கவுரவக் கொலைகள்' என்ற பெயரில் தீர்த்துக்கட்டி விடுகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் நடந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டார்கள். `கடும் நடவடிக்கை எடுப்பேன்' என்றேன். `ஒருவேளை உங்கள் உத்தரவுகளை உங்கள் நிர்வாகப் பகுதிக்கு உள்பட்ட போலீஸ் எஸ்.பி. நடைமுறைப்படுத்தாவிட்டால் அடுத்து என்ன செய்வீர்கள்?' என்று கேட்டார்கள். நான் உடனே, `இனிதான் என்னை ஐ.ஏ.எஸ்.க்கு தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். இதில் கிடைக்கும் பயிற்சி, அனுபவங்களை வைத்து நான் எடுக்கும் முடிவு நிச்சயம் மற்றவர்கள் பாராட்டும் விதமாக இருக்கும்' என்றேன். அதைக்கேட்டு இன்டர்வியூ குழுவினர் பாராட்டினார்கள்''- என்று சண்முகப்பிரியா விளக்கினார்.


சைதை துரைசாமியின் அன்புப் பரிசுலலிதா, சண்முகப்பிரியா இருவரும் நெருக்கமான தோழிகள். அவர்கள் இருவருக்கும் மனித நேய பயிற்சி மையத்தின் தலைவர் சைதை துரைசாமி பரிசுகள் வழங்கினார். அப்போது அவர், "இப்போது ஐ.ஏ.எஸ். சேவையில் இருப்பவர்களில் சிலரது பெயர் பளிச்சென்று பொதுமக்களுக்கு நினைவுக்கு வரும். இனி தங்கள் பெயரும் நினைவுக்கு வரும் விதத்தில் இவர்கள் எடுத்துக்காட்டாய் சேவையாற்றுவார்கள். இருப்பார்கள். மனித நேய விதை, இப்போது விருட்சமாக வளர்ந்திருக்கிறது. இனி இது தழைத்து வளரும். தமிழகம் தலை நிமிரும்..'' என்றார், பெருமிதத்தோடு!

***

ஞாயிறு மலர்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum