புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதிலே குழப்பமா..? Poll_c10மனதிலே குழப்பமா..? Poll_m10மனதிலே குழப்பமா..? Poll_c10 
83 Posts - 51%
heezulia
மனதிலே குழப்பமா..? Poll_c10மனதிலே குழப்பமா..? Poll_m10மனதிலே குழப்பமா..? Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
மனதிலே குழப்பமா..? Poll_c10மனதிலே குழப்பமா..? Poll_m10மனதிலே குழப்பமா..? Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மனதிலே குழப்பமா..? Poll_c10மனதிலே குழப்பமா..? Poll_m10மனதிலே குழப்பமா..? Poll_c10 
6 Posts - 4%
prajai
மனதிலே குழப்பமா..? Poll_c10மனதிலே குழப்பமா..? Poll_m10மனதிலே குழப்பமா..? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மனதிலே குழப்பமா..? Poll_c10மனதிலே குழப்பமா..? Poll_m10மனதிலே குழப்பமா..? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனதிலே குழப்பமா..? Poll_c10மனதிலே குழப்பமா..? Poll_m10மனதிலே குழப்பமா..? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதிலே குழப்பமா..? Poll_c10மனதிலே குழப்பமா..? Poll_m10மனதிலே குழப்பமா..? Poll_c10 
125 Posts - 54%
heezulia
மனதிலே குழப்பமா..? Poll_c10மனதிலே குழப்பமா..? Poll_m10மனதிலே குழப்பமா..? Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
மனதிலே குழப்பமா..? Poll_c10மனதிலே குழப்பமா..? Poll_m10மனதிலே குழப்பமா..? Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
மனதிலே குழப்பமா..? Poll_c10மனதிலே குழப்பமா..? Poll_m10மனதிலே குழப்பமா..? Poll_c10 
8 Posts - 3%
prajai
மனதிலே குழப்பமா..? Poll_c10மனதிலே குழப்பமா..? Poll_m10மனதிலே குழப்பமா..? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மனதிலே குழப்பமா..? Poll_c10மனதிலே குழப்பமா..? Poll_m10மனதிலே குழப்பமா..? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனதிலே குழப்பமா..? Poll_c10மனதிலே குழப்பமா..? Poll_m10மனதிலே குழப்பமா..? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதிலே குழப்பமா..?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 30, 2010 3:40 pm

ஒவ்வொருவரும் அன்றாட வாழ்வில் பல்வேறு மனநிலைக்கு ஆட்படுகிறார்கள். ஏமாற்றம், வருத்தம், இழப்பினால் ஏற்படும் துக்கம் என்பது போன்ற உணர்வுகளுக்கு தள்ளப்படுகின்றார்கள். ஆனால், நமது செயல்பாட்டின் திறமை, மகிழ்ச்சி, ஈடுபாடு ஆகியவற்றை பாதிக்கும் கடுமையான அல்லது நீண்டகால மனஅழுத்தம் ஒரு தற்காலிக வருத்தமாகாது. இது ஒரு நோயாகும். மூளையில் ஏற்படும் உயிரியல் இரசாயன சமச்சீரின்மையே இதற்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். மன அழுத்த நோயால் பாதிக்கப்படுவோரில் 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நவீன மருத்துவ முறைகளால் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்க முடியும். இந்த மருந்துகள் பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளாக அமையாது. சில சமயங்களில் நோய்க்கு சிகிச்சை அளிக்கும்போதோ அதற்குப் பிறகோ மருத்துவ ஆற்றுப்படுத்தலுக்கும் உடன்பட வேண்டியிருக்கும்.

மனநிலை ஒழுங்கின்மை என்று அழைக்கப்படும் மனஅழுத்த நோயினால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகிறார்கள். சில நேரங்களில் இது உயிருக்கே ஆபத்தாக அமைந்து விடுகிறது. எனினும், ஒருசிலரேதான் சரியான மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, தங்களுக்கு வந்திருக்கும் நோயை கண்டறிந்து கொள்கிறார்கள். சிகிச்சையை புறக்கணிப்பதால் ஏற்படும் இன்னல்களும் பொருளாதார இழப்பும் மலைப்பூட்டுவதாக அமைகிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் இத்தகைய நோயின் பாதிப்பு சர்வசாதாரணமாகக் காணப்படுகிறது. மன அழுத்தத்துடன் சிலர் வெறி போன்ற உணர்வுக்கும் ஆட்படுகிறார்கள். இவர்களுடைய உணர்வுகள் நிலையில்லாமல் தள்ளாடுகிறது. ஒரு சமயம் மகிழ்ச்சியாக இருக்கும் மன நிலையிலிருந்து மிகவும் வருத்தத்துக்குரிய நிலையை அடைகிறார்கள். இந்நோய்க்கு சரியான சிகிச்சை அளிக்காவிட்டால், ஏற்படும் துயரம் அளவிட முடியாததாகும். சுய மரியாதை இழப்பு, குடிப் பழக்கம், குடும்ப சூழ்நிலையில் பாதிப்பு, பணியில் தடுமாற்றம், ஊனம், சில தருணங்களில் மரணம் போன்றவற்றிற்கு மனஅழுத்தம் காரணமாகிறது. குழந்தைகளிடமும் இளைஞர்களிடமும் தற்கொலை மனப்பான்மைக்கும் இது வழிவகுக்கிறது.

மன அழுத்த நோயினால் நேர இழப்பு, உற்பத்தித் திறன் இழப்பு, உயிரிழப்பு, மருத்துவ சிசிக்சை போன்றவற்றால் ஆண்டொன்றுக்கு 15 முதல் 35 பிலியன் டாலர் வரை இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. மன அழுத்த நோய் தனிப்பட்டவரை மட்டுமல்லாது, அவரது குடும்பம் நண்பர்கள் குழாம் போன்ற பல்வேறு நிலைகளையும் பாதிப்பதால் சமுதாயத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இத்தனை கடுமையான தாக்கமும் இழப்பும் இருந்த போதிலும், இந்த நோய் பற்றி தகவலை தெரிவிப்பதற்கும் ஆராய்ச்சிப் பணிகளுக்கும் சிகிச்சை கல்விக்கும் செலவிடப்படும் தொகை மற்ற துறைக்களுக்கான ஒதுக்கீட்டுடன் ஒப்பிடுகையில் மிக சொற்பமே ஆகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இதைச் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். அவர்கள் தங்களைப் பழித்துக் கொள்வதுடன், சமூகமும் அவர்களைப் பழிக்கிறது. இதனால், இந் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பச் சூழலிலிருந்தும், நண்பர்கள் குழுவிலிருந்து தனிமையாக்கப்படுகிறார்கள். உண்மையில், இந்த நோயின் தன்மை உடன் இருப்பவர்களுக்கு தெரியுமேயானால், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் தகுந்த ஆதரவையும் சிசிக்சையையும் அளிக்க வகை செய்ய இயலும்.

மன அழுத்த நோய்க்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மன அழுத்தமும் அதிலே பல்வேறு வகைப்படும். மன அழுத்த நோய் குறிப்பாக வெறி போன்ற கடுமையான மன அழுத்தம் அனேகமாக பரம்பரையாகவே வருவதாக அண்மை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மன உலைச்சல், அழுத்தமான உறவில் ஏற்படும் முறிவு போன்ற சூழல்கள் இந்த நோய்க்கு வழி வகுக்கிறது. மரபணுவுக்கும் சுற்றுச் சூழலுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் பரம்பரை தன்மை குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நோயினால் பாதிக்கப்பட்வர்களை சில அடையாளங்கள் மூலம் கண்டறிந்து கொள்ளலாம். சக்தியை இழத்தல், ஞாபக மறதி, அளவுக்கு அதிகமாக பசி அல்லது தூக்கம், இல்லாமல் இருப்பது, முடிவெடுக்க முடியாத நிலைமை, தடுமாற்றம், குழப்பமான சிந்தனை, நம்பிக்கையற்ற தன்மை, படபடப்பு, தற்கொலை அல்லது இறக்க வேண்டும் என்று அடிக்கடி ஏற்படும் எண்ணம் போன்ற அறிகுறிகள் மூலம் இந்த நோயைக் கண்டறியலாம். இந்த அறிகுறிகளில் சில இரண்டு வாரமோ அதற்கு மேற்பட்ட காலமோ நீடிக்குமானால், இந்த நோயினால் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதைக் கூற முடியும். சில நேரங்களில் வெறி பிடித்தது போன்ற உணர்வால் மனநிலை ஒரு நிலையிலிருந்து மறுகோடிக்குச் செல்லும். அதிக சக்தி இருப்பது போன்ற உணர்வு, தூக்கத்திற்கு அவசியமின்மை, தனது திறமையில் அளவு கடந்த நம்பிக்கை, எரிச்சல், சிந்தனையற்ற செயல்பாடு, உணர்வில் திடீர் திடீர் மாற்றங்கள், திடீர் காதல் போன்றவற்றை வெறிமன அழுத்தம் ஏற்படுத்துகிறது.

மனஅழுத்த நோயாளிகளில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினரே சிறப்பு மருத்துவ சிகிச்சை பெற முயல்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மன அழுத்த நோய் கண்டறியப்பட்டவுடன் ஓரளவு வீரியம் உள்ள அமைதிப்படுத்தும் மருந்துகளும் தூக்க மருந்துகளும் சிகிச்சைக்கான மருந்துகளாக அளிக்கப்படுகின்றன. சரியான மருந்து அளிக்கப்படும் போது கூட, மருந்தின் அளவு அடிக்கடி தேவையானதைவிட குறைவாகவே இருக்கும். இது மாதிரியான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு மருத்துவர்களைத்தான் அணுக வேண்டும். மன அழுத்த நோய் சிகிச்சைக்காக அளிக்கப்படும் மன அழுத்தத்தைப் போக்குவதற்கான மருந்து சுழற்சி முறையில் அளிக்கப்படும். இவர்கள் ஆக்கபூர்வமான செயல்பாட்டை ஆறு வார காலத்தில் உணருவார்கள். மன அழுத்த நோயைக் கண்டறிந்து சரியான மருந்தை அளிப்பதற்கு இந்தத் துறையில் அனுபவம் பெற்றவர்களையும் உயிரியல் இரசாயன சிகிச்சையில் திறமை பெற்றவர்களையும்தான் ஆலோசனை பெற அணுகவேண்டும். மருத்துவக் கண்காணிப்பும் சிகிச்சையின் ஒரு அங்கமாகும். இந்த மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுபவர்கள் பயனுள்ள முறையிலேயே பலன் பெற்று வருகிறார்கள். பெரும்பாலோனார் இயல்பான செயல்பாட்டினை விரைவில் தொடங்க முடியும். சிலருக்கு உளவியல் சிகிச்சையும் மருத்துவ ஆலோசனையும் பயனுள்ளதாக அமையும்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளில் சில நேரங்களில் நன்றாக இருப்பது போன்று உணர்வார்கள். இத்தருணத்தை நோயாளிகளுக்குச் சாதகமாக இருக்கும் வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த சிகிச்சைக்கான முறைமையை பல்வேறு பகுதிகளாக பிரித்துக் கொண்டு அதற்கேற்ப முன்னுரிமைகளை நிர்ணயித்து அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட வேண்டும். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக பொறுப்பை ஏற்பதையும் அடைய முடியாத குறிக்கோளை அடைவதற்கான முயற்சியையும் தவிர்க்க வேண்டும். தான் செய்ய முடியாததை செய்து முடிக்க முடியும் என்று எண்ணிக் கொண்டு அந்தப் பணியை மேற்கொள்வதன் மூலம் தோல்வியைத் தவிர்க்க முயல வேண்டும். உடற்பயிற்சி, விளையாட்டு, கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, சமூக மத நிகழ்ச்சிகளில் பங்குகொள்வது போன்றவை கூட ஒருவர் நல்ல உணர்வைப் பெற வழிவகுக்கும். அதிகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படாமல் இருப்பதும் நலம் பயக்கும். குணமடைய சிறிது காலம் பிடிக்கலாம். மது, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படாத மருந்துகளை சாப்பிடுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். தாமே மருந்தை உட்கொள்ளுவது தற்காலிகமாக நிவாரணம் அளிப்பது போன்று தோன்றினாலும், உண்மையில் அழுத்தத்தைத்தான் தீவிரப்படுத்தும்.

மன அழுத்த பாதிப்புக்கு உள்ளானவர்கள், மிகவும் சோர்வடைந்தது போன்றும், உபயோகமற்றவர்கள் போன்றும் நம்பிக்கை அற்றவர்களாகவும் ஒருவருக்கும் உதவி அற்றவர்கள் போன்றும் உணரக் கூடும். உயிரை விட்டுவிடலாம் என்று கூடத் தோன்றும். இந்த அடையாளங்களும் மன அழுத்தத்தின் ஒரு அங்கமே ஆகும். சிகிச்சை பலனளிக்கத் துவங்கும் போதே எதிர்மறை சிந்தனைகளும் மறையத் தொடங்கும்.



மனதிலே குழப்பமா..? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 30, 2010 4:11 pm

நல்ல தகவல் , என்ன இருந்தாலும் எல்லோரும் என்ன மாதிரி குழந்தை மனசோடு இருந்தால் எந்த ப்ரேச்சனையும் இல்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் மனதிலே குழப்பமா..? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun May 30, 2010 5:54 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 31, 2010 7:57 pm

பயனுள்ள கட்டுரை சிவா.. நன்றிகள்.. நன்றி அன்பு மலர்



மனதிலே குழப்பமா..? Aமனதிலே குழப்பமா..? Aமனதிலே குழப்பமா..? Tமனதிலே குழப்பமா..? Hமனதிலே குழப்பமா..? Iமனதிலே குழப்பமா..? Rமனதிலே குழப்பமா..? Aமனதிலே குழப்பமா..? Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக